தீர்ப்பு எனக்கு புரியவில்லை என்பதை சொல்லத்தான் வேண்டும். படித்த வரையில் ஒரு நீதிபதி இங்கேதான் ராமன் பிறந்தார் என்று சொல்வது போல இருக்கிறது. (ராமன் இங்கேதான் பிறந்தான் என்று மக்கள் நம்புகிறார்கள் என்றல்ல, ராமன் இங்கேதான் பிறந்தான் என்று). இன்னொரு நீதிபதி கோவில் இடிக்கப்படவில்லை, ஏற்கனவே இருந்த இடிபாடுகளின் மீது மசூதி கட்டப்பட்டது என்கிறார். இது இவருக்கு எப்படித் தெரியும் என்று புரியவில்லை. ஒருவர் அது மசூதியே இல்லை, ஏனென்றால் அது இடிபாடுகளின் மீது கட்டப்பட்டிருக்கிறது என்கிற மாதிரி இருக்கிறது. இத்தனை நாள் இது முஸ்லிம் அமைப்புக்கு சொந்தம் என்பதற்கு documentation இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தேன், இல்லை என்கிறார்கள். அப்படி எந்த documentation-உம் இல்லை, இது புறம்போக்கு நிலம் என்றால் இத்தனை நாள் கையகப்படுத்துவதில் ஹிந்து அமைப்புகளுக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. அப்புறம் நிர்மோஹி ஆகாராவாம், இதுவும் ஹிந்து அமைப்புதானே, இதற்கு மட்டும் என்ன ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் என்றும் புரியவில்லை.
எது எப்படி இருந்தாலும் கோர்ட்டில் கேஸ் முடிந்தது சந்தோஷம். தீர்ப்பு பிடிக்கிறதோ இல்லையோ அதை ஏற்றுக் கொள்வதுதான் (இல்லை அப்பீல் செய்வது) சரியான அணுகுமுறை.
தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டு நடப்பு
தொடர்புடைய சுட்டிகள்: அயோத்தி அகழ்வாராய்ச்சி முடிவுகள்
அக்டோபர் 1, 2010 at 12:51 மு.பகல்
லக்னோ, செப்.30, 2010: அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாக பிரிக்கப்பட வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம் என்ற ராமஜென்ம பூமி – பாபர் மசூதி வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ கிளை இன்று தீர்ப்பு வழங்கியது.
அயோத்தி உரிமை தொடர்பான நான்கு வழக்குகளில் நீதிபதி அகவர்வால், எஸ்.யு.கான் மற்றும் டி.வி.ஷர்மா ஆகியோர் அடங்கிய சிறப்பு பெஞ்ச் இன்று தீர்ப்பளித்தது. மூன்று நீதிபதிகளின் தீர்ப்பும் தனித்தனியே வெளியிடப்பட்டன.
நீதிபதிகள் வெளியிட்ட தீர்ப்பின் விவரம் குறித்து ரவி ஷங்கர் பிரசாத் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் லக்னோவில் நிருபர்களிடம் தெரிவித்ததன் முக்கிய அம்சங்கள்:
* சர்ச்சைக்குரிய நிலத்தை இந்துக்களும் முஸ்லிம்களும் பிரித்துக்கொள்ள வேண்டும்.
* சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாக பிரிக்க வேண்டும். (1/3 என்ற விகிதம்)
* மூன்றாக பிரிக்கப்படும் நிலத்தின் ஒரு பகுதி – இந்து சாதுக்களின் நிர்மோகி அகாரா அமைப்புக்கும், இரண்டாவது பகுதி – சன்னி வக்ஃப் வாரியத்துக்கும், மூன்றாவது பகுதி – இந்து மகா சபைக்கும் பிரித்து வழங்கப்பட வேண்டும்.
* நிலத்தை பிரிக்கும் நடவடிக்கை, மூன்று மாதங்களுக்குள் தொடங்கப்பட வேண்டும்.
* அவ்வாறு, மூன்றாக பிரிக்கப்படும் வரை தற்போதை நிலை தொடர வேண்டும்.
* சர்ச்சைக்குரிய நிலத்துக்கு உரிமை கோரிய நிர்மோகி அகாரா அமைப்பு மற்றும் சன்னி வஃபு வாரியத்தின் மனுக்கள் தள்ளுபடி.
* சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் பிறந்தது உண்மையே என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.
* 1949 டிசம்பர் 22-ல் சர்ச்சைக்குரிய இடத்தில் வைக்கப்பட்ட ராமர் சிலைகள் அகற்றப்படக் கூடாது.
* சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம், இரண்டு சமூகத்துக்குமே சொந்தம் என்றார், நீதிபதி எஸ்.யு.கான்.
அக்டோபர் 1, 2010 at 3:05 மு.பகல்
சரியான மொக்கை பதிவு
அக்டோபர் 1, 2010 at 4:36 மு.பகல்
ஆர்.வி, தமிழ்ஹிந்து தளத்தில் இதுபற்றி வந்துள்ள கட்டுரை படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் – http://www.tamilhindu.com/2010/10/ayodhya-verdict-and-a-stigma-removed/.
இதில் தீர்ப்பு தெளிவாகவே விளக்கப் பட்டுள்ளது.
// அப்புறம் நிர்மோஹி ஆகாராவாம், இதுவும் ஹிந்து அமைப்புதானே, இதற்கு மட்டும் என்ன ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் என்றும் புரியவில்லை. //
இது மும்முனை வழக்கு. இரண்டு இந்து தரப்புகள், ஒரு முஸ்லிம் தரப்பு.
இடிக்கப் பட்ட கும்மட்டங்களுக்கு கீழுள்ள பகுதிக்கு உரிமை கோரி இந்துக்கள் சார்பாகப் போட்ட வழக்குகள் எல்லாம் ராம் லல்லாவின் பெயரால் தேவகி நந்தன் அகர்வால் போட்ட வழக்கில் ஒன்றிணைக்கப் பட்டன. இங்கு party ராம் ஜன்மபூமி நியாஸ்.
கும்மட்டங்களுக்கு வெளியே உள் முற்றத்தில் (inner courtyard) ராம் சபூத்ரா & சீதா கீ ரசோயி ஆகிய வழிபாட்டு மேடைகளை 200 ஆண்டுகளுக்கு மேலாக நிர்வகித்து வருவது நிர்மோஹி அகாரா என்ற இந்து மடம். உள்முற்றத்திற்கும் வெளி முற்றத்திற்கும் (outer coutryard) சேர்த்து உரிமை கோரி அவர்கள் வழக்குப் போட்டார்கள்.
சுன்னி வக்ஃப் போர்ட் இந்த மூன்று பகுதிகளுமே தங்கள் உரிமை என்று கேட்டு வழக்குப் போட்டது. அந்த பெடிஷன் டிஸ்மிஸ் செய்யப் பட்டுவிட்டது. மூன்றில் ஒருபங்கான வெளிமுற்றம் அவர்களுக்கு வழங்கப் படவேண்டும் என்று தீர்ப்பு சொல்கிறது.
அக்டோபர் 1, 2010 at 6:19 பிற்பகல்
ஜடாயு, விளக்கம் உதவியாக இருந்தது, நன்றி!
அக்டோபர் 1, 2010 at 5:06 மு.பகல்
இந்த இடம் குறித்த பாகப் பிரிவினையில் ஆளுக்கு ஒரு பங்கு என்ற இந்தத் தீர்ப்பில் யார் இந்த அமைப்புகள் என்ற கேள்வி எழுந்தது.
ஜடாயுவின் பதிலில் இது கொஞ்சம் புரிகிறது.
நன்றி
அக்டோபர் 1, 2010 at 5:17 மு.பகல்
பாபர் மசூதியா ,ராமனின் அவதார தளமா என்பது இன்றைக்கு தேவையில்லாத பிரச்சனை.இரண்டு பிரிவிலும் கோடிக்கணக்கான மக்கள் வறுமையில் வாடி மிருகங்களைவிட கேவலமான வாழ்க்கை நடத்துகின்றனர்.மூன்று நேர உணவும்,இருக்க இடமும் உள்ள ஒவ்வொரு இந்தியனும் இதுகுறித்து வெட்கப்படவேண்டும்.2G spectrum ‘commanwealth விளையாட்டு போட்டி ஊழல் போன்ற உண்மையான பிரச்சனைகளில் இருந்து நம்மை திசை திருப்ப அயோத்தி போன்றவைகள் நம்முடைய ஆட்சியாளர்களுக்கு உதவியாயிருக்கும்.tailpiece :rs .3500 /கொடுத்து விடியற்காலை 4 -30 மணி காட்சி எந்திரன் படத்திற்கு போக தமிழ்சாதி துடியா துடிக்குது.
அக்டோபர் 1, 2010 at 5:24 மு.பகல்
எந்திரனைப்பற்றிய கடைசி வரி பற்றி.
ரொம்ப நல்ல விசயம். ஒருத்தனுக்கொருத்தன் சாமி பேரைச்சொல்லி குத்திக்கொண்டு சாவதை விட, பேசாமல் கேளிக்கை நிறைந்த ஒரு பொழுது போக்குச்சித்திரத்தைப் பார்க்கும்
‘தமிழ் சாதி’ எவ்வளவோ நல்ல சாதி.
