சும்மா இதை நேற்று இன்ஸ்டால் செய்து கொஞ்ச நேரம் விளையாடிப் பார்த்தேன்.

நான் ப்ரவுசர்களை பயன்படுத்துபவன். என்னுடைய அறிவு அந்த அளவில்தான். ஒவ்வொரு tabஉம் தனி ப்ராசஸ் என்பதெல்லாம் புரிகிறது, ஆனால் எப்படி பரிசோதிப்பது என்று தெரியாது.

இதை போஸ்ட் செய்த பிறகு தோன்றிய ஒன்று.
ஒவ்வொரு திறக்கும்போதும் டாஸ்க் மாநேஜரில் ஒரு புது ப்ராசஸ் தெரிகிறது. அப்ப்ளிகேஷன் ஒன்றுதான் தெரிகிறது.

க்ரோம், ஃபயர்ஃபாக்ஸ், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மூன்றிலும் tabகள் திறந்து உபயோகப்படுத்தப்பட்ட மெமரி எவ்வளவு என்று பார்த்தேன்.
எக்ஸ்ப்ளோரர் – 57 MB
க்ரோம் – 9+9+15+13 = 46 MB
ஃபயர்ஃபாக்ஸ் – 33 MB

எனக்கு பிடித்த சில சின்ன சின்ன விஷயங்கள்.
1. tabகளை பிரவுசருக்கு வெளியிலும் நகர்த்தமுடிகிறது. நான் சாதாரணமாக வீட்டில் உபயோகப்படுத்துவது ஆப்பிள் ஸஃபாரி பிரவுசர். நிறைய tab groups வைத்திருப்பேன், அவற்றை எல்லாம் வெட்டி ஒட்டிக்கொண்டே இருப்பேன். எனக்கு இந்த feature உபயோகமாக இருக்கும். It is cool, too!
2. ஸஃபாரியில் tabகளுக்கு மேல் புதிதாக drag and drop செய்வது கொஞ்சம் கஷ்டம். சரியான இடத்தில் drop செய்ய வேண்டும். இங்கே தனியாக ஒரு ப்ளஸ் பட்டன் இருப்பது உபயோகம்.
3. மேலே மெனு குறைந்த அளவு இடத்தையே எடுத்துக்கொள்வது நல்ல விஷயம். மேலே ஸ்நாப்ஷாட்டில் மெனுவுக்கான இடம் குறைவாக இருப்பதை பார்க்கலாம்.

Added on 9/8: பிடித்த இன்னொரு விஷயம். ஷிஃப்ட், எஸ்கேப் இரண்டையும் ஒரு சேர அழுத்தினால் ஒவ்வொரு tabஉம் எவ்வளவு மெமரி எடுக்கிறது என்பதை காண்பிப்பது.

நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் ஃபைர்ஃபாக்சிலிருந்து மாறியே ஆக வேண்டும் என்று தோன்றவில்லை. ஆப்பிளில் இன்னும் வரவில்லை. And it does feel a little rough around the edges. பீட்டாதானே!

டவுன்லோட் செய்ய விரும்புவர்கள் இங்கே பார்க்கவும். விக்கிபிடியா குறிப்பு இங்கே.

Advertisements