ஹுசேனைப் பற்றி எழுதியது போதும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். எனக்கே கொஞ்சம் அலுத்துவிட்டது. ஆனால் இரண்டு அருமையான பதிவுகளைப் பற்றி சொல்ல வேண்டி இருக்கிறது.
ஒன்று டாக்டர் ருத்ரன் எழுதியது. இதன் பின்புலம் ஹுசேனை வைத்து ஷோ காட்டி அவருக்கு எதிராக ஒரு அணியில் ஓட்டுகளை திரட்டுவதே என்று நிறுவுகிறார். அப்புறம் நிர்வாண சரஸ்வதி விஷயத்தில் literal ஆகவே படம் வரைந்து பாகம் குறித்திருக்கிறார், புட்டு புட்டு வைக்கிறார். கட்டாயமாக படித்துப் பாருங்கள்.
இன்னொன்று ராஜ நடராஜன் எழுதியது. ஹுசேன் இது பற்றி சொன்னவற்றை பதித்திருக்கிறார். அருமையான பதிவு, படித்துப் பாருங்கள்.
இன்னொரு விஷயம் – நான் கூட கொஞ்சம் பயந்தேன், டாக்டர் ருத்ரன் வரைந்த நிர்வாண சரஸ்வதி படத்தை எல்லாருக்கும் மீண்டும் நினைவுபடுத்தி அனாவசியமாக அவரை வம்புக்கு இழுக்கிறோமே என்று. ஒருவர் – ஒரே ஒருவர் கூட அதை ஆட்சேபிக்கவில்லை. என்ன வரையப்பட்டிருக்கிறது என்பது என்பதை விட யார் வரைந்தது என்பதுதான் முக்கியம்!
பின்குறிப்பு: எதிர்வினைக்கு எதிர்ப்பதம் என்னங்க? யாருக்காவது தெரியுமா? நேர்வினை என்றால் சரியாக வரவில்லை, எதிர் எதிர்வினை என்று எழுதினால் எனக்கு எதிரிகள் உருவாகிவிடப் போகிறார்கள்!
தொகுக்ககப்பட்ட பக்கம்: ஆளுமைகள்
தொடர்புடைய பதிவுகள்:
டாக்டர் ருத்ரன் படம் வரைந்து பாகங்களை குறிக்கிறார்
ராஜ நடராஜன் ஹுசேன் என்ன சொல்கிறார் என்பதை பதித்திருக்கிறார்
ஹுசேன் – சில எதிர்வினைகள்
எம்.எஃப். ஹுசேனின் “சர்ச்சைக்குரிய” ஓவியங்கள் பற்றி நான், டாக்டர் ருத்ரன், ஜெயமோகன்
ஹுசேனின் கட்டார் முடிவு பற்றி நான், டாக்டர் ருத்ரன்
மார்ச் 31, 2010 at 6:08 மு.பகல்
மனோவைத்தியர் ருத்ரன் அவர்களுடைய ஹுசேன் பதிவுக்கு (குறிப்பாக நிர்வாண சரஸ்வதி) கண்டனம் யாரும் எழுதவில்லை என்றால் எல்லோரும் அதை ஒப்புக்கொள்ளுகிறார்கள் என்று தப்பர்த்தம் செய்துகொள்ளாதீர்கள்.
அது சேறு (மட்டுறுத்தி எழுதுகிறேன்). சேற்றில் கல்லை விட்டு எரிந்தால் என்ன நடக்கும் என்று மனநலமுள்ள அனைவரும் தெரிந்துவைத்திருக்கின்றனர்.
இந்தப் பதில் உங்களுக்கும் சேர்த்துத்தான்.
மார்ச் 31, 2010 at 11:44 மு.பகல்
When people questioned Husaain, the reasons where
he has mostly taken Gods in female form,
his honesty becoz in a single picture one clothed and one unclothed( mughal king and a brahmin, gandhi and hitler etc) and
his interview about why drew hitler like that, and
above all, people think a muslim’s perspective about hindu god can’t be genuine.
After many have recorded their feeling had got hurt – some have made it polite some in their own style. Also people have told we are common man and not any …thuvas
Now if some one goes ahead and do something like இப்போ என்ன பண்ணுவீங்க
and you relay the same and asking ஏன் ஒண்ணுமே பண்ணலலே,
what you expect people to do. .
You are all already close to Saraswathy and she is any way happy about the pics and the literature nitched and carved on this topic
It is made very clear “Your views only are important to you – I see it like this , I view it like this etc” . why to ask others views” You here is not you alone.
மார்ச் 31, 2010 at 1:52 பிற்பகல்
you are not winning rv..keep trying!
மார்ச் 31, 2010 at 11:11 பிற்பகல்
ஆர் வி
வன்முறைய எதிர்க்கும், காழ்ப்புணர்வுகளைச் சாடும் உங்களைப் போன்றவர்கள் ஒரு கீழ்த்தரமான ஜாதி காழ்ப்பு கொண்ட, குரோத உணர்வு கொண்ட ஒரு ஆசாமிக்கு இலவச விளம்பரமும் மதிப்பும் கொடுப்பது வருத்தத்தை அளிக்கிறது. இவரது இனவெறியையும் தாண்டி இவர் ப்ளாகர்கள் மேல் மிரட்டலும் விடுக்கிறார். எச்சரிக்கை விடுக்கிறார். டோண்டுவிற்கு எச்சரிககை விடுத்திருக்கிறார். பேட்டை ரவுடிகள் போல இவரும் இவர் மனைவியும் ஆபாசமாக நடந்து கொள்கிறார்கள். இவர்கள் மருத்துவம் பார்க்கும் நபர்கள் மேல் மிகுந்த பரிதாபமே ஏற்படுகிறது. இப்படி வெளிப்படையாக ரவுடித்தனமும் மிரட்டலும் விடும் ஒரு ஆபாச மனிதனின் ப்ளாகிற்கு ஏன் வீண் விளம்பரம்? இணையத்தில் முன்பு மூர்த்தி என்ற போலி டோண்டு என்பவன் உலாவினான். இப்பொழுதும் அவன் காணாமல் போகவில்லை வேறு ரூபத்தில் இருக்கிறான். ஒரே வித்தியாசம் அவனை மன நோயாளி என்று கண்டு கொண்டோம், ஆனால் இப்பொழுது மனோதத்துவ நிபுணர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கும் மன நோயாளிகளுக்கும் அதிக வேறுபாடு இல்லை என்று தெரிகிறது. அவனுக்கும் இந்த ஆளுக்கும் அதிக வித்தியாசம் ஏதும் இல்லை. இருவர் நடவடிக்கைகளுமே அருவருப்பான ஆபாசமானவையே. ம்ற்றபடி ஹூசைன் குறித்து எனக்கு கடுமையான எதிர் கருத்துக்கள் உண்டு அவை இந்து மதம் சார்பானதோ ஹூசைன் மீதான வெறுப்போ அன்று மிகவும் சாதாரண அடிப்படை தர்க்கம் சார்ந்த ஒன்று. அதற்கு பதில் அளிக்கலாம் என்று நினைத்த பொழுது இந்த இணைய ரவுடியின் பதிவிற்கு நீங்கள் விளம்பரம் கொடுத்தது கண்டு நொந்து போனேன். இவரைப் போன்ற ஆட்கள் இடம் பெறும் ஒரு திரியில் என் கருத்தை நான் சொல்ல விரும்பவில்லை.
வருத்தத்துடன்
ராஜன்
April 1, 2010 at 3:37 மு.பகல்
RV
How come you missed Aravnidan Neelakantan’s questions to this bhramin hater? Hope you are not aware of Aravindan’s questions that are yet to be answered by your respected doc
http://arvindneela.blogspot.com/2010/03/setting-record-straight-for-rudrans-ii.html
Regards
Rajan
April 1, 2010 at 5:03 மு.பகல்
வழிப்போக்கன், என் கருத்தில் ஹுசேனுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மைனாரிட்டிதான். இதை போன பதிவிலேயே எழுதி இருக்கிறேன்.
விருட்சம், என் கருத்தில் ஹுசேனை எதிர்ப்பவர்களுக்கு அவர் என்ன வரைந்தார் என்பது முக்கியம் இல்லை, அவர் முசல்மான் என்பதே முக்கியம். வழிப்போக்கன் சொல்வது போல பலரும் பேசாமல் போகலாம், ஆனால் ஹுசேனுக்கு இத்தனை ஆட்சேபனை வருகிறது – ருத்ரனின் ஓவியம் ஒருவருக்கு கூடவா ஆட்சேபிக்கக் கூடியதாக தெரியவில்லை? நான் literally யாரவாது ஆட்சேபியுங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்
, அப்படியும் ஒரு குரல் கூட வரவில்லை. இது என் கருத்தை உறுதிப்படுத்துகிறது.