வாழ்க தமிழ் சாதி. மத வெறியில்லா சாதி.
Cinema is a harmless entertainment. Through RV’s forum, I send my congradulations to Tamilians living in TN!
அக்டோபர் 1, 2010 at 5:20 மு.பகல்
இது மூவர் அடங்கிய பெஞ்சு. அதில் இருவர் மட்டுமே இப்பிரி்வினைகள் சரியாகும் என தீர்ப்பளித்தனர். அதன்படி, மூன்றில் ஓரிடம் இசுலாமியருக்கும் மற்ற இருவிடங்கள் மற்றவிரு இந்துப்பிரிவுகளுக்கும் போய்ச்சேரவேண்டும்.
மூன்றாம் நீதிபதி – சர்மா – அனைத்து இடமும் ராம ஜன்ம பூமியே, எனவே முழுவதுமாக இந்துக்களுக்குப்ப்போய்ச்சேர வேண்டும் என தீர்ப்பு எழதிய பின் ரிடையர்டு ஆகி விட்டார். இவர் தீவிர அனுமான் பக்தர் என்பதும் இங்கு சொல்லியாக வேண்டும்.
ஆக, மெஜாரிட்டியின் படி தீர்ப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
கதை முடியவில்லை; அது உச்ச நீதிமன்றத்தாலே முடிவடையும் அதுவும் சட்டம் என்று பார்க்கையிலேயேதான்.
அக்டோபர் 1, 2010 at 5:43 மு.பகல்
(ராமன் இங்கேதான் பிறந்தான் என்று மக்கள் நம்புகிறார்கள் என்றல்ல, ராமன் இங்கேதான் பிறந்தான் என்று).
No..no.
The Judge said: ‘According to the belief of Hindus, Lord Ram was born here’.
எனவே நீதிபதி தன் சொந்த கருத்தாக ‘ராமர் பிறந்த இடம்’ இது என்று சொல்லவில்லை.
But the moot point is:
Why does he say that? Dont we know that? It is not according to any incontrovertible and tangible evidence but according to just faith and belief?
Evan a Christian and a Muslim take that.
It is a shame for Hindus that a Judge should make it a part of judgment that Lord Ram was born here.
Do Hindus wait for such judgement to bolster and buttress their belief and faith?
Christians or Muslims dont look to courts and Judges for their strengthening of religion and belief?
If a Hindu celebrates over such a statement, he demeans and humiliates his religion.
அக்டோபர் 1, 2010 at 5:51 மு.பகல்
ஆறாயிரம் வருட உரியின நம்பிக்கையை, இரெண்டே இரண்டு பேர் உலகின் இவ்வளவு மக்கள் தொகைக்கு காரணமாகி விட்டதான நம்பிக்கையை, உலகம் தட்டை என்பதயும் சேர்த்து நம்பும் போது அறிவியல் ஆதரகளைக் கூடாத எடுத்துக் கொள்ளாதவர்கள் இப்படி எல்லாம் பதில் சொல்லுவது ஓன்று ஆச்சர்யம் இல்லை
அக்டோபர் 1, 2010 at 7:37 மு.பகல்
தமிழை இவ்வளவு கடினமாக எழுத முடியும் என்று இப்போதுதான் எனக்குத் தெரிகிறது.
என்ன சொல்ல்வருகிறீர்கள்?
பொழிப்புரை please.
அக்டோபர் 1, 2010 at 10:30 மு.பகல்
எழுத்துப் பிழைகள் இருந்தாலும், உங்களுக்கு இது புரியவில்லை என்பதை நான் நம்பவில்லை. மேலும் இதற்கான பதிலை இந்தப் பதிவில் எதிர்பார்க்கவும் இல்லை.
அக்டோபர் 1, 2010 at 5:47 மு.பகல்
virutcham
1 October 2010 at 11:11 am
நான் இந்துத் தலத்தில் வைத்த மறுமொழியை இங்கும் தருகிறேன்.
இடம் இரெண்டில் ஒரு பங்கு இந்துக்களுக்கு வந்தது என்பதை விட எனக்கு இதில் முக்கியமான வெற்றியாகத் தெரிவது அது ராம ஜன்ம பூமி என்ற தீர்ப்பு. இது பெரும்பான்மை மக்களின் நம்பிக்கைக்கான தீர்ப்பு. ராமர் ஒரு கற்பனைப் பாத்திரம் என்று பெருவாரி மக்களின் நம்பிக்கை மேல் சேறு வாரி இறைத்தவர்கள் இப்போது என்ன செய்வார்கள் ? சேது சமுத்திர விவகாரம் தொடர்பாக அம்பிகா சோனி ராமாயணம் ஒரு நிகழ்வு அல்ல என்று அறிக்கை எல்லாம் தாக்கல் செய்து பின் பின்வாங்கியதை இங்கே நினைவு கூறுகிறேன்.
