மே 2011
மாதாந்திர தொகுப்பு
மே 25, 2011
ஜூன் 8, 1907
பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு நோட்டீஸ் பிறப்பித்தது. அதில் ஆங்கில அரசாங்கத்திற்கு எதிராக வந்தே மாதரம் பத்திரிக்கையில் கட்டுரைகள் எழுதிவந்த அதன் ஆசிரியர் வன்முறையையும் சட்டத்திற்கு புறம்பான போக்குகளையும் தூண்டி விடுவதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த்து. ஆனால் ஆசிரியர் கலங்கவில்லை. அவர் எதற்க்கும் தயாராகவே இருந்தார்.
பின்னர் ஒரு நாள் காலையில் ஆசிரியர் இல்லாத நேரத்தில் பத்திரிக்கை அலுவலகத்தை சோதனை இட்டு பல்வேறு தஸ்தாவேஜூக்களையும், புத்தகங்களையும் கைப்பற்றியது. செய்தியைக் கேள்விப்பட்ட ஆசிரியர் கலங்கவில்லை. ஆனால் விரைவில அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று ஊகித்தார்.
ஆகஸ்ட் 16, 1907ல் வந்தே மாதரம் அலுவலகத்திற்கு ஒரு துப்பறியும் இலாகா அதிகாரி வந்தார். கையில் ஒரு அரஸ்ட் வாரண்ட் இருந்தது. வந்தே மாதரம் பத்திரிக்கை அலுவலகத்தில் மேற்பார்வை இலாகாவிலிருந்த இருந்த ஹேமச்சந்த் பாக்சியிடம் வாராண்டின் சாராம்சம் விளக்கப்பட்டது.
“உங்கள் ஆசிரியர் யுகாந்தர் தீவிரவாத குழுவின் கட்டுரைகளை மொழிபெயர்த்து வந்தே மாதரம் பத்திரிக்கையில் வெளியிடுகிறார்.’இந்தியா இந்தியர்களுக்கே’ என்ற கட்டுரையில் வன்முறை தூண்டி விடப்பட்டதாகவும், அரசாங்கத்திற்கு எதிராக மக்களை தூண்டிவிடுவதாகவும் இந்த வாரண்டில் இருக்கிறது” என்றார் அந்தத் துப்பறியும் அலுவலர்.
பின்னர் அந்த ஆசிரியரிடம் செய்தி தெரிவிக்கப்பட்டது. ஆசிரியர் கலங்கவில்லை. சரணடைவதற்கு தயாராக இருந்தார். தகுந்த நேரத்தில் அந்தத் துப்பறியும் இலாகா அதிகாரியிடம் சென்று சரணடையவும் செய்தார்.
யுகந்தர் குழு உறுப்பினர்கள் குதிராம் போஸ் மற்றும் பிரஃபுல்லா ஷாக்கி ஆகியோர்கள் மாஜிஸ்த்ரேட் கிங்ஸ்போர்டு மீது குண்டு எறிந்து கொலை செய்ய முயன்றதற்க்காக போடப்பட்ட வழக்கில் அந்தக் கொலைகளை தூண்டி விட்டவர் என்ற காரணங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
சுதந்திரத்திற்க்காக பாடுபட்ட இவர் ஆன்மாவின் சுதந்திரத்திற்க்காகவும் தொண்டுகள் பல புரிந்தார். பின் நாட்களில் பாண்டிச்சேரியில் வந்து ஆரோவில் ஆசிரமத்தை தொடங்கினார். அங்கே ஆண்மிகத்தையும் இந்து ஞானத்தையும் சீடர்களிடம் பரப்பினார். ஆரியா என்ற பத்திரிக்கையை தொடங்கினார். மேலும் கீதை பற்றிய கட்டுரைகள், வேதத்தின் ரகசியங்கள், என்று பல்வேறு தகவல்களை உலகுக்கு அளித்தார்.
வந்தே மாதரம் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த அந்த விடுதலை வீரர் பின்னர் ஸ்ரீ அரபிந்தோ என்று அழைக்கப்பட்ட அரபிந்தோ கோஷ்.
(For ItsDiff Radio – 05/25/2011)
மே 19, 2011
1858ஆம் ஆண்டு மார்ச் 23 பொழுது புலராத அதிகாலை.
ஜான்ஸியின் ராணி லக்ஷ்மி பாய் தன் அரண்மனையின் ஆலோசனை மண்டபத்தில் தன் அமைச்சர்களுடனும் தளபதிகளுடனும் போர்கால அவசர கூட்டத்தில் வீற்றிருந்தார். அனைவரும் போர்களத்திலிருந்து வரும் செய்திகளைக் கேட்டு பரிதவித்துக் கொண்டிருந்தார்கள்.