ராஜன், டோண்டு கேட்ட ஒரு கேள்விக்கு ஹுசேன் ரஷ்டி விஷயத்தில் தவறாக அணுகினால் அதற்காக நான் ஹுசேன் விஷயத்தை தவறாக அணுக வேண்டியதில்லை என்று எழுதி இருந்தேன். அதையேதான் இங்கும் சொல்ல வேண்டி இருக்கிறது. ஹுசேன் விஷயத்தில் ருத்ரன் சொல்லும் கருத்துகள் எனக்கு ஏற்புடையவை. அதனால் அவர் சொல்லும் எல்லா கருத்தும் எனக்கு ஏற்புடையவை என்று பொருள் கொள்ளாதீர்கள். (எனக்கும் வினவு தளத்தினருக்கும் தகராறு ஏற்படவும் அவர் சொன்ன சில கருத்துகள்தான் மூல காரணம். – ஒரு வேளை நான் அவருக்கு இதற்காக நன்றி சொல்ல வேண்டும்!) நீங்கள் சொல்லும் பிற விஷயங்கள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது, ஆனால் அவர் அந்த விஷயங்களில் தவறான அணுகுமுறையை கொண்டிருந்தாலும் அது ஹுசேன் விஷயத்தில் அவர் எடுத்திருக்கும் நிலையை எப்படி தவறாக்கும்? அவர் genotype பற்றி சொன்னது தவறு என்று நான் உறுதியாக கருதுகிறேன் – அதற்காக அவர் சொல்வதெல்லாம் தவறாகிவிடுமா என்ன? கருத்து வேறுபாடுகளை கண்டு நாம் ஏன் ஒதுங்க வேண்டும்?
அதுவும் நீலகண்டன் மாதிரி கூர்மையாக யோசிக்கக் கூடியவர் எழுதுவதற்கு எல்லாம் போகிற போக்கில் பதில் சொல்லிவிட முடியாது! சரி பார்ப்போம்.
ஹுசேன் எனக்கே அலுத்துவிட்டது, இப்போது அரவிந்தன் நீலகண்டனை வேறு உள்ளே இழுக்கிறீர்களே?
April 1, 2010 at 5:28 மு.பகல்
ஆர் வி
மூர்த்தி போன்ற ஆட்களை நான் எந்தவிதத்திலும் ஆதரிக்கவே மாட்டேன். வெளிப்படையாக பேட்டை ரவுடி போல மிரட்டும் ஒரு ரவுடிக்கு அவர் பெரிய மகானாக இருந்து எவ்வளவு சீரிய கருத்தே சொல்லியிருந்தாலும் ஆதரிக்க மாட்டேன். முதலில் இது போன்ற இன வெறுப்புப் பிறவிகள் எல்லாம் மனிதப் பிறவிகளாக நடந்து கொள்ளட்டும் அப்புறம் இவர்கள் என்ன கருத்து கத்திரிக்காய் சொல்ல வருகிறார்கள் என்பதைப் பார்க்கலாம். ஹூசைன் விஷயத்தில் இவரிடம் அரவிந்தன் கேட்ட கேள்விகளுக்கு இது வரை பதில் இல்லை மாறாக அரவிந்தன் இவருக்கு அனுப்பிய தனிப்பட்ட கடிதத்தை இன்னொரு நபரிடம் காட்டி அந்தப் பெண்மணி அரவிந்தனை மிரட்டும் அளவுக்கு நிலமை போய் இருக்கிறது. எதற்கும் இவரைப் போன்ற ஆபத்தான ஆசாமிகளிடம் சற்று ஜாக்கிரதையாகவே இருந்து கொள்ளுங்கள். பெரிய டாக்டர் என்றால் பிசியாக இருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தேன் இங்கே பார்த்தால் குடும்பத்தோடு வந்து இணையத்தில் இன வெறுப்பைக் கக்குவதும் மிரட்டுவதும் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படி விஷத்தைக் கக்கும் ஒரு வெறுப்பாளரிடம் ஒரு விஷயம் தெரியாத ஒரு பிராமண ஜாதி நோயாளி மாட்டிக் கொண்டால் என்ன செய்வார்கள். எழுதும் பொழுதே இவ்வளவு விஷம் என்றால் நடவடிக்கை எப்படி இருக்கும்? இவர்கள் எல்லாம் டாக்டர் தொழிலுக்கு வந்து புனிதமான மருத்துவத் தொழிலுக்கே இழிவு செய்கிறார்கள். பொய், மிரட்டல், குரோதம் என்று இணைய உலகின் இன்னொரு மாஃபியாவாக இந்தக் கும்பல் உருவாகியிருக்கிறது. உங்கள் ஜெனோடைப்பை கேட்ட விவகாரமும் உங்கள் தலையும் கூட டோண்டு பதிவில் உருளுகிறது.
April 1, 2010 at 7:35 மு.பகல்
RV
உங்க பதிவே காலம் சற்று தாழ்ந்தது. திட்டறவங்கே பல பதிவுகளில் போய் திட்டி இப்போ போர் அடிச்சு போய் வேறே வேலை பாக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஹுசைன் தாத்தாவே தேவலைன்னு பலரும் முடிவு கூட பண்ணி இருக்கக் கூடும்
உங்களுக்கு யாரைவது திட்டனுமானா நேரடியா செய்யக் கூடாதா? சும்மா போறவங்க எல்லாரையும் வாங்க இங்க வந்து அவங்களை திட்டுங்கனு சொல்லனுமா?
மேலும் அவரது இது தொடர்பான எல்லா பதிவுகளையும் படித்து விட்டுத் தான் இந்த வேலை நீங்க செய்யரீங்களானு தெரியலை.
இந்த தொடர் பதிவுகள் ஆரம்ப காரணம் தாண்டி எங்கோ செல்கிறது அல்லது கண்ணுக்கு தெரியாத ஒரு இழை அறுந்து தொங்குகிறது. அது என்னனு நீங்களே யோசித்து கொள்ளுங்கள்.
April 1, 2010 at 7:08 பிற்பகல்
ராஜன், நான் கருத்தைப் பார்க்கிறேன், நீங்கள் பல விஷயங்களில் ஒருவரின் அணுகுமுறையைப் பார்க்கிறீர்கள். என்னை விட உங்களுக்கு பதிவுலகில் அனுபவம், பரிச்சயம் அதிகம். அதனால்தானோ என்னவோ, எனக்கு இன்னும் அணுகுமுறையை பார்க்கும் அளவுக்கு ருத்ரன் உட்பட்ட பலரும் பல விஷயங்களில் என்ன நிலை எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை.
விருட்சம், // உங்களுக்கு யாரைவது திட்டனுமானா நேரடியா செய்யக் கூடாதா? //
April 2, 2010 at 2:36 மு.பகல்
//அதனால்தானோ என்னவோ, எனக்கு இன்னும் அணுகுமுறையை பார்க்கும் அளவுக்கு ருத்ரன் உட்பட்ட பலரும் பல விஷயங்களில் என்ன நிலை எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை.//
அதையேதான் நான் கூறுகிறேன். வினவின் பதிவுக்கு போகாதீர்கள் என்று ஆலோசனை சொன்னேன். அதை கேட்காமல் போய் வாங்கிக் கட்டிக் கொண்டு வந்தீர்கள்.
நீங்கள் என்னவோ ரொம்பவும் நியாயமாக நடப்பது போன்ற தோற்றம் வரவேண்டுமென்று ரொம்பத்தான் மெனக்கெடுகிறீர்கள். இதை ஆங்கிலத்தில் bending backwards என்பார்கள். தமிழில் சொல்ல வேண்டுமானால் திருவிளையாடல் படத்தில் நாகேஷ் சிவாஜியை கேள்விகள் கேட்கும் போது அவ்வாறு செய்கிறார்.
அப்படத்தை பார்க்கவில்லையானால் இந்த உரலுக்கு செல்லவும் http://www.youtube.com/watch?v=nuY7YhXXHj8
நாகேஷ் எப்படி பின்னால் மடிந்து செல்கிறார் என்பதை பார்க்கவும்.
