பெப்ரவரி 2011


ராணி சென்னம்மா இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முதல் பெண் சுதந்திரப் போராட்ட வீரர் என்று இடம் பிடித்தவர். பிரகாசமான தீப்பொறி போன்ற கண்களுடன் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தனியொருவராக குரல் கொடுத்தவர்.

இவர் 1778 ஆம் ஆண்டு வட பெல்காமில் ககத்தி என்னும் ஒரு கிராமத்தில் பிறந்தார். சிறிய வயது முத்ற்கொண்டு குதிரைச் சவாரி, கத்திச் சண்டை, வில் வித்தை முதலியவற்றில் பயிற்சி பெற்று வந்தார்.

இவருடைய திருமண வாழ்க்கை மிகவும் சோகம் நிறைந்தது. மன்னர் மல்லசர்ஜாவை திருமணம் செய்த சில வருடங்களிலேயே அதாவது 1816ல் இழந்தார். இவர்களின் மகனும் 1824ல் உயிர் இழந்தார்.

குடும்பத்தில் தனியாக  விடுபட்ட இவர் மனம் தளரவில்லை. சிறிது காலத்திற்கு பிறகு சிவலிங்கப்பா என்ற ஒரு மகனை தத்து எடுத்து தன் ராஜாங்க வாரிசாக அறிவித்தார். ஆங்கிலேய அரசங்கம் அப்பொழுது ”டாக்ட்ரீன் ஆஃப் லாப்ஸ்” என்ற ஒரு கொள்கையை அமுலில் வைத்திருந்தது. சந்ததி இல்லாத ராஜங்கங்கள் கிழக்கு இந்திய கம்பெனியின் சொத்துக்களுடன் இணைந்துவிடும் என்பதே அதன் ஷரத்து. அதன்படி ஆங்கிலேயர்கள்  இவரது சுவிகாரத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. சிவலிங்கப்பாவை நாடு கடத்தும் படி உத்தரவிட்டனர்.

ஆனால் ராணியார் வெள்ளையர்கள் தன் ஆட்சியிலோ, முடிவிலோ குறுக்கிடுவதை ஏற்றுக்கொள்ள மறுத்தார். டாக்டிரின் ஆஃப் லாப்ஸை புறக்கணித்து, ஆங்கிலேயர்களுக்கு அறைகூவல் விடுத்தார். இதனால் அரசிக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையில் பெரும் போர் மூண்டது.

ஆங்கிலேயர்களின் பெரும் படையைப் பார்த்து ராணி மனம் கலங்காமல் தன்  திறமை மிக்க பயிற்ச்சியாலும், வீரத்துடனும், மனோதிடத்துடனும் போரிட்டார். ஆனால் எதிரிப் படையின் பிரம்மாண்டத்தை வெகுநேரம் சமாளிக்க முடியவில்லை. ராணியார் சிறை பிடிக்கப்பட்டார். பின்னர் பெயில்ஹோங்கல் கோட்டையில் தன் வீர மரணத்தை தழுவினார்.

ராணியார் ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு வெளியேற்ற முயன்ற முயற்ச்சியில் தோல்வி அடைந்தாலும், கர்நாட்டக வீர வரலாற்றில் நிரந்தர இடம் பிடித்துள்ளார்.

For ItsDiff Radio

1932 ஆம் ஆண்டு. தமிழகத்தில் ‘சட்ட மறுப்பு இயக்கம்’ என்ற அஹிம்சை போராட்டம் பரவிக் கொண்டிருந்தது. அச்சமயத்தில் திருப்பூர் தேசபந்து இளைஞர் மன்ற தலைமையகத்தில் ஒரு காட்சி. உறுப்பினர்கள் மறுநாள் நடக்கவிருக்கும் மறியல் போராட்டத்திற்கு தலைவரை தேர்ந்தெடுக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலேய கைகூலிகளான காவல்துறையினரை எதிர்க்க யார் தான் முன் வரப் போகிறார்கள்?

