அயோத்தியின் சர்ச்சைக்குரிய ராமஜன்மபூமி-பாபரி மசூதியில் அகழ்வாராய்ச்சி நடந்திருக்கிறது. அங்கே ஒரு கோவிலின் மீதே மசூதி கட்டப்பட்டிருக்கிறது என்று ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. இதைப் பற்றிய கட்டுரையை தமிழ் ஹிந்து தளத்தில் காணலாம். எழுதிய டாக்டர் நாகசாமி ஒரு வரலாற்று நிபுணர். அவர் அங்கே கோவில் இருந்திருக்க வேண்டும், அதன் மேல்தான் மசூதி கட்டப்பட்டிருக்கிறது என்று சொன்னால் அப்படித்தான் இருக்க வேண்டும். அவரது integrity சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது.
இந்த முடிவுகளில் உண்மையான முக்கியத்துவம் முஸ்லிம் அமைப்புகள் மேல் இப்போது ஒரு தார்மீக ரீதியில் அழுத்தம் ஏற்படும் என்பதே என்று எனக்கு தோன்றுகிறது. பல முஸ்லிம் அமைப்புகளும் இந்த மசூதி ஒரு கோவிலின் மேல் கட்டப்பட்டது என்று ஒத்துக்கொள்ள தயாராக இல்லை. அப்படி கட்டப்படவில்லை என்பதை ஒரு தர்ம, நியாய ரீதியான அடிப்படையாக அவர்கள் பயன்படுத்தினர். இனி மேல் அது முடியாது என்பதுதான் இந்த ஆராய்ச்சியின் முக்கியத்துவம் என்றே நான் கருதுகிறேன்.
ஆனால் இந்த முடிவின் சட்ட ரீதியான significance என்ன? நான் வக்கீல் இல்லைதான், ஆனால் இந்த உண்மைக்கு சட்ட ரீதியாக எந்தவிதமான significance-உம் இல்லை என்றுதான் எனக்கு தோன்றுகிறது.
ஐநூறு அறுநூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு அரசு, ஒரு ராஜா அந்த அரசின் சட்ட, நியாய, தர்மப்படி ஒரு கோவிலை இடித்து அங்கே ஒரு மசூதியைக் கட்டினான். அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன என்று “ஹிந்துத்துவவாதிகள்” பல ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது அகழ்வாராய்ச்சியும் அவர்கள் தரப்பை மேலும் வலுவாக்குகிறது. அது பாபரின் அரசு eminent domain என்ற கோட்பாட்டை அதன் சட்ட நியாயங்களுக்கு உட்பட்டு கடைப்பிடித்ததால் உருவான ஒரு நிலை. அதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு பின்னால் இந்தியாவை விட்டு வெளியே போன கோஹினூர் வைரத்தை இனி மேல் ஆங்கிலேய அரசியிடமிருந்து திருப்பி வாங்கமுடியுமா? Statute of Limitations என்று ஒன்று இல்லையா? அந்த “அநீதியை” இன்றைய அரசு சரி செய்ய வேண்டும் என்று வாதிட்டால் சொத்து என்று ஒரு கோட்பாடு உருவாவதற்கு முன்னால் எல்லாம் எல்லாருக்கும் சொந்தம்; இப்போது இருக்கும் சொத்துரிமை அநீதி என்று எல்லாரும் அவர்கள் அவர்கள் பாங்க் கணக்கில் உள்ள பணத்தை அரசிடம் கொடுத்துவிடுவீர்களா? (நான் நிச்சயமாக மாட்டேன்.)
சட்ட ரீதியாக இதைப் பற்றி யாராவது நிபுணர்கள் எழுதினால் என் போன்ற layman-களுக்கு உதவியாக இருக்கும்.
For the record, கோவில் மேல் மசூதி கட்டப்பட்டிருந்தாலும் கட்டப்படாவிட்டாலும் மசூதி இடிக்கப்பட்டது நியாய, தர்ம, சட்ட ரீதியாக பெரும் அநீதி, குற்றம் என்பது என் உறுதியான கருத்து.
தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டு நடப்பு, வரலாறு
தொடர்புடைய சுட்டிகள்: தமிழ் ஹிந்து தளத்தில் டாக்டர் நாகசாமியின் கட்டுரை
செப்டம்பர் 22, 2010 at 6:00 பிற்பகல்
அயோத்தி அகழ்வாராய்ச்சி முடிவுகள்…
அயோத்தியின் சர்ச்சைக்குரிய ராமஜன்மபூமி-பாபரி மசூதி ஒரு கோவிலின் மீதே கட்டப்பட்டிருக்கிறது என்று அகழ்வாராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. இந்த முடிவின் சட்ட ரீதியான significance என்ன?…
செப்டம்பர் 22, 2010 at 8:55 பிற்பகல்
//For the record, கோவில் மேல் மசூதி கட்டப்பட்டிருந்தாலும் கட்டப்படாவிட்டாலும் மசூதி இடிக்கப்பட்டது நியாய, தர்ம, சட்ட ரீதியாக பெரும் அநீதி, குற்றம் என்பது என் உறுதியான கருத்து.//
இதே, இதே தான் என் கருத்தும்.
அதற்கு பின்னால் இருந்த அரசியல்…….:(
செப்டம்பர் 23, 2010 at 2:47 மு.பகல்
சட்டம் என்று பார்த்தால் நம் ஜனநாயக நாட்டில் பெரும்பான்மைக்கு என்ன சட்டம் இருக்கிறது?
மசூதி இடித்தது தவறு என்பதில் நானும் உடன்படுகிறேன். இடித்ததில் அரசியல் கலந்து இருக்கிறது என்பதற்காக அங்கு வாழும் மக்களின் உணர்வுகள் , இது எங்கள் ராம ஜன்ம பூமி என்ற உணர்வுகளை நாம் அலட்சியப்படுத்த முடியாது
நீங்கள் இந்து தளத்தில் எழுதியபடி போராட்டம் எதோ 60 ஆண்டுகளாக நடப்பதாக நினைத்தால் அது தவறு. நானும் சுதந்திரத்துக்குப் பின் இது அரசியல் ஆதாயத்துக்கு ஆரம்பிக்கப்பட்டது என்று தான் நினைத்துக் கொண்டு இருந்தேன். சில வருடங்கள் முன் இந்தியா டுடே விலும் மேலும் சில பத்திரிக்கைகளிலும் கூட வந்ததாக நினைவு, அங்கே அந்தப் போராட்டம் காலம் காலமாக நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. பின்னாளில் அதற்கு அரசியல் கட்சிகள் கை கொடுத்து பின் அது கொஞ்சம் அரசியல் சுய நலத்துக்காக வேறு அவதாரம் எடுத்திருக்க வேண்டும். ஆனால் அங்கே உள்ள மக்களின் உண்மை உணர்வுகள் வெளியில் தெரியும் அரசியல் உணர்வுகளால் நாம் ‘அரசியல்’ என்று முத்திரை குத்தி விட்டோம்.
ஒருவனின் பூர்வாங்க இடம் என்று கருதும் ஒன்றின் முக்கியத்துவம் அவனுக்கு புரியும் அளவு ஊடகங்களின் பார்வையில் பார்க்கும் நமக்குப் புரியாது.
இங்கு கோவில் இருந்தது. ஆனால் சட்டம் இல்லை என்பதால் உனக்கு இல்லை என்று சொல்லுவதை விட இரு தரப்பையும் வைத்து இரு தரப்புக்கும் இசைவான ஒரு முடிவுக்கு வரவேண்டும்
செப்டம்பர் 23, 2010 at 6:23 பிற்பகல்
”அங்கு வாழும் மக்களின் உணர்வுகள் , இது எங்கள் ராம ஜன்ம பூமி என்ற உணர்வுகளை நாம் அலட்சியப்படுத்த முடியாது”
அதாவது உ.பியில் அயோத்தியாவைச்சுற்றி வாழும் மக்களைப்பற்றியா சொல்கிறீர்கள். இந்தியாவின் பிற இந்துக்கள் உணர்வுகள் வேறே என்றா சொல்கிறீர்கள். குழப்பம்.
இந்தியாவில் பிற இந்துக்கள் என்ன நினைக்கிறார்கள் விருச்சம்?
செப்டம்பர் 23, 2010 at 6:27 பிற்பகல்
”இங்கு கோவில் இருந்தது. ஆனால் சட்டம் இல்லை என்பதால் உனக்கு இல்லை என்று சொல்லுவதை விட இரு தரப்பையும் வைத்து இரு தரப்புக்கும் இசைவான ஒரு முடிவுக்கு வரவேண்டும்”
வர முடியவில்லையே ! அதுதானே பிரச்சினை !!
அரசியல்வாதிகள் மேல் எல்லாப்பழியையும் போடுவது ஆசிரியர் எனக்கு நன்றாகச்சொல்லித்தரவைல்லை; எனவே நான் தேர்வில் தோற்றுவிட்டேன் என்பதைப்போல.
கற்ப்னை பண்ணிப்பாருங்கள். அரசியல்வாதிகள் விலகிவிட்டால், இந்துத்துவாக்கூட்டம் விட்டுவிடுமா இதை? இசுலாமியர் தங்கள் மசூதியை இடிக்கவிடுவாரா?
கிடையவே கிடையாது.
இன்னும் கொஞ்சம் யோசித்து வேறு ஏதாவது சொல்லுங்கள். படிக்கலாம்.
செப்டம்பர் 23, 2010 at 4:53 மு.பகல்
பெருமை வாய்ந்த கோவில்களை அழிப்பது உலகெங்கும் நடந்த உண்மை. ஒரு நாட்டின் மன்னன் தன்னுடைய கடவுளுக்காக பெரிய கோவிலை கட்டியிருக்கின்றான் என்றால் அது ஒரு பெரிய வரலாறு ஆதாரமாக இருக்கும். தன்னுடைய புகழ் பல காலம் உயர்ந்து நிற்கும் என்ற எண்ணமும் காரணம். அதனால் படையெடுப்பின் போது, அந்த கோவில்களை அழிப்பதையே பெரும் குறிக்கோளாக வைத்திருந்தார்கள்.
அதையெல்லாம் தவறு என்று சொன்னால், பாபர் மசுதி இடிப்பும் தவறுதான். ஆனால் கோவில்களை அழித்தவுடன் அந்த இடத்தின் தன்னுடைய கடவுளுக்காக மீண்டும் கோவில் எழுப்பும் போது, அவர்களுக்கு தெரியாதா. மற்றொரு படையெடுப்பி்ல் இதுவும் அழியுமென. தெரியும். அப்படி தெரிந்திருந்தால்தான் அவன் அரசன்.
வழக்கில் கோவில் கட்டுவதற்கு சம்மதம் சொல்லி, கோவில் கட்டப்பட்டாலும். எத்தனை காலம் அது நிலைத்திருக்கும் என தெரியவில்லை.
செப்டம்பர் 23, 2010 at 6:38 பிற்பகல்
Jagdish!
We are a democracy since independence. A conscius and a consensuous decision of Indian masses or representatives of Indian masses.
We could have gone for other form, like Pakistan. And made India different. Or at least when Jinna wanted a country for muslims, we could have asked Jinnah to take all muslims with him. We didn’t either.
Because, we chose democracy.
Now, go back to pre independent or ancient India. It was disparate lands of disparate monarchies of various kinds: from benevolent dictators to malevolent monarchs. One of them is Babar or the moghul kings. They did destroy temples to build mosques. But it was their dharma as you have correctly observed.
If monarchy continued today, the dharma practised by such moghuls could be adopted more or less by us, the modern monarchs.
Monarch did not continue. It was thrown away. And even the privy purses taken away.
We are fully a democracy. Our dharma is not to repeat the act of monarchs.
Your solution is a repeat. Adharma.
செப்டம்பர் 24, 2010 at 7:21 மு.பகல்
நான் தர்மத்தையும் அதர்மத்தினையும் பற்றி இங்கு சொல்லவில்லை. விளைவுகளையும், அதன் பின் நடப்பவைகளையும் மட்டுமே குறிப்பிட்டேன்.
இந்துகளுக்கு மற்றவர்களைவிட சகிப்புதன்மை அதிகம். இஸ்லாமியர்கள் முன்வந்தால் அந்த இடத்தில் இரண்டு கடவுள்களுக்கும் ஆலையம் அமைக்கப்படலாம். ஆனால் நடப்பது நம் கையில் இல்லையே.
செப்டம்பர் 23, 2010 at 7:09 மு.பகல்
ஜெகதீஸ்வரன், உண்மை தான்.
இன்று வெற்றிக் களிப்பில் மசூதியை அகற்றி அங்கே கோவில் கட்டினால் நாளை அது இடிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம்.
இரு தரப்பும் ஒத்து வந்து அந்த இடத்தை ஒரு வரலாற்று நினைவுச் சின்னமாக நிறுவி விட்டு வேறு இடத்தில கட்டிக் கொள்ளலாம். வரலாற்று சின்னமாக இருக்கும் ஒரு விஷயம் காலம் காலமாக பலராலும் வந்து பார்க்கப் படும். எல்லா தரப்பு மக்களும் வந்து போவர்.
செப்டம்பர் 24, 2010 at 7:17 மு.பகல்
என்னுடைய கருத்தினை அங்கரித்தமைக்கு நன்றி!
செப்டம்பர் 23, 2010 at 7:58 மு.பகல்
தேசத்தின் ஒருமைப்பாட்டைக் குலைக்கிற வகையில் ஒரு செயல் அமையுமானால், அது சட்டப்படியோ, தார்மீகப்படியோ குற்றம் காணமுடியாத செயலாக இருந்தாலும் கடுமையாகப் பார்க்கப்பட வேண்டியவையே. அதற்காகச் சட்டத்தைத் திருத்துவது கூடத் தவறில்லை.
அதெல்லாம் போகட்டும், ஏற்கனவே காமன் வெல்த் விளையாட்டுக்களிலிருந்து விலகுபவர்களும், அதற்குப் பாதுகாப்பைக் காரணமாகச் சொல்கிறவர்களும் இருக்கும் போது, இந்தத் தீர்ப்பின் விளைவாக (அது யாருக்கு ஆதரவாக இருந்தாலும்)பாதுகாப்புப் பிரச்சினைகள் எதுவும் வராமல் காக்க வேண்டிய பெரும் பொறுப்பும் இந்திய அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.
இது அரசால் மட்டுமே செய்ய முடிந்த காரியம் அல்ல. மத அமைப்புகளும் தங்கள் மதத்தினரை அமைதி காக்கச் சொல்வதோடு, போலிசாருக்கு ஆதரவாக அவர்களுடன் சேர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அதிலும் இருசாராரும் கைகோர்த்து ஒற்றுமையாகச் செயல்பட்டு ஒரு முன்னுதாரணத்தைக் காட்ட வேண்டும்.
நடக்குமா?
http://kgjawarlal.wordpress.com
செப்டம்பர் 23, 2010 at 9:41 மு.பகல்
மீண்டும் அதே பழைய கேள்விகள், பதில்கள், ஊகங்கள்.
மொகலாயர்கள் கைப்பற்றிய அனைத்து பொருள்களும், சொத்துகளும் அப்போது இருந்த இந்து குடிமகங்களுடையது அல்லது இந்து சமூகத்துக்கு சொந்தமானது.
ஆயிரம் ஆயிரம் சொத்துக்களைப் பற்றி குரல் எழுப்பவில்லை. குறைந்த பட்சம், இந்துக்களின் ஒரே ராமர் பிறந்த இடம் என தொன்று தொட்டு கருதப்பட்டு வரும் இடத்தை மீண்டும் திரும்பக் கொடுத்தால் அங்கு ராமர் கோவில் கட்டுவது சரியாக இருக்கும். இதை “மைனாரிட்டி” முஸ்லீம்கள் தாமாகவே முன்வந்து கொடுத்திருக்க வேண்டும். மைனாரிடியை சமமாக பாவித்து மதச்சார்பின்மை கோட்பாடு அரசியல் சட்டத்தில் வைத்தது பெரும்பான்மையினரின் தாராள மனப்பான்மை என்பதை அவர்கள் உணர்ந்து, விட்டுக் கொடுத்திருக்கவேண்டும். இப்போதும் ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை. தீர்ப்பு எப்படி இருந்தாலும் இந்த இடத்தில் ராமர் பிறந்த இடம் என ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நம்பப் படுவதை வைத்து கோவில் கட்டிக் கொள்ளட்டும். ஆனால் இந்தியாவில் உள்ள வெவ்வேறு கோவில்களைப் பற்றி துவக்கி புதிய பிரச்னைகளை கிளப்பக்கூடாது என அவர்கள் சொல்லலாமே!
செப்டம்பர் 24, 2010 at 7:13 மு.பகல்
இந்தியாவில் மட்டும் மைனாரிட்டி. உலகில் அவர்கள்தான் மேஜாரிட்டி என்று எல்லோரும் பயப்படுகின்றார்கள். ஆயுதம், தீவிரவாதம், படைபலம் என எல்லாம் இருக்கும் ஒரு மதம் இஸ்லாம். அதனை மிகக் குறைந்த அளவே இருக்கும் இந்துக்கள் எதிர்க்க முடியாது. முயன்றாலே நசுக்கப்பட்டுவிடுவோம் என்பது உலகறிந்த உண்மை. அதன் காரணமாகவே அரசு அடக்கிவாசிக்கின்றது.
செப்டம்பர் 23, 2010 at 2:56 பிற்பகல்
ஐயா, பல ஆயிரம் வருடங்கள் முன்னால் பிராமனர்கள் வந்தேரிகளாக வந்து நம்மை அடிமைப்படுத்தி ஆள்கிறார்கள் என்று கூறி அதற்காக இன்று சட்டப்படி அவர்களுக்கு அரசாங்க அனுகூலங்கள் எதுவும் கிடைக்கப்படக் கூடாது என்று ஒரு அரசு சட்டமியற்றுவது சரி என்றால் பல நூறு வருடங்கள் முன்பு ஒரு ராமர் கோவில் இடிக்கப்பட்டு கட்டப்பட்ட மசூதியை சட்டப்படி அகற்றுவதும் ஞாயமானதாகவே படுகிறது. சட்டப்படி அல்லாமல் அகற்றி விட்டனர். இனி அதை முறைப்படுத்த வேண்டியது அரசின் கடமை!
செப்டம்பர் 23, 2010 at 3:02 பிற்பகல்
//வரலாற்று சின்னமாக இருக்கும் ஒரு விஷயம் காலம் காலமாக பலராலும் வந்து பார்க்கப் படும். எல்லா தரப்பு மக்களும் வந்து போவர்.// விருட்சம், வேலூர் கோட்டை கூட வரலாற்றுச் சின்னமாக இருந்தது. பின்னர் அதனுள்ளே இருக்கும் இந்து கோவிலில் பூஜை துவங்கினார்கள். இப்போது உள்ளே இருக்கும் முஸ்லீம் மசூதியிலும் தொழுகை நடக்க வேண்டும் என்று போராடுகிறார்கள். இது முற்றினால் ஒருவர் கோவிலை ஒருவர் இடிக்கும் காலம் வந்தாலும் வியப்பில்லை. ஒன்று மட்டும் நிச்சயம்! இந்துக்களைப் போல எல்லா கடவுளும் நம் கடவுளே என்று ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் மாற்று மதத்தினருக்கு ஏற்படாதவரை, மற்ற கடவுளரை சாத்தான் என்றும், காஃபிர்கள் என்றும் பிரித்துக் கூறும் குணத்தை மாற்றிக்கொள்ளாதவரை பிரிவினை உருவாவதைத் தடுக்க முடியாது.
செப்டம்பர் 23, 2010 at 8:00 பிற்பகல்
“டிசம்பர் 6“ பாபர் மஸ்ஜித் உண்மை வரலாறு!
பிரச்சினை உருவான விதம்
1949ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று முஸலிம்கள் பாபர் மசூதியில் இரவுத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடுகளுக்குச் சென்றனர். மீண்டும் வைகறைத் தொழுகைக் காக பள்ளிவாசலுக்கு வந்த முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளிவாசலுக்குள் ராமர், சீதை, இலட்சுமனர் ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. ராமர் தனது ஜென்மஸ்தானத்தில் அவதரித்து விட்டார் என்று ஒரு கும்பல் கலாட்டாவில் இறங்கியது.
வன்முறைக் கும்பல் பள்ளிவாசலுக்குள் நுழைந்து சிலை களை வைத்ததாக பைஸாபாத் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதன் பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி புரிந்த காங்கிரஸ் அரசுகள் தொழுகைக்குத் தடை விதித்ததிலிருந்து பாபர் மசூதி பிரச்சினை நாட்டில் மிக முக்கியமான பிரச்சினையாக நீடித்து வருகிறது.
‘இராமர் கோயிலை இடித்துக் கட்டப்பட்டதே பாபர் மஸ்ஜித்’ என்ற புளுகு மூட்டையை சூதுவாது அறியாத இந்துக்கள் மனதில் அவிழ்த்துவிட்டு அவர்களில் பலர் அந்தப் பொய்யை நம்புகின்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.
‘இராமருக்காகக் கட்டப்பட்ட கோவில் ஒன்று அயோத்தியில் இருந்து அதை இடித்து விட்டு அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது’ என்ற சங்பரிவாரத்தின் வாதம் உண்மையாக இருந்தால் பாபர் மசூதிக்காக எந்த முஸ்லிமும் போராடமாட்டார். பிறருக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிர மிப்புச் செய்து அதில் பள்ளிவாசல் கட்டுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
பாபர் மசூதி பற்றி சங்பரிவாரத்தினரின் வாதங்கள் முற்றிலும் பொய்யாக இருப்பதால் தான் பாபர் மசூதிக்காக முஸலிம்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இராமர் என்று ஒருவர் வாழ்ந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சட்டர்ஜி, ஏ.கே. மஜும்தார், நேரு உள்ளிட்ட பல தலைவர்கள் கூறியுள்ளதன் அடிப்படையில் இராமர் கற்பனைப் பாத்திரம் என்று கூறி பிரச்சினையை நாம் திசை திருப்ப மாட்டோம்.
ஏனெனில் அந்த இடத்தில் இராமர் கோவில் இருந்ததா? அது பாபரால் இடிக் கப்பட்டதா? அந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டப்பட்டதா என்பதுதான் பிரச்சினையே தவிர இராமர் கற்பனைப் பாத்திரமா வரலாற்றுப் பாத்திரமா என்பது அல்ல.
இராமர் கற்பனைப் பாத்திரமாகவே இருந்தாலும் அவருக்காகக் கட்டப்பட்ட கோவிலை பாபர் இடித்திருந்தால் அது தவறு என்பதை எந்த முஸலிமும் மறுக்க மாட்டார்.
அயோத்தியில் ராமர் பிறந்தாரா?
அயோத்தியில், அதுவும் பாபர் மசூதி கட்டப்பட்டிருந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்ற வாதம் எந்த அளவுக்குச் சரியானது என்பதைக் காண்போம்.
இராமரைப் பற்றி இந்துக்கள் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் சங்பரிவா ரத்தினரின் கூற்றுக்களின் அடிப்படையில் எடுக்கக் கூடாது. இந்து மதப் புராணங்களை மேற்கோள் காட்டியே முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் மனம் போக்கில் யாரேனும் இராமரைப் பற்றி முடிவு செய்தால் அது அவரது முடிவாகத்தான் இருக்குமே தவிர இந்து மதத்தின் முடிவாக இருக்க முடியாது.
இராமரைப் பற்றி முதன் முதலில் வால்மீகி என்பவர் சமஸ்கிருத மொழியில் இராமாயணத்தை எழுதினார். இராமரைப் பற்றி அதில் கூறப்பட்ட விஷயங்கள் தான் இராமரைப் படம் பிடித்துக் காட்டும் கண்ணாடியாகும்.
வால்மீகி இராமாயணத்தில் இராமர் பிறந்ததைப் பற்றிக் கூறும்போது, ‘அவர் திரேதா யுகத்தில் பிறந்தார் என்று கூறப் பட்டுள்ளது.
இந்துக்களின் கால அளவை முறையில் யுகம் என்பது காலத்தை அளக்கும் பெரிய அலகுகளில் ஒன்று. யுகங்கள் நான்கு. அவை:
கிருத யுகம் 17,28,000 (பதினேழு இலட் சத்து இருபத்து எட்டாயிரம்) ஆண்டுகள் கொண்டது.
திரேதா யுகம் 12,96,000 (பன்னிரெண்டு இலட்சத்து தொண்ணூற்று ஆறாயிரம்) ஆண்டுகள் கொண்டது.
துவாபர யுகம் 8,64,000 (எட்டு இலட்சத்து அறுபத்து நான்காயிரம்) ஆண் டுகள் கொண்டது.
கலியுகம் 4,32,000 (நான்கு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம்) ஆண்டுகள் கொண்டது) என்பனவாகும்.
அதாவது கிருத யுகத்தில் பாதி அளவு கொண்டது திரேதா யுகம். திரேதா யுகத்தில் பாதி அளவு கொண்டது துவாபர யுகம். துவாபர யுகத்தில் பாதி அளவு கொண்டது கலியுகம்.
இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் கலியுகம். கலியுகம் கிறிஸ்து பிறப்பதற்கு 3102 வருடங்களுக்கு முன் துவங்குகிறது. இயேசுவுக்குப் பின் 2008 ஆண்டுகள் ஆகின்றன. இதன்படி கலியுகம் துவங்கி 5110 ஆண்டுகள் நடக்கிறது. இந்த யுகத்தில் இராமர் பிறக்கவில்லை.
கலியுகத்துக்கு முந்திய யுகம் தூவாபர யுகம். இந்த யுகத்திலும் இராமர் பிறக்க வில்லை.
இந்த யுகத்துக்கும் முந்திய யுகம்தான் திரேதா யுகம். இந்த யுகத்தின் கடைசி வருடத்தில் இராமர் பிறந்திருந்தார் என்று வைத்துக் கொண்டால் கூட 8,64,000 + 5,110 = 8,69,110 எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் இராமர் பிறந்தார் என்பது வால்மீகி இராமாயணத்தின் தீர்ப்பு.
இராமர் பிறந்த காலம் பற்றி வால்மீகி இராமாயணம் கூறுவது போலவே அவர் பிறந்த ஊர் பற்றி கூறும்போது, ‘இராமர் அயோத்தி என்னும் பட்டணத்தில் பிறந் தார்’ எனக் கூறுகிறது.
அப்படியானால் எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அயோத்திப் பட்டணம் இருந்தி ருக்க வேண்டும்.
ஆனால் உ.பி.யில் உள்ள அயோத்தி எப்போது தோன்றியது என்று பல விதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், மத்திய அரசாங்கத்தின் தொல் பொருள்துறை சார்பில் அயோத்தியை ஆய்வு செய்து 1976, 77ல் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையின் 52, 53 ஆகிய பக்கங்களில் ‘அயோத்தி என்ற ஊர் உண்டானதும், அதில் மக்கள் வசிக்கத் தொடங்கியதும் கி.மு. 700ல்தான் இருக்க முடியும்’ எனக் குறிப்பிடுகின்றார்.
அதாவது 2708 ஆண்டுகளுக்கு முன்னர் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்திருக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று அவர்களின் அறிக்கை கூறுகிறது.
இதன் பின்னர், சி.பி.லால், கே.என். தீட்சித் ஆகிய வரலாற்று வல்லுனர்கள் 1979, 80ல் இதை மறு ஆய்வு செய்தனர். தொல்பொருள் துறையினரின் மேற்கொண்ட முடிவு சரியானதே என்று அவர்கள் கண்டுபிடித்தனர்.
அயோத்தியில் எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் இராமர் பிறந்தார் என்று வால்மீகி கூறுகிறார். ஆனால் ராமர் பிறந்ததாகச் சொல்லப்படும் அந்தக் காலத்தில் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்த தில்லை என்பது தெளிவாகிறது.