“ஹுயூக்ஸின் படை சூழ்ந்து நெருங்கிவிட்டது. வெகுநேரமாக தடுத்துப் போராடிகொண்டிருக்கும் நம் படை வீரார்கள் இனி ஒரு முழு நாள் தாக்குப்பிடிக்க மாட்டார்கள் என்பது உறுதி. நானா சஹேபின் படைதளபதி, மஹாவீரன், என் ஆருயிர் நண்பன் தாந்தியா தோப்பே நம்மையும், நம் படைகளையும், இந்த ஜான்ஸி மண்ணையும் காப்பாற்ற படை அனுப்பியதாக ஓலை வந்தும் இதுவரை படைகள் வந்த சேரவில்லை. மெய்யான நிலமை இன்று மதியத்திற்குள் அவர்கள் வந்து சேரவில்லையென்றால் நம் படை சர்வ நாசம் அடையும். போர்களத்தின் தற்போதைய நிலவரமும், அங்கிருந்து வரும் மற்றச் செய்திகளும், நான் உடனே ஜான்ஸியை விட்டு வெளியேறாவிட்டால் அவர்கள் நாளை காலைக்குள் என்னைப் சிறைப்பிடித்து விடுவார்கள் என்பது தின்னம். நான் அப்படி தப்பிச் சென்றேன் என்றால் எஞ்சியிருக்கும் நம் படை உடனே சரணடைந்து விடும். நமக்கு வேண்டிய அவகாசமெல்லாம் தாந்தியாவின் படை வந்தடையும் வரைதான். அதன் பின்னர் ஹுயூக்ஸின் படைகளை நாம் ஜான்ஸியை விட்டு பின்னடையச் செய்யலாம்” என்று லக்ஷ்மி பாய் சபையில் கூறினார்.
“மகாராணி, உங்கள் எண்ணம் புரிகிறது. அதுவே என் எண்ணமும். ஆனால் தளபதி தாந்தியாவின் படையை நம்பி நாம் வாழாயிருந்தால், அது ஆபத்தில் முடியும். முதலில் நீங்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும்” என்றார் சேனாதிபதி.
அப்பொழுது கூட்டத்தில் இருந்த ராணியின் தோழி “ராணியாரே, எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. பலரும் உங்களுக்கும் எனக்கு உருவ ஒற்றுமையிருப்பதாக கூறியிருக்கிறார்கள். நான் உங்களைப் போல் உடையணிந்து உங்களுக்கு பதில் தளபதி தாந்தியாவின் படை வரும் வரை நம் படைகளுக்கு தலைமை தாங்கி போராடிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் அதற்குள் தப்பிச் செல்லுங்கள்” என்று கூறினார்.
தோழியாரின் யோசனையக் கேட்ட அனைவரும் அவருடைய வீரத்திற்க்காகவும், ராஜதந்திரத்திற்க்காகவும் அவரை பெரிதும் பாராட்டினார்கள்.
ராணி தோழியரைப் பார்த்து “என் அருமை தோழியே, எனக்காகவும், நம் நாட்டிற்க்காகவும் உன் உயிரையும் பொருட்படுத்தாமல் இந்த வீரச் செயலுக்காக துணிந்துள்ளாய். உன் வீரம் நம் பாரத வரலாற்றில் நீங்காத இடம் பெரும்” என்று கூறி விடைபெற்றார்.
பின்னர் அந்தத் தோழி போர்முனையில் வீரமாக போராடினார். ஆனால் ஹுயூக்ஸின் பெரும்படையின் முன் தோழி தலைமையேற்று வந்த ஜான்சியின் படை தோல்வியுற்றது. தோழி சிறைபிடிக்கப்பட்டார். தோழி தாங்கள் தேடி வந்த ஜான்சி ராணி லக்ஷ்மி பாய் அல்ல என்றுணர்ந்த ஹுயூக்ஸ் தோழியின் வீரத்தையும், தியாகத்தையும் பார்த்து வியந்து அவரை விடுதலை செய்தார்.
விடுதலைக்கு பின்னர் இந்திய அரசாங்கம் அந்தத் தோழியின் வீரத்தை போற்றும் வகையில் ஒரு தபால் தலையை வெளியிட்டது.
அந்தத் தோழி ஜல்காரி பாய்.
(For ItsDiff Radio 05/11/11 – Dramatization by Bags)
மே 10, 2011
தமிழ் திரையில் தாய் கதாபாத்திரங்கள்
by Bags
with Sri on May 11, 2011
7:30 AM PST (INDIAN TIME 8:00 PM)
Title – திரை உலகில் அம்மா
Every Wednesday between 6AM to 9AM PST
(INDIAN TIME – 6:30PM to 9:30PM)
மே 4, 2011
1896ஆம் ஆண்டு.
