(இந்தக் கட்டுரை திரு. ராமசாமி சுப்ரமணியம் அவர்களால் எழுதப்பட்டது. திரு. ராமசாமி முதிர்ந்த வாசகர். காஞ்சி மடம் பற்றிய ஞானம் நிறைந்தவர். இந்த ப்ளாக்கின் சக ஆசிரியரான RVயின் தந்தையும் ஆவார். இவர்களின் குடும்ப நண்பன் என்ற வகையில் நான் அறிந்தது இது: தந்தையும் மகனும் இறை வழிபாட்டில் இரு துருவங்கள். திரு.ராமசாமி அவர்கள் இந்துச் சடங்குகளுக்கும், வழிபாடுகள், இந்து ஞானம், மடங்கள் முதலியவைகளுக்கும் மடதிபதிகளான காஞ்சிப் பெரியவா சந்திரசேகர், ஜெயேந்திரர், விஜயேந்திரர் போன்றவர்களிடம் பக்தி மற்றும் மிகுந்த மரியாதை கொண்டவர். பள்ளி ஆசிரியர், தலைமை ஆசிரியர், மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் போன்ற பதவிகளிலிருந்து ஓய்வு பெற்றவர். RV (ப்ளாக் ஆசிரியர் மற்றும் என் நண்பன்) நவீன பொருளாதாரத்தில் வாழ்பவன். அவனுக்கு மேற்சொன்னவற்றில் முற்றிலும் வேறு காரணங்களுக்காக மதிப்பு இருந்தாலும் நிச்சயமாக பக்தி இல்லை. அவனுக்கு “ரீசனிங்” (Reasoning) என்பது முக்கியம். “நம்பிக்கை”யில் நம்பிக்கை ஓரளவே. அவனுடைய பழைய கட்டுரைகளை படித்து தந்தையின் கட்டுரைகளுடன் குழப்பிக் கொள்ளகூடாது எனபதனாலேயே இந்த தன்னிலை (அல்லது படற்கை விளக்கம்)
இது மூன்று பகுதிகளைக் கொண்டது. இது அவரின் எண்ணச் சிதறல்களின் முதல் பகுதி. ஓவர் டு திரு. ராமசாமி)
இந்துத்துவம்
செய்தித்தாள் தொலைக்காட்சி எந்த ஊடகத்தைப்பார்த்தாலும் கண்ணிலே அதிகமாகப்படும் முழக்கம் இந்துத்துவம் என்ற சொற்றொடரே! உடன் என் மனதில் தோன்றிய வினா ‘இந்துத்துவம்’ என்றால் என்ன? அதன் பதிலாகத்தோன்றிய எண்ணச் சிதறல்களே இந்தத்தொகுப்பு. மதம் என்பது வாழ்க்கை நெறிமுறை தானே? உச்சநீதிமன்றமும் இதைத்தானே உறுதி செய்கிறது. உண்மையும் அதுதானே?அப்படி என்றால் இந்துத்துவம் என்பது இந்து மத பிரசார பீரங்கியா? ஒன்றுமே புரியவில்லை இருப்பினும் சிந்தனை விரிகிறது.
இந்து என்ற சொல்லே சிந்து என்பதன் மருவு தானே?அதேபோல் மாறுபட்டு வருகின்ற சமுதாயத்திலே மாற்றங்கள் ஏற்படும்போது இந்து என்ற சொல்லோடு மதமும் சேர்ந்து இந்து மதமாக மாறியதோ?அதன் தொடர்ச்சியாக இந்துத்துவமும் உருவாகியதோ?எது எப்படி இருந்தாலும் இந்து மற்றும் இந்துத்துவம் என்ற சொல் பெருமைக்குரியதுதானே! பிறர் அதை ஏன் குறைபடப் பேசுகிறார்கள்? நாம் ஏன் பொறுமை காக்கிறோம்? நாம் பெருமைப்படுவதும் இல்லை; சிறுமை கண்டு பொங்குவதில்லை நம் பழக்க வழக்கங்களையும் சடங்குகளையும் -நம்மில் பலரும் இதில் பங்கு கொள்வோரே -எள்ளி நகையாடுகின்றனரே அவர்கள் ஆதியில் எந்த மதத்தினைச்ச்சர்ந்ந்து இருந்தவர் என்பதை மறந்து விட்டனரே?அவர்கள் சார்ந்துள்ள இன்றைய மதத்தில் சடங்குகள் கிடையாதா?
இதனை எதிர்கொள்ள இந்துத்துவம் வலிமை பெற வேண்டாமா? நம்மைப்பற்றி நாம் முதலில் தெரிந்துகொள்வோம், பெருமை கொள்வோம்.
இந்த சிந்தனை விரிந்தபோதுதான் திரு.அருணகிரி அவர்களின் இந்துத்துவம் -மூவகைப்பாகுபாடு என்ற கட்டுரையைக் காண நேர்ந்தது.முரண்பட்ட கருத்துக்களும் ஒற்றுமையை உருவாக்கும் என்பதை உணரமுடிந்தது அவர் பாகுபடுத்தியது. என் எண்ணங்களை வலுவாக்கியது.அவர் கண்ட பகுப்பு பின்வருமாறு
சடங்கு இந்துத்துவம் :-சடங்குகள் தோன்றிய காலம் எது? வேத காலமாக இருக்கலாமா? வேதங்கள் என்ன கூறுகின்றன?
உருக்குவேதம் கோட்பாடுகளை வரையறுக்கின்றது. இயற்கை சீற்றத்தை எதிர்கொள்ள முடியாத நிலையில் இயற்கை சக்திகளெல்லாம் கடவுளாக உருவகப்படுத்தப்பட்டன. மனிதனது தேவைக்கேற்ப வேண்டுதல்கள் வைக்கப்பட்டன. கேள்வி-பதில் என்ற முறையில் கல்வி குருகுலத்தில் கற்பிக்கப்பட்டது. வாய்மொழிப்பாடம் தான். ஏனெனில் வேதங்கள் அனைத்தும் எழுதாக் கிலவிகள் தாமே. “நேதி ,நேதி “-இது இல்லை,அது இல்லை இப்படி பல விஷயங்களைத் தவிர்த்து கடைசியில் முடிவு எட்டப்பட்டது.
