ராஜன் ஸ்கான் செய்து அனுப்பிய இந்தியா டுடே கட்டுரை. லிங்கை கிளிக்கினால் உங்கள் கம்ப்யூட்டரில் இது டவுன்லோட் ஆகும்.
டவுன்லோட் செய்து படிக்க சோம்பேறித்தனப்படுபவர்களுக்காக இங்கே சுருக்கமாக: அரசியல் அதிகாரம், தகவல் துறை domination, சினிமாவை மெதுவாக கைக்குள் கொண்டு வருவது எல்லாம் இன்று கலைஞர் கருணாநிதி குடும்பத்தவரிடம் இருக்கிறது. அதிகாரம் பணம் சம்பாதிப்பதை சுலபமாக்குகிறது; பணம் அதிகாரத்தை கையில் வைத்திருப்பதை சுலபமாக்குகிறது. இந்த நிலை தொடர்ந்தால்…
இந்தியா டுடேவுக்கும் ராஜனுக்கும் நன்றி!
தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டு நடப்பு
செப்டம்பர் 4, 2010 at 2:04 மு.பகல்
Better scan is available in savukku.
செப்டம்பர் 4, 2010 at 2:29 மு.பகல்
ரீடர், எனக்கு இந்த தளம் வேலை செய்யவில்லை. சரியான சுட்டி இருந்தால் கொடுங்களேன்!
செப்டம்பர் 4, 2010 at 4:45 மு.பகல்
இதுல என்ன தப்பு இருக்கு. அவங்க படம் எடுக்றங்க. அத ரிலீஸ் பண்றாங்க. 95 % அவங்க தான் படம் ஹிட் ஆகுது.
கலைத்துறையில் ஒரு குடும்பத்தின் விழுதுகள் வேர் விட்டு, ஊன்றி வெற்றிகரமாக ஜெயிப்பது ஒரு குற்றமா? எனக்குப் புரியவில்லை. தொழிலும் கலையும் ஜெயிக்க வேண்டுமானால், மக்களைத் திருப்தி செய்யவேண்டும். அரசியலில் வேண்டுமானால் கூட்டணி கோல்மால்கள் உதவலாம். கலையும் தொழிலும் உண்மையானதாக இருந்தாலன்றி ஜெயிப்பது கடினம். அதை விமர்சிப்பது, பொறாமை, காழ்ப்புணர்ச்சியைததான் காட்டும்.
முடிந்தவன் சாதிக்கிறான். முடியாதவன் போதிக்கிறான். இங்கே சில ஜன்மங்கள் வயிறு எரிந்து வாயில் வந்ததை பேனாத்திக் கொண்டு இருக்கின்றன. அரசியல் பலம் அதிகாரம் மட்டும் சன் குடும்பத்தை இந்த அளவு உயரத்திற்கு கொண்டு செல்ல முடியாது. அதற்கு பின்னால் கலாநிதி மாறன் இருக்கிறார். அதே அதிகார பலத்தில்தானே சுதாகரன், தினகரன், மகாதேவன் என மன்னார்குடி கும்பல்கள் இருந்தன. ஏன் அவர்களால் இந்த உயரத்தை எட்ட முடியவில்லை. அதிகாரபலம் உள்ளே நுழைவதை எளிதாக்கலாம். ஆனால் அத்துறையில் வெற்றிபெற அவை கை கொடுக்காது. கொஞ்சம் பூணுலை கழட்டிவிட்டு யோசியுங்கள்.
செப்டம்பர் 4, 2010 at 6:44 மு.பகல்
விஜய், நீங்கள் இதை முழுதாக படிக்க வேண்டும். அரசியல் அதிகாரம் தொழிலை வளர்க்கவும், தொழில் துறை domination அரசியலுக்கு சப்போர்ட் தரவும் பயன்படுகிறது என்று எழுதப்பட்டிருக்கிறது. உதாரணமாக சினிமா தியேட்டர்களை உதயநிதியும் தயாநிதி அழகிரியும் வளைத்தால் “சாதாரண” தயாரிப்பாளர்கள் கதி என்ன?
ராஜன், சன் டிவியை புறக்கணிப்பது சுலபம். எந்திரன் பற்றி உறுதியாக சொல்வதற்கில்லை.
செப்டம்பர் 4, 2010 at 4:59 மு.பகல்
ஆர் வி
நன்றி. நீங்கள் போட்டிருப்பதே தெளிவாகத்தான் இருக்கிறது. படிக்கும் அளவிலேயே உள்ளது.
