இந்த பதிவை எழுத மூன்று காரணங்கள். ஒன்று கிரி என்பவர் எழுதிய ஒரு பதிவு, இரண்டு திருச்சிக்காரன் என் முந்தைய பதிவில் எழுதிய சில பின்னூட்டங்கள், மூன்று டோண்டுவின் ஒரு பதிவு.
ஹுசேன் பற்றி என் நிலை – ஹுசேனுக்கு ஹிந்து கடவுள்களை அவர் இஷ்டப்படி வரைய எல்லா உரிமையும் உண்டு - தெரிந்ததே. டாக்டர் ருத்ரன், ஜெயமோகன் போன்றவர்கள் ஏறக்குறைய இதே நிலை எடுப்பவர்கள். டாக்டர் ருத்ரன் ஓவியர். அவர் ஹுசேனின் ஓவியங்களை ஒரு நிபுணருக்கு மட்டுமே கை வரும் ஆர்வத்துடன் ரசிக்கிறார், எழுதுகிறார். ஜெயமோகன் ஹிந்து மதத்தின் பன்முகத் தன்மையில் இவையும் அடங்கும் என்பதை வற்புறுத்துகிறார்.
பதிவுலகத்தில் இந்த நிலை எடுப்பவர்கள் மைனாரிடிதான். பல தளங்களில் உறுமல்தான் கேட்கிறது. நான் அவ்வப்போது பார்க்கும் தளங்களில் தமிழ் ஹிந்து தளம், டோண்டு, திருச்சிக்காரன் என்று பலரும் எதிர்வினை புரிகிறார்கள். என்ன கொழுப்பு இந்த ஹுசேனுக்கு, முகமதை இப்படி வரைவானா என்று பலரும் குமுறுகிறார்கள். என்ன வரையப்பட்டிருக்கிறது என்பதை விட பலருக்கு வரைந்தது ஒரு முஸ்லிம் ஆயிற்றே என்பதுதான் முக்கியம். ஒரு ஹிந்து வரைந்திருந்தால் என்ன சொல்வார்கள்? டாக்டர் ருத்ரன் இப்படி சில படங்கள் வரைந்திருக்கிறார், அதை என் ஒரிஜினல் பதிவில் பதிக்க அனுமதியும் கொடுத்தார். அதைப் பற்றி ஒரு குரல் – ஒரே ஒரு குரல் – கூட வரவில்லை. அவர்கள் ரேடாரில் இது வரவே இல்லையா, இல்லை ஹிந்து வரைந்தால் அது அவர்கள் மனதை புண்படுத்தாதா என்று தெரியவில்லை. இங்கே அவரது ஓவியங்களை மீள்பதிவு செய்திருக்கிறேன். (டாக்டர் ருத்ரன் பேரை இப்படி firing lineஇல் இழுப்பதற்கு அவர் என்னை மன்னிப்பாராக!)
- கிரியின் முக்கியமான கேள்வி # 1 – ஹுசேனை விமர்சிப்பவர்கள் ஹிந்து வெறியர்களா?
- இல்லை, இல்லவே இல்லை என்று நான் உறுதியாக கருதுகிறேன். ஹுசேன் படம் என் மனதை புண்படுத்துகிறது என்று சொன்னால் ஹிந்துத்வா என்று யாராவது சொன்னால் “போய்ட்டு வா” என்று அனுப்பி விடுங்கள். (ஹிந்துத்வா என்பது எப்படி “கெட்ட” வார்த்தை ஆகிறது? இஸ்லாமியம், கிறிஸ்துவம், பவுத்தம் எல்லாம் கெட்ட வார்த்தையா?)
- உங்கள் அபார்ட்மெண்டில் நீங்கள் உங்கள் சந்தோஷத்தை கொண்டாட மிக அதிக வால்யூமில் பாட்டு வைத்து ஆடிக் கொண்டிருக்கிறீர்கள். இது உங்கள் அபார்ட்மென்ட், உங்களுக்கு கொண்டாட எல்லா உரிமையும் உண்டுதான். ஆனால் ஏதோ ஒரு புள்ளியில் அது அடுத்தவர்களை பாதிக்கத்தான் செய்கிறது. அப்படி பாதிக்கும் புள்ளி என்ன என்பதில் பலருக்கும் கருத்து வேறுபாடு இருக்கலாம், ஆனால் அப்படி ஒரு புள்ளி இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. என்னைப் பொறுத்த வரையில் இந்த விஷயத்தில் அந்தப் புள்ளி ஹுசேனைத் தாண்டி வெகு தூரத்தில் இருக்கிறது. அதனால்தான் இப்படி வரைவது தவறு என்று சட்டம் இருந்தால் அது மாற்றப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதற்காக உங்களுக்கு அந்த புள்ளி பக்கத்தில் இருக்கக் கூடாதா என்ன? எனக்கு காது டமாரம், பாட்டு எவ்வளவு சத்தமாக வைத்தாலும் கேட்பதில்லை என்றால் நீங்களும் செவிடாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
- எனக்கு தெய்வங்கள் உண்மையிலேயே மனித சக்திக்கு அப்பாற்பட்டவை. போயும் போயும் ஒரு மனிதன் தெய்வங்களை அவமானப்படுத்த முடியும் என்று நினைக்கக் கூட முடியவில்லை. பெரியார் பிள்ளையாருக்கு செருப்பு மாலை போட்டு பிள்ளையாரை அவமானப்படுத்துவதோ இல்லை ஹுசேன் சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்து சரஸ்வதியை அவமானப்படுத்துவதோ எப்படி முடியும்? நீங்கள் தெய்வங்கள் மனிதர்களால் அவமானப்படுத்தக் கூடியவை என்று நினைக்கலாம். அப்படி நினைப்பதும், அதனால் ஹுசேனை விமர்சிப்பதும் உங்கள் உரிமை. ஆனால் அவர் மீது வன்முறை என்ற பேச்சே கூடாது, அது சட்ட, நியாய விரோதம். சட்டம் இருக்கிறதாம், அதன்படி நடவடிக்கை எடுங்கள்! (நான் அந்த சட்டம் மாற்றப்பட வேண்டும் என்று நினைப்பவன். ஏனென்றால் கருத்து சுதந்திரம் எனக்கு மிக முக்கியம்.)
- பொதுவாக இந்திய அரசுக்கு இந்த புள்ளி மிக பக்கத்தில் இருக்கிறது. அதனால்தான் இந்த மாதிரி விஷயத்தில் மிக ஜாக்கிரதையாக – முட்டாள்தனமாக, கோழைத்தனமாக – நடந்து கொள்கிறது. அதனால்தான் சல்மான் ரஷ்டியின் புத்தகம் தடை செய்யப்படுகிறது, டாவின்சி கோட் திரைப்படம் தடை செய்யப்படுகிறது. இன்றைக்கு ஹுசேன் செய்ததும் தவறு என்று சட்டமே இருப்பது போல தெரிகிறது. (சும்மா டம்மி கேசா, இல்லை நிஜமாகவே சட்டப்படி ஹுசேன் தண்டனைக்குரியவரா என்று எனக்கு சந்தேகம் உண்டு.)
- இப்படி வரைந்திருப்பது என் மனதை புண்படுத்துகிறது என்று சொல்ல – உங்கள் உணர்வுகளைப் பற்றி நீங்கள் சொல்ல – உங்களுக்கு இல்லாத உரிமையா? தாராளமாக சொல்லுங்கள். அந்த புள்ளி எங்கே இருக்கிறது என்று விவாதியுங்கள். ஆனால் சத்தமாக பாட்டு வைத்திருப்பவரிடம் யப்பா சாமி, கொஞ்சம் வால்யூமை குறைப்பா என்று வேண்டுகோள் விடலாம்; சமூக நிர்பந்தம் மூலம் (கள்ளுக்கடைகளுக்கு எதிராக காந்தி மறியல் செய்யச் சொன்ன மாதிரி) அவரை வீட்டை காலி செய்ய வைக்கலாம். என்ன நீ வீட்டுக்கு திரும்பி வந்தால் ஜெயில், அடிப்போம் என்று பயமுறுத்துவீர்களா? அப்படி செய்வது சரி என்று நினைப்பவர்கள் யாராவது உண்டா? அந்த மாதிரி தண்டனைகள் “குற்றத்துக்கு” appropriateதானா? இப்போது ஹுசேன் கட்டார் குடிமகனாகி இருப்பது ஜெயில், அடி என்ற பயத்தினால்தானே? இவரை பயமுறுத்துவது மட்டும் சரி என்று எப்படி நினைக்கிறீர்கள்? அப்படி செய்பவர்களுக்கும் கட்டைப் பஞ்சாயத்துக்காரர்களுக்கும் என்ன வித்தியாசம்?