உருக்கு வேதத்தில் சொல்லப்பட்ட கொள்கைகளை செயல்படுத்தும் வகையில் யசுர் வேதத்தில் செயல்பாடுகள் (சடங்குகள்) அறிமுகப்படுத்தப்பட்டன அனைத்து சமயங்களிலும் சடங்குகள் உண்டு செயல்பாடுகளை எளிதில் நினைவு கூறத்தக்க வகையில் சாமவேதம் இசையாக அமைந்தது. அதர்வ வேதம் தான்த்ரீக முறை அறிவியல் கோட்பாடுகள் கொண்டது அனைத்து வேதங்களுமே இறை வழிபாடே யன்றி வேறொன்றுமில்லை
சடங்குகளைச் செயல்படுத்தும்போது உயிர்ப்பலி கூட அவசியம் என ஏற்றுக்கொள்ளப்பட்டது ஏனெனில் விவசாயம் அன்று முழு வளர்ச்சி பெறவில்லை எளிதில் கிடைத்த உணவு இறைச்சியும் காய்கனிகளுமே இந்த சடங்குகளை எதிர்க்கும் வகையில் -முக்கியமாக பிராணி வதை தடுக்கக்கோரி புதிய மதங்கள் -பௌத்தமும் சமணமும் தோன்றின.
இன்று கூட இந்துத்துவத்தில் சடங்குகள் பின்பற்றப்பட்டு வருகின்றன அவற்றுள் பல ஆழ்ந்த பொருள் பொதிந்தவையே. இவை சமுதாயக்கட்டமைப்பை உருவாக்குகின்றன என்பது ஏற்கப்படவேண்டிய கருத்தே அவை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருவதும் உண்மையே ஆனால் அவை ஏன் பின்பற்றப்பட்டன என்பதை விளக்கிச்சொல்வார் யாருமில்லை.
(தொடரும்)
திரு. ராமசாமியின் இந்துத்துவம் 3
திரு. ராமசாமியின் இந்துத்துவம் 2
திரு. ராமசாமியின் இந்துத்துவம் 1

ஜூலை 23, 2011 at 3:39 மு.பகல்
CLICK TO READ
>>> இந்து மதத்தின் பேரால் ஏனைய சாதியினரை அடக்கவும், ஒடுக்கவும், அறியாமையில் ஆழ்த்தவும், அவமதிக்கவும் ஒரு நடத்தப்படும் அக்கிரமங்களை, அட்டூழியங்களை, பரப்பிடும் மூடநம்பிக்கைகளை செயல்களை அவர்களின் வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து அச்சுறுத்தலுக்கோ எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்து தாத்தாச்சாரியார் தனது 100ஆவது வயதில் “உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு சமர்ப்பணம்” என்ற முகமனோடு “இந்து மதம் எங்கே போகிறது?” என்ற நூல் எழுதினார். <<<
ஜூலை 24, 2011 at 2:45 மு.பகல்
///உருக்குவேதம்/// அதென்ன உருக்கு வேதம், ரிக் வேதம் னு டைப் பண்ணினா உங்களை தமிழன்னு ஒத்துக்க மாட்டாங்கன்னு பயமா என்ன?
ஜூலை 25, 2011 at 4:11 பிற்பகல்
ராம்,
நன்றி.
தமிழராக தன்னைக் காட்டிக் கொள்வதற்க்காகவே திரு.ராமசாமி ரிக் வேதத்தை உருக்குவேதம் என்று கூறியிருக்கிறார் என்ற முன்முடிவு செய்துவிட்டு இதை பார்க்கிறீர்கள். அவரிடம் எந்த எண்ணம் இருந்தது என்று முதலில் கேட்டு தெரிந்துக் கொண்டு அதன் பின் அவருக்கு பயமா வீரமா என்பது போன்ற கேள்விகளை கேளுங்கள்.
Bags
சம்ஸ்கிருதத்தில் பேசினாலும் தப்பு தமிழில் பேசினாலும் தப்பு என்ன கொடுமை சார் இது?
ஆகஸ்ட் 22, 2011 at 9:41 மு.பகல்
கட்டுரையாசிரியர் இன்று இல்லை. இல்லாதவரிடம் போய் எப்படிக்கேட்பது ?
ரிக் வேதம் என்பதைத் தமிழில், இருக்கு வேதம் என்றுதான் எழுதுவது வழக்கம். உருக்கு வேதம் என்று எழுதுவது கிடையாது.
செப்டம்பர் 1, 2011 at 1:48 மு.பகல்
உண்மைதான் Agneya. இருக்கு வேதம் தான். தவறை சுட்டியமைக்கு நன்றி.
ஜூலை 27, 2011 at 1:19 மு.பகல்
//அவனுக்கு “ரீசனிங்” (Reasoning) என்பது முக்கியம். “நம்பிக்கை”யில் நம்பிக்கை ஓரளவே. //
இந்து மதத்தில் நம்பிக்கை எந்த அளவுக்கு முக்கியப் பங்கு வக்கிக்கிறதோ அதற்க்கு சற்றும் குறையாத அளவுக்கு இந்து மதம் LOGICAL ANALYSIS, REASONING and REALISATION OF TRUTH ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.
//சடங்குகளைச் செயல்படுத்தும்போது உயிர்ப்பலி கூட அவசியம் என ஏற்றுக்கொள்ளப்பட்டது ஏனெனில் விவசாயம் அன்று முழு வளர்ச்சி பெறவில்லை எளிதில் கிடைத்த உணவு இறைச்சியும் காய்கனிகளுமே இந்த சடங்குகளை எதிர்க்கும் வகையில் -முக்கியமாக பிராணி வதை தடுக்கக்கோரி புதிய மதங்கள் -பௌத்தமும் சமணமும் தோன்றின.//
இது புத்த, சமண மதங்களின் தோற்றத்துக்கு மிகத் தவறான விளக்கம்.