திருமலை சொல்வதை நானும் வழிமொழிகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
April 2, 2010 at 6:04 மு.பகல்
ஆர் வி
தமிழ் இணையத்தில் சைக்கோக்கள் அதிகம். அது சாதாரண சைக்கோவாக இருந்தாலும் சரி சைக்கோ டாக்டராக இருந்தாலும் சரி எல்லாம் ஒண்ணுதான். அவர்களிடம் நல்லதோ கெட்டதோ தொடர்பு வைத்துக் கொண்டாலே உங்கள் நிம்மதி கெட்டு விடும். டோண்டுவின் பதிவில் ஜோடி சேர்ந்து கொண்டு மிரட்டுவதை சற்றுப் படியுங்கள் புரியும். நீங்கள் பழகும் அளவுக்குத் தரமுள்ள மனிதர்கள் அல்ல இவர்கள். முன்பு சைக்கோ மூர்த்தி செய்த அதே போர்னோ ப்ளாக்மெயில் வேலையை இந்த சைக்கோ வேறு விதத்தில் செய்கிறான். நாளைக்கு நீங்களே எதிர்பாராமல் இது போன்ற அபாயகரமான கிரிமினல்களின் சைக்கோத்தனமான வேலைகளில் மாட்டிக் கொள்ளும் சிக்கல் இருக்கிறது. நான் இவனைப் போன்ற பல ஆட்களைப் பார்த்து விட்டேன் கடந்த பத்து வருட இணைய வாழ்வில். சைக்கோ மூர்த்திகள் அழிவதேயில்லை. டாக்டர் ரூபத்திலும், கம்பவுண்டர் ரூபத்திலும், நர்ஸ் உருவத்திலும் எப்பொழுதும் இணையம் போன்ற இடங்களில் உலாவிக் கொண்டுதான் இருப்பார்கள். பல தளங்களுக்குள் போவதே பெரிய ஆபத்தாக இருக்கிறது
டோண்டு சார்
நலமா? அதென்ன சார் உங்களிடம் மாத்திரம் வரிசையாக ஊரில் இருக்கும் சைக்கோ கேஸ் எல்லாம் வந்து மிரட்டுகிறார்கள்? எல்லாம் உங்க சவகாச தோஷம்தான் வேற என்னத்தச் சொல்ல? கண்ட கழிசடைகளுடன் ஒட்டி உறவாடாதீர்கள் போகாதீர்கள் என்று சொன்னால் நீங்கள் கேட்ப்பதில்லை. ஒரு முறை நாம் பட்டது போதாதா? அவன் கூப்பிட்டான் இவன் கூப்பிட்டான் என்று வீண் செலவு செய்து கொண்டு கால் டாக்ஸி வைத்துப் போய் விட்டு இப்படி கண்ட கண்ட சைக்கோ கேஸ்களிடமும் மாட்டிக் கொள்கிறீர்கள். நீங்கள் மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை சார். அவன் குடும்பத்தோட வந்து ஒரு பேட்டை ரவுடி மாதிரி மிரட்டுகிறான். போங்க சார். நீங்கள் ஆர் விக்குச் சொன்னதையே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் தயவு செய்து ப்ளாகில் எழுதுவதுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். கூட்டம் கீட்டம் எல்லாம் தேவையில்லை. இப்படி ஒரு மோசமான ப்ளாக்மெயில், மிரட்டல் ஆபாச அவதூறுகள் வரும் இடங்களுக்கு எல்லாம் நீங்கள் ஏன் செல்ல வேண்டும்? தமிழ் ப்ளாகர்கள் சேர்ந்து சங்கம் என்று ஒன்று வைத்தால் அது எப்படி இருக்கும் என்று உங்களுக்குத் தெரியாதா என்ன? அந்த நேரத்தில் உருப்படியாக நாலு மொழிபெயர்ப்பு செய்யுங்கள் அல்லது நல்லதா நாலு விஷயம் எங்களுக்கு ப்ளாகில் எழுதுங்கள். சாவகாசமாக உங்களுடன் பேச வேண்டும். அழைத்துப் பேசுகிறேன்
அன்புடன்
ராஜன்
April 3, 2010 at 2:48 மு.பகல்
//நீங்கள் மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை சார்.//
நான் முதலில் சொன்ன கருத்தில் மாற்றமில்லை. ஆயினும் அவ்வாறு ருத்ரனை கூறியது அவரை துன்பத்துக்காளாக்கி விட்டது. உண்மை கசக்கும். கசப்பான உண்மையை சொல்லி மனவருத்தம் அளித்ததற்கு மன்னிப்பு கேட்டேன் அவ்வளவுதான். அந்த மன்னிப்பை சம்பந்தப்பட்ட தம்பதியினர் ஹேண்டில் செய்த விதம் அவர்களை மற்றவர்கள் சரியாக நோக்க உதவியது.
போலி டோண்டு மூர்த்தி விஷயத்தில் பலர் என்னை அடக்கி வாசிக்கும்படி கூறினர். நான் பதிவிடுவதை நிறுத்தினால் கூட தவறில்லை என ஒரு நண்பர் கூறினார் (நீங்கள் கூறவில்லை). அதைத்தான் போலி டோண்டு மூர்த்தியும் எதிர்பார்த்தான். அப்படித்தான் அவன் எதிர்த்த பலரும் செய்துஇருக்கிறார்கள். ஆனால் நான் செய்யாமல் சண்டை போட்டு, எஸ்கலேட் செய்து கொண்டே போனதில் கடைசியில் அவன் ஒரேயடியாக அடக்கப்பட்டானா இல்லையா?
நான் அவ்வாறு செய்யாதிருந்தால் அவன் இன்னும் புரையோடிய புண்ணாகவே தொடர்ந்திருப்பானே.
தமிழ்மணத்தை விட்டு மற்றவர்களுடன் சேர்ந்து நானும் விலகவில்லை என்பதில் உங்களுக்கும் மற்ற நண்பர்களுக்கும் வருத்தம் என்பது எனக்கு தெரியும். சண்டை போட்டுக் கொண்டு வெளியே செல்ல ஒரு நிமிடம் கூட தேவைப்பட்டிருக்காது. ஆனால் நான் நின்று சண்டை போட்டது நண்பர் ஜயராமனை காப்பாற்றவே. அவருக்கு எதிராக மேலும் நடக்க இருந்த அக்கிரம நடவடிக்கைகளை பின்னால் இருந்து நிறுத்தினேன்.
உண்மையில் ஜயராமன் மட்டும் அவர்களது இலக்கு அல்ல. அவர்களது இலக்கு நானே. என்னையும் முடிந்தால் என்றென்றும் அன்புடன் பாலாவையும் சேர்த்து குழியில் தள்ளும் முயற்சிகள் நடந்தன. அவற்றையும் முளையிலேயே கிள்ளி எரிந்தேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
April 3, 2010 at 2:53 மு.பகல்
அடேடே. மன்னிக்கவும் ஆர்.வி. சார். இந்த யூ டியூப் சுட்டி தரும்போது கணினியில் ஆடியோ எனேபிள் ஆகவில்லை. ஆகவே எதார்த்தமாக இணைத்து விட்டேன். இப்போது ஆடியோவுடன் போட்டு பார்க்கும்போதுதான் அது ரீமிக்ஸ் என புரிகிறது.
இருந்தாலும் bending backwards -னாக்க லிடெரலா அந்த அர்த்தம்தான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
April 3, 2010 at 4:35 மு.பகல்
பின்னூட்டமிடும் போது “குடும்பமாக” (இப்போது மனைவி) தாக்குகிறார்கள் என்று சொல்பவர்கள், “தொழில் முறை அல்லாத விஷயங்களை” மனைவியிடம் பகிர்வது தவறென்று (இப்போது பதிவர்) சொல்வார்கள். “தொழில் முறை அல்லாத” தனிப்பட்ட கடிதங்களில் இருக்கும் தொனியும், பின்னூட்டங்களில் இருக்கும் தொனியும் எங்களிடம் மாறுபடுவதில்லை. வீட்டில் ஒன்றும் ஊருக்காக ஒன்றும் பேசாத (தொழில் பிச்சையோ, புகழ் பிச்சையோ, பதவி/ஒட்டுப் பிச்சையோ தேவையில்லாத) நாங்கள் அரவிந்தனைப் போன்றவர்களிடம் அதை எதிர்பார்த்தது தவறு. இந்த உலகம் எங்களின் இந்த அறியாமையை மன்னித்து விடட்டும்.
பார்ப்பதையெல்லாம் பார்த்து ரசித்து விட்டு மெதுவாக, மனம் மாறாமல் ஏப்ரல் 1-ம் தேதி மன்னிப்பு கேட்பவரையும் மன்னித்த விதம் பற்றி எங்களுக்கு எந்த குறுகுறுப்பும் இல்லை. மன்னிப்பு கேட்ட பின்னும் அவர் பின்னூட்டங்களில் நடக்கும் தாக்குதல்களைப் பற்றியும் எங்களுக்கு அக்கறை இல்லை. என்ன இருந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று கண்ணாடி பார்க்காமல் சந்தோஷப் படுபவர்கள் பட்டு விட்டுப் போகட்டுமே!
