இவர் 1500+ (சிறு) அணைகளை கட்டி இருக்கிறார், கிட்டத்தட்ட பனிரண்டாயிரம் ஏக்கர் நிலத்துக்கு நீர்ப்பாசன வசதி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார், லட்சக்கணக்கான மரங்களை நட்டிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? இவர் என்ன சூப்பர்மேனா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.
இல்லை. ப்ரேம்ஜிபாய் படேல் உங்களையும் என்னையும் போலத்தான். பல வருஷங்களாக பணம், குடும்பம், வேலை, தொழில் என்று இருந்தவர்தான். ஆனால் அவர் உங்களையும் என்னையும் போல கனவு கண்டுகொண்டே இருக்கவில்லை; சே நாட்டில எல்லாம் மோசம்பா என்று அலுத்துக் கொள்வதோடு நிற்கவில்லை. அவர் அடி மனதில் ஒரு தீ கனன்றுகொண்டே இருந்திருக்கிறது. எழுபதுகளில் மரம் நடுவோம் என்று இறங்கி இருக்கிறார். தன சொந்த கிராமத்தில் மரம் நடும் திட்டம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். அவர் தானே மரங்களை நடவில்லை, ஆள் வைத்து நட்டிருக்கிறார். அப்புறம் அடுத்த கிராமம், அதற்கடுத்த கிராமம் என்று முயற்சி பெரிதாகிக் கொண்டே போயிருக்கிறது.
சௌராஷ்டிரா, கட்ச் பிரதேசங்கள் (குஜராத் மாநிலம்) கொஞ்சம் வறட்சியானவை. தண்ணீர் கொஞ்சம் கஷ்டம்தான். வீணாகும் நதி நீரை சேகரிக்க சின்ன சின்ன அணைகள் கட்ட ஆரம்பித்திருக்கிறார். அது இப்போது 1500+ அளவில் நிற்கிறது.
எஞ்சினியரிங் innovations-உம் உண்டு. நாம் எல்லாம் சாதாரணமாக ஒரு நேர்கோடு போன்ற அனைகளைத்தான் பார்த்திருப்போம். இவர் வட்ட வடிவில் கட்டலாம் என்று கண்டுபிடித்திருக்கிறார். விதைகளை ஒரு blower மூலம் “நடுகிறார்”.
இவரைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இந்த ஹிந்து கட்டுரை, அவரது விருட்ச பிரேம் சேவா ட்ரஸ்ட் தளம் ஆகியவற்றை பார்க்கலாம்.
இவரைப் பற்றி படித்தபோது எனக்கு தோன்றியது இதுதான். There is power in dreaming; but there is even more power in starting. நமக்கும் ஆயிரம் கனவுகள் இருக்கும். இதைப் படித்தவுடன் நீங்கள் உங்கள் கனவுகளில் ஏதோ ஒன்றுக்கு முதல் படி எடுத்து வைத்தீர்களானால் எனக்கு ஜன்ம சாபல்யம் கிடைக்கும். அப்படி முதல் படி எடுத்து வைக்க நினைத்தால் நீங்கள் இரண்டு காரியம் செய்ய வேண்டும்.
- இந்த மறுமொழியைப் படித்தவுடன் ஆம் இந்த ஆட்டத்தில் கலந்து கொள்கிறேன் என்று மறுமொழி எழுத வேண்டும்.
- இன்று நீங்கள் ஏதோ ஒரு கனவின் முதல் படியை எடுத்து வைக்க வேண்டும், என்ன செய்தீர்கள் என்று 24 மணி நேரத்துக்குள் மறுமொழி எழுத வேண்டும்.
யார் யாரெல்லாம் இந்த ஆட்டத்துக்கு வருகிறீர்கள்? நாலைந்து பேராவது வந்துடுங்கப்பா/ம்மா! என்னை தனியா தவிக்க விட்டுடாதீங்க! ஏனென்றால் நான் ஆடப் போகிறேன், என் அடுத்த பதிவு என் முதல் படி பற்றித்தான்!
தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்
தொடர்புடைய சுட்டிகள்:
ஹிந்து கட்டுரை
விருட்ச பிரேம் சேவா ட்ரஸ்ட் தளம்
நவம்பர் 3, 2010 at 5:13 மு.பகல்
i’m …..
i have a track record with more than 10 successful starts left incomplete
escapee……
(wishes to you)
நவம்பர் 3, 2010 at 7:39 மு.பகல்
நாங்களும் சிறிய அளவில் செடிகளை நட்டு வருகிறோம். அடுத்தவர்களையும் பங்கு எடுத்துக்கொள்ள வைக்கிறோம்! நன்றி!
நவம்பர் 3, 2010 at 4:46 பிற்பகல்
சங்கரன், அப்பாடா ஒருத்தராவது ஆட்டத்துக்கு வந்தீங்களே!
வார்த்தை, பப்ளிக்காக ஒரு கமிட்மென்ட் இருப்பது கூட இரண்டு மூன்று அடி எடுத்து வைக்க செய்யும். அதனால் தயங்காமல் சொல்லுங்கள்! கனவு என்பது “சேவை”யாக இருக்க வேண்டியதில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்…
நவம்பர் 3, 2010 at 5:26 பிற்பகல்
நானும் இந்த மாதிரி கொள்கை கொண்டவன் தான்,எனவே முதல் அடி எடுத்து வைக்க நான் ரெடி
நவம்பர் 4, 2010 at 10:50 மு.பகல்
எனக்கு நம் பண்பாட்டின் வேர்களைப் பற்றி பெயரளவில்கூட பெரிய அளவில் தெரியாது. இன்று தான் ஒருத்தர் அபிநவகுப்தர் என்பவர் எழுதியதை சுட்டி எனக்கு எவ்வளவு பெரிய மரமண்டை என்று உணர்த்தினார்.
