ஒரு வழியாக தி.மு.க.வை சேர்ந்த ராஜாவை மந்திரி பதவியிலிருந்து தூக்கிவிட்டார்கள். இவ்வளவு வெளிச்சம் போட்டுக் காட்டிய பிறகும் ராஜாவை மந்திரி சபையிலிருந்து விலக்க – கவனியுங்கள் விலக்க, அவர் மீது கேஸ் கீஸ் போட இல்லை, just விலக்க – இத்தனை நாளானது கூட்டணி அரசியலின் மிக மோசமான விளைவுகளில் ஒன்று. இத்தனை பணம் நஷ்டமாயிருக்கிறது – நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சராசரியாக ஆயிரத்து நானூறு ரூபாய் போச்சு – அந்த ராஜாவுக்கு தண்டனை மந்திரி பதவி போனது மட்டுமே. மொத்த நஷ்டம் 1.76 லட்சம் கோடி ரூபாய். அதாவது 17,60,00,00,00,000 ரூபாய். கிட்டத்தட்ட நாற்பது நாலு பில்லியன் டாலர்கள். (திருத்திய வீராவுக்கு நன்றி!) கலாநிதி மாறனின் நெட் வொர்த் மூன்று பில்லியன் டாலர்கள் என்கிறார்கள். இந்த வருஷ பட்ஜெட் deficit-இல் பாதி போல ஐந்து மடங்கு.
இந்த விஷயத்தைப் பற்றி தமிழ் ஹிந்து தளத்தில் விஸ்வாமித்ரா மிகச் சிறப்பான ஒரு பதிவை – இந்தியாவின் பிரதமர் மன்மோகன் அல்ல நீரா ராடியா – எழுதி இருக்கிறார். மூன்று பகுதிகளாக வந்திருக்கிறது – பகுதி 1, பகுதி 2, பகுதி 3.
இதை விட சிறந்த, அடர்ந்த ஒரு கட்டுரை இது வரை தமிழில் எந்தப் பத்திரிகையிலும் வரவில்லை. முழுமையான ரிப்போர்ட், எல்லா விஷயங்களையும் கவர் செய்கிறது. இந்த அளவுக்கு விலாவாரியான தமிழ் கட்டுரை எனக்குத் தெரிந்து இது ஒன்றுதான். கட்டாயமாகப் படித்துப் பாருங்கள்!
விஸ்வாமித்ராவின் அலசலே போதவில்லை இன்னும் விவரம் வேண்டும் என்பவர்கள் CAG ரிபோர்ட்டை படிக்கலாம்.
என்னைப் போல சோம்பேறிகளுக்காக ராஜாவின் திருவிளையாடல்கள் சுருக்கமாக:
தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டு நடப்பு
நவம்பர் 17, 2010 at 3:06 மு.பகல்
// இந்த விஷயத்தைப் பற்றி தமிழ் ஹிந்து தளத்தில் விஸ்வாமித்ரா மிகச் சிறப்பான ஒரு பதிவை – இந்தியாவின் பிரதமர் மன்மோகன் அல்ல நீரா ராடியா – எழுதி இருக்கிறார். //
பதிவின் தலைப்பு இது அல்ல. கொஞ்சம் காரம் குறைத்து “நம்மை உண்மையில் ஆள்வது யார்?” என்று கேட்கிறார்கள். நீங்கள் ஆர்வத்தைக் தூண்டுவதற்காக இப்படிப் போட்டிருப்பதாக தெரிகிறது.
எதுவானாலும், மக்களிடம் விஷயம் போய்ச் சேர்ந்தால் சரி.
நவம்பர் 17, 2010 at 3:40 மு.பகல்
நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள்.. ஆனால் ’பத்ரி’ சொல்வது வேறு மாதிரி இருக்கிறது. அந்தக் கட்டுரையைப் படித்தீர்களா? உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்.
