April 2011


ஏப்ரல் 18 1930

சிட்டகாங்க் குழு என்று வழங்கப்பட்ட இயக்கம் மூன்று வெவ்வேறு அணிகளை அன்றைய இரவு புரட்சிகர நடவடிக்கைகளுக்கு தயார் செய்திருந்தது. அதன் தலைவர் மாஸ்டர்டா என்று அனைவராலும் அன்புடன் அழைககப்பட்டு வந்தார். மாஸ்டர்டாவின் ஆணைப்படி தாக்குதல் இலக்குகளான பிர்ட்டிஷ் அரசின் AFI இராணுவ தளவாடம், காவல் நிலையம் மற்றும் தந்தி அலுவகம் ஆகியவற்றை நோக்கி மூன்று அணிகளும் கிளம்பின. அணிகளின் முக்கிய அங்கத்தினர் மாஸ்டர்டா, ஆனந்தா சிங், கலிப்படா சக்ரபர்த்தி, கணேஷ் கோஸ், அம்பிகா சக்ரபர்த்தி, பினோத் சௌத்திரி, முதலானோர்கள். முதல் அணியும், இரண்டாம் அணியும் முறையே காவல் நிலையத்தினையும், தந்தி அலுவலகத்தையும் வெற்றிகரமாக தாக்கி காவல் நிலையத்திலுள்ள ஆயுதங்களை கைப்பற்றினர்.

இரண்டு அணிகளும் பின்னர் ராணுவ தளவாடங்கள் இருக்கும் AFI armoryயை சென்றடைந்த மூன்றாம் அணியுடன் இணைந்தன. தகுந்த நேரம் வந்ததும் ராணுவ முகாமை கடுமையாக் தக்கத் தொடங்கினர். துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், பிற முக்கிய போர் ஆயுதங்கள் ஆகியவற்றை கைப்பற்றிய பின்னர் துப்பாக்கியின் தோட்டாகளை அது இருக்கும் இடம் தெரியாததால் கைப்பற்ற தவறினர். என்றாலும் இந்திய தேசியக் கொடியை ஏற்றி Union Jack கொடியை கீழிறக்கி இடைப்பட்ட புரட்சி அரசாங்கத்தை மாஸ்டர்டா அறிவித்தார்.

பின்னர் மாஸ்டர்டாவும் அவர் படையும் தலைமறைவாகி ஜலலாபாத் மலைகளில் மறைந்திருந்து  போராடி வந்தனர். மூன்று வருட்ங்களாக கொரில்லா போர் முறையில் பல்வேறு வகைகளில் பிர்ட்டிஷ் படைகளுக்கு இடையூறு கொடுத்தனர். ஆனாலும் பிரிட்டிஷ் பெரும்படைக்கு முன் ஈடுகொடுக்க முடியாமல் காடுகளிலும், மலகளிலும் பதுங்கி வாழ்ந்தனர். முடிவில் மாஸ்டர்டா தன் நண்பர் தரக்கேஷ்வர் தஸ்டிடருடன் கைது செய்யப்பட்டார்.

மாஸ்டர்டாவும், தரக்கேஷ்வரும் ஜனவரி 12, 1933ஆம் ஆண்டு சௌலியாகஞ்ஜ் சிறையில் தூக்கிலடப்பட்டு, அவர்கள் உடல்களை வங்காள விரிகுடாவில் தூக்கி எறிந்தது ஆங்கிலேய அரசாங்கம்.

மாஸ்டர்டா தூக்குமேடையில் சொன்ன வார்தைகள் இதோ – “சாவை ஒரு நண்பனாக தழுவிக்கொள்கிறேன். இந்த நேரத்தில் நான் உங்களுக்கு விட்டு செல்வதென்ன? ஒன்றே ஒன்று. என் கனவு. ஒரு பொன்னான கனவு. சுதந்திர பாரதம் என்ற கனவு. முன்னேறுங்கள் தோழர்களே!. அடிமைத்தனம் விலகி விடுதலை மலரும் நாள் வந்துக் கொண்டிருக்கிறது”

மாஸ்டர்டா  என அழைக்கப்பட்டவர் சூர்யா சென்.

