அவருடைய தியரியில் தமிழரே உலகில் முதல் மானிடராம். இன்றைக்கு இந்து மகா சமுத்திரம் இருக்கும் இடத்தில் ஒரு பெரிய நிலப் பரப்பு இருந்ததாம். அதுதான் மெதுவாக கிழக்கு நோக்கி நகர்ந்து அன்றைய ஆசியாவின் தென்பகுதியில் முட்டியதாம். அதனால்தான் இமயமலை எழுந்ததாம். இன்றைய இந்தியா, ஆஸ்திரேலியா எல்லாம் உருவானதாம். பழைய இலக்கியங்கள் பேசும் கடற்கோள், பஃருளி ஆறு, முதல் சங்கம், இடை சங்கம், சுமேரியர்களின் முதல் ஐதீகமான வெள்ளத்திலிருந்து தப்பிய உட்னாபிஷ்டிம், பைபிளில் சொல்லப்படும் நோவா சந்தித்த வெள்ளம், தசாவதாரக் கதைகளில் வரும் மச்சாவதாரக் கதை எல்லாம் இந்த அழிவையே விவரிக்கின்றனவாம்.
அந்த நிலப்பரப்பில் உருவான முதல் மனிதர்கள் தமிழர்களே என்றும் அவர்கள்தான் உலகம் எங்கும் பரவி வேறு வேறு “இனங்களை” உருவாக்கினார்கள் என்றும் பாவாணர் சொல்கிறார்.
பாவாணர் சொல்வதை எல்லாம் சீர்தூக்கிப் பார்க்க எனக்கு அறிவு போதாது. ஆனால் முதல் மனிதன் தமிழன் என்றால் ஆரியனும் தமிழன் திராவிடனும் தமிழன். அப்புறம் பாவாணரை தங்கள் வழிகாட்டி என்று மேதை என்றும் கும்பிடுபவர்கள் ஆரியன் வந்தேறி, போயேறி என்று பேசுவதில் அர்த்தம் இல்லையே? அவர்கள் சொல்லும் திராவிடன்/தமிழன் சிறந்து விளங்கினான், பிராமண ஆரியன் வந்து காரியத்தை கெடுத்துவிட்டான் என்ற தியரி உதைக்கவில்லையா? இருந்தவனும் தமிழன், கைபர் கணவாய் வழியாக எவனாவது வந்திருந்தால் அவனும் தமிழன்! அப்புறம் இந்த இரண்டு கும்பலையும் பிறப்பை வைத்து எப்படி ஆரியன் திராவிடன் என்று பிரிப்பது?
தொகுக்கப்பட்ட பக்கம்: ஜாதி
தொடர்புடைய சுட்டிகள்:
தேவநேயப் பாவாணர் பற்றிய விக்கி குறிப்பு
எஸ். வையாபுரிப் பிள்ளை, தேவநேயப் பாவாணர் மற்றும் தமிழ் இலக்கியங்களின் கால வரையறை

ஜூலை 29, 2010 at 11:32 பிற்பகல்
தேவநேயப்பாவாணர் தியரி ஒரு ஹம்பக்.
மனிதன் தோன்றியது ஆப்ரிக்காவில். தமிழன் இந்தியாவில் வந்தேறியது சில பத்தாயிரம் ஆண்டுகள் முன். ஆரியர் வந்து சேர்ந்தது சில ஆயிரம் ஆண்டுகள் முன். திண்டுக்கல்லில் ரோடு போட பீகாரில் இருந்து பீகாரிகள் வந்தது சில ஆண்டுகள் முன். அதனால என்ன சார் வந்தது ?
ஜூலை 30, 2010 at 12:31 மு.பகல்
//அந்த நிலப்பரப்பில் உருவான முதல் மனிதர்கள் தமிழர்களே // உண்மை .இதில் மாற்றுக்கருத்தே இல்லை .
