ஆகஸ்ட் 2010
மாதாந்திர தொகுப்பு
ஆகஸ்ட் 31, 2010
Posted by RV under
Misc | குறிச்சொற்கள்:
Andy griffith show,
Beatles,
Beavis and butthead,
Bill gates,
Butch cassidy and sundance kid,
Dean martin,
Flintstones,
Frank sinatra,
Franklin Roosevelt,
Gayle king,
George harrison,
Google,
Harold and kumar go to white castle,
Honeymooners,
Howard cosell,
I love lucy,
John lennon,
Larry page,
Lassie,
Mary tyler moore show,
Mohammad ali,
Oprah winfrey,
Paul McCartney,
Peter lawford,
Rat pack,
Ringo starr,
Sammy davis jr.,
Seinfeld,
Sergey brin,
Sesame street,
Sex and the city,
Sir Winston Churchill,
Snow white and the seven dwarves,
Spongebob squarepants,
Star trek,
Star wars,
Thelma and louise,
Warren buffet,
Winnie the pooh |
[2] Comments
சிறந்த நண்பர்கள் என்று ஒரு லிஸ்ட் எங்கேயோ பார்த்தேன். பார்த்த இடம் கூட நினைவில்லை. இந்த லிஸ்ட் அமெரிக்க சூழ்நிலைக்கு பொருந்துவது. இந்திய சூழ்நிலைக்கு இப்படி ஒரு லிஸ்ட் போட்டால் யார் யார் வருவார்கள்?
நிஜ வாழ்க்கை நண்பர்கள்:
- குத்துச்சண்டை வீரர் முஹம்மத் அலி, பத்திரிகையாளர் ஹோவார்ட் கோசல்
- டிவி ராணி ஓப்ரா வின்ஃப்ரே, கெய்ல் கிங்
- பில் கேட்ஸ், வாரன் பஃபெட்
- வின்ஸ்டன் சர்ச்சில், ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட்
- கூகிள் கம்பெனி நிறுவிய செர்ஜி ப்ரின், லாரி பேஜ்
- ஜான் லென்னன், பால் மக்கார்ட்னி, ரிங்கோ ஸ்டார், ஜார்ஜ் ஹாரிசன் – பீட்டில்ஸ் இசைக் குழு
- ஃப்ராங்க் சினாட்ரா, டீன் மார்ட்டின், சாம்மி டேவிஸ் ஜூனியர், பீட்டர் லாஃபோர்ட் – Rat Pack என்று அழைக்கப்பட்ட நிஜ வாழ்க்கை சினிமா, இசை நண்பர்கள்
திரைப்பட நண்பர்கள்:
- தெல்மா, லூயிஸ் – தெல்மா அண்ட் லூயிஸ், சூசன் சாரண்டன் + ஜீனா டேவிஸ்
- புட்ச் காஸ்சிடி, சன்டான்ஸ் கிட் – புட்ச் காஸ்சிடி அண்ட் த சன்டான்ஸ் கிட், பால் ந்யூமன், ராபார்ட் ரெட்ஃபோர்ட் (திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்ட நட்பு மட்டுமே இங்கே சொல்லப்படுகிறது.)
- ஹரால்ட், குமார் – ஹரால்ட் அண்ட் குமார் கோ டு த ஒயிட் காசில், ஜான் சோ, கால் பென்
- ஆர்2டி2, சி3பிஓ – ஸ்டார் வார்ஸ்
- ஸ்னோ ஒயிட், ஏழு குள்ளர்கள் – ஸ்னோ ஒயிட் அண்ட் த செவன் ட்வார்வ்ஸ் கதை, திரைப்படம்
டிவி சீரியல் நண்பர்கள்:
- காப்டன் கிர்க், மிஸ்டர் ஸ்பாக் – ஸ்டார் ட்ரெக், வில்லியம் ஷாட்னர் + லியோனார்ட் நிமாய்
- செய்ன்ஃபெல்ட், எலெய்ன் – செய்ன்ஃபெல்ட், ஜெர்ரி செய்ன்ஃபெல்ட், ஜூலியா லூயிஸ்-பெனஸ்
- பெர்ட், எர்னி – செசமி ஸ்ட்ரீட்
- லூசி ரிகார்டோ, எத்தல் மெர்ட்ஸ் - ஐ லவ் லூசி, லூசில் பால், விவியன் வான்ஸ்