இராமாயணத்தையும் மறுக்காமல், தொல்பொருள் அறிஞர்களின் கண்டுபிடிப் புகளையும் மறுக்காமல் ஒரு முடிவுக்கு வருவதாக இருந்தால் என்ன முடிவுக்கு இந்துக்கள் வர வேண்டும்?
இந்த அயோத்தியின் வயது 2708 ஆண்டுகளாக இருக்கலாம். ஆனால் ராமாயணத்தில் கூறப்பட்ட அயோத்தி இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அந்த அயோத்தி இருந்திருக்கலாம். ஒரு பெயரில் பல ஊர்கள் இருப்பது சாதாரண மானதுதான் என்ற முடிவுக்குத்தான் அவர்கள் வரவேண்டும். அப்போதுதான் நடைமுறை உண்மைக்கு முரணில்லாமலும், இராமாயணத்தை மறுக்காமலும் முடிவு எடுத்ததாக அமையும்.
‘இராமர் பிறந்தது இந்த அயோத்தி அல்ல; வேறு அயோத்திதான்’ என்பதற்கு இராமாயணத்திலேயே இன்னும் பல சான்றுகள் உள்ளன.
அயோத்தியைப் பற்றி பேசும் வால்மீகி இராமாயணம் சரயூ நதியைப் பற்றியும் கூறுகிறது. சரயூ நதி அயோத்தியில் இருந்து ஒன்றரை யோஜன் தூரத்தில் உள்ளது என்று கூறுகிறது. ஒன்றரை யோஜன் என்பது இன்றைய கணக்குப்படி 23 கிலோ மீட்டர் ஆகும்.
ஆனால் இப்போது நாம் அயோத்தி சென்று பார்த்தால் சரயூ என்ற பெயரில் ஒரு நதி அங்கே ஓடினாலும், அது அயோத்திலேயே ஓடுகிறது. அயோத்தியில் இருந்து 23 கி.மீ. தொலைவில் அது இல்லை.
அப்படியானால் இராமாயணத்தில் கூறப்படும் அயோத்தியும் சரயூ நதியும் இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அயோத்தி என்ற பெயரில் ஒரு ஊரும், அதிலிருந்து 23 கி.மீ தொலைவில் சரயூ என்ற பெயரில் ஒரு நதியும் இருந்திருக்க வேண்டும் என்று நம்பினால்தான் இராமா யணம் கூறுவது மெய்யாகும்.
”இந்த அயோத்திதான் அந்த அயோத்தி” என்று கூறுவது இராமாயணத்தை மறுத்து இந்து மதத்தையே மறுப்பதாக ஆகிவிடும்.
அதுபோல் சரயூநதி கங்கை எனும் பெருநதியில் சங்கமம் ஆகிறது என்று வால்மீகி இராமாயணம் குறிப்பிடுகிறது. ஆனால் உ.பி.யில் உள்ள சரயூ நதி கங்கையில் சங்கமம் ஆகவில்லை. மாறாக ராப்தி எனும் நதியில் சங்கமமாகிறது. இதிலிருந்து தெரிய வருவது என்ன? இராமாயணம் குறிப்பிடுவது இந்த அயோத்தியையோ, இந்த சரயூ நதியையோ அல்ல என்பதுதான்.
மேலும் சரயூ நதி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்வதாக வால்மீகி ராமாயணம் வர்ணிக்கிறது. ஆனால் உ.பி. யில் உள்ள சரயூ நதி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்கிறது.
அதை ஆய்வு செய்த ஷேர்சிங் என்ற ஆய்வாளர் ஒரு உண்மையைக் கண்ட றிந்து வெளிப்படுத்தியுள்ளார்.
நேபாளத்தில் ஒரு அயோத்தி உள்ளது. அதிலிருந்து 20 கி.மீ தொலைவில் ஒரு நதி ஓடுகிறது. அது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்கிறது. மேலும் அது கங்கையில் சங்கமம் ஆகிறது என்று அவர் கண்டுபிடித்துள்ளார்.
எனவே இராமர் பிறந்த அயோத்தி உ.பி.யில் உள்ள அயோத்தி என்று யாராவது நம்பினால் அவர்கள் இராமாயணத்தை மறுத்தவர்களாகின்றனர்.
இராமாயணத்தில் கூறப்படும் அடையாளங்களும், தன்மைகளும் எந்த அயோத்திக்குப் பொருந்துகிறதோ அந்த அயோத்திதான் இராமர் பிறந்த அயோத்தி என்று முடிவு செய்வதுதான் இந்துமதத்தின் ஆதாரத்தால் நிரூபிக்கப்பட்ட தாகும்.
அயோத்தியில் இராமர் கோவில் இருந்ததா?
‘பாபர் மசூதி 1528ல் கட்டப்பட்டது. மீர்பாகி என்ற பாபரின் தளபதி அங்கிருந்த ராமர் கோவிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் கோவிலைக் கட்டினார்! என்ற வாதத்திலாவது உண்மை உள்ளதா என்றால் அதிலும் உண்மை இல்லை.
இந்த இராமர் கோவிலை விக்கிரமா தித்த மன்னர் கட்டினார் என்று சங்பரிவா ரத்தினர் கூறுகின்றனர். விக்கிரமாதித்தன் என்பது சோழன், பாண்டியன் போன்ற பொதுப் பெயராகும். சந்திர குப்தர், சமுத்திர குப்தர் உள்ளிட்ட குப்த மன்னர்கள் தான் விக்கிரமாதித்தன் என்ற பெயரால் குறிப்பிடப்படுகின்றனர்.
அவர்களில் இராமர் கோவிலைக் கட்டிய மன்னர் யார் என்பதைப் பற்றி பலவறாக முரண்பட்டுக் கூறுகிறார்கள். கோவிலைக் கட்டிய விக்கிரமாதித்தன் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்களின் கூற்று பொய் என்பதில் ஐயம் இல்லை.
குப்த மன்னர்கள் உ.பி.யில் சில பகுதி களை ஆட்சி செய்த காலம் கி.பி. 300 முதல் கி.பி. 1100 வரையாகும். இந்த எண்ணூறு ஆண்டுகளில் ஆட்சி செய்த குப்த மன்னர்களே விக்கிரமாதித்தன் எனப்படு கின்றனர்.
கி.பி. 300 முதல் 1100 வரை அயோத்தி என்று கூறப்படும் நகரில் மனித சஞ்சாரமே இருந்ததில்லை. இந்திய தொல் பொருள் இலாகாவின் தலைவர்
பி.பி. லால், 1975ல் சமர்ப்பித்த ஆய்வ றிக்கை ‘தி வீக்’ (25.02.90) எனும் ஆங்கில ஏட்டிலும் ‘சன்டே டைம்ஸ்’ (20.11.87) ஏட் டிலும் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் பலவிதமான ஆதாரங்களை எடுத்துக் காட்டி அயோத்தி எனப்படும் அந்தப் பகுதியில் குப்தர்கள் ஆட்சி செய்த 300 லி 1100 வரையிலான கால கட்டத்தில் எந்த மனிதனோ, கட்டடமோ, கோவிலோ, வேறு எதுவுமோ இருந்த தில்லை” என்று அடித்துக் கூறுகிறார்.
‘மனிதர்கள் வாழாத இடத்தில் குப்தர்கள் கோவில் கட்டினார்கள்’ என்று கூறுவது பொய் என்பது இதிலிருந்து நிரூபணமாகிறது. இல்லாத கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்பதை இந்து நண்பர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்?
இராமர் கடவுளாகக் கருதப்பட்டது எப்போது?
இராமருக்குக் கோவில் கட்டுவது என்றால் அவரை இந்துக்கள் கடவுளாகக் கருதத் தொடங்கிய பிறகுதான் கட்டுவார்கள். இராமரைக் கடவுள் என்று இப்போது இந்துக்கள் நம்பினாலும் ஆரம்பத்தில் இந்துக்கள் அவ்வாறு நம்பவில்லை. குறிப்பாக, கோவில் கட்டப்பட்டதாக சங்பரிவாரர் கூறும் 300, 1100 குப்தர் காலத்தில் இராமர் கடவுள்களில் ஒருவராகக் கருதப் படவில்லை.
கி.பி. ஆறாம் நூற்றாண்டில் அமர சிம்ஹ என்பவர் ‘அமர கோஷா’ என்ற பெயரில் சமஸ்திருத கலைக் களைஞ்சியத்தை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவில் கடவுளாகக் கருதப்பட்டவர்கள் என்ற பட்டியல் உள்ளது. அந்தப் பட்டியலில் இராமர் இல்லை. அந்தக் காலகட்டத்தில் இந்துக்கள் இராமரைக் கடவுளின் அவதாரமாகக் கருதவில்லை என்பதற்கு இது ஆதாரமாகவுள்ளது.
லட்சுமிதர் என்பவர் புனித யாத்திரைத் தலங்கள் என்ற பெயரில் 11 ஆம் நூற்றாண்டுவரை, அதாவது குப்தர்களின் கடைசிக் காலம்வரை இந்தியாவில் இருந்த புனிதத் தலங்களைப் பட்டியல் போட்டுள்ளார். அந்தப் பட்டியலில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை.
குப்தர் ஆட்சியில் இராமர் கோவில் கட்டப்பட்டது உண்மை என்றால் அந்த ஆலயம் ஏன் புனித யாத்திரைத் தலங்கள் பட்டியலில் இடம் பெறவில்லை?
அதுபோல் எஸ்.எஸ். ஐயர் என்ற ஆய்வாளர், ‘இந்தியக் கோவில்கள், கட்ட டக்கலை, சரித்திரக் குறிப்புக்கள்’ என்ற நூலை வெளியிட்டுள்ளார். அதில் அயோத்தியின் இராமர் கோவில் பற்றி அவர் கூறவில்லை. விக்கிரமாதித்தன் கட்டிய கோவில்கள் என்ற தலைப்பில் ஐந்து கோவில்களைக் குறிப்பிட்டுள்ளார். அதில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை.
ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராமச்சந்திர கத்ரி என்பவர் 1989 நவம்பர் 12 தேதியிட்ட ‘ரேடியன்ஸ்’ பத்திரிகையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். என்சைக்ளோ பீடியா பிரிட்டானிகா உள்ளிட்ட பல ஆதாரங்களைக் காட்டி, கி.பி. 1100க்குப் பிறகுதான் இராமரைக் கடவுள் என்று கருதி வழிபடும் நிலை உருவானது எனக் கூறுகிறார்.
அதாவது கடைசி விக்ரமாதித்த மன்னர் காலம் வரை ராமர் என்பவர் இந்துக்களின் கடவுள்களின் அவதாரங்களில் ஒருவராக வணங்கப்படவில்லை.
கடவுளாகக் கருதப்படாதவருக்கு குப்தர்கள் கோவில் கட்டினார்கள் என்று மனசாட்சி உள்ள இந்துக்கள் நம்ப முடியுமா?
இன்னும் தெளிவாகச் சொல்வதானால், வால்மீகி எழுதிய இராமாயணம் சமஸ் கிருத மொழியில்தான் இருந்தது. சமஸ்கி ருதம் மக்களின் பேச்சு மொழியாக இருக்கவில்லை. பிராமனப் பண்டிதர்கள் மட்டுமே அறிந்த மொழியாகத்தான் இருந்தது. எனவேதான் இராமர், மக்களால் கடவுளாகக் கருதப்படவில்லை.
மக்கள் பேசுகின்ற இந்தி மொழியில் துளசிதாசர் என்பவர் இராமாயணத்தை மொழி பெயர்த்து வெளியிட்டார். இதன் பின்னர்தான் இராமாயணம் மக்கள் அறியும் காப்பியமாக ஆனது. துளசி தாசர் இந்தியில் ராமாயணம் வெளியிட்ட பின்பு தான் இராமர் கடவுள் அவதாரம் என்று மக்களால் கருதப்பட்டார்.
துளசி தாசர் காலம் என்ன? எந்தக் காலத்தில் இராமர் கோவில் இடிக்கப்பட்ட தாகக் கூறுகிறார்களோ, எந்தக் காலத்தில் பாபர் ஆட்சி புரிந்தாரோ, அதே காலத்தில் தான் துளசி தாசரும் வாழ்கிறார். அதுவும் அயோத்தியில் வாழ்கிறார். 1500 களில்தான் பாபர் ஆட்சி புரிகிறார். அந்த ஆட்சியின் கீழ்தான் துளசி தாசரும் வாழ்கிறார்.
இராமாயணம் இந்தி மொழியில் ஆக்கப்பட்டதே பாபர் காலத்தில்தான் என்பதும், பாபர் காலத்தில் இராமர் கடவுளாகக் கருதப்படவுமில்லை. இந்து மக்கள் அவரைப் பற்றி அறிந்திருக்கவும் இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது.
இராமாயணமே இந்தியில் மக்கள் மத்தியில் பரவாத காலத்தில் இராமர் எப்படி கடவுளாகக் கருதப்பட்டிருப்பார்? எப்படி அவருக்குக் கோவில் கட்டபட்டிருக்கும் என்பதை நியாயவுணர்வுள்ள இந்துக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இந்தியாவில் முதல் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றவர் டாக்டர். ராதா கிருஷ்ணன். இவரது மகன் சர்வபள்ளி கோபால் இந்து பக்திமானும் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளருமாவார்.
இவர் ராமர் ஆலயம் பற்றிய ஆய்வுக் கட்டுரையில் ”கி.பி. 1750க்கு முன்பு வரை இந்தியாவில் இராமருக்காக எந்தக் கோவி லும் எந்தப் பகுதியிலும் இருந்ததில்லை. ராமர் கோவில்கள் அனைத்தும் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவைகளே” எனத் திட்டவட்டமாக அறிவிக்கிறார்.
200 ஆண்டுகளுக்கு முன்னால் இராமர் கோவில்களே இந்தியாவில் இருக்கவில்லை என்றால் 1528ல் இல்லாத இராமர்கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்று நடுநிலையாளர்கள் சிந்திக்கக் கோருகிறோம்.