இப்போ சில கேள்விகள்.
இந்த பாகப் பிரிவினை என்பது சில தனியார் அமைப்புகளுக்கு போவது சரியா? இந்துக்களுக்கு சொந்தம் அல்லது முஸ்லிம்களுக்கு சொந்தம் என்று எதுவானாலும் அது மொத்த இந்துக்கள் மொத்த முஸ்லிம்களைத் தானே குறிக்கும். அது எப்படி சில அமைப்புகளுக்கு செல்ல முடியும்? இதை யாராவது விளக்குங்கள். இதில் எனக்கு மொத்தமும் வேண்டும் என்று மேல் முறையீடுக்கு வேறு செல்ல இருக்கிறார்கள்.
அடுத்து அங்கே கோவில் இருந்தது நிரூபணம் ஆனது புரிந்து கொள்ளக் கூடியது. ஆனால் அந்த இடம் சரியா ராமர் பிறந்த இடம் தான் என்று சொல்ல எந்த ஆதாரம் முன் வைக்கப் பட்டது?
அக்டோபர் 1, 2010 at 6:07 மு.பகல்
நல்ல வேளை. நாடு முழுதும் என்ன நடக்குமோ என்று பயந்தோம். “தீர்ப்பை மாத்திச் சொல்லு” என்று யாரும் சொல்லவில்லை.
சகாதேவன்
அக்டோபர் 1, 2010 at 7:44 மு.பகல்
“இடம் இரெண்டில் ஒரு பங்கு இந்துக்களுக்கு வந்தது என்பதை விட எனக்கு இதில் முக்கியமான வெற்றியாகத் தெரிவது அது ராம ஜன்ம பூமி என்ற தீர்ப்பு. இது பெரும்பான்மை மக்களின் நம்பிக்கைக்கான தீர்ப்பு. ராமர் ஒரு கற்பனைப் பாத்திரம் என்று பெருவாரி மக்களின் நம்பிக்கை மேல் சேறு வாரி இறைத்தவர்கள் இப்போது என்ன செய்வார்கள் ? சேது சமுத்திர விவகாரம் தொடர்பாக அம்பிகா சோனி ராமாயணம் ஒரு நிகழ்வு அல்ல என்று அறிக்கை எல்லாம் தாக்கல் செய்து பின் பின்வாங்கியதை இங்கே நினைவு கூறுகிறேன்.”
I refer only to this type of thinking.
You have belief and you want a judge who was born in 1952 to declare that ‘Here was born Lord Ram”
அவமானமாக தெரியவில்லையா?
Do you want your belief to be made ‘honourable’ by certain human beings the judges of court?
Not only that. You are humilating your gods and goddesses too because you need the crutches of courts statements to prove that such gods and goddesses are true.
அக்டோபர் 1, 2010 at 10:05 மு.பகல்
//You have belief and you want a judge who was born in 1952 to declare that ‘Here was born Lord Ram”
அவமானமாக தெரியவில்லையா?//
இல்லை. ஏன் ஏனென்றால் நான் சொன்னது நம்பிக்கையாளர்கள் பற்றியல்ல. ராமன் கற்பனை பாத்திரம் என்று சொல்லுபவர்கள் நோக்கி.
இந்துக்களின் நம்பிக்கையை நீதிபதி தீர்ப்பில் சொல்லி இருக்கிறார் என்பதைத் தான் நானும் சொன்னேன். அவர் தீர்ப்பு சொன்னதை வைத்து நம்பப் போகிறார்கள் என்றுஅல்ல
//He based it on the belief and faith of all Hindus.//
உங்கள் வாதத்தின் முரண்பாடி இதில் தெரிகிறது.
அக்டோபர் 1, 2010 at 10:50 மு.பகல்
No conflict.
I point out the pathetic reliance of Hindus on human beings living today to lend authority and credence to their belief.
hey..if the judge had said Lord Ram was not born there, your belief is in a shambles…!
I dont refer to Judge Agarwal’s statement that his statement that Lord Ram was born here was based on belief, not tangible evidence.
But you take the two together.
You naively believe that the court has decided it once for all – what, the religious question whether Lord Ram was born there or not.
The dispute is basically non-religious so far as Muslims are concerned. Today, it is said that the mosque was built in violation of Islamic laws. Not you, but muslims say tht.
Then what is the problem for them?
It is property that they want. Basically, a property dispute for muslims and religious dispute for hindus.
You are exhuberant that your belief has been vindicated.
I mock at your behaviour asking: Do you need vindication from human beings living today for your gods and goddesses? Shame!
அக்டோபர் 1, 2010 at 10:55 மு.பகல்
இல்லை. ஏன் ஏனென்றால் நான் சொன்னது நம்பிக்கையாளர்கள் பற்றியல்ல. ராமன் கற்பனை பாத்திரம் என்று சொல்லுபவர்கள் நோக்கி.’
Virutcham
உங்களது வெகுளித்தனம் இங்கேயும் பளிச்சிடுகிறது!
ராமர் ஒரு கற்பனை என்று சொல்பவன், நீதிபதி ”இல்லை. இராமர் உண்மைதான்” என்றவுடன் ஏற்றுக்கொள்வானா?
75 லட்சம் ஆண்டுகளுக்கு முன் திரேயத காலத்தில் வாழ்ந்தவர் இராமர். அதை நீங்கள் நம்பலாம். அது நீதிபதியே சொல்லிவிட்டார் என குதூகலிக்கலாம்.
மற்றவர் செய்வாரா? மாட்டவே மாட்டார். நீதிமன்ற தீர்ப்பு உங்களுக்கு ஒரு கிலுகிலுப்பை. அவ்ர்களுக்கு ஒரு நகைச்சுவை மட்டுமே.
மேலும், இராமன் உண்மையென்று நீதிபதி சொல்லவில்லை. இராமர் உண்மையென்று இந்துக்கள் நம்புகிறார்கள் என்று மட்டுமே சொல்லியிருக்கிறார்….!
அக்டோபர் 1, 2010 at 7:46 மு.பகல்
ஆனால் அந்த இடம் சரியா ராமர் பிறந்த இடம் தான் என்று சொல்ல எந்த ஆதாரம் முன் வைக்கப் பட்டது?
I have replied to the question which was also raised in the main blogpost of RV.
The Judge did not base his decision namely, Lord Ram was born here, on any tangible proof.
He based it on the belief and faith of all Hindus.
அக்டோபர் 1, 2010 at 7:55 மு.பகல்
“இந்த பாகப் பிரிவினை என்பது சில தனியார் அமைப்புகளுக்கு போவது சரியா? இந்துக்களுக்கு சொந்தம் அல்லது முஸ்லிம்களுக்கு சொந்தம் என்று எதுவானாலும் அது மொத்த இந்துக்கள் மொத்த முஸ்லிம்களைத் தானே குறிக்கும். அது எப்படி சில அமைப்புகளுக்கு செல்ல முடியும்? இதை யாராவது விளக்குங்கள். இதில் எனக்கு மொத்தமும் வேண்டும் என்று மேல் முறையீடுக்கு வேறு செல்ல இருக்கிறார்கள்.”
You are asking for the impossible.
Only for catholics, there is a single leader in the whole world: THE POPE.
If there is a dispute between the catholics and others in a court of India, a suit can be filed on behalf of the whole population of Indian catholics. There are no sects and subsects among them. All Cardinals and Bishops of Catholics are appointed by the Pope. and they defend the case in court. If a decision comes in their favour, all catholics equally enjoy the benefits.
Not so with muslims and hindus, more so, with hindus. They dont have a single organisation. Among muslims, they have imam of Delhi but he was not supported by all muslims. Among Hindus, VHP, RSS are 2; but every Hindu of India does not followe their leadership. It is for the sake of convenience that the two organisations will be given the title; but that too, will be mired in legal disputes if anyone comes up to question that. But no one. Because these orgns have violent followers – some paid some instigated.
As things stand, they will enjoy all the lucre, just as Government of AP enjoys all the lucre of Tirupati temple. In other words, the Government own it, AP christians and AP muslims also partake the benefit, Becaus the lucre that the government get, is shared.
அக்டோபர் 1, 2010 at 10:36 மு.பகல்
ஒற்றைக் குச்சியில் மேய்க்கப் படும் ஆட்டு மந்தைகளாக இல்லாதது ஆரோக்கியமான விஷயமாகவே எனக்குத் தெரிகிறது
மேலும் இந்தியாவில் ஒரு கத்தோலிக்க அமைப்புக்கு சொந்தமான ஒரு இடம்/விஷயம் எங்கேயோ இருக்கும் போப்பின் உத்தரவின் பேரில் ஏற்கப்படும் என்பது வேறு எதையோ உணர்த்துவது போல் உள்ளது. இதை இங்கே விவாதித்தால் பதிவின் முக்கிய கருத்து திசை திரும்பும் என்பதால் RV இதை ஒரு தனிப் பதிவாக இட்டு நாங்களும் தெளிவு பெற உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்
அக்டோபர் 1, 2010 at 10:59 மு.பகல்
It is you that are diverting it now.