ஜூலை 30, 2010 at 12:39 மு.பகல்
//பிராமண ஆரியன் வந்து காரியத்தை கெடுத்துவிட்டான் என்ற தியரி உதைக்கவில்லையா? இருந்தவனும் தமிழன், கைபர் கணவாய் வழியாக எவனாவது வந்திருந்தால் அவனும் தமிழன்! அப்புறம் இந்த இரண்டு கும்பலையும் பிறப்பை வைத்து எப்படி ஆரியன் திராவிடன் என்று பிரிப்பது?//
உலகத்தின் ஆதிமதம், தாய் மதம் த கிரேட் ஹிந்து மதம் என்று ஜிங்சா அடித்துக் கொண்டே பிறமதங்களைத் தூற்றும் லாஜிக் கூட இப்படிப் பட்டது தானே சார். எல்லாம் கிந்துமதத்தில் இருந்து வந்திருந்தால் மிசனரிகளும், இமாம்களும் கூட இந்துக்கள் தானே என்று லாஜிக் பேசினால் நீங்களோ அவர்களோ ஒப்புக் கொள்வீர்களா ?
ஜூலை 30, 2010 at 6:40 மு.பகல்
ஆர்.வி.யின் கருத்தையும் ஒப்புக்கொள்கிறேன். கோவி. கண்ணனின் கூற்றையும் ஆமோதிக்கிறேன். அப்படிப்பார்த்தால் இன்றைக்கு உலகம் அமைதியின் உறைவிடமாகவல்லவா இருக்க வேண்டும்?.
‘ஒபாமா’வின் முப்பாட்டனும் ஆதாம்தான். ‘ஒசாமா’வின் முப்பாட்டனும் ஆதாம்தான். பின் எதற்கு வெடிகுண்டு சத்தம்?. ஜெய்னுலாபுதீனும் ராமகோபாலனும் ஆதாமின் இரண்டு பேரன்கள்தானே.. பின் எதற்கு சர்ச்சைகள்?.
இவர்களின் ஆராய்ச்சி பலசமயம் சிரிப்பையே தருகிறது. ஒருநூறு வருஷத்துக்கும் குறைவான வாழ்நாளை வைத்துக்கொண்டிருக்கும் மனிதன், ப்ல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் எந்த இனம் முதலில் தோன்றியது என்று ஆராய்ச்சி செய்து என்ன ஆகப்போகிறது?. அந்த ஆராய்ச்சியின் முடிவு தெரியும் முன் இவன் ஆயுள் முடிந்து விடுமே. அப்புறம் இவன் வாழ்ந்து என்ன சாதித்தான்?. எவன் முந்தி வந்தான் என்று ஆராய்ச்சி செய்யவா இவன் தோன்றினான்?.
எல்லோருக்கும் ஒரு கிளைமாக்ஸ் காத்திருக்கிறது. தலைக்குமேல் தொங்கும் கத்தி எப்போது அறுக்கப்பட்டு தலையில் இறங்கும் என்பது யாராலும் கணிக்க முடியாத ஒன்று. இது ஒன்றும் வரிசையில் நின்று வாங்கும் பொருள் அல்ல, நமக்கு முன்னால் இன்னும் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள் என்று தைரியம் கொள்வதற்கு. உலகத்திலேயே மிகப்பெரிய பம்பர் குலுக்கல் நடத்திக் கொண்டு இருப்பவன், யாருக்கு அடுத்து மரணத்தை பரிசாகத் தருவானென்பது மிகப்பெரிய புதிர். நூறு வயது முதியோரை அடுத்து ஆறுமாதக் குழந்தையை அழைப்பான். அது தெரிந்தும் ஆட்டம் போடுகிறோம். மரணித்தவனை குழியில் தள்ளி மூடிவிட்டு வந்த நமக்கு அடுத்து சிரிப்பதற்கு எப்படி வாய் வருகிறது?. அடுத்த மரணத்தைப் பார்த்ததும் அந்த சிரிப்பை சிறிது காலம், அல்லது சிறிது நேரம் தற்காலிகமாக ஒத்திப்போட்டுவிட்டு மீண்டும் அழுகிறோமே அது எப்படி?.
பெரிய பெரிய கோட்டை கொத்தளங்களையும், அரண்மனைகளையும் கண்டு ‘அடேயப்பா இதை எப்படிக் கட்டினார்கள்?’ என்று வியப்பதற்கு முன் நமக்கு (எனக்கு) தோன்றுவது ‘இதைக் கட்டியவர்கள் எல்லாம் இப்போது எங்கே?. இதை ஆண்டு அனுபவித்தவன் இப்போது எங்கே?. காலம் முழுவதும் நிலைத்திருப்போம் என்றுதானே இவற்றைக் கட்டினான்? அவன் ஆசைப்படி இருந்தானா?. மரணத்தைப்பற்றி சிறிது சிந்தித்திருந்தால் இவற்றைக் கட்டுவதில் மெனக்கெட் டிருப்பானா?’ என்ற எண்ணம்தானே தோன்றுகிறது?. என்னென்ன ஆடம்பரங்கள் எத்தனை வேலைப்பாடுகள். இவற்றைப்பாதுகாத்து அடுத்துவரும் தலைமுறைக்குத் தர வேண்டுமாம். எதற்கு?. நாமே ‘நாலாளுக்கு மேலாளாக’ப் போகும்போது யாருக்காக இவையெல்லாம்?.
ஜூலை 30, 2010 at 7:39 மு.பகல்
//முதல் மனிதன் தமிழன் என்றால் ஆரியனும் தமிழன் திராவிடனும் தமிழன். //
//இருந்தவனும் தமிழன், கைபர் கணவாய் வழியாக எவனாவது வந்திருந்தால் அவனும் தமிழன்! அப்புறம் இந்த இரண்டு கும்பலையும் பிறப்பை வைத்து எப்படி ஆரியன் திராவிடன் என்று பிரிப்பது?//
அப்புறம் எல்லா பெண்களும், ஆண்களும் சகோதர முறை உடையவர்கள்.
அடிப்படையே ஆட்டம் கண்டு விடாதா
ஜூலை 30, 2010 at 8:57 மு.பகல்
“அந்த ஆராய்ச்சியின் முடிவு தெரியும் முன் இவன் ஆயுள் முடிந்து விடுமே. அப்புறம் இவன் வாழ்ந்து என்ன சாதித்தான்?. எவன் முந்தி வந்தான் என்று ஆராய்ச்சி செய்யவா இவன் தோன்றினான்?. ”
You are holding academic research to ridicule.
It is not like you say.
Research needs not always end in conclusions. A research, which was left incomplete on the death of the researcher, may be taken up by the next generation using it as the lead. It is a continnum.
Research on such themes as the one under discussion here, is conjectural mostly. If backed by evidence, too. Because, the evidence is valid till another contrary evidence is dug out and displayed. The next evidence is valid till another one is dug out and displayed. It goes on and on.
Devaneyappaavanaar or Robert Caldwell did great service as researcher. Their conclusions may not please all. Especially, Tamil brahmins whose agitating voice is heard all over the Tamil blog world whenever such subject is discussed.
Among Tamil brahmins, many believe they dont belong to the same race as the dark skinned villagers of TN. There lies the hub!
ஜூலை 30, 2010 at 3:03 பிற்பகல்
சிறு பிள்ளை ஆராய்ச்சி.
காக்காய் கருப்பு,ஆகவே கருப்பாயிருப்பதெல்லாம் கருப்பு என்று ஆராய்ச்சியின் முதல் தவறை உணர்த்துவார்கள்.
கோளாறு எங்கே வந்தது என்றால் தமிழே சமஸ்கிருதத்தில்(சமஸ்கிருதம் என்றால் திருத்தப்பட்டது என்று பொருள்)இருந்துதான் வந்தது என்று தமிழறிஞர்களையே நம்ப வைத்து விட்டார்கள்.பார்ப்பனர்களை நீங்கள் திராவிடர்களா என்று கேளுங்கள்,அவர்கள் உங்களுக்குக் குலம் கோத்திரம் எல்லாம் சொல்லுவார்கள்.
