ஜூன் 2011


அக்டோபர் 30 1928.

சைமன் கமிஷன் உறுப்பினர்கள் இந்தியாவிற்கு வந்து இறங்கும் நாள். ஒரு பக்கம் அதை எதிர்க்கும் சுதந்திர வீரர்கள். மற்றொரு பக்கம் அதை ஆதரிக்கும் தேச துரோகிககள்.

இப்படி இந்திய தலைவர்களையும், மக்களையும் பிரித்து இழுத்த சைமன் கமிஷன் என்பது என்ன? 1927ஆம் ஆண்டு ஆங்கில அரசு இந்தியாவில் அரசியலில் சீர்த்திருத்தங்கள் ஏற்படுத்த மற்றும் இந்திய அரசாங்க சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர ஒரு அறிக்கையை தயாரிக்கச் சொல்லி ஒரு கமிஷனை நியமித்தது. ஜான் சைமனை தலைவராகக் கொண்டு ஆறு உறுப்பினர்கள் இருந்தனர் அந்தக் குழுவில். அனைவரும் பிரிட்டிஷ் பார்லிமெண்ட் உறுப்பினர்களான வெள்ளையர்கள். இந்திய தலைவர்கள் அதை ஏற்றுக் கொள்ளமுடியாத அவமானமாக கருதினார்கள். இந்தியர் அல்லாத ஒரு கமிஷன் எப்படி இந்தியாவின் நலனுக்குச் சாதகமாக பாராபட்சமின்றி எப்படி ஒரு அறிக்கையை வெளியிட முடியும் எனபது இந்திய தலைவர்களின் நியாமான கேள்வி.

ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கம் அதற்கு செவி சாய்க்கவில்லை. இதனால் வெகுண்ட இந்திய மக்கள் சைமன் கமிஷனை புறக்கணிப்பது என்று முடிவு செய்து ஒரு மாபெரும் விடுதலைப் போராட்டத் தலைவரின் கீழ் ஒன்று திரண்டனர். அந்தத் தலைவர் போராட்டத்தின் முதல் கட்டமாக மத்திய சட்ட சபையில் தற்போதைய சைமன் கமிஷன் குழு ஏற்புடையதல்ல என்றும் இந்தியர்களுக்கும் இந்த கமிஷனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறும் ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்தார். ஆங்கிலேய உறுப்பினர்கள் நிறைந்த அந்த சட்ட சபையில் அவர் அறிமுகப்படுத்திய தீர்மானம் தோற்கும் என்று தெரிந்தது. இந்திய உறுப்பினர்களை நாடினார்.

அடுத்தக் கட்ட முயற்சியாக அந்தத் தலைவர் மோதிலால நேரு தலைமையில் அமைந்த குழு தயார் செய்த ஒரு விளக்கம் கூறும் அறிக்கையை நாடு முழுவதும் கொண்டு சென்றார்.

ஆனால் இவை அனைத்தையும் பொருட்படுத்தாமல் ஆங்கிலேய அரசு சைமன் கமிஷனை முன்னகர்த்தியது. அன்று சைமன் கமிஷன் இந்தியா வந்திறங்கியது. தலைவர்களும் தொண்டர்களும் சைமன் கமிஷனுக்கு கறுப்பு கொடி காட்டினர். நாடு முழுவதும் ஹர்த்தால் செய்தனர். ஆயிரக்கணக்கான மக்களும், இளைஞர்களும் ”சைமன் திரும்பிப் போகவேண்டும்” என்று கோஷமிட்டனர். சைமன் கமிஷன் புகைவண்டி நிலையத்தில் இருந்து வெளியே வரமுடியாத அளவு கூட்டமிருந்ததால் போலிஸ் தடியடிப் பிரயோகம் செய்தது. பலரின் ரத்தம் சிந்தியது. போலிஸ் கலங்காமல் தலைவரை நெருங்கி அவரை மேலும் மேலும் அடித்தது. முடிவில் தலைவர் அப்பாவி மக்கள் தடியடிபடுவதை பொறுக்கமுடியாமல் கூட்டத்தை கலைத்தார்.

”என் மீது விழுந்த அடிகள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சவப்பெட்டியில் அறைந்த கடைசி ஆணி” என்று அன்று மாலை நடந்த கூட்டத்தில் முழங்கினார். ஆனால் அதன் பின் உடல் நல்ம் குன்றி நவம்பர் 17ஆம் நாள் காலமானார்.

பஞ்சாப் சிங்கம் என்ற வழங்கப்பட்ட அந்தத் தலைவர் லாலா லஜபட் ராய்.