- கிரியின் முக்கியமான கேள்வி # 2 – ஹுசேன் படங்கள் கலைக்கண்ணோடு மட்டும் பார்க்க வேண்டியவையா?
- இந்த கலைக்கண், மாலைக்கண்ணோடு எல்லாம் எப்படி பார்ப்பது என்று எனக்கு தெரியாது. ஓவியத்தை பிரஷ் வொர்க், பேப்பர் வழவழ என்று இருக்கிறதா இல்லையா, அது இம்ப்ரஷனிஸ்ட் ஓவியமா இல்லை க்யூபிஸ்ட் ஓவியமா என்று ஒரு expert பார்க்கலாம். எனக்கு அந்த ஓவியம் என்னுள் என்ன உணர்ச்சிகளை எழுப்புகிறது என்பதுதான் முக்கியம். எல்லாரும் அப்படித்தான் பார்க்க வேண்டும் என்று எதிர்பார்த்தால், you will be disappointed.
- திருச்சிக்காரனின் முக்கியமான கேள்வி – பெரும்பாலான மக்கள் மனம் புண்படும் என்று தெரிந்தும் ஏன் ஹுசேன் இப்படி செய்ய வேண்டும்? அவருக்கும் ஒரு சமூகப் பொறுப்பு வேண்டாமா? (அதாவது அபார்ட்மெண்டில் பாட்டு கொஞ்சம் கம்மி வால்யூமில் கேட்க வேண்டும் என்று அவருக்கு தெரிய வேண்டாமா?) அதற்கு காரணம் மத வெறிதானே?
- திருச்சிக்காரன் சொல்வது ஓரளவு நியாயமானதே. நாலு பேர் வாழும் அபார்ட்மென்ட் காம்ப்ளெக்சில் எவனும் இரவு பாட்டை சத்தமாக வைத்துவிட்டு தோம் தோம் என்று ஆடக் கூடாது என்று எதிர்பார்ப்பதில் என்ன தவறு? ஆனால் ஹுசேன் விஷயத்தில் பாதிப்பு tangible இல்லை. மனம் புண்படுகிறது என்பதை காரணமாக வைத்து ஒரு விஷயத்தை தடை செய்தால் அப்புறம் எதையும் யாரும் செய்ய முடியாது. பாமியன் புத்தர் சிலைகள் தாலிபன்காரர்களின் மனதை புண்படுத்தியது, அதனால்தான் அந்த அரிய கலைச் செல்வத்தை உடைத்து எறிந்தார்கள். நாளை ஒரு அறிவுக் கொழுந்து வந்து அஜந்தா ஓவியங்களுக்கு மேலாடை வரையச் சொல்வார். இன்று ஹுசேனை தண்டித்தால் அதுதான் நாளை அவர்களுக்கு precedent ஆக மாறும்.
- ஹுசேன் இந்த படங்களை வரைந்து ஒரு நாற்பது வருஷம் இருக்கும் போலத் தெரிகிறது. இரண்டு மூன்று வருஷமாகத்தான் பலரும் சவுண்ட் விடுகிறார்கள். முப்பது முப்பத்தைந்து வருஷம் பெரும்பாலான மக்கள் ஒன்றும் சொல்லவில்லை என்றால் அவர் என்ன நினைத்திருப்பார்? பெரும்பாலான மக்கள் மனம் நம் ஓவியங்களால் புண்படுகிறது என்றா? இது சும்மா சென்சேஷனுக்காக ஹிந்துக்களை மத அடிப்படையில் ஒன்றாக திரட்ட விரும்பும் அமைப்புகளும், ஊடகங்களும் செயற்கையாக ஊதி பெரிதாக்கி இருக்கும் பிரச்சினை.
- அப்புறம் அவர் என்ன வீடு வீடாகப் போய் தன் படங்களை காட்டிக் கொண்டிருக்கிறாரா? அவர் இருப்பது ஒரு elite உலகம். அங்கே அம்பானிகளும் பச்சன்களும் சோனியாக்களும்தான் வாழ்கிறார்கள். அவர் படம் வரைந்து அது ஒரு புண்ணாக்கு பாதிப்பையும் நம் சாதாரணர் சமூகத்தில் ஏற்படுத்தப் போவதில்லை. கான் திரைப்பட விழா, வெனிஸ் திரைப்பட விழாவில் மட்டுமே திரையிடப்படும் ஆர்ட் ஃபில்ம் மாதிரிதான் அவரது ஓவியங்களும். மிஞ்சி மிஞ்சிப் போனால் ஏதாவது ஒரு புத்தகத்தில் பதித்திருப்பார்கள்.
- நாற்பது வருஷம் முன்னால் வரைந்த படத்துக்கும் அவர் வருத்தம் தெரிவித்திருப்பதாக கேள்விப்பட்டேன். (என் கண்ணில் அவர் அப்படி செய்திருக்கக் கூடாது.) இன்னும் அவரிடமிருந்து நீங்கள் என்னதான் எதிர்பார்க்கிறீர்கள்? அவர் வேறு என்னதான் செய்ய வேண்டும்?
- மேலும் நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியதாகத்தான் இருக்க வேண்டும் என்ற வாதம் சரி இல்லை. ஒரு நூறு வருஷத்துக்கு முன்னால் ஜாதி தவறு என்று ஆயிரத்தில் ஒருவர் நினைத்திருந்தால் சொல்லி இருந்தால் அதிகம். அவர்களும் இப்படி நம் கருத்து பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், அதனால் நாம் சொல்லக் கூடாது, எழுதக் கூடாது, என்று நினைத்திருந்தால் இன்று நம் கதி என்ன?
- டோண்டுவின் கேள்வி # 1 – ஹிட்லரை நிர்வாணமாக வரைந்தது அவனை அவமானப்படுத்தவே என திருவாய் மலர்ந்தருளியுள்ள ஹுசைன் சரஸ்வதி, சீதை, பார்வதி ஆகிய பெண் கடவுளரை வரைந்தது எதில் சேர்த்தி?
- புண்படுத்தும் எண்ணத்தில் வரையவில்லை என்று ஹுசேன் சொல்லி இருக்கிறார். சரஸ்வதியை “அவமானப்படுத்தவும்” அவருக்கு சுதந்திரம் உண்டு. நான் வணங்கும் சரஸ்வதி தெய்வம். தெய்வத்தை மனிதன் அவமானப்படுத்த முடியும் என்று டோண்டு நினைப்பது தெய்வத்தை குறைத்து மதிப்பிடுவது. அவர் சரஸ்வதியை குறைத்து மதிப்பிட்டு என் போன்ற கடவுள் நம்பிக்கை உள்ள ஹிந்துக்களின் மனதை புண்படுத்துகிறார். உண்மையில் அதுதான் சரஸ்வதிக்கு “அவமானம்!”
- டோண்டுவின் கேள்வி # 2 – நிர்வாணமாகக் கூட வேண்டாம், முகம்மதுவின் படத்தை துணியுடன் வரையத் துணிவானா அவன்?
