எனக்கு எப்போதும் வரலாற்றைப் பற்றி படிப்பதில் ஒரு குழப்பம் உண்டு. ஒரே கால கட்டத்தில், ஆனால் வேறு வேறு தளத்தில் வாழ்ந்த வரலாற்று மனிதர்களை இனம் கண்டு கொள்வது. சிவாஜியும், சமர்த்த ராமதாசும், அவுரங்கசீப்பும் சம காலத்தவர்கள் என்பதை யாரும் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் சிவாஜி இங்கே வளர்ந்துகொண்டிருந்த காலத்தில் ஐரோப்பாவில் என்ன நடந்தது? யார் அந்த காலத்து முக்கிய ஐரோப்பிய கணித வல்லுநர்? ஃபெர்மத்தா (Fermat), நியூட்டனா, ஆய்லரா (Euler) இல்லை வேறு யாராவதா? சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் காலத்தில் கவர்னர் ஜெனரல்கள் வந்தாயிற்றா இல்லையா?
எனக்கு இந்த முத்துசாமி தீட்சிதரின் காலம் பற்றிய கட்டுரை ஒரு வரப்ரசாதமாக இருக்கிறது. படித்தவுடன் தெளிவாக புரிந்துவிடுகிறது. தீட்சிதர் ராபர்ட் கிளைவ் காலத்துக்கு பிற்பட்டவர். கட்டபொம்மன், ஹைதர் அலி, திப்பு சுல்தான் போன்றவர்கள் அவரது சம காலத்தவர். அவர் பிறந்த பத்து ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா சுதந்திரம் அடைந்தது. அவருடைய வாழ்வின் நடுவின் ஜார்ஜ் வாஷிங்க்டன் ஜனாதிபதி ஆகி இருக்கிறார், காஸ் (Gauss) புகழ் பெற்ற கணித பேப்பர்களை எழுதி இருக்கிறார், கட்டபொம்மனுக்கு தூக்கு.
சுவாரசியமான கட்டுரை, படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: வரலாறு
தொடர்புடைய சுட்டிகள்: ஹிந்து சுட்டி
அக்டோபர் 26, 2010 at 6:01 மு.பகல்
nandri
அக்டோபர் 26, 2010 at 6:33 மு.பகல்
இந்த குழப்பங்கள் எனக்கும் கூட தோன்றுவதுண்டு.ஒரு குறிப்பிட்ட கால நிகழ்வுகளின் போது அதே கால கட்டங்களில் பிற தளங்களில் நிகழ்ந்தவைகளையும் சேர்த்து தொகுத்தால் மட்டுமே இவைகள் எளிமையாகும்.
அக்டோபர் 26, 2010 at 4:59 பிற்பகல்
கார்த்திக், காக்கு மாணிக்கம், தீட்சிதர் பதிவுக்கு மறுமொழி எழுதியதற்கு நன்றி! மாணிக்கம் என்னைப் போலவே குழம்பும் இன்னொருவரைப் பார்ப்பதில் மகிழ்ச்சி!
அக்டோபர் 27, 2010 at 12:51 மு.பகல்
தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிவாஜி வாசிக்கும் ஆங்கில நோட்ஸ் தீட்சிதருடையது.
அவரைப் பற்றி நான் ஒரு பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளேன்.
“”என்னளவிலே சாகித்யம்னா கவிதை… சங்கீதம்னா இசை… அம்புட்டுத்தான்… முத்துசாமி தீட்சிதர் கிருதி எல்லாம் அவசரத்துக்கு பிடிச்ச கொழுக்கட்டை.ஏதாவது ஊருக்குப் போக வேண்டியது. அங்கே நிச்சயம் கோவில் இருக்கும். உடனே பாடு. இந்த ஊர்… இந்த திசையில் இருக்கு… அம்பாள் பெயர் அது. இத்தனை கை… இந்தக் கையிலே இந்த ஆயுதம். இந்தப் பூ… இந்த நிற உடுப்பு… இந்த ராட்சஸனை வதம் பண்ணினாள். இவளைப் பூஜித்தால் இந்த தோஷம் போகும். இப்படி அடுக்கி குருகுஹான்னு சாப்பா வச்சு முடிச்சுட்டு அடுத்த ஊருக்கு கிளம்பிடுவார்.”