உண்மை என்னவென்றால் பாபர் மசூதிக்கு அடிக்கல் நாட்டியவர் இப்ரா ஹிம் லோடியாவார். இவர் 1524ல் பள்ளி வாசலுக்கான அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அவர் அப்பணியைத் தொடர வில்லை. இப்ராஹிம் லோடியைக் கொன்றுவிட்டு அப்பகுதியைக் கைப்பற் றிய பாபர், 1528ல் அந்த அடித்தளத்தின் மீது பாபர் பள்ளியைக் கட்டினார். எனவே பாபர் கோவிலை இடித்தார் என்று கூறு வது முழுப் பொய் என்பது இதன் மூல மும் தெளிவாகிறது.
பாபர் கோவிலை இடிப்பவரா?
இதுவரை நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்கள் மட்டுமே அறிவுடைய மக்களுக்குப் போதுமானதாகும். ஆயினும், ஒரு வாதத்துக்காக அங்கே கோவில் இருந்தாலும் பாபர் அதை இடித்திருக்க மாட்டார்.
ஏனெனில், இதே அயோத்தியில் ஹனுமான்கிரி, ஜென்மஸ்தான் உள்ளிட்ட ஐந்து கோவில்களுக்கு செப்புப் பட்டயத் தில் எழுதி பாபர் மானியம் வழங்கியுள் ளார். அந்தக் கோவில்களின் நிர்வாகம் அதை நன்றியுடன் பாதுகாத்து வருகின்றன என்று ராம்ரக்ஷா திரிபாதி என்பவர் தக்க சான்றுகளுடன் தெளிவுபடுத்தியுள்ளார்.
கோவில்களுக்கு மானியம் வழங்கிய ஒருவர் எப்படி கோவிலை இடிப்பார் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்?
மேலும் பாபர் ஆட்சி புரிந்தபோது முஸலிம்களின் சதவிகிதம் இப்போதுள்ள தைவிட பன்மடங்கு குறைவாகவே இருந்திருக்கும். பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பு இல்லாமல் இருந்தால்தான் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். பெரும்பான்மை மக்களின் வழி பாட்டுத் தலத்தை பாபர் இடித்திருந்தால் அப்போதே மாபெரும் மக்கள் புரட்சி ஏற்பட்டு பாபர் விரட்டியடிக்கப்பட்டிருப்பார். பதவியைத் தக்க வைத்துக்கொள்ளும் நிலையில் உள்ள எந்த மனிதனும் இதுபோன்ற காரியங்களைச் செய்யவே மாட்டார்.
பாபர், அவரது மகன் ஹிமாயூன், அவரது மகன் அக்பர் என்று வாழையடி வாழையாக எவ்விதப் புரட்சியும் வெடிக்காமல் ஆட்சி நீடித்தது என்றால் இந்துக்கள் வெறுப்படையும்படி அவரது ஆட்சி அமையவில்லை என்பது தெளிவாகவில்லையா?
பாபர் தமது கடைசிக் காலத்தில் தனது மகன் ஹிமாயூனுக்கு பாரசீக மொழியில் ஓர் உயில் எழுதினார். அந்த உயில் மத்திய அரசின் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் டெலலியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அந்த உயிலில்,
”மகனே! இந்துக்கள் பெரும்பான்மை யாகவுள்ள ஒரு நாட்டை நீ ஆளப் போகிறாய். இந்துக்கள் பசுவைத் தெய்வமாக மதிக்கின்றனர். எனவே எக்காரணம் கொண்டும் பசுவின் மாமிசத்தை உண்ணாதே! அதனால் இந்துக்கள் உன்னை வெறுத்து விடுவார்கள்” என்று மகனுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
இந்துக்கள் வெறுத்து விடக்கூடாது என்பதற்காக பசுவின் மாமிசத்தையே தவிர்த்துக் கொள்ளச் சொன்ன பாபர், கோவிலை இடித்திருக்க முடியும் என்று சிந்தனையுள்ள யாராவது நம்ப முடியுமா?
பாபர் காலத்தில் அவரது முதல் எதிரியாக இருந்தவர் குருநானக். இவர்தான் சீக்கிய மதத்தின் நிறுவனர். இவர் பாபரை கடுமையாக எதிர்த்து வந்தார். குறிப்பாக பெண்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் போன்றவற்றைத்தான் அவர் குறிப்பிடுகிறார். பாபர் கோவிலை இடித்திருந்தால் அதை குருநானக் கட்டாயம் குறிப்பிடாமல் இருக்க மாட்டார். அது மட்டுமின்றி குருநானக் அயோத்திக்கு வந்து பாபர் மசூதியைப் பார்வையிட்டு ரசித்திருக்கிறார் என்று அவரது வரலாறு கூறுகிறது.
கோவிலை இடித்து பாபர் பள்ளிவாசல் கட்டியிருந்தால் அந்தக் காலத்தில் வாழ்ந்த அவருக்குத்தான் அது நன்றாகத் தெரியும். கோவிலை இடித்துக் கட்டிய பள்ளிவாசலை அவர் ஒருக்காலும் ரசித்திருக்க மாட்டார்.
பாபர் கொடுங்கோலர் என்பதால் பயந்து கொண்டு விமர்சனம் செய்யாமல் மக்கள் இருந்திருக்கலாம் என்று பொய்யாகக் கற்பனை செய்து சிலர் கூறுகின்றனர்.
பாபர் கொடுங்கோலராகவோ, இந்துக்களால் வெறுக்கப்பட்டவராக இருக்கவில்லை என்பதே உண்மை. ஒரு வாதத்துக்காக பாபர் கொடுங்கோலர் என்று வைத்துக் கொண்டாலும் இவர்களின் வாதம் சரியானது அல்ல.
பாபருக்குப் பின் அவரது மகன் ஹீமாயூன் ஆட்சி செய்கிறார். பாபர் இறந்து 25 ஆண்டுகளில் அவரது பேரன் அக்பர் ஆட்சிக்கு வருகிறார். இவர் இஸ்லாத்தை விட்டு விலகி, தீனே இலாஹி என்ற புதிய மதத்தை உருவாக்கினார். சங்பரிவாரத்தினர் பாராட்டும் அளவுக்கு இந்துச் சார்புடைய மன்னராக இருந்தார் அக்பர்.
கோவிலை பாபர் இடித்திருந்தால் அதை நேரில் பார்த்த பலரும் அக்பர் காலத்தில் வாழ்ந்திருப்பார்கள். அக்பருக்கு அவர்கள் அஞ்சத் தேவையில்லை. ”உங்கள் தாத்தா இடித்த கோவிலைக் கட்டித் தாருங்கள்” என்று ஒரு வார்த்தை சொன்னால் அப்போதே அக்பர் அதைச் செய்திருப்பார். இடித்திருந்தால்தானே கேட்டிருப்பர்கள்? அப்படி எந்தச் சம்பவமும் நடக்கவில்லையே.
அதுதான் போகட்டும்! முஸலிம்களின் ஆட்சி முடிவுக்கு வந்து வெள்ளையர்கள் ஆட்சி நடத்தினார்களே! அந்தக் காலம் முதல் நாடு விடுதலை அடைந்த 1948 வரை இதுபற்றி எந்த வழக்கோ, பிரச்சினையோ இருந்ததா என்றால் அறவே இல்லை.
வெள்ளையர்களின் 200 ஆண்டு கால ஆட்சியிலும்
”கோவிலை இடித்துவிட்டார்கள்; அதை எங்களிடம் தாருங்கள்” என்று வழக்கு ஏதும் பதிவாகவில்லை. ஒர் காலகட்டத்தில் இந்து முஸலிம் பகைமை மிகவும் உச்சத்தில் இருந்தது. அந்தக் காலத்தில்கூட இதுபோன்ற பிரச்சினை எதுவுமில்லை.
1949 டிசம்பர் 23ல் சிலைகளைப் பள்ளி வாசலில் வைத்து பிரச்சினையை முதன் முதலாகத் துவங்கும்வரை இராமர் கோவில் என்ற எந்த விவகாரமும் இருக் கவில்லை.
இன்னும் சொல்வதாக இருந்தால் அயோத்தியில் இராமர் பிறந்த இடம் என்ற பெயரில் 30 கோவில்கள் இன்றளவும் உள்ளன. இராமர் பிறந்த இடம் என்று பல இடங்களைக் குறிப்பிட்ட இந்துக்கள் பாபர் மசூதியையும் அதில் ஒன்றாகக் குறிப்பிடவில்லை.
1949ல் சங்பரிவாரம் புளுகு முட்டையை அவிழ்த்து விடும்வரை இதுதான் நிலைமை.
எனவே மக்களின் வெறியைக் கிளறி விட்டு அதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்று திட்டமிட்டுத்தான் இந்தப் பொய்யைப் பரப்பினார்கள். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் வெள்ளை மனம் படைத்த இந்து மக்களை ஏமாற்றி வளர்ந்து ஆட்சியையும் பிடித்தார்கள்.
இந்துச் சமுதாய மக்களே! இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்க இணைந்து பாடுபடுவோம். பொய்களைப் பரப்பி நமக்கிடையே பகையை விதைப்பவர்களைப் புறக்கணிப்போம்.
செப்டம்பர் 23, 2010 at 8:56 பிற்பகல்
ரதி, உங்களை இங்கே மீண்டும் பார்ப்பது மகிழ்ச்சி. எப்படி இருக்கிறீர்கள்?
விருட்சம், // சட்டம் என்று பார்த்தால் நம் ஜனநாயக நாட்டில் பெரும்பான்மைக்கு என்ன சட்டம் இருக்கிறது? // புரியவில்லை. // மசூதி இடித்தது தவறு என்பதில் நானும் உடன்படுகிறேன். இடித்ததில் அரசியல் கலந்து இருக்கிறது என்பதற்காக அங்கு வாழும் மக்களின் உணர்வுகள் , இது எங்கள் ராம ஜன்ம பூமி என்ற உணர்வுகளை நாம் அலட்சியப்படுத்த முடியாது // எனக்கு “சொந்தமான சொத்தை” யார் வேண்டுமானாலும் உடைக்கலாம், சட்ட ரீதியாக எனக்கு பாதுகாப்பு கிடையாது என்ற உணர்வுகளையும் அலட்சியப்படுத்தவதர்கில்லை. // அங்கே அந்தப் போராட்டம் காலம் காலமாக நடக்கிறது // காலம் காலமாக என்றால் எப்போதிலிருந்து? பாபர் கோவிலை இடித்தார் என்றால் 1530 வாக்கில் என்பது தெளிவு. பலரும் காலம் காலமாக போராட்டம் என்று சொல்கிறார்கள், எப்போதிலிருந்து என்று சொல்வதில்லை… // ஒரு வரலாற்று நினைவுச் சின்னமாக நிறுவி விட்டு… // நல்ல ஐடியாதான், நடக்குமா என்றுதான் தெரியவில்லை.
ஜெகதீஸ்வரன், // …அதையெல்லாம் தவறு என்று சொன்னால், பாபர் மசுதி இடிப்பும் தவறுதான். // வழிபாட்டுத் தலங்களை “அன்னியர்” இடிப்பது இன்றைய விழுமியங்களின் படி தவறு என்பதை ஏற்றுக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். பாபர் கோவிலை இடித்ததும் இன்றைய விழுமியங்களின்படி தவறுதான். ஆனால் பாபர் காலத்து விழுமியங்கள் வேறு. இன்றைய விழுமியங்களின்படி தவறான ஒரு செய்கையை இன்று செய்பவர்களைப் பற்றி என்ன சொல்வது?
ஜவஹர், // மத அமைப்புகளும் தங்கள் மதத்தினரை அமைதி காக்கச் சொல்வதோடு, போலிசாருக்கு ஆதரவாக அவர்களுடன் சேர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அதிலும் இருசாராரும் கைகோர்த்து ஒற்றுமையாகச் செயல்பட்டு ஒரு முன்னுதாரணத்தைக் காட்ட வேண்டும். // நல்ல லட்சியம், நடக்க வேண்டுமே?’
மெட்ரோ பாய், // மொகலாயர்கள் கைப்பற்றிய அனைத்து பொருள்களும், சொத்துகளும் அப்போது இருந்த இந்து குடிமகங்களுடையது அல்லது இந்து சமூகத்துக்கு சொந்தமானது. // ஆங்கிலேயரின் இன்றைய வளம் இந்தியாவினால் உருவானது. ஒரு பைசா திருப்பி வாங்க முடியும் என்று நினைக்கிறீர்களா? குறைந்த பட்சம் கோஹினூர் வைரத்தை? இதைத்தான் statute of limitations என்கிறார்கள். பதிவிலும் எழுதி இருக்கிறேனே?
ராம், // பல ஆயிரம் வருடங்கள் முன்னால் பிராமனர்கள் வந்தேரிகளாக வந்து நம்மை அடிமைப்படுத்தி ஆள்கிறார்கள் என்று கூறி அதற்காக இன்று சட்டப்படி அவர்களுக்கு அரசாங்க அனுகூலங்கள் எதுவும் கிடைக்கப்படக் கூடாது என்று ஒரு அரசு சட்டமியற்றுவது சரி என்றால் பல நூறு வருடங்கள் முன்பு ஒரு ராமர் கோவில் இடிக்கப்பட்டு கட்டப்பட்ட மசூதியை சட்டப்படி அகற்றுவதும் ஞாயமானதாகவே படுகிறது. சட்டப்படி அல்லாமல் அகற்றி விட்டனர். இனி அதை முறைப்படுத்த வேண்டியது அரசின் கடமை! // பிராமணர்களுக்கு அரசாங்க அனுகூலங்கள் கிடைக்கக்கூடாது என்று எந்த சட்டமும் இருப்பதாகத் தெரியவில்லை. மற்றவருக்கு அனுகூலம் இருக்க வேண்டும் என்றுதான் சட்டம் இருக்கிறது. இட ஒதுக்கீடு என்பது இன்றைய சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வை குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கோட்பாடு. (அதில் இருக்கும் குறைகளைப் பற்றி பேச இது சரியான இடமில்லை) இட ஒதுக்கீட்டுக்கும் “வந்தேறி” கோட்பாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை. இந்தியா பூராவும் இட ஒதுக்கீடு இருக்கிறது, தமிழ் நாட்டைத் தவிர வேறு எங்கும் வந்தேறி என்ற குரல் கேட்பதில்லை என்று நினைவுபடுத்துகிறேன். // இந்துக்களைப் போல எல்லா கடவுளும் நம் கடவுளே… // ஐயோ திருப்பி சுடலைமாடன் பதிவு மாதிரி வைஷணவம் vs ஹிந்துயிசம் vs கிருச்துவமா! ஆளை விடுங்கப்பா!
