அன்றைக்கும் ரோட்டோரம் ஒதுங்குபவர்கள் பிரச்சினை பெரிதாக இருந்திருக்க வேண்டும். இந்த உத்தரவைப் பாருங்கள்.
அர்ச்சிக்கத் தக்க சம்பா கோவிலுக்குத் தெற்காகப் போகிற உப்பங்கழியோரம், பட்டணத்து வீதிகளுக்குள்ளே, கடற்கரையோரம், ஆராகிலும், உபாதைக்குப் போகிறது என்றிருந்தால், ஆறு பணம் அபராதம் வாங்குகிறது. அந்த ஆறு பணத்தில், உபாதைக்குப் போகிறவனை பிடித்துக் கொண்டு வருகிறவனுக்கு இரண்டு பணமும் கொடுக்கிறது. மற்ற நாலு பணம் சாவடி சிப்பாய்கள், அதிகாரிகளால் பங்கெடுத்துக் கொள்ளுகிறது.
யாராவது “உபாதைக்கு” ஒதுங்கினால் அவனை/அவளை கையோடு பிடித்துக் கொண்டு வந்து ஆறு பணம் வாங்கி அதில் இரண்டு பணம் பெற்றுக் கொள்வது. நல்ல தொழிலாக இருந்திருக்கும் போலிருக்கிறதே!
தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டு நடப்பு
தொடர்புடைய பதிவுகள்:
ஆனந்தரங்கம் பிள்ளை பதிவு செய்திருக்கும் மதுவிலக்கு உத்தரவு
பிரபஞ்சனின் “மானுடம் வெல்லும்”
ஆனந்தரங்கம் பிள்ளை பற்றி கிழக்கு பதிப்பகத் தலைவர் பத்ரி சேஷாத்ரி

மே 17, 2010 at 8:03 மு.பகல்
ஆனந்தரங்கம் பிள்ளை பற்றி நான் இட்ட இடுகை இதோ: http://dondu.blogspot.com/2009/02/blog-post_03.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
மே 17, 2010 at 8:04 மு.பகல்
அது சரி- “மற்ற நாலு பணம் சாவடி சிப்பாய்கள், அதிகாரிகளால் பங்கெடுத்துக் கொள்ளுகிறது”: இந்த வேலைய செய்ய சம்பளம் வேற!
மே 17, 2010 at 4:17 பிற்பகல்
இப்படி ஒரு உத்தரவு இப்போ இருந்தா நான் வீட்டில் உட்கார்ந்தே என் தேவைக்கு சம்பாதித்து விடுவேன். ஏன்னா எங்க வீடு மெயின் ரோடுக்கு நேர் அடுத்த சந்து. main ரோட்டில் இருக்கும் கடைகளுக்கு தேவையான சாமான்கள் எடுத்து வரும் ஆட்கள், இந்த தெருவை கடந்து போகும் ஆட்கள், main ரோட்டில் இருக்கும் மது பான கடையில் மது அருந்த வருபவர்கள் என்று அனைவருக்கும் பொதுக் கழிப்பறை, எங்கள் வீட்டு எதிரில் இருக்கும் ஒரு சிறு elaectric box கொடுக்கும் (???) மறைவிடம் தான். கடைகளிலோ மதுக் கடையிலோ கழிப்பிட வசதி எதுவும் இல்லை அல்லது இவர்களுக்கு மறுக்கப்படுகிறது.
இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த ஒதுங்கும் இடத்துக்கும் நேர் மேல இருக்கும் வீட்டில் இருப்பவர்களின் பால்கனியின் ஒருபுறம் அங்கு நோக்கி இருப்பது பற்றி வீட்டில் இருப்பவர்கள் தான் கவனத்தில் கொண்டு கவனமாக இருக்க வேண்டும். ஒதுங்குபவர்கள் அதை எல்லாம் கண்டு கொள்வதேஇல்லை
மே 17, 2010 at 4:31 பிற்பகல்
உங்கள் பிரச்சினை கஷ்டமானதுதான், புரிகிறது.
கோபித்துக் கொள்ளாமல் இருந்தால் ஒரு சந்தேகத்தைக் கேட்கிறேன்: வழக்கமாக இது போன்ற இடங்களில் மூன்று மதத்திலிருந்தும் சில உருவங்களை வரைந்து அதை கோவில் மாதிரி மாற்றப் பார்ப்பார்களே, அதை யாரும் முயன்று பார்க்கவில்லையா?
மே 17, 2010 at 11:51 பிற்பகல்
விருட்சம், // இப்படி ஒரு உத்தரவு இப்போ இருந்தா நான் வீட்டில் உட்கார்ந்தே என் தேவைக்கு சம்பாதித்து விடுவேன். //
டோண்டு, இந்த பதிவை முன்பு எப்போதோ படித்த நினைவு இருக்கிறது. நல்ல பதிவு!
பாஸ்கர், // அது சரி- “மற்ற நாலு பணம் சாவடி சிப்பாய்கள், அதிகாரிகளால் பங்கெடுத்துக் கொள்ளுகிறது”: இந்த வேலைய செய்ய சம்பளம் வேற! // இந்த நாலு பணம் சம்பளம் இல்லீங்க, போனஸ்!
மே 18, 2010 at 6:11 மு.பகல்
@natbas
இது நல்ல யோசனையா இருக்கே. முதல்லேயே செய்திருக்கணும். இப்போ அது கலீஜு.
ராத்திரி வரும் தண்ணி பார்டிகளுக்கு இந்த சாமி எல்லாம் கண்ணில் தெரியுமோஎன்னமோ
மே 18, 2010 at 12:33 பிற்பகல்
அது வேற இருக்கோ? அதை யோசிக்கலியே. பேசாம அங்க ஒரு கட்சிக் கொடியைப் பறக்க விட்டுட்டு, அந்த கம்பத்துல ராத்திரி வேலையில ஒரு சொறி நாயைக் கட்டி வெச்சா என்ன? சமயம் பாத்து பாஞ்சிருமில்ல
மே 18, 2010 at 12:47 பிற்பகல்
[...] This post was mentioned on Twitter by rv_subbu. rv_subbu said: காலைக்கடன் உத்தரவு: http://wp.me/pjKb9-wK [...]
மே 20, 2010 at 12:59 பிற்பகல்
அதுக்கும் கொஞ்சம் ஊத்திக் கொடுத்துடுவான்
மேலும் ராத்திரி எல்லாம் கத்திதெருவின் தூக்கத்தை கெடுக்கும். இன்னொரு தெரு நாயைக் கண்டால் இதற்கு தலைக்குள் பல்பு எரிய ஆரம்பிக்குமே. கட்டி போட்டு வச்சதுக்கு நம் மேல் தான் மறு நாள் பாயும்
மே 20, 2010 at 1:43 பிற்பகல்
ஆழ்ந்த அனுதாபங்கள். பரங்கியர்கள் திரும்பி வந்தாலொழிய உங்கள் பிரச்சினைக்கு விடுவு கிடையாது போல
வேறென்ன சொல்ல