என்ன?, எது செய்யலாம் எது செய்யக்கூடாது என்று ஹுசைனுக்கு மட்டுமல்ல ஹஸ்பண்ட்களுக்கும் சொல்லித் தர ஆரம்பித்து விட்டார்கள்!
BTW RV, I was waiting for your reaction to Durga composition’s interpretation sent by Rudhran.
April 3, 2010 at 5:13 மு.பகல்
டோண்டு சார்
உங்களுக்குத் தெரியாததல்ல. உங்களுக்கு சரி என்று தோன்றும் விஷயங்களை உங்கள் மனசாட்சி படி செய்கிறீர்கள். அதற்கான எனது பாராட்டுக்கள் என்றுமே உண்டு. மூர்த்தி விஷயத்தில் நான் உங்களை என்றுமே அமைதியாகவோ சமாதானமோ போகச் சொன்னவனில்லை. உங்களுக்கு என்னால் முடிந்த ஆதரவை எப்பொழுதும் அளித்தே வந்தேன். நான் சொல்ல வருவது பொறுக்கிகள் கூடும் இடத்திற்கு அநாவசியமாகச் செல்ல வேண்டாம் என்பதே அது தமிழ் மணமாக இருந்தாலும் சரி தமிழ் ப்ளாகர்கள் நடத்தும் கூட்டமாக இருந்தாலும் சரி இரண்டுமே என்றுமே நாகரீகமான மனிதர்களால் நடத்தப் பட்டதும், நடத்தப் படுவதும் கிடையாது. சாக்கடையில் இருந்து வரும் பன்றியைக் கண்டால் யானைதான் ஒதுங்கிப் போக வேண்டும். அதுவாகக் கிட்ட வருமானால் தூக்கிப் போட்டு நசுக்கலாம். தேவையில்லாமல் அதன் அருகில் யானை போக வேண்டிய அவசியமில்லை. துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்றிருக்கிறார்கள் பெரியவர்கள். மற்றபடி உங்கள் பாணியே வேறு.
அன்புடன்
ராஜன்
April 3, 2010 at 11:55 மு.பகல்
ஒரு வரைகோட்டுச்சித்திரம் இந்தளவு பாதிப்பையும் சர்ச்சகளையும் உண்டாக்கும் என்பது வரைந்தவனுக்கு தெரியாததல்ல. வரைந்துவிட்டு அதற்கு சப்பைக் கட்டு கட்டுவதைவிட வரையாமலிருந்திருக்கலாம். உசைன் என்ற ஒருவன் வரைந்துவிட்டு சர்ச்சைகளைக்கண்டதும் பாதுகாப்பான இடத்துக்கு ஓடி ஒளிந்துகொண்டானே தவிர, தன் சிறுமதிச்செயலால் தான் சார்ந்த சமுதாயம் பாதிப்புக்குள்ளாகும் என்ற அறிவு சிறிதேனும் இல்லாது போனான். ‘தனியொருவன் செய்த செயலுக்கு அவனது சமுதாயம் என்ன செய்யும்’ என்று பிரித்தறியும் அன்னப்பறவைகளா நம்மைச்சுற்றியிருப்பவர்கள்?.
April 3, 2010 at 12:26 பிற்பகல்
All the pseudo secularists are supporting this perverted painter F.M.Hussain.
I humbly request whoever support F.M.Hussain are requested to send their mother, sisters & and wife color photos by courier to Quatar for painting them at free of cost in nude poses and also to draw poses in nude mating with pig, ass or whatever taste they like . Once you got the painting make a 12”x12” gold frame and decorate your drawing room. I am sure the visitors and your future generation will definitely appreciate the artistic genius of F.M.Hussain. Do it immediately and all the best.
April 3, 2010 at 3:36 பிற்பகல்
Even MF Husain will refuse to draw paintings of
some doctors practising psychiatry in Chennai.They are so vulgar and obscene even when clothed.
April 4, 2010 at 6:18 மு.பகல்
டோண்டு, நான் சொன்னதை சரியாக புரிந்துகொண்டீர்களா என்று தெரியவில்லை. நான் பதிவுலகை அவ்வளவு தூரம் follow செய்வதில்லை, அதனால் பல வேறு விஷயங்களில் ருத்ரன் உட்பட்ட பலரும் என்ன நிலை எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று சொல்லி இருந்தேன். உதாரணமாக உங்களுக்கும் ருத்ரனுக்கும் என்ன தகராறு என்று தெரியவில்லை, அதனால் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. திருமலையை சந்திக்கும்போது அவர் அனேகமாக விளக்குவார்! போலி டோண்டு அளவுக்கு ருத்ரன் இறங்கி இருக்கிறார் என்று அவரைப் பற்றி எனக்கு தெரிந்த கொஞ்சத்தை வைத்து நம்ப முடியவில்லை என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.
உமா, நீங்கள்தான் ருத்ரனின் மனைவியா? எப்படி அவர் எனக்கு அனுப்பிய மின்னஞ்சல் பற்றி உங்களுக்கு தெரிந்தது என்று ஒரு நிமிஷம் ஆச்சரியமாக இருந்தது! அவர் கொஞ்சம் கஷ்டப்பட்டு விளக்க முயற்சி செய்திருந்தார், எனக்கு அவர் சொன்னது ஏற்புடையதாக இல்லை. அவருக்கு பதில் எழுத இன்னும் கை வரவில்லை…
சராதா, இதில் உங்களுடன் வேறுபடுகிறேன்.
வேதம்கோபால், உங்களுக்கும் எனக்கும் இதில் இசைவு இல்லை என்பது சுலபமாக புரியும் விஷயம். நானும் நீங்களும் பேசுவதில் பயனில்லை என்பதும் உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.
பெரியார், உங்களுக்கு ருத்ரனைப் பற்றி எழுத வேண்டுமென்றால் நேரடியாக தாக்குங்களேன்! இதென்ன நீங்கள் பெயரை சொல்லாமல் இருப்பது நாகரீகமும் இல்லை நேர்மையும் இல்லை!
April 4, 2010 at 6:36 மு.பகல்
எனக்கும் ருத்ரனுக்கும் தனிப்பட்ட முறையில் தகராறு ஏதும் இல்லை. அவரது பார்ப்பன வெறுப்பை நான் சாடியது அவருக்கு கோபம் அளித்திருக்கும்.
எதற்கும் அவரிடம் ஜாக்கிரதையாக இருங்கள் என்று திருமலராஜன் சொல்வதை வழிமொழிகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
April 5, 2010 at 4:13 பிற்பகல்
//போலி டோண்டு அளவுக்கு ருத்ரன் இறங்கி இருக்கிறார் என்று அவரைப் பற்றி எனக்கு தெரிந்த கொஞ்சத்தை வைத்து நம்ப முடியவில்லை //
எனக்கும் முதலில் நம்ப முடியவில்லை. நிற்க. யார்வரைந்தது என்பதுதான் பிரச்சனை என்கிறீர்கள். முதலில் சென்னை மனோதத்துவம் வரைந்த சரஸ்வதி வெறும் நகல் மட்டுமே. எவ்வித படைப்பூக்கமும் இல்லாத நகல். இதை நான் அவரது வலைப்பதிவிலேயே சொல்லியிருக்கிறேன். “எல்லாரும் பாத்துக்குங்க நானும் ரவுடிதான்” என்கிற வடிவேல் காமெடி மற்றொரு தளத்தில் நடந்திருக்கிறது. அதே காமெடித்தனத்துடன். இதனை எவனும் கண்டு கொள்ளவில்லை என்பதே உங்களுக்கு சில விஷயங்களை உணர்த்த வேண்டும்.
