இயக்குனர் பாலசந்தரின் முன்னுரை தொடர்கிறது………

சாவியின் கிராமத்திற்கு ஒரு குறத்தி வருகிறாள். இளம் வயது. வசீகரமான தோற்றம். அவளிடம் பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என்று அவருக்கு ஒரு ஆசை எழுகிறது. அரையணா கொடுத்து பச்சை குத்திக் கொள்கிறார் சிறுவனாய் இருந்த சாவி. இந்த நிகழ்ச்சியை சாவி விவரிக்கும் போது அந்தக் குறத்தியைத் தேடிப்பிடித்து நாமும் பச்சை குத்திக் கொள்ளலாமா என்கிற ஏக்கம் தான் மேலிடுகிறது. இந்த நிகழ்ச்சியின் முடிவில், ‘அவள் போன பிறகு மாம்பாக்கமே ஒளி இழந்த மாதிரி எனக்குப் பட்டது’ என்று அவர் முடித்திருந்த இடத்தில் எனக்கு ஒரு சிறுகதை தெரிகிறது.
‘இரண்டும் கெட்டான் வயதில் செய்து விட்ட அசட்டுத்தனம் ஆயுள் முழுவதும் நிரந்தரமாகி விட்டது’ என்று அவர் குறிப்பிடும்பொழுது ஒரு தத்துவம் நிலைபெறுகிறது.
தன்னுடைய இளம் வயதில் ஊரைவிட்டே ஓடிவிட்ட பையனுக்காக வேண்டிக் கொள்ளும் தந்தை, இவர் திரும்பி வந்ததும் பல வைதீகர்களைக் கூப்பிட்டு சாப்பாடு போட்டுப் பரிகாரம் செய்கிறார். சாப்பிட்டுவிட்டு உட்கார்ந்திருக்கும் ஒரு பெரியவர், ‘அடிக்கடி காணாமல் போய்க் கொண்டிருடா. எங்களுக்கு இது போல் சாப்பாடு கிடைத்துக் கொண்டே இருக்கும் ‘ என்று கூறுகிற கட்டுரையில் நகைச்சுவை மட்டுமல்ல, அவர்களது பொருளாதாரமும் புரிகிறது.

முன்னுரை தொடரும்……
தொடர்புடைய பதிவுகள்:
மார்ச் 30, 2010 at 7:52 மு.பகல்
பத்திரிக்கை எல்லாம் வாங்கி படிப்பது குறைந்து போய் வலையே கதி என்று இருக்கும் என் போன்றே ஆட்களுக்கு இந்த மாதிரி பதிவுகள் சுவையானதாகவும், உபயோகமாகவும் இருக்கும். பயணங்கள்போது படிக்க இந்த புத்தகங்களை வாங்கவும் உதவும்.
மார்ச் 30, 2010 at 5:05 பிற்பகல்
நன்றி விருட்சம் சார்!