அதாவது அவரது கிருதிகளின் ஒரு மேக்ரோ கண்ணோட்டம்தான் அது. என்ன, ஒரே ஒரு விஷயம் விட்டு விட்டார். எல்லா கிருதிகளுக்கும் அவரே ராகம் போட்டிருப்பார், அந்த ராகத்தின் பெயரும் கிருதியில் வந்து விடும். அப்படித்தான் “மாயே” என ஆரம்பிக்கும் கிருதி தரங்கிணி ராகம் என தெரிந்து கொள்ளலாம். மற்றப்படி இதை விட சுருக்கமாக யாரும் எழுத இயலாது. இதைப் போலவே ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள் பாடல் பெற்ற தலங்களுக்கும் இம்முறையிலேயே பாட்டு போட்டிருப்பார்களோ? உதாரணத்துக்கு திருமங்கை ஆழ்வார் திருவல்லிக்கேணி வந்த சமயம் கோவில் தல புராணத்தை அறிந்து பாடல்கள் இயற்றியிருப்பார் என கொள்ளலாமோ?
மேலே சொன்ன பத்தியை எனது மைத்துனியிடம் படித்து காட்டியபோது, சென்னை தொலைக்காட்சியில் தயாரிப்பளராக பணி புரியும் அவர் தீட்சிதர் பற்றி மேலும் கூறினார். அவர் சென்னையில்தான் வாசம் செய்தாராம், பத்தொன்பதாம் நூற்றாண்டில். வெள்ளையர்களுடன் ஏற்பட்ட பழக்கம் ஆங்கில இசையின் தாக்கமும் அவருக்கு ஏற்பட்டதாம். அவர் போட்ட இங்கிலீஷ் நோட்ஸ்களைத்தான் தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிவாஜி கணேசன் வாசிக்க, வெள்ளையர்கள் நடனம் ஆடுவதாக காட்சி அப்படத்தில் அமைத்திருப்பார்கள். கூர்ந்து கவனித்தால் சி.ஐ.டி. சகுந்தலா குரூப் டான்சர்களில் ஒருவராக வந்திருப்பதை பார்க்கலாம்”.
பார்க்க: http://dondu.blogspot.com/2008/09/blog-post_30.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
அக்டோபர் 28, 2010 at 7:37 மு.பகல்
இதையும் பாருங்கள்.
http://www.hindu.com/mp/2008/12/30/stories/2008123050300100.htm
கன்னிகேஸ்வரன் தீக்ஷிதர் பற்றி பல ஆய்வுகள் செய்துள்ளார். சில வருடங்களுக்கும் முன்னர் அவர் ஹ்யூஸ்டன் நகரில் கொடுத்த லெக்-டெம்மில் கலந்து கொண்டேன். தீக்க்ஷிதரின் வாழ்க்கை பிரம்மிக்க வைக்கும்.
- சிமுலேஷன்
அக்டோபர் 28, 2010 at 8:59 மு.பகல்
நமது இசைக்கச்சேரிக்கு வயலினை பக்கவாத்தியமாகச் சேர்த்ததும்; தீட்ஷிதர் தான் எனப் படித்ததாக ஞாபகம் தெளிவுபடுத்தவும்.
ஆங்கிலக் கட்டுரையை ஆறுதலாகப் படிக்கவேண்டும். சுட்டிக்கு நன்றி!
அக்டோபர் 30, 2010 at 9:05 பிற்பகல்
தீட்சிதர் பற்றிய விவரங்களுக்கு நன்றி டோண்டு, ஜெகதீஸ்வரன், ஜோகன் பாரிஸ்!