(For ItsDiff Radio)

நண்பர் ஸ்ரீனிவாஸ் தளம் ஆரம்பித்து ஒரு வருஷம் ஆகிவிட்டதாம். அவருக்கு வாழ்த்துக்கள்!

ஸ்ரீனிவாஸ் இந்த தளத்திலும் சக ஆசிரியராக பல நாள் இருந்தவர். அவருடைய பதிவுகளால் – குறிப்பாக சுஜாதா பற்றிய பதிவுகளால் – மேலும் பல வாசகர்கள் இந்தப் பக்கம் வந்தார்கள் என்பதை இந்த தருணத்தில் நினைவு கூர்கிறேன்.

புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் நடந்த போரின் இறுதிப் பகுதியில் நடந்தது இனப் படுகொலை என்று கருதுபவர்களில் நானும் ஒருவன். இத்தனைக்கும் நான் புலிகளை தீவிரமாக எதிர்ப்பவன்.

ஐ.நா. இன்று அதிகாரபூர்வமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது. கிட்டத்தட்ட இருநூறு பக்கங்கள், நான் முழுதுமாக படிக்கவில்லை.

இலங்கை அரசு மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டியவையே என்று ஐ.நா. கூறுவது மகிழ்ச்சி தருகிறது. இந்த மாதிரி சம்பவங்களை பூசி மெழுகாமல் பிற்காலத்தில் இப்படி நடப்பது குறையலாம். எங்கெங்கோ அகதிகளாக கஷ்டப்படும் இலங்கை சகோதர சகோதரிகளுக்கு கொஞ்சமாவது ஆறுதல் கிடைக்கும். ஐ.நா.வுக்கு ஒரு ஷொட்டு!

பாரதி தமிழ் சங்கம் தமிழ் புத்தாண்டை ஒரு பட்டிமன்ற நிகழ்ச்சியோடு வரவேற்கிறது. அடுத்த சனிக்கிழமை, சன்னிவேல் ஹிந்து கோவில் அரங்கில் மாலை நான்கு மணிக்கு நிகழ்ச்சி.

Arc de Triomphe போயிருந்தோம். நல்ல சிலுசிலுவென்று காற்று. மேலிருந்து பாரிசின் அழகான காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம். எனக்கு சிறுநீர் கழிக்க வேண்டி இருந்தது. ஒரு floor கீழே சென்று அங்கே இருந்த souvenirs விற்கும் கடையில் “Is there a restroom I can use ?” என்று கேட்டேன். அங்கே பணி செய்பவள் மிகவும் கஷ்டப்பட்டு கீழே போ என்று அபிநயித்துக் காட்டினாள். கொஞ்ச நேரம் கழித்து கீழே போய் அங்கே ஒருவனிடம் ரெஸ்ட்ரூம் எங்கிருக்கிறது என்று கேட்டேன். அவன் மேலே போ என்று சொன்னான். இதென்னடா வம்பாப் போச்சு என்று இன்னொருவரிடம் கேட்டேன். அவருக்கு கொஞ்சம் கொஞ்சம் ஆங்கிலம் பேசத் தெரிந்திருந்தது. அவர் அங்கே எதுவும் இல்லை என்றும் ஆனால் தெருவைத் தாண்டினால் நிறைய தற்காலிக ரெஸ்ட்ரூம்கள் இருக்கும் என்றும் சொன்னார். எனக்கே அங்கிருந்து பார்த்தால் ஒரு பத்து பதினைந்து தற்காலிக சிறுநீர் கழிப்பறைகள் தெரிந்தன. (அமெரிக்காவில் இவை சகஜம். எங்காவது கூட்டம் கூடும் என்று தெரிந்தால் அங்கே இவற்றை லாரியில் கொண்டுவந்து இறக்கிவிடுவார்கள். Flush செய்யமுடியாது. டாய்லெட் பேப்பர் மட்டும் இருக்கும். பொதுவாக கொஞ்சம் அசுத்தமாகத்தான் இருக்கும், ஆனால் ஆத்திர அவசரத்துக்கு போதும். கூட்டம் போனதும் திருப்பி லாரியில் ஏற்றிக் கொண்டுபோய்விடுவார்கள். எல்லா அசுத்தத்தையும் எங்கே dump செய்வார்களோ தெரியாது.) அது ஒரு பெரிய இன்டர்செக்ஷன். க்ராஸ் செய்யவே பத்து நிமிஷம் ஆனது. அங்கே போனால் எல்லாவற்றையும் மூடிவிட்டார்கள். (நிறைந்து போயிருக்கும்.)