- ஃப்ரெட் ஃபிளின்ட்ஸ்டோன், பார்ணி ரப்பில் – ஃபிளின்ட்ஸ்டோன்ஸ்
- மேரி ரிச்சர்ட்ஸ், ரோடா மார்கன்ஸ்டெர்ன் – மேரி டைலர் ஷோ, மேரி டைலர் மூர், வாலரி ஹார்ப்பர்
- ஆண்டி டெய்லர், பார்னி ஃபைஃப் – ஆண்டி க்ரிஃபித் ஷோ – ஆண்டி க்ரிஃபித், டான் நாட்ஸ்
- பீவிஸ், பட்ஹெட் – பீவிஸ் அண்ட் பட்ஹெட்
- ரால்ஃப் க்ராம்டன், எட் நார்ட்டன் – ஹனிமூனர்ஸ், ஜாக்கி க்ளீசன், ஆர்ட் கார்னி
- வின்னி த பூ, கிறிஸ்டோஃபர் ராபின் – வின்னி த பூ புத்தகங்கள், சினிமா, டிவி ப்ரோக்ராம்கள்
- மிராண்டா ஹாப்ஸ், சார்லோட் யார்க், காரி பிராட்ஷா, சமந்தா ஜோன்ஸ் – செக்ஸ் அண்ட் தி சிடி, சிந்தியா நிக்சன், கிறிஸ்டின் டேவிஸ், சாரா ஜெஸ்ஸிகா பார்க்கர், கிம் காட்ரால்
- நாய் லாஸ்ஸி, சிறுவன் டிம் – லாஸ்ஸி டிவி சீரியல், சிறுவனாக நடித்தது ஜான் ப்ரோவோஸ்ட்
ஸ்பான்ஜ்பாப் ஸ்க்வேர்பாண்ட்ஸ், பாட்ரிக் – ஸ்பான்ஜ்பாப் ஸ்க்வேர்பாண்ட்ஸ்
இந்திய சூழ்நிலைக்கு இப்படி ஒரு லிஸ்ட் போட்டால் யார் யார் வருவார்கள்? இதிகாசங்களில் கிருஷ்ணன், அர்ஜுனன். சரித்திரத்தில் ராஜா தேசிங்கு, அவரது நண்பர் ஒருவரை சொல்லலாம். சினிமாவில்? தளபதி திரைப்படத்தில் ரஜினி,மம்முட்டி? எனக்கு டிவியைப் பற்றி சுத்தமாக தெரியாது.
தொகுக்கப்பட்ட பக்கம்: மிச்சம் மீதி
37.523851
-122.047324
ஆகஸ்ட் 28, 2010
மேலும் புதிர்கள் என்று ஒரு பதிவு போட்டிருந்தேன். அந்த புதிர்களை பெரும்பாலும் இளந்தென்றல், அனுஜன்யா , பாலராஜன்கீதா ஆகியோர் கண்டுபிடித்துவிட்டார்கள். அவர்களுக்கு வாழ்த்துகள்!
பூட்டிய அறையில் ஒரு பல்ப், வெளியே மூன்று சுவிட்சுகள். நீங்கள் எத்தனை சுவிட்சை வேண்டுமானாலும் ஆனோ ஆஃபோ செய்துவிட்டு உள்ளே போக வேண்டும். எந்த ஸ்விட்ச் பல்பை கட்டுப்படுத்துகிறது?
இளந்தென்றலின் வார்த்தைகளில்: முதலில் ஒரு சுவிட்ச்சை போட வேண்டும் . 5 நிமிடம் நேரம் கழித்து அதை அணைத்து விட்டு இரண்டாவது சுவிட்சை போட வேண்டும். இப்போது அறைக்குள் சென்று அந்த பல்பை பார்க்க வேண்டும். பல்பு எரிந்து கொண்டு இருந்தால் இரண்டாவது சுவிட்ச். எரியாமல் இருந்தால் பல்பை தொட்டு பார்க்க வேண்டும். சூடாக இருந்தால் முதல் சுவிட்ச். சூடாக இல்லை என்றால் மூன்றாவது சுவிட்ச்.
இரண்டு மணல் கடிகாரங்கள், நாலு, ஏழு நிமிஷ கடிகாரங்கள். ஒன்பது நிமிஷத்தை எப்படி அளப்பது?
அனுஜன்யாவின் வார்த்தைகளில்: இரண்டு கடிகாரங்களையும் ஒரே சமயத்தில் துவக்க வேண்டும். நான்கு நிமிட கடிகாரம் இரண்டு முறை முடித்திருக்கும் (அதாவது எட்டு நிமிடம் ஆகியிருக்கும்) போது ஏழு நிமிட கடிகாரம் இரண்டாவது சுற்றில் ஒரு நிமிடம் எடுத்திருக்கும். இப்போது ஏழு நிமிட கடிகாரத்தை தலைகீழ் ஆக்கி, இன்னொரு நிமிடத்தில் ஒன்பது நிமிடங்களைக் கணக்கிடலாம்.