சாந்தி, // ‘இராமர் கோயிலை இடித்துக் கட்டப்பட்டதே பாபர் மஸ்ஜித்’ என்ற புளுகு மூட்டையை … // இது என்ன என்ன விடிய விடிய ராமாயணம் கேஸ் மாதிரி இருக்கிறதே? பதிவின் முதல் பாராவையாவது படிக்கலாம், அதைக் கூட படிக்காமல் மறுமொழி எழுதினால் எப்படி?
செப்டம்பர் 24, 2010 at 1:20 மு.பகல்
ஆர்வி, இட ஒதுக்கீட்டு என்பதே கடந்த கால தவறுகளை சரி செய்ய உருவாக்கப் பட்ட ஒரு சட்டமே. ஆக பலநூறு ஆண்டுகளுக்கும் முன்னால் ‘வந்தேரிகள்’ என்று கூறப்பட்டவர்கள் இன்று பழிவாங்கப்படலாம் என்றால் அதே போல ‘கூறப்படும்’ பாபர் மசூதியும் சட்டமியற்றி பழிவாங்கப்படலாமே! உதாரணமாக ப்ராமணர்களை கோவில்களில் இருந்து விரட்டவே அ சா அர்ச்சகர் என்ற சட்டமும் வந்தது. இப்படி ஆதாரமே இல்லாமல் கடந்த கால தவறுகள் என்று கூறி சமூகத்தை சீர்படுத்துகிறேன் என்றும் கடந்த காலத்திற்கு பரிகாரமாக சட்டம் இயற்ற முடியுமென்றால் ராமர் கோவில் ஆனால் அதன் பொருட்டும் சட்டம் இயற்றலாமே, திராவிட கலாச்சார வழியில்! இந்த கால கட்டம் வரை நடந்த விஷயங்களுக்குத்தான் வழக்கு தொடுக்க வேண்டுமென்று எந்த கொள்கையும் இவர்களுக்கு இல்லை என்பதே என் கருத்து.
செப்டம்பர் 24, 2010 at 5:37 மு.பகல்
’கடந்த கால ‘தவறுகள்’ சரிக்கட்ட”
பாபர் ஒரு மன்னன். அவன் பிறநாடுகளைப்பிடித்து தன்னாட்டை விரிவுபடுத்துவது அவன் தர்மம். எல்லா மன்னர்களின் தர்மமும் அதே. அதைச்செய்வதற்கு அவன் எவ்வழியையும் நாடலாம். மன்னர்கள் ஒரு நாட்டைப்பிடிப்பது தன் ஆட்சியைமட்டும் ஏற்றுவதற்காக. தன் ஆட்சியில் கொள்கையையும் ஏற்றுவதற்காக. அதிலொன்றுதான கோயில்களை இடித்து மசூதிகள் கட்டுவது.
குப்தர்கள் காலத்தில் இந்து மதம் உயிர்த்தெழுந்தது. அவர்கள் அதற்காக எல்லாவற்றையும்தான் செய்திருப்பார்கள். ஹர்சரின் காலத்தில் பவுத்தம் மீட்சிபெற்றது அவன் எல்லாவற்றையும்தான் செய்திருப்பான்.
ஆக, இதெல்லாம் சத்திரிய தர்மம்.
1525ல் ஒரு மன்னன் செய்தவை தவறாக இன்று நமக்குப்படின் அது நாம் நிவிர்த்தி பண்ணலாம். ஆனால், அஃது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டாலே செய்யப்பட வேண்டும். இல்லையென்றால் அஃது ஒரு சரித்திர நிகழ்ச்சியென்று விட்டுவிடவேண்டும்.
ஏன் தாஜ்மகாலை இன்று பாதுகாக்கிறோம்? முசுலிம் மன்னர்கள் கட்டியவற்றையெல்லாம் ‘இந்துக்களுக்கு’ப் பிடிக்கவைல்லை எனவே இடிக்கவேண்டும் என்று இடிக்கலாமே?
பிராமணர்கள் இந்து மதத்தில் செய்தவை சரித்திர நிகழ்ச்சிகள். ஆனால் அவை வாழும் நிகழ்ச்சிகளாயிருக்கின்றபடியால், சரித்திரம் என விடமுடியா. அவை எந்த தர்மத்தில் வருகின்றன ராம்?
அவைகளில் பல பிராமணர்களாயே கடியப்பட்டு விடப்பட்டிருக்கின்றன. இருப்பவையில் பல, இசுலாமியராலோ, கிறுத்தவராலோ, கடியப்படவில்லை. மாறாக இந்துக்களாலேயே கடியப்படுகின்றன.
இல்லை..இல்லை..பார்ப்ப்னத்துவேசிகளின் விஷமப்பிரச்சாரம் என்பதெல்லாம் கப்சா. பார்ப்பனத்துவேசிகள் என்போர், கங்குகளை கிளறி தீவைப்போர் மட்டுமே.
கங்குகள் ஏற்கன்வே உள்ளன.
பிராமணீயத்திறுக்கு என்றுமே தமிழர்களிடையே ஒரு வெறுப்பு உண்டு. There is always an underlying current of aversion to the brahminical religious practices. However, people accept them, because, nothing in life comes without some minuses, dont they?
செப்டம்பர் 24, 2010 at 7:26 மு.பகல்
முகமதியர்கள் கட்டியதை எல்லாம் இடிக்க வேண்டும் என்று எந்த இந்துவும் சொல்வதில்லை. சிலருக்கு ராமன் பிறந்த இடத்தில் கோவில் கட்டிப் பார்க்கவேண்டுமென்ற ஆசை.
செப்டம்பர் 24, 2010 at 5:21 மு.பகல்
அயோத்தி வாழ் இந்துக்களும், இசுலாமியரும் என்ன நினைக்கிறார்கள் என்பதை டைம்ஸ் ஆப் இந்தியா இன்று ஒரு செய்தியாக வெளியிட்டிருக்கிறது.
இந்துக்கள் உணர்ச்சிகள் பாழ்படுத்தப்பட்டன என வாதம் வைக்கும் விருச்சம் போன்றோர் கண்டிப்பாக படிக்கவேண்டும்.
செப்டம்பர் 24, 2010 at 4:58 பிற்பகல்
ஜோ, // ’கடந்த கால ‘தவறுகள்’ சரிக்கட்ட” // இந்த பகுதியை நானும் ஆமோதிக்கிறேன். ஆனால் அதற்கப்புறம் பிராமணீயம் என்று என்னவோ சொல்கிறீர்கள். அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று கூட புரியவில்லை. முடிந்தால் டைம்ஸ் சுட்டி கொடுங்களேன்!
ஜெகதீஸ்வரன், // முகமதியர்கள் கட்டியதை எல்லாம் இடிக்க வேண்டும் என்று எந்த இந்துவும் சொல்வதில்லை. // சரியே. ஆனால் அப்படி நடந்துவிடுமோ என்ற பயம் பல முஸ்லிம்களுக்கு இருக்கிறது என்று நினைக்கிறேன்.
ராம், // இட ஒதுக்கீட்டு என்பதே கடந்த கால தவறுகளை சரி செய்ய உருவாக்கப் பட்ட ஒரு சட்டமே. // தவறை திருத்தும் சட்டம் பிறப்பால் ஏற்றத்தாழ்வு பார்ப்பது குற்றம் என்று சொல்லும் சட்டம். ஏனெறால் பிறப்பால் ஏற்றத்தாழ்வு என்பதுதான் தவறு. இட ஒதுக்கீடு இன்றைய ஏற்றத்தாழ்வை குறைக்க ஒரு முயற்சியே.
செப்டம்பர் 26, 2010 at 1:06 பிற்பகல்
சட்டம் பற்றி அடிக்கடி பேசுவதால் ஒரு கேள்வி. அதற்கு முன் நான் மசூதி இடித்ததை நியாயப் படுத்த விரும்பவில்லை என்பதையும் அங்கே ஒரு வரலாற்று நினைவுச் சின்னம் வருவதையே ஆதரிக்கிறேன் என்பதையும் இங்கே சொல்லி இருப்பதை நினைவுபடுத்தி விடுகிறேன்.
61 வருடமாகத் தானே போராட்டம் (சட்ட ரீதியான )?
1500 ஆண்டுகளாக1527 ல் இருந்து இருக்கும் ஓன்று, அங்குள்ள கட்டிடம் ( கோவிலை கட்டிடமாக சிலர் பார்ப்பதால் ) இடிக்கப் பட்டு அன்றைய அரச சட்ட தர்மப் படி கட்டப்பட்டது என்பதால் அன்றைய சட்டப் படி சரி …என் கேள்வி இது தான். அங்கே கோவில் இருந்து இடிக்கப் பட்டு இருந்தால் அன்றைய அரச சட்டப் படி செல்லும்.இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகில் எல்லா இடத்திலும் இப்படித் தான் நடந்து இருக்கிறது. 1500 வருடமாக ஒரு சமுதாயத்திடம் இருப்பதால் அது அவர்களுக்கே சொந்தம் . இப்போ அது பற்றி பேச ஒன்னும் இல்லை என்று முடித்து இருக்கலாமே. இன்றைய சட்டப் படி நடக்கும் ஒரு விசாரணை எதற்கு அகழ்வாராய்ச்சி எல்லாம் செய்து சிரமப் படணும்?
செப்டம்பர் 26, 2010 at 7:30 பிற்பகல்
விருட்சம், அதுதானே என் பாயின்ட்? இந்த ஆராய்ச்சிக்கு சட்ட ரீதியான முக்கியத்துவம் இல்லை, தார்மீக ரீதியாக அழுத்தம் தரவே பயன்படும் என்றே நினைக்கிறேன். // இந்த முடிவுகளில் உண்மையான முக்கியத்துவம் முஸ்லிம் அமைப்புகள் மேல் இப்போது ஒரு தார்மீக ரீதியில் அழுத்தம் ஏற்படும்… இந்த உண்மைக்கு சட்ட ரீதியாக எந்தவிதமான significance-உம் இல்லை… //
செப்டம்பர் 28, 2010 at 4:02 மு.பகல்
என்னுடைய எழுத்தில் ஒரு தகவல் பிழை இருக்கு. 1500 வருடமாக என்று இருப்பது typo error
1527 ல் இருந்து என்று இருந்திருக்க வேண்டும்
செப்டம்பர் 28, 2010 at 8:20 பிற்பகல்
விருட்சம், உங்கள் பதிலை திருத்திவிட்டேன்.
செப்டம்பர் 27, 2010 at 3:24 மு.பகல்
சட்டப் படி தீர்ப்பு வழங்க ஆதாரங்களுக்காக அகழ்வாராய்ச்சி நடந்ததா அல்லது அது தனியா என்பதை உங்கள் உறவினர் டாக்டர் நாகசாமி கிட்டே கேட்டு தெரிந்து சொல்லுங்களேன்.
சட்டத்துக்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கும் என்றால் ஆராய்ச்சி முடிவுகள் முன்னால் வெளியாக அனுமதி உண்டா?
செப்டம்பர் 27, 2010 at 6:20 மு.பகல்
விருட்சம், அவரைப் பிடிப்பது கஷ்டம். பார்க்கும்போது கட்டாயமகா கேட்கிறேன்.
செப்டம்பர் 27, 2010 at 4:53 மு.பகல்
பார்ப்பனர்கள் எப்படி புத்த கோவில்களை இந்து கோவில்களாக மாற்றினார்கள் என்ற யோக்கிதை இதோ விடுதலை நாளேடு மிகவும் அருமையாக படம் பிடித்து காட்டியுள்ளதே…விடுதலையில் மயிலாடன் அவர்கள் 23-2-2010 ஆதாரங்களுடன் எழுதியதை அப்படியே தருகிறேன்.
மயிலை சீனி. வேங்கடசாமி என்னும் ஆராய்ச்சியாளர் பவுத்தமும் தமிழும் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில் வெளி மதில்சுவரில் சில புத்த விக்கரகங்கள் பலவகை சிற்பமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மதிற்சுவர் விஜய நகர அரசனான கிருஷ்ண தேவராயரால் 1509 இல் கட்டப்பட்டது.
பழைய புத்தர் கோயில்களை இடித்து, அந்தக் கற்களைக் கொண்டு இந்த மதிற்சுவர் கட்டியிருக்கவேண்டும். அதனால்தான் இப்புத்த விக்கரகங்கள் இச்சுவரில் காணப்படுகின்றன.
காஞ்சி ஏகாம்பர ஈசுவரர் கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் கட்டடத்தில் ஒரு புத்த விக்ரகம் இருக்கிறது. இது பூமியைத் தோண்டியபோது கிடைத்தது. புத்தர் பரி நிர்வாணம் அடையும் நிலையில் உள்ளது போன்ற கற்சிலையொன்று ஏகாம்பர ஈசுவரர் கோயில் மதிற்சுவரின் கீழே வைத்துக் கட்டப்பட்டிருக்கிறது. (பவுத்தமும், தமிழும், பக்கம் 54).
ஏகாம்பர ஈசுவரர் கோயிலில்தான் இந்தக் கதையென்றால், காமாட்சியம்மன் கோயில் மட்டும் என்ன வாழ்கிறது?).