நவம்பர் 17, 2010 at 4:13 மு.பகல்
முதலில் வைத்த தலைப்பை மார்றியிருக்கிறார்கள். அவ்வளவே. விஸ்வாமித்த்ராவின் அனுமதியுடன் அந்த மூன்று பகுதிகளையும் எனது வலைப்பூவில் காப்பி பேஸ்ட் செய்தேன் முழுமையாக.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நவம்பர் 17, 2010 at 5:49 மு.பகல்
அடேங்கப்பா பறி போன அமவுண்ட்டுக்கு இத்தனை சைபரா!!!
http://kgjawarlal.wordpress.com
நவம்பர் 17, 2010 at 7:35 மு.பகல்
//இந்த விஷயத்தைப் பற்றி தமிழ் ஹிந்து தளத்தில் விஸ்வாமித்ரா மிகச் சிறப்பான ஒரு பதிவை – இந்தியாவின் பிரதமர் மன்மோகன் அல்ல நீரா ராடியா – எழுதி இருக்கிறார். மூன்று பகுதிகளாக வந்திருக்கிறது – பகுதி 1, பகுதி 2, பகுதி 3.//
இத்துடன் ஸ்பெக்ட்ரம் புலனாய்வுக்கு மகுடமே கோபிகிருஷ்ணன்தான்.
http://parvaiyil.blogspot.com/2010/11/blog-post_16.html
நவம்பர் 17, 2010 at 9:13 மு.பகல்
அரியலூரில் நடந்த ஒரு கோர ரயில் விபத்திற்கு பொறுப்பேற்று அன்றைய அமைச்சர் சாஸ்திரி அவர்கள் பதவி விலகினார்
என்னைக்கேட்டால் spectrum ஊழலுக்கு தண்டிக்கப்படவேண்டியவர் ராஜா;
பதவி விலக வேண்டியவர் மன்மோகன்சிங்
60கோடி ஊழலுக்கு (போபோர்ஸ்) கூரை ஏறி கூவிய The Hindu, இப்போ spectrum ஊழலுக்கு ராஜா சார்பில் தானே கேள்விபதில் தயாரித்து வெளியிடுகிறது
ஜெயாவின் 200 ஜோடி செருப்பு விவகாரத்தை வரிந்து கட்டி காட்டிய SUN TV,இப்போ இருக்கும் இடம் தெரியலே
Otherwise நேர்மையான பத்ரி இப்போ விழுந்து விழுந்து ராஜாவை support செய்கிறார்..
ம்ம்ம் “சூரியன்” “கிழக்கில்” உதயமாகுது போலிருக்கு!!
நவம்பர் 17, 2010 at 11:36 மு.பகல்
இதுலே இன்னொரு ஹீரோ சுப்ரமணிய சுவாமியை பற்றி சொல்லாமல் விட்டுட்டீங்களே. மனிதர் பதினைத்து மாதங்களுக்கு முன்னேயே பிரதமருக்கு தெளிவான ஆதாரங்களோடு கடிதம் எழுதி, ராஜா மீது case போட அனுமதி கேட்டிருக்கிறார். பதினைந்து மாதங்கள் கழித்து மெதுவாக இது சிபிஐ வசம் இருக்கு. இப்போ case எதுக்கு ? என்று வழ வழா பதில் ஓடுறது இருப்பதை Supreme Court விமர்சித்து இருக்கிறது
நவம்பர் 17, 2010 at 2:14 பிற்பகல்
”ராசா என்பார்… மந்திரி என்பார்… ராஜ்ஜியம் இல்லை ஆள..!”
விருட்சம் குறிப்பிட்டுள்ளதைப் போல், இந்த ஊழலை எதிர்த்து நீதி மன்றங்களில் போராடிக் கொண்டிருக்கும் ஒரே அரசியல்வாதி சுப்ரமணியன் சுவாமி. எதிர்க்கட்சியான பாஜக செய்ய வேண்டிய வேலையை தனி நபராக ஒரு சுவாமி செய்திருக்கிறார். அவரது கடந்த கால தவறுகளினால் அவர் மீதும் பலருக்கும் இன்று நம்பிக்கை ஏற்படாவிட்டாலும் கூட, அவரது போராட்டங்களுக்கு இந்திய மக்கள் அனைவரும் கடமைப் பட்டிருக்கிறார்கள்.
