இது தொடர் பதிவின் இறுதிப் பகுதி. அவரை சந்தித்த அனுபவம் பற்றி இங்கே; அவருடன் சிதம்பரம் கோவிலைப் பற்றி விவாதித்தது இங்கே; அவரது இன்றைய அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி இங்கே.
சுப்ரமணிய சாமி ஒரு சுவாரசியமான மனிதர். பொருளாதாரத்தில் நிபுணர். வக்கீலுக்குப் படித்தாரோ என்னவோ, ஆனால் சட்டத்தைப் பற்றி நிறைய தெரிந்தவர். இந்திய அரசியலில் அவர் வெறும் fringe மனிதராக இருந்தாலும், அத்தனை பேரிடமும் inside track இருக்கிறது. எமர்ஜென்சி காலத்திலிருந்து ஒவ்வொரு பெரிய அரசியல் மாற்றத்தின் உள்குத்து வேலைகள் அத்தனையும் அவருக்கு தெரிந்திருக்கும். அவர் on the record, off the record ஆக சொல்லும் பல விஷயங்களை மனிதர் சும்மா சென்செஷனுக்காக ஏதோ சொல்கிறார் என்று புறம் தள்ளினாலும், இந்திய அரசியலில் அவர் சொல்வதை விட நம்பமுடியாத விஷயங்கள் நடந்திருக்கின்றன.
ஆனால் அவர் எமர்ஜென்சி காலத்தில் “சாகசம்” புரிந்திருக்கிறார். அப்போது அவர் எம்.பி. அவரை கைது செய்ய வாரன்ட் இருக்கிறது. மனிதர் நேராக நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து பேசிவிட்டு விமானம் ஏறி அமேரிக்கா சென்றுவிட்டார்! எமர்ஜென்சியை எதிர்த்தவர்களில் முக்கியமான ஒருவர். ஜனதா கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது அதன் founder member-களில் ஒருவர். இப்போதும் அந்த ஜனதா கட்சி லெட்டர்பாடிலாவது இருக்கிறது. அதற்கு இவர்தான் தலைவர்.
மொரார்ஜி காலத்தில் இவருக்கு மந்திரி பதவி கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்திருக்கிறார். கிடைக்கவில்லை. மொரார்ஜியோடு முதலில் ஏதோ தகராறு இருந்திருக்கிறது. அப்புறம் சரியாகிவிட்டது என்று சொல்கிறார். ஆனாலும் அந்த கசப்பில்தான் இவர் விரும்பியது கிடைக்கவில்லை என்று தோன்றுகிறது. மொரார்ஜி நீ இன்னும் சின்னப் பையன், (அப்போது முப்பத்தாறு முப்பத்தேழு வயது இருக்கும்) துணை மந்திரி பதவி வேண்டுமானால் தருகிறேன் என்றாராம். அது இவருக்கு அவமானமாக இருந்திருக்கிறது, அதனால் மறுத்துவிட்டாராம்.
அப்புறம் இந்திரா அலை, ராஜீவ் அலை, வி.பி. சிங் அலை என்று அலை அடித்துக் கொண்டே இருந்தது. இவர் சில சமயம் எம்.பி.யாக ஜெயித்திருக்கிறார். இஸ்ரேலுடன் அதிகார பூர்வமான உறவு, இந்திய-சீன உறவை முன்னேற்றுதல் இரண்டும் இவருக்கு pet projects என்று தெரிகிறது. மானசரோவர் ஏரிக்கு இந்தியர்கள் யாத்திரை போக சீன அரசை சம்மதிக்க வைத்திருக்கிறார். வி.பி. சிங்கை சந்திரசேகர் கவிழ்த்ததற்கு இவர்தான் சூத்திரதாரியாம். சந்திரசேகர் காபினெட்டில் அமைச்சராக இருந்திருக்கிறார். அப்போது இவர்தான் தி.மு.க. அரசை டிஸ்மிஸ் செய்ய மூல காரணமாம்.
அதற்கப்புறம் இந்திய அரசியலில் marginalise செய்யப்பட்டுவிட்டார். ஜெயலலிதாவோடு சேர்ந்து வாஜ்பேயி அரசை கவிழ்த்தது ஒன்றுதான் இந்த கால கட்டத்தில் இவரது அரசியல் “சாதனை.” இப்போது சட்டம் ஒன்றே ஆயுதம்.
