ராஜன் எங்கள் நண்பர். மிக விவரம் தெரிந்தவர். அவர் இங்கே பல கட்டுரைகள் எழுதியுள்ளார். சமீபத்தில் அவரது ”அமெரிக்க போர்களும் விளைவுகளும்: கடந்த பத்தாண்டு- ஒரு பார்வை: ராஜன் சடகோபன்” என்ற தலைப்பில் தினமலர் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. மிக தெளிவாகவும், அபாரமான தகவல்களுடனும் தொகுத்து வழங்கியுள்ளார். அமெரிக்க போர்களை பற்றி தெரியாதவர்கள் “catch up” செய்து கொள்ள ஒரு அருமையான சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்.
படித்துப் பாருங்கள். விரைவில் அது பற்றிய கட்டுரைகள் இங்கேயும் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.
December 27, 2010 at 5:04 பிற்பகல்
ஆர் வி
இப்படி “விபரம் தெரிந்தவர்” “ஆராய்ந்து எழுதுபவர்” என்றெல்லாம் சொல்லி மாட்டி விடுகிறீர்களே? நியாயமா?
) கடந்த பத்தாண்டுகளில் என்ன நடந்தது என்பது மாதிரியான ஒரு தகவல் கட்டுரை எழுதித் தரச் சொன்னார்கள். நான் எழுதி அனுப்பியதை சுருக்கி வெளியிட்டுள்ளார்கள். அது மட்டுமே.
ராஜன்
December 29, 2010 at 1:23 மு.பகல்
திரு.ராஜன் அவர்களே, அப்படியே தமிழ் சினிமாவில் மோசமான பிராமண காட்சிப்படுத்தல் பற்றியும் ஒரு நிகழ்ச்சி வானொலியிலும் தினமலரின் கட்டுரையிலும் வழங்கி ஒரு விழிப்புணர்வை உண்டாக்குங்கள் என்று உங்களை வேண்டுகிறேன்.
December 29, 2010 at 5:51 மு.பகல்
நண்பர் ராஜனின் கட்டுரைக்கு வந்த சில பின்னூட்டங்கள்….
# * snkm
* December 19th, 2010
நல்ல விமர்சனம் தான். ஆனால் அமெரிக்காவோ இந்தியாவோ இதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு நிதி நிலைமைகளையும், நிர்வாகத்தையும் சரி செய்து கொண்டு மக்களுக்கு நன்மை செய்யுமா ?
December 20th, 2010
Blogger R.Gopi said…
அட்டகாசமான, விரிவான, தெளிவான கட்டுரை…
அராஜக அமெரிக்காவை அழகாக தோல் உரித்து காட்டி விட்டது….
December 28th, 2010
Anonymous கணையாழி said…
இந்தியாவிற்கு பொருளாதார ரீதியாகவும் சிரமம் ஏற்படும் – ஆப்கானில் அந்நாட்டு புனரமைப்புகாக (ஒரு ராஜதந்திர காரணத்திற்காகவும்)பெரும் தொகையை செலவு செய்திகொண்டிருகிறது . . .
December 29, 2010 at 7:30 மு.பகல்
அய்யய்யோ!
December 29, 2010 at 11:53 பிற்பகல்
என்ன சொல்ல வருகிறீர்கள், ”கட்டுரை-ஆசிரியர்-அல்லாத-வேறு-ஒரு-ராஜன்”?
December 30, 2010 at 6:09 மு.பகல்
எஸ் என் கே எம்
அமெரிக்காவோ இந்தியாவோ என்ன செய்யும் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. நான் சொல்ல வந்தது கடந்த பத்தாண்டுகளில் என்ன நடந்தது என்பது மட்டுமே. கூடவே ஒரு சில கருத்துக்களும் சொல்லியிருக்கலாம். அது மட்டுமே. தினமலர் கேட்டது ”அமெரிக்கா இந்தியாவுக்கான ஆலோசனை” குறித்த கட்டுரை அல்ல என்ன நடந்தது அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த ஒரு தகவல்பூர்வமான கட்டுரை மட்டுமே. இந்தியாவிலும் சரி அமெரிக்காவிலும் சரி ஆளும் வர்க்கம் என்பது எடுக்கும் முடிவுகள் எப்பொழுதும் மக்கள் நலன் மக்கள் விருப்பம் சார்ந்ததாக இருப்பதில்லை என்பதே வரலாறு.