என்ன செய்வது? Champs Elysees தெருவில் நடந்துகொண்டிருந்தோம், எங்கும் எந்த பொது கழிப்பறையும் தெரியவில்லை. எதையும் ரசிக்கும் மனநிலை கொஞ்சகொஞ்சமாக போய்க்கொண்டிருந்தது. திடீரென்று ஒரு சினிமா தியேட்டர் தெரிந்தது. அங்கே போய் முயற்சிக்கலாம் என்று போனேன். குறுகலான ஒரு corridor -இல் நடந்து போனால் அங்கே டிக்கெட் வசூலிக்கும் ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள். அவளிடம் எப்படியாவது எனக்கு சினிமா கினிமா பார்க்கும் எண்ணம் இல்லை, ஆனால் பாத்ரூம் போகவேண்டும், தயவு செய்து அனுமதி கொடு என்று கேட்க வேண்டும். வழக்கமான அமெரிக்க ஆங்கிலத்தில் “Is there a restroom I can use ?” என்று ஆரம்பித்தேன். அவள் கையை நீட்டி என்னவோ சொன்னாள் – டிக்கெட் வாங்க அந்தப் பக்கம் போ என்று சொல்கிறாள் என்று நானே ஒரு மாதிரி புரிந்துகொண்டேன். “I just want to use the bathroom , I don’t want to see a movie” என்று விளக்கினேன். ஏதோ செவ்வாய் கிரகத்திலிருந்து வந்தவனைப் பார்ப்பது போல ஒரு லுக் விடடாள். ரெஸ்ட்ரூம், பாத்ரூம், பாத்ரூம், ரெஸ்ட்ரூம் என்றெல்லாம் “சுப்ரமண்யம் சுப்ரமண்யம் ஷண்முகநாதா சுப்ரமண்யம் மெட்டில்” சொல்லிப் பார்த்தேன், ஒன்றும் நடக்கவில்லை. யூரின் பாஸ் செய்ய வேண்டும் என்று சொல்லிப் பார்த்தேன்.

அவள் முகத்தில் ஒரு லைட் எரிந்தது. “Oh! Toilet!” என்று சொல்லிவிட்டு எனக்கு வழி காட்டினாள்!

முந்தைய பதிவு: நானும் ஃ பிரெஞ்சும் I

ஒரு வாரம் பாரிசுக்கு போயிருந்தோம். ஃபிரெஞ்சில் தெரிந்த ஒரே வார்த்தை உய் (oui).

பக்கத்து மளிகைக் கடையில் சாமான் வாங்கப் போனேன். வெண்ணெய் வாங்க வேண்டும், எங்கே என்று தேடிப் பார்த்தேன் தென்படவில்லை. சரி யாரையாவது கேட்க வேண்டியதுதான் என்று ஒரு பணி செய்பவரைப் பிடித்தேன். பட்டர், பட்டர் என்று சொல்லிப் பார்த்தேன், அவருக்கு ஒன்றும் புரியவில்லை. ப்ரெட் பட்டர் என்றேன், அப்போதும் ஒன்றும் நடக்கவில்லை. ப்ரெட் மேல் வெண்ணெய் தடவுவது போல அபிநயம் செய்தேன், சான்சே இல்லை. திடீரென்று மண்டையில் ஒரு லைட் எரிந்தது. அமெரிக்காவில் petit beurre என்ற பேரில் பிஸ்கட்களைப் பார்த்திருக்கிறேன். Beurre என்றால் வெண்ணெய் என்று தெரியும். ப்யூரே ப்யூரே என்றேன். அவர் முகத்திலும் ஒரு லைட் எரிந்தது. வா வா என்று வேகவேகமாக போய்க்கொண்டே சைகை செய்தார். நானும் பின்னாலேயே விரைந்தேன். அங்கே ஒரு ஷெல்ஃபில் நிறைய tomato puree cans இருந்தன, அதைக் காண்பித்தார்.

