வாரப் பத்திரிகைகளை படித்து வளர்ந்த எல்லாருக்கும் தெரிந்த பேர் மணியன் செல்வன். அவருடைய அழகிய ஓவியங்களை பார்க்காத தமிழர்கள் குறைவே. பொன்னியின் செல்வனுக்கு இவர் தந்தை மணியம் வரைந்த ஓவியங்கள் இன்னும் நினைவில் இருக்கிறது. சிவகாமியின் சபதத்திற்கு இவர் வண்ணத்தில் வரைந்த ஒவியங்கள் நினைவிருக்கலாம். அவருடைய ரேடியோ ப்ரோக்ராம் பற்றி சமீபத்தில் தகவல் கொடுத்திருந்தோம். அந்த ரேடியோ ப்ரோக்ராமில் தெரிந்து கொண்ட ஒரு விஷயம் – அவரும் ஒரு ப்ளாக் எழுதுகிறார். அதை இங்கே காணலாம்.
ம.செ.வின் அப்பாவும் பெரிய ஓவியர். அவர் பெயர்தான் மணியம்.
ஏதோ கதையைக் கொடுத்து ஒரு ஓவியம் வரைய சொல்வார்கள், இவர்களும் வரைந்து கொடுப்பார்கள் என்றுதான் நான் வாரப் பத்திரிகை ஓவியர்களைப் பற்றி நினைத்திருந்தேன். அதில் எவ்வளவு வேலை இருக்கிறது, எத்தனை பிளானிங் இருக்கிறது, ஒரு ஓவியருக்கு என்னென்ன பொறுப்பு இருக்கிறது என்று மிகவும் அழகாக விளக்கினார். ப்ரோக்ராமை மிஸ் செய்துவிட்டாலும் ஆர்கைவிலாவது கேளுங்கள்!
மணியன் செல்வனுக்கு பிடித்த வாரப் பத்திரிகை ஓவியர்கள் கோபுலுவும் சிற்பியும் என்று சொன்னார். நார்மன் ராக்வெலையும் ரொம்ப பிடிக்குமாம்.
கீழே ம.செ. வரைந்த ஒரு ஓவியம். எத்தனை கச்சிதமான கோடுகள்!

பெப்ரவரி 10, 2011 at 7:09 மு.பகல்
அருமை..பதிவுக்கு நன்றி..
பெப்ரவரி 10, 2011 at 8:05 மு.பகல்
அவரைப் பற்றிய மிக விரிவான, அற்புதமான நேர்காணலை நான் இந்தச் சுட்டியில் படித்தேன். நீங்களும் வாசித்திருப்பீர்கள் என நம்புகிறேன். Really a Great Man அவர், வேறென்ன சொல்ல.
http://www.tamilonline.com/thendral/morecontent.aspx?id=103&cid=4&aid=5663
பெப்ரவரி 10, 2011 at 8:14 மு.பகல்
நீங்கள் குறித்திருக்கும் வலைப்பூவை நடத்துவது மணியன் செல்வனின் மகள் சுபாஷிணி. அவரும் ஒரு அற்புதமான ஓவியர். கடந்த ஆண்டு அவர்களது மூன்று தலைமுறையினரின் (மணியம் – மணியம் செல்வன் – சுபாஷிணி)படைப்புகளும் இடம்பெற்ற அற்புதமான ஒரு ஓவியக் கண்காட்சி சென்னையில் நடந்தது. ஓவியம், சிற்பம் எல்லாம் கடவுளின் அரிய வரம். ஓராயிரம் பக்கங்கள் சொல்வதை ஒரு ஓவியமும், சிற்பமும் சொல்லி விடுகிறதே. அதனால்தான் அதை நுண்கலைகள் என்கிறோம் அல்லவா? நல்ல தகவல்களுக்கு நன்றி.
சரி, அந்த நிகழ்ச்சியைக் கேட்பதற்கு என்ன வழி? எந்தத் தளத்தில் அது பதிவாகி இருக்கிறது, விவரம் சொல்ல இயலுமா ப்ளீஸ்…
பெப்ரவரி 10, 2011 at 8:14 மு.பகல்
http://www.itsdiff.com/Tamil.html
இதில் அந்தப் பதிவு காணப்படவில்லை.
பெப்ரவரி 11, 2011 at 6:58 மு.பகல்
அருமை
பெப்ரவரி 21, 2011 at 3:57 மு.பகல்
திரு ரமணன் சொன்னது போல் ஆயிரம் வார்த்தைகளை உள் அடக்குவதன்றோ ஒரு ஓவியம்? எனக்கு திரு மசெவுடன் நேருக்கு நேர் அவரது படைப்புக்களை பற்றி உரையாட கிடைத்த சந்தர்பங்களை அசைபோடும் இனிமையான நினைவுகள், என்றும் என் நெஞ்சை விட்டு நீங்காதவை.
பாடகர் யேசுதாஸ்சின் தெய்வீக குரலை பற்றி எனக்கு ஒரு ஆழ்ந்த கருத்து ஒன்று உண்டு, அதாவது இசை மூலம் நாடி நரம்புகளை சுண்டி எழுப்பி ஆனந்த கண்ணீரில் ரசிகனை திளைக்க வைக்கும் ஒரு அற்புதமான குரல். அது போன்று திரு மசேவின் ஓவியங்கள் (பழய அரும்பு அம்புகள் முதல் இன்றைய படைப்புகள் வரை) ரசிகனை ஒரு ஆழ்ந்த பரவசத்தில் கொண்டு செல்லும். உதாரணம் இந்த கங்கையின் படம், இதுபோன்ற படைப்புக்களை பலமுறை அனுபிவிக்கும் பாக்கியம் எனக்கு இருந்தது என் அதிர்ஷ்டம்.
மோகன்
மார்ச் 9, 2011 at 4:48 மு.பகல்
ம.செ ஓவியங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். பகிர்வுக்கு நன்றி
செப்டம்பர் 6, 2011 at 4:56 மு.பகல்
can anyone please let me know if there is a websie to see all his works of art..thank you – M.Narendirapriyan.