It is you who have raised the question: What are those group of Hindus who stake claim to the propety, whereas there are millions of Hindus here?
I replied: Hindus have no single organisations unlike catholics.
You take it differently. Paranoia!
அக்டோபர் 1, 2010 at 8:08 மு.பகல்
I refer the related article in our blog
http://thiruchchikkaaran.wordpress.com/2010/10/01/ayodhya-past-present-and-future/
அயோத்தி – நேற்று, இன்று , நாளை !
……… பொதுவாக பலரும் இந்த தீர்ப்பை வரவேற்று உள்ளன.
இந்த தீர்ப்பையும் அதற்கான காரணிகளையும் நாம் அனைவரும் சிந்தித்து புரிந்து கொள்ள வேண்டும்.
அக்டோபர் 1, 2010 at 10:51 மு.பகல்
முடிவில்லை என்கிறார்கள். இன்னும் ஒரு நாள் இந்தியாவே வீட்டிற்குல் அடங்கிக் கொண்டிருக்கவேண்டும். அடுத்த உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இன்னும் எத்தனை வருடமோ!
அக்டோபர் 1, 2010 at 1:40 பிற்பகல்
தோண்டி, துருவி தீர்ப்பு சொல்லிவிட்டார்களா!!!
அருந்ததி ராய் எழுதியது போல் இப்படியே தோண்டிக்கொண்டே போனால் ஆதிவாசிகளின் வழிபாட்டுத்தலம் ஏதாவது தட்டுப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!!
அக்டோபர் 1, 2010 at 4:24 பிற்பகல்
இதிலேயேயும் ஓர் பேருணமை இருக்கிறது. இராமர் கோயில் முதலிருந்தது என்கிறவர்கள் அதற்கு முன் என்னவிருந்தது என்று தேடினால், அனைவரும் ஆதிவாசிகளை ஆதிக்கம் செய்தழித்தபின்னரே தங்களை நிலைநாட்டிக்கொண்டார்கள்.
ஆதிவாசிகளே இந்நாட்டின் first claimant.
அக்டோபர் 3, 2010 at 3:23 பிற்பகல்
இந்தியர்கள் இந்தியாவின் பூர்வ குடிகளா?
இப்போது இந்தியாவில் வசிக்கும் மக்கள் இந்தியாவின் பூர்வ குடிகள் அல்ல என்றும், அவர்கள் கைபர் போலன் கனவாய் வழியாக மத்திய ஆசியாவில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் என்றும் கூறப் படுகிறது அல்லவா?
ஆரியர்கள் ருஷியாவிலே இருந்து வந்தார்கள், மத்திய ஆசியாவிலே இருந்து வந்தார்கள், சுவிட்சர்லாந்திலே இருந்து வந்தார்கள் என்கிறார்களே, நல்லா கவனிங்க,
அலெக்சாந்தரைப் போல, பாபரைப் போல ஒரு அரசன் தன் படையுடன் மட்டும் வரவில்லை. முழு சமூகமாக குயவர்கள், தச்சர்கள், நெசவாளர்கள், சலவைத் தொழிளாளிகள், மருத்துவர்கள், சமையல் காரர்கள், பாடகர்கள், புலவர்கள், சேனாதிபதிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட மிகப் பெரிய சமூகம் இடம் பெயர்ந்து உள்ளது என்று கூறப் படுகிரதே,
அப்படியானால் அந்த சமுதாயம் உருவாக பல ஆயிரம் ஆண்டுகள் ஆகியிருக்குமே, அப்படி அவர்கள் சமூகமாக உருவெடுத்த நிலப் பிரதெசம் எது? ருஷியாவா? மத்திய ஆசியாவா? ருஷியாவிலோ, மத்திய ஆசியாவிலோ ஆரியர்கள் பல்லாயிரம் வருட காலம் வாழ்ந்து ஒரு சமூகமாக உருவான வரலாறு, உலக வரலாற்றின் பக்கங்களில் இல்லையே!