 

(For ItsDiff Radio – 06/15/2011)

ItsDiff Radio Show -

ஒலிச்சித்திரம்

by Bags

with Sri on June 29, 2011

7:30 AM PST (INDIAN TIME 8:00 PM)

Title – நினைவில் நிற்பவை

LIVE

ItsDiff Radio அல்லது Tamizhradio.com

Every Wednesday between 6AM to 9AM PST

(INDIAN TIME – 6:30PM to 9:30PM)

ஜூலை 8, 1910

லண்டனிலிருந்து வந்து மெர்செயில்ஸில் பழுதுபார்க்க நங்கூரம் பாய்ச்சியிருந்தது SS Morea என்ற கப்பல். அதில் உருவாகிவரும் ஒரு இந்திய விடுதலை போராட்ட தலைவரை பிரிட்டிஷ் அரசாங்கம் கைது செய்து இந்தியாவிற்கு நாடு கடத்தி கொண்டிருந்தது.

முன்னதாக அவர் சட்டக் கல்விக்காக சர்தார்சிங் ரானா என்னும் வழக்கறிஞரால் நிறுவப்பட்டு வந்த உதவித் தொகைகளில் ஒன்றான ஷிவாஜி உதவித்தொகையைப் பெற்று லண்டன் சென்றார். அங்கே இந்தியா ஹவுஸ் என்ற தங்குமிடத்தில் வாழ்ந்து வந்தார். அங்கிருந்தபடியே இந்திய சுதந்திரத்திற்க்கான புரட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்.

அந்தத் தலைவர் மீது பிரிட்டிஷ் அரசாங்கம் சுமத்திய குற்றச்சாட்டுகள் – துப்பாக்கிகளை இந்தியாவிற்கு அனுப்பி புரட்சிக்காரர்களுக்கு ஆயுத உதவி செய்தார் என்பதும், கர்ஸன் வைலியை கொலை செய்த மதன்லால் திங்க்ரா என்ற புரட்சி வீரருக்கு கைத்துப்பாக்கி வழங்கியதும், மற்றும் இந்தியா ஹவுஸ் என்ற லண்டன் தங்கும் விடுதியில் புரட்சிக்காரர்களை உருவாக்கினார் என்பதும் ஆகும்.

கப்பலில் தலைவர் காலை ஆறு மணிக்கு துயில் எழுந்தார். தான் கழிப்பறையை உபயோகப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். பார்க்கர் என்னும் காவலாளி முதலில் மறுத்து பின்னர் சிறிது நேரம் சென்ற பின்னர் அனுமதித்தார். அதுவரை அமைதியாக இருந்தத் தலைவர் மனதில் ஒரு திட்டம் உருவாகியிருந்தது.

காவல் அதிகாரி பார்க்கரின் அனுமதி பெற்ற பின் கழிவறைக்குள் நுழைந்த தலைவர் தன் மேலுடையை கதவின் மேல் படர விட்ட  பின்னர்  கதவை மூடினார். பின்னர் சுறு சுறுப்பாக தன் திட்டத்தை செயல்படுத்தினார். அங்கே இருந்த சிறிய துவாரத்தின்  வழியாக தன்னைக் குறுக்கிக் கொண்டு கடலுக்குள் கடலுக்குள் குதித்தார். தப்புவதற்காக கரையை நோக்கி நீச்சலடித்தார். கரையை அடைந்ததும் ஓடத்தொடங்கினார்.

ஆனால் இவர் ஒரு அரசியல் கைதி என்ற தெரியாத சக பயணிகள் திருடன் என நினைத்து அபயக் குரல் கொடுத்தனர். அதை கேட்ட அருகிலிருந்த காவலர் ஒருவர் தலைவரை பிடித்துக் கொண்டார். அதற்கு பின்னர் தலைவர் தப்பிக்கும் முயற்சியை மேற்கொள்ளவில்லை. பின்னர் அந்தமான் சிறையில் கொடுமைகளை அனுபவித்தார்.

1924ஆம் ஆண்டு விடுதலைக்காக பின்னர் அவர் சமூக நலனுக்காகவும் ஹிந்து மத சேவைகளுக்காகாவும் பாடு பட்டார். இவர் எழுதிய பிரபல புத்தகங்களுள் ஜோசஃப் மசினி, இந்திய விடுதலைப் போராட்டம் 1857 என்பவை குறிப்பிடத்தக்கது. மகாத்மா காந்தி கொலையில் இவருக்கு தொடர்பு இருப்பதாக கருதப்பட்டு பின்னர் நிரபராதி என்று உறுதி செய்யப்பட்டது. 1966ல் இவர் காலமானார்.