திருப்பி அடியைப் பிடிடா பாரதபட்டா என்று பட்டர், ப்ரெட், வெண்ணை தடவும் ஆக்ஷன், ப் ப் ப் ப்யூரே என்றெல்லாம் சொல்லிப் பார்த்தேன். ஒன்றும் வேலைக்காகவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் சுற்றுமுற்றும் பார்த்தேன். நாலு ஷெல்ஃப் தள்ளி petit beurre பிஸ்கட் பாக்கெட்டே தெரிந்தது. பல நாளாக தேடிய பொக்கிஷம் கிடைத்தது போல ஒரு ஃபீலிங். ஓடிப் போய் அதை எடுத்தேன், அவரிடம் காட்டி ப்யூரே ப்யூரே என்றேன். அவர் ஓ! புர்! என்றபடி என்னை அழைத்துச்சென்று புர்ரை எடுத்துத் தந்தார். ஜன்ம சாபல்யம் ஆனது.

என் பெண்களிடம் இந்த நிகழ்ச்சியை சொன்னதும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். இன்னும் யாரும் வீட்டில் பட்டர் என்று சொல்வதில், புர்தான்!

1910 ஆம் ஆண்டு. பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு வாரண்ட் பிறப்பித்தது. அதில் லண்டனிலும், பாரிசிலும் தலைவரற்ற ஒரு சதித் திட்டம் தீட்டியதாக கூறி லின்கன் க்ளப் என்ற அமைப்பில் “Barrister at Law”  படித்துக் கொண்டிருந்த ஒரு இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவரை கைது செய்ய உத்தரவு இருந்தது.

தலைவர் லின்கன் இன்னிலிருந்து ராஜினாமா செய்து விட்டு பாரீஸிர்க்கு தப்பி ஓடினார். ஆனாலும் போராட்டத்தை வழிநடத்த இந்தியாவுக்கு திரும்பலாம் என்று முடிவு செய்து ஒரு இஸ்லாமியர் போல் வேடம் பூண்டு 1910 ஆம் ஆண்டு டிசம்பர் 4 தேதி பாண்டிச்சேரிக்கு வந்து சேர்ந்தார். அங்கே வேதங்களை கற்றுணர்ந்துக் கொள்ளவும் ஆங்கிலேயர்களிடமிருந்து இந்திய சுதந்திரத்தைப் பெற திட்டங்கள் தீட்டவும் அவர் அரபிந்தோ, சுப்ரமணிய பாரதி, முதலியவர்களுடன் அன்றாட சந்திப்புகளை வைத்திருந்தார். இதை அறிந்த பிரிட்டிஷ் அரசு கவலையுற்றது. அவரை சிறை பிடிக்க எவ்வளவோ முயன்றது.

சில கூலிப்படைகளை அவர் தங்கியிருந்த வீட்டிற்கு அனுப்பி அவர் வீட்டை நாசம் செய்ய உத்தரவிட்டது. ஆனால் நண்பர் சுப்பிரமணிய பாரதி தன் நண்பர்கள் பதினைந்து பேரை குண்டர் படை வருவதற்கு முன்னரே தலைவரின் வீட்டின் அருகே காவல் வைத்தார். கூலிப்படை தங்கள் என்ணத்தை நிறைவேற்றமுடியாமல் திரும்பியது.