அவரது ஜனதா கட்சி தளத்தில் அவர் காமராஜ், இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய் முதல் பல தலைவர்களைப் பற்றி எழுதி இருக்கிறார். Of course, எல்லா கட்டுரைகளிலும் இவருடைய திறமை, நல்ல மனது ஆகியவற்றை அந்த தலைவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். வாஜ்பேயியோடு மட்டும் எப்போதும் கொஞ்சம் கசப்பு உண்டு போலிருக்கிறது. இருந்தாலும் மிகவும் சுவாரசியமான கட்டுரைகள். முடிந்தால் படித்துப் பாருங்கள்!
தொகுக்கப்பட்ட பக்கம்: அரசியல், ஆளுமைகள்
தொடர்புடைய பக்கங்கள்:
சுப்ரமணிய சாமியை சந்தித்தேன்
சுப்ரமணிய சாமியுடன் விவாதம்
சாமியின் அரசியல்
ஜனதா கட்சி தளத்தில் சுப்ரமணிய சாமியின் தலைவர்களைப் பற்றிய கட்டுரைகள்
ஜூலை 10, 2010 at 5:24 பிற்பகல்
இவ்வளவு திறமையானவர் ஏன் Bruce Fein ஈழத்தமிழர்கள் விடயத்தில் விவாதத்திற்கு அழைத்த போது அதற்கு மறுத்தாராம்?
ஜூலை 11, 2010 at 6:39 மு.பகல்
என் பார்வையில் சுப்ரமணிய சாமி செய்த ஒரு(ஒரே) நல்ல காரியம், மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பொழுது, முழு முயற்சி, சிபாரிசு செய்து மதுரைக்கு ரிங் ரோடு எனப்படும் புறநகர் வட்ட சாலை கொண்டு வந்தது.
இதனால் பயண நேரமும், போக்குவரத்து நெரிசலும் பெருமளவு குறைந்தது.
ஜூலை 11, 2010 at 7:15 மு.பகல்
ரதி, சாமியின் பல நிலைப்பாடுகளை நான் நிராகரிக்கிறேன். ஆனால் அவர் திறமைசாலி, அவருடைய கருத்து உலகத்துக்கு உண்மையாக இருக்கிறார் என்பதையும் உணர்கிறேன். உங்கள் புலிகள் ஆதரவும் எனக்கு இசைவானதில்லை, அதனால் அது பொய்யானதாக ஆகிவிடுமா, இல்லை நம் கருத்துகளை, வித்தியாசங்களை நம்மால் கடந்து செல்ல முடியவில்லையா?
எனக்கு ப்ரூஸ் ஃபெய்ன் யாரென்று தெரியவில்லை. புலிகள் ஆதரவாளரோ? ஆனால் கூப்பிடும் எல்லாருடனும் விவாதிக்க வேண்டும் என்று ஒன்றும் கட்டாயம் இல்லையே?
ராம்ஜி, விவரங்களுக்கு நன்றி! அவரது எமர்ஜென்சி கால “சாகசங்கள்” என்னை கவர்கின்றன.
ஜூலை 11, 2010 at 2:54 பிற்பகல்
Symbolic interaction என்பது இதைத்தான் போலும். நான் கேட்ட சாதாரண கேள்விக்கு நீங்கள் முன்முடிவுகளோடு பதில் சொல்லியிருக்கிறீர்கள், RV.
ஜூலை 12, 2010 at 3:23 பிற்பகல்
panmuka thiramai konda saamiyaitherinthu kondeen. sethu smuthram thittam parriya ivarathu karuththu 100%% unnmai.
ஜூலை 14, 2010 at 6:21 பிற்பகல்
ரதி, எதை முன் முடிவு என்று சொல்கிறீர்கள் என்று தெரியவில்லையே?
நாதன், சேது சமுத்திரம் இன்றைய சூழ்நிலையில் பயன் தராது என்று நானும் நினைக்கிறேன். ஆனால் சாமியின் எதிர்ப்பு அது ராமன் கட்டிய பாலம் என்பதால். அதை நான் முழுவதும் நிராகரிக்கிறேன். எந்த அரசுக்கும் eminent domain என்ற principle செல்லும்.