ஜூலை 30, 2010 at 5:58 பிற்பகல்
எனக்கென்னமோ, ஆரியர்களின் மீது இரக்கம் வருவேதேயில்லை. நான் ஆத்தகன் என்ற முறையில் அவர்கள் கோவில் பராமரிப்புகளும், கொள்கைகளும் திருப்தி கரமாக இல்லை. வீடுகளில் தமிழ் பேசும் பிராமணர்கள் குறைவு. அவர்கள் இஸ்லாமியர்களைப் போல தங்கள் கடவுளின் மொழி என்று சமஸ்கிருதத்திலேயே பேசிக் கொள்கிறார்கள்.
தமிழ் பேசாத ஒருவனை தமிழன் என்பது தகுமோ!.
http://sagotharan.wordpress.com/
ஜூலை 30, 2010 at 6:00 பிற்பகல்
“தமிழ் பேசுபவன் தான் தமிழன்” என்று சொன்னதால் உருதில் பேசிக் கொண்டிருக்கும் இஸ்லாமியர்களை தமிழ் முஸ்லிம்கள் என்று சொல்லக் கூடதல்லவா என யாராவது கேட்கக் கூடும். ஏன் அவர்களுக்கே உறைத்தால் கூட நல்லது.
http://sagotharan.wordpress.com/
ஜூலை 30, 2010 at 6:57 பிற்பகல்
இப்ப ஆரியனாவது, திராவிடனாவது எல்லாம் எதோ ஒரு வகையில் கல்லா கட்டும் /கட்ட பார்க்கும் காரியன்கள் தான்.
ஜூலை 30, 2010 at 10:12 பிற்பகல்
செந்தழல் ரவி, // அதனால என்ன சார் வந்தது? // ஒன்றும் வரவில்லை. ஆனால் “வந்தேறி” ஆரிய பிராமணர்கள் என்று சொல்பவர்களிடமும் இதை கேட்க மறந்துவிடாதீர்கள்.
நண்டு, //அந்த நிலப்பரப்பில் உருவான முதல் மனிதர்கள் தமிழர்களே // உண்மை .இதில் மாற்றுக்கருத்தே இல்லை // செந்தழல் ரவிக்கு இருக்கிறது. அவர் ஆஃப்ரிக்காவில்தான் முதல் மனிதன் என்கிறார். நானும் அப்படித்தான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
கோவி கண்ணன் // மிசனரிகளும், இமாம்களும் கூட இந்துக்கள் தானே என்று லாஜிக் பேசினால் நீங்களோ அவர்களோ ஒப்புக் கொள்வீர்களா? // மாட்டேன். பாவாணரின் கருத்து ஹம்பக்கா இல்லையா என்று உறுதியாக சொல்லும் அளவுக்கு எனக்கு தெரியாது. ஆனால் அவரை ஒரு புறம் கொண்டாடுவது, இன்னொரு புறம் ஆரியன்-திராவிடன் என்று பேசுவது இரண்டுக்கும் உள்ள முரண்பாடு உதைக்கிறது. அவரது தியரிகள் மறுக்கப்பட்டனவா இல்லையா என்று தெரியாது. எப்படி இருந்தாலும் சரி, நானும் செந்தழல் ரவி போலத்தான். அப்படி வந்திருந்தால் என்ன என்று கேட்கும் ஜாதி.
சாரதா, நீங்கள் சொல்வதை பொதுவாக ஆமோதிக்கிறேன். ஆனால் // பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் எந்த இனம் முதலில் தோன்றியது என்று ஆராய்ச்சி செய்து என்ன ஆகப்போகிறது? // இந்த கேள்வியில் எனக்கு இசைவில்லை. ஆராய்ச்சி tangible பயன் இல்லாவிட்டால் வீணே என்று சொன்னால் அப்புறம் சினிமா பார்ப்பதில் என்ன tangible பயன்? அறிவை பெருக்குவதில் tangible பயன் என்ற ஒரு அளவுகோல் போதாது.