”நான் தலைமை ஏற்கிறேன்”
முன் வந்தவர் பெயர் குமரன்.
”குமரா, இதன் அபாயத்தை நீ அறிவாய் அல்லவா?”
“நன்றாக அறிவேன்” என்றார் அந்த வீரர்.

முடிவாக மன்றம் போராட்டத்திற்க்கு குமரனே தலைவர் என்று அறிவித்தது.

மறுநாள் நகரத்தின் மையத்தில் குமரன் தலைமையில் போராட்டம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்பொழுது காவல் படையினர் அணி வகுத்து எதிர் திசையிலிருந்து வந்தனர்.
“கலைந்து செல்லுங்கள். உடனே கலைந்து செல்லுங்கள்”
அவர்கள் எதிர்பார்த்தது போல் ஒருவரும் கலைந்துச் செல்லவில்லை. குமரன் தேசியக் கொடியை பிடித்துக் கொண்டு கூட்டத்தின் முன் வரிசையில் கம்பீரமாக நின்று கொண்டிருந்தார். கூட்டத்தின் இறுமாப்பை பார்த்து வெகுண்ட காவல் படை தலைமை அதிகாரி “சார்ஜ்” என்று ஆணையிட்டார். காவலர்கள் சிதறி ஓடிச் சென்று போராட்ட வீரர்களை தடியினால் அடிக்க தொடங்கினர்.  கூட்டம் அசையவில்லை. அதிகாரி குமரனை நெருங்கி “நீ கொடியை கீழே போட்டுவிட்டால் கூட்டம் கலைந்துவிடும். உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்.” என்று கூறினார்.

”என் தேசக் கொடியை கைவிட கையூட்டு கொடுக்கத் துணிந்த கயவனே. அது உன் கனவிலும் நடக்காது” என்று பதிலளித்த குமரன், போராட்ட வீரர்களுடன் சேர்ந்து ”வந்தே மாதரம்! வந்தே மாதரம்” என்று கோஷங்கள் எழுப்பினார்.

ஆத்திரமடைந்த ஒரு காவலாளி தன் கைத்தடியால் குமரனின் கபாலத்தில் ஒங்கி அடித்தார். கபாலம் பிளந்து உடல் முழுவதும் ரத்தம் சிந்தியது. அந்த நிலையிலும் கையிலிருந்த தேசிய கொடியை கீழே விடாமல் மயக்கமுற்றார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் தன் இருபதெட்டாவது வயதில் குமரன் உயிர் துறந்தார்.
தாய்நாட்டின் விடுதலைக்காக தன் உயிரை அர்பணித்த திருப்பூர் குமரன் அன்றிலிருந்து “கொடி காத்த குமரன்” என்றும் அழைக்கப்பட்டார்.

நாடக வடிவம் – பக்ஸ்

(For itsdiff Radio)

Maniam Selvam Interview Archive

Part 1

Part 2

Date
Special Show/
Theme
Images/

picture

Additional Information
Archives
Presented by
Feb 9
2011
Artist Maniam
Selven – Ma Se
Artist Maniam Selvan
Artist Maniam Selven -
Special interview – a
journey with Ma Se
Part 1

Part 2

Sri

******************************************************

Nanbargale – mark it in your calendar – Feb 9 2011

Very proud to announce a special interview with the great Artist Maniam Selvan – this wed Feb 9 7.30 am US Pacific Time on itsdiff radio ( India time 9.00 pm)

you can listen to it via internet webstreaming

http://www.itsdiff.com/Tamil.html

- About Maniam ( yes – the great Ponniyin Selvan Illustrator who worked with Kalki)
- About Maniam Selvan ( his experience, pages from his life book)

Itsdiff radio starts at 6.00 am PST until 9.00 am.