ஜூலை 15, 2010 at 3:31 பிற்பகல்
அன்புள்ள ஆர்.வி,
சு. சுவாமியைப் பற்றிய எல்லே ராமின் நகைச்சுவைக் கட்டுரை — ’செவ்வடையான மசால் வடையே!’ ( நன்றி: இந்த வார கல்கி)
இத்தனை பிரபலங்களைப் பேட்டி கண்டபின், சு. சுவாமியைப் பேட்டி காணாவிட்டால் எப்படி இதெல்லாம் பூரணமாகும் என்று நான் யோசித்துக்கொண்டே இருக்கும்போது என் செல்பேசி ஒலித்தது.
“இந்த மசால் வடை – செவ்வடை மேட்டர்ல நீங்க யார் யாரைப் பேட்டி கண்டேள், அவா என்னென்ன சொன்னாள்ங்கறதெல்லாம் நேக்கு எஃப்பிஐ ரிப்போர்ட்ஸ் கொடுத்துட்டா. இன் ஃபேக்ட் நான் இப்ப சான் ஃப்ரான்சிஸ்கோவில தான் இருக்கேன். நீங்க என்னைக் கேட்கலைன்னாலும் நான் சொல்றேன் எழுதிக்குங்கோ. ஜூனியர் கக்கன்ஜி தெரியுமில்லியா, அவரும் இப்ப என் கூடத்தான் வந்திருக்கார். அவர் தான் அடுத்த தமிழ்நாட்டு முதல்வர். அம்மாவும் ஓகேன்னு கொடநாட்லேர்ந்து சொல்லிட்டா.
இந்த செவ்வடை மேட்டர்லாம் சுத்த ஹம்பக். சோனியாவும் கருணாநிதியும் சேர்ந்து பண்ற அட்டகாசம். ஒபாமாவே என்னை போன்ல கூப்பிட்டுச் சொல்லிட்டார். நான் வோர்ல்ட் கோர்ட்ல இது பத்திக் கம்ப்ளெய்ன் பண்ணி இருக்கேன். ‘தி ஹேக்’ல ஆர்க்யூ பண்ண டேட்ஸ் கொடுத்துட்டா. முப்பது பில்லியன் நஷ்ட ஈடு கேட்டு போபால் விக்டிம்சுக்குத் தந்துடுவேன்.
செவ்வடையாவது, வெங்காய அடையாவது? எல்லாமே சுத்தப் பேத்தல். ஓட்டையே இல்லாத மசால் வடையிலே எப்படிப்பா தாலியை கோர்ப்பாளாம்?
இன் ஃபேக்ட் இந்த வடைக்கெல்லாம் ஆதிமூலமே அமெரிக்காள் சாப்டற பேகிள் (Bagel) தான். மாவுல ஓட்டை இல்லாட்டா பேகிள். ஓட்டை போட்டுட்டா அது டோநட் (doughnut). எங்க டோநட்டையும் சேப்பு டோநட்டுன்னு சொல்லுங்கோன்னு அமெரிக்காள் பிடிவாதம் புடிக்றாளா, என்ன? நம்மளோட இட்லி, தோசை, வடை எல்லாமே ரொம்ப ஹெவி வாயுப் பண்டம். இதையெல்லாம் ரெகுலரா சாப்டா, ராக்கெட் இல்லாமலேயே நாம் சந்திரனுக்குப் போய்டலாம்னு யாரோ தமிழ்நாட்ல தப்புத்தப்பா சொல்லிக் கொடுத்திருக்கா.
ஒரு ரகஸ்யம் சொல்றேன். சசிகலா கிட்டே மட்டும் சொல்லிடாதீங்கோ. டோநட்லேருந்து தான் வடையே வந்துது.
நான் திரும்ப வந்து ‘முருகன் டோநட் கடை’ன்னு ஆரம்பிக்கப் போறேன். அவஸ்யம் திறப்பு விழாவுக்கு வந்துடுங்கோ!”
எனக்கு வயிற்றைக் கலக்குவது போல் இருந்தது. நானே லைனை கட் பண்ணி விட்டேன்.