பரிதிநிலவன், // அப்புறம் எல்லா பெண்களும், ஆண்களும் சகோதர முறை உடையவர்கள். // நீங்கள் ஆதாம் ஏவாள் கதையில் நம்பிக்கை உடையவரோ? பரிணாம வளர்ச்சி என்பது ஒரே தந்தை தாய்தான் மூதாதையர் என்பதில்லை. பாவாணர் இந்த மூழ்கிப் போன பகுதியில் மனித குலம் எழுந்தது (கவனியுங்கள், ஒரு மனிதன்-மனுஷி இல்லை), அது முதன்முதலாக பேசியது தமிழ் மொழி, பிறகு இந்த தமிழர்களும் தமிழ் மொழியும் உலகெங்கும் பறந்து வேறு வேறு மொழிகளும் “இனங்களும்” உருவாகின என்கிறார்.
குலசை சேகர், எனக்கு பாவாணர் பற்றி தெரிந்தது ஏறக்குறைய அந்த விக்கி குறிப்புதான். அவரது ஆராய்ச்சி இதுதான் என்றால் எனக்கு ஒன்றும் பெரிதாக தெரியவில்லை. // Among Tamil brahmins, many believe they dont belong to the same race as the dark skinned villagers of TN. // ரேஸ் என்றால் உங்கள் கண்ணில் என்ன என்று தெரியவில்லை. ரேஸ் என்றால் ஜாதி என்றால் நீங்கள் சொல்வது சரிதான். பிராமணர்கள் கவுண்டர்கள், செட்டியார்கள், நாயக்கர்கள், தலித்கள் வேறு வேறு ஜாதியினர் என்று நினைக்கிறார்கள். கவுண்டர்களும் செட்டியார்களும், தலித்களும் கூட அப்படித்தான். ரேஸ் என்றால் இனக்குழு என்றால் – கருப்பர்கள், வெள்ளையர்கள், மங்கோலாய்ட் மாதிரி – நீங்கள் எத்தனை பிராமணர்கலுடன் பழகினீர்கள், அதில் எத்தனை பேர் இப்படி சொன்னார்கள் என்று சொல்ல முடியுமா? நான் பார்ப்பன ஜாதியில் பிறந்தவன். ஒரு இரண்டாயிரம் மூவாயிரம் பிராமனர்களையாவது தெரியும். ஒருவர் கூட இப்படி சொல்லி, நினைத்து நான் பார்த்ததில்லை.
தமிழன் // சிறு பிள்ளை ஆராய்ச்சி. // பாவாணரின் ஆராய்ச்சியின் முடிவுகள் தவறானவை என்று எனக்கும் தோன்றுகிறது. ஆனால் முழுமையாக படிக்காமல் நான் இப்படி சொல்வதற்கில்லை. // தமிழே சமஸ்கிருதத்தில்… இருந்துதான் வந்தது // இதற்கும் இந்த பதிவுக்கும் தொடர்பு இல்லையே? அப்புறம் நான் படித்த வரையில் சிலர் – வையாபுரிப் பிள்ளை மாதிரி – சமஸ்கிருதமும் தமிழும் தொடர்பு உள்ள மொழிகள் என்று சொல்லி இருப்பதாகவும், பாவாணர் சமஸ்கிருதம் தமிழிலிருந்து வந்த மொழி என்று சொல்வதாகவும் தெரிகிறது.
