- என்றைக்கு சோவியத் யூனியன் உடைந்ததோ அன்றே செஸ்சுக்கு ஸ்பான்சர்ஷிப் திண்டாட்டம்தான். இன்று செஸ் போட்டிகளில் பணம் என்பது செஸ்சில் ஆர்வம் உள்ள தனி மனிதர்கள் (கால்மிகியா நாட்டு அதிபர் இல்யும்ஜிநோவ்), அவர்கள் நடத்தும் நிறுவனங்கள், செஸ்சை கம்ப்யூட்டர்களின் processing power-ஐ விளம்பரப்படுத்தும் ஒரு கருவியாக பயன்படுத்தும் இன்டல் போன்ற நிறுவனங்கள் இவைதான் செஸ்சில் பணத்தைப் போடுகின்றன. செஸ் ஒரு டிவி நிகழ்ச்சி இல்லை. நிறுவனங்களுக்கு விளம்பரம் செய்ய மோடிவேஷன் குறைவு. இந்த சாம்பியன்ஷிப் போட்டிக்கு ஸ்பான்சர் செய்ய பல்கேரியா தவிர யாருமே முன் வரவில்லை. பல்கேரியாவும் டொபலோவ் விளையாடாவிட்டால் ஸ்பான்சர் செய்திருக்காது. இந்த விளையாட்டு தழைக்குமா?
- பொதுவாக இன்றைய செஸ் வீரர்களுக்கு செஸ் மட்டும்தான் தெரியும். செஸ்சை எப்படி மேலும் சுவாரசியமாக ஆக்குவது என்றெல்லாம் அவர்கள் யோசிப்பதில்லை. டொபலோவ், ஷிரோவ் போன்றவர்களின் aggressive விளையாட்டு முறை அவர்களின் பாணி மட்டுமே, அது பார்ப்பவர்களை கவர ஏற்பட்டதில்லை. (எல்லாருக்கும் சேவாக் ஆடுவதைப் பார்க்க பிடிக்கிறது, ஆனால் சேவாக் அப்படி ஆடுவது அவரது பாணி, அவ்வளவுதான்.) ஐந்து நாள் கிரிக்கெட் இன்று ட்வென்டி-ட்வென்டி ஆக மாறி இருப்பது போல செஸ் மாறுமா?
- ஆனந்த் வருவதற்கு முன் செஸ் ஒரு career என்று இந்தியாவில் யாரும் நினைத்ததில்லை. இன்று நிறைய பேர் வந்திருக்கிறார்கள். சசிகிரண், கங்குலி, கொனேரு ஹம்பி மாதிரி. அடுத்த ஜெனரேஷன் செஸ்சுக்கு வருமா?
- கிராண்ட்மாஸ்டர்கள் விளையாடும்போது பல முறை பத்து இருபது மூவ் ஆடிவிட்டு சமநிலையில் இருப்பார்கள். ஒருவர் டிரா செய்துகொள்ளலாமா என்று கேட்பார். அடுத்தவர் சரி என்று கை கொடுத்துவிட்டு போய்விடுவார். ஒரு பத்து ரவுண்ட் போட்டியில் விளையாடும்போது இப்படி ஒரு டிரா அவர்களுக்கு ஒரு நாள் ஓய்வை கொடுக்கிறது. அது அடுத்த நாள் விளையாட இன்னும் கொஞ்சம் தெம்பை கொடுக்கிறது. ஆனால் பார்ப்பவர்கள் நிலை? ஐந்து நாள் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் டீம் தன் இன்னிங்க்சுக்கு மூன்று நாள், அடுத்த டீம் மிச்ச இரண்டு நாள் எடுத்துக் கொள்வது மாதிரி நிகழ்ச்சி இது. டொபலோவ் இந்த முறை சோஃபியா விதி என்று ஒன்றை கடைப்பிடித்தார். டிரா செய்துகொள்ளலாமா என்று கேட்பதே இல்லை. அனேகமாக இந்த போட்டியின் எல்லா டிராக்களும் செஸ் விதிகளின்படி