இந்தியா கடும் பஞ்சத்தில் மூழ்கியது. பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கடும் வரிகள் இந்தியர்கள் மீது சுமத்துப்பட்டு வந்த காலம் அது. பஞ்சத்தில் அவதியுற்றாலும் வரி கட்டாவிட்டால் இரக்கமற்ற அந்த அந்நிய அரசாங்கத்தால் மக்கள் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டு வந்தனர் அப்பொழுது மஹாராஷ்ட்ரத்தில் ஒரு தலைவர் மக்களின் அவதியை உடனடியாக நீக்குமாறு அரசாங்கத்தை எதிர்த்து குரல் கொடுத்தார்.
தலைவர் விவசாயிகளுக்கு உதவ முன் வந்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் பஞ்சம் ஏற்படுத்திய பாதிப்புகளை தான் நடத்தி வந்த “மராத்தா” மற்றும் “கேசரி” பத்திரிக்கைகளில் விரிவாக எழுதிவந்தார். இந்தக் கடினமான காலத்தில் “ப்ளேக்” நோய் பரவியது. ஏற்கனவே பஞ்சத்தில் துவண்டிருந்த மக்கள் மேலும் துயருற்றனர். தலைவர் அல்லலுறும் மககளுக்கு சேவை புரிவதற்க்காக தனிப்பட்ட முறையில் ஆதரவாளர்களுடன் சேர்ந்து மருத்தவமணைகளை திறந்தார். ஆனால் அரசாங்கமோ எந்த ஆதரவும் அளிக்கவில்லை. மேலும் வைசிராய் பஞ்ச நிவாரண நிதிக்கோ, வரி நிவாரணத்திற்கோ எந்த அவசியமும் ஏறபடவில்லை என்று இரக்கமேயில்லாமல் அறிவித்தார். உள்ளம் கொத்தித்த தலைவர் மேலும் ஆக்ரோஷமாக சர்க்காரின் பொறுப்பின்மையையும், இரக்கமின்மையையும் சாடினார். முடிவில் வேண்டா வெறுப்பாக ராண்ட் என்ற ஒரு விஷேச ப்ளேக் அதிகாரியை நியமித்தது.
ஆனால் ராண்டின் அலுவலகத்தைச் சார்ந்த அதிகாரிகள் பாதிக்கப்படாத மக்களின் வீடுகளில் புகுந்து அவர்களை மருத்துவமனையில் பொறுப்பில்லாமல் அடைத்தது. அவர்கள் வீட்டைச் சார்ந்த பிற உறுப்பினர்களையும் பிளேக் நோய் பாத்தித்திருப்பதாக கூறி அவர்களை வீட்டைவிட்டு அப்புறப் படுத்தியது. அவர்கள் வீட்டில் உள்ள பொருள்களை தீக்கு இறையாக்கியது. தலைவர் மேலும் மேலும் கேசரி பத்திரிக்கையில் “அரசாங்கத்திற்கு பித்து பிடித்துவிட்டதா?” என்ற தலைப்பில் ராண்டின் நடவடிக்கைகளை கண்டித்து வந்தார். ஒரு இளைஞன் ராண்டை கொலை செய்தான். அரசாங்கம் 1897ல் ராண்ட் கொலையைத் தூண்டியதாக தலைவரை கைது செய்தது. நாடே இதனால் கொந்தளித்தது. பிற தலைவர்களின் தளராத போராட்டத்திற்கு பின் அவரை ஒரு வருடத்தில் அரசாங்கம் விடுதலை செய்தது.
பின்னர் சுவதேசி இயக்கத்திற்க்காக போராடினார். “சுவராஜ்யம் எனது பிறப்புரிமை” என்ற கருத்து ஒவ்வொரு குடிமகன் மனதிலும் தோன்றச் செய்தார். மஹாத்மா காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்க போரட்டத்தை அதற்கு பதினான்கு வருடங்களுக்கு முன்னரே அறிமுகப்படுத்தினார். ஹோம் ரூல் இயக்கத்தையும் தொடங்கினார்.
உடல் நலம் குறைந்து பின்னர் அவர் இயற்கை எய்திய சமயத்தில் மஹாத்மா காந்தி இவ்வாறு கூறினார்:
“அவருடைய இரும்பு போன்ற மனோதிடத்தை நாட்டிற்க்காக கொடுத்தார். அவருடைய வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். லோகமான்யர் புதிய இந்தியாவின் சிற்பி. எதிர் கால சந்ததியினர் இவரை தங்களுக்காக வாழ்ந்ததாக நினைவு கூறுவர்”
அந்தத் தலைவர் பால கங்காதர திலகர்.
(For ItsDiff Radio)