 

அந்தத் தலைவர் வீர் சாவர்க்கார்.

 

(For ItsDiff Radio – 8th June 2011)

மார்ச் 16 1799

திருநெல்வேலியின் புதிய ஆங்கிலேய ஆட்சியாளர் வரி வசூல் செய்யும் முயற்சிக்கு சமீப காலமாக எதிர்ப்பு தெரிவித்து வந்த ஒரு பாளையக்காரரை சந்திக்க அழைப்பு விடுத்தார். பாளையக்காரர்களுக்கு தலைவராக இருந்தவர் அவர்.

விஜயநகர பேரரசிற்கு பின் நாயக்கர்கள் ஆட்சியின் கீழே வந்திருந்த மதுரைப் பகுதி 72 பாளையங்களாக பிரிக்கப்பட்டிருந்தது, நாயக்கர்கள் பாளையத்திற்கு ஒரு தலைவரை நியமித்து, ஆட்சி செய்து வரி வசூலிக்கும் பொறுப்பை அந்தத் தலைவரிடம் ஒப்படைத்திருந்தார்கள். அந்தத் தலைவர்கள் பாளையக்காரர்கள் என்று அழைக்கப்பட்டு வந்தனர். பின்னாட்களில் அவர்களை பாலிகர் என்று ஆங்கிலேயர்கள் அழைக்கத் தொடங்கினர்.

நாயக்கர் ஆட்சி போய் ஆற்காட் நவாபின் கீழ் வந்தது மதுரை. ஆனால் குறுநில மன்னர்களான பாளையகாரர்கள் ஆற்காட் நவாபை தங்கள் பேரரசாக ஏற்கவில்லை. அதனால் கப்பம் கட்டாமல் இருந்து வந்தார்கள். ஆடம்பரங்களில் பொருளை வீணடித்து வந்த நவாப் இதனால் கடினமான நிதிபற்றாக் குறைக்கு உள்ளானார். நிதிநிலைமையை சரி செய்ய கிழக்கிந்திய கம்பெனியிடம் கடன் பெற்ற நவாப் இறுதியில் அதற்கு ஈடாக கிழக்கிந்திய கம்பெனி பாளையக்காரகளிடம் வரி வசூலித்துக் கொள்ளலாம் என சமரசம் செய்து கொண்டார். இதனால் ஆங்கிலேய நேரடி ஆட்சியின் கீழ் பாளையக்காரகள் வந்தனர். அந்நியர்களுக்கு தாங்கள் இந்த சூழ்ச்சியினால் விற்க்கப்பட்டதால் பாளையக்காரர்கள் மேலும் வெகுண்டனர். அவர்களிடமிருந்து விடுதலை அடைய முயற்சி செய்தனர்.

இந்த சூழ்நிலையில் தான் அந்த சந்திப்பின் அழைப்பை ஏற்க மறுத்தார் அந்தப் பாளையக்காரர்களின் தலைவர். முன்னதாக ஜாக்சன் என்ற கிழக்கிந்திய கம்பெனியின் கலெக்டரை சந்திக்கச் சென்ற பொழுது, சந்திப்பு கைகலப்பில் முடிந்தது. எப்படியும் தனக்கும், பிற பாளையக்காரர்களுக்கும் நீதி கிடைக்காது என்று உணர்ந்து, அந்த அழைப்பை நிராகரித்தார் அவர். மேலும் வரி கட்ட முடியாது என்றும், தன்னிடமிருந்து ராமநாதபுரம் பகுதியிலிருந்து பிடுங்கப்பட்ட பிரதேசங்களை தன்னிடமே ஒப்படைக்கவேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தார்.

இதனால் வெகுண்ட ஆங்கிலேய கலெக்டர் தன் படைகளுக்கு அந்தப் பாளையக்காரரின் கோட்டையான பாஞ்சாலங்குறிச்சியை தாக்குமாறு ஆணையிட்டார். கோட்டையை முற்றுகையிட்ட தளபதி காலின்ஸையும், மேஜர் பேனர்மேனையும் எதிர்த்து தன் படையுடன் போர் புரிந்தார். ஆனால் மேலும் மேலும் பிரிட்டிஷ் படை வரும் என்பதையுணர்ந்த அவர் தப்பிச்சென்றார்.