காமாட்சியம்மன் கோயில் ஆதியில் பவுத்தரின் தாராதேவி ஆலயம் இவ்வாலயத்தில் பல புத்த விக்கரகங்கள் இருந்தன. அவைகளில் ஆறு அடி உயரம் உள்ள நின்ற வண்ணமாக அமைக்கப்பட்ட சாஸ்தா (இது புத்தர் உருவம்) என்னும் உருவம் இப்பொழுது சென்னைப் பொருட்காட்சி சாலையில் இருக்கிறது. காமாட்சியம்மன் குளக்கரையில் இருந்த புத்தச் சிலைகள் இப்போது காணப்படவில்லை.
இக்கோயிலில் இருந்த வேறு புத்த விக்கரகங்கள் (கருங்கல் சிலைகள்) சில ஆண்டுகளுக்கு முன் நன்னிலையில் இருந்ததைக் கண்டேன். ஆனால், அவை பிறகு துண்டு துண்டாக உடைக்கப்பட்டுக் கிடந்ததைக் கண்டேன்.
காமாட்சியம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு தோட்டத்தில் புத்த விக்கரகம் ஒன்று இப்போதும் நன்னிலையில் இருக்கிறது. இத்தோட்டத்தில் உள்ள மண்டபத்தைக் கட்டியபோது, அதன் அடியில் சில புத்த விக்கரகங்களைப் புதைத்து இருக்கிறார்களாம். (பவுத்தமும், தமிழும், பக்கம் 55).
புரிகிறதா? புத்தர் கோயில்களை எல்லாம் இந்துக் கோயில்களாக மாற்றியவர்கள் இப்பொழுது தொலைக்காட்சி வாயிலாகவும் இத்தகைய மாய்மாலங்களைச் செய்கிறார்கள் என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது. இந்த யோக்கியர்கள்தான் ராமன் கோயிலை இடித்துவிட்டு மசூதியைக் கட்டினார் பாபர் என்று கயிறு திரிக்கிறார்கள்.
…….
செப்டம்பர் 27, 2010 at 6:21 மு.பகல்
ராஜ், காமாட்சி கோவிலை மீண்டும் “தாராதேவி” கோவில் ஆக்க வேண்டும் என்று யாரும் போராடாத வரையில் உங்கள் தகவலின் significance என்ன என்று எனக்கு புரியவில்லை.
செப்டம்பர் 28, 2010 at 12:38 பிற்பகல்
அதுவும் நடந்திருக்கும். நடக்கவில்லை பௌத்தர்கள் இன்று பெருவாரியாக இல்லை. இதே செயல் இலங்கையில் நடந்திருந்தால், சிங்களர்கள் குருதிப்புனலை ஓடவிட்டிருப்பார்கள்.
விடுதலை சுட்டிய ஓரிரு கோயில்கள் மட்டுமல்ல. பலபல கோயில்கள் இப்படி பவுத்த விகாரங்களை இடித்துக்கட்டப்பட்டவை. திருப்பதி கோயிலைபற்றி அது ஒரு காட்டுக்காளி கோயிலென்று.
ஆக, முதலில் இசுலாமியருக்கு முன்னோடிகள் இந்துக்கள் எனலாம்.
நான் ஏற்கனவே சுட்டிக்காட்டியபடி ஆர் ஆர் எப்போதெபோது செல்வாக்குடன் இருக்கும்போதி இப்படிப்பட்ட ஆதிக்கம் இருக்கத்தான் செய்யும்.
அவர்கள் செய்ததற்கு இப்போது அடித்துக்கொள்வது பரிதாமமும் மடைமையும் ஆகும்.
30ம்தீர்ப்பை இசுலாமியர்கள் – தங்களுக்கு சார்பாக இல்லாவிட்டாலும் – ஏற்றுக்கொள்கிறொமென்று விட்டார்கள்.
இந்துக்கள் தங்களுக்குச் சார்பாகவில்லயென்றால், அந்த நீதிபதையை இசுலாமியத்தீவிரவாதியென்று சொல்வார்கள்.
செப்டம்பர் 28, 2010 at 8:24 பிற்பகல்
ஜோ, அதனால்தான் statute of limitations முக்கியம் என்று கருதுகிறேன்.
செப்டம்பர் 29, 2010 at 5:24 மு.பகல்
நாடு நிலை வாதிகள் கொஞ்சம் இதையும் உதாரணத்தில் சேர்த்துக் கொண்டு தங்கள் நடுநிலையை நிலை நாட்டிக் கொள்ளலாம்.
கபாலீஸ்வரர் கோவில் சாந்தோம் சர்ச்சாக மாறியது, வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலை கையகப் படுத்தியது, தாய்லாந் கம்போடியா போன்ற இடங்களில் இந்துக் கோவில்கள் புத்த கோவில்களாக மாறியது, இப்போது ஸ்ரீ லங்காவில் இந்துக் கோவில்கள் புத்த, கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகளின் பிடிக்குள் சிக்குவது, இந்தியாவின் வெவேறு இடங்களில் திருப்பதி, சப்தகிரி, காசி மற்றும் மலைவாழ் குடியிருப்புகளில் நடக்கும் தீவிர மதமாற்ற முயற்சிகள் …
ஒட்டு மொத்தமாக ஒரு சார்புடைமையோடு கூறப்படும் வாதங்கள் நடுநிலை வாதங்கள் ஆகாது
செப்டம்பர் 29, 2010 at 7:40 மு.பகல்
விருட்சம், // கபாலீஸ்வரர் கோவில் சாந்தோம் சர்ச்சாக மாறியது… // இதன் relevance-உம் புரியவில்லை. வழிபாட்டு தலங்கள் இடிக்கப்பட்டது இன்றைய விழுமியங்களின் படி தவறே என்று வெளிப்படையகா சொல்ல வேண்டுமா?
செப்டம்பர் 29, 2010 at 4:56 பிற்பகல்
சாந்தோம் தேவாலயம் கபாலீசுவரர் கோயிலுக்குப் பக்கத்திலே இல்லை. அது சற்றுத் தொலைவில்தான் உள்ளது. அது எப்படி கைமாறியது என்பதை விருச்சம் ஆதாரங்களோடு சொன்னால், நாம் தெரிந்துகொள்ளலாம்.
சாந்தோம் கட்டப்பட்டது ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்புதான். அதுவும் கிருத்துவ பாதிரிகளால். அவர்கள் ஆதாரங்களை அழிக்கமாட்டார்கள். அது அப்படியே உரோம் வட்டிகானில் இருக்கும்.
வன்முறையால் எது எடுக்கப்பட்டதோ அதுவே கேள்விக்குறியாக்கப்படும். மற்றபடி எதையும் விமர்சனத்துக்குள்ளாக்கப் படக்கூடாது.
ஒரு இந்து தன் நிலத்தை ஒரு கிருத்துவ தேவாலாயம் கட்டக் கொடுக்கிறார் கணிசமான் தொகைக்கு அதை விற்று.
பலவாண்டுகளுக்குப்பின் அந்த இந்துவை ஏமாற்றி வாங்கி தேவாலாயம் கட்டிவிட்டார்கள் என்று சொல்லலாமா? விருச்சம் சொல்வது அப்படித்தான் இருக்கிறது.
செப்டம்பர் 29, 2010 at 5:00 பிற்பகல்
இங்கு நாம் கதைப்பது ஒரு மத்த்தாரின் வழிப்பாட்டுத் தலங்களை அப்போது ஆதிக்கச்சக்திகளாக விளங்கியவர்கள் அம்மத்ததாரை அடக்கியொடுக்கி வன்முறை செய்து, நிலத்தை கையகப்படுத்தி, அன்னிலத்தில் எழுப்பப்பட்ட வழிபாட்டு தலங்களையிடித்து, தம் மதவழிபாட்டு தலங்களாக ஆக்கிக்கொண்டதைப்பற்றியே.
ஆனால், விருச்சம், மத மாற்றத்தைப்பேசிக்கொண்டிருக்கிறார்.
இக்கட்டத்தில், விருச்சம், தான் எழுதியதைப்படிக்கட்டும்:
“ஒட்டு மொத்தமாக ஒரு சார்புடைமையோடு கூறப்படும் வாதங்கள் நடுநிலை வாதங்கள் ஆகாது”
செப்டம்பர் 29, 2010 at 5:09 பிற்பகல்
”ஒட்டு மொத்தமாக ஒரு சார்புடைமையோடு கூறப்படும் வாதங்கள் நடுநிலை வாதங்கள் ஆகாது”
இப்போது, விருச்சம் இலங்கையைப்பற்றிச்சொன்னதைப்பார்த்தால் எப்படி அவர் தான் எழுதியதையே மீறுகிறார் என்பது தெளிவாகும். Like the life hand does not know what the right hand is doing.
அவ்ர் எழுதியது:
“இப்போது ஸ்ரீ லங்காவில் இந்துக் கோவில்கள் புத்த, கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகளின் பிடிக்குள் சிக்குவது,”
இலங்கையில் இந்துக்கோயில்கள் புத்த விகாரங்களாகிக்கொண்டு வருகின்றன எனபது இலங்கைத்தமிழர்களில் இந்துக்களின் குற்றச்சாட்டு. அதற்கு ஆதரங்கள் தருகிறார்கள். அவர்களில் எவரும் கிருத்துவர்களோ, இசுலாமியர்களோ இந்துக்கோயில்களை மாற்றிக்கொண்டுவருகிறார்கள் என்று எங்கேயும் சொல்லவைல்லை. விருச்சம் மட்டுமே சொல்கிறார். என்ன ஆதாரம்?
விடுதலைப்புலிகளின் குற்றச்சாட்டுகளில் ஒன்று:
நாங்கள் அனைவரும் இந்துக்கள். தமிழ் இசுலாமியர்களைக்கூட நாங்கள் யாழின் இருந்து விரட்டிவிட்டோம். எங்கள் கோயில்கள் இடிக்க்பட்டன. கதிர்காமத்தின் குர்க்களைக்கொன்று அவரின் மகள் கற்பழிக்கப்பட்டார்.
ஆனால் இந்து அமைப்புகள் எங்களுக்கு உதவிக்கு வ்ரவில்லை. அதே வேளையில், நேபாள் ராஜாவுக்கு உதவி செய்யப்போனார்கள் அவர் மாவோயிஸ்டுகள் இந்துக்கோயில்களிலிருந்து பூஜார்களை இந்தியவுக்கு விரட்டியதாம்.
விருச்சத்தின் நடுனிலை எப்படி?
செப்டம்பர் 29, 2010 at 9:01 மு.பகல்
இல்லை. அன்றைய விழுமியங்கள் படி இந்துத் தளங்கள் இடிக்கப் பட்டது மாத்திரம் சரி என்கிற தொனியில் இந்துக்களால் இடிக்கப்பட்டதான சில உதாரணங்களை மட்டும் தேடிக் கொண்டு ஒரு மாயையை உருவாக்க முயலும் சில பின்னூட்டங்களுக்கான பதில் அவ்வளவே
செப்டம்பர் 29, 2010 at 5:16 பிற்பகல்
என் வாத்த்தின் மாயை இல்லவே இல்லை. என் ஒரே கருத்து என்னவென்றால்,
Every historical incident should not be looked as either bad or good. Rather, in its historical context. The context determines its justification. Justification does not either include or exclude any pros and cons.
THEY ARE JUST INCIDENTS.
If the incident is ‘bad’ in today’s context, you can undo it, only with the overwhelming support across the sections of society.
On the contary, if you attempt to undo it, therey causing violence, dissaatisfaction and disaffections among some sections of society, then, it is better not to venture at all.
Let bygones be bygones.
இதில் எங்கே இருக்கிறது ‘மாயை’? எங்கே இருக்கிறது ஒருதலைப்பட்சமான வாதம்?
If, instead of Babri Masjid and Ram mandir, the case involves a Church and a gurudwara, my stand will remain unaltered.
செப்டம்பர் 29, 2010 at 5:19 பிற்பகல்
Sex, lies and tapes.
இதே மாதிரிதான்,
When it comes to religion (of group), lies, false evidences and instigationa.
செப்டம்பர் 29, 2010 at 7:01 பிற்பகல்
ராமரா? பாபரா? – எப்படி இருக்கும் தீர்ப்பு
கடந்த 60 ஆண்டுகளில் பல்வேறு அவதாரங்களை எடுத்த இந்த வழக்கு, இப்போது ஒரு உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட ஒரு பெஞ்ச்சின் தீர்ப்பில் அடுத்த கட்டத்தை அடையவிருக்கிறது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருப்பினும் மற்றொரு தரப்பினர் கண்டிப்பாக உச்சநீதிமன்றத்திற்குச் சென்று மேல்முறையீடு செய்ய இருப்பதால் 60 ஆண்டுகால நீதிமன்றப் போராட்டம் முடிவுக்கு வரப்போவதில்லை. ஆனாலும், இந்தத் தீர்ப்பின் தாக்கம் பலமாக இருக்கும் என்ற அச்சம் ஆளுங்கட்சியிடமும் இருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.கவிடமும் இருக்கிறது.
வெளிவரும் தீர்ப்பில் இரண்டு முக்கிய கேள்விகளுக்கு விடை கிடைக்க இருக்கிறது. ஒன்று, பாபர் மசூதி இருந்த இடத்தின் கீழ்தான் ராமர் பிறந்தாரா என்பது முதல் கேள்வி. இரண்டாவது, பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன் அங்கே ஒரு கோயில் இருந்ததா, இல்லையா? என்ற கேள்வி.
இதில் முதல் கேள்வியானது சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஒரு கேள்வி என்பது அடிப்படை அறிவுடைய அனைவருக்கும் தெரிந்தே இருக்கிறது. மத நம்பிக்கை அடிப்படையிலோ அல்லது மத துவேஷத்தின் அடிப்படையிலோ இங்குதான் ராமர் பிறந்தார் என்று வாதிட்டாலும்கூட, அங்குதான் பிறந்தார் என்பதற்கான எந்தவித ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆதாரங்களும் அவர்களிடம் இல்லை.
கைகேயிக்கு பிள்ளைப்பேறு பார்த்த மருத்துவச்சியைத் தவிர வேறு யாராலும் ராமர் பிறந்த இடம் இதுதான் என்று அறுதியிட்டு உறுதியாகக் கூறமுடியாது. கைகேயியின் மருத்துவச்சி யாரென்று வால்மீகிக்கே தெரியவில்லை.
