ஹுசேன் இப்போது கட்டார் குடிமகன் ஆகிவிட்டாராம். இதைப் பற்றி யோசித்தால்:
ஹுசேனுக்கு அவர் நினைத்ததை வரைய முழு உரிமையும் உண்டு என்ற நிலை எடுப்பவன் நான். அவர் சரஸ்வதியை நிர்வாணமாக வரையலாம், முகமதை ஓரினச்சேர்க்கையாளராக வரையலாம், அவர் இஷ்டம் அவர் சவுகரியம். அது bad taste என்று நானும் நீங்களும் நினைக்கலாம். But bad taste is not a crime.
அது உங்கள் மனதை புண்படுத்தினால் நீங்களும் தாராளமாக இப்படி வரையாதீர்கள் என்று வேண்டுகோள் விடுக்கலாம். அவர் வீட்டின் முன்னால் சத்யாகிரகம் கூட செய்யலாம். சட்டம் இடம் கொடுத்தால் அவர் மேல் கேஸ் கூட போடலாம். ஆனால் இறுதி முடிவு அவருடையது என்பதை உணர வேண்டும். அவரை இப்படித்தான் வரைய வேண்டும், இப்படி எல்லாம் வரையக் கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை.
சட்டம் இடம் கொடுத்தால் கேஸ் போடலாம். ஆனால் அப்படிப்பட்ட சட்டங்கள் தவறானவை. மாற்றப்பட வேண்டியவை. இதை இப்படியே விட்டால் நாளை BT கத்திரிக்காயைப் பற்றி யாரும் பேசக் கூடாது என்று கூட சட்டம் போடுவார்கள். ஓ இன்றைக்கே போட்டுவிட்டார்களோ!
அவர் மேல் கேஸ் போடப்பட்டால் அதை அவர் எதிர்கொள்ளத்தான் வேண்டும். சட்டம் தவறானது என்று போராடத்தான் வேண்டும். அவருக்காக சட்டம் வளையமுடியாது. ஆனால் அவர் இப்படி பயப்படும் வகையில் ஒரு சட்டம் இருப்பது வருத்தமாகத்தான் இருக்கிறது.
போராட மனதிலும் உடலிலும் வலிமை இல்லை என்றால் கட்டாருக்கு போக வேண்டியதுதான். இது அனேகமாக அவரது சொந்த விஷயம். அவருக்கு இருக்கும் பயங்களும் நிர்ப்பந்தங்களும் என்ன என்று அவருக்குத்தான் தெரியும். அவருக்கு தன சொந்த வாழ்க்கையை நிம்மதியாக வாழ கட்டார்தான் சிறந்த இடம் என்று தோன்றினால் அதை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை.
ஆனால் ஒரு விஷயம் உதைக்கிறது. அவர் சொல்கிறாராம் – “I enjoy complete freedom in Qatar. Now Qatar is my place. Here no one controls my freedom of expression. I am very happy here” கட்டாரில் என்ன சுதந்திரம் கிடைத்துவிடும் இவருக்கு? அங்கே போய் முகமதின் உருவத்தை வரைந்தால் artistic self-expression என்று இவரை விட்டுவிடுவார்களா? கட்டாரில் சுதந்திரமாக சரஸ்வதியை வரையலாம், அவ்வளவுதான். ஒரு வேளை ஏசுவையும் வரையலாமோ என்னவோ. இந்தியாவில் சுதந்திரம் இல்லை, கட்டாரில் இருக்கிறது என்று இவர் சொல்லும்போது கேக்கறவன் கேனையனாக இருந்தால் என்ற பழமொழிதான் ஞாபகம் வருகிறது.
டாக்டர் ருத்ரனும் நானும் ஹுசேன் விஷயத்தில் ஏறக்குறைய இசைந்த கருத்துடையவர்கள். அவரது சில ஹுசேன் பதிவுகளுக்கு என் ஆளுமைகள் பக்கத்திலேயே சுட்டி கொடுத்திருக்கிறேன்.அவர் இதைப் பற்றி என்ன நினைக்கிறார் என்று தெரிந்து கொள்ள ஆவல்! அவர் பொங்கி எழுந்திருக்கிறார். அது ஒரு கலைஞனின் நியாயமான ஆக்ரோஷமே. ஆனால் கட்டார் சுதந்திரம் உள்ள நாடு என்று சொல்லமாட்டார் என்று நினைக்கிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்
சுட்டிகள்:
ஹுசேன் கட்டார் குடிமகன் ஆகிறார்.
புது சட்டம் – யாரும் BT கத்தