நிகழ்ச்சி இடம் மாறி இருக்கிறது. இப்போது
Bay area Vaishnav Parivar
25 Corning Ave.,
Milpitas, CA 95035
Phone: (408) 586-0006
FAX: (408) 586-0008
இங்கே நடக்கும்.
சுப்ரமணிய சாமி பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். நோபல் பரிசு வென்ற பால் சாமுவெல்சன் அவரது அட்வைசராக இருந்தார். பிறகு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ப்ரொஃபசராக வேலை பார்த்தார். இந்தியா திரும்பி எம்.பி.யாக ஆனார். எமர்ஜென்சியை தைரியமாக எதிர்த்தவர்களில் இவரும் ஒருவர். சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது இவர் சட்டம் மற்றும் வணிகத் துறை அமைச்சராக இருந்தார். இப்போது ஜனதா கட்சி என்று ஒரு லெட்டர்பாட் கட்சியை நடத்துகிறார்.
சுப்ரமணிய சாமி மீது கடுமையான விமர்சனங்கள் உண்டு. அப்படி விமர்சனம் உள்ளவர்களில் நானும் ஒருவன். ஆனால் அவர் மெத்தப் படித்தவர் என்பதிலோ, இந்திய அரசியலில் ஒரு insider என்பதிலோ எந்த சந்தேகமும் இல்லை. குறைந்த பட்சம் நன்றாக பொழுது போகும் என்று நினைக்கிறேன். வந்துதான் பாருங்களேன்!
விஸ்வநாதன் கக்கன் வேறு பேசுகிறார். இவர் முன்னாள் தமிழக அமைச்சரும், அரசியல் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக சொல்லப்படுபவரும் ஆன கக்கனின் சகோதரர். கக்கனைப் பற்றிய நினைவுகளை கேட்கவாவது வாங்கள்!
Bharathi Thamizh Sangam Invites you to a lecture by
Dr. Subramanian Swamy
Professor of Economics, Harvard University
Chief Guest
Thiru.Viswanathan Kakkan (Brother of Late Shri.P.Kakkan, Home minister, Tamil Nadu)
June 26 (Saturday) @ 1.30 PM
Hotel Swagat, 68 South Abel St, Milpitas
Admission free – All are welcome!!
For details contact: Rajan – 510-825-2971, Nagarajan – 408-771-5779
தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டு நடப்பு
தொடர்புடைய பதிவுகள்:
நிகழ்ச்சி இடம் மாறி இருக்கிறது.
சுப்ரமணிய சாமி பற்றிய விக்கி குறிப்பு
சுப்ரமணிய சாமியை கிண்டல் அடித்து நான் எழுதிய ஒரு பதிவு, இன்னொரு பதிவு (சாமி என்னை மன்னிப்பாராக!)
கக்கன் தன் குருவான வைத்யநாத ஐயரை நினைவு கூர்கிறார்
பாரதி தமிழ் சங்கம்

ஜூன் 22, 2010 at 12:37 மு.பகல்
பாரதி தமிழ்ச்சங்கம் பெட்னாவுல இருக்கா?
ஜூன் 22, 2010 at 6:10 மு.பகல்
இல்லை பாரதி தமிழ்ச் சங்கத்திற்கும் ஃபெட்னாவுக்கும் சம்பந்தம் இல்லை. இது இந்திய ஒருமைப்பாட்டையும் இந்து தமிழ் கலாச்சாரத்தையும் போற்றும் ஒரு அமைப்பு. இதில் இன வெறுப்புக்கோ தீவீரவாத ஆதரவுக்கோ இடமில்லை.
* பாரதி தமிழ்ச்சங்கம் இந்து தர்மத்தை அடியொற்றி இயங்கும், உலகத் தமிழர்களுக்கான ஒரு அமைப்பு.
* பாரதி தமிழ்ச்சங்கம் இந்தியாவின் கலாசாரச் செழுமையையும் அதன் தொன்மையான அங்கமான தமிழின் சிறப்பையும் உலகத் தமிழ் மக்களை பெருமிதத்துடன் ஒன்றிணைக்கும் உன்னதக்கூறுகளாக மதிக்கிறது.
* உலகமயமாகும் இந்நாளில், இளைய தமிழ்ச் சமுதாயம் தமது கலாசாரம், ஆன்மீகம், மற்றும் வரலாறு ஆகியவை குறித்த அறிவையும், தெளிவையும், பெருமிதத்தையும் கொண்டிருத்தலை, அதன் எதிர்கால இருப்புக்கும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் அவசியமான ஒன்றாக பாரதி தமிழ்ச்சங்கம் காண்கிறது
* பாரதப்பண்பாட்டின் முக்கிய அங்கமான தமிழரின் கலை, இலக்கியம், இந்து ஆன்மீகம் மற்றும் பண்பாட்டுக் கூறுகளை இளைய சந்ததியினரின்- குறிப்பாக தமிழ்க்குழந்தைகளின் – மனதில் பதியவைக்க பாரதி தமிழ்ச்சங்கம் செயல் திட்டங்களை மேற்கொள்ளும்.
* இயல், இசை, நாடகம், நாட்டியம் உள்ளிட்ட பல தனித்திறமைகளையும் படைப்புத்திறன்களையும் வெளிச்சம் போட, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பாரதி தமிழ்ச் சங்கம் அரங்கம் ஏற்படுத்தித் தரும்.
* “ஊருக்கு உழைத்திடல் யோகம்” என்ற பாரதியின் மொழிக்கிணங்க பாரதி தமிழ்ச்சங்கம் தன்னார்வல சமுதாய மேம்பாட்டுப் பணிகளில் பங்கெடுக்கும்.
* மேற்சொன்ன அடிப்படைக்கூறுகளை வலுப்படுத்தும் வகையில் ஒத்த கருத்துடைய அமைப்புகளுடன் பாரதி தமிழ்ச்சங்கம் இணைந்து இயங்கும்.
ஜூன் 22, 2010 at 4:04 பிற்பகல்
Hi All,
Greetings.
Pl. note: The venue has changed !!!!!!!
New venue is B.A. Vaishnav Parivar, 25 Corning Avenue, Milpitas CA 95035.
For questions reach: Nagarajan 408-771-5779 or Rajan 510-825-2971
ஜூன் 22, 2010 at 4:06 பிற்பகல்
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். நிகழ்ச்சி முடிந்த பின் விபரங்களை இங்கே பதிவு செய்யுங்கள் எங்களுக்காக
ஜூன் 22, 2010 at 10:38 பிற்பகல்
நன்றி ஸ்ரீனிவாஸ், இட மாற்றத்தைப் பற்றியும் போட்டுவிட்டேன். விருட்சம், நிகழ்ச்சிக்கு போவதாகத்தான் திட்டம். போய் வந்து எழுதுகிறேன்.
ஜூன் 23, 2010 at 3:55 மு.பகல்
வாழ்க வளமுடன்.
- ஜெகதீஸ்வரன்
http://sagotharan.wordpress.com
ஜூன் 23, 2010 at 6:36 மு.பகல்
வாழ்த்த்களுக்கு நன்றி, ஜெகதீஸ்வரன்!