Sri
Ponniyin Selvan Audio Book – http://www.itsdiff.com/kalkips.html

வாரப் பத்திரிகைகளை படித்து வளர்ந்த எல்லாருக்கும் தெரிந்த பேர் மணியன் செல்வன். அவருடைய அழகிய ஓவியங்களை பார்க்காத தமிழர்கள் குறைவே. பொன்னியின் செல்வனுக்கு இவர் தந்தை மணியம் வரைந்த ஓவியங்கள் இன்னும் நினைவில் இருக்கிறது. சிவகாமியின் சபதத்திற்கு இவர் வண்ணத்தில் வரைந்த ஒவியங்கள் நினைவிருக்கலாம். அவருடைய ரேடியோ ப்ரோக்ராம் பற்றி சமீபத்தில் தகவல் கொடுத்திருந்தோம். அந்த ரேடியோ ப்ரோக்ராமில் தெரிந்து கொண்ட ஒரு விஷயம் – அவரும் ஒரு ப்ளாக் எழுதுகிறார். அதை இங்கே காணலாம்.

ம.செ.வின் அப்பாவும் பெரிய ஓவியர். அவர் பெயர்தான் மணியம்.

ஏதோ கதையைக் கொடுத்து ஒரு ஓவியம் வரைய சொல்வார்கள், இவர்களும் வரைந்து கொடுப்பார்கள் என்றுதான் நான் வாரப் பத்திரிகை ஓவியர்களைப் பற்றி நினைத்திருந்தேன். அதில் எவ்வளவு வேலை இருக்கிறது, எத்தனை பிளானிங் இருக்கிறது, ஒரு ஓவியருக்கு என்னென்ன பொறுப்பு இருக்கிறது என்று மிகவும் அழகாக விளக்கினார். ப்ரோக்ராமை மிஸ் செய்துவிட்டாலும் ஆர்கைவிலாவது கேளுங்கள்!

மணியன் செல்வனுக்கு பிடித்த வாரப் பத்திரிகை ஓவியர்கள் கோபுலுவும் சிற்பியும் என்று சொன்னார். நார்மன் ராக்வெலையும் ரொம்ப பிடிக்குமாம்.

கீழே ம.செ. வரைந்த ஒரு ஓவியம். எத்தனை கச்சிதமான கோடுகள்!

விகடன் பொக்கிஷத்திலிருந்து. நன்றி, விகடன்!

வீரப் பெண்மணி வள்ளியம்மை!

1915-ம் வருடம், ஏப்ரல் மாதம், 30-ம் தேதி. தரங்கம்பாடியிலிருந்து புறப்பட்ட இரண்டு மாட்டு வண்டிகள், தஞ்சை மாவட்டத்தில் உள்ள தில்லையாடியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றன. முதல் வண்டியில் மகாத்மா காந்தியும், அன்னை கஸ்தூரிபாயும் அமர்ந்திருக்கிறார்கள்.

வண்டிகள் தில்லையாடி எல்லையை மிதிக்கின்றன. உணர்ச்சியை வென்ற மகாத்மாவின் மனம் அப்பொழுது உணர்ச்சி வசப்படுகிறது. கண் கலங்குகிறார். வண்டியை விட்டு இறங்குகிறார். கீழே குனிகிறார். இரு கரங்களையும் குவித்து மண்ணை அள்ளி எடுக்கிறார். கண்களில் ஒற்றிக் கொள்கிறார்.

என்ன புண்ணியம் செய்து விட்டது அந்த மண்? அது சாதாரண மண் அல்ல; காந்திஜி தென்னாப்பிரிக்காவில் தொடங்கிய சத்தியாக்கிரகப் போராட்டத்தில் உயிர் நீத்த வள்ளியம்மை, நாகப்பன், நாராயணசாமி ஆகிய தியாகச் செம்மல்களைத் தந்த வீர மண் அது. தென்னாப்பிரிக்க அரசாங்கம் சத்தியாக்கிரகிகளுக்குக் கொடுத்த தொல்லைகள் பயங்கரமானவை. அந்தத் தொல்லைகளைக் கண்டு கொஞ்சமும் அஞ்சாமல் லட்சியம் ஒன்றையே உயிராகக் கொண்டு சிறை சென்ற வீரப் பெண்மணி, தில்லையாடி வள்ளியம்மை.