ஜெகதீஸ்வரன், // வீடுகளில் தமிழ் பேசும் பிராமணர்கள் குறைவு. அவர்கள் இஸ்லாமியர்களைப் போல தங்கள் கடவுளின் மொழி என்று சமஸ்கிருதத்திலேயே பேசிக் கொள்கிறார்கள். // எனக்கு தெரிந்து சமஸ்கிருதத்தில் வீட்டுக்குள் பேசும் ஒரே கிராமம் கர்நாடகத்தில் இருக்கிறதாம். வேறு எங்கும் – குறிப்பாக தமிழ்நாட்டில் – சமஸ்கிருதத்தில் வீட்டுக்குள் பேசும் ஒரு குடும்பம் என்று கேள்வி கூட பட்டதில்லை. மன்னிக்க வேண்டும் ஜெகதீஸ்வரன், இது சுத்த பிதற்றல்! சங்கர மடத்தில் கூட தமிழ்தான் பேசுகிறார்கள்! ஆறு கோடி தமிழர் என்கிறார்கள், மூன்று சதவிகிதம் பிராமணர் என்கிறார்கள். ஒரு குடும்பத்தில் நாலு பேர் என்று வைத்துக் கொண்டால் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் தமிழ் பிராமணக் குடும்பங்கள். உங்களுக்கு சமஸ்கிருதத்தில் பேசிக் கொள்ளும் ஐம்பது குடும்பமாவது – சரி விடுங்கள் ஐந்து குடும்பமாவது – தெரியுமா?
பத்மநாபன், மறுமொழிக்கு நன்றி!
ஜூலை 31, 2010 at 6:15 மு.பகல்
//வீடுகளில் தமிழ் பேசும் பிராமணர்கள் குறைவு. அவர்கள் இஸ்லாமியர்களைப் போல தங்கள் கடவுளின் மொழி என்று சமஸ்கிருதத்திலேயே பேசிக் கொள்கிறார்கள்.
தமிழ் பேசாத ஒருவனை தமிழன் என்பது தகுமோ!.//
ஜெகதீஸ்வரன், இதை வன்மையாக மறுக்கிறேன்…..
சென்னையின் சில பகுதிகளிலும், வேலூரின் சில பகுதிகளிலும்தான் இஸ்லாமியர்கள் உருதுவில் பேசுகிறார்களே தவிர, தமிழகத்தின் பிற பகுதிகளில் இருக்கும் இஸ்லாமியர்கள் தமிழில்தான் பேசுகிறார்கள். அதில் பலர் தமிழில் பாண்டித்யம் உடையவர்களும் கூட. அவர்கள் குர்ரான் படிக்கவும், தொழுகை நடத்தவும்தான் அரபியைப் பயன்படுத்துகிறார்களே தவிர (கவனிக்க அதுவும் கூட அரபியைத்தான், உருதுவை அல்ல) மற்றபடி பேசுவது அனைத்தும் தமிழில்தான். தென் தமிழ்நாட்டில் வாழும் இஸ்லாமியர்கள் உருதுவில் ஒரு வார்த்தை கூடத்தெரியாதவர்கள். அவர்களுக்கு பேச, படிக்க, எழுதத் தெரிந்த ஒரே மொழி தமிழ் மட்டுமே. இதை உறுதியாகச்சொல்ல முடியும்.
ஆகஸ்ட் 1, 2010 at 2:48 மு.பகல்
சாரதா, தமிழ் பேசாத தமிழர் இரு வகை . தமிழ் பேசாத தமிழ் வம்சாவளியினர் காலப்போக்கில் – இரண்டு மூன்று தலைமுறைகளுக்குப் பிறகு – தங்கள் தமிழ் அடையாளத்தை இழந்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன். தமிழ் நாட்டில் வாழ்பவர்கள் – வேறு வம்சாவளியினராக இருந்தாலும் – இரண்டு மூன்று தலைமுறைகளில் தமிழர் ஆகிவிடுவார் என்று நினைக்கிறேன். வீட்டில் ஒரு மாதிரி உடைந்த தெலுங்கு பேசும் நாயக்கர்கள், போயர்கள், தெலுங்கு பிராமணர்கள், ரெட்டியார்கள் எல்லாரும் தமிழர்களே என்று நினைக்கிறேன். ஹேமங் பதானி, பரத் ரெட்டி, கிருபால் சிங் போன்ற கிரிக்கெட் வீரர்கள் தமிழர்களே! மைசூர் ஐயங்கார்கள் கன்னடிகர்களே! என்ன மைசூர் ஐயங்காருக்கு தமிழனாக மாறுவது கொஞ்சம் சுலபம், அவ்வளவுதான். அந்த வகையில் பார்த்தால் தமிழ் நாட்டில் உருது பேசும் இஸ்லாமியர்களும் தமிழர்களே என்று நினைக்கிறேன். ஜெகதீஸ்வரன் என்ன நினைப்பாரோ தெரியாது.