உயிர்ப் பலி தடுப்பு புத்த, சமண மதங்களின் முக்கிய கோட்பாடுகளில் ஒன்று தான். ஆனால் புத்த, சமண மதங்களின் தோற்றத்துக்கு முக்கிய காரணம் இது அல்ல.
சடங்குகள் ஆன்மீக முன்னேற்றத்துக்கு உதவும் வகையில் இல்லை. சடங்குகள் ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காக நடத்தப்பட்டன. அவை பெருவாரியான மக்களுக்கு தொடர்பில்லாமல் இருந்தன.பெரும்பாலான மக்கள் சடங்குகளில் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப் படவில்லை.
மேலும் ஆசையை விடுதல், தியானம் ஆகியவற்றின் மூலம் ஒரு மனிதனுக்கு கிடைக்கும் மன அமைதி, அடக்கம் ஆகிய ஆன்மீக முன்னேற்றங்கள், சடங்குகளை செய்வதன் மூலம் கிடைப்பதில்லை (அந்தளவுக்கு கிடைப்பதில்லை).
சாதாரண மக்களின் ஆன்மீக முறையான பக்தியுடன், ரீசனிங் அடிப்படையிலான ஆன்மிகத்தை இணைப்பதில் முனைப்புக் காட்டாமல், பண்டிதர்கள் சடங்குகளில் முழு மூச்சாக இறங்கினர்.
புத்தரும் ஜைனரும் சாதாரண மனிதரிடம் தங்களின் மதம் போய் சேரும்படி பிரச்சாரம் செய்தனர்.
சங்கராச்சாரியாருக்கு (ஆதி சங்கரர்) முன்பு இந்து மதம் சாதாரண மக்களுக்கு ஒரு வகையாகவும், பண்டிதர்களுக்கு இன்னொரு வகையாகவும் பிரிந்து இருந்தது.
இவையே புத்தரின் வெற்றிக்கு முக்கிய காரணம்.
அக்காலத்தில் விவசாயம் சிறப்பாக இல்லை என சொல்ல இயலாது.
மொத்தத்தில் தவறான அணுகுமுறையும், புரிதலுமாக உள்ளது. (இப்போது புத்தர் மறுபடியும் வந்தால், இவர்களை மீண்டும் எளிதாக நகர்த்தி விடுவார்,ஆனால் ஆதி சங்கரரின் பக்தி முறை சாதாரண மக்களிடம் வூடுருவிக் கலந்து விட்டது).
இதற்க்கு பேசாமல் திரு. RV யே கட்டுரை எழுதி இருக்கலாம் என தோன்றுகிறது. எனினும் இந்து மதம் பற்றி அன்பு நண்பர் திரு.RV கட்டுரை எழுதாதற்கு எனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் திரு.RV, முன்பு ஒரு முறை கர்நாடக சங்கீதம் பற்றி எழுதி இன்னாருடைய குரல் இன்னாருடைய குரலை விட சிறப்பானது என்று எழுதினார். அதை எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள், இருவரும் ஒரே பாடலை பாடி அதைகேட்டு இருக்கிறீர்களா என்றால், நான் அதிகம் பாடல்கள் கேட்டதில்லை, ஆனாலும் கருத்து சொல்ல உரிமை உண்டு (அதாவது ஒரு விடயம் பற்றி அறியாமல், புலமை இல்லாமல் இருந்தாலும்) என கலக்குவார். மேலும் திரு.RVக்கு பக்தியும் இல்லை (அவரே சொன்னது). எனவே இந்து மதம் பற்றி எழுதி எங்களை சிரமப்படுத்தாதற்க்கு தேங்க்ஸ் அண்ணா.
//திரு.அருணகிரி அவர்களின் இந்துத்துவம் -மூவகைப்பாகுபாடு என்ற கட்டுரையைக் காண நேர்ந்தது.//
திரு. அருணகிரி எழுதிய கட்டுரையின் சுட்டியை வெளியிட்டிருந்தால் அங்கு சென்று கட்டுரையை படிக்க இயலும்.
அல்லது மூன்று வகைகள் என்ன என்று குறிப்பிட்டு விட்டு பிறகு முதல் வகையை விளக்க ஆரம்பித்து இருக்கலாம்.
இந்து மதம் என்பதே லாஜிக் , ரீசனிங் மற்றும் நேரடி அனுபவத்தின் மூலம் உண்மையை அறிவதற்கு உதவுவதுதான். எனவே REASONING என்பது இந்து மதத்தில் இல்லை என்பது போன்ற கருத்தில் சொல்லி இருப்பது சரி அல்ல.
ஜூலை 27, 2011 at 7:13 மு.பகல்
reasoning இந்து மதத்தில் இல்லை என்ற கருத்து இங்கே இருப்பதாகக் கொள்ள முடியாது. பெரும்பாலும் சராசரி மனிதர்கள் reasoning பற்றிக் கவலைப்படுவதில்லை. வீட்டில் பெரியவர்களிடம் ஏன் என்று கேள்வி கேட்டாலே நாம் குதர்க்கம் செய்வதாகச் சொல்லி விடுவார்கள். நல்லதுன்னு பெரியவங்க சொன்னா கேட்டுக்கணும். கேள்வி கேட்கக் கூடாது என்ற பதில் தான் வரும். அதுவே பலரின் பழக்கமாகப் போய் விட்டதால் சம்பிரதாயங்கள் மூடப் பழக்கங்கள் என்று புத்திசாலிகள் என்று கருதிக் கொள்பவர்கள் சொல்லும் நிலைக்கு வந்து விட்டது.
So reasoning முக்கியம் என்று ஒருவர் நினைப்பது தவறில்லை. நல்ல விஷயம் தான். அப்படிச் சொல்ல யாராவது இருந்தால் தான் உங்களைப் போன்ற விஷயம் தெரிந்தவர்கள் வந்து reasoning கொடுத்து நமது நம்பிக்கைகளின் பின்னால் இருக்கும் அர்த்தங்களை வெளிக் கொண்டு வருவீர்கள்.
bags , ரிக் வேதத்தை இப்படி உருக்க வேண்டாம்னு தான் நானும் நினைக்கிறேன். அதற்கு ஏதாவது reasoning இருந்தா கேட்டுச் சொல்லிடுங்க.