இரண்டு கதவுகள், இரண்டு காவல்காரர்கள். ஒரு கதவை திறந்தால் பொக்கிஷம் கிடைக்கும். இன்னொன்றுக்கு பின்னால் பசித்த புலி. ஒரு காவல்காரன் பொய் மட்டுமே சொல்வான், அடுத்தவன் உண்மை மட்டுமே. யார் பொய்யன், யார் உண்மை சொல்பவன் என்று தெரியாது. நீங்கள் ஒரே ஒரு கேள்வி கேட்கலாம். என்ன கேட்பீர்கள்?
இளந்தென்றலின் வார்த்தைகளில்:நான் பொக்கிஷ அறைக்கு போவதற்கு சரியான வழி எது என்று அடுத்தவரை கேட்டால் என்ன சொல்லுவார் என்று யாரேனும் ஒருவரை கேட்க வேண்டும். அவர்கள் காட்டும் வழி விடுத்து வேறு வழியில் செல்ல வேண்டும்.
அம்மா பையனை விட 21 வயது பெரியவள். இன்னும் ஆறு வருஷத்தில் பையன் வயதைப் போல அம்மாவுக்கு ஐந்து மடங்கு வயதாகும். அப்பா என்ன செய்துகொண்டிருக்கிறார்?
பையன் வயது X என்று வைத்துக் கொள்வோம். அம்மாவின் வயது X+21. 6 வருஷங்களுக்கு பிறகு 5 times (X+6) = X+21+6 அதாவது 4X = -3 அதாவது X = -3/4 வருஷங்கள், அதாவது -9 மாதங்கள். பையன் பிறப்பதற்கு 9 மாதம் முன் அப்பா என்ன செய்து கொண்டிருப்பார்? ஹி ஹி…
வாத்தியாருக்கு மூன்று பெண்கள். அவர்களின் வயது என்ன என்று மாணவன் கேட்கிறான். வாத்தியார் சொல்கிறார், அவர்கள் மூன்று பேர் வயதையும் பெருக்கினால் 36 வரும். அவர்கள் மூவர் வயதையும் கூட்டினால் உன் வீட்டு நம்பர் வரும். மாணவன் சொல்கிறான் தேவையான அளவு விவரம் இல்லை என்று. வாத்தியார் அதைக் கேட்டுவிட்டு “அட ஆமாம், சரி என் பெரிய பெண் பியானோ வாசிப்பாள்” என்கிறார். அவர்களின் வயதுகள் என்ன?
பாலராஜன்கீதாவின் வார்த்தைகளில்: வாத்தியாரின் பெண்களின் வயதுகள்
1 1 36
1 2 18
1 3 12
1 4 9
1 6 6
2 2 9
2 3 6
3 3 4
இவற்றில் 1+6+6 = 13 , 2+2+9 = 13 என்று இருப்பதால் (மற்றவற்றின் கூட்டுத்தொகை எல்லாம் வெவ்வேறு தனித்த unique எண்கள்). ***பெரிய*** பெண் என்பதால் வாத்தியாரின் பெண்களின் வயதுகள் 9, 2, 2. (பியானோ வாசிப்பதற்கும் புதிருக்கும் தொடர்பு இல்லைதானே?)
தொகுக்கப்பட்ட பக்கம்: மிச்சம் மீதி, அவார்டா கொடுக்கறாங்க–>படங்களின் பட்டியல்
தொடர்புடைய பதிவுகள்:
ஃபெர்மத்தின் அறை திரைப்படத்திலிருந்து புதிர்கள்
ஃபெர்மத்தின் அறை திரைப்படத்திலிருந்து இன்னும் ஒரு புதிர், புதிருக்கு விடை
ஃபெர்மத்தின் அறை (Fermat’s Room) – IMDB குறிப்பு
அனுஜன்யாவின் தளம்
37.523851
-122.047324
ஆகஸ்ட் 27, 2010
கே. ஆர். ஜமதக்னி என்ற பேரை நான் முதன் முதலாக கேள்விப்பட்டது 2009-இல் தமிழக அரசு அவரது எழுத்துகளை நாட்டுடமை ஆக்கியபோதுதான். அவர் தாஸ் காபிடலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். மறைந்த சேதுராமன் அவர்கள் அவரைப் பற்றிய தகவல்களை தேடிக் கொடுத்தார். அவருடைய பேத்தியான சந்தனமுல்லை ஒரு பிரபல பதிவர். அவர் அந்த பதிவின் மூலம்தான் எனக்கு அறிமுகம் ஆனார்.
சில வாரங்களுக்கு முன் அவர் தன் கொள்ளுப்பாட்டியான அஞ்சலையைப் பற்றி ஒரு அருமையான பதிவை தன் தளத்தில் ஏற்றி இருக்கிறார். கட்டாயமாக படித்து பாருங்கள்!
அவரது போராட்ட வாழ்வை சுருக்கமாக சந்தனமுல்லை விவரிக்கிறார்.
1921 – சுதந்திர போராட்டத்தில் இறங்குகிறார்.