நைல் ஆற்று நாகரீகம், மஞ்சள் ஆற்று நாகரீகம், இதை எல்லாம் விட பழைமையான நாகரீகம் சிந்து சமவெளி நாகரீகம் என்றால், அவர்களை 5000 வருடங்களுக்கு முன்பு விரட்டி அடித்ததாகக் கூறப் படும் ஆரிய சமுதாயம், கைபர் போலன் கனவாய் வழியாக வருமுன் சுவிட்சர்லாந்திலே இருந்தார்கள் என்றால், கைபர் போலன் கனவாய் வழியே அந்த சமுதாயம் இந்தியாவுக்குள் நுழையும் வரையிலே, அந்த சமூகத்தின் சுவிட்சர்லாந்து வரலாறு அல்லது ருஷியா வரலாறு அல்லது மத்திய ஆசிய வரலாறு ( 5000 வருடங்களுக்கு முந்தைய வரலாறு), ஏன் பதிவு செய்யப் படவில்லை?
ஆரியர்கள் சுவிட்சர்லாந்திலே அல்லது ருஷியாவிலே அல்லது மத்திய ஆசியாவிலே எப்படி வாழ்ந்தார்கள், ஒரு சமூகமாக உருவானார்கள் என்பது பற்றி ஒரு வார்த்தை கூட உலக வரலாற்றின் பக்கங்களில் இல்லையே?
நைல் ஆற்று நாகரீகம், மஞ்சள் ஆற்று நாகரீகம் போல, ரைன் நதி நாகரீகம் என்றோ, வோல்கா நதி நாகரீகம் என்றோ ஒரு சிறு குறிப்பு கூட இல்லையே?
உலகின் மிகப் பழைமையான இலக்கியங்களில் பலவற்றை உள்ளடக்கிய மொழி அவர்களின் மொழி – அந்த இலக்கியங்களில் இந்தியாவைத் தவிர வேறு நாடுகள் பற்றிய குறிப்பு ஒன்று கூட இல்லையே?
எனவே todays Indians இந்தியர்கள் இந்தியாவின் அச்சு அசலான, ஆதி குடிகள் என்பதை உறுதி செய்ய வேண்டிய அளவுக்கு சாத்தியங்கள் உள்ளன.
அக்டோபர் 2, 2010 at 9:29 மு.பகல்
தீர்ப்பா இது….????. இப்படி ஒரு வழவழா கொழகொழா தீர்ப்பைச்சொல்லவா 60 வருடங்கள் விசாரணை..?. கேள்வி என்ன?. அங்கே பாப்ரி மசூதி கட்டப்படும் முன் கோயில் இருந்ததா இல்லையா?. கோயில் இருந்து அதன்மீதுதான், அல்லது அதை இடித்துவிட்டுத்தான் மசூதி கட்டப்பட்டிருந்தது என்பது நிரூபனமானால் ‘முழு இடமும் இந்துக்களூக்குச் சொந்தம்’. அப்படியில்லாமல் மசூதிக்கு முன் அங்கு கோயில் இருந்ததற்கான தடயம் எதுவும் இல்லையென்றால் ‘முழு இடமும் முஸ்லீகளுக்கு சொந்தம்’ என்பதுதானே சரியான தீர்ப்பாக இருக்க முடியும்..?.
அதை விட்டு விட்டு, “அந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்பதாக இந்துக்கள் நம்புகிறார்கள்” எனபது… அடடா என்ன ஒரு கண்டுபிடிப்பு. இதைச்சொல்ல ஒரு நீதிபதி தேவையா?. அப்படி ஒரு நம்பிக்கை இருப்பதுதான் வடதுருவத்தில் இருக்கும் எஸ்கிமோவுக்குக்கூட தெரியுமே.
இன்னொன்று குழப்பம், அந்த இடத்தை இரு மதங்களுக்கு சொந்தமாக்காமல் மூன்று தனியார் அமைப்புக்களுக்கு சொந்தமாக்கியிருப்பது. தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட இடம் தமிழக இந்துக்களுக்கு சொந்தம் என்பதற்கும், அது காஞ்சி மடத்துக்கு சொந்தம் என்பதற்கும் வித்தியாசம் இல்லையா?.
எது எப்படியோ, நாடு பற்றியெறியாமல், குண்டுகள் வெடிக்காமல், தலைகள் உருளாமல், ரத்த ஆறு ஓடாமல் இருக்க இப்படி ஒரு சொதப்பல் தீர்ப்பை வாசித்த நீதிபதிகளுக்கு ‘அமைதி விரும்பிகள்’ சார்பில் பாராட்டுக்கள்.
மற்ற கோர்ட் தீர்ப்புக்களுக்கு இது ஒரு முன்மாதிரி. இனி யாராவது ஒருத்தன் தன் நிலைத்தை இன்னொருவன் ஆக்ரமித்து விட்டதாக கோர்ட்டுக்குப்போனால், இருக்கவே இருக்கிறது ‘ஆளுக்குப் பாதி’ தீர்ப்பு.