ஆகஸ்ட் 22, 2011 at 9:56 மு.பகல்
//So reasoning முக்கியம் என்று ஒருவர் நினைப்பது தவறில்லை. நல்ல விஷயம் தான். அப்படிச் சொல்ல யாராவது இருந்தால் தான் உங்களைப் போன்ற விஷயம் தெரிந்தவர்கள் வந்து reasoning கொடுத்து நமது நம்பிக்கைகளின் பின்னால் இருக்கும் அர்த்தங்களை வெளிக் கொண்டு வருவீர்கள்.//
ரீசனிங் ஓரளவுக்குத்தான் மதங்களுக்கு ஒத்து வரும். ரீசனிங்கை வைத்து எல்லாவற்றையும் பார்த்தால் இந்து மத நம்பிக்கைகள். சடங்குகள் பலபல ஒத்துவரா. கடைசியில் அவை வெறும் நம்பிக்கைகள் மட்டுமே- அல்லது இந்து மத எதிர்ப்பாளர்களுக்கு மூடநம்பிக்கைகள் – மட்டுமே என்றுதான் வரும். Application of reason has its limits – in fact very short limits.
மதங்களில் அடிப்படையான – கடவுள் இருக்கிறார். அவர் நம்மைக்காப்பாற்றுவார், சாவுக்குப்பின் அவரிடம் போவோம். – இக்கொள்கையே ரீசனிங் வைத்துப்பார்க்க முடியாது. அப்படியே பார்த்தாலும் இதன் யுடிலிட்டியை வைத்துத்தான் பார்க்க முடியும். That s whether such belief does good or harm to society. Those who say good, say like Voltaire. வால்டேர் கடும் நாத்திகர். அவர் செய்தார் யுடிலிட்டியை வைத்து கடவுள் ஒருவர் இல்லையென்றாலும் பரவாயில்லை. ஆனால் அவர் இருப்பதாக நம்பி வாழ்வது நன்றே” என்கிறார். Those who say bad, say like Periyaar. Religious belief is harmful to mankind.
ரீசனிங்கை வைத்துத்தான் பார்ப்பேன் எல்லாவற்றையும் என்றால் மதத்தின் அடிப்படையே தோற்றுவிடும்.
மக்கள் மதத்தை நாடுவது ரீசனிங்கால் எடைப்போடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டவைகளுக்காகல்ல. வெறும் நம்பிக்கைக்குத்தான். எல்லா மதங்களுக்கும் இது பொருந்தும். நாத்திகர் மொழியில் சொன்னால், வெறும் மூடநம்பிக்கையை நம்பி ஒரு இதம் காணுகிறார்கள். பானசி.
ஜூலை 27, 2011 at 2:41 பிற்பகல்
//இந்த ப்ளாக்கின் சக ஆசிரியரான RVயின் தந்தையும் ஆவார்.//
இதை நான் உண்மையிலேயே முன்பு படிக்கவில்லை.
படித்திருந்தால் பின்னூட்டம் இடுவதை அவாய்ட் செய்து இருப்பேன். அல்லது டோனையாவ்து கொஞ்சம் மாற்றி இருப்பேன். நண்பரை விமர்சிக்கலாம்… அவரது தந்தையின் எழுத்தை விமர்சித்தது கொஞ்சம் வருத்தமா இருக்கு. இந்த மாறி உறவு விடயங்கள் எல்லாம் தடிப்பு எழுத்தில் போடுங்களேன்
ஜூலை 30, 2011 at 7:18 மு.பகல்
இந்த மறுமொழியை எழுதுவது ஆர்வி.
திருச்சிக்காரன்,
// அவரது தந்தையின் எழுத்தை விமர்சித்தது கொஞ்சம் வருத்தமா இருக்கு // என் அப்பா விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் இல்லை. கருத்துகளை முன் வைக்கும் எவரும் விமரிசனத்தைக் கண்டு வருந்தக் கூடாது என்பதை அவரிடமிருந்தே நான் கற்றுக் கொண்டேன்.
//இந்து மதத்தில் நம்பிக்கை எந்த அளவுக்கு முக்கியப் பங்கு வகிக்கிறதோ அதற்க்கு சற்றும் குறையாத அளவுக்கு இந்து மதம் LOGICAL ANALYSIS, REASONING and REALISATION OF TRUTH ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. // நம்பிக்கை, ஆராய்ச்சி எல்லாமே ஹிந்து மதத்தின் ஏற்கப்பட்ட கூறுகள் என்பது இன்னும் சரியாக இருக்கும். நம்பிக்கைதான் பெரும்பாலானவர்களின் வழி, அதனால் அதுதான் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று சொல்வதுதான் சரி. எனக்கும் கடவுள் நம்பிக்கை உண்டு, ராமனும் கிருஷ்ணனும் முருகனும் பிள்ளையாரும் நான் விரும்பி வணங்கும் தெய்வங்களே. இதை இந்த ப்ளாகிலும் பல முறை எழுதி இருக்கிறேன். பக்சும் இதை நம்பிக்கையில் ஓரளவு நம்பிக்கை உடையவன் என்று குறிப்பிட்டிருக்கிறான்.