கோபி:
தோலை உரிப்பது, குடலை உருவுவதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது, நான் சைவம்
இது அமெரிக்காவை விமர்சித்து எழுதப் பட்ட கட்டுரை கிடையாது. ஆப்கான் விஷயத்தில் அமெரிக்கா செய்தது முழுக்க சரி என்பதும் தாலிபான்களை முழுக்க அழிக்காமல் அங்கிருந்து அவர்கள் வாபஸ் வாங்கக் கூடாது என்பதுமே என் நிலைப்பாடு. மேலும் ஈராக் தவிர்த்த பிற சிறு போர்கள் அனைத்திலுமே அமெரிக்காவின் நிலைப்பாடு நியாயமானதே என்பதே என் கருத்து. ஈராக்கிலும் கூட சதாம் ஒன்றும் பெரிய யோக்யன் கிடையாது இருந்தாலும் அவனை விட பெரிய அயோக்யர்களை நண்பர்களாக வைத்துக் கொண்டு அவனை மட்டும் அழித்தது நியாயமல்ல என்பது மட்டுமே என் கருத்து. ஈரான் அதிபர் வெளிப்படையாகவே இஸ்ரேலை பஸ்பம் செய்வேன் என்கிறார். அப்படிப் பட்ட ஒருவரின் கையில் அணு குண்டு வருவதை அமெரிக்கா தடுப்பதற்காகத் தலையிடுமானால் அதுவும் கூட நியாயமான வரவேற்கக் கூடிய ஒரு தலையீடாகவே இருக்கும். ஆகவே இது ஒரு அமெரிக்காவின் தோலை உரிக்கும் ஒரு எதிர்ப்புக் கட்டுரை அல்ல, அது என் நோக்கமும் அல்ல. அமெரிக்காவின் பெரும்பாலான நடவடிக்கைகளை நான் ஆதரிப்பவனும் கூட. இது வெறும் தகவல் அளிக்கும் ஒரு கட்டுரை மட்டுமே. கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்காவின் மீது ஜிஹாதி பயங்கரவாதம் பல போர்களைத் திணித்தது என்பதே உண்மை. மற்றபடி பாக்கிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்து வரும் ஆதரவு தன் கையைக் கொண்டே தன் கண்களைக் குத்திக் கொள்வதற்கு ஒப்பானது. ஆகவே இதில் தோலை உரிப்பது, பிரியாணி செய்வது என்றெல்லாம் எதுவும் இல்லை.
ராம்: நீங்கள் சொல்வதை இணையத்தில் மட்டுமே நாம் வலுவாகச் சொல்ல முடியும். எந்தப் பத்திரிகையும் வெளியிடாது. அப்படி எந்தப் பத்திரிகையாவது வெளியிட ஆர்வமாக இருக்கும் பட்சத்தில் எழுதித் தருவதில் எனக்கு எந்த வித ஆட்சேபமும் கிடையாது. நிச்சயம் என் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்வேன்.
”அய்யய்யோ” என்று கமெண்ட் போட்ட ராஜன் நான் அல்ல. அவர் யார் என்பதும் எனக்குத் தெரியாது.
ராஜன்
December 31, 2010 at 1:50 பிற்பகல்
//ராம்: நீங்கள் சொல்வதை இணையத்தில் மட்டுமே நாம் வலுவாகச் சொல்ல முடியும். எந்தப் பத்திரிகையும் வெளியிடாது. அப்படி எந்தப் பத்திரிகையாவது வெளியிட ஆர்வமாக இருக்கும் பட்சத்தில் எழுதித் தருவதில் எனக்கு எந்த வித ஆட்சேபமும் கிடையாது.// தினமலரில் நீங்கள் செய்யமுடியும் என்று நினைக்கிறேன். கண்டிப்பாக தினமணி வெளியிடும். தயவு செய்து முயற்சியுங்கள்.
ஜனவரி 2, 2011 at 5:58 மு.பகல்
ராம்
உங்கள் நம்பிக்கைக்கு நன்றி நிச்சயம் முயல்கிறேன். இது கடுமையாக எதிர்க்கப் பட வேண்டிய, தட்டிக் கேட்க்கப் பட வேண்டிய ஒரு அநியாயமே. உங்களது உணர்வு ஒவ்வொருவருக்கும் வருமானால் அதுவே பெரிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும்
அன்புடன்
ராஜன்
ஜனவரி 9, 2011 at 10:39 மு.பகல்
//உங்கள் நம்பிக்கைக்கு நன்றி நிச்சயம் முயல்கிறேன்// நன்றி ராஜன். உங்கள் பதில் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. நீங்கள் எங்கே எழுதினாலும் கூட்டாஞ்சோறில் தகவலளியுங்கள். சக நண்பர்களையும் படிக்கச் செய்து என்னாலான விழிப்புணர்வை உண்டாக்க உங்களோடு கைகோர்ப்பேன். நன்றி.