1927 – நீலன் சிலை அகற்றும் போரில் ஒரு வருடம் சிறை தண்டனை – சென்னையில்
1931 – உப்புக்காய்ச்சல் போராட்டத்தில் ஆறுமாத சிறை தண்டனை – கடலூரில்
1933 – மறியல் போரில் மூன்று மாத சிறை – கடலூரில்
1940 – தனி நபர் சத்தியாகிரகத்தில் முதலில் 6 மாதம்
1940 – 18 மாதங்கள் – வேலூர்
1943 – 8 மாதம் 2 வாரம் – பெல்லாரி
ஆக, நான்கு வருடம் ஐந்தரை மாதம் சிறைவாசம். தமிழ்நாட்டில் முதன் முதலில் சத்தியாகிரகத்தில் சிறை புகுந்த பெண்கள் என்ற பெருமைக்குரியவர்கள் :
1. அஞ்சலை அம்மாள்
2. மதுரை பத்மாசனி அம்மாள்
கள்ளுக்கடை இருக்குமிடமெல்லாம் அச்சிட்ட (குடியை கைவிடத் தூண்டும்) நோட்டீஸ்களை வழங்கிக் கொண்டே அஞ்சலை அம்மாள் மறியல் செய்வார். சென்னையில் தடைவிதிக்கப்பட்ட காங்கிரஸ் மகாநாட்டுக்கு தலைமை தாங்கி ஒரு பெண்கள் படையுடன் அஞ்சலையம்மாள் கைதானார். பிறகு ஜில்லாபோர்டு உறுப்பினராகவும், சென்னை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து 20-06-1961 இல் அமரரானார்.
அவருக்கு ஒரு பெண் – லீலாவதி, இவர்தான் ஜமதக்னியை மணந்தவர். மற்ற இரண்டு பையன்கள் பேர் என்ன தெரியுமா? காந்தி, ஜெயில் வீரன்! (ஜெயில் வீரன் இவரது தண்டனைக் காலத்தில் பிறந்தவர்.) லீலாவதியும் ஜமதகனியும் கூட ஜெயில் சென்ற தியாகிகள்தான். சுலபமாக யூகிக்கக் கூடிய விஷயம் – கணவர் முருகப் படையாச்சியும் சுதந்திரப் போராட்ட தியாகிதான்.
அஞ்சலை சாதாரண நெசவு குடும்பத்தில் பிறந்தவர். தென் ஆர்க்காடு மாவட்டக்காரர் போலிருக்கிறது. அவர் போராட்டத்தில் ஈடுபட்டது1921-இல். படையாச்சி என்று சொல்லப்படுவதால் வன்னியர் என்று நினைக்கிறேன். ஒரு பெண், அதுவும் திருமணமான, பெரிய பணம், படிப்பு, அந்தஸ்து அல்லது “உயர்ந்த” ஜாதி போன்ற பின்புலம் இல்லாத குடும்பத்து இளம் பெண்னுக்கு இந்த உறுதியும் லட்சியமும், வேகமும் எப்படி வந்தது? இந்த மாதிரி எந்த “disadvantage”-உம் இல்லை என்றால் கூட இப்படி போராடுவது பெரிய விஷயம். அவரது பின்புலம் இல்லாத நிலை அவரது போராட்டத்தை என் கண்களில் இன்னும் மகத்தானதாக ஆக்குகிறது.
நாம் உயர்ந்த லட்சியவாதிகளை வெகு சீக்கிரம் மறந்துவிடுகிறோம். இங்கேயே சந்தனமுல்லை குறிப்பிட்டிருக்கும் மதுரை பத்மாசனி அம்மாள் யாரோ எவரோ தெரியாது. அப்புறம் நமக்கும் நம் சந்ததியினருக்கும் நல்ல ரோல் மாடல்கள் எங்கிருந்து வரும்?
தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்
தொடர்புடைய சுட்டிகள்:
சந்தனமுல்லையின் பதிவு
சந்தனமுல்லையின் தளம்
கே.ஆர். ஜமதக்னி பற்றிய பதிவு
படம் – காமத் தளத்திலிருந்து
37.523851
-122.047324
ஆகஸ்ட் 26, 2010
Posted by RV under
Puzzles | குறிச்சொற்கள்:
Fermat's Room |
[16] Comments
ஃபெர்மத்தின் அறை (Fermat’s Room ) திரைப்படத்திலிருந்து மேலும் புதிர்கள்.
- பூட்டிய அறையில் ஒரு பல்ப், வெளியே மூன்று சுவிட்சுகள். நீங்கள் எத்தனை சுவிட்சை வேண்டுமானாலும் ஆனோ ஆஃபோ செய்துவிட்டு உள்ளே போக வேண்டும். எந்த ஸ்விட்ச் பல்பை கட்டுப்படுத்துகிறது?