அப்பொழுது தூத்துக்குடியில் சுதந்திர போராட்டத்திற்கு கலெக்டர் ஆஷ் செய்த வந்த தடைகளை கண்டு மனம் கொதித்தார் அந்தத் தலைவர். கலெக்டர் ஆஷை கொல்வதற்கு திட்டம் தீட்டினார். பாண்டிச்சேரியில் நடந்த ரகசிய கூட்டத்தில் அந்தச் செயலுக்கு முடிவெடுக்கப்பட்டது. அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பகுதியான செங்கோட்டையில் வாழ்ந்த வாஞ்சிநாதன் மற்றும் சங்கர கிருஷ்ண ஐயர், நீலகண்ட பிரம்மச்சாரி, மாடசாமி முதலியோர்கள் அதற்கு நியமிக்கப்பட்டார்கள். பிரான்ஸ் நாட்டுத் கைத்துப்பாக்கி ஒன்றை தலைவர் அவர்களுக்கு கொடுத்து ஆசி வழங்கி வெற்றியுடன் திரும்புமாறு அனுப்பி வைத்தார். அவர் திட்டம் முழு வெற்றி பெற்றது. வாஞ்சிநாதன் என்ற அந்த இளைஞன் ஜூன் 17, 1911ஆம் ஆண்டு கவர்னர் ஆஷ்ஷை மணியாச்சி புகைவண்டி நிலையத்தில் சுட்டுக் கொன்று தன்னையும் மாய்த்துக் கொண்டான்.

இந்தத் தலைவர் தேசபக்தன் பத்திரிக்கையில் பணி புரிந்தார். பின்னர் 1921ல் அவர் அரச்சங்கத்தை எதிர்த்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு ஒன்பது மாதங்கள் சிறை வாசம் புகுந்தார். அங்கே கம்ப ராமயண ஆராய்ச்சி பற்றி ஒரு புத்தகம் எழுதினார். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். சேரன்மகாதேவியில் குருக்குலம் ஒன்றை நிறுவினார்.

அவர் பாபநாசம் அருவியில் தன் மகளை காப்பாற்றும் முயற்ச்சியின் போது தண்ணிரில் மூழ்கி இறந்தார்.

அந்தத் தலைவர் வ.வே.சு. ஐயர்


For ItsDiff Radio (04/20/2011)

ஜூன் 17, 1911

மணியாச்சி புகை வண்டி சந்திப்பு.

மெலிந்த உருவம் கொண்ட குடுமி வைத்திருந்த ஒரு வாலிபன் தன் நணபனுடன் மணியாச்சி மெய்லிற்க்காக காத்துக் கொண்டிருக்கிறான். பாண்டிச்சேரியில் சில நாட்களுக்கு முன்னர் நடந்த ரகசிய கூட்டத்தில் வ.வே.சு.அய்யர் அவனிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்திருந்தார். வ.வே.சு அய்யர் ஆசியுடன் அதனை நிறைவேற்ற அன்று தயாராக வந்திருந்தான்.

முன்னதாக தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டு வந்த கலெக்டர் ஆஷ், காலை 9:30 மணிக்கு திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்து கிளம்பிய மணியாச்சி மெயிலில் முதல் வகுப்பில்  தன் மனைவியுடனும் அவர்களின் நான்கு குழந்தைகளுடனும் அமர்ந்திருந்தார்.

காலை மணி 10:38. புகைவண்டி மணியாச்சி ஜங்ஷனுள் நுழைந்தது. 10:48ற்க்கு வரும் சிலோன் போட் மெயிலுக்காக ஆஷ் குடுமபத்தினர் வண்டியின் உள்ளேயே காத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் கொடைக்கானல் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தனர்.

இந்தத் தருணத்திற்க்காக காத்துக் கொண்டிருந்த வாலிபன், ஆஷ் இருந்த பெட்டியினுள் நுழைந்தான். அவனைப் அங்கு எதிர்பார்க்காததால் ஆஷ்   சற்றே ஆச்சரியம் அடைந்தார். அவர் சுதாரித்துக் கொள்வதற்கு முன் இளைஞன் தன் மடியிலிருந்த பெல்ஜியம் துப்பாக்கியை எடுத்து ஆஷை நோக்கி சுட்டான். குண்டு ஆஷின் நெஞ்சில் பாய்ந்தது. கலெக்டர் ஆஷ் கீழே சரிந்தார். தோட்டாவின் வெடி சத்தம் காற்றிலே கரைந்தது.