டிரா ஆனவை. (ஒரு பொசிஷன் மூன்று முறை நேர்ந்தால் அது டிரா). ஆனந்த் எட்டாம் ஆட்டத்தில் தோற்றது சாதாரணமாக கிராண்ட்மாஸ்டர் லெவலில் நடக்கவே நடக்காது. ஐம்பத்தைந்து மூவ் வரைக்கும் சமநிலை என்றால் டிரா என்று இருவரும் ஒத்துக்கொண்டு போயிருப்பார்கள். ஆனந்த் ஐம்பத்தாறாவது மூவில் தவறு செய்தார், உடனே தோல்வியை ஒத்துக்கொண்டு போய்விட்டார். இந்த சோ ஃ பியா விதி எல்லா போட்டிகளிலும் கடைப்பிடிக்கப்பட்டால் டிராக்கள் குறையும். அது செஸ்சின் எதிர்காலத்துக்கு நல்லது. (இது எப்போதும் இளைஞர்களுக்கு சாதகமான விதி, கிழவர்கள் தாக்குப் பிடிப்பது கொஞ்சம் கஷ்டம்)
- இவர்களின் ஆட்டங்கள் எல்லாமே high quality ஆட்டங்கள். ஒவ்வொரு ஆட்டமும் டென்ஷன் மிகுந்தது. ஆனந்த் ஒரு சிம்பிள் டாக்டிக்ஸ் வைத்திருந்தார். கொஞ்சம் பலவீனமான, ஆனால் solid பொசிஷன் வரும்படி விளையாடினார். டோபலோவை முடிந்தால் ஜெயித்துக்கொள் என்று சீண்டிவிட்டார். டொபலோவ் சளைக்காமல் ஒவ்வொரு முறையும் கடுமையாக முயன்றார். ஆனால் ஆனந்த் outright blunder செய்தபோது மட்டுமே அவரால் வெல்ல முடிந்தது. ஆனந்தின் கடைசி வெற்றி மட்டுமே இப்படி டோபலோவின் outright blunder-aal வந்தது. மற்ற இரண்டு வெற்றிகளில் டொபலோவ் எங்கு தவறு செய்தார் என்று தேட வேண்டும். விடாக்கண்டன்-கொடாக்கண்டன் மாதிரி இருவரும் ஆடினார்கள். Bias இல்லாமல் சொல்கிறேன், ஆனந்தின் ஆட்டம் ஒரு மாற்று மேல்.
- ஆனந்துக்கு அந்த நீல NIIT சட்டையை விட்டால் வேறு எதுவுமே இல்லையா? மகா கோரமான சட்டை. டொபலோவ் எப்போதும் நீட்டாக டிரஸ் செய்து கொண்டு வந்தார்.
- அடுத்த முறை ஆனந்த் ஜெயிப்பது கஷ்டம் என்று நினைக்கிறேன். டொபலோவ், கார்ல்சன் இருவரில் யாராவது அடுத்த சாம்பியனாக வருவார்கள் என்று யூகிக்கிறேன். அரோநியனுக்கு outside chance.
தொகுக்கப்பட்ட பக்கம்: செஸ்

மே 19, 2010 at 1:58 மு.பகல்
செஸ் பார்வையாளர்களுக்கு எப்படி இருந்ததோ தெரியாது- படிப்பவர்களுக்கு சுவாரசியமாகவே இருந்தது. நீங்கள், இட்லி வடையில் ஒருவர், அப்புறம் மிகத் தாமதமாக சொல்வனத்தில் ஒருவர்- எல்லாமே நன்றாக இருந்தது. இன்னும் நிறைய பதிவர்கள் எழுதாதது குறித்து வருத்தமே. லோக்கல் போட்டி என்று தோனி, கங்குலி ஆரம்பித்து ஏறத்தாழ எல்லாருமே ஒப்புக்கொண்டு விட்ட IPL பேசப்பட்ட அளவு இது பேசப்படவில்லை. அந்தக் குறையை நீங்கள் போக்கி விட்டீர்கள். மிக்க நன்றி.
