டைம் பத்திரிகையின் இன்னொரு லிஸ்ட். இந்தியாவிலிருந்து இந்திரா காந்தி, மதர் தெரசா இரண்டு பேர்.
ஆச்சரியப்படுத்திய நல்ல தேர்வுகள்:
- Silent Spring என்ற புத்தகத்தால் பசுமை இயக்கத்துக்கு (Green Movement) பெரிய உந்துதல் கொடுத்த ரேச்சல் கார்சன்
- கருத்தடை பெண்கள் உரிமை என்று போராடிய, கருத்தடை மாத்திரை கண்டுபிடிக்க உந்துதலாக இருந்த மார்கரெட் சாங்கர்
- புகழ் பெற்ற anthropologist மார்கரெட் மீட்
- பெண்களின் உடை அலங்காரத்தை மாற்றிய கோகோ சானல் (பெல்பாட்டங்களைப் படைத்தவர் இவர்தானாம். சானல் நம்பர் ஃ பைவ் இவர் உருவாக்கிய வாசனை திரவியம்தானாம்)
ஆச்சரியப்படுத்திய (இவர்களால் என்ன மாறிவிட்டது?) தேர்வுகள்:
- வாசனைத் திரவியங்களை உருவாக்கிய எஸ்டி லாடர்
- பாடகிகள் அரேதா ஃபிராங்க்ளின், மடோனா
- எழுத்தாளர் வர்ஜினியா வுல்ஃப் (நான் படித்ததில்லை)
- மார்த்தா ஸ்டூவர்ட் (வீட்டுப் பொருள்களை வியாபாரம் செய்பவர்)
- சமையல் கலை மாதிரி புத்தகம் எழுதிய ஜூலியா சைல்ட் (சமீபத்தில் வந்த ஜூல்ஸ் அண்ட் ஜூலியா படம் இவரை வைத்துதான்)
சம்பிரதாயத் தேர்வுகள்:
- இந்திரா காந்தி
- மதர் தெரசா
- முன்னாள் இங்கிலாந்து பிரதமர் மார்கரெட் தாட்சர்
- முன்னாள் இஸ்ரேல் அதிபர் கோல்டா மேயர்
- முன்னாள் ஃபிலிப்பைன்ஸ் அதிபர் கோரஜான் அக்வினோ
- ஹில்லரி கிளிண்டன்
- தற்போதைய ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல்
- மா-சே-துங்கின் மனைவியும், சீனாவில் பல ஆயிரம் பேர் இறப்பதற்கு காரணமாக இருந்த “கலாச்சாரப் புரட்சியின்” சிற்பியும் ஆன ஜியாங் க்விங் (நிழல் தலைவர்)
- முன்னாள் அமெரிக்க அதிபர் ரூசவெல்டின் மனைவி எலியனார் ரூசவெல்ட் (நிழல் தலைவர்)
- அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதி சாண்ட்ரா டே ஓ’கானர்
- பஸ்ஸில் வெள்ளையருக்கான சீட்டை விட்டு எழுந்திருக்கமாட்டேன் என்று உறுதியாக இருந்து அமெரிக்க கறுப்பர்களின் சமூக நீதிப் போராட்டத்துக்கு ஒரு symbolic வடிவம் கொடுத்த ரோசா பார்க்ஸ்
- சமூக சேவைக்காக நோபல் பரிசு வென்ற ஜேன் ஆடம்ஸ்
- டிவி ஸ்டார் ஓப்ரா வின்ஃப்ரே
- விஞ்ஞானி மேரி க்யூரி
விட்டுப் போனவர்: பெண் உரிமைகளுக்கு போராடிய பத்திரிகையாளர் க்ளோரியா ஸ்டைனம். இவரைப் பற்றி அதிகம் தெரியவில்லை.
நவம்பர் 2, 2011 at 12:59 பிற்பகல்
Hi