- சம்பந்தமே இல்லாத கேள்வி. முகமதுவை வரைந்தால்தான் சரஸ்வதியை வரைய வேண்டும் என்று டோண்டு புதிய கோட்டா சிஸ்டம் கொண்டு வருகிறார்! அவருக்கு துணிவில்லை என்றே வைத்துக் கொள்வோம். வீரர்களுக்கு மட்டும்தான் கருத்து சுதந்திரம் என்று சொல்ல வருகிறாரா?
- டோண்டுவின் கேள்வி # 3 – முகம்மது பற்றிய ரெஃபரன்ஸ் வந்ததற்கே இஸ்லாமிய ஜிகாதி அமைப்புகள் கலவரம் செய்ய, துண்டைக் காணோம், துணியைக் காணோம் என ஓடி ஒளிந்து அதை நீக்கியவன் இங்கு மட்டும் ஏன் மொண்டித்தனம் செய்ய வேண்டும்?
- இது என்ன என்று தெரியவில்லை. ஹுசேன் ஏதோ முகமதுவின் படத்தை வரைந்து பின்னால் நீக்கி இருக்கிறாரோ என்னவோ. சரி பேட்டை ரவுடிக்கு மாமூல் கொடுத்தாயே எனக்கு ஏன் கொடுக்கவில்லை என்று கேட்கலாமா? அந்த இஸ்லாமிய அமைப்புகளை அடக்குங்கள் என்று டோண்டு பொங்கி இருந்தால் புரிந்து கொள்ளலாம். அவனை மட்டும் அயோக்கியத்தனம் பண்ண விடுகிறாயே, என்னை ஏன் விடுவதில்லை என்று கேட்பது போல அல்லவா இருக்கிறது?
- டோண்டுவின் கேள்வி # 4 – சல்மான் ருஷ்டி விவகாரத்தில் அவருக்கு வந்த மரண மிரட்டலை எங்காவது இவன் எதிர்த்திருக்கிறானா? (முக்கால்வாசி அதற்கு ஆதரவு கூட தெரிவித்திருப்பான்)
- டோண்டுவுக்கும் அவர் நிலை என்ன என்று தெரியாது – எனக்கும் தெரியாது. என்ன, நான் எந்த முன் முடிவுக்கும் போகவில்லை.
- அப்புறம் ஹுசேன் எந்த நிலை எடுத்தால் என்ன? அவர் ரஷ்டி விஷயத்தில் தவறான நிலை எடுத்தால் ஹுசேன் விஷயத்தில் நாம் எல்லோரும் தவறான நிலை எடுக்க வேண்டுமா? ஹுசேன் ரஷ்டி வீட்டில் திருடினால் நீங்கள் ஹுசேன் வீட்டில் திருடுவீர்களா? என்ன லாஜிக் என்றே புரியவில்லையே!
- டோண்டுவின் கேள்வி # 5 – தஸ்லீமா விவகாரத்தில் இவனது நிலைப்பாடு என்ன?
- டோண்டுவுக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது. என்ன நிலைப்பாடாக இருந்தாலும் அது irrelevant.
- டோண்டுவின் கேள்வி # 6 – மேலே உள்ள இரண்டு கேள்விகளுக்கான விடைகள் அவனுக்கு சப்பைக்கட்டு கட்டும் போலி மதச்சார்பற்றவர்களிடமாவது அவர்களை பொருத்து உள்ளனவா?
- நான் மதச்சாற்பற்றவனா இல்லையா என்றெல்லாம் எனக்கு தெரியாது. என்னிடம் விடைகள் இருக்கின்றன, அதை முன்னாலும் எழுதி இருக்கிறேன். சல்மான், மற்றும் தஸ்லிமாவுக்கு, மற்றும் டாவின்சி கோட், மற்றும் முகமதை பற்றி வந்த டேனிஷ் கார்ட்டூன், நாளை யாராவது முகமதை ஓரினச் சேர்க்கையாளராக வரைவது இல்லை மேரியும் ஏசுவும் உறவு கொள்வது போல வரைவது போன்றவற்றுக்கு முழு உரிமை உண்டு. நான் அதை விமர்சிக்கலாம். (ஏசு மேரி உறவு படம் வரையப்பட்டால் நான் அதை நிச்சயமாக கண்டிப்பேன், ஆனால் அப்படி வரைய அவருக்கு முழு உரிமை உண்டு என்று வாதிடுவேன்.)
- தன கேள்விகளுக்கு மாற்று கருத்து கொண்ட யாரும் பதில் சொல்லாமல் நழுவுகிறார்கள் என்று டோண்டு சொல்கிறார். For the record, நான் நிச்சயமாக சொல்லி இருக்கிறேன், டோண்டு அவற்றை படித்துவிட்டு இங்கே எதிர்வினையும் புரிந்திருக்கிறார்.
- டோண்டுவுக்கும் ஒரு கேள்வி: சல்மான், தஸ்லிமா, டாவின்சி கோட் தடை, முகமதைப் பற்றி வந்த டேனிஷ் கார்ட்டூன் ஆகியவற்றில் உங்கள் நிலை என்ன?
- டோண்டுவின் வாதம் மிக சிம்பிளாக: ஹுசேன் தனக்கு ஒரு நியாயம், ஊருக்கு இன்னொன்று என்று நினைக்கும் அயோக்கியன், அதனால் நாம் “நல்லவர்களுக்கு” பார்க்கும் நியாய தர்மத்தை இவருக்கு பார்க்க வேண்டியதில்லை. இந்த நிலை எனக்கு இசைவானதில்லை.
தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்
தொடர்புடைய பதிவுகள்:
ஹுசேனுக்கு ஹிந்து கடவுள்களை அவர் இஷ்டப்படி வரைய எல்லா உரிமையும் உண்டு – ஆர்வி, டாக்டர் ருத்ரன், ஜெயமோகன்
ஹுசேன் செய்தது தவறு – கிரி, டோண்டு, திருச்சிக்காரனின் கருத்துகள் இந்த பதிவின் பின்னூட்டத்தில் இருக்கின்றன.
ஹுசேனின் கட்டார் முடிவு பற்றி ஆர்வி, டாக்டர் ருத்ரன், சோ ராமசாமி

மார்ச் 26, 2010 at 9:49 பிற்பகல்
//தெய்வத்தை மனிதன் அவமானப்படுத்த முடியும் என்று டோண்டு நினைப்பது தெய்வத்தை குறைத்து மதிப்பிடுவது.//
அவர் தெய்வத்தை அவமானப்படுத்த வில்லை. சரஸ்வதியை தெய்வமாக வணங்குபவர்களை அவமானப்படுத்துகிறார். ஒருவரின் சுதந்திரத்தின் எல்லை மற்றவர் சுதந்திரத்தில் குறுக்கிடாத வரையே . ஹுசைன் செய்தது தவறு தான். எப்போதோ வரைந்திருந்தாலும் அந்த ஓவியங்கள் எல்லோருக்கும் தெரியவந்தது சமீபத்தில் தான்
மார்ச் 26, 2010 at 10:17 பிற்பகல்
எது எப்படியானால் என்ன, அந்த சில்லுண்டிப்பயல் போய் ஒழிந்தான், நல்லவேளை.
உங்கள் நிலைப்பாட்டை நான் ஏற்றுக் கொள்ளவில்லை, அவ்வளவுதான்.
உங்கள் ஊரில் நல்லா மழை பொழிகிறதா? நம்மூர் கறிகாய்கள் எல்லாம் கிடைக்கின்றனவா? ஆத்துல எல்லோரும் சௌக்கியமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
மார்ச் 27, 2010 at 2:52 மு.பகல்
to keep track
மார்ச் 27, 2010 at 5:38 மு.பகல்
வணக்கம் RV.
முதலில் நான் ஒன்றை தெரிவித்துக்கொள்கிறேன். நான் ஒரு சாதாரண பொதுமக்களில் ஒருவனாக என் கோபத்தை தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தேன் அதைத்தான் செய்தேன். மற்றபடி இந்து முஸ்லிம் என்ற மதங்கள் என்பதை வைத்தல்ல. இதை ஹீசைன் அல்லாது எவர் வரைந்து இருந்தாலும் இதுவே என் நிலை, அதை என் பதிவிலும் தெளிவாக கூறி உள்ளேன்.
