தஞ்சாவூர் பெரிய கோவிலின் சோழர் கால ஓவியங்கள் புகழ் பெற்றவை. பார்ப்பது கஷ்டம்தான், சாதாரணமாக அனுமதி கிடைப்பதில்லை. என் அதிர்ஷ்டம், என் உறவினர் டாக்டர் நாகசாமி எங்களை அழைத்துக் கொண்டு போய் காட்டினார். ஓவியங்கள் நிறையவே மங்கிப் போய்விட்டன. வெளிச்சம் வேறு கொஞ்சம் குறைவுதான். ஆனால் மறக்க முடியாத ஒரு அனுபவம். உயிருள்ள வண்ணங்கள்; ஓவியர் மணியம் வரைந்த ஓவியங்கள் கொஞ்சம் இந்த ஸ்டைலில் இருக்கும்.
அந்த ஓவியங்கள் எப்படி கண்டுபிடிக்கப்பட்டன என்று ஹிந்துவில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது. மறைந்து கிடந்த இந்த ஓவியங்களை கோவிந்தசாமி என்ற அண்ணாமலை பலகலைக்கழக ஆசிரியர் தற்செயலாக கண்டுபிடித்திருக்கிறார். சோழ கால ஓவியங்கள் கிடைக்குமா என்று அவர் தேடிக் கொண்டிருந்திருக்கிறார். ஹிந்து பத்திரிகையில் இதைப் பற்றி எழுதி இருக்கிறார். பிறகு கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி உட்பட்ட பலரும் வந்து பார்த்து இவை சோழர் காலத்தவையே என்று உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். சுவாரசியமான கட்டுரை, படித்துப் பாருங்கள்!
பின்னால் சேர்க்கப்பட்டது: நண்பர் தங்கவேல் இந்த ஓவியங்களை கோவிலூர் மடாதிபதியாக இருந்த நாச்சியப்பன் ஃபோட்டோ எடுத்த கதைக்கு ஒரு சுட்டி தந்திருக்கிறார். அவரும் தன் தளத்தில் தஞ்சை கோவிலைப் பற்றி ஒரு நல்ல பதிவு எழுதி இருக்கிறார்.
தொகுக்கப்பட்ட பக்கம்: கூட்டாஞ்சோறு–>வரலாறு
தொடர்புடைய சுட்டிகள்:
ஹிந்து கட்டுரை
பெரிய கோவில் பற்றி ஒரு தளம்
இந்திரா காந்தி சென்டரில் எல்லா ஓவியங்களும் (பாதிக்கு மேலான ஓவியங்கள் தெளிவாக இல்லை, மங்கிவிட்டிருக்கின்றன. ஆனால் மிச்ச ஓவியங்களை தவறவிடாதீர்கள்.)
April 14, 2010 at 4:05 மு.பகல்
ஆர் வி,
நீங்கள் குறிப்பிட்டுள்ள டாக்டர் நாகசாமி முன்னாள் தொல்பொருள் ஆய்வுத் துறை தலைவராக இருந்தவரா ?
April 14, 2010 at 4:32 மு.பகல்
அன்புள்ள ஆர்வி,
என்னுடைய தஞ்சை பெருவுடையார் கோவில் பற்றிய இடுகையின் பின்னிணைப்பாக அந்த ஓவியங்களை படமெடுத்த, பூர்வாசிரமத்தில் நாச்சியப்பன் என்ற பெயர் கொண்ட, தற்போதைய கோவிலூர் மடாதிபதியின் பேட்டி ஒன்றை இணைத்துள்ளேன். இதுவும் ஹிந்து பத்திரிகையில் வந்ததுதான். தான் அவ்வோவியங்களை படம் எடுக்க செய்த பிரம்மப் பிரம்மப்பிறயத்தனங்களை அதில் சுவைபட கூறியிருப்பார். மேலும் எடுத்த படங்களை கொல்கத்தாவிலுள்ள புகைப்படக் கூடத்தில் பிரின்ட் எடுக்க முயற்சித்த போது அவை கவனக் குறைவால் வீனாகிவிட்டதையும், பின்னர் நல்லவேளையாக அவரிடம் இன்னொரு நெகடிவ் இருந்ததால் சமாளிக்க முடிந்ததையும் அறியும் போது ஆச்சிரியமாக இருக்கிறது.
என்னால் உங்கள் பின்னூட்டப் பெட்டியில் இணைய இணைப்புகளை (HTML) தரவியவில்லை.
எனவே அவைகளை தனித்துத் தருகிறேன்.
http://puliamaram.blogspot.com/2010/03/blog-post_26.html
http://www.hinduonnet.com/thehindu/mp/2005/06/20/stories/2005062000400500.htm
April 14, 2010 at 5:02 பிற்பகல்
ஸ்ரீனிவாஸ், ஆம், அதே நாகசாமிதான். அவர் என் தங்கையின் மாமனாரும் கூட. அவரைப் பற்றிய சில பதிவுகள் இங்கே – http://koottanchoru.wordpress.com/வரலாறு/
தங்கவேல், நீங்கள் தந்த விவரங்களையும் சேர்த்துவிட்டேன்.