எல்லா நாட்டிலும் நடப்பதுதான். இருந்தாலும் நம் நாட்டில் இருக்கும் சிஸ்டம் பணக்காரர்களால் சுலபமாக வளைக்கப்படுவது. அதனால்தான் இந்த மாதிரி செய்திகள் நம்பிக்கை அளிக்கின்றன.
லெக்சஸ் கார் ஒன்றை இறக்குமதி செய்திருக்கிறார்கள். அதில் வரியை மிச்சப்படுத்த பொய் டாக்குமென்ட்கள் தயார் செய்திருக்கிறார்கள். மாட்டிக்கிட்டாங்க!
அவருக்கு ஒரு கோடி என்பது ஏறக்குறைய பாக்கெட் மணி. ஒரு கோடி ரூபாய் வரி கட்டாத கேசில் அவர் மாட்டி ஜெயிலுக்கு போனால் அதை விட poetic justice இருக்கமுடியாது!
அனேகமாக இது நடராஜன் போன்றவர்களுக்கு நியூசன்ஸ் கேஸ் மாதிரிதான். ஹை கோர்ட், சுப்ரீம் கோர்ட் என்று போய் வாய்தா வாங்கியே காலத்தை ஓட்டிவிடுவார். இந்த கோர்ட்டிலேயே ஆறு வருஷம் ஆகி இருக்கிறது. ஏன்தான் நம் சட்டம் இவ்வளவு மெதுவாக செயல்படுகிறதோ? இருந்தாலும் ஒரு நப்பாசை, நியாயம் எப்போதாவது ஜெயிக்காதா?
தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டு நடப்பு
தொடர்புடைய பக்கம்: ஹிந்து செய்தி
ஜூலை 29, 2010 at 10:11 மு.பகல்
‘நடராஜன் கைது’ என்று மட்டும் சொன்னால் தெரிய முடியாத அளவுக்கு, ‘சசிகலாவின் கணவர் நடராஜன்’ என்றால் மட்டுமே தெரிந்துகொள்ளுமளவிற்கு நிலைமை இருக்கிறது.
அப்படிப்பட்ட சசிகலா யார்?. இந்நாட்டின் குடியரசுத்தலைவர்?. பிரதமர்?. முதலமைச்சர்?. மத்திய அல்லது மாநில அமைச்சர்?. பாராளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர்? எதற்கு வளர்த்திக்கொண்டு…. அட்லீஸ்ட் ஒரு வார்டு கவுன்ஸிலர்?. அல்லது பெரிய ஸ்காலர்?. தொழிலதிபர்?. விஞ்ஞானி?. சமூக சேவகி?. எதுவுமில்லை.
ஒரே தகுதி… ஒரு பிரபலமானவருக்கு “தோழி”. அவ்வளவுதான். அந்த ஒரே தகுதியை வைத்து, இன்றைக்கு அவருக்கு சொத்துக்களில்லாத பெரிய நகரங்கள் தமிழகத்தில் இல்லை என்ற நிதர்சன உண்மை. அவற்றைக் குவிக்க உதவியாக இருந்தது (இருப்பது?) ‘இன்னாரின் தோழி’ என்ற ஐடெண்ட்டிட்டி கார்டு. (சரித்திர நூல்கள் கூட இவ்வளவு பவர்ஃபுல்லான தோழிகளைக் கண்டதில்லை).
அந்த கோல்மால்களுடன் ஒப்பிடும்போது, காருக்கு வரிகட்டாத இந்த மேட்டரெல்லாம் சும்மா ஜுஜுபி. ஆட்சி மட்டும் கையில் இருந்தால் இதை சும்மா அமுக்கியிருக்க மாட்டோமா?.
ஜூலை 29, 2010 at 11:12 பிற்பகல்
சாரதா, நீங்கள் சொல்வது முழுவதும் உண்மை. இந்த ஜுஜுபி மாட்டரிலாவது நியாயம் நிற்கிறதே என்ற சந்தோஷம்தான்…