அவர் வரைந்த படங்களை மட்டுமே குற்றம் சாட்டி உள்ளேனே தவிர இதற்காக நான் வேறு எந்த காரணங்களையும் கூறவில்லை, இழுக்கவில்லை. எது எனக்கு தேவையுமில்லை. அதோடு அவ்வாறு எதிர்ப்பு தெரிவித்தால் அவரை மதவாதி என்று கூறுபவர்களை சாடியும் எழுதினேன். எனவே தான் என் பதிவில் கூட நான் வாதமும் புரியவில்லை ஏற்கனவே என் நிலையை தெரிவித்து விட்டதால்.
இப்பவும் நான் கூறுவது ஹீசைன் இந்து கடவுள் படங்கள் என்றில்லை எந்த மத கடவுளை இப்படி வரைந்தாலும் தவறு தான், நான் சம்பந்தப்பட்ட மதம் நான் தினமும் வணங்கும் கடவுள் என்பதால் இதற்கு கோபம் கொஞ்சம் கூடுதலாக இருக்கும், அது மனித இயல்பு. இதை ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். அதன் பெயர் மதவாதம் என்றால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது.. சில சமயங்களில் ஆத்திரம் கூட.
கடவுள் விசயத்தில் மட்டுமே என்னுடைய கருத்து இது, மற்றபடி நான் பல முற்போக்கான எண்ணங்கள் கொண்டவனே! இதை நான் யாருக்கும் விளக்க வேண்டிய அவசியமில்லை, தேவையுமில்லை.
அதே போல எந்த ஒரு விசயத்திற்கும் எதிர் கருத்து என்பது கண்டிப்பாக இருக்கும். அனைவரும் போற்றும் காந்தியின் மீதே பல கடுமையான விமர்சனங்கள் உண்டு. அப்படி இருக்கும் போது எதிர் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும், அவை நாகரீகமாக இருக்கும் பட்சத்தில். நானும் எதிர் கருத்தை மதிக்கிறேன். ஒவ்வொருவரும் அவர்கள் உணர்வுகளை தெரிவிக்க உரிமையுண்டு. அதையே நானும் செய்தேன் மற்றவர்களும் செய்தார்கள்.
அதே போல இந்த விசயத்தில் இதே வேலையாக என்னோட கருத்தை கூறி விவாதம் செய்வது அர்த்தம் அற்றது. ஏன் என்றால் அந்தந்த நிலையில் உள்ளவர்கள் எந்த ஒரு மன மாற்றமும் இல்லாமல் அதே நிலையில் தான் உள்ளார்கள். மாற நினைப்பவர்கள் மட்டுமே மாறுவார்கள். எனக்கும் அந்த விவாதத்தில் கலந்து கொள்ள விருப்பமில்லை எனவே தான் என் கருத்தை அனைத்து இடங்களிலும் கூறவில்லை. அது எனது வேலையுமல்ல.
இந்த பிரச்சனை பற்றி எதிர்ப்பு தெரிவித்தாலே அவர் மத வெறியர் என்கிற ரீதியில் பலர் எழுதினார்கள் அதனால் கடுப்பாகி நீங்கள் குறிப்பிட்டுள்ள என் இடுகையை இட்டேன். அதோடு நான் நிறுத்திக்கொண்டேன். காரணம் இதெல்லாம் எந்த காலத்தில் எத்தனை பேசினாலும் முடிவடையாத பிரச்சனை. இதை பேசிக்கொண்டே இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. எதிர்ப்பு தெரிவிக்க நினைத்தேன் அதை செய்து விட்டேன், அதோடு முடிந்தது. இதை மேலும் இதே வேலையாக பேசிக்கொண்டு விவாதித்துக்கொண்டு இருக்க என்னால் முடியாது. ஒரு சில பிரச்னைக்கு பேசினால் தீர்வு உண்டு ஒரு சிலவற்றிக்கு எப்போதும் தீர்வு கிடைக்காது அதில் மதமும் ஒன்று.
இப்போது கூட நீங்கள் என் பதிவை குறிப்பிட்டு என் பின்னூட்டத்தில் கூறி இருந்ததால் அதற்க்கு மதிப்பு கொடுத்து இங்கே பதிலை பதிவு செய்கிறேன். இல்லை என்றால் நான் இந்த பதிவிலும் எதுவும் கூறி இருக்க மாட்டேன்.
இப்போது எழுதிய என் பதிலுக்கும் பலர் கேள்வி கேட்கலாம் அவர்களுக்கு இப்போது நான் தெரிவித்துகொள்வது என்னவென்றால் ..இதற்க்கு நான் திரும்ப பதில் பின் அதற்கு பதில் என்று தொடரப்போவதில்லை. எனவே என் பதிலை எதிர்பார்க்க வேண்டாம். உங்களுக்கு நான் கூற விரும்புவது, நமது எதிர்ப்பை ஒரு விசயத்திற்கு தெரிவிக்க உரிமையுண்டு அதை ஒருமுறை செய்தால் அதற்கு மதிப்பு இதே வேலையாக செய்து கொண்டு இருந்தால் அதன் மீது மற்றவருக்கு வெறுப்பு தான் வரும் அதே போல நாம் கூறுவதற்கும் மதிப்பு இருக்காது. பின் அது வாதம் என்ற நிலையில் இருந்து மாறி விதண்டாவாதமாக மாறி விடும். இது என் தனிப்பட்ட கருத்து மற்றபடி உங்கள் மனது என்ன கூறுகிறதோ அது போல செய்யுங்கள் நாகரீகமாக. மற்றவர்கள் மனது புண்படாமல் எழுதுவது எதிர் கருத்தை வைப்பது என்பது இயலாத ஒன்று ஆனால் நாகரீகமாக எவரும் தன் எதிர் கருத்தை வைக்கலாம். அது ஆதரித்து என்றாலும் சரி எதிர்த்து என்றாலும் சரி. இது அனைவருக்கும் பொருந்தும்.
நன்றி RV.
மார்ச் 27, 2010 at 7:25 மு.பகல்
தன் மனத்தில் என்ன தோன்றுகிறதோ, அதை செய்வதற்கும் சொல்வதற்கும், எல்லோர்க்கும் உரிமையுண்டு. திரு.ஹுஸைன் அவர்களுக்கு சரஸ்வதியையும் பார்வதியையும் நிர்வாணமாக வரைய வேண்டும் என்று தோன்றினால் அது அவரது தனிப்பட்ட விஷயம். அவர் விருப்பத்துக்கேற்ப வரைந்து தன் வீட்டினுள் மாட்டிக் கொள்ளலாம், அழகு பார்த்து ரசிக்கலாம். எல்லாம் அவரது சுதந்திரம். யாரும் எதுவும் கேட்க முடியாது. ஆனால் அவரது செயல்கள் பிறரை பாதிக்கும் போதோ, மனங்களைப் புண்படுத்தும் போதுதான் பிரச்னை ஏற்படுகிறது. இப்படி வரையப்பட்ட படங்களைக் காட்டி, “பார் என் கலைத் திரனைப் பார்” என்று ஹுஸைன் அதை பப்ளிக் ஆக்கும் போது தான் பிரச்னை உண்டாகிறது.
நீங்கள் சொல்வது போல், போயும் போயும் அற்ப மனிதனா, கடவுளை இழிவு படுத்த முடியும்? அப்படி முடியும் என்றெண்ணுபவர்கள் தான் கடவுளை அவர் சக்தியை இழிவு படுத்துகிறார்கள். ஆனால், ஹுஸைன் இழிவு படுத்தியது கடவுளையல்ல. இறை நம்பிக்கையுள்ள பல மனித மனங்களை. கடவுள் என்றெண்ணி சரஸ்வதியையும் பார்வதியையும் வணங்கும் இந்நாட்டு மக்களுக்கு இப்படி அந்த தெய்வ ரூபங்களை நிர்வாணமாகக் காட்டினால் கோபம் வருமா வராதா? அப்படி வரும் கோபத்தை நீங்கள் மதவெறி என்று கூறுவீர்களா? இதே ஹுஸைன் காந்தியை நிர்வாணமாக வரைந்தால், ஹுஸைனுக்கு ஆதரவு தெரிவிப்பர்கள் இதே நிலையை எடுப்பார்களா? இந்தக் கேள்வி தேவையில்லாதது தான்.ஆனாலும் கேட்கத் தோன்றுகிறது.