// //சடங்குகளைச் செயல்படுத்தும்போது உயிர்ப்பலி கூட அவசியம் என ஏற்றுக்கொள்ளப்பட்டது ஏனெனில் விவசாயம் அன்று முழு வளர்ச்சி பெறவில்லை எளிதில் கிடைத்த உணவு இறைச்சியும் காய்கனிகளுமே இந்த சடங்குகளை எதிர்க்கும் வகையில் -முக்கியமாக பிராணி வதை தடுக்கக்கோரி புதிய மதங்கள் -பௌத்தமும் சமணமும் தோன்றின.// இது புத்த, சமண மதங்களின் தோற்றத்துக்கு மிகத் தவறான விளக்கம். //
புத்தரே கெட்டுப் போன பன்றிக்கறியை உண்டதால்தான் இறந்தாராம். புத்தம் வந்த காலத்தில் விவசாயம் முழு வளர்ச்சி பெற்றுவிட்டது என்றுதான் தோன்றுகிறது. இந்தக் கருத்து கேள்விக்குரியது என்றுதான் நினைக்கிறேன். என் அப்பா என்னிடம் தன் draft -ஐ காண்பித்தார். ஆனால் இது என் கண்ணில் படாமல் போய்விட்டது. நான் சுட்டிக் காட்டி இருந்தால் என் அப்பா ஏற்றுக் கொண்டிருப்பார் என்று சொல்வதற்கில்லை.
// இதற்கு பேசாமல் திரு. RV யே கட்டுரை எழுதி இருக்கலாம் என தோன்றுகிறது. எனினும் இந்து மதம் பற்றி அன்பு நண்பர் திரு.RV கட்டுரை எழுதாதற்கு எனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் திரு.RV, முன்பு ஒரு முறை கர்நாடக சங்கீதம் பற்றி எழுதி இன்னாருடைய குரல் இன்னாருடைய குரலை விட சிறப்பானது என்று எழுதினார். அதை எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள், இருவரும் ஒரே பாடலை பாடி அதைகேட்டு இருக்கிறீர்களா என்றால், நான் அதிகம் பாடல்கள் கேட்டதில்லை, ஆனாலும் கருத்து சொல்ல உரிமை உண்டு (அதாவது ஒரு விடயம் பற்றி அறியாமல், புலமை இல்லாமல் இருந்தாலும்) என கலக்குவார். மேலும் திரு.RVக்கு பக்தியும் இல்லை (அவரே சொன்னது). எனவே இந்து மதம் பற்றி எழுதி எங்களை சிரமப்படுத்தாதற்க்கு தேங்க்ஸ் அண்ணா. //
நானே கட்டுரை எழுதலாம் என்கிறீர்கள், பிறகு எழுதாதற்கு தாங்க்ஸ் என்கிறீர்கள், ஏதாவது ஒரு முடிவுக்கு வாங்கள்! கர்நாடக இசைக்கும் இந்தப் பதிவுக்கும் என்ன தொடர்பு என்று புரியவில்லை. நிபுணர்கள்தான் ஒரு விஷயத்தைப் பற்றி கருத்து தெரிவிக்க வேண்டும் என்று சொல்வதை நான் வன்மையாக மறுக்கிறேன். தகவல் பிழை – எனக்கு பக்தி இல்லை என்று நான் எங்கும் சொன்னதில்லை. இப்படி தகவல் பிழை இருப்பதால், என் அப்பா எழுதியது என்று முதல் பாராவில் இருப்பதைக் கூட நீங்கள் கவனிக்காமல் விட்டதால், உங்களுக்கு இந்தப் பதிவு பற்றி கருத்து சொல்ல உரிமை இல்லை என்று யாராவது சொன்னால் அதையும் வன்மையாக மறுப்பேன்.
// திரு. அருணகிரி எழுதிய கட்டுரையின் சுட்டியை வெளியிட்டிருந்தால் அங்கு சென்று கட்டுரையை படிக்க இயலும். // நல்ல ஐடியா. பக்ஸ், உன்னால் முடியுமா?
// இந்து மதம் என்பதே லாஜிக் , ரீசனிங் மற்றும் நேரடி அனுபவத்தின் மூலம் உண்மையை அறிவதற்கு உதவுவதுதான். எனவே REASONING என்பது இந்து மதத்தில் இல்லை என்பது போன்ற கருத்தில் சொல்லி இருப்பது சரி அல்ல. // இல்லை. இந்து மதத்தில் லாஜிக் என்பதும் உண்டு என்பதே சரி. பிறகு இந்த கட்டுரையிலோ பக்ஸ் எழுதிய அறிமுகத்திலோ, லாஜிக் என்பது இந்து மதத்தில் இல்லை என்று சொல்லப்படவில்லையே? மீண்டும் தகவல் பிழை. எனக்கு சடங்குகளில், காஞ்சி மடத்தில் பெரிதாக பக்தி இல்லை மற்றும் எனக்கு லாஜிக்கில் அதிக நம்பிக்கை என்பதைத் தவறாக புரிந்துகொண்டிருக்கிறீர்கள்.
திருச்சிக்காரன், உங்களுக்கு சில தவறான முடிவுகள் (wrong conclusions) இருப்பது தெரிகிறது. எனக்கு பக்தி கிடையாது இத்யாதி. இது உங்கள் வாதங்களைப் பாதிக்கிறது என்று தோன்றுகிறது.
விருட்சம், உங்களுக்கும் எனக்கும் வழக்கம் போல ஒத்த சிந்தனை இருப்பது மகிழ்ச்சி!
தாத்தாச்சாரியார், “இந்து மதம் எங்கே போகிறது” புத்தகம் பற்றிய விவரங்களுக்கு நன்றி! என்றாவது படித்தால் என் கருத்தை எழுதுகிறேன்.
ராம், உருக்கு வேதம், ரிக்வேதம் எல்லாம் அவரவர் பாணி. நானும் ரிக்வேதம் என்று எழுதுவதையே விரும்புகிறேன், ஆனால் அது என் அப்பாவைக் கட்டுப்படுத்தாது.
ஆகஸ்ட் 30, 2011 at 12:14 பிற்பகல்
\\\\இல்லை. இந்து மதத்தில் லாஜிக் என்பதும் உண்டு என்பதே சரி. \\\
பேஷ். அப்படியானால் ஏதோ ஹிந்து மதம் முழுக்க ஆதாரமில்லா விஷயங்களையே கொண்டிருப்பதாகவும் ஏதோ நடு நடுவே தர்க்க ந்யாயங்களுக்குட்பட்ட விஷயங்களும் தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள ஊறுகாய் போல இருப்பதாகவும் இந்த வாசகம் ஒரு தோற்றத்தை கொடுக்கிறது. இது சரியான நிலைப்பாடாக தோன்றவில்லையே. ஆர்வியின் இந்த தடாலடி நிலைப்பாட்டுக்கு ஆதாரம் என்ன. ஹிந்து மதத்தில் தர்க்க பூர்வமான குதர்க்கமான விஷயம் என்ன விகிதாசாரத்தில் உள்ளதாக ஆர்வி கருதுகிறார்? ஏன் அவ்வாறு கருதுகிறார்.?