இனி ஹுசைன். இந்திரா காந்தியை துர்கா என வாஜ்பாய் புகழ்ந்தார். 1971 இல். வங்கதேச விடுதலைக்காக. 1975 இல் ஹுசைன் இந்திரா காந்தியை வரைந்தார். துர்கையாக அவசரகால நிலை பிரகடனத்துக்காக. பின்னர் மொரார்ஜி தேசாயை குரங்காக. இகழ்ச்சியாக. சுதந்திர உணர்வின் மீது உள்ளார்ந்த பெருவெறுப்பு கொண்டவர் ஹுசைன். அவருக்கு பிழைப்புக்கு அபரிமிதமான பிழைப்புக்கு ஹிந்து பண்பாட்டின் கட்டற்ற சுதந்திரத்தில் எழுந்த பிம்பங்கள் தேவைப்படுகின்றன. உள்ளார அவர் வெறுப்பவை அவை. ஏனெனில் அவருக்கு உகந்தது இஸ்லாம் அளிக்கும் சர்வாதிகார ஆன்மிகம். எனவே இந்த வெறுப்பு எப்படியெல்லாம் subtle ஆக கலைத் திறமையுடன் வெளிப்பட முடியுமோ அப்படியெல்லாம் வெளிப்படுகிறது. ஒரு ஓவியனை இஸ்லாமியனாகத்தான் பார்ப்பாயா என்றால்…இல்லை ஆனால் அவன் மதம் சார்ந்த இரட்டை டம்ளர் முறையை பிரகடனப்படுத்தும் போது. அரை நூற்றாண்டுக்கும் மேல் செருப்பணியாதவன் இஸ்லாமிய நாட்டு குடிமகனானதும் அங்குள்ள மக்களின் உணர்வுகளை மதித்து வெறுங்காலில் நடக்காமல் காலுறை அணிகிறான். குரான் ஆயத்தை திரைஇசையில் பயன்படுத்தி அடிப்படைவாதி பயமுறுத்தியதும் எடுத்துவிடுகிறான். சுருக்கமாக என் மக்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளிப்பேன் ஆனால் உன் உணர்வுகள் எனக்கு அனாவசியம் என பிரகடனப்படுத்துகிறான். எனவே இவனது இஸ்லாமியத்தை கணக்கில் எடுத்தே இவனை மதிப்பிட வேண்டும். அப்படி மதிப்பிடுவதில் தவறும் இல்லை.
விரிவாக இங்கு
நிர்வாணமாக்குவது ஒரு அவமானப்படுத்துதலாகவும் இந்த மரபில் காணப்படுகிறது. மகாபாரத காலம் முதல். அப்போது கௌரவ சபையில் அமர்ந்திருந்த பிதாமகர் மௌனித்திருந்தார். ஆனால் ஒரு பெரியவன் மட்டுமே குதூகலித்தான். அவன் பெயர் சகுனி. இன்றும் பிதாமக தோற்றத்தில் சகுனிகள் இருக்கிறார்கள்.
April 5, 2010 at 4:25 பிற்பகல்
இனி உமா என்கிற பதிவர் எழுதுகிறார்: //நாங்கள் அரவிந்தனைப் போன்றவர்களிடம் அதை எதிர்பார்த்தது தவறு// இது ஏப்ரல் 3 ஆம் தேதி. நான் ஒன்றாம் தேதியே தலைமுழுகித்தொலைத்த ஒன்று. ஆனால் வலிய வந்து பிறாண்டும் போது என்ன செய்ய முடியும். எனவே ஒரு விளக்கம். நான் எழுதியது என்னை தனி மின்னஞ்சல் எழுதக் கூறியது திருவாளர். ருத்ரன் என்கிற நபர். அவர் எந்த பதிவருடனும் இணைந்து தனது வலைப்பதிவை நடத்தவில்லை. அவர் கணவராக தகப்பனாக மகனாக எப்படி நடக்க வேண்டும் என்பதைக் குறித்து எனக்கு கவலையில்லை. ஆனால் “personal and confidential” என்று அனுப்பிய ஒரு மடலை இன்னொருவரிடம் பகிர்ந்து கொள்வதென்றால் அனுப்பியவரிடம் ஒரு வார்த்தை கேட்பது பொதுவான மானுட நாகரிகம். இதை நான் ருத்ரன் ±ýÀÅÕ측¸ சொல்லிக்கொள்ளவில்லை. பொதுவாக சொல்கிறேன். அதையும் மீறி தன் மின்னஞ்சலில் வரும் விஷயத்தை அவர் உமா என்கிற பதிவருடன் தனிப்பட்ட முறையில் பகிர்ந்து கொள்வதை எவரும் தடுக்க முடியாது. அதைப் பற்றியும் எனக்கு கவலை கிடையாது. «ó¾ ¯Á¡ ¡÷ ±ýÀÐ ÌÈ¢òÐ ±ÉìÌ ´Õ §¸ûÅ¢ ܼ ¸¢¨¼Â¡Ð. ஆனால் அந்த உமா என்கிற பதிவர், ±ÉìÌõ «ÅÕìÌõ ±ùÅ¢¾ ¦¾¡¼÷Òõ þøÄ¡Áø þÕìÌõ §À¡Ð, திடீரென பிரசன்னமாகி என்னை மிரட்டுகிறார். “நீ தனியாக என்ன சொன்னாய் இப்போது என்ன சொல்கிறாய் எனக்கு தெரியும். நீ ருத்ரனுக்கு அனுப்பும் தனிமடல்களை எல்லாம் நான் பார்க்கிறேன். கைத்தடல் கிடைக்கிறதுக்கு ஏத்தாப்ல ஆடுறியாடா” என்கிற ரீதியில். இதைத்தான் நான் unethical என்கிறேன். திரு ருத்ரனுடன் நான் நடத்த முயன்ற தனிமடல் உரையாடல் – அவரது அழைப்பினால் ஏற்பட்ட -அதுவும் ஆதீன பாவனை கொண்ட அழைப்பையும் பொறுத்துக் கொண்டு நான் தொடர்ந்த- உரையாடல் நிச்சயமாக ஏமாற்றம் என்பது mutual feeling என அவர் மூலம் அறிகிறேன். ஆனால் அது உமா என்கிற பதிவருடனானது அல்ல. அதன் பின்னர் அவரது மொழிநடையின் முன்னேற்றம் குறித்து நிச்சயமாக சொல்லியேயாக வேண்டும். நான் அவருடைய குடும்பத்தினர் தனிப்பட்ட முறையில் தாக்கப்பட்டதற்கு அவருக்கு moral support க்குக்காக அனுப்பிய மடல் என குறிப்பிட்ட போது அவர் நீயா எனக்கு மாரல் சப்போர்ட்டா என கர்ஜித்து எனது நாக்கின் நீளம் அது நக்க முடியுமா என்பதையெல்லாம் வினவிய போது, (ருத்ரன் என்பவர் மூர்த்தி அளவுக்கு இறங்கமுடியுமா என்பதற்கான ஒரு குறிப்பு இதில் உள்ளது. கண்ணுள்ளவன் காணக்கடவன்.
) உமா என்கிற பதிவர் “அவருடைய மனக்காயத்துக்கு தடவியது போல இருக்கும் என்பதற்காக ருத்ரன் என்னிடம் உன் மடலைக் காட்டினார்” என கூறியதைச் சுட்டிக்காட்டினேன்.
April 5, 2010 at 10:02 பிற்பகல்
தூங்க போகலாமென்று நினைத்தேன்.உங்கள் இடுகை கண்ணில் பட்டு விட்டது.பின்னூட்டம் வரை தொடர்கிறேன்.இடுகை பற்றி குறிப்பிட்டதற்கு நன்றி.
April 5, 2010 at 10:05 பிற்பகல்
//இன்னொரு விஷயம் – நான் கூட கொஞ்சம் பயந்தேன், டாக்டர் ருத்ரன் வரைந்த நிர்வாண சரஸ்வதி படத்தை எல்லாருக்கும் மீண்டும் நினைவுபடுத்தி அனாவசியமாக அவரை வம்புக்கு இழுக்கிறோமே என்று. ஒருவர் – ஒரே ஒருவர் கூட அதை ஆட்சேபிக்கவில்லை. என்ன வரையப்பட்டிருக்கிறது என்பது என்பதை விட யார் வரைந்தது என்பதுதான் முக்கியம்!//
You got the argument point.வழக்கறிஞரா போய் இருக்க வேண்டிய்வர் நீங்க:)
April 5, 2010 at 10:30 பிற்பகல்
Followed up the comments.The other side of midnight. Good Night.
April 6, 2010 at 5:57 மு.பகல்
அன்புள்ள அரவிந்தன் நீலகண்டன்,
டாக்டர் ருத்ரனின் ஓவியத்தை யாரும் கண்டுகொள்ளாததற்கு அந்த ஓவியத்தின் தரமே (தரமின்மையே) காரணம் என்கிறீர்கள். ஆனால் இன்று ஹுசேனைக் கண்டிக்கும் 90% பேருக்கு ஓவியத்தின் தரம் முக்கியம் இல்லை என்றுதான் நான் கருதுகிறேன். (ஹுசேனின் ஓவியம் சிறப்பாக இருக்கிறது என்று எனக்கும் தோன்றவில்லை, ஆனால் நான் ஓவியங்களை கரைத்து குடித்தவன் இல்லை) கண்டிப்பவர்கள் பொதுவாக கேட்பது முகமதை நீ இப்படி வரையமுடியுமா என்றுதான், நல்ல ஓவியத்தை வைத்து இப்படி எங்கள் உணர்வை அவமதிக்கிறாயே என்று ஒருவர் கூட கேட்டு நான் பார்க்கவில்லை.