என் அபார்ட்மெண்டில் நான் தனிமையில் இசை கேட்பது என் தனிப்பட்ட விஷயம். அது அக்கம்பக்கத்திலிருப்பவரை பாதிக்காத வரையில். அது போல் தான் ஹுஸைன் செய்ததும். சரஸ்வதியை நிர்வாணமாக வரைவதும்.
நன்றி,
விஜய்
மார்ச் 27, 2010 at 7:26 மு.பகல்
தெளிவான இடுகைக்கு நன்றி.
அருமையான சிந்தனைகள்!
மார்ச் 27, 2010 at 10:03 மு.பகல்
you wasted time to reply to that sillundi payal dondu.. !
see the way he links and twist many things in his post..! he is also a sillundi payal as equivalent as MFH
மார்ச் 27, 2010 at 3:02 பிற்பகல்
sounds like Dondu will be very happy if hussain drew allah, jesus in nudity along with saraswathi..
his worry is not that he drew sara and parvi in nudity.. but he didnt draw jesu, allah …!
at this age , without any maturity.. he sounds to be more SILLUNDI PAYAL than anyone.!
மார்ச் 27, 2010 at 4:07 பிற்பகல்
//நான் அதை விமர்சிக்கலாம். (ஏசு மேரி உறவு படம் வரையப்பட்டால் நான் அதை நிச்சயமாக கண்டிப்பேன், ஆனால் அப்படி வரைய அவருக்கு முழு உரிமை உண்டு என்று வாதிடுவேன்.)
தன கேள்விகளுக்கு மாற்று கருத்து //
அடேங்கப்பா,அப்பேற்பட்ட மூஞ்சியா நீங்க?வாழ்த்துக்கள்.
மார்ச் 27, 2010 at 4:37 பிற்பகல்
கிரி, விஜய்,
நீங்கள் இருவரும் அருமையான கருத்துக்களை முன்வைத்திருக்கிறீர்கள். மிகவும் நன்றி.
மார்ச் 27, 2010 at 4:55 பிற்பகல்
பதில் எழுதிய அனைவருக்கும், குறிப்பாக கிரிக்கு நன்றி!
கிரி, இங்கே ஹுசேன் உட்பட எல்லாருமே சாதாரண பொது மக்கள்தானே? உங்கள் பதிவு, வாதங்கள், பேசப்பட வேண்டியவை என்பதற்காகத்தான் நானும் என் கருத்தை எழுதுகிறேன். மற்றபடி நானும் முற்போக்கானவந்தான் என்று எழுதி இருக்கிறீர்கள். ஹுசேனின் ஓவியங்கள் என் மனதை புண்படுத்துகின்றன என்று சொல்பவர்கள் பிற்போக்குவாதிகள் இல்லை என்று நான் உறுதியாக கருதுகிறேன். இது மனம் புண்பட்டவர்களுக்கு என்ன வழி இருக்கிறது என்பதில் விளையும் கருத்து வேறுபாடு மட்டுமே.
ஆனால் நான் கருத்து வேறுபாடுகள் பேசி பேசித்தான் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று நினைப்பவன். அது விதண்டாவாதம் ஆகும் அபாயம் இருக்கத்தான் செய்கிறது, ஆனால் அதை விட சிறந்த வழி இது வரை எனக்குத் தெரியவில்லை.
மதன்/தீபக், எப்படி டோண்டு ஹுசேனை சில்லுண்டி பயல் என்று அழைப்பது எனக்கு இசைவில்லையோ அதே போல் நீங்கள் இருவரும் டோண்டுவை சில்லுண்டி என்று அழைப்பதும் இசைவில்லை.
ஜெயலக்ஷ்மி, உங்கள் பாராட்டுக்கு நன்றி!
விஜய், பாதிப்பு என்பது மன அளவில் மட்டும் இருக்கும்போது அது தண்டிக்கக் கூடியதல்ல என்பது என் கருத்து. பாதிப்பு tangible ஆக இருந்தால் மட்டுமே சட்டம் வர முடியும் என்று நான் உறுதியாக கருதுகிறேன். அப்படி இல்லாவிட்டால்: குட்டை பாவாடை அணிந்து விளையாடும் சானியா மிர்சா முல்லாக்களை பாதிக்கிறார். பப்பில் மது அருந்தும் பெண் முத்தாலிக்கை பாதிக்கிறார். பூணூல் அணியும் அர்ச்சகர் வீரமணியை பாதிக்கிறார். தொப்புளில் வளையம் அணிந்து வரும் இளம் பெண் கிழவரை பாதிக்கிறார். முல்லாவும் முத்தாலிக்கும் வீரமணியும் கிழவரும் அடுத்தவர் என்னை பாதிக்காத முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று வாதிடுவது போலாகிவிடும்.
விஜய் மற்றும் ரவி, அவமானம் சரஸ்வதிக்கல்ல, பக்தர்களுக்குத்தான் என்று நீங்கள் சொல்வது சரிதான்.
டோண்டு, இதில் நமக்குள் எதிர்நிலை என்பது தெரிந்ததுதான். உங்கள் கேள்விகளுக்கு யாரும் பதில் சொல்லாமல் நழுவுகிறார்கள் என்று நீங்கள் குரிப்பிட்டதாலும், சல்மான் ரஷ்டி, தஸ்லிமா நஸ்ரீன் போன்ற பிரச்சினைகளில் உங்கள் கருத்தை தெரிந்து கொள்ளவும்தான் இதை எழுதினேன். மற்றபடி இங்கே இப்போதுதான் வசந்த காலம். பூக்கள் பூத்துக் கொண்டிருக்கின்றன.
மார்ச் 27, 2010 at 6:26 பிற்பகல்
//பதிவுலகத்தில் இந்த நிலை எடுப்பவர்கள் மைனாரிடிதான்.//
அந்த வட்டத்துக்குள் நானும் ஒருவன்.
எனது இடுகையான ஹுசைனின் தேச துறவறம்
காண்க.
http://parvaiyil.blogspot.com/2010/03/blog-post.html
எனது மனநிலையை பிரதிபலிக்கும் உங்கள் இடுகைக்கு பாராட்டுக்கள்.
கிரியின் இடுகை ஒரு சாதாரண வாசகனின் மனநிலையிலிருந்து எழுதப்பட்டது.என்று அவரே கூறுகிறார்.
டோண்டுவின் நிலை ஊர் அறிந்தது.காய்கறி நலம் விசாரித்து விட்டு உங்கள் கேள்வியிலிருந்து நழுவிக் கொண்டார்:)
திருச்சிகாரனுக்கு நீங்கள் இட்ட “இது சும்மா சென்சேஷனுக்காக ஹிந்துக்களை மத அடிப்படையில் ஒன்றாக திரட்ட விரும்பும் அமைப்புகளும், ஊடகங்களும் செயற்கையாக ஊதி பெரிதாக்கி இருக்கும் பிரச்சினை.” என்பதுடன் பி.ஜே.பி.பஜ்ரங்க் தள் இந்துத்துவாக்களே இதன் மூல காரணகர்த்தாக்கள் எனலாம்.
ஓவியத்தை ஓவியமாக மட்டும் பார்க்காத மனநிலையில் உருவ வழிபாடுகளில் இந்துக்கள் நம்பிக்கை கொண்டுள்ளதால் காலப்போக்கில் ஹுசைனின் ஓவியங்கள் கூட இறைவனாகும் எதிர்கால சாத்தியங்களை ஓவியத்தை எதிர்ப்பவர்கள் கொண்டு வருகிறார்கள்.அந்த மனநிலை இப்பொழுதே அடிமனத்தில் ஆழ்ந்து போவதும் எதிர்வினைகளால் தெரிகிறது.
