நவம்பர் 2010


நாதசுர சக்கரவர்த்தி, தோடி ராகத்தில் மிகவும் பிரபலமானவர் என்ற செய்தியறிந்த ஒரு பெரும் பணக்காரர் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையை சந்தித்து, தனது மகள் கல்யாணத்தில் தாங்கள் வந்து வாசிக்க வேண்டுமென்று மிகவும் கேட்டுக்கொண்டார். டி.என்.ஆர் கல்யாணக் கச்சேரிகளில் வாசிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தில் வந்தவரிடம் ஒரு பெரும் தொகையை கேட்டார். “தாங்கள் எவ்வளவு கேட்டாலும் கேட்ட தொகையை தருவதாக ஒப்புக் கொண்டார். கல்யாணத்தில் டி.என்.ஆர் பல மணி நேரங்கள் தனது புகழ் பெற்ற தோடி ராகத்தை வாசித்து முடித்தார். அடுத்த ஒரு மணி நேரத்தில் மணமகளின் தந்தை, டி.என்.ஆரின் அருகில் வந்து, “தாங்கள் தோடி ராகத்தில் வாசிப்பதில் புகழ் பெற்றவராச்சே, அந்த ராகத்தை வாசியுங்கள்” என்று கேட்டார்.

டி.என்.ஆருக்கு அடக்க முடியாத கோபம் வந்து விட்டது. பக்கத்தில் ஒத்து ஊதிக்கொண்டிருந்தவரைப் பார்த்து கடின சொற்களில், “தோடி ராகம் வாசிக்கும் நாதசுரத்தை எடுத்து வா, எடுத்து வா என்று பலமுறை சொன்னேனே, ஏன் எடுத்து வரவில்லை?” என்று சொல்லி, கன்னத்தில் ‘பளார்’ என்று அறைந்தார் (மணமகளின் தந்தை, அந்த கோடீஸ்வரரை அறைவதற்குப் பதிலாக, ஒத்து ஊதுபவரை அறைந்தார் என்பதை நீங்கள் என்னும் புரிந்து கொள்ளாமலா இருப்பீர்கள்?).

மிகவும் பயத்துடன் பெண்ணின் தகப்பனார், “அவரைக் கோபிக்காதீர்கள், அடுத்த முறை வரும்போது தோடி ராகம் வாசிக்கும் நாதசுரத்தை எடுத்து வந்தால் போச்சு” என்று பணிவாக டி.என்.ஆரிடம் சொன்னார்.
       —–திரு. எஸ்.எம். உமர் எழுதிய கலைமாமணி என்ற நூலிலிருந்து

நண்பர் கோபால் அனுப்பிய பதிவு.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள், கோபால் பக்கங்கள்

ரொம்ப நாளாகவே மனதில் இருக்கும் ஏதாவது ஒரு ஐடியாவை டெவலப் செய்து venture funding வாங்கி சுயமாக பிசினஸ் செய்ய வேண்டும் என்று எண்ணம். ஆனால் ஐடியாவை செயலாக்கும் தொழில் நுட்பத் திறமை குறைவாக இருப்பது எப்போதுமே பிரச்சினை. அதற்கான தொழில் நுட்பத் திறமையை வளர்த்துக் கொள்வது எப்போதுமே ஆரம்பம், பிறகு கைவிடல் என்றுதான் போய்க்கொண்டிருக்கிறது. சாண் ஏறினால் முழம் சறுக்கும்! முதல் ஸ்டெப்பாக ஒரு ப்ராஜெக்டை செய்ய திட்டம்.

பல ப்ராஜெக்ட்கள் உண்டு. இந்த ஆட்டத்துக்காக நான் தேர்ந்தெடுத்த ப்ராஜெக்ட் ஐபாடில் ஆடுபுலி ஆட்டம் ஆடுவது.

அடுத்த ஸ்டெப்பாக என்னுடைய அல்காரிதத்தை இங்கே பதிக்கப் போகிறேன்.

வாராவாரம் வெள்ளி அன்று இங்கே என்ன முன்னேற்றம் என்று பதிவு செய்யப் போகிறேன்.

snkm, வல்லம் தமிழ் இருவரும் ப்ரேம்ஜிபாய் படேல் போலவே மரம் நடுவது என்று கிளம்பி இருக்கிறார்கள். (ஏற்கனவே கிளம்பிவிட்டார்களோ?) அவர்களுக்கு வாழ்த்துக்கள். நீங்களும் உங்கள் முன்னேற்றத்தை வாராவாரம் (மாதாமாதம்) பதிவு செய்யுங்களேன்!