அதனால் அவரைப் பற்றி மட்டுமாவது அடுத்த தீபாவளிக்குள் ஓரளவுக்குத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.
பார்க்கலாம்- எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்த முடிகிறது என்று.
நவம்பர் 4, 2010 at 11:18 மு.பகல்
[...] [...]
நவம்பர் 5, 2010 at 5:44 பிற்பகல்
ஆர் வி
கனவுத் திட்டம்: நூறு மரங்கள் நட்டு வளர்த்து சோலையை உருவாக்குவது
இது வரை முடிந்த சில முதல் படிகள்: வேலி, மின்சாரம் வாங்குதல், தண்ணீர் வசதி. சொட்டு நீர் பாசனம், குழிகள், தண்ணீர் டாங்க் கட்டல், மரங்களுக்கான இடம் தேர்வு, மரம் தேர்வு ஆகியவை
நான் ஏற்கனவே ஆரம்பித்து விட்டேன். சிறிய நிலம் ஒன்று வாங்கி ஒரு நூறு இருநூறு மரங்கள் நடுவது பல நாள் கனவாக இருந்து வந்தது. பாரம்பரியமான விவசாயம் என் அப்பாவின் இளம் வயதிலேயே கையை விட்டுப் போய் விட்ட நிலையில் அவருக்கும் தன் இளவயதில் செய்த விவசாயத்திற்குத் திரும்ப வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. கடுமையான உழைப்பாளியான அவரது ஓய்வு காலத்தை தன் விருப்பமான ஒரு தொழிலில் ஈடுபடுத்துவது அவருக்கும் உற்சாகமான ஒரு பொழுது போக்கை வழங்கும் என்பதினாலும் இந்த திட்டத்தை அவரிடம் ஒப்படைத்திருக்கிறேன். செயல்படுத்துவது அவர்தான். நான் இடம், நிதி மற்றும் ஆலோசனைகள் மட்டுமே இங்கிருந்து அனுப்புகிறேன். ஒரு ஏக்கரில் கிட்டத்தட்ட 75 மரங்கள் வைக்கலாம் என்பதைக் கண்டு கொண்டோம். ஒரு ஆலோசகரின் உறுதுணையுடன் வேலையை ஆரம்பித்து இப்பொழுது மரம் நடும் நிலைக்குச் சென்றிருக்கிறோம். ஆழ்துளை கிணறு போடுவது, சொட்டு நீர் பாசனம் அமைப்பது, குழி தோண்டுவது வரை முடிந்து விட்டது. மழை முடிந்தவுடன் நாற்றுக்களை நட வேண்டியதுதான் பாக்கி, அருகில் உள்ள விவசாயத் துறை வனத்துறை அலுவலர்கள் மற்றும் இதில் ஏற்கனவே அனுபவம் உள்ளவர்கள, சிலர் என்று அனைவரும் உதவுகிறார்கள். சில தேக்கு மரங்கள், பத்துப் பதினைந்து தென்னை மரங்கள் மற்றும் மா, பலா, கொய்யா, நெல்லி, வேம்பு, மாதுளை, பன்னீர், குமிழ் போன்ற மரங்களில் வகைக்கு நான்கைந்து என்று தேர்ந்தெடுத்து மொத்தம் ஒரு 75 மரங்கள் நடுகிறோம். மேலும் ஒரு 20 நட இடமும் உள்ளது. ஆக என் கனவின் முதல் படியை என் அப்பாவின் துணையுடன் எடுத்து வைத்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். காங்க்ரீட் காடுகளினால் மூச்சுத் திணறும் நகர்ப்புறத்தின் நடுவே ஒரு தனித்த பசுமையாக சின்ன ஒரு கானகம் அமைப்பது என் கனவு, நிறைவேற ஆண்டவன் புண்ணியத்தில் முதல் சில படிகள் நிறைவேறியுள்ளன. ரியல் எஸ்டேட்டாக மாற்றி காசு பார்க்காமல் இப்படி மரம் நடுகிறானே இந்தக் கிறுக்கன் என்ற கேலிக்கு நடுவேதான் இதைச் செய்து வருகிறேன். இந்த திட்டம் நிறைவேறினால் இதை சில விலை குறைவான இடங்களில் ஒத்த சிந்தனையுள்ள நண்பர்களுடன் சேர்ந்து நிலம் வாங்கி இந்த அனுபவத்தை துணையாகக் கொண்டு மேலும் பல குறு வனங்களை உருவாக்கும் எதிர்காலத் (பத்து வருடத்தில்) திட்டமும் உள்ளது. ஆர்வமுள்ள நண்பர்களிடத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நில மதிப்பு பல மடங்கு கூட வேண்டும் வீடு கட்டி விற்க வேண்டும் என்ற நினைப்புள்ளவர்களைத் தவிர்த்து விட்டு நம்மால் ஒரு சிறிய வனத்தை உருவாக்க முடியும் வேண்டும் என்று நினைப்பவர்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன்
அன்புடன்
ராஜன்