ஜெயா டி.வி. “நேர் முகம்” நிகழ்ச்சி (ரபி பெர்னாட் வித் சுப்ரமணியன் ஸ்வாமி)
மொத்த ஊழல் பணமான 60000 கோடி ரூபாயில்,
ராசாவுக்குக் கிடைத்தது – 10 % (6000 கோடி)
இதற்கு முன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார் ராசா என்பது குறிப்பிடத்தக்கது)
கருணாநிதி, அவரது இரண்டு மனைவி மற்றும் குடும்பத்துக்குக் கிடைத்தது 50 % அதாவது 30000 கோடி ரூபாய்
டில்லியில் மற்றும் சிலருக்குப் பங்கு 40 % (இவர்கள் பெயர்களை விரைவில் தெரிவிப்பதாக ஸ்வாமி கூறினார்)
இவ்வளவு பெரிய தொகை இன்டர்நெட் பேங்க்கிங் மூலம் மாற்றப்பட்டதாக ஸ்வாமி குறிப்பிட்டார்.
அவருக்குள்ள அமெரிக்கன் கநெக் ஷன் மூலம் ஸ்வாமி குறிப்பிட்ட இரண்டு இடங்கள் மக்காவ் மற்றும் Cayman Islands
நவம்பர் 17, 2010 at 4:59 பிற்பகல்
ஸ்பெக்ட்ரம் ஊழலில் முடிவிற்கு வந்த அடாவடி
===================================================
பதவியைப் பிடுங்குவது மட்டும்தான் ஊழலுக்குத் தண்டனையா?
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3640
நவம்பர் 18, 2010 at 9:00 மு.பகல்
தேர்தலில் வாக்களிக்க பதினான்கு ஆவனங்களில் ஒன்றையாவது காண்பிக்க வேண்டும் என்று விதியிருக்கும்போது, பதினான்கில் ஒன்று என்ன, பலவற்றைக்கொண்டுபோவோம்’ என்று ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம் (செம்மொழியில் சொன்னால் ‘டிரைவிங் லைசன்ஸ்’), தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை என்று இன்னபிற ஆவணங்களுடன் சென்று அதிகாரியின் அருகில் போனால், “உங்கள் ஓட்டு ஏற்கெனவே போடப்பட்டுவிட்டது” என்று சொல்லப்படும் இந்நாட்டில், விழிப்புணர்வாவது மண்ணாவது….
என் பேரன் காலத்தில் இந்நாட்டில் என்ன பேச்சு நடக்கும்..?.
“ஏய் விஷயம் தெரியுமா?. 2010-ம் வருஷத்தில் கேவலம் ஒருலட்சத்தி எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்ததுக்கே எல்லாரும் குய்யோ முறையோன்னு கூச்சல் போட்டாங்களாமே. இப்போ நடந்திருக்கிற ஊழலைக்கேள்விப்பட்டால் என்ன சொல்லுவாங்க?”
திருடியவன் கையை வெட்டும் அரபுநாட்டு தண்டனை காட்டுமிராண்டித்தனம்.
திருடியவனுக்கு புழல் சிறையில் கோழி பிரியாணி போட்டு, வாராவாரம் திரைப்படம் காண்பித்து மகிழ்விப்பது இந்திய சனநாயகம்.
இந்தியா இன்னமும் உருப்படும் என்று நம்புவோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
நவம்பர் 18, 2010 at 12:18 பிற்பகல்
நேத்து தான் உட்காந்து எத்தனை சைபர்ன்னு எண்ணிக்கிட்டு இருந்தேன். அடேங்கப்பா,…
100 திருடுரவனுக்கு கூட மிக அதிகமான தண்டனையெல்லாம் கிடைக்கிறது. ஆண்குறியில் கம்பி கட்டி விளையாடும் காவலர்கள் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த ஊழல் பெருச்சாளி… சாரி டைனோசர்களுக்கும் குறைந்தபட்சம் இந்த தண்டனையாவது கொடுக்க வேண்டும்.