- இரண்டு மணல் கடிகாரங்கள், நாலு, ஏழு நிமிஷ கடிகாரங்கள். ஒன்பது நிமிஷத்தை எப்படி அளப்பது?
- இரண்டு கதவுகள், இரண்டு காவல்காரர்கள். ஒரு கதவை திறந்தால் பொக்கிஷம் கிடைக்கும். இன்னொன்றுக்கு பின்னால் பசித்த புலி. ஒரு காவல்காரன் பொய் மட்டுமே சொல்வான், அடுத்தவன் உண்மை மட்டுமே. யார் பொய்யன், யார் உண்மை சொல்பவன் என்று தெரியாது. நீங்கள் ஒரே ஒரு கேள்வி கேட்கலாம். என்ன கேட்பீர்கள்?
- அம்மா பையனை விட 21 வயது பெரியவள். இன்னும் ஆறு வருஷத்தில் பையன் வயதைப் போல அம்மாவுக்கு ஐந்து மடங்கு வயதாகும். அப்பா என்ன செய்துகொண்டிருக்கிறார்?
- வாத்தியாருக்கு மூன்று பெண்கள். அவர்களின் வயது என்ன என்று மாணவன் கேட்கிறான். வாத்தியார் சொல்கிறார், அவர்கள் மூன்று பேர் வயதையும் பெருக்கினால் 36 வரும். அவர்கள் மூவர் வயதையும் கூட்டினால் உன் வீட்டு நம்பர் வரும். மாணவன் சொல்கிறான் தேவையான அளவு விவரம் இல்லை என்று. வாத்தியார் அதைக் கேட்டுவிட்டு “அட ஆமாம், சரி என் பெரிய பெண் பியானோ வாசிப்பாள்” என்கிறார். அவர்களின் வயதுகள் என்ன?
தொகுக்கப்பட்ட பக்கம்: மிச்சம் மீதி, அவார்டா கொடுக்கறாங்க–>படங்களின் பட்டியல்
தொடர்புடைய பதிவுகள்:
புதிர், புதிருக்கு விடை
ஃபெர்மத்தின் அறை (Fermat’s Room) – IMDB குறிப்பு
37.523851
-122.047324
ஆகஸ்ட் 26, 2010
Posted by srinivas uppili under
Books,
Writings 1 Comment
சமீபத்தில் நான் படித்த ஒரு அருமையான புத்தகம் இது. நண்பர் திருமலைராஜனுக்கு நன்றி.
ஜெயிக்க வேண்டும் – இந்த உந்துதல் மனதில் எழாத மனிதர்கள் எவருமே இருக்க முடியாது. ஆனால் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே வெற்றியைத் தேடித் தந்து விடாது. அதற்கு முறையாக — திட்டமிட்டு கடுமையாக உழைக்க வேண்டும். அதிலும் உடனே வெற்றி கிட்டாமல் தோல்விகள் ஏற்படக் கூடும். அவற்றையும் துணிவுடன் ஏற்றுக்கொண்டு தொடர்ந்து உழைக்க வேண்டும்.
இதன் ஆசிரியர் ஔரங்கசீப் தனது முன்னுரையில் கூறுகிறார்…
ஒன்பது துறைகளைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொன்றிலும் முன்னணியிலுள்ள தமிழர்களின் பட்டியலைத் தயாரித்தோம். இரண்டாவது கருத்துக்கே இடமில்லாத அளவு வெகு நிச்சயமாகச் சாதித்தவர் என்று ஒவ்வொரு துறையிலிருந்தும் ஒருவரைத் தேர்ந்தெடுப்பது மிகவும் சிரமமாயிருந்தது.
ஒன்பதே வாரங்களில் இது முடிந்து விட்டபோது, ‘என் நிறுத்தி விட்டீர்கள் ?’ என்று தான் சண்டை போட்டார்கள். விளையாட்டுத் துறையிலிருந்து யாரும் பேசாதது பற்றியும், மொத்தத் தொகுப்பிலும் ஒரு பெண் கூட இல்லாதது பற்றியும் சிலர் சுட்டிக் காட்டினார்கள்.
இவற்றுக்குப் பிரத்தியேகக் காரணங்கள் ஏதுமில்லை. இயல்பாக விடுபட்டுப் போயின; அவ்வளவுதான்.
இந்தச் சாதனையாளர்களின் வாழ்கையைக் கூர்ந்து பார்த்தபோது எனக்குத் தோன்றியவை இவை…
- யாருமே தான் தேர்ந்தெடுத்த துறையைக் காதலிக்கத் தவறவில்லை.
- ஒரே சமயத்தில் யாருக்கும் இரு ஆர்வங்கள் இருக்கவில்லை.
- அத்தனை பேரும் கர்ம யோகிகளாயிருக்கிறார்கள்.
- கலையைக் கொச்சைப் படுத்தாத பேராண்மை மிக்கவர்களாயிருக்கிறார்கள்.