விஞ்ஞானி, பாராட்டுக்கு நன்றி!
நாகராஜ், நீங்கள் சொல்வது மிகச் சரி.
விருட்சம், உங்கள் கருத்தை ரசித்தேன். அப்புறம் அண்ணாமலை படத்தைப் பற்றி புதிய கோணத்தில் யோசித்திருக்கிறீர்கள்! பாராட்டுக்கள்!
ஜூலை 31, 2010 at 8:14 மு.பகல்
அவர்கள் வீட்டில் பேசுவது தமிழில் மட்டுமே. குழுஊக்குறி என சொல்லக்கூடிய சில பதங்களை (மன்னிக்கவும்: சொற்களை) அவர்கள் பயன்படுத்துவது அவர்கள் மொழி தமிழ் இல்லை என ஆக்கி விடாது.
ஒரு பதிவர் (வேத பிரகாஷ் என நினைக்கிறேன்) திரும்ப திரும்ப தன வலைப் பக்கத்தில் சொல்வது போல, நாம் சாதி, இனம், மொழி இவற்றை குழப்பிக் கொள்கிறோம். Race என்பது இன்னும் ஒன்று.
மொத்தத்தில், ஆர்வீ பதிவில் கூறி இருப்பது நூற்றுக்கு நூறு சரி.
ஜூலை 31, 2010 at 8:24 மு.பகல்
//சமஸ்கிருதத்திலேயே பேசிக் கொள்கிறார்கள்//
ayya entha brammnaal entha samaskrithathil pesuranga… inga tamile sariyaa varaathu… samaskritham enga vanthathu… yaaravathu manthiram sollum brammanana paathruppinga… ada.. avarukke athukku artham theriyaamaththaan kalatha vootraaru… ada po sir…
ஜூலை 31, 2010 at 9:09 மு.பகல்
வந்தேறியை என்று சிலரைத் திட்டும் நாம் போயேறி கொண்டு இருப்பதை மறந்து விடுகிறோம். பல ஆயிரம் ஆண்டு முன்னாடி வந்தேறிட்டான்
துரத்துங்கப்பா என்று சொல்லிக் கொண்டே சில நூறு ஆண்டு ஆச்சு நம் சகோதரர்கள்் போயேறி. உரிமை மறுக்கப் படுகிறது என்று கொதிக்கிறோம்.
சில வருடங்களே போயேறி விட்ட ஒரு இடத்தில சில உயர் பதவிகளில் நம்மில் ஒருவர் அமர்ந்து விட்டால் ( citizenship பார்த்தா அவன் அங்கே ஏறி இருப்பான் )
புல்லரித்து புளங்காகிதப் பட்டு நம்மாளு என்று கொண்டாடிக் கொள்வோம். நமை மாதிரி crazy fellow எங்கேயாவது உண்டோ ?
ஜூலை 31, 2010 at 9:15 மு.பகல்
அப்புறம் RV இந்த மாதிரி பதிவுகளுக்குத் தான் டீக் கடை நிறையுது. நிறைய கல்லாக் கட்டுங்க.