போராட்டத்தில் ஈடுபட்டு, உடல் நலிவுற்று படுக்கையில் இருந்தார் அந்த வீரப் பெண்மணி. அப்பொழுது காந்திஜி கேட்டார்: ”வள்ளியம்மை! நீ சிறை சென்றதற்காக வருந்துகிறாயா?”

”வருத்தமா? இப்போது கூட இன்னொரு தடவை கைது செய்யப்பட்டால், நான் சிறைக்குச் செல்லத் தயார்” என்று வள்ளியம்மை பதில் அளித்தாள்.

”அதனால் நீ இறந்து போக நேர்ந்தால்?” என்று புன்முறுவலுடன் தொடர்ந்து கேட்டார் காந்திஜி.

”அதை நான் பொருட்படுத்த மாட்டேன். தாய்நாட்டிற்காக உயிரைக் கொடுக்க யார்தான் விரும்ப மாட்டார்கள்?” என்று கேட்டு காந்தியையே நெஞ்சுருக வைத்தாள் வள்ளியம்மை.

அதற்குப் பிறகு, வள்ளியம்மை சில நாட்கள் கூட உயிருடன் இருக்கவில்லை.

அவள் மரணத்தைப் பற்றி மகாத்மா கூறினார்: ”வள்ளியம்மையின் தொண்டு அழியாதது. தென்னாப்பிரிக்கா சத்தியாக்கிரக சரித்திரத்தில் வள்ளியம்மையின் பெயர் நீங்காத இடம் பெற்றிருக்கும்.”

ஸ்பெக்ட்ரம் ராஜா ஒரு ப்ளாக் நடத்துகிறார். கடைசி அப்டேட் வந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. பாவம் அவரும் எவ்வளவு நேரம்தான் சமாளிக்க முடியும்? மாபெரும் வெற்றி, ஜாமீன் கிடைத்துவிட்டது என்று வேண்டுமானால் எழுதலாம்.

இன்று விஸ்வாமித்ரா இட்லிவடை தளத்தில் ராஜா கைது வெறும் கண்துடைப்பு, எல்லாவற்றுக்கும் சோனியாவே காரணம் என்று அவரது ஸ்டைலில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார், படித்துப் பாருங்கள்!

இன்று ஸ்பெக்ட்ரம் ராசா கைது செய்யப்பட்டார்.

ஒரு லெவலைத் தாண்டிவிட்டால் அரசியல்வாதிகள் தண்டிக்கப்படுவதில்லை. எந்த முதலமைச்சரும் ஜெயிலுக்கு போனதில்லை. ஆதாரங்கள் எவ்வளவு வலிமையாக இருந்தாலும் சரி, அப்படித்தான். எனக்கு அமெரிக்காவிலிருந்து பணம் அனுப்பியவர் யாரென்று தெரியாது, ஆனால் பணத்தை பாங்கில் போட்டுக் கொண்டேன் என்று சொன்னவர் கூட தப்பிவிடுகிறார். ராசாவும் அந்த லெவலைத் தாண்டிவிட்டார் என்றுதான் நினைக்கிறேன். அவர் தண்டிக்கப்பட்டால்தான் ஆச்சரியம். ஆனால் இவ்வளவு தூரம் வந்ததே எனக்கு ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. நாட்டில் இன்னும் கொஞ்சம் நீதி இருக்கிறது என்று தோன்றுகிறது.

சுப்ரமணிய சாமிக்கும், ரிபோர்டர் கோபிக்கும் நன்றி!

Follow

Get every new post delivered to your Inbox.

Join 59 other followers