ஆக, இந்த விஷயத்தில் சட்டரீதியாக நீதிபதிகள் எப்படி முடிவெடுக்கப்போகிறார்கள் என்பது மக்களின் ஆர்வத்தை தூண்டக்கூடிய விதத்தில் உள்ளது.
இரண்டாவதாக, மசூதி இருந்த இடத்தில் கோயில் இல்லை என்று கூறிவிட்டால், அந்த நிலம் முஸ்லிம் மக்களுக்கே சென்றுவிடும். அவர்கள் அதில் மசூதி கட்டுவது உள்பட என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். ஆனால், கோயில் இருந்தது உண்மை என்றொரு நிலையை நீதி மன்றம் எடுத்தால்கூட, வி.ஹெச்.பியும் ஆர்.எஸ். எஸ்ஸும் அங்கு சென்று நிலத்தை கையகப்படுத் திக்கொள்ள முடியாது
400 வருட வயதுடைய மசூதியை 1992ஆம் ஆண்டில் இவர்கள் இடித்துத் தள்ளியது அனைவரும் அறிந்ததுதான். இங்கு கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம் என்ன வென்றால், பல்லாண்டு காலமாக இருக்கக்கூடிய வழிபாட்டுத்தலத்தில் வரலாற்றின் அடிப்படையில், முதல் வழிபாட்டுத் தலத்திற்குரிய மதத்தினர், பின்னால் வந்தவர்களுக்கு அதனைத் தர வேண்டியதில்லை என்பதே சட்ட முன்னுதாரணமாகும்.
1940ஆம் ஆண்டு இன்றைய இந்திய உச்சநீதி மன்றத்தின் முன்னோடியான பிரிவி கவுன்சில் என்றழைக்கப்பட்ட காலனி ஆதிக்க உச்சநீதி பரிபாலன அமைப்பு, லாகூரில் சாகித் கஞ்ச் மசூதி பற்றி அளித்த தீர்ப்புதான் இந்த முக்கிய முன்னுதாரணம். அங்கு 1722 முதல் ஒரு மசூதி இருந்து வந்தது. ஆனால், 1962ஆம் ஆண்டு சீக்கிய ஆட்சியின்கீழ் அந்தக் கட்டிடம் குருத்வாராவாக மாற்றம் பெற்றது. இது எங்களுடைய வழிபாட்டுத் தலம் எங்களுக்குத் திருப்பித் தரவேண்டும் என்று பல நூறு ஆண்டுகள் கழிந்த பிறகு, 1935ஆம் ஆண்டில் முஸ்லிம்கள் ஒரு வழக்கு தொடுத்தனர்.
பல்வேறு நீதி மன்றங்களைக் கடந்த இந்த வழக்கு 1940-ல் பிரிவி கவுன்சில் முன்னால் வந்தது. அதை முழுமையாக விசாரித்த பிரிவி கவுன்சில் இந்த இடத்தை சீக்கியர்கள் வக்ஃப் வாரியத்தின் நலனுக்கு எதிராக எடுத்திருப்ப தற்கான வாய்ப்புகள் இருக்கலாம். ஆனால், எடுத்த 12 வருடங்களுக்குள் இது எந்தவிதமான சட்டமுறைகளுக்கும் வராத காரணத்தினால் இந்த நிலத்தின் உரிமை குறித்து, 200 வருடங்கள் கழிந்த நிலையில் விவாதிக்க முடியாது. ஆகவே, வரலாற்று ரீதியாக மசூதியாக இருக்கிறதா அல்லவா என்பதல்ல பிரச்சினை.
எப்படி குடியுரிமை என்பது, இரண்டு தலை முறைகளாக ஒருவர் ஒரு நாட்டில் இருந்துவிட்டால் அவர் அந்த நாட்டின் குடியுரிமைக்குப் பாத்தியதாரர் ஆகிறாரோ அது போலவும், எப்படி நிலச்சுவான்தார்களுக்கு சொந்தமாக உள்ள நிலங்கள், அவர்கள் அங்கு இல்லாத நிலையில்- அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களால் தொடர்ந்து 14 ஆண்டுகள் விவசாயம் செய்யப்பட்டபின்- 3 தலைமுறை கழித்து திரும்பி வரும் நிலச்சுவான்தாரர்களின் வாரிசுகள் அதனை உரிமை கொண்டாட முடியாதோ, அதுதான் வழி பாட்டுத் தலங்களுக்கும் பொருந்தக்கூடிய பொதுவான சட்டமாகும். காரணம், வழிபாட்டுத் தலமாக இருந்தாலும் அதை சொத்துப் பிரச்சினையாகவும் சொத்தின் வாரிசுதாரர் உரிமைப் பிரச்சினையாகவும் மட்டுமே பார்க்க முடியும் என்று தெளிவாகச் சொல்லியுள்ளது பிரிவி கவுன்சில். ஆக, பாபர் காலத்தில் எடுக்கப்பட்ட ஒரு இடத்தை 400 ஆண்டு கள் கழித்து உரிமை கொண்டாட வருவதற்கு சொத்துரிமை சட்டத்தின்கீழ் இடமில்லை என்பதே முதல் கருத்து. எனவே அந்த இடம் ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி.க்கு செல்லும் வாய்ப்பு குறைவே.
அடுத்ததாக, சொத்து சட்டம் மட்டுமில்லாமல் இந்தியாவில் பொதுநல சட்டமும் உண்டு. சொத்து தகராறில் குற்றம் இழைக்கப்பட்டால் பொதுநல சட்டமும் சொத்து சட்டமும் இணைந்தே பார்க்கப் படவேண்டும் என்பது சட்டவிதி. உதாரணமாக, சொத்துக்கு ஆசைப்பட்டு தன் மூதாதையர் யாரையேனும் ஒருவர் கொன்றுவிட்டால் அவர் வாரிசுதாரராகும் உரிமையை இழந்துவிடுகிறார். பாபர் மசூதி வழக்கைப் பொறுத்தவரையில், மசூதி இடிப்பு என்பது நீதியரசர் ராஜேந்தர் சச்சார் வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால், அதாவது, மிக மோசமான திட்டமிட்ட கொலை. இந்த விதத்தில் பார்க்கும்போது, நிலத்தை அபகரிப்பதற்காக அங்கிருந்த வழிபாட்டுத் தலத்தை அழித்த காரணத்தினால் நிலத்தை பெறும் உரிமையை இந்துத்வா அமைப்புகள் இழந்துவிடுகின்றன.
பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு சில இஸ்லாமிய அமைப்புகள் இந்துத்வா அமைப்புகளைப் போலவே அனுசரித்து போகக்கூடிய தன்மையற்றவையாக மாறியது உண்மை. ஆனால், பெரு வாரியான முஸ்லிம்கள் இந்தியாவின் பன்முக அமைப்பினை ஏற்றுக்கொண்டு, தங்களுக்கான அடையாளத்தை இழக்காமல் நம்பிக்கையுடன் இருப்பதை நாம் மறக்கக்கூடாது.
1947ல் மதத்தின் அடிப்படையில் இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்தபோதுகூட, இந்தியாவை விட்டு வெளியேறிய முஸ்லிம்களைவிட இந்தியாவிலேயே தங்கிவிட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை 75% அதிகமாகும். இன்று, உலகத்தில் இந்தோனேஷியா வுக்கு அடுத்தபடியாக முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள இரண்டாவது நாடு இந்தியாவாகும். ஆக, இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு காரணம், பெருவாரியான இந்துக்களின் பரந்த மனப்பான்மை என்ற பொய்முகத்தைத்தாண்டி, இந்த நாட்டின் மீதும் இந்த மக்களின் மீதும் சிறுபான்மையினர் வைத்திருக்கும் நம்பிக்கைதான் அடிப்படை காரணம் என்பதை உணரவேண்டும்.
சாதகமான தீர்ப்பு வந்தாலும், பாதகமான தீர்ப்பு வந்தாலும் இதனை எப்படி எதிர்கொள்வது என்ற தெளிவில்லாமலேயே இருக்கிறார்கள் இந்துத்வா தலைவர்கள் என்பது நிதர்சன உண்மை. 1986 முதல் 96 வரையிலிருந்த தீ உமிழும் மொழிகள் இன்று பரிவாரத் தலைவர்களிடமிருந்து வெளிப்படவில்லை. காரணம், அவர்களைப் பொறுத்தவரையில் அயோத்தியா விவகாரம் 80-களின் இறுதியிலும் 90களிலும் இருந்த அளவுக்கு, மக்களைத் திரட்டக்கூடிய ஒரு ஆயுதமாக இப்போது இல்லாமல் போய்விட்டதுதான்.
இதில் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது என்னவென்றால், 1992-ல் மசூதி இடிக்கப்பட்டபோது அதன் செயல்தலைவராய் விளங்கிய அத்வானி இப்போது கட்சிக்குள்ளேயே ஓரங்கட்டப்பட்டிருக்கிறார். 92-ல் கதாநாயகனான கல்யாண்சிங், எந்தவித அடையாளமும் இல்லாதவராக மாறியிருக்கிறார். அவர் செப்டம்பர் 14-ந் தேதி அயோத்தியில் நடத்திய போராட்டத்தில் அவரும் அவரது நிழலும் மட்டுமே கலந்து கொண்டதை டெலிவிஷனைப் பார்த்தவர் களுக்குத் தெரியும். இன்னும் ஒரு தள்ளு தள்ளுவோம் என்று கோஷம் எழுப்பிய சாத்வி ரிதம்பரா இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு ஆசிரமத்தில் தனியாக இருக்கிறார். உமாபாரதியும் பஜ்ரங்தள் நிறுவனரான வினய் கட்டியாரும் தங்களுடைய ஆகிருதி மிகச் சுருங்கி, கட்சியில் மீண்டும் தங்களுக்கு ஒரு இடம் கிடைக்காதா என்ற ஆவலில் அலையும் நிலையில் இருக்கிறார்கள்.
அடுத்ததாக, 92-ல் பாபர் மசூதி இடித்தபிறகு ஒரு புதிய தலைமுறை யையே இந்த நாடு கண்டுவிட்டது. இந்தத் தலைமுறையினர் தாராள மயமாக்கல், தொழில்நுட்பத்தின் பரவல், உலகமயமாக்கல் ஆகியவற்றின் கவர்ச்சியில் இந்துத்வாவை விட்டு வெளியேற ஆரம்பித்துவிட்டனர் என்ற உண்மையை யும் நாம் மறுக்க முடியாது.
1991-க்கு முன்பிருந்த வணிகம் சார்ந்த வியாபாரிகளும் தொழிலதிபர்களும் காங்கிரசின் இடதுசாரித்தன்மைக்கு எதிரான நிலையை பா.ஜ.க எடுத்து, தங்கள் நலனைப் பாதுகாக்கும் என அதற்கு பணமளித்து வந்தது உண்மை. ஆனால், தாராளமயமாக்கலின் தந்தையான மன்மோகன்சிங்கே பிரதமராக இருக்கும் ஆட்சி, தங்களுடைய நலனை மிக அதிகம் பாதுகாக்கும் என்று முடிவெடுத்திருக்கிற காரணத்தினால் தொழிலதிபர்கள் மற்றும் வணிகர்களின் ஆதரவு பா.ஜ.க.வுக்கு கடந்த 7 ஆண்டுகளில் குறைந்திருப்பதை கண் கூடாக காணமுடிகிறது.
நன்றி: ஏ.எஸ் பன்னீர்செல்வன்
செப்டம்பர் 29, 2010 at 8:41 பிற்பகல்
தீர்ப்பு வந்த பிறகு பேசலாம் என்று இருக்கிறேன்.
செப்டம்பர் 30, 2010 at 6:39 மு.பகல்
பேசுங்க..பேசுங்க.
மூன்று நீதிபதிகளில் ஒருவர் இசுலாமியர். மற்றுமிருவர் இந்துக்கள். இருவரில் ஒருவர் அனுமானின் தீவிர பக்தராம்.
தீர்ப்பு இந்துக்களுக்கு எதிரானால், அந்த முசுலீம் நீதிபதி சதி செய்துவிட்டார் என்பார்கள்.
முசுலீம்களுக்கு எதிரானால், அனுமான் பக்தர் சதி செய்துவிட்டார் என்பார்கள்.
மனமிருந்தால் மட்டுமே மார்க்கம். இல்லாவிட்டால் எந்த பிரசனயும் முடியாது. முடிந்த மாதிரி சிலகாலம் படுத்துக்கிடக்கும் அவ்வளவுதான்.
இந்தத் தீர்ப்பு எப்படியிருப்பினும், the problem will always be kept alive.
It is a festering factional feud!
செப்டம்பர் 30, 2010 at 12:56 பிற்பகல்
தீர்ப்பு வந்தே விட்டது.
மூனில் ஒரு பங்கு என்று இடம் பிரிக்கப்பட்டாலும், தில் முக்கியம் ஹிந்துக்களின் நம்பிக்கைக்கு கிடைத்த நீதி என்பது தான். ராமர் ஒரு கற்பனைப் பாத்திரம் என்று பெருவாரி மக்களின் நம்பிக்கை மேல் சேறு வாரி இறைத்தவ்ர்கள் இப்போது என்ன செய்வார்கள் ? சேது சமுத்திர விவகாரம் தொடர்பாக அம்பிகா சோனி ராமாயணம் ஒரு நிகழ்வு அல்ல என்று அறிக்கை எல்லாம் தாக்கல் செய்து பின் பின்வாங்கியதை இங்கே நினைவு கூறுகிறேன்
செப்டம்பர் 30, 2010 at 3:34 பிற்பகல்
முதலில், முசுலீம்கள் இத்தீர்ப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் உச்ச நீதிமன்றத்திற்குச் செல்லவிருக்கிறார்கள். அங்கே என்ன சொல்லப்படுகிறதோ அதுவே இறுதித்தீர்ப்பாகும்.