நவம்பர் 18, 2010 at 6:05 பிற்பகல்
விகடன் வலைபாயுதே…. (24-11-2010)
=========================================
parisalkaaran@twitter.com
ராசாவா இருந்தாலும், மந்திரியா இருந்தாலும், ராசாவே மந்திரியா இருந்தாலும்….. குற்றம் குற்றமே !
jackiesekar@twitter.com
1,76,345 கோடி ரூபாய். யம்மாடியோவ்! பணம் எண்ணும்போது பக்கத்துல நின்னு, சிந்தியது சிதறியது எடுத்தாலே, நீலாங்கரையில் பீச் ஹவுஸ் கட்டி இருக்கலாமே ?
நவம்பர் 18, 2010 at 6:28 பிற்பகல்
இந்தக் கேள்விகளுக்கு நிச்சயம் விடை கிடைக்காது!!
பொதுவாக நம் நாட்டில் ஒரு வழக்கம் இருக்கிறது. எந்த ஒரு விவகாரமாக இருந்தாலும் அது உச்சத்தைத் தொடும் வரைதான் பரபரப்பு,. விமர்சனம்… தார்மீகக் கோபம் எல்லாமே. அதன் பிறகு அந்த உணர்வு போகும் இடம் தெரிவதில்லை. ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளை எழுப்பிவிட்டு போய்க் கொண்டே இருக்கிறார்கள் மக்கள்… அவற்றுக்கான பதில்களைப் பெறும் அளவுக்குக் கூட பொறுமையும் நிதானமும் இல்லை…
மறதி, எதையுமே அந்நேரத்து பொழுதுபோக்கு கண்ணோட்டத்தில் பார்ப்பது, யாருக்கோ நடந்ததுதானே நமக்கென்ன? என்ற அலட்சியம்…. போன்றவையே, அடுத்தடுத்த குற்றங்களுக்கு ஆழமான அடித்தளமாக அமைகிறது.
ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரத்தில் இப்போதுள்ள பரபரப்பும் மக்களின் கோப உணர்வும் எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்கிறீர்கள்? அடுத்த சில தினங்களிலேயே இது மறக்கடிக்கப்படும். அதற்கு வசதியாக இருக்கவே இருக்கிறது கூட்டணி சமாச்சாரம்… அல்லது ரயில் தண்டவாள தகர்ப்பு செட்டப்கள். இதற்குத் தோதாக, பிரபாகரன் பிறந்த நாள்வேறு வருகிறது!
2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த ரூ 1.76 லட்சம் கோடி இழப்புக்கு காரணமான ஆ ராசா பதவி விலகியுள்ளார். இது இயல்பாக, தார்மீக அடிப்படையில் நடந்த ராஜினாமா அல்ல… எந்த நிமிடமும் கழுத்தைப் பிடித்து தள்ளப்படக் கூடும் என்ற நிலையில், வேறு வழியின்றி செய்யப்பட்ட ஒன்றே என்பது சலூன் கடையில் அரசியல் அலசுவோர் வரை நன்கு புரிந்திருக்கிறது.
அடுத்து?
ராசா பதவி விலகியதால் எல்லாம் சரியாகி விடுமா? இந்திய அரசு இழந்த ரூ 1.76 கோடி திரும்பக் கிடைத்துவிடுமா?
இந்த முறைகேட்டின் பலன் மொத்தத்தையும் ராசாதான் அனுபவித்தாரா?
ராசா ராஜினாமா கடிதம் கொடுப்பதற்கு முன்பு வரை, அவர் மீது எந்தத் தவறும் இல்லை என்றே சாதித்து வந்த பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோருக்குத் தெரியாமலேயே எல்லாம் நடந்தது என்று சொல்ல வருகிறார்களா?
‘2 ஜி ஏலத்தில் என் கவனத்துக்கு வராமல் எதுவும் நடக்கவில்லை’ என்று பிரதமர் ஆணித்தரமாகக் கூறினாரே… அப்படியெனில் இந்த ரூ 1.76 லட்சம் கோடி இழப்பும் அவர் கவனத்துக்கு வந்ததிருக்க வேண்டுமே!