ஆனால் ஒரே மாதத்தில் உடனிருந்த ஒரு பாளையக்காரரின் சதியினால் எதிர்களிடம் பிடிபட்டார். பின்னர் அனைத்து பாளையக்காரர்களுக்கும் கிலி கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அவரை எல்லோரும் பார்க்கும வண்ணம் ஒரு மரத்தில் தூக்கிலிட்டார்கள் ஆங்கிலேயர்கள்.

விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்த அந்த பாளையக்காரரின் நினைவாக அரசு ஒரு நினவு சின்னத்தை கயத்தாறு என்னும் இடத்தில் நிறுவியிருக்கிறது.

அந்தப் பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மன்.

 

(For ItsDiff Radio – 06/01/2011)

காரில் நானும் க்ரியாவும் போய்க்கொண்டிருந்தபோது அவளுக்கு கனமான, லேசான பொருள் எல்லாம் புவியீர்ப்பு விசையால் ஒரே மாதிரி இழுக்கப்படும், மேலிருந்து கீழே போட்டால் தரையை அடைய ஒரே நேரம்தான் ஆகும் என்பதை சொல்லிக் கொடுக்கலாமே என்று தோன்றியது.

நான் ஆரம்பித்தேன். க்ரியா நீ சூப்பர் ஸ்ட்ராங் சூப்பர்வுமனாம். பத்து மாடி கட்டடத்தின் மீது ஏறி நிக்கறயாம். உன் ஒரு கைல நாம போற இந்தக் கார் இருக்காம்…
க்ரியா: I am too small, I can’t lift this car!
நான்: நீதான் சூப்பர் ஸ்ட்ராங் சூபர்வுமனாயிற்றே! அதனால் சுலபமாக தூக்கலாம்.
க்ரியா: So I can lift this car?
நான்: ஆமா. இன்னொரு கைல இன்னிக்கு வந்த பேப்பரை சுருட்டி ஒரு பெரிய பால் மாதிரி வச்சிருக்கியாம். ரெண்டையும் ஒரே நேரத்தில கீழே போடறயாம். எது முதல்ல கீழ விழும்?

க்ரியா ரொம்பவே யோசித்தாள். அவளுக்கு பதில் சொல்ல விருப்பமே இல்லை என்று தெளிவாகத் தெரிந்தது. ஐ டோன்ட் நோ என்று சொல்லிப் பார்த்தாள், நான் விடவில்லை. உனக்கு தோன்றுவதைச் சொல் என்று வற்புறுத்தினேன். நிறைய தயக்கத்துக்குப் பிறகு பேப்பர்தான் முதலில் விழும் என்று சொன்னாள்.

நான் அசந்துபோனேன். பேப்பர் முதலில் விழும் என்று யாரும் சொல்லி நான் இது வரை கேட்டதில்லை. அப்படி யோசிக்க முடியும் என்று கூட எனக்குத் தோன்றியதில்லை. இவள் மாத்தி யோசிப்பவள் என்று தெரியும், இருந்தாலும் இது என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது.

நான்: ஏன் பேப்பர் கீழ முதல்ல விழும்னு நினைக்கறே?
க்ரியா: I think that the car will fall first. But if the car will fall first, you won’t ask this question. Since you ask this question, it has to be a trick question. So the right answer has to be paper.

சரி ரொம்ப நாளாச்சு க்ரியா பத்தி ஒரு போஸ்ட் போட்டு, இதைப் போடலாம் என்று சிரித்துக் கொண்டேன். And it got better and better.

நான்: சரி க்ரியா, ட்ரிக் கொஸ்டின் எல்லாம் மறந்துடு. நிஜமா உனக்கு எது முதல்ல கீழே விழும்னு தோணறது?
க்ரியா: கார்.

அப்பாடா என்னதான் மாத்தி யோசிப்பவளா இருந்தாலும் வழிக்கு வந்துவிட்டாள் என்று நினைத்துக் கொண்டேன்.
நான்: ஏன் கார் முதல்ல கீழே விழும்னு சொல்லறே?
க்ரியா: Because the car will be so heavy, that I will drop it before the paper ball!

அப்புறம் பைசாவில் டவர் (Leaning Tower of Pisa) ஏன் சாய்ந்து நிற்கிறது, அப்படி சாய்ந்து நின்றால் அது கீழே விழுந்துவிடாதா, பைசாவில் பிட்சா கிடைக்குமா என்று நிறைய கேள்விகளை விவாதித்துக் கொண்டே போவதற்குள் கிளாஸ் வந்துவிட்டது. கலீலியோவுக்கு வரவே முடியவில்லை.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 59 other followers