ஒருவேளை, அங்கே,
‘எப்படி அலாகாபாத் நீதிபதிகள் 75 லட்சம் வருடங்களுக்கு முன் இங்கே இராமர் பிறந்தார் என்ற நம்பிக்கையை ஏற்றுக்கொண்டு, இங்கேதான் பிறந்தார் எனச்சொன்னார்கள்? என்று கேட்டால்…!
நீதி என்பது இருவகைபடும்:
1. poetic justice
2. man-made justice.
நீதி மன்றங்களில் சொல்லப்படுவது இரண்டாவ்தே.
நம்பிக்கை போன்றவற்றை அடிப்படையாக வைத்துச்சொல்லப்படும் நீதி முதல் வகையாகும்.
எனவே விருச்சம், பெருவகையான மக்கள் நம்பிக்கை மேல் சேறு வாரி இறைப்பதும் இறைக்காத்தும், நீதிபதிகளின் வேலை அல்ல. அவர்கள் அவர்களுக்குமுன் வைக்கப்பட்ட பொருட்களின் ஆதாரத்ததை வைத்தே நீதி எழுத வேண்டும்.
என்னன்ன ஆதாராங்கள் வைக்கப்பட்டன? அகழ்வாராய்ச்சியா?
அகழ்வாராய்ச்சி அங்கே இராமர் கோயில் இருந்ததா என்றுதான் சொல்லுமே தவிர இராமர் 75 லட்சம் வருடங்களுக்கு முன் இங்கேதான் பிறந்தார் என்பதைச் சொல்லாது; சொல்லவும் முடியாது.
அகழ்வாராய்ச்சி ஆதாரத்தின் படி, அலாகாபாத் நீதிபதிகள் சொன்னது யாதெனில்,
Babar built the mosque on the ruins of a temple.
அதாவது, பாபர் ஒரு இராமர் கோயிலை இடித்து ம்சூதி கட்டவைல்லை.
It punches the theory of indutvalobby, doesnt it?
And what about you? You are concocting here many stories of destruction of Hindu temples by moslems and chritians. Do you accept the verdict, which says Ramar temple was not destroyed? There were only ruins of a temple. Sastras forbid Hindus to offer worship in a ruined temple. Do you know that?
செப்டம்பர் 30, 2010 at 3:45 பிற்பகல்
“சேது சமுத்திர விவகாரம் தொடர்பாக அம்பிகா சோனி ராமாயணம் ஒரு நிகழ்வு அல்ல என்று அறிக்கை எல்லாம் தாக்கல் செய்து பின் பின்வாங்கியதை இங்கே நினைவு கூறுகிறேன்”
So, you are waiting for a favorable judgment regarding Sethu canal, arent you?
75 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் இராமர் இங்கே பாலம் கட்டி இலங்கையைக்கடந்தார் என்பதை நீதிபதிகள் சொல்லவேண்டும்:
”ஆம், இங்கேதான் என்று நாங்கள் தீர்ப்பளிக்கிறோம்”
எதை வைத்து அமெரிக்கன் சாட்டிலைட் பட்த்தை வைத்தா?
நம்பிக்கையே மதமாகும். கடவுளைக்கண்டவர் இல்லை. ஆனால் நம்புகிறொம். நீதிபதிகள் “ஆம், க்டவுள் உண்டு என்று தீர்ப்பளிக்கிறோம்” என்றவுடனேதான் நம்புவீர்களா? அல்லது மனிதர்கள் உங்களிடம் கடவுளை காட்டி நிருபீத்தால்தான் நம்புவீர்களா?
சேது சமுத்திரத்தை இராமர் கட்டினார் என்பது நம்பிக்கை. நிரூபிக்கமுடியாது. அதற்கு விஞ்ஞானத்தின் துணை வேண்டும். விஞ்ஞானம் அங்கே ஒரு பாலம் உண்டு என்றும் அது தொன்மையானது என்றுதான் சொல்லுமே தவிர இராமர்தான் கட்டினார் என்று சொல்லமுடியாது மனிதனால்.
ஆக, இப்படிப்ப்ட்ட நம்பிக்கைகள் நீதிமன்றத்திற்கு வருமேயானால், நீதிபதிகள்:
“Such matters of belief are beyond our ability to sit in judgement over; or to decide legally. Hence, case dismissed at admission stage itself”
என்று சொல்லவேண்டும். அலாகாபாத் நீதிபதிகள் சொல்லாமல்,
“We decide that 75 laks of years ago (which is the count of thredha yugam), Ramar was born here”
சிரிப்பாக இல்லையா விருச்சம்?
செப்டம்பர் 30, 2010 at 5:03 பிற்பகல்
எனக்கு பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட (1992) நாளைவிட, முஸ்லிம்களை தொழ அனுமதிக்காமல் பூட்டி சீல்வைத்த(1950)நாளைவிட, இன்றுதான் இந்தியாவிற்கு பெருத்த தலை குனிவாய் கேவலமான அவமானமாய் உள்ளது.
இன்றைய தீர்ப்பு என்பது, உண்மையில் நீதியை நிலை நாட்டுவதற்கும்… ஹிந்துத்வா ஆதரவு நிலைக்கும்… இடையேயான ஒரு முக்கியமான அமில சோதனை. ராமர் இந்துக்களின் கடவுளானது எப்போது? பாபர் ஆட்சிக்காலத்துக்கு முன்பா அல்லது பின்பா? ராமர் பிறப்புக்கு பிரசவம் பார்த்த(?)வர்கள் மிகச்சரியாக ‘ராமர் பிறந்த இடம் பாபர் மசூதிதான்’ என்று கண்டுபிடித்து சொன்ன அந்த அநீதிபதிகளின் தீர்ப்பால்… கடைசியில் வழக்கம்போலவே ஹிந்துத்வாதான் வெற்றி பெற்று விட்டது.
அறுபது ஆண்டுகாலமாக கோமாவில் கிடந்த நீதி இன்று ஒரேயடியாய் செத்து விட்டது…
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்…
நல்லடக்கமா அல்லது தகனமா… அது… (அதாங்க… மேல்முறையீடு செய்தபின்னர் வரணுமே …சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு… அதுதான்…) அது எப்போது என்று தெரியவில்லை.
அநேகமாய், இன்று முஸ்லிம்களிடம் கொடுக்கப்பட்ட மீதம் உள்ள மூன்றில் ஒரு பகுதி நிலத்தையும் அன்று முழுசாய் பிடுங்கிக்கொண்டு அம்போவென முஸ்லிம்களை ஓட ஓட விரட்டி அடித்து அனுப்பப்போகிறார்கள், சுப்ரீம் கோர்ட்டில்…
என்னைக்கேட்டால், முஸ்லிம்கள் முட்டாள்த்தனமாய் மேல்முறையீடு எல்லாம் செய்யாமல், ஓரமாய் தரப்பட்ட அந்த ஒரு துக்கடா நிலத்தை தங்கள் கபருஸ்தான் நிலமாக ஆக்கிக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன். இந்தியாவில் மதக்கலவரத்தில் கொல்லப்படும் அனைத்து முஸ்லிம்களையும் கொண்டு போய் அங்கே அடக்கம் செய்யலாம்.
இனி, மேலும் மேலும் பல பல மசூதிகளில் இரவோடு இரவாக கதவை-பூட்டை உடைத்து ஹிந்து கடவுள் சிலைகளை உள்ளே வைத்து அப்புறம் கேஸ் போட்டு அந்த மசூதிகளை பூட்டி பாழடைய வைத்து பின்னர் ஒருநாள் இடித்துத்தள்ளிவிட்டு அவற்றை தங்கள் வசமாக்கிக்கொள்ள ஹிந்துத்துவாக்களை உற்சாகப்படுத்தும்படியான ஒரு கெட்ட அழிவுப்பாதையின் தொடக்கம்தான் இன்று வந்த இந்த தீர்ப்பு.
‘இந்திய மதச்சார்பின்மை’ எனும் மாயையிலிருந்து முற்றிலும் விடுபட மேலும் ஒரு வாய்ப்பு என்பதைத்தவிர இத்தீர்ப்பால் முஸ்லிம்களுக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை.
ஆனால், நிலம் பெற்றவர்கள் பெருத்த மகிழ்ச்சியில் உள்ளார்கள். உடனடியாய் கோவில் கட்டி பெரிய்ய்ய்ய்ய்ய்ய உண்டியல் வைத்து கோடி கோடியாய் சம்பாதித்து திருப்பதி ஏழுமலையானையே விரைவில் ஓவர்டேக் செய்வார்கள்.
வாழ்க … இந்துயா…
நன்றி … அநீதி மன்றம்…
அக்டோபர் 1, 2010 at 5:36 மு.பகல்
என்னைக்கேட்டால், முஸ்லிம்கள் முட்டாள்த்தனமாய் மேல்முறையீடு எல்லாம் செய்யாமல், ஓரமாய் தரப்பட்ட அந்த ஒரு துக்கடா நிலத்தை தங்கள் கபருஸ்தான் நிலமாக ஆக்கிக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன். இந்தியாவில் மதக்கலவரத்தில் கொல்லப்படும் அனைத்து முஸ்லிம்களையும் கொண்டு போய் அங்கே அடக்கம் செய்யலாம்.”
அசத்தல்.
இதைத்தான் செய்யவேண்டும்.
ஆனால் இதைச்செய்ய இந்துத்வாவினர் விட மாட்டார்கள். எங்கள் சாமியை இவர்கள் அவமானப்படுத்துகிறார்கள் என்பார்கள்.
ஒன்று செய்யலாம். இங்கே மதக்கலவரங்களில் அனாதைகளாக்கப்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கு விடுதியும் கல்விக்கூடமும் இசுலாமிய அமைப்புகள் நடாத்தலாம். அதைப்ப்பார்த்து இந்துக்கள் ‘எந்த வாழ்க்கை சிறந்தது?’ என்று பாடம் படிக்கலாம்.
“முஸ்லிம்களை ஓட ஓட விரட்டி அடித்து அனுப்பப்போகிறார்கள், சுப்ரீம் கோர்ட்டில்…”
அப்படியெல்லாம் நடக்காது. இஃது ஒரு discretionary ஜட்ஜ்மென்ட் more or less. எனவே சுப்ரீம் கோர்ட்டு நன்றாக குடையும்.
அக்டோபர் 1, 2010 at 6:55 மு.பகல்
//அப்படியெல்லாம் நடக்காது. இஃது ஒரு discretionary ஜட்ஜ்மென்ட் more or less. எனவே சுப்ரீம் கோர்ட்டு நன்றாக குடையும்//—
we saw well, how it //குடையும்// did in afsal guru case…
“eventhough there is no any solid evidence against him for the bomb blast, he will be hanged to death only because that is the millions and millions of indian’s wish”.
so, in future, it will be millions and millions of indian’s wish that even a square feet must not be given to muslims…
அக்டோபர் 1, 2010 at 6:03 பிற்பகல்
I have read all the commetns but i never see no bad comments or irritating the openents religion from Hidus, I found they are really soft and senscitive.. and last three comments are not fair which blaming hindu religon, dont do that in public blogs. I strongly and agree and able to understand you feelings but the way of your commenting other religion is not good… do ever do that. Its not your county or other country its a country for all. do not try to separate. be indian don’t be a religion…..
அக்டோபர் 2, 2010 at 5:36 மு.பகல்
@Sam
உங்கள் பதிலை வரவேற்கிறேன்.
எதிர்மறை பின்னூட்டங்கள் பொதுவாக சம்பந்தப் பட்ட இரு மதத்தினரிடம் இருந்து வருவது புரிந்து கொள்ளக் கூடியது. ஆனால் இந்த விஷயத்தில் பெரும்பான்மையாக இரு மதத்தை சேர்ந்த பொது மக்களும் மதவாதிகளும் கூட ஆரோக்கியமான முதிர்ச்சியான முறையில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் அல்லது அமைத்து காத்து இருக்கிறார்கள். நாட்டின் தலையாய பிரச்னை இதுவல்ல என்பதன் புரிதல் நிலை இது.
ஆனால் நடுநிலைவாதிகளாக காட்டிக் கொள்ளுபவர்களும் பிற மதத்தை சேர்ந்தவர்களும் பெரிய எதிர்பார்ப்போடு இருந்திருக்கிறார்கள். இப்படி ஆகும் அப்படி ஆகும் பாருங்கள் பாருங்கள் என்று சொல்லிக் கொண்டு இருந்தார்கள். அது நடக்கவில்லை என்பதால் இப்போ தூண்டுதல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
அக்டோபர் 1, 2010 at 6:19 பிற்பகல்
முகமது ஆஷிக், உங்கள் வலி புரிகிறது. ஆனால் இரண்டு பேருக்கு நடுவில் ஒரு தகராறு, அதைத் தீர்க்க ஒரு கோர்ட் என்று இருந்தால், அந்த கோர்ட் தரும் தீர்ப்பை – தனக்கு சாதகமாக இருக்கிறதோ இல்லையோ – ஏற்பதுதான் சரியான அணுகுமுறை.
அக்டோபர் 15, 2010 at 8:20 பிற்பகல்
முகமது ஆஷிக் அவர்களின் வலியைப் புரிந்த RV அவர்களே தங்கள் பின்னூட்டத்தில் நான் அடைப்புக்குறிக்குள் போட்டிருப்பதையும் சேர்த்து போட்டுப்பாருங்கள் நன்றாக இருக்கும்
//ஆனால் இரண்டு பேருக்கு நடுவில் ஒரு தகராறு, அதைத் தீர்க்க ஒரு கோர்ட் என்று இருந்தால்,(சரியான ஆதாரங்களின் அடிப்படையில்) அந்த கோர்ட் தரும் தீர்ப்பை – தனக்கு சாதகமாக இருக்கிறதோ இல்லையோ – ஏற்பதுதான் சரியான அணுகுமுறை.//
அக்டோபர் 19, 2010 at 7:57 மு.பகல்
முஸ்லிம் நண்பன், என்ன சொல்ல வருகிறீர்கள் என்று சரியாக புரியவில்லை.