ஏன்! Dr. அசோஹனுக்கும், Dr. புஷ்பாஞ்சலிக்கும் தான்!

ஒரு ஜே என்ன? ஒன்பது ஜே இல்லை கோடி ஜே போடவேண்டும்!

ஹிட்டேந்திரன் விபத்தில் சிக்கி ப்ரெய்ன் டெட் ஆகியதும், அவருடைய இதயத்தை தானமாக 9 வயது சிறுமிக்கு கொடுத்ததும் தெரிந்த விஷயம். காவல் துறை ஒத்துழைப்பும் சூப்பர். அவர் இதயத்தை கொடுத்து நம் இதயத்தை கசிய வைத்துவிட்டார்.

இருதயத்தை 45 நிமிடங்களில் டெலிவர் செய்த காவல் துறை திறமையாக, சர்க்கார் தலையீடு இல்லாமல், தன்னிச்சையாக செயல்பட்டுள்ளனர். மற்ற வழிகளில் முயன்றிருந்தால் பெட்டிஷன் எழுதிக்கொடுத்து போகவேண்டிய இடத்திற்க்கு போய், கவனிக்கவேண்டியவர்களை கவனிப்பதற்க்குள் நம் இதயம் மட்டுமில்லாமல் ஹிட்டேந்திரன் இதயமும் வெடித்திருக்கும்.

Apollo போன்ற ஹாஸ்ப்பிட்டல்களுக்கு chopper வசதி கிடையாதா? இல்லவிட்டால் வாடகைக்கு எடுக்கமுடியாதா? எல்லா major hospitalகளும் சேர்ந்து ஒரு Air Ambulance வைத்துக்கொள்ளமுடியாதா?

சிந்திக்காமலா இருந்திருப்பார்கள்? எதற்க்காக காத்துக்கொண்டிருக்கிறார்களோ? பணத்துக்காக என்று சொல்லவேண்டாம், please… அதுவும ஹிட்டேந்திரன், Dr. அசோகன் மற்றும் Dr. புஷ்பாஞ்சலி தியாகத்திற்க்குப் பிறகு…

Advertisements