மார்ச் 27, 2010 at 6:29 பிற்பகல்
‘கடுகு’ அவர்கள் பற்றி தெரிந்து கொள்ள அவர்கள் பதிவில் இருந்த உங்கள் பின்னூட்டம் வழி இங்கு வந்தேன்.
வந்த இடத்தில் இதை பார்க்க நேர்ந்து விட்டதால், இதோ என் கருத்தும்
போகிற போக்கில் பிள்ளையார் கோவில் தென்பட்டால் அன்னிச்சையாக கன்னத்தில் போட்டுக் கொண்டு, ராம நவமியும், திருவாதிரையும் கழிந்து 3 நாள் கழித்து முடிஞ்சிடுத்தா என்று கேட்கும் ஒரு சராசரி (இப்படி சொது கூட அதிகம் தான் ) இந்துவான எனக்கு
இந்த ஓவியக் கோடுகளை பற்றிய பல பதிவுகள் பார்த்ததில் தோன்றுவது,
40 வருடம் முன் வரைந்தது, தனிப் பட்ட ஒருவருக்காக வரைந்தது, இது கலை என்று சொல்லும் ஆதரவாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் பொதுவாக நியாயத்துக்கு எடுத்துக் கொண்டது ஆயிரம் வருடங்களுக்கும் மேலான பழமையான சிற்பங்கள். இது கலை எனும் ஓவியர்களுக்கு அல்லது கலா ரசிகர்களுக்கு சிற்பங்கள் மட்டும் வேறு மாதிரி தெரிந்ததுஏனோ
எனது 13 வயது மகனை இந்த சிற்பங்களின் வெகு அருகில் அழைத்து சென்று அதன் நுணுக்கமான வேலைப்பாடுகளைப் பார் என்று சொல்லும் போது எந்த சங்கோஜமும் எனக்கு இருந்ததில்லை. ஆனால் அதே சிறுவனிடம் நீ வணங்கும் தெய்வம் இதோ இந்த ஓவியத்தில் என்று காட்ட என்னால் இயலுமா என்பது தான்இதன் striking difference.
இந்த ஓவியங்கள் ஆண் பெண் வித்தியாசங்களை சில வளைவுகள் மூலமே தீர்மானிப்பதால் அங்கே அவை மட்டுமே தெரிகிறது. கையில் வீணை, அல்லது சூலம், அல்லது தாமரை போன்ற கோடுகளிட்டு, அதற்கு தெய்வங்கள் என்று பெயரிடுவது ஏன்.
மேலும், ஹுசைனை அவர் மதம் காரணமாக எதிர்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டு
இந்த அதரவு, அதரவு ஆதரவாளர்கள் எல்லாம் ஹுசைனை ஆதரிக்க விரும்பியதை விட இதை இந்து மத நம்பிக்கைகளின் மேல் ஒரு கடுமையான விமர்சனம் அவர்கள் பாணியில் வைக்கும் வாய்ப்பாக பயன்படுத்தியது தான் உண்மை என்று எனக்கு தோன்றுகிறது.
http://www.virutcham.com
மார்ச் 27, 2010 at 6:59 பிற்பகல்
மற்ற ஹுசைன் ஆதரவாளர்கள் போல ஆபாசமாகவும் கண்மூடித்தனமாகவும் இல்லாமல் தனது கருத்தினை சிறப்பாக வெளிப்படுத்தியதற்கு பாராட்டுக்கள்!
என்னைப் பொறுத்த வரை ஹுசைனின் ஹிந்து மதக் கடவுளர் ஓவியங்கள் அழகியல் நோக்கத்துடன் மட்டுமே உருவாக்கப் பட்டவை அல்ல என்பதை மறுப்பது கடினம். அவை நேரடி நோக்கில் கருத்தியல் ஓவியங்களாகவே தோன்றுகின்றன. மாற்று மதம் சார்ந்த கருத்துக்களை வெளிப்படுத்த அவருக்கு உரிமை இருக்கின்றது என்று வாதிடும் பலரும் அவரின் நோக்கங்களை விமரிசிக்கும் உரிமை மற்றவர்களுக்கும் இருக்கின்றது என்பதை ஒப்பு கொள்ள மறுப்பது விசித்திரமாக உள்ளது. ஏதோ சில மதவாதிகள் அவர் மீது வன்முறையை ஏவி விட்டதால், அவருடைய தவறுகளை ஒட்டுமொத்த சமூகமும் கண்டுகொள்ளாமல் விட்டு விட வேண்டும் என்பதும் எனக்கு நியாயமாக படவில்லை.
என்னைப் பொறுத்த வரை இந்தியாவின் இருண்ட பக்கங்களை (அவை உண்மையாகவே இருந்தாலும்) உலக சந்தையில் கூவி கூவி விற்பவர்கள் (அவர்கள் எவ்வளவு பெரிய திறமைசாலிகளாக இருந்தாலும்) இந்தியாவால் புறக்கணிக்கப் படவேண்டியவர்களே.
நன்றி!
மார்ச் 27, 2010 at 9:11 பிற்பகல்
As I am not sure if my prev comment got reserved,
‘கடுகு’ அவர்கள் பற்றி தெரிந்து கொள்ள அவர்கள் பதிவில் இருந்த உங்கள் பின்னூட்டம் வழி இங்கு வந்தேன்.
வந்த இடத்தில் இதை பார்க்க நேர்ந்து விட்டதால், இதோ என் கருத்தும்
போகிற போக்கில் பிள்ளையார் கோவில் தென்பட்டால் அன்னிச்சையாக கன்னத்தில் போட்டுக் கொண்டு, ராம நவமியும், திருவாதிரையும் கழிந்து 3 நாள் கழித்து முடிஞ்சிடுத்தா என்று கேட்கும் ஒரு சராசரி (இப்படி சொல்வது கூட அதிகம் தான் ) இந்துவான எனக்கு
இந்த ஓவியக் கோடுகளை பற்றிய பல பதிவுகள் பார்த்ததில் தோன்றுவது,
40 வருடம் முன் வரைந்தது, தனிப் பட்ட ஒருவருக்காக வரைந்தது, இது கலை என்று சொல்லும் ஆதரவாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் பொதுவாக நியாயத்துக்கு எடுத்துக் கொண்டது ஆயிரம் வருடங்களுக்கும் மேலான பழமையான சிற்பங்கள். இது கலை எனும் ஓவியர்களுக்கு அல்லது கலா ரசிகர்களுக்கு சிற்பங்கள் மட்டும் வேறு மாதிரி தெரிந்ததுஏனோ
எனது 13 வயது மகனை இந்த சிற்பங்களின் வெகு அருகில் அழைத்து சென்று அதன் நுணுக்கமான வேலைப்பாடுகளைப் பார் என்று சொல்லும் போது எந்த சங்கோஜமும் எனக்கு இருந்ததில்லை. ஆனால் அதே சிறுவனிடம் நீ வணங்கும் தெய்வம் இதோ இந்த ஓவியத்தில் என்று காட்ட என்னால் இயலுமா என்பது தான்இதன் striking difference.
இந்த ஓவியங்கள் ஆண் பெண் வித்தியாசங்களை சில வளைவுகள் மூலமே தீர்மானிப்பதால் அங்கே அவை மட்டுமே தெரிகிறது. கையில் வீணை, அல்லது சூலம், அல்லது தாமரை போன்ற கோடுகளிட்டு, அதற்கு தெய்வங்கள் என்று பெயரிடுவது ஏன்.