இதற்கெல்லாம் ஒரு வழி இருக்கிறது. நேர்மை நியாயம் போன்றவற்றில் நம்பிக்கைக் கொண்டுள்ள ஒவ்வொருவரும் இந்த ரூலிங் மாஃபியாக்களின் எந்தவொரு பொருளையும், சேவையையும் வாங்கக் கூடாது. சன் நெட்வொர்க்குக்கு சப்ஸ்க்ரிப்ஷனை உடனே ரத்து செய்ய வேண்டும். இந்தக் குடும்பத்துடன் சம்பந்தம் உள்ள எந்தப் பொருளையும் புறக்கணிக்க வேண்டும். இவர்கள் நடத்தும் ஸ்பைஸ் ஜெட்டில் பயணிக்கக் கூடாது. இவர்கள் நடத்தும் சன், கே, கலைஞர், உதயா போன்ற எந்தச் சானலையும் பார்க்கக் கூடாது பணம் கட்டக் கூடாது. இவர்கள் கேபிளைத் தவிர்க்க வேண்டும். இவர்கள் நடத்தும் பத்திரிகைகளை புறக்கணிக்க வேண்டும் இந்தக் குடும்பம் நடத்தும் எந்த சினிமாவையும் பார்க்கக் கூடாது அப்படியே பார்த்துத் தொலைக்க வேண்டிய அரிப்பு யாருக்கேனும் இருப்பின் திருட்டு வி சி டியில் மட்டுமே பார்க்க வேண்டும். முக்கியமாக வரவிருக்கும் எந்திரன் சினிமாவை ஒவ்வொரு மானமுள்ள, அக்கறையுள்ள தமிழனும் புறக்கணிக்க வேண்டும். இதையெல்லாம் நான் செய்கிறேன் செய்வேன். வெறுமே வாயளவில் நீதி, நேர்மை நியாயம் பேசி விட்டு ரஜினிகாந்த படம் ஷங்கர் படம் என்று இந்த மாஃபியாக்களுக்கு நமது காசைக் கொடுத்து அவர்களை மேலும் வளர்த்து விடக் கூடாது. இதை ஒரு உறுதி மொழியாகவே ஒவ்வொரு அகக்றையுள்ள தமிழனும் செய்ய வேண்டும். செய்வார்களா? செய்வீர்களா?
அன்புடன்
ராஜன்
செப்டம்பர் 21, 2010 at 5:39 பிற்பகல்
அன்புள்ள ராஜன்,
on a related note,
சினிமாவில் வணிகம் தவறா ? — சுரேஷ் கண்ணன்
http://pitchaipathiram.blogspot.com/2010/09/blog-post_17.html
செப்டம்பர் 21, 2010 at 9:52 மு.பகல்
சோவுடன் ஒரு சந்திப்பு…
———————–
திரைப்படத் துறையை முழுக்கவே ஜீரணம் செய்தாகிவிட்டது. ரியல் எஸ்டேட் பாதி விழுங்கப்பட்டு விட்டது. சேட்டிலைட் சேனல், கேபிள் டி.வி-க்கள்பற்றிச் சொல்லவே வேண்டாம். ‘எங்கெங்கு காணினும்வாரிசு களடா!’ என்ற நிலையால், மக்கள் எரிச்சலில் இருக் கிறார்கள். தவிர, மாநிலத்தின் பெரிய பிரச்னைகள் எதையும் இந்த அரசு தீர்த்ததாகத் தெரியவில்லை. இலவசங்களைத் தங்கள் சாதனைகள் என்று இவர்கள் தம்பட்டம் அடித்துக்கொள்ள முடியாது.
“தனது ஐந்தாவது ஆட்சிக் காலத்தின் இறுதிப் பருவத்தில் இருக்கிறார் கருணாநிதி. இந்த ஆட்சியின் ப்ளஸ், மைனஸ்களைப் பட்டியல் இடுங்களேன்?”
“இது தனது குடும்பத்துக்கு என கலைஞரால் டெடிகேட் செய்யப்பட்ட ஐந்தாண்டு காலம். கலைஞரின் குடும்பத்தினர் மென்மேலும் சிறப்பு பெற்றிருக்கிறார்கள். பல பதவிகளை அடைந்திருக்கிறார்கள். செல்வம் பெருகியிருக்கிறது. ஆக, ஐந்தாவது முறை முதலமைச்சர் பதவிக் காலம் என்பது, கலைஞரின் குடும்பத்துக்கு மிகச் சிறப்பான ஒன்றாகவே கடந்திருக்கிறது!”
“அப்போ இந்த ஆட்சியில் ப்ளஸ் பாயின்ட் என்று எதுவுமே இல்லையா?”
“என்ன சார் இப்படிக் கேட்டுட்டீங்க? நான் சொன்னது ப்ளஸ் பாயின்ட் இல்லையா? ஒரு குடும்பம் செழிக்கிறது சார். அது எப்படி ப்ளஸ் இல்லைன்னு சொல்ல முடியும்?! மாபெரும் குடும்பம் அது. அதற்குப் பல கிளைகள். அவை அனைத்தும் செழிக்கின்றன. அதை எப்படி ப்ளஸ் இல்லைன்னு சொல்ல முடியும்? இதுக்கு மேல் என்ன ப்ளஸ், மைனஸ் அடுக்கி மார்க் போடுறது. போதும் சார்!”
நன்றி – விகடன் 22-09-2010 (சோவுடன் ஒரு சந்திப்பு…)
செப்டம்பர் 21, 2010 at 9:34 பிற்பகல்
ஈரோடு அதிபன் கூறுகிறார்…..
“கருணாநிதியின் வாரிசுகள் வரிசையாக சினிமாவுக்கு வந்துவிட்டார்களே ?”
“அதானே … இனி கலைஞர் டி.வி..யில் பட வரிசை பத்தில் எல்லாப் படங்களுமே நம்பர் ஒன்னில் இருக்குமோ ?”
நன்றி – விகடன் 22-09-2010 (நானே கேள்வி… நானே பதில்!)