தொகுக்கப்பட்ட பக்கம்: கனவுகள்

தொடர்புடைய பக்கம்: கனவை நிஜமாக்கிய ப்ரேம்ஜிபாய் படேல்

இவர் 1500+ (சிறு) அணைகளை கட்டி இருக்கிறார், கிட்டத்தட்ட பனிரண்டாயிரம் ஏக்கர் நிலத்துக்கு நீர்ப்பாசன வசதி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார், லட்சக்கணக்கான மரங்களை நட்டிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? இவர் என்ன சூப்பர்மேனா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

இல்லை. ப்ரேம்ஜிபாய் படேல் உங்களையும் என்னையும் போலத்தான். பல வருஷங்களாக பணம், குடும்பம், வேலை, தொழில் என்று இருந்தவர்தான். ஆனால் அவர் உங்களையும் என்னையும் போல கனவு கண்டுகொண்டே இருக்கவில்லை; சே நாட்டில எல்லாம் மோசம்பா என்று அலுத்துக் கொள்வதோடு நிற்கவில்லை. அவர் அடி மனதில் ஒரு தீ கனன்றுகொண்டே இருந்திருக்கிறது. எழுபதுகளில் மரம் நடுவோம் என்று இறங்கி இருக்கிறார். தன சொந்த கிராமத்தில் மரம் நடும் திட்டம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். அவர் தானே மரங்களை நடவில்லை, ஆள் வைத்து நட்டிருக்கிறார். அப்புறம் அடுத்த கிராமம், அதற்கடுத்த கிராமம் என்று முயற்சி பெரிதாகிக் கொண்டே போயிருக்கிறது.

சௌராஷ்டிரா, கட்ச் பிரதேசங்கள் (குஜராத் மாநிலம்) கொஞ்சம் வறட்சியானவை. தண்ணீர் கொஞ்சம் கஷ்டம்தான். வீணாகும் நதி நீரை சேகரிக்க சின்ன சின்ன அணைகள் கட்ட ஆரம்பித்திருக்கிறார். அது இப்போது 1500+ அளவில் நிற்கிறது.

எஞ்சினியரிங் innovations-உம் உண்டு. நாம் எல்லாம் சாதாரணமாக ஒரு நேர்கோடு போன்ற அனைகளைத்தான் பார்த்திருப்போம். இவர் வட்ட வடிவில் கட்டலாம் என்று கண்டுபிடித்திருக்கிறார். விதைகளை ஒரு blower மூலம் “நடுகிறார்”.

இவரைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இந்த ஹிந்து கட்டுரை, அவரது விருட்ச பிரேம் சேவா ட்ரஸ்ட் தளம் ஆகியவற்றை பார்க்கலாம்.

இவரைப் பற்றி படித்தபோது எனக்கு தோன்றியது இதுதான். There is power in dreaming; but there is even more power in starting. நமக்கும் ஆயிரம் கனவுகள் இருக்கும். இதைப் படித்தவுடன் நீங்கள் உங்கள் கனவுகளில் ஏதோ ஒன்றுக்கு முதல் படி எடுத்து வைத்தீர்களானால் எனக்கு ஜன்ம சாபல்யம் கிடைக்கும். அப்படி முதல் படி எடுத்து வைக்க நினைத்தால் நீங்கள் இரண்டு காரியம் செய்ய வேண்டும்.

  1. இந்த மறுமொழியைப் படித்தவுடன் ஆம் இந்த ஆட்டத்தில் கலந்து கொள்கிறேன் என்று மறுமொழி எழுத வேண்டும்.
  2. இன்று நீங்கள் ஏதோ ஒரு கனவின் முதல் படியை எடுத்து வைக்க வேண்டும், என்ன செய்தீர்கள் என்று 24 மணி நேரத்துக்குள் மறுமொழி எழுத வேண்டும்.

யார் யாரெல்லாம் இந்த ஆட்டத்துக்கு வருகிறீர்கள்? நாலைந்து பேராவது வந்துடுங்கப்பா/ம்மா! என்னை தனியா தவிக்க விட்டுடாதீங்க! ஏனென்றால் நான் ஆடப் போகிறேன், என் அடுத்த பதிவு என் முதல் படி பற்றித்தான்!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய சுட்டிகள்:
ஹிந்து கட்டுரை
விருட்ச பிரேம் சேவா ட்ரஸ்ட் தளம்

என் முதல் படி

« முந்தைய பக்கம்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 59 other followers