ஜூலை 20, 2010 at 3:28 பிற்பகல்
ஆர்.வி,
பதிவுகளுடன் மட்டும் நின்றுவிடாமல் நேரிலும் நாலு கேள்வி கேட்போம் என்று நீங்கள் சென்றது முதலில் பாராட்டத்தக்கது. விவாதம் நான் யூகித்திருந்தது போலவே அமைந்திருந்தது. இதனை ஒரு தொடராக எழுதி வெளியிட்டதற்கு நன்றி!
ஜூலை 21, 2010 at 11:53 பிற்பகல்
ஸ்ரீனிவாஸ், சுட்டிக்கு நன்றி!
முரளி, நீண்ட நாளைக்கு பிறகு உங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி!
ஜூலை 29, 2010 at 6:05 பிற்பகல்
திசை மாறும் சேது சமுத்திரம் — சுவாமி சுளீர்
==================================================
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தந்த யோசனையை ஏற்று, மத்திய அரசு மாற்றுவழிக்கான முயற்சியில் இறங்கியிருப் பதாக அறிவித்திருக்கிறது மத்திய அரசு. இப்படி அரசுத் தரப்பு மனம் மாறக் காரணமாக இருந்தவர் களில் முக்கியமானவர், ஜனதா கட்சித் தலைவர் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி.
கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் இருந்த சுவாமி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகிறது என்றவுடன் அங்கிருந்து புறப்பட்டு டெல்லிக்கு வந்தார்.
கடந்த 30-ம் தேதி நடந்த சூடான விவாதத்தில் கலந்துகொண்டு, தன்னுடைய கருத்தை கோர்ட்டில் எடுத்து வைத்து வாதாடினார். உச்ச நீதிமன்றத்தில் வாதத்தை முடித்துவிட்டு, டெல்லியில் இருக்கும் அவருடைய வீட்டுக்கு வந்தார் சுவாமி. அங்கே அவரை நேர்கண்டோம்-
”உச்ச நீதிமன்றத்தில் நீங்கள் முன்வைத்த வாதம் என்ன?”
”சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதாகச் சொல்லி, சட்டத்தை மீறி
இந்துக்கள் மனதை யாரும் புண்படுத்தினால், அது இ.பி.கோ. 295-வது பிரிவின் படி குற்றம் என்று நீதிபதிகளிடம் எடுத்துக் கூறினேன். அதோடு, ஏற்கெனவே தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, மாசு கட்டுப்பாட்டைக் காரணம் காட்டி சேது சமுத்திரத் திட்டத்துக்கு மாநில அரசு அனுமதி அளிக்கவில்லை. ஆனால், அதையும் மீறி மத்திய அரசு இந்தத் திட்டத்தை அமல்படுத்தியதும் தவறு. இதற்காக, ஜூலை 2, 2002-ல் நடந்த சேது சமுத்திரத் திட்ட தொடக்க விழாவையே அன்றைக்கு முதல்வராக இருந்த ஜெயலலிதா புறக்கணித்தார். அடுத்து, கடலோர காவல் படை கோஸ்ட் கார்டுகளிடம் ‘என்.ஓ.சி.’ பெறாமல் எல்.டி.டி-யினர் பயன்பெறும் விதத்தில் திட்டத்தை அறிமுகப்படுத்த முயன்றதும் மிகப் பெரிய குற்றம். இதனையெல்லாம் நான் பாயின்ட் பாயின்டாக கோர்ட்டில் எடுத்துவைக்க… நீதிபதிகள் அதனைக் கூர்ந்து நோக்கினார்கள்…”
”ராமர் பாலம் தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சையைத் தீர்ப்பதற்காகப் புதிதாக அமைக்கப் பட்டுள்ள கண்காணிப்புக் குழுவினர் மீது உங்களுக்கு மாற்றுக் கருத்து எதுவும் உள்ளதா?”
”இல்லை. அவர்கள் மிகவும் திறமையானவர்கள். இப்படி ஏற்கெனவே அமைக்கப்பட்ட குழு மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவால் அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி போல இது ஜால்ரா கமிட்டியாக செயல்படாது. நிச்சயம் நேர்மையாகவும் நியாயமாகவும் செயல்பட்டு, நல்ல தீர்வைத் தருவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற நிச்சயம் மாற்று வழியைக் கண்டுபிடித்துத் தருவார்கள்!”