ஜூலை 31, 2011 at 6:19 மு.பகல்
பெரும்பாலான இந்துக்கள் நம்பிக்கை அடிப்படையிலேயே இந்து மதத்தை அணுகுகின்றனர். இது தெரிந்ததுதான்.
அதே நேரம் இந்து மத ஸ்ருதிகள் பகுத்தறிவு அடிப்படையில் வாழ்க்கையை ஆராய்தல், பிணி, மூப்பு, சாக்காடு உடைய இந்த வாழ்க்கை குறைபாடு உடையது என்கிற உண்மையை உணர்ந்து துன்பங்கள் தாக்காத, குறைபாடற்ற நிலையை அடைய முயலுதல் இவற்றுக்கும் முக்கியத்துவம் குடுக்கின்றன.
//இந்திரியார்த்தேஷு வைராக்கிய மன அஹங்கார எவ ச,
ஜன்ம மிருத்யு, ஜரா வியாதி சுக துக்க அனுதர்ஷன –
கீதை//
ஆதி சங்கரர்
// புனரபி ஜனனம், புனரபி மரணம், புனரபி ஜனனே ஜடரே சயனம், இக சம்சாரே பஹு துக் தாரே //
எனப் பாடியுள்ளார்!
இதைப் பலர் முயன்றும் பார்த்திருக்கின்றனர். அறநூறு கோடிப் பொன்னை தெருவிலே கொட்ட சொல்லி விட்டு துறவியாகி விட்டார் பட்டினத்தார்.
நம்பிக்கை அடிப்படையிலான மக்கள் தங்கள் கஷ்டம் தீரவும், விரும்பியதைப் பெறவும் கடவுளை வணங்குகின்றனர். அவர்களை படிப் படியாக புத்தறிவு ஆரய்ச்சிக்கு கொண்டு வருவதையே அறிங்கர்கள் செய்கின்றனர்.
எனவே இந்து மதத்தின் அடிப்படைகள் Logical Analysis, Reasoning, Actual realisation ஆகியவற்றை கொண்டுள்ளதாகவும், ஆன்மீக பயிற்சியின் ஆரம்ப கட்டம் நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்ததாகவும் உள்ளது.
——-
//எனக்கு பக்தி இல்லை என்று நான் எங்கும் சொன்னதில்லை. //
என் நண்பர் முருகா, முருகா என்பார், எனக்கு அது போல பக்தி எல்லாம் கிடையாது என நீங்களே எழுதியாக எனக்கு நினைவு இருக்கிறது( I read that article many times, I rember that you wrote this). அதோடு உங்களின் பக்தி சிந்தனையை வெளிப்படுத்தும் பதிவையோ, பின்னூட்டத்தையோ நான் பார்த்தது இல்லை.
எனினும் , உங்களுக்கு பக்தி இருக்கிறது என நீங்கள் சொன்னால் .. well go ahead, if you have both devotion and logical reasoning you may ell become like Sankaracharaya
——-
//இந்து மதத்தில் லாஜிக் என்பதும் உண்டு என்பதே சரி. பிறகு இந்த கட்டுரையிலோ பக்ஸ் எழுதிய அறிமுகத்திலோ, லாஜிக் என்பது இந்து மதத்தில் இல்லை என்று சொல்லப்படவில்லையே?//
//அவனுக்கு “ரீசனிங்” (Reasoning) என்பது முக்கியம். “நம்பிக்கை”யில் நம்பிக்கை ஓரளவே.//
The obvious thing is – as if RV relies more on reasoning… which the hinduism lacks…
The logical approach and reasoning are interrelated.
——
//நிபுணர்கள்தான் ஒரு விஷயத்தைப் பற்றி கருத்து தெரிவிக்க வேண்டும் என்று சொல்வதை நான் வன்மையாக மறுக்கிறேன்.//
நிபுணத்துவம் இல்லாமலே ஒரு விடயத்தைப் பற்றி எழுதி, தவறான தகவலை வாசகர்களிடையே பரப்புவது உரிமை என்றால் நான் ஆட்சேபிக்க ஒன்றுமில்லை. தளம் உங்களுடையது. நான் மறுக்கவில்லை.
——-
//என் அப்பா எழுதியது என்று முதல் பாராவில் இருப்பதைக் கூட நீங்கள் கவனிக்காமல் விட்டதால், உங்களுக்கு இந்தப் பதிவு பற்றி கருத்து சொல்ல உரிமை இல்லை என்று யாராவது சொன்னால் அதையும் வன்மையாக மறுப்பேன்.//
நான் மறுக்கவில்லை. அதையே காரணம் காட்டி நீங்கள் என் பின்னூட்டத்தை மாடரேட் செய்து எடுத்தால் கூட நான் ஆட்சேபிக்கவில்லை.
——–
//என் அப்பா எழுதியது என்று முதல் பாராவில் இருப்பதைக் கூட நீங்கள் கவனிக்காமல் விட்டதால்//
இது இந்தக் கட்டுரையின் பொருளுக்கு தொடர்புடைய கருத்தா?எப்படி இருந்தாலும் இதை முக்கியமாகக் காட்டி சரியா கவனிக்கலை, சரியா கவனிக்கலை, இவர் சொல்லும் கருத்துக்கள் இந்து மதத்தை ஒட்டி அல்ல என்றும் சொல்லிக் கொண்டால் கூட நான் மறுக்கவோ, ஆட்செபிக்கவோ இல்லை.
