என் பெண்களுக்கு நான் சொல்லும் கதைகள் பிடிக்கும். வேறு கதி கிடையாது என்பதும் ஒரு காரணம். அதுவும் கதைகளில் அவர்களே பாத்திரமாக வந்தால் ரொம்ப பிடிக்கும். இன்று சொன்ன கதை.

ஒரு ஊர்ல ஒரு பொண்ணு இருந்தா. அவ பேரு க்ளோயி. (பெயர் சூட்டியது என் பெண்தான். எனக்கு இந்த மாதிரி “யி” என்ற எழுத்தில் முடியும் பெண் பேர்கள் என்றால் கருப்பாயி, சிவப்பாயிதான்). ஒரு நாளைக்கு அவ எத்தனை விதமான ஹேர் ஸ்டைல் இருக்குன்னு அவ அப்பாகிட்ட கேட்டா. அப்புறம் அவளுக்கு Long hair, short hair, boy cut, bangs, corn rows, ponytail, pigtails இப்படி எல்லாம் இருக்குன்னு ஒரு லிஸ்ட் போட்டா. அப்புறம் அவ தன்னோட டீச்சர் கிட்ட போய் பூரா லிஸ்டையும் சொல்லிட்டு வேற ஏதாவது இருக்கான்னு கேட்டா. டீச்சர் அவ்வளவுதான்னு சொல்லிட்டா. தன்னோட ஃப்ரெண்ட்ஸ் கிட்ட கேட்டா. எல்லாரும் அவ்வளவுதான்னு சொல்லிட்டாங்க. க்ளோயியோட அப்பா, அம்மா, brother, sister, கசின்ஸ் எல்லாரும் அவ்வளவுதான்னு சொல்லிட்டாங்க.

அப்புறம் அவ வந்து க்ரியாகிட்ட எல்லா ஹேர் ஸ்டைலும் சொல்லிட்டேனான்னு கேட்டா. க்ரியா இல்லே சொன்னா. உடனே க்ளோயி அப்படின்னு பூரா லிஸ்டையும் திருப்பி சொன்னா. க்ரியா இன்னும் இருக்குன்னு சொல்லிட்டா. க்ளோயி தான் டீச்சர், அப்பா, அம்மா, ஃப்ரெண்ட்ஸ், brother, sister, கசின்ஸ் எல்லார்கிட்டயும் கேட்டேன், அவ்வளவுதான்னு சொன்னா. க்ரியா திருப்பி இல்லேன்னு சொல்லிட்டா. க்ளோயி சரி, நீயே சொல்லுன்னு சொன்னா. க்ரியா உனக்கொரு ஹின்ட் தரேன், எங்க அப்பாவை பாருன்னு சொன்னா. அப்படியும் க்ளோயிக்கு தெரியலே. உடனே க்ரியா “மொட்டை ஸ்டைல்” அப்படின்னு சொல்லிட்டா!

இதற்கு க்ரியா விழுந்து விழுந்து சிரித்ததும் என் ஜென்மம் சாபல்யம் அடைந்தது.

Advertisements