”உச்ச நீதிமன்ற விவாதத்தில் கலந்து கொள் வதற்காகவே அமெரிக்காவில் இருந்து ஒருநாள் பயணமாகக் கிளம்பிவந்து, மீண்டும் மாலையே கிளம்பிச் செல்கிறீர்களாமே?”
”ஆமாம்! இதற்காகவேதான் வந்தேன். மீண்டும் நாளைக் காலை கிளம்புகிறேன். அந்த அளவுக்கு எனக்கு இது முக்கியமான வழக்கு. மற்ற வழக்குகளில் வெற்றி, தோல்வி பற்றி அலட்டிக்கொள்ள மாட்டேன். ஆனால், இது அப்படியல்ல. ஏனெனில், ராமசேது மீது பக்திமிக்க நம்பிக்கை கொண்டவர்கள் இந்த நாட்டில் ஏராளம். இதில், அரசியல் லாபமும் இருக்கிறது. நாட்டுக்கும் நன்மை இருக்கிறது. கூடவே, இதன்மூலம் அரசாங்கத்துக்கு சிக்கலை ஏற்படுத்த முடிகிறது.
நான் இந்த விவகாரத்தில் காலடி எடுத்து வைப்பதற்கான முதல் காரணகர்த்தா கருணாநிதிதான். அவர்தான் ‘ராமர் என்ன இன்ஜினீயரா?’ என்று ராமரைக் கேவலமாகப் பேசினார். அதனால் ஏற்பட்ட மனவருத்தத்தில்தான் இந்தப் பிரச்னையில் அவருக்குப் பாடம் புகட்டும் நோக்கோடு களமிறங்கினேன்.”
”சரி, சேது சமுத்திரத் திட்டம் வேண்டும் என் கிறீர்களா… கூடாது என்கிறீர்களா?”
”சேது சமுத்திரத் திட்டத்துக்காக ராமசேது இடிக்கப்படக் கூடாது என்பதுதான் என் முக்கிய நோக்கம். மற்றபடி, இந்தத் திட்டத்தால் தென் இந்தியாவுக்கு, குறிப்பாக தென் தமிழகத்துக்குப் பெரிய பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. இதுகுறித்து நான் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். அனைவரின் சந்தேகங்களுக்கும் அந்த நூலில் விடை இருக்கிறது. முப்பதாயிரம் டன்னுக்கும் குறைவான எடையுள்ள கப்பல்கள்தான் இந்தக் கால்வாயில் வர முடியும். உலகில் ஐந்து சதவிகிதம் மட்டுமே இப்படிப்பட்ட கப்பல்கள் இருக்கின்றன. இதை நான் சொல்லவில்லை. சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் டி.ஆர்.பாலுவே சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான திட்ட அறிக்கையில் தெளிவாகக் கூறியிருக்கிறார். அப்படி இருக்கும்போது இந்தத் திட்டம் நிறைவேறித்தான் நாட்டுக்கு என்ன லாபம் விளைந்துவிடப் போகிறது? கப்பல் நிறுவனம் நடத்துபவர்களுக்கு வேண்டுமானால் இந்தத் திட்டம் பயனளிக்கலாம். அதற்காகப் பல ஆயிரம் கோடிகளைக் கடலில் கொட்ட வேண்டுமா என்பதுதான் என் கேள்வி?”
”இந்த விஷயத்தில் காங்கிரஸிலிருந்து உங்களுக்கு ரகசிய உதவிகள் கிடைக்கிறதாமே… யார் அப்படி உதவியது?”
”காங்கிரஸ் மட்டுமல்ல, ராமரைப் பற்றி விமர் சனங்கள் செய்து கருணாநிதியே இதற்கு உதவி விட்டாரே..! காங்கிரஸில் எனக்கு உதவியவர்கள் உண்டு. ஆனால், அவர்களை யார் என்று நான் பட்டியலிட முடியாது.”
”இந்த வழக்குக்காக மட்டும் தனிப்பட்ட முறை யில் நீங்கள் நிறைய செலவழித்திருக்கிறீர்களே… யாரையோ பழிவாங்கத்தான் இதெல்லாம் செய்கிறீர்கள்?”