இனி சுப்ரீம் கோர்ட்டில் சொல்லப்போகும் தீர்ப்பைப்பற்றி என் பேரன்தானே விவாதிக்கப்போகிறான். அதுவரை கவலையில்லை.
அக்டோபர் 3, 2010 at 8:04 மு.பகல்
http://wp.me/p12Xc3-140 அயோத்தி, போலி செகுலர்வாதிகளுக்கு ஐயோ தீ போச்சு…. புஸ்ஸ் …
அக்டோபர் 3, 2010 at 5:54 பிற்பகல்
I think it will deepen the divide between hindus and muslims. Muslims have already grown suspicious. This mentality will be exploited by persons, both indian and foreign, to inject the feeling in every muslim as well as other non-hindus that India is for Hindus. Non-hindus will be driven to the wall; because all of them cant look to aboroad. because all of them are converted muslims and chritians and their country is India.
Thus, this controversy is a haystack where the verdit has thrown the match stick.
தீ…புஸ்ஸுன்னு போகலை. இனிமேதான் ஜோரா எரியும். இறுதியில ஆர் தீயை உருவாக்கினாரோ, அவரும் இத்தீயில் மடியத்தான் வேண்டும்.
கண்ணுக்கு கண் என்றால் அனைவரும் குருட்ராகத்தான் வேண்டும் இறுதியில்.
அக்டோபர் 4, 2010 at 6:27 மு.பகல்
@@திருச்சிக்காரன்
நன்றி.
ஆரிய சமூகம் மொத்தமாக மிச்சம் மீதி எதையும் விட்டு வைக்காமல் , அவர்கள் முன்னோர்களின் எறிந்த சாம்பல் முதற்கொண்டு புறப்பட்ட இடத்தில இருந்து மொத்தமாக எடுத்துக் கொண்டு இங்கு வந்து இங்கு இருந்தவர்களை விரட்டினார்கள் என்று சொல்ல ஒரு வெள்ளையன் வந்தால் அது பள்ளியில் பாடமாக வைக்கப் பட்டு அதுவே வேதமாகவும் ஆகி விடும். அப்படி தான் ஆகி விட்டது.
நமது பாரம்பரியத்தை நமது அல்ல என்று கூவிக் கூவிக் கூச்சலிட ஆவணப்படுத்தி உண்மையாக்கி விட தான் எத்தனை ஆர்வம்? வெறும் அல்ப சுயநலத்துக்காக இதைச் செய்ய திரும்ப திரும்பச் செய்ய நிறைய பேர் இருக்கிறார்கள்.
எங்கே இந்துக்களும் முஸ்லிம்களும் கொஞ்சமேனும் ஒத்துப் போய் விடுவார்களோ என்றே பயத்தில் தீ இனிமேல் தான் எரியும் இல்லை தேடித் தேடித் போய் தீ மூட்ட உதவுவோம் என்று கங்கணம் கட்டி புறப்படுகிறார்கள்.
தமிழனுக்கு சுயமாக சிந்திக்கத் தெரியாது என்பது அவனுக்கு பாடமாக கற்றுக் கொடுக்கப் பட்டிருக்கிறது. சிந்திக்க விடாமால் பிறர் சிந்தனையின் வழி பார்க்க பழக்கப் படுத்தி வைக்கும் வரை தான் இலவசங்களில் அரசியலும் மத மாற்றங்களும் சுலபமாக நடத்தமுடியும்
அக்டோபர் 5, 2010 at 5:17 மு.பகல்
மறுமொழி எழுதிய எல்லாருக்கும் நன்றி! என் குழப்பங்களை திருப்பி பதிவாக போடலாம் என்று நினைத்திருந்தேன், ஆனால் தீர்ப்பை முழுமையாக படிப்பது என்பது நடக்கப் போவதில்லை. எனக்கு இருக்கும் குழப்பம் சரியான தகவல் இல்லாததாலா, இல்லை எனக்கு சட்ட நுணுக்கங்கள் தெரியாததாலா என்று ஒரு meta-குழப்பம். மீண்டும் என் எண்ணங்களை பதிவாக எழுத முயற்சி செய்கிறேன்.
அக்டோபர் 6, 2010 at 9:23 மு.பகல்
அயோத்தியில் ராமர் பிறந்தார் என்று ராமாயண காப்பியம் சொல்லுகின்றது..இந்துக்கள் அனைவரும் அதை ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள். இந்துக்களுக்கு அது புனிதமான இடம்…அதுபோல் முஸ்லீமகளுக்கு அந்த இடத்தில் உரிமை கோர உண்மையான காரணம் ஏதும் இருக்கிறாதா..?..ஏன் அவர்கள் விட்டுத்தரக்கூடாது..?