ஹுசேன் நல்லவரா கெட்டவரா என்பது எனக்கு பிரச்சினையாகத் தோன்றவில்லை. இது வரை நான் அதை எல்லாம் பற்றி கவலைப்பட்டதும் இல்லை. எனக்கும் ஹுசேனுக்கும் உள்ள உறவு அவர் ஓவியங்கள் மூலமே. கமலஹாசன் ஸ்திரீலோலன் என்றால் எனக்கு அது கிசுகிசு மட்டுமே, அவரது திரைப்படங்களே எனக்கு முக்கியம். அது போலத்தான். ஹுசேனை நான் சிறந்த ஓவியர் என்றெல்லாம் சொல்லமாட்டேன். நல்ல தொழில் திறமை இருக்கிறது என்று நினைக்கிறேன், அவ்வளவுதான். அவரது திறமை, எண்ணங்கள், இந்த மாதிரி படம் வரைவதின் உள்நோக்கம் இதையெல்லாம் விடுங்கள். அவருக்கு இப்படிப்பட்ட ஓவியங்கள் வரையும் உரிமை மறுக்கப்பட்டால் – அதுவும் ஒரு குழுவினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை என்று மறுக்கப்பட்டால் – Satanic Verses தடை செய்யப்படுவதும் சரியாகிவிடும். அதே விஷயம்தானே? ஒரு குழுவினரின் உணர்வுகளுக்கு ரஷ்டி மதிப்பளிக்கவில்லை, அவ்வளவுதானே? அவ்வளவு ஏன், நான் இப்படி வாதிடுவது தமிழ் பதிவுலகின் பெரும்பான்மையினரின் மனதை புண்படுத்தும்; நீங்கள் இப்படி வாதிடுவது ஹுசேனின் குடும்பத்தாரை புண்படுத்தும். அதற்காக நம் வாதங்களை இந்திய அரசு தடை செய்தால் எப்படி உணர்வீர்கள்?
Personal and confidential என்று வரும் ஈமெயிலை மனைவிக்கும் காட்டுவது தவறு என்று நீங்கள் சொல்வது சரியே. ஆனால் நீங்கள் சொன்ன பிறகே அது எனக்கும் உறைத்தது என்ற உண்மையையும் ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்.
ராஜ நடராஜன், படித்ததற்கும் இங்கே பின்னூட்டம் எழுதியதற்கும் நன்றி! உங்கள் தளத்தில் நல்ல பதிவு எழுதியதற்கும் சேர்த்து நன்றி!
ருத்ரனா நாக்கின் நீளம் என்றெல்லாம் எழுதி இருக்கிறார்? நீங்கள் குறிப்பிட்டிருப்பதை படித்தபோது எனக்கு சுருக்கென்று இருந்தது – இது என்ன அநாகரீகமாக இருக்கிறதே என்று தோன்றியது. ருத்ரன் கண்டிக்கப்பட வேண்டிய கருத்துகளை சொல்லி இருக்கிறார், அவருக்கும் எனக்கும் ஒரு விஷயத்தில் தகராறுதான், ஒருவரை ஒருவர் சாடி இருக்கிறோம், ஆனால் அவர் இப்படி பேசி நான் பார்த்ததில்லை.
ராஜ நடராஜன், படித்ததற்கும் இங்கே பின்னூட்டம் எழுதியதற்கும் நன்றி! உங்கள் தளத்தில் நல்ல பதிவு எழுதியதற்கும் சேர்த்து நன்றி!
April 6, 2010 at 6:35 மு.பகல்
//Personal and confidential என்று வரும் ஈமெயிலை மனைவிக்கும் காட்டுவது தவறு என்று நீங்கள் சொல்வது சரியே//
மீண்டும் தெளிவாக சொல்கிறேன். அத்தகைய ஒரு ஈமெயிலை திருவாளர் ருத்ரனோ வேறெவரோ உமா என்கிற சக பதிவருக்கோ வேறெவருக்கோ காட்டுகிறார் என்றால் அதை நான் எதுவும் செய்ய முடியாது. ஆனால் அதை அந்த இன்னொரு நபர் – எனக்கோ நான் ருத்ரனிடம் செய்யும் விவாதத்துக்கோ எவ்வித தொடர்பும் இல்லாத நபர்- செய்கிறார் என்றால் அது நிச்சயமாக unethical. மற்றபடி உமா என்கிற பதிவர் முழக்குவதை போல “கணவன்கள் என்ன செய்ய வேண்டுமென” நான் சொல்லவில்லை. என்ன செய்யவேண்டுமென்று தெரிந்த தெரியாத கணவர்களுக்கு சொல்லிக் கொண்டு திரிவது என் வேலையுமில்லை.
இது உமா என்கிற பதிவர் சொன்னது: “அவர் ஏதோ எனக்கு வந்த தாக்குதல்களுக்கு நீங்கள் மருந்து தடவுவதாக நினைத்து என்னிடம் காட்டினார்.”
இது நான் சொன்னது: அது அவருடைய மனம் காயப்பட்டிருக்கும் பட்சத்தில் அந்த காயங்களை கூடுதலாக அனுப்பவித்தவர்கள் இங்குண்டு என காட்டஎனவே சோர்ந்து போகாமல் இருக்க அனுப்பப்பட்டதுதான்.
இதோ ருத்ரன் சொன்னது : Dr.Rudhran said… அரவிந்த்! நீ எனக்கு moral supportக்கு அஞ்சலா? ஹிம் நாக்க கூட நாக்கு வேண்டுமே குட்டி!!
ஓ ஒரு தவறு செய்துவிட்டேன் பாருங்கள் ருத்ரன் நாக்கின் நீளம் என்றெல்லாம் எழுதவில்லை நக்க நாக்கு இருக்கிறதா என்றுதான் எழுதியிருக்கிறார். வார்த்தைகளில் அவர் கவனமாக இருக்கிறாரோ இல்லையோ நான் கவனமாக இருக்க வேண்டும், ஆட்டோ அனுப்புவதிலிருந்து வழக்கு போடுவது வரை வலையுலக பிரச்சனைகளை பல தளங்களில் சந்திக்க தெரிந்த மேதை அவர் என தோன்றுகிறது.
இங்கே க்ளிக்கி இந்த கமெண்டுகளை படித்துக் களிக்கவும்.
சரி இனி ஹுசைன்.
ஹுசைன் என்கிற முஸ்லீம் எப்படி இவ்வாறு வரையலாம் என்று கேட்கலாமா? கட்டாயமாக கேட்கலாம். அவருடைய இஸ்லாமியத்தின் விக்கிரக குறிப்பாக பெண் தெய்வ வழிபாட்டெதிர்ப்பு காழ்ப்புணர்வு இப்படி வெளிப்படுகிறதா என கேட்பதில் தவறில்லை. அதற்கு நிச்சயாமாக ஹுசைனின் ஆளுமையில் இடமிருக்கிறது. இந்த அடிப்படையில் அவர் வெறுப்பை பரப்புவதாக அவர் மீது வழக்கு தொடர ஒருவருக்கு உரிமை இருக்கிறது. அது தவறென சொல்லவும் உங்களுக்கும் எனக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் எந்த சுதந்திரமும் இல்லாத ஒரு நாடு தரும் பதவிசில் ஒருவன் உட்கார்ந்து கொண்டு அங்குள்ள எல்லா அதிகார வளைவுக்கும் முக்கல் முனகல் இல்லாமல் வளைந்து கொடுத்துக் கொண்டு “அங்குள்ள வழக்குகளை சந்திக்காமல் இருக்க இங்கே வந்துவிட்டேன்” என்று சொல்லும் போது இப்படி ஒரு கலைஞன் மீது வழக்கு போடாதே என்று சொல்ல இங்குள்ள சகுனி மாமாக்களுக்கு என்ன தார்மீக நியாயம் இருக்கிறது? (சில புகழ்பெற்ற நாடகங்கள் கூட யூத வெறுப்பை பரப்புவதாக அமெரிக்காவின் முதன்மையான நகரங்களில் தடைசெய்யப்பட்டுள்ளன என்பதை வெறுமே நினைவுபடுத்துகிறேன்.)
April 6, 2010 at 9:22 மு.பகல்
Moral of the story is அப்படீன்னு எப்போ எழுதுவீங்கன்னு பார்த்துகிட்டு இருந்தேன். என்ன எழுதுவீங்கன்னு மட்டும் எனக்கு ஏற்கனவே ஓரளவு புரிந்தே இருந்தது.