ஆகஸ்ட் 22, 2011 at 10:03 மு.பகல்
அவர்களை படிப் படியாக புத்தறிவு ஆரய்ச்சிக்கு கொண்டு வருவதையே அறிங்கர்கள் செய்கின்றனர். //
They shd not do that. If at all they do, it may satisfy ppl like RV and u only. Such ppl as u r there; but not humungous in religious population.
The majority of the masses need just faith and belief of unquestioning kind with just an assurance that their sorrows will come to end; and when they breath their lost, they will reach God’s grace in Heaven.
So, we need to distinguish between the vast majority and the miniscule minority like u, Rv and many others.
ஜூலை 31, 2011 at 6:23 மு.பகல்
If any one go through the Upanishadhs they can find that the core concept of Hinduism is to search the truth, find the truth ..and become part of the truth.
இந்து மதத்தின் உபநிடதங்கள் போன்ற ஸ்ருதிகள் உண்மையை அடிப்படையாகக் கொண்டவை.
“சத்யமேவ ஜெயதே” ( உண்மையே வெல்லும்) என்று முண்டக உபநிடதத்தில் சொல்லி இருக்கிறார்கள். உண்மையை சிலகாலம் மட்டுமே மறைக்க முடியும்.
இந்த வாசகத்தில் கருத்தை மாற்றி இடைச் சொருகல் செய்வது எளிதல்ல, எழுத்துக்களை மாற்றுவதும் எளிதல்ல.
அதைப் போல
அசத்தோமா சத்கமய ( let me go From illusion/ false to truth)
தமஸோமா ஜ்யோதிர்கமய ( let me go From darkness to light)
மிருத்யோர் மா அமிர்தங்கமய ( let me go From mortal state to immortal)
ஆகஸ்ட் 31, 2011 at 7:38 மு.பகல்
ஆக்ஞேயா, // ரீசனிங்கை வைத்துத்தான் பார்ப்பேன் எல்லாவற்றையும் என்றால் மதத்தின் அடிப்படையே தோற்றுவிடும்…மக்கள் மதத்தை நாடுவது ரீசனிங்கால் எடைப்போடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டவைகளுக்காகல்ல. வெறும் நம்பிக்கைக்குத்தான். // இது அனேகமாக எல்லா மதங்களுக்கும் பொருந்தும் – ஹிந்து, பவுத்த, சமண மதங்களைத் தவிர்த்து. சார்வாகம் இன்று பாப்புலராக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அதுவும் ஹிந்து மதத்தின் ஒரு கூறு என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இன்றைக்கு பொதுவாக நடைமுறையில் இருக்கும் கிளாசிகல் ஹிந்து மதத்தை வைத்து இந்தக் கருத்து எழுதப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.
// கட்டுரையாசிரியர் இன்று இல்லை. இல்லாதவரிடம் போய் எப்படிக்கேட்பது ? // ??? இல்லாமல் எங்கே போய்விட்டார்? என் அப்பாதான் எழுதியது…
க்ருஷ்ணகுமார், // அப்படியானால் ஏதோ ஹிந்து மதம் முழுக்க ஆதாரமில்லா விஷயங்களையே கொண்டிருப்பதாகவும் ஏதோ நடு நடுவே தர்க்க ந்யாயங்களுக்குட்பட்ட விஷயங்களும் தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள ஊறுகாய் போல இருப்பதாகவும் இந்த வாசகம் ஒரு தோற்றத்தை கொடுக்கிறது. இது சரியான நிலைப்பாடாக தோன்றவில்லையே. ஆர்வியின் இந்த தடாலடி நிலைப்பாட்டுக்கு ஆதாரம் என்ன. ஹிந்து மதத்தில் தர்க்க பூர்வமான குதர்க்கமான விஷயம் என்ன விகிதாசாரத்தில் உள்ளதாக ஆர்வி கருதுகிறார்? ஏன் அவ்வாறு கருதுகிறார்? // உங்களுக்குப் புரிய வைக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. இருந்தாலும் நான் பதில் சொல்லவில்லை என்று இருக்கவேண்டாம். இன்றைக்கு பொதுவாக நடைமுறையில் இருக்கும் கிளாசிகல் ஹிந்து மதம் நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தது. ஆனால் மீமாம்சம், நியாயம், வைசேஷிகம் மாதிரி தர்க்கபூர்வமான அணுகுமுறைகளும் ஹிந்து மதத்தின் பகுதி என்று ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இந்த அணுகுமுறைகள் இன்று ப்ராக்டிகலாக ஊறுகாய்தான்.
திருச்சிக்காரன், // என் நண்பர் முருகா, முருகா என்பார், எனக்கு அது போல பக்தி எல்லாம் கிடையாது என நீங்களே எழுதியாக எனக்கு நினைவு இருக்கிறது( I read that article many times, I rember that you wrote this). அதோடு உங்களின் பக்தி சிந்தனையை வெளிப்படுத்தும் பதிவையோ, பின்னூட்டத்தையோ நான் பார்த்தது இல்லை. // நான் முருகா முருகா என்பதில்லை என்றால் எனக்கு பக்தி இல்லை என்று பொருள் கொள்வதற்கில்லை. அது போல நான் பக்தி பாராட்டுவதில்லை, அவ்வளவுதான்.
ஆகஸ்ட் 31, 2011 at 3:24 பிற்பகல்
ஐயா, ஒத்துக்கொள்கிறேன். ஈரேழு பதினாலு லோகங்களிலும் தர்க்க ந்யாயத்துடன் ஆர்வி மட்டும் தான் பேசுவார் என்று.
மீமாம்சம் என்று பொத்தாம் பொதுவாக சொல்லியுள்ளீர்களே அதில் பூர்வ மீமாம்சம் மற்றும் உத்தர மீமாம்சம் என்று இரண்டும் அடங்கும்.
தர்க்க ந்யாயம் எங்கே தேவை எங்கே தேவையில்லை என்பது உட்ப்ட சாஸ்த்ரங்கள் தெளிவாக சொல்கின்றன.
