ஒவ்வொரு வருஷமும் சிஎன்என் தளம் ஹீரோக்கள் என்று சமூக சேவை செய்யும் சிலரை ஷார்ட்லிஸ்ட் செய்யும். இந்த முறை மதுரையை சேர்ந்த 29 வயது நாராயணன் கிருஷ்ணன் இந்த லிஸ்டில் இருக்கிறார்.
கிருஷ்ணன் தெருவிலே அலையும் மனநிலை பிறழ்ந்த, முதியவர்களுக்கு எட்டு வருஷமாக உணவளிக்கிறார். மதுரையின் பாலங்களுக்கு அடியே இப்படிப்பட்டவர்களைத் தேடித் தேடிப் பிடித்து உணவளிக்கிறார். ஒரு நாளைக்கு சராசரியாக நானூறு பேருக்கு சாப்பாடு போடுகிறாராம். பணம்? அவருடைய அக்ஷயா ட்ரஸ்டுக்கு வரும் நன்கொடைகள், தனக்கு சொந்தமான ஒரு வீட்டின் வாடகை, அப்பா/அம்மாவின் ஆதரவு இவைதான் ஆதாரம். அக்ஷயா ட்ரஸ்டிலிருந்து அவருக்கு சம்பளம் எதுவும் கிடையாது.
அவர் உதவியால் சாப்பிடுபவர்கள் பலருக்கு அவர் யாரென்று தெரியாது, நன்றி என்று கூட சொல்ல முடியாது. பல சமயம் அவரிடம் கோபப்படுவார்களாம். சாதாரணமாக உதவி செய்யும்போது நன்றி என்று சொல்லும் ஒரு வார்த்தை நம்மை கொஞ்சம் ஊக்கப்படுத்தும். அது கூட இல்லை!
முடிந்தால் பண உதவி செய்யுங்கள். இல்லாவிட்டால் சிஎன்என் தளத்துக்கு சென்று அவருக்கு ஓட்டாவது போடுங்கள். அவர் வென்றால் இன்னும் கொஞ்சம் நன்கொடைகள் கிடைக்கலாம்!
தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்
தொடர்புடைய சுட்டிகள்:
அக்ஷயா ட்ரஸ்ட்
சிஎன்என் தளத்தில் நாராயணன் கிருஷ்ணன்
அக்டோபர் 30, 2010 at 2:00 மு.பகல்
இந்திய ஹீரோ என்று போட்டதற்கு ஒரு ராயல் சல்யுட்
அக்டோபர் 30, 2010 at 3:17 மு.பகல்
ஆகா, எந்திரன் பதிவைப் போல எல்லா நண்பர்களும் இதனை எழுதுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
படைப்பாளி, ஹரி என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
நன்றி நண்பரே@.
அக்டோபர் 30, 2010 at 4:08 மு.பகல்
ஆம். விருட்சதிலும் இது ஏற்கனவே வந்திருக்கிறது.
கூடுதல் செய்தி. இவர் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் chef . தனது swiz வேலைக்கு செல்லுமுன் ஊருக்கு சென்று விடை பெற்று வர சென்ற இடத்தில், ஒரு மன நிலை பிரண்ட முதியவர் தனது மலத்தையே உணவாக உண்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து தன் வேலையை உதறி முழு நேரமாக இதைச் செய்கிறார்.
அக்டோபர் 30, 2010 at 12:31 பிற்பகல்
ம்ம்..எங்க ஊர்காரர்..அவருக்கு ஆரம்பத்துலையே…ஓட்டு போட்டுடேன்..அவரது மனிதாபிமானம் பாராட்டுதளுக்குரியது…
அக்டோபர் 30, 2010 at 9:08 பிற்பகல்
விருட்சம், கிருஷ்ணனைப் பற்றி பதிவு எழுதியது சந்தோசம். இன்னும் நிறைய பேர் எழுத வேண்டும்! ஜெகதீஸ்வரன்/ரஜின், நீங்கள் எழுதிவிட்டீர்களா? கார்த்திக், மறுமொழிக்கு நன்றி!