நாடு இவ்வளவு நஷ்டப்பட, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் யார் யாருக்கு எவ்வளவு கொடுத்தன? அதில் மத்திய – மாநில ‘ஒதுக்கீட்டு’ விகிதம் என்ன?
இதற்கு முன் எத்தனை ராஜினாமாவை பார்த்திருக்கிறோம்… எப்போதாவது, குறிப்பிட்ட மந்திரியின் ராஜினாமாவுக்குப் பின் அந்தப் பிரச்சினை முறையாக தீர்த்து வைக்கப்பட்டதா.. ஊழல் களையப்பட்டதா… களவாடிய பணம் திரும்பப் பெறப்பட்டதா..?
ம்ஹூம்… இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் நிச்சயம் கிடைக்காது என்று நம்புவோமாக!
மக்களின் அடுத்த அக்கறை… ‘ராசாவின் பதவி கனிமொழிக்கு ஏன் கிடைக்கவில்லை? கருணாநிதி அடுத்த பேரத்துக்கு டெல்லி போவாரா? கூட்டணி மாறுமா?’ போன்றவற்றில்தான் என்பது, அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது!!
-வினோ
ஆசிரியர்
என்வழி
நவம்பர் 29, 2010 at 10:52 பிற்பகல்
பதில் எழுதிய அத்தனை பேருக்கும் நன்றி! தாமதமாக மறுமொழி எழுதுவதற்கு மன்னிக்கவும்.
பாலா, டோண்டு சொன்னது போல தலைப்பை மாற்றி இருக்கிறேன், அவ்வளவுதான். இங்கேயும் கட் பேஸ்ட் செய்யலாமா என்றுதான் நினைத்தேன். சோம்பேறித்தனம்…
ரமணன், பத்ரி தன “குறைந்த மதிப்பீட்டுக்கான” காரணங்களை சரியாக விளக்கவில்லை என்றே நினைக்கிறேன். (பாருங்கள் ஆயிரம் கோடி என்பதெல்லாம் குறைச்ச்சலாகிவிட்டது) மேலும் அரசு ஒரு மதிப்பீட்டில் விற்கிறது. வாங்கிய கம்பெனி உடனடியாக பல மடங்கு அதிக விலையில் திருப்பி விற்கிறது என்றால் அரசே ஏன் அதிக மதிப்பீட்டில் விற்கவில்லை என்று அவரைக் கேட்டிருந்தேன், அவர் அதற்கு சரியாக பதில் சொல்லவில்லை.
ராஜ நடராஜன் கோபி கிருஷ்ணன் பற்றிய தகவலுக்கு நன்றி!
விருட்சம், சாமி சாதித்திருக்கிறார்!
ஸ்ரீனிவாஸ், தகவல்+சுட்டிகளுக்கு நன்றி!
நவம்பர் 29, 2010 at 11:56 பிற்பகல்
//மொத்த நஷ்டம் 1.76 லட்சம் கோடி ரூபாய்.கிட்டத்தட்ட நாலு பில்லியன் டாலர்கள்.
Is this not 40 billion dollars?
நவம்பர் 30, 2010 at 4:43 பிற்பகல்
உண்மை வீரா, அது நாற்பது பில்லியந்தான். நான்தான் பூஜ்ஜியங்களை எண்ணுவதில் தவறு செய்துவிட்டேன்.
தல தளபதி+அருள், மறுமொழிக்கு நன்றி!
நவம்பர் 30, 2010 at 5:42 மு.பகல்
அமைச்சர் ராஜாவால் கோவையில் ஒரு வெயில் காலம்!
http://thalathalabathi.blogspot.com/2010/11/blog-post_28.html
நவம்பர் 30, 2010 at 9:18 மு.பகல்
ஸ்பெக்ட்ரம் பணத்தில் அனுஷ்காவுக்கு பங்கு! அதிர்ச்சி தகவல்
http://arulgreen.blogspot.com/