வாலிபன் நேராக ப்ளாட்பாரத்திலிருந்த கழிப்பறைக்குள் நுழைந்து தன்னைத் தானே சுட்டு கொண்டு வீர மரணம் எய்தினான். அவன் சட்டைப்பையிலிருந்த கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தான்:

”ஆங்கிலேய மிலேச்சர்கள் நமது நாட்டை கைப்பற்றியதுமல்லாமல் இந்து சனாதன தர்மத்தை அழிக்க முயலுகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் ஆங்கிலேயர்களை விரட்டி, சுவராஜ்யத்தை அடைந்து சனாதன தர்மத்தை நிலைநாட்ட முயல்வான். ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தன், அர்ஜுனன் ஆகியோர்கள் ஆண்டு எல்லா தர்மங்களை காத்து வந்த இந்த நாட்டிற்கு பசுவின் மாமிசத்தை புசித்து வாழும் மிலேச்சன் ஐந்தாம் ஜார்ஜை மண்ணனாக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். ஐந்தாம் ஜார்ஜ் இந்த மண்ணில் காலடி எடுத்து வைத்ததும் அவனை கொல்ல மூவாயிரம் தமிழர்கள் உறுதி பூண்டுள்ளார்கள். இதை பிறருக்கு உணர்த்தவே இன்று நான் இந்த செயலை நான் செய்திருக்கிறேன்.இது தான் ஹிந்துஸ்தானில் வாழும் ஒவ்வொருவரின் கடமையாகும்.”

இந்த வீரன் வாஞ்சிநாதன்

(For ItsDiff Radio)

தொடர்புள்ள சுட்டி: வாஞ்சிநாதன் ஜாதி வெறியரா?

 

ItsDiff Radio Show -

A Special Program

by Rajan, Balaji and Bags

with Sri on April 13 2011

7:30 AM PST (INDIAN TIME 8:00 PM)

Title – Anna Hazare and Tamilnadu Assembly Election Review

LIVE

ItsDiff Radio

Every Wednesday between 6AM to 9AM PST

(INDIAN TIME – 6:30PM to 9:30PM)

நாங்கள் இப்போது ஃபிரான்ஸ் நாட்டில் பாரிசுக்கு விடுமுறைக்காக வந்திருக்கிறோம். என் ஏழு வயதுப் பெண் க்ரியா அடித்த சில கமெண்ட்டுகள்.

லூவர் ம்யூசியத்துக்குப் போயிருந்தோம். அங்கே எகிப்து நாட்டிலிருந்து ஒரு சிலை. தலையைக் காணோம், எப்படி உடைந்ததோ தெரியவில்லை. இவள் அதைப் பார்த்ததும் அக்கா அக்கா என்று படு ஆர்வமாக தன் அக்காவைக் கூப்பிட்டு அந்த சிலையைக் காட்டிவிட்டு சொன்னாள் – “They forgot to make the head!”

ஓவியம், மற்றும் சிற்பங்கள் நிறைந்த டார்சே ம்யூசியத்துக்கு போயிருந்தோம். அங்கே நான், என் மனைவி, என் பனிரண்டு வயதுப் பெண் எல்லாரும் ஆஹா என்ன அழகு, வெளிச்சம் எப்படி வந்திருக்கிறது, என்ன நுண்விவரம் என்றெல்லாம் உருகிக் கொண்டிருந்தோம். இவள் ஒரு பெரிய ஓவியம் – ஒரு இருபதடிக்கு பதினைந்தடி இருக்கும் – ஒன்றைப் பார்த்தாள். நாங்கள் மூவரும் அதைப் பார்த்துவிட்டு வழக்கம் போல ஆஹா ஓஹோ என்று கூவிக் கொண்டிருந்தோம். இவள் என்னவோ யோசனையில் இருந்தாள். பிறகு மெதுவாகக் கேட்டாள் – “அப்பா, அந்த ஓவியம் என்ன எடை இருக்கும்?”

அடுத்த பக்கம் »

Follow

Get every new post delivered to your Inbox.

Join 59 other followers