நீங்க சரியா புரிந்து கொள்ளலைன்னு தான் நான் நினைக்கிறேன். இந்த ஓவியம் சரியில்லைன்னு யாரும் சொல்லிவிடாதபடிக்கு ஏற்கனவே ஒரு தரமான பதிவு பதிவாகி இருப்பதை நீங்க பார்தீங்களானு எனக்கு தெரியலை. பலரும் இன்னும் துர்க்கை, லக்ஷ்மி, காளின்னு எல்லோரையும் பதிவுலக சந்தைக்கு கொண்டு வரவேண்டாம்னு முடிவு பண்ணி இருக்கலாம். தெய்வங்களுக்கு எல்லாம் சனி(RV??) திசையோ.
ஒருவர் கூட மாற்று கருத்து வைக்கலைன்னு சொன்னது சரியில்லை. நீங்க பதில்களை சரியா புரிந்து கொள்ளவில்லை என்பது என் எண்ணம் .
மற்றபடி தவறில்லைன்னு நீங்க நினைக்கும் விஷயங்களை தவறுன்னு சொல்லும் தவறை நான் செய்ய மாட்டேன். அது உங்கள் சுதந்திரம்.
நான் எழுதுவதை தவறா எடுத்துக்க வேண்டாம்.
http://www.virutcham.com
April 6, 2010 at 9:33 மு.பகல்
/ருத்ரனா நாக்கின் நீளம் என்றெல்லாம் எழுதி இருக்கிறார்? நீங்கள் குறிப்பிட்டிருப்பதை படித்தபோது எனக்கு சுருக்கென்று இருந்தது – இது என்ன அநாகரீகமாக இருக்கிறதே என்று தோன்றியது. ருத்ரன் கண்டிக்கப்பட வேண்டிய கருத்துகளை சொல்லி இருக்கிறார், அவருக்கும் எனக்கும் ஒரு விஷயத்தில் தகராறுதான், ஒருவரை ஒருவர் சாடி இருக்கிறோம், ஆனால் அவர் இப்படி பேசி நான் பார்த்ததில்லை//
தவறாக சொல்லிவிட்டேன். நாக்கின் நீளம் குறித்து ருத்ரன் சொல்லவில்லை. அவர் வார்த்தைகளில் எப்படி இருக்கிறாரோ நான் வார்த்தைகளில் கவனம் கொள்ள வேண்டும். ஏனென்றால் ஆட்டோ அனுப்புவது முதல் வழக்கு தொடர்வது வரை வலையுலக விஷயங்களை எப்படி அணுகுவது என்பதில் அலாதியான அணுகுமுறை கொண்ட மனோதத்துவ மேதைகள் இணையவெளியில் உலவுகின்றனர். ±É§Å அன்னார் சொன்னதையும் அதன் பின்னால் உள்ள விஷயத்தையும் சொல்லிவிடுகிறேன்:
இதுதான் ருத்ரன் சொன்னது: //அரவிந்த்! நீ எனக்கு moral supportக்கு அஞ்சலா? ஹிம் நாக்க கூட நாக்கு வேண்டுமே குட்டி!!//
இதற்கு காரணம் நான் இவ்வாறு சொன்னது: //அது அவருடைய மனம் காயப்பட்டிருக்கும் பட்சத்தில் அந்த காயங்களை கூடுதலாக அனுப்பவித்தவர்கள் இங்குண்டு என காட்டஎனவே சோர்ந்து போகாமல் இருக்க அனுப்பப்பட்டதுதான். அது தவறல்ல. ஆனால் உன் மடலை நான் மற்றவருடன் பகிர்ந்து கொள்ளலாமா என கேட்டிருந்தால் அது ethical ஆக பண்பாட்டுடமையாக இருந்திருக்கும். அது போகட்டும்.//
இதற்கு காரணம் உமா என்கிற பதிவர் இவ்வாறு கூறியது: //ஏதோ எனக்கு வந்த தாக்குதல்களுக்கு நீங்கள் மருந்து தடவுவதாக நினைத்து என்னிடம் காட்டினார்.//
ருத்ரன் என்கிற பெயரில் எழுதும் ஆசாமி போலி-டோ ண்டு அளவுக்கு தரம் தாழ்ந்து போவாரா அல்லது ஒரு படி மிஞ்சுவாரா என்பதை நீங்கள் அனுமானித்துக்கொள்ளலாம் இந்த அருமையான ருத்ர கமெண்ட்களை முழுமையாக இங்கே படிக்கலாம்.
April 6, 2010 at 10:42 மு.பகல்
@RV
ருத்ரன், அரவிந்தன் நீலகண்டன் எக்ஸ்சேஞ்சுகள் ஒரு உதாரணத்துக்கு.
Dr.Rudhran said…
அரவிந்த்! நீ எனக்கு moral supportக்கு அஞ்சலா?
ஹிம்
நாக்க கூட நாக்கு வேண்டுமே குட்டி!!
andd, DONDU if the matter is closed why are your henchmen still barking with your permission. i shall consider their insinuations as initiated or encouraged or inspired or encouraged by you.
April 01, 2010 7:15 PM
dondu(#11168674346665545885) said…
@Rudhran
Use your hectoring tones and outpourings with others. I dont require your directives as to how I should run my blog.
You are welcome to your conclusions and I to mine.
Dondu N. Raghavan
April 01, 2010 7:22 PM
அரவிந்தன் நீலகண்டன் said…
டோ ண்டு…ருத்ரன் பாவம்….சென்னை வெயில் அவரை என்ன செய்து விட்டது பார்த்தீர்களா…அவருக்கு போய் சீரியஸாக பதில் சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே…அவர் மனநலமில்லாத மருத்துவர் அல்ல மனநலம் உடைய மருத்துவர் என எப்படி நிரூபிக்கிறார் பாருங்கள்…இந்த மாதிரி நல்ல மன ஆரோக்கியத்தை கடைசியாக எங்கே சந்தித்தோம் நினைவிருக்கிறதா? பாவம்…எப்படி இருந்த ஆள் இப்போது இப்படி ஆகிவிட்டார்…ம்ஹும்
April 01, 2010 7:33 PM
aravindan neelakandan said…
//அவர் ஏதோ எனக்கு வந்த தாக்குதல்களுக்கு நீங்கள் மருந்து தடவுவதாக நினைத்து என்னிடம் காட்டினார்.//
அன்புள்ள ருத்ரன்,
இது உமா என்கிற பதிவர் நீங்கள் செய்ததாக சொன்னது. நான் அனுப்பியது moral support க்காகத்தான். “நக்க நாக்கு வேண்டுமே குட்டி”- என சொல்கிற நீங்கள்தான் அந்த மின்னஞ்சலை தாக்குதல்களுக்கு மருந்து தடவுவதாக உமா என்கிற பதிவரிடம் காட்டியிருக்கிறீர்கள். “நக்க நாக்கில்லாத குட்டியை வைத்து மருந்து தடவவா நினைப்பேன்” என நீங்கள் கேட்க வேண்டியது என்னிடமல்ல. சரி விடுங்கள், மேலும் மேலும் நீங்கள் கீழே விழுந்து கொண்டிருப்பதைக் காட்டிலும் நான் எழுதியதெல்லாம் தப்பு என்று உங்களிடம் கேட்டுக்கொண்டால் உங்களை நீங்களே சிறுமைப்படுத்திக் கொள்ள மாட்டீர்கள் என்றால் அப்படியே கேட்டு விடுகிறேன். இதையும் மன்னிப்பாக face-value வில் எடுத்துக்கொண்டு நிறுத்திக் கொள்ளுங்கள். பெரியமனிதராக கருதப்பட்ட ஒருவர் இப்படி ஒரேயடியாக தன்னைத்தானே மட்டமாக்கி கொள்வது சகிக்க முடியாமல் இருக்கிறது.
அன்புடன்
அரவிந்தன் நீலகண்டன்
பார்க்க: http://dondu.blogspot.com/2010/03/blog-post_30.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
April 6, 2010 at 11:09 மு.பகல்
MIME-Version: 1.0
Received: by 10.231.35.67 with HTTP; Tue, 6 Apr 2010 03:59:05 -0700 (PDT)
In-Reply-To:
References:
Date: Tue, 6 Apr 2010 16:29:05 +0530
Received: by 10.231.168.85 with SMTP id t21mr1523885iby.0.1270551545163; Tue,
06 Apr 2010 03:59:05 -0700 (PDT)
Message-ID:
Subject: =?UTF-8?B?UmU6IFtOZXcgY29tbWVudF0g4K654K+B4K6a4K+H4K6p4K+NIC0g4K6O4K6k4K6/4K6w?=
=?UTF-8?B?4K+N4K614K6/4K6p4K+I4K6V4K6z4K+B4K6V4K+N4K6V4K+BIOCujuCupOCuv+CusOCvjeCuteCuvw==?=
=?UTF-8?B?4K6p4K+I4K6V4K6z4K+N?=
From: Dr R K Rudhran
To: =?UTF-8?B?4K6V4K+C4K6f4K+N4K6f4K6+4K6e4K+N4K6a4K+L4K6x4K+B?=
Content-Type: multipart/alternative; boundary=00504501572d84b77304838f5500
கூட். ஹாவ் புண்.
sorry i was on tamil mode!
wll what i meant was good have fun..
rv..i rest my faint hopes on you in this gang, but then i am an optimist.
