ஜெயமோகனின் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றன. அவர் கீதையை பற்றி ஆரம்பித்திருக்கும் புதிய தொடர் இங்கே. ஆரம்பமே களைகட்டிவிட்டது.

எனக்கு மஹாபாரதத்தின் மீது ஒரு ஸ்பெஷல் கிறுக்கு உண்டு. உலகின் தலை சிறந்த இலக்கியமாக நான் மகாபாரதத்தைத்தான் கருதுகிறேன். மஹாபாரதம் பற்றிய ஆய்வு கட்டுரைகள், அங்கிருந்து கிளம்பிய எல்லாமே எனக்கு பிடிக்கும். உண்மையில் மஹாபாரத சாயல் படிந்துள்ள எதையுமே என்னால் நடுநிலைமையுடன் விமர்சிக்க முடியாது, அவை எல்லாவற்றையுமே என்னால் சிலாகிக்கத்தான் முடியும். அது தளபதி, ஷ்யாம் பெனகலின் கல்யுக் மாதிரி திரைப்படங்களாகட்டும், பீட்டர் ப்ரூக்கின் நாடக வடிவமாகட்டும், எஸ். ராமகிருஷ்ணனின் உபபாண்டவம் ஆகட்டும், ஜெயமோகனின் இரு சிறுகதைகளாகட்டும், ஐராவதி கார்வேயின் யுகாந்தர் ஆகட்டும், திவாகருணி எழுதிய “Palace of Illusions” ஆகட்டும், எனக்கு பிடிக்காமல் போகாது. (இதில் கல்யுக், யுகாந்தர் ஆகியவற்றை நான் எல்லாருக்கும் சிப்பாரிசு செய்கிறேன்)

ஆனால் நான் பகவத் கீதையை படித்ததில்லை. எனக்கு கதையில்தான் ஆர்வமே ஒழிய, தத்துவ விசாரங்களில் அல்ல. நிறைய முறை படிக்க ஆரம்பித்து பத்து பக்கங்களுக்கு மேல் போக முடியாமல் தூக்கி போட்டிருக்கிறேன். இந்த முறையாவது படிக்க வேண்டும் என்று நினைக்கிறேன், பார்ப்போம்.

Advertisements