- வெற்றி எத்தனை தொலைவில் இருந்தாலும் எட்டிப் பறிக்கும் வெறியை இறுதி வரை விடாமல் வைத்திருக்கிறார்கள். சோதனைகளில் துவண்டு போவதில்லை.
- கற்றுக் கொள்ளும் ஆர்வத்தை வற்றாமல் வைத்திருக்கிறார்கள்.
- சாதித்து விட்டோம் என்கிற நிறைவு இதுவரை இவர்களுக்கு ஏற்படவே இல்லை.
இந்த ஒரு வரி பதிப்பீடுகளை நீங்கள் இவர்களது வாழ்வனுபவங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம் . வெற்றியின் சூட்சுமம் புலப்படக் கூடும்.
ஜெயித்த கதை சொல்பவர்கள்….
பிரபஞ்சன் – எழுத்தாளர்
வை.கோ. – அரசியல்வாதி
பத்மவாசன் – ஓவியர் (இவரைப் பற்றி ஒரு தனிப்பதிவு விரைவில்….)
ஜெயேந்திரா – விளம்பரப்பட இயக்குனர்
பழனிபாரதி – பாடலாசிரியர்
பார்த்திபன் – திரைப்பட இயக்குனர்
சுகி சிவம் – சமயச் சொற்பொழிவாளர்
ரா.கி. ரங்கராஜன் – பத்திரிகையாளர்
விஜய்சிவா (கர்நாடக இசைக் கலைஞர்)
உங்களுக்கு ஒரு சுவையான தகவல். மதி நிலையம் வெளியீடாக 1999 –ம் ஆண்டு ஔரங்கசீப் என்ற புனைபெயரில் எழுதியவர் வேறு யாரும் இல்லை. எனது பெருமதிப்பிற்குரிய எழுத்தாளர் பா.ராகவன் தான்.

ஆகஸ்ட் 25, 2010
Posted by srinivas uppili under
Books,
Misc,
Writings Leave a Comment
தமிழில் பல சொற்கள் காலப்போக்கில் பொருள் மாறுகின்றன. ஐயர் என்ற சொல் சங்க காலத்தில் ‘தலைவர்’ என்ற பொருளில் தான் பயின்று வந்தது. இன்று அது கேலி வார்த்தையாகிவிட்டது.
‘அந்தணன்’ என்ற சொல்லும் அப்படி காலப்போக்கில் பொருள் மாறி வந்துள்ளது. திருக்குறள் ‘அறவாழி அந்தணன்’ என்று கடவுளைக் குறிக்கிறது. மற்றொரு குறளில், ‘அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலால்’ என்று எல்லா உயிர்களின் மேலும் அன்பு செலுத்துபவர்களை அந்தணர் என்றது.
– சுஜாதா (வாரம் ஒரு பாசுரம்)

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்
– எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துபவர்களை மட்டும் ‘அந்தணர்’ என்று உயர்த்தலாம்.

திருக்குறளுக்கு சுஜாதா எழுதிய இப்புதிய உரை திருக்குறளின் சாராம்சத்தை எளிய முறையில் சமகாலத் தமிழ் நடையில் கச்சிதமாக முன்வைக்கிறது.
ஆகஸ்ட் 24, 2010
ஒரு காலத்தில் வாரப் பத்திரிகைகளிருந்து எடுத்து பைண்ட் செய்யப்பட பழைய தொடர்கதைகள் பல உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் புழங்கும். எனக்கு அந்த மாதிரி புத்தகங்களை படிக்கும்போது ஒட்டிக் கொண்டு வந்திருக்கும் மிச்ச பக்கங்களை படிப்பது பிடிக்கும். அப்படிதான் நான் சில கோவில் ஓவியங்களைப் பார்த்து பிரமித்திருக்கிறேன்.
அப்போதெல்லாம் சில்பி என்ற பெயர் தெரியாது. (பெயர் தெரிந்த முதல் ஓவியர் ஜெயராஜ்தான்.) யாரோ வரைந்திருக்கிறார்கள் என்று பார்ப்பதுதான். சமீபத்தில் வரலாறு.காம் என்ற தளத்தில் சில்பியை பற்றிய சில கட்டுரைகளைப் பார்த்தபோது பழைய ஞாபகங்கள் வந்தன. அங்கே சில்பியின் வாழ்க்கை, சில்பியின் கோட்டோவியங்கள், சில்பியைப் பற்றி ஒரு அறிமுகம் என்று மூன்று கட்டுரைகளைப் பார்த்தேன்.