”செலவு பற்றியெல்லாம் வெளிப்படையாகச் சொல்லக்கூடாது. அப்படி தெரிந்தால் போதும்… ‘டேய் சுப்ரமணியன் சுவாமிக்கு சொத்து அதிகமாகி விட்டதுடா…’ என்று சொல்லி முலாயம் சிங் யாதவ், மாயாவதி மீது போட்டது போல், எதிரிகள் என்மீதும் வழக்குப் போட்டுவிடுவார்கள். அதனால் இந்த விஷயங்களை வெளிப்படையாக நான் பகிர்ந்துகொள்ள முடியாது!”
”ராமசேது வழக்கின் தாக்கம், வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்குமா?”
”ஒவ்வொரு இந்தியனுக்கும் இந்து உணர்வு உண்டு. இந்த உணர்வுக்கு காங்கிரஸ் எதிரியாக இருப்பதால், அவர்களுக்கு வாக்குகள் குறைந்துவிடும். இந்த ஓட்டுகள் யார் பக்கம் போகும் என்று சொல்ல முடியாது. உ.பி-யில் இந்து உணர்வாளர்கள் மாயாவதி பக்கம் போய் விட்டார்கள். தமிழகத்தில் ஜெயலலிதாவின் பக்கம்தான் போவார்கள். ஏனெனில், அவர் ராமருக்கு ஆதரவாக இருப்பதாகப் பெயர் வாங்கியிருக்கிறார். கருணாநிதி ராமரை எதிர்த்தார் என்பதே பெரிய விவகாரமாகி உள்ளது. அதற்கான விலையை அவர் கொடுத்துத்தான் ஆக வேண்டும். விரைவில் அதனை அவர் உணருவார். ஆனால், அதற்குள் எல்லாமே கைமீறிப் போயிருக்கும்!”
”ராமசேது குறித்து நீங்கள் கருணாநிதியிடம் பேச முயன்றதுண்டா?”
”இரண்டு வருஷங்களுக்கு முன்பே இதுபற்றி பேச அவருக்கு ஒரு கடிதம் கொடுத்தேன். ஆனால், ஏளனமாக அதனை மறுத்துவிட்டார். ‘ராமசேது என்பது கற்பனையான விஷயம். இதற்காக நான் உங்களைச் சந்திக்கத் தயாராக இல்லை’ என்று பதிலளித்தார். விநாசகாலே விபரீத புத்தி என்று புரிந்துகொண்டு, நான் அடுத்தடுத்த காரியங்களில் இறங்கி விட்டேன்…”
”இந்த விஷயத்தில் தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும்?”
”தேசிய உணர்வுடன் தமிழ் மக்கள் செயல்பட்டால் அதுவே போதும்.”
ஜூலை 29, 2010 at 11:14 பிற்பகல்
விவரங்களுக்கு நன்றி, ஸ்ரீனிவாஸ்! இதையே இன்னொரு பதிவாக போடலாம் என்று இருக்கிறேன்.
December 30, 2010 at 6:23 மு.பகல்
Hi RV,
just went through the posts on Swamy, am actually somewhere very impressed with him post the 2G scam unearthing – yes he might have an agenda, yes he makes 10% serious comments vs 90% comic stuff, but he is still one lone guy left in battling with the system – from the generation of emergency, like george fernandes etc., but sadly the subsequent generations didnt even try, while all of us are happy with our day jobs and leaving the country to politicians who we love to hate, this man is actually taking efforts to bring in change in the system. This inspite of the thanklessness of the job. If only he had come across/ was projected by the media as a more serious personality, he can be the fulcrum to mobilise youth force dissatisfied with the system…sigh..now that’s wishful thinking!The only youth leader we have now is rahul gandhi (38!)
December 30, 2010 at 2:40 பிற்பகல்
உங்கள் தளத்தில் இதற்கு முன் சு.சுவாமி குறித்து வெளியிட்ட விவரங்கள் அவர் குறித்து மேற்கொண்டு தெரிந்து கொள்ளும் ஆர்வத்தைக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து நான் எழுதிய பதிவு http://wp.me/p12Xc3-19D ( Mr Clean Singh Vz Joker சுப்ரமணிய சுவாமி) அந்தப் பதிவில் உங்கள் பதிவின் சுட்டியும் கொடுத்திருக்கிறேன்
http://wp.me/p12Xc3-19D