நம் புராணங்களை செய்து எடுக்கப் படும் சினிமா – முதல் பகுதி எழுதிட்டேன். படிச்சு பார்த்து சொல்லுங்க
ஆகஸ்ட் 1, 2010 at 11:44 பிற்பகல்
சுஜாதா கூறுகிறார்…. (கற்றதும் பெற்றதும்)
========================================
பேராசிரியர் கவிஞர் பழமலய்யும், பர்த்யு (Purdue) பல்கலைக் கழகத்தில் கெமிக்கல் இன்ஜினீயரிங் பிரிவில் ஏ.ஐ. (Artificial Intelligence) என்னும் செயற்கை அறிவியல் பாடம் நடத்தும் புரொபஸராக இருக்கும் வெங்கட் வெங்கடசுப்ரமணியனும் வீட்டுக்கு வந்திருந்தார்கள். இந்தச் சந்திப்பு, ஒரு கலக்கலான அனுபவமாக இருந்தது.
பழமலய் வள்ளலார் பற்றியும் வெங்கட் ஜெனட்டிக் அல்காரிதம் பற்றியும் பேச, இடைச்செருகலாக நான் பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப் புலம்பலுக்கும் எக்ஸ்பர்ட் சிஸ்டம்ஸுக்க்கும் மத்தியில் தாவிக் கொண்டிருக்க… எங்கள் கிவி (நாய்), ‘ஏதாவது ஒரு சப்ஜெக்ட் பேசுங்கப்பா’ என்பதுபோல் ஒருமாதிரி எங்களை வேடிக்கை பார்த்தான்.
பழமலய்க்கு எப்போதும் ஆரிய-திராவிட வேறுபாடுகளில் ஈடுபாடு.
‘லெமூரியா கண்டத்திலிருந்து வந்த திராவிடர்களும் சிந்துவெளியிலிருந்து வந்த ஆரியர்களும் கலந்ததுதான் இன்றைய பிராமணர்கள் என்றொரு சித்தாந்தம் இருக்கிறதே… அதுபற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’ என்று வெங்கட்டைக் கேட்டார் பழமலய் (இது யார் சித்தாந்தம் என்று சொல்லவில்லை!).
‘இந்தப் பிரச்னை யெல்லாம் இன்னும் சில ஆண்டுகளில் பல்வேறு மனிதஇனங்களின் டி.என்.ஏ. சரங்களை ஒப்பிடு வதன் மூலம் தீர்ந்து விடும்!’ என்றார் வெங்கட்.
தீர்ந்தாலும், அதைத் தமிழ்கூறும் நல்லுலகம் ஒப்புக்கொள்ளுமா? சந்தேகம்தான்.
ஆகஸ்ட் 2, 2010 at 4:18 பிற்பகல்
ஸ்ரீனிவாஸ், சுஜாதா பதில்களாக கொடுத்து அசத்துகிறீர்கள், வாழ்த்துக்கள்!
ஆகஸ்ட் 9, 2010 at 5:42 பிற்பகல்
நன்றி
செப்டம்பர் 8, 2010 at 8:51 பிற்பகல்
எந்த உயிரினத்திற்கு தொண்டையில் ஒலிநாண்
உண்டாகியதோ அப்போதே மொழிதோன்றி
விட்டது.குரங்கிலிருந்து மனிதன் பிரிந்தான்
என்று சொன்னால் எந்த பகுதியில் முதல்
குரங்கு உண்டானதென்ற வாதம்.
முதலில் உங்கள் பிறவியையே முழுமைப்
படுத்தமுடியவில்லை,இதில் முன்னே பிறந்தவன்
பின்னே பிறக்கவிருப்பவன்பற்றி ஆராய்ச்சி,
எவனொருவன் பழம்பெருமை பேசுகிறானோ,
அவன் இப்போது வாழவில்லை,என்றுபொருள்.
அப்படி படிமுறைத்திரிபு என்றாலும்கூட
முதலில் வெப்ப மண்டலத்தில் கருப்பாகத் தோன்றி புலம்நகர்ந்து கபிலநிறமெடுத்து இடம்
நகர்ந்து மஞ்சள் உருவுக்குபிறழ்ந்து குளிர்தேசத்தில் இப்போது வெள்ளையினமாக
மாறி இருப்பதுதான் இறுதி இனம்.காலம் செல்லச்செல்ல இதிலிருந்தும் ஓரினம் வெளிபடலாம்.