(விகடனுக்கும் பசுபதிக்கும் வரலாறு.காம் தளத்துக்கும் நன்றி!) உதாரணத்துக்காக அங்கிருந்து ஒரு ஓவியத்தை இங்கே மறுபதிப்பு செய்திருக்கிறேன். அதில் எத்தனை நுணுக்கம்? ஒரு புகைப்படத்தில் கூட இப்படி ஒரு எஃபெக்டை கொண்டு வருவது கஷ்டம். (படத்தை கிளிக்கினால் பெரிய சைஸ் ஓவியம் தெரியும்.)
ராஜன் உபயத்தில் இந்த சிற்பத்தின் புகைப்படமும் கிடைத்திருக்கிறது. இது ஸ்ரீவைகுண்டம் கோவிலில் உள்ள ஒரு சிற்பமாம்.
சில்பி விகடனில் பணி புரிந்திருக்கிறார். ஊர் ஊராகப் போய் அங்குள்ள கோவில்களை – கோவில் என்றால் மூலவர் உற்சவர் கோபுரம் மட்டுமில்லை – எந்த மூலை முடுக்கில் அவரை ஒரு சிற்பம் கவர்ந்தாலும் அதை வரைவார். தென்னாட்டு செல்வங்கள் என்று ஒரு தொடர் வந்ததாம். அது பூரா இவர் ஓவியங்கள்தானாம். இங்கே இருக்கும் ஓவியம் கூட அந்த தொடரில் வந்ததுதானாம்.
எனக்கு ஓவியத்தின் கலை நுணுக்கம் எல்லாம் தெரியாது. ஓவியம் பிடித்திருக்கிறது இல்லை என்பது பார்த்த நொடியில் படுவதோடு சரி. அதன் பின்னால் இருப்பது க்யூபிசமா, சர்ரியலிசமா, பாயிண்டிலிசமா என்றெல்லாம் யோசிப்பதில்லை. ஆனால் இது பார்ப்பதை அப்படியே பிரதி எடுக்க முயற்சி என்பது தெரிகிறது. என் கண்ணில் சிறந்த ஓவியம், ஆனால் ஓவியக் கலைஞர்கள் இதை எப்படி பார்ப்பார்கள் என்று தெரியவில்லை. டாக்டர் ருத்ரன் மாதிரி யாராவது என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்களேன்!
சிற்பியின் ஓவியங்களின் பிரின்ட் எங்காவது இன்னும் கிடைக்கிறதா? இணையத்தில் பார்க்க முடியுமா? “தென்னாட்டு செல்வங்கள்” தொடர் புத்தகமாக கிடைக்கிறதா? உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்!

பிற்சேர்க்கை: ஸ்ரீனிவாஸ் இரண்டு ஓவியங்களை அனுப்பி இருக்கிறார். இடது பக்கம் கங்கை கொண்ட சோழபுரம் கோவில். அதற்கு அடுத்தபடி இருப்பது திருவாலங்காடு சிவன் கோவில். அவருக்கு நன்றி!
சில்பியின் பாணி, தரம் போன்றவை என் போன்ற பாமரனுக்கு மட்டும்தான் பிடிக்குமா இல்லை ஓவியர்களும் கலை விமர்சகர்களும் அதை உயர்ந்த ஓவியம் என்று கருதுகிறார்களா என்று எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. டாக்டர் ருத்ரன் நல்ல ஓவியர், எனக்குத் தெரிந்த ஒரே ஓவியர். அவரைக் கேட்டேன் – அவர் வார்த்தைகளில்:
சில்பி ஒரு மேதை மட்டுமல்ல, மகான். அப்படி வரைவது வெறும் திறமையாக எனக்குப் படுவதில்லை, அது அருள், வரம்.
சில்பியின் ஓவியங்களை லக்ஷ்மி எனும் விமர்சகரும் பார்வதி கலைக்கூடத்தின் உரிமையாளரும் ஒரு நூலாக்க சில வருடங்களுக்கு முன் முயன்றார்கள். சில்பியின் குடும்பத்தினர் ஒத்துவரவில்லை என்று சொல்லப்பட்டது.
விகடனுக்கு அப்புறம் மணியனின் இதயம் பேசுகிறது இதழில் சில்பி வரைந்து வந்தார். அவற்றுள் காந்திமதியும் அபிராமியும் அற்புதம்.
ரகுவீரதயாள் திருப்பதி ஐயங்கார் என்பவர் “தென்னாட்டு செல்வங்கள்” தொடரின் சில பகுதிகளை தொகுத்திருக்கிறார். ஸ்ரீனிவாஸ் அவற்றுக்கு சுட்டி கொடுத்திருக்கிறார். இருவருக்கும் நன்றி! இரண்டு பகுதிகள் நெட்டில் கிடைக்கின்றன. முதல் பகுதி தஞ்சாவூர் பெரிய கோவிலைப் பற்றியது. இரண்டாம் பகுதி திரிபுவனம் கோவிலைப் பற்றியது.
