கலைஞர் சிவாஜியை பற்றி பேசும்போதெல்லாம் பல எதிர்ப்புகளையும் மீறி தன் நண்பனுக்கு சிலை வைத்ததை குறிப்பிடுகிறார். தன் நண்பனுக்கு சிலை வைக்கவேண்டியது தன் கடமை என்று நினைத்ததாக சொல்கிறார். சமீபத்தில் சிவாஜியின் பிறந்த நாள் விழா நடந்திருக்கிறது. அங்கும் இதை குறிப்பிட்டிருக்கிறார்.

நண்பனுக்கு சிலை வைக்க வேண்டுமென்றால் சொந்த பணத்தில் அல்லவா வைக்க வேண்டும்? எங்கள் வரிப் பணத்தை எதுக்கய்யா செலவழிக்கிறீர்? அடுத்த வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே கேசாக அல்லவா இருக்கிறது! என் தாத்தாவுக்கு சிலை வைப்பீரா?

ஒரு சிறந்த கலைஞனுக்கு சிலை வையுங்கள். மக்கள் மனதை கவர்ந்த நடிகனுக்கு சிலை வையுங்கள். தமிழ் நாட்டு கலாச்சாரத்தின் ஒரு அங்கமாகிவிட்ட மனிதனுக்கு சிலை வையுங்கள். இவர் பேசுவதை பார்த்தால் இதை எல்லாம் விட அவரது நண்பனாக இருப்பதுதான் முக்கியம் போலிருக்கிறது. அடுத்தபடி, தன் மைத்துனரான சி.எஸ். ஜெயராமனுக்கு தன் கடமையை நிறைவேற்றுவாரா? இல்லை தன் அப்பாவுக்கு மணிமண்டபம் கட்டுவாரா?

இப்படி பேசுவது சிவாஜியின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடுவதாக ஆகாதா? தமிழ் நாட்டின் psycheஇல் ஒரு பகுதி ஆகிவிட்ட சிவாஜி எனக்கும் நண்பர் என்றல்லவா சொல்ல வேண்டும்? இதை எல்லாம் சிவாஜி ரசிகர்கள் எப்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்? யாருக்கும் இது தோன்றவே இல்லையா?

அவரின் பேச்சின் ட்ரான்ஸ்க்ரிப்ட் இங்கே. கலைஞர் டிவியின் வீடியோ செய்தி இங்கே.

Advertisements