மேலும், ஹுசைனை அவர் மதம் காரணமாக எதிர்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டு
இந்த அதரவு, அதரவு ஆதரவாளர்கள் எல்லாம் ஹுசைனை ஆதரிக்க விரும்பியதை விட இதை இந்து மத நம்பிக்கைகளின் மேல் ஒரு கடுமையான விமர்சனம் அவர்கள் பாணியில் வைக்கும் வாய்ப்பாக பயன்படுத்தியது தான் உண்மை என்று எனக்கு தோன்றுகிறது.
http://www.virutcham.com
மார்ச் 27, 2010 at 9:42 பிற்பகல்
மேக்ஸிம் இந்தியாவை வழிமொழிகிறேன். கிரியின் பதிவில் நிறைய பின்னூட்டமிட்டிருக்கிறேன். ஆர்வி உங்களின்நிலை நேர்மையானது.வரைவது அவரது உரிமை என்பதில் எனக்கும் உடன்பாடுண்டு, ஆனால் அவர் நேர்மையான கலைஞராக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் ஹூசேனை மட்டும் தீவிரமாக ஆதரித்து மற்றவர்கள் பாதிக்கப்படும்போது அமைதியாக இருக்கும் போலி செக்யூலரிஸ்டுகளை நிலை, ஹூசேனின் கலையைப் போன்றே வியாரபாத்தன்மை வாய்ந்தது.
மார்ச் 28, 2010 at 10:45 மு.பகல்
எனது எதிர்வினையை நான் 3 விதமாக பதிவிட்டு இருக்கிறேன்.
கீழ்கண்ட தலைப்புகளில்,
கலைஞனும் கருத்துச் சுதந்திரமும்
பென்சில் கோடுகள் கோவில் சிற்பங்களோடு ஒப்பிடத்தக்கதா?
என் தெய்வம் அவமானப் படுத்தப் படுகிறதா ?
மார்ச் 28, 2010 at 1:15 பிற்பகல்
\\விஜய், பாதிப்பு என்பது மன அளவில் மட்டும் இருக்கும்போது அது தண்டிக்கக் கூடியதல்ல என்பது என் கருத்து. பாதிப்பு tangible ஆக இருந்தால் மட்டுமே சட்டம் வர முடியும் என்று நான் உறுதியாக கருதுகிறேன். \\
வாதத்தை திசை திருப்புகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். இருந்தாலும் கேட்கிறேன்.
அப்போது ஒருவர் மனம் புண்படுவது போல் என்ன வேணா செய்யலாம், அதைக் கேட்காமல் போகவேண்டும் என்று சொல்கிறீர்களா? சட்டமும் ஒன்றும் செய்யக் கூடாது என்கிறீர்களா?
பிரச்னை என்ன என்றே பாதிபேர் ஒப்புக்கொள்ள மாட்டிகிறார்கள். வரைந்தவர் இஸ்லாமியர், வரையப்பட்டது இந்துக்கடவுள்கள். அதனால் தான் இவ்வளவு கொந்தளிப்பு. மற்ற மதத்தில் நம்பிக்கையுள்ளவர்களின் மனத்தை புண்படுத்தினால் அவர் இந்நேரம் உயிருடன் இருப்பதே கேள்விக்குறியான விஷயம்.
மார்ச் 29, 2010 at 10:26 பிற்பகல்
மதன், டோண்டுவை சில்லுண்டி என்றெல்லாம் சொல்ல உண்மையில் விருப்பமில்லை என்று தெளிவுபடுத்தியதற்கு நன்றி! PA …..M என்றால் என்ன?
விஜய், // அப்போது ஒருவர் மனம் புண்படுவது போல் என்ன வேணா செய்யலாம், அதைக் கேட்காமல் போகவேண்டும் என்று சொல்கிறீர்களா? சட்டமும் ஒன்றும் செய்யக் கூடாது என்கிறீர்களா? // சட்டம் ஒன்றும் செய்யக் கூடாது என்று உறுதியாக கருதுகிறேன். மனம் புண்படுவது என்பதை யார் தீர்மானிப்பது? இந்த விஷயத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் மனம் புண்படுகிறது, என் மனம் புண்படவில்லை. இருவரும் (உங்கள் விஷயத்தில் யூகிக்கிறேன்) கடவுள் நம்பிக்கை உள்ள ஹிந்துக்கள்தான். என்ன செய்யலாம்? ரோட்டில் ஒருவன் உங்களைப் பார்த்து வீட்டில சொல்லிக்கிட்டு வந்துட்டியா சாவுகிராக்கி என்று ஆரம்பித்து கன்னா பின்னா என்று கத்துகிறான் – உங்களுக்கு சட்டப்படி நிவாரணம் உண்டா?
பர்சனலாக, சட்டத்தை மீறாத வகையில் (அடிக்காதீர்கள், வீட்டின் மேல் கல் எறியாதீர்கள் etc.) உங்கள் எதிர்ப்பைக் காட்டுங்கள். என் மனம் புண்படுகிறது என்று கூரையில் ஏறிக் கூவுங்கள். கருத்து சுதந்திரம், கலைக்கண் என்று சொல்லிக் கொண்டு இந்த ஆள் சமூகத்தில் குழப்பம் உண்டாக்குகிறான் என்று எழுதுங்கள். ஹுசேனின் படத்தை, பிற படங்களை வாங்காதீர்கள் என்று ஒரு சத்யாகிரகம் ஆரம்பியுங்கள். அவருக்கு உரிமை உண்டு என்பதை அங்கீகரியுங்கள். அந்த உரிமையை அவர் துஷ்பிரயோகம் செய்கிறார் என்று நினைத்தால் அதைப் பற்றி பேசுங்கள். ஆனால் நீங்கள் சொன்னது போல இங்கே பெரும்பாலும் ஒரு முஸ்லிம் எப்படி வரையலாம் என்று கேள்வி எழுப்பப்படுகிறது. அவர் ஜெயிலுக்கு போக வேண்டும், நாடு கடத்தப்பட வேண்டும் என்று குமுறுகிறார்கள். இதே தளத்தில் டாக்டர் ருத்ரன் வரைந்த நிர்வாண சரஸ்வதி படத்தை நானும் மீண்டும் மீண்டும் பதிக்கிறேன், அதைப் பற்றி நீங்கள் உட்பட ஒருவரும் கேள்விக் கேட்கவில்லை. மன்னிக்கவும், இங்கே உள்ள குமுறல்கள் படத்தைப் பற்றி இல்லை, படம் வரைந்தவரின் மதத்தைப் பற்றி மட்டுமே என்று எனக்கு இது உறுதிப்படுத்துகிறது.
நான் எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் என்பதை உறுதியாக நம்புபவன். எனக்கு கருத்துதான், படம்தான் முக்கியம். படம் வரைந்தவன் ஹிந்துவா, முசல்மானா, ஆணா, பெண்ணா, குள்ளமா, உயரமா, வழுக்கையா, நீள முடியா என்றெல்லாம் நான் பொதுவாக கவலைப்படுவதில்லை. அப்படி கவலைப்படுவது தவறான அணுகுமுறை என்று உறுதியாகக் கருதுகிறேன்.
// மற்ற மதத்தில் நம்பிக்கையுள்ளவர்களின் மனத்தை புண்படுத்தினால் அவர் இந்நேரம் உயிருடன் இருப்பதே கேள்விக்குறியான விஷயம். //
அது மற்ற மதத்தின் குறை. அடுத்தவரிடத்தில் இருக்கும் நல்ல விஷயத்தை எடுத்துக் கொள்வோம், குறை இல்லையே என்று என்ன கவலை?
மார்ச் 28, 2010 at 3:23 பிற்பகல்
i really do not wish to use this word SILLUNDI for DONDU.. but the way he wrote in his post about hussain made me to say like this.. !
DONDU doesnt have maturity for his age..! that is for SURE! or .. he is doing this cos of his PA…………..M attitude.. let us ignore him..