மே 19, 2010 at 11:33 மு.பகல்
செஸ் போன்ற விளையாட்டுக்களை ஊக்குவிக்க வேண்டும்! அதற்கு உங்கள் கட்டுரைகள் உதவும்! இன்னும் பல நிபுணர்களை செஸ்சில் இந்தியா உருவாக்க வேண்டும்!
மே 19, 2010 at 5:22 பிற்பகல்
நல்ல அலசல்!
அரோனியனை விட கிராம்னிக்குக்கு வாய்ப்பு அதிகம் என்று நினைக்கிறேன்.
சோஃபியா விதி நல்லதுதான். அதற்காக repetition வரும் வரை அடியே தீருவேன் என்பது too much.
ரேபிட் ஆட்டங்களும் Blitz ஆட்டங்களும் T20-க்கு சமதையான ஆட்டங்கள் என்று சொல்லத் தயக்கமாக உள்ளது. பார்ப்பவருக்கு கிளாசிகல் ஆட்டங்களைத்தான் நிதானமாய் ஆராய்ந்து, சூழல்களை புரிந்து கொள்ல ஏதுவாக அமைகிறது.
வேகமான ஆட்டங்கள் fast fwd-ல் படம் பார்ப்பது போல இருக்கும்.
நல்ல தரமான லைவ் கமெண்ட்ரி மூலம் (preferably video) பார்வையாளர்களின் சுவாரஸ்யத்தைக் கூட்ட முடியும். ஆட்டத்தின் பின்னால் இருக்கும் சைக்காலஜியும் appreciation-ஐ அதிகப் படுத்தும்.
எனக்குத் தெரிந்து பல மாணவர்கள் செஸ்ஸில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் இருக்கிறார்கள். இந்தியாவின் செஸ் எதிர்காலம் ஏறுமுகமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
கார்போவ் FIDE President ஆனால் மீண்டும் ஸ்பான்ஸர்கள் வர வாய்ப்புண்டாகலாம். குறிப்பாக கார்போவ், ஆஸ்பரோவ், கார்ல்ஸன் கூட்டணி ஸ்பான்ஸர்களை ஈர்க்கக் கூடும்.
ஆனந்தின் நாலாவது கேம் வெற்றி ஒரு மாஸ்டர் பீஸ்!
தாங்கள் குறிப்பிட்டதைத் தவிர வேறு சில விஷயங்களை இங்கு எழுதியுள்ளேன்: http://cricketthavira.wordpress.com/2010/05/19/anand-topalov-post-match-round-up/
மே 19, 2010 at 10:12 பிற்பகல்
லலிதாராம், பிரமாதமாக எழுதி இருக்கிறீர்கள்! பின்புலத்தைப் பற்றி நல்ல அலசல். கிராம்னிக் மாட்ச்களை வெல்ல நல்ல சான்ஸ் இருக்கிறது, ஆனால் டூர்ணமேன்ட்களில் அவர் வெல்வாரா என்று எனக்கு சந்தேகம்தான். அடுத்த சாலேன்ஜர் டூர்ணமென்ட் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நினைவு.
snkm, என் பதிவு எல்லாம் உதவும் என்று எனக்கே நம்பிக்கை இல்லை.
சரி ராமர் பாலம் கட்ட அணில் உதவிய மாதிரி என்று நினைத்துக் கொள்கிறேன்.
பாஸ்கர், செஸ் பதிவுகளைப் படித்து நீங்கள் எழுதுவது ஊக்கமளிக்கிறது. உங்களுக்காகவாவது விட்டுப் போன கேம்களைப் பற்றி எழுத வேண்டும். இட்லிவடையில் எழுதுபவர்தான் மேலே சொன்ன லலிதாராம்.
மே 20, 2010 at 3:07 மு.பகல்
அடுத்த சேலஞ்சர், மினி மேட்ச் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்.
ஜூன் 7, 2010 at 11:45 பிற்பகல்
தாமதமாக பதில் எழுதுவதற்கு மன்னிக்கவும் – தகவலுக்கு நன்றி, லலிதாராம்!