தொடர்புடைய பக்கங்கள்:
சில்பி – ஒரு அறிமுகம்
சில்பியின் கோட்டோவியங்கள்
சில்பியின் வாழ்க்கை வரலாறு
வரலாறு.காம் தளம்
தஞ்சாவூர் பெரிய கோவில் – சில்பியின் ஓவியங்கள்
திரிபுவனம் கோவில் சித்திரங்கள்
37.523851
-122.047324
ஆகஸ்ட் 23, 2010
ஃபாரின் பாலிசி என்று ஒரு பத்திரிகை இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னால் இவர்கள் “FP Top 100 Global Thinkers” என்று ஒரு லிஸ்ட் போட்டிருக்கிறார்கள். சுவாரசியமான லிஸ்ட். இதில் மூன்று பேர் இந்தியர்கள்.
ஐந்தாம் இடத்தில் இருப்பவர்
ராஜேந்தர் பச்சௌரி. இவர் ஐ.நா. சபையின் “Intergovernmental Panel on Climate Change” அமைப்பின் தலைவராக இருக்கிறாராம். இந்த அமைப்பு நோபல் பரிசு பெற்றது. குளோபல் வார்மிங் குறைய உழைத்திருக்கிறாராம்.
ஐம்பத்து எட்டாம் இடத்தில் இருப்பவர் நோபல் பரிசு வென்ற அமார்த்ய சென். சென் என்ன சொல்கிறார், அவருடைய economic philosophy என்று எனக்கு தெரியாது. தெரிந்தவர்கள் சொல்லலாம்.
எண்பத்து எட்டாம் இடத்தில் இருப்பவர் சுனிதா நாராயண். இவர் “Center for Science and Environment” அமைப்பின் இயக்குனராக இருக்கிறாராம். கோக், பெப்சியில் பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பதை கண்டுபிடித்து போராடினாராம்.
நம்மூர் ஆட்களைப் பற்றி வெளியூரில் பேசினால்தான் நமக்கு தெரிய வருகிறது!
தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்
தொடர்புடைய பதிவுகள்:
ஃபாரின் பாலிசி லிஸ்ட்
சுனிதா நாராயண் – விக்கி குறிப்பு
அமார்த்ய சென் – விக்கி குறிப்பு
ராஜேந்திர பச்சௌரி – விக்கி குறிப்பு
37.523851
-122.047324
ஆகஸ்ட் 22, 2010
Posted by RV under
Puzzles | குறிச்சொற்கள்:
Balarajangeetha |
Leave a Comment
ஒரு புதிர் போட்டிருந்தேன். அதற்கு விடை இப்போது.
ஒரு சாக்லேட்டை எடுத்தால் போதும்.
எல்லா லேபிள்களும் தவறு; அதனால்
மின்ட் என்று லேபில் ஒட்டிய பெட்டியில் aniseed அல்லது மிக்ஸ் இருக்கலாம்.
Aniseed என்று லேபில் ஒட்டிய பெட்டியில் மின்ட் அல்லது மிக்ஸ் இருக்கலாம்.
மிக்ஸ் என்று லேபில் ஒட்டிய பெட்டியில் மின்ட் அல்லது aniseed இருக்கலாம்.
இப்போது மிக்ஸ் என்ற லேபில் ஒட்டிய பெட்டியிலிருந்து ஒரு சாக்லேட்டை எடுங்கள். அது மின்டாக இருந்தால் அதில் மின்ட் சாக்லேட்டுகள் மட்டுமே இருக்கின்றன; இல்லாவிட்டால் aniseed சாக்லேட்டுகள் மட்டுமே இருக்கின்றன. மின்ட் என்று வைத்துக்கொள்வோம். (aniseed ஆக இருந்தாலும் இதே வழிதான்.)
இப்போது aniseed என்று லேபில் ஒட்டிய பெட்டியில் மின்ட் இருக்க முடியாது. அது மிக்ஸ் ஆகத்தான் இருக்க வேண்டும்.
அப்படி என்றால் மின்ட் என்று லேபில் ஒட்டிய பெட்டியில் aniseed மட்டுமே இருக்க முடியும்.
விடை கண்டுபிடித்த பாலராஜன்கீதாவுக்கு வாழ்த்துகள்!
தௌக்கக்கப்பட்ட பக்கம்: மிச்சம் மீதி
தொடர்புடைய பக்கம்: புதிர்
37.523851
-122.047324
ஆகஸ்ட் 21, 2010
Posted by RV under
Blogging [7] Comments
பக்சின் ஆட்சேபணைகளையும் மீறி ஒரு தனி ப்ளாக் வைத்துவிடலாம் என்று இருக்கிறேன். ப்ளாகுக்கு நல்ல பேர் ஏதாவது சொல்லுங்களேன்!
தொகுக்கப்பட்ட பக்கம்: மிச்சம் மீதி
37.523851
-122.047324
அடுத்த பக்கம் »