விலஜ்ஜ: ந்ருத்யதி காயந்தி (கூச்சமில்லாது ஆடு பாடு) என்ற படி பக்தி மார்க்கத்தில் நாரத பக்தி ஸூத்ரத்தில் வாதோ நாவலம்ப்ய: (பக்தன் வாதம் செய்யலாகாது) என சொல்லப்படுகிறது.
அத்வைத சாஸ்த்ரங்களை விசாரம் செய்யவேண்டிய படிக்கு விவேக சூடாமணியில் சாஸ்த்ர விசாரம் செய்ய விழைபவன் லக்ஷணம் சொல்கையில்
“மேதாவி புருஷோ வித்வான் ஊஹா போஹ விசக்ஷண:” என்று சொல்லியுள்ளது
இதற்கு வ்யாக்யானம் எழுதிய ஸ்ரீ சந்த்ரசேகர பாரதி ஸ்வாமிகள் புருஷ: மற்றும் வித்வான் என்ற பதங்கள் சாஸ்த்ர விசாரம் செய்ய விழைபவன் வ்யாகரண மீமாம்சா மற்றும் ந்யாய சாஸ்த்ரங்கள் கசடற கற்றவனாக இருக்க வேணும் என்று சொல்லியுள்ளார். உள்ளபடியே யதோக்தம் அத்வைத சாஸ்த்ரம் படிக்க விழைபவர் பூர்வ மீமாம்சமும் ந்யாயமும் அவசியம் படிக்கின்றனர்.
இது மதத்தை பின் பற்றுபவர் விஷயம்.
ஆனால் ஆர்வி எழுதியது இந்து மதத்தில் லாஜிக் என்பதும் உண்டு என்றே. மதம் என்ற சொல் குறிப்பது மத சாஸ்த்ரங்களை. ப்ராக்டிகல் என்ற படி சொல்ல வேணுமானால் ஹிந்து மதத்தவர்களில் என்று சொல்லியிருக்க வேண்டும் ஹிந்து மதம் என்று சொல்லியிருக்க கூடாது.
முதலில் பக்தி பற்றிய சாஸ்த்ரங்கள் ந்யாய சாஸ்த்ரங்களுக்கு அப்பாற்பட்டவை என்று சொல்ல முடியாது. ஆர்வியின் பார்வையில் ஒப்புக்காக அப்படி வைத்துக்கொண்டாலும் மத சாஸ்த்ரங்களில் பக்தி சாஸ்த்ரங்களை விட தத்வார்த்தம் பேசும் சாஸ்த்ரங்கள் அதிகம்.
ஆக ஸ்வாமின் நீங்கள் சொல்லியது தவறு.
லோகத்திற்கும் லோஹத்திற்கும் வித்யாசம் தெரியாமலேயே மணிப்ரவாளம் பற்றி பக்கம் பக்கமாக எழுதுவீர்களே (pun intended) . உங்களுக்கு புரிய வைக்க முடியும் என தோணவில்லை. இருந்தாலும் தவறென்று புரிந்தால் சொல்ல வேண்டியதில் என்ன தயக்கம்
செப்டம்பர் 2, 2011 at 4:18 மு.பகல்
// மீமாம்சம் என்று பொத்தாம் பொதுவாக……
அத்வைத சாஸ்த்ரம் படிக்க விழைபவர் பூர்வ மீமாம்சமும் ந்யாயமும் அவசியம் படிக்கின்றனர்.// இந்த விவரம் எல்லாம் எதற்காக என்று புரியவில்லை. இதைப் பற்றி நமக்குள் எந்த விவாதமும் இல்லையே?
// ஆனால் ஆர்வி எழுதியது இந்து மதத்தில் லாஜிக் என்பதும் உண்டு என்றே. மதம் என்ற சொல் குறிப்பது மத சாஸ்த்ரங்களை. // மீமாம்சம் இத்யாதியை நீங்கள் மத நூல்களாக ஏற்கவில்லையா?
// முதலில் பக்தி பற்றிய சாஸ்த்ரங்கள் ந்யாய சாஸ்த்ரங்களுக்கு அப்பாற்பட்டவை என்று சொல்ல முடியாது. // நான் அப்படி எண்ணவில்லை.
// இருந்தாலும் தவறென்று புரிந்தால் சொல்ல வேண்டியதில் என்ன தயக்கம் // வாதம் இருவரும் ஏற்கும் ஒரு அடிப்படையில் இருக்க வேண்டும். நமக்குள் அப்படி ஒரு அடிப்படை இருப்பதாக நான் நினைக்கவில்லை.
ஆகஸ்ட் 31, 2011 at 4:28 பிற்பகல்
//இல்லாமல் எங்கே போய்விட்டார்? என் அப்பாதான் எழுதியது…//
நல்லது. நான் தவறாக நினைத்து விட்டேன்.
தீர்க்காயுசாக இருக்கட்டும் உங்களப்பா.
Convey my respects and regards to him please.
செப்டம்பர் 5, 2011 at 10:02 மு.பகல்
இதில் இவ்வளவு விவாதிக்கப்பட்டுள்ளதைப் பார்க்கையில் சந்தோஷமாக இருக்கிறது. என் கட்டுரை குறித்து சுட்டி கேட்கப்பட்டிருந்ததால் அதனைக்கீழே தந்திருக்கிறேன்:
http://www.tamilhindu.com/2010/03/hindutva-three-types/
செப்டம்பர் 11, 2011 at 5:36 மு.பகல்
அருணகிரி, சுட்டிக்கு நன்றி! என் அப்பாவும் ரொம்ப சந்தோஷப்படுவார்…
நவம்பர் 5, 2011 at 6:53 மு.பகல்
சாதியும் மதமும் சமயுமும் காணா
ஆதிய அநாதியாம் அருட்பெருஞ்ஜோதி
சாதியும் மதமும் சமயமும் பொய் என
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி
திருவடி தீக்ஷை(Self realization)
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.
நாம் நிலையிள்ளத உடம்பு மனதை “நான்” என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.
Utube videos:
(First 2 mins audio may not be clear… sorry for that)
PART-1 Click here
PART-2 Click here
PART-3 Click here
Online Books
http://www.vallalyaar.com/?p=409
Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454