2010/4/6 கூட்டாஞ்சோறு
> *டோண்டு ராகவன்* added a new comment to the post ஹுசேன் – எதிர்வினைகளுக்கு
> எதிர்வினைகள்
> .இதை சரி செய்யும் அளவு எனக்கு கணினி தெரியாது, உங்களுக்குப் புரியும்!
April 9, 2010 at 11:24 பிற்பகல்
ருத்ரன்-அரவிந்தன் நீலகண்டன்-டோண்டு அடித்துக் கொள்வது பின்னூட்டங்களில் என்று எனக்கு இரண்டு நாள் முன்தான் புரிந்தது. அதற்கு முன் டோண்டுவின் பதிவுகளில் தேடிக் கொண்டிருந்தேன்.
100-க்கு மேல் பின்னூட்டம் வந்திருக்கிறது, படிப்பதற்கே அலுப்பாக இருக்கிறது. முழுதாக, சரியாக படிக்காமல் நான் சொல்வது தவறாக இருக்கலாம். அப்படி இருந்தால் மன்னியுங்கள்.
0. டோண்டுவை எனக்கு கொஞ்சம் அதிக நாள் தெரியும். பெரியவர், அனுபவசாலி என்று எனக்கு அவரிடம் மரியாதை உண்டு. டாக்டர் ருத்ரனிடம் எனக்கு அறிமுகம் ஒரு தகராறு மூலம்தான். தகராறு இருந்தும் அவர் என் பதிவுகளைத் தேடி வந்து படித்ததும் மாற்றுக் கருத்துகளையும், இசைவுள்ள கருத்துகளையும் விவாதித்ததும் அவர் நாகரீகம் தெரிந்தவர் என்று எனக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்தி இருக்கிறது. அரவிந்தன் நீலகண்டனை எனக்கு கொஞ்ச நாளாகத்தான் தெரியும். அவருடைய விஷய ஞானம், கூர்மையான அறிவு, அருமையான எழுதும் திறன் எல்லாம் வியக்க வைக்கிறது. மரியாதை இருந்தாலும் மூவருடனும் கருத்து வேறுபாடுகள் உண்டு.
1. டோண்டு ருத்ரனை மன நலமற்றவர் என்று அழைத்திருப்பது தனி மனித தாக்குதலே. ருத்ரனின் கருத்துகள் சாடப்படவில்லை, ருத்ரன் என்ற மனிதர் சாடப்படுகிறார். அதுவும் இப்படி அழைப்பது அவரது தொழிலை பாதிக்கலாம் என்று ருத்ரன் நினைக்க இடமிருக்கிறது. டோண்டுவின் மன்னிப்பும் முழு மனதோடு கேட்கப்பட்டது போல இல்லை.
2. பதிவுலகத்தில் ஒரு பிரச்சினை உண்டு – டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்து பேசுவது போல மிகவும் informal ஆகவும் எழுதலாம், மிகவும் formal ஆகவும் எழுதலாம். டீக்கடையில் informal ஆக பேசும்போது நீ ஒரு மெண்டல் என்று சொன்னால் அது சாதாரணமாகத் தவறாக தெரிவதில்லை. அப்படி திட்டப்பட்டவர் திருப்பி தட்னா தாராந்துருவே என்றாலும் அது பெரிய தவறாகத் தெரிவதில்லை. அதை ஒரு formal context-இல் வைத்துப் பார்த்தால் அது தவறாகத்தான் தெரியும். டோண்டு ருத்ரனை தனிப்பட்ட முறையில் தாக்கி எழுதியதும் ருத்ரன் அதற்கு திருப்பி எழுதியதும் இருவருமே formal context-இல் வைத்துப் பார்க்கிறார்கள் என்று தோன்றுகிறது. இதைப் பெரிதுபடுத்தாமல் இத்தோடு விட்டுவிடுங்களேன்!
3. அரவிந்தன் சொல்வது போல ஈமெயில்கள் மனைவியுடனும் பகிரக் கூடாதவைதான் – அதுவும் confidential என்று எழுதி இருப்பவை பகிரக் கூடாதவைதான். ஆனால் எனக்கும் அரவிந்தன் சொல்வதைப் படிக்கும் முன் இப்படி மனைவிக்கும் ஈமெயில்களை காட்டக்கூடாது என்றெல்லாம் தோன்றியதில்லை.
4 . ருத்ரன் நக்க நாக்கு நீளமா குறைவா என்று எழுதி இருப்பதைப் படிக்க சுருக்கென்று இருக்கிறது. அது எனக்கு அநாகரீகமாகத்தான் படுகிறது. ருத்ரன் இப்படி எழுதி இருப்பார் என்று முதலில் என்னால் நம்பவே முடியவில்லை. ருத்ரன் இது பற்றி என்னவோ சொல்ல முயற்சி செய்திருக்கிறார் (என் தளத்தில்) – அது என்ன என்று எனக்கு புரியவில்லை.
5. சின்ன விஷயம் – பெரிதாக வளர்ந்திருக்கிறது. இத்தோடாவது விட்டுவிடுங்களேன்!
6. இணையத்தில் எழுத என்னைப் பொறுத்த வரை முக்கிய காரணம் – மாற்றுக் கருத்து உள்ளவர்களோடு பேச முடிகிறது, அவர்கள் தரப்பு வாதங்களை கேட்க முடிகிறது. கூடிய வரை கருத்துகளை விமர்சிப்போம்; அடுத்தவர் நாம் சாதாரணமாக எண்ணி எழுதும் ஒன்றை formal context-இல் படித்தால் (ரத்தத்தில் ஊறி இருக்கிறது, genotype, மனநலம் இல்லை, ஜாக்கிரதை!), அவரது viewpoint நமக்கும் சரி என்று பட்டால், நாம் சொன்னதற்கு வருத்தம் தெரிவிப்போம்; முடிந்த வரை பேசுவோமே!
7. டோண்டு அசட்டு தியாகம் பற்றி எழுதி இருந்தார். அது எனக்கு இசைவே. மாற்றுக் கருத்து என்பது வேறு, தவறான அணுகுமுறை பல விவாதங்களில் வெளிப்படுவது என்பது வேறு. தவறான அணுகுமுறையை நீங்கள் பார்த்தால் அதற்கு மேல் பேச முயற்சிக்க வேண்டாம், வேறு வேலையைப் பாருங்கள்!
April 14, 2010 at 9:00 பிற்பகல்
எம்.எஃப். ஹுசேன் பற்றிய சமீபத்திய தகவல்……
எம்.எஃப். ஹுசேன் இந்தியாவிலிருந்து துரத்தியடிக்கப்பட்டார். இப்போது அவருக்கு கத்தாரின் குடியுரிமை கிடைத்திருக்கிறது. பல நூறு கோடிகளை அவருடைய ஓவியம் அவருக்குச் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது. ஒருநாள் கத்தாரில் உலகின் விலை உயர்ந்த கார் ஒன்றை போகிற போக்கில் வாங்கிக் கொண்டு போனதைப் பார்த்து எல்லோருமே மூக்கில் விரலை வைத்திருக்கிறார்கள். உலகின் மிகப் பெரும் கோடீஸ்வர ஷேக்குகள் கூட அந்தக் காரை தவணை முறையில்தான் வாங்குவார்கள். ஆனால் ஹுசைன் மொத்தப் பணத்தையும் கொடுத்து வாங்கியிருக்கிறார்.
ஆனால் இவ்வளவு செல்வம் இருந்தும் மும்பை தெருமுனையில் உள்ள ஒரு டீக்கடையில் ரெண்டு ரூபாய்க்குக் கிடைக்கும் சாயாதான் சொர்க்கம் என்கிறார் எம்.எஃப். ஹுசைன்.
April 15, 2010 at 9:26 பிற்பகல்
ஸ்ரீனிவாஸ், ஹுசேன் பற்றிய தகவலுக்கு நன்றி!