போன வாரம் என் அம்மா, அப்பா, பெரியப்பா ஊர் சுற்றப் போனார்கள். இங்கே போயிருக்கிறார்கள். என் அம்மா எப்பவுமே டெலிஃபொனில் பேசுவது எதோ பிரசங்கம் போலத்தான் இருக்கும். எதிராளிக்கு பேச வாய்ப்பே இருக்காது. இந்த முறை கிருஷ்ணாபுரம் பற்றி மிகவும் த்ரில் ஆகி பேசியதால் எனக்கு மூச்சு விடக்கூட முடியவில்லை. நான்-ஸ்டாப்பாக பேசிக்கொண்டே இருந்தார்.

நானும் மீ.ப.சோமு எழுதிய “நமது செல்வம்” என்ற நல்ல புத்தகத்தில் கிருஷ்ணாபுரத்தை பற்றி படித்திருக்கிறேன். ஒரு முறை போக வேண்டும் என்றும் நினைத்து டூரும் போனோம், ஆனால் இங்கே போகமுடியவில்லை. என் அம்மா சொன்னது என் ஆவலை தூண்டியதால் எங்காவது ஃபோட்டோவாவது தெரியுமா என்று தேடி பார்த்தேன், தென்படவில்லை.

யாராவது போயிருக்கிறீர்களா? ஃபோட்டோ கீட்டோ எடுத்திருக்கிறீர்களா? நெட்டில் ஏதாவது ஃபோட்டோ கிடைக்குமா?

Advertisements