மார்ச் 29, 2010 at 10:48 பிற்பகல்
விருட்சம், நீங்கள் சொன்ன மூன்றில் “கலைஞனும் கருத்துச் சுதந்திரமும்” எங்கே என்று தெரியவில்லை. “பென்சில் கோடுகள் கோவில் சிற்பங்களோடு ஒப்பிடத்தக்கதா?” பதிவில் இல்லை என்று வாதிடுகிறீர்கள். ஏன் இல்லை என்று கருதுகிறீர்கள் என்பதே புரியவில்லை. அதைப் பற்றி நீங்கள் விளக்கவில்லையா, இல்லை எனக்குத்தான் புரியவில்லையா என்று தெரியவில்லை.
“என் தெய்வம் அவமானப் படுத்தப் படுகிறதா ?” பதிவில் நீங்கள் சொல்வது போல இது பக்தர்களுக்குத்தான் பிரச்சினை, கடவுளுக்கு இல்லை. ஆனால் அதில் நீங்கள் சொல்லி இருக்கும் மிச்சத்திற்கும் ஹுசேன் பிரச்சினைக்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை.
// எனது 13 வயது மகனை …// நிர்வாண சரஸ்வதி படத்தை என் 11 வயது பெண்ணிடம் காட்ட, வழிபடச் சொல்ல எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால் சிங்கத்தின் மீது அமர்ந்துகொண்டு வாலை காலுக்கு நடுவில் இழுத்து பின்பக்கமாக கொண்டு வந்திருக்கும் துர்க்கை படத்தை காட்ட வருஷங்களாகும் என்பதை ஒத்துக்கொள்கிறேன்.
குடுகுடுப்பை, // ஆர்வி உங்களின்நிலை நேர்மையானது.வரைவது அவரது உரிமை என்பதில் எனக்கும் உடன்பாடுண்டு, ஆனால் அவர் நேர்மையான கலைஞராக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் ஹூசேனை மட்டும் தீவிரமாக ஆதரித்து மற்றவர்கள் பாதிக்கப்படும்போது அமைதியாக இருக்கும் போலி செக்யூலரிஸ்டுகளை நிலை, ஹூசேனின் கலையைப் போன்றே வியாரபாத்தன்மை வாய்ந்தது. //
உங்கள் பாராட்டுக்கு நன்றி! ஹுசேனை ஆதரித்து டாவின்சி கோட் திரைப்படத்தை தடை செய்பவர்கள் சரியான hippocrites என்பதில் எனக்கும் எந்த சந்தேகமும் இல்லை.
மாக்சிமம் இந்தியா, உங்கள் பாராட்டுக்கு நன்றி! அவரை விமர்சிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு, ஆனால் அவரை வன்முறையால் தாக்கும் உரிமை எவருக்கும் இல்லை என்று உங்களைப் போலவே நானும் எண்ணுகிறேன். // அவருடைய தவறுகளை ஒட்டுமொத்த சமூகமும் கண்டுகொள்ளாமல் விட்டு விட வேண்டும் என்பதும் எனக்கு நியாயமாக படவில்லை. // அவர் எந்தத் தவறும் செய்யவில்லை என்பது என் நிலை. ஆனால் அவர் செய்தது பலருக்கும் தவறாகத் தெரியலாம் என்பது உண்மைதான்.
// இந்தியாவின் இருண்ட பக்கங்களை (அவை உண்மையாகவே இருந்தாலும்) உலக சந்தையில் கூவி கூவி விற்பவர்கள் (அவர்கள் எவ்வளவு பெரிய திறமைசாலிகளாக இருந்தாலும்) இந்தியாவால் புறக்கணிக்கப் படவேண்டியவர்களே. // நான் உங்களிடமிருந்து மாறுபடுகிறேன். இருண்ட பக்கங்கள் மாற்றப்பட வேண்டும் என்பதில் நாம் உடன்படுவோம் என்று நினைக்கிறேன். உண்மையை சொல்வதற்கு யாரும் தயங்க வேண்டாம் என்பது என் நிலை. மேலும் அப்படி கூவி கூவி விற்பது இருண்ட பக்கங்களை சீக்கிரமாக மாற்றும்படி நம் மீது அழுத்தத்தை உண்டாக்குகிறது. அது வரவேற்க வேண்டியது என்று நான் கருதுகிறேன்.
ராஜ நடராஜன், ஹுசேன் பற்றி நிறைய எழுதியாயிற்று, போதும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நீங்கள் இப்படி அருமையாக பதிவு எழுதி அதைப் பற்றி இன்னொரு பதிவு எழுதும்படி செய்கிறீர்களே!
டாக்டர் ருத்ரனின் சமீபத்திய பதிவு ஒன்றையும் படித்துப் பாருங்கள் – http://rudhrantamil.blogspot.com/2010/03/blog-post_23.html
மார்ச் 30, 2010 at 6:00 மு.பகல்
I am happy that you have attempted to read my work. I just left the title name here earlier bcoz of my some recent changes the link appear too big. I noticed the same in yours too. I searched for the old link and here it is,
கலைஞனும் கருத்துச் சுதந்திரமும் link
http://www.virutcham.com/?p=824
பென்சில் கோடுகள் கோவில் சிற்பங்களோடு ஒப்பிடத்தக்கதா?
http://www.virutcham.com/?p=1004
Whatever I wrote I did not target hussain. My request was aimed at the people who support his work unconditionally and biased. For me the so called controversial arts by hussain need not be justified comparing our temples and traditions. Above all many people viewed these silpas in a different view much mean than what was done by hussain.
என் தெய்வம் அவமானப் படுத்தப் படுகிறதா ? this just about who a common hindu is. We need to consider these things and how some conroversies might affect a common man, and intellectuals have to be cautious what we say and what we discuss, blog crowd can’t be expected as high intellects. Some thing may trigger some thing. This applies to all religion. The harmony between people of various sects is tarnished.
//வரைந்த நிர்வாண சரஸ்வதி படத்தை நானும் மீண்டும் மீண்டும் பதிக்கிறேன், அதைப் பற்றி நீங்கள் உட்பட ஒருவரும் கேள்விக் கேட்கவில்லை.//
My answer is common about this for any one. இந்த ஓவியங்கள் ஆண் பெண் வித்தியாசங்களை சில வளைவுகள் மூலமே தீர்மானிப்பதால் அங்கே அவை மட்டுமே தெரிகிறது. கையில் வீணை, அல்லது சூலம், அல்லது தாமரை போன்ற கோடுகளிட்டு, அதற்கு தெய்வங்கள் என்று பெயரிடுவது ஏன். I know your answer would be its their right. So why to talk about it.
I don’t support violence or punishment against hussain . After all he hasn’t done anything worse than what our own people false-god men and the cinemas taken in the name of God.
But I feel sorry for people trying to project themselves as secularist and to maintain that they try to tarnish hindus and their beleives. Secular means secular which should include all.
A request. If you next time visit virutcham pls write your comment there. I will be very happy to read it. I don’t expect you to accept whatever I said.
மார்ச் 30, 2010 at 6:20 மு.பகல்
to be frank, more than what hussain painted or the support for him what was more uncomfortable to me was “ravivarma ungalukku ravikkai varainthu koduthana…”
This totally deviates every thing told by and the lastest post post you have mentioned is of the same nothing new. I beleive there is no need for such explanation for a Hindu who views his God as God either in uruvam or aruvam or dressed or non dressed.
This explanations may help the crowd who see it differently to see even more differently.
Many people including Dondu have not accepted husaain mainly questioning his honesty. When someone say he has drawn others well clothed, we shouldn’t be responding “do u want to see everyone nude”
Bcoz this statement is placed to expect others to view things from your shoes and from others shoes.
See this “http://sunmarkam.blogspot.com/2010/03/mfhussain.html” to know how people of other relegion view it. Hussain is questioned bcoz people of his relegion see it that way not that a true Hindu see it that way. I don’t mean all belonging to a different relegion always see it diff. Chances are more.
மார்ச் 30, 2010 at 8:14 மு.பகல்
மற்றபடி இங்கே இப்போதுதான் வசந்த காலம். பூக்கள் பூத்துக் கொண்டிருக்கின்றன.
ஓ!
எல்லா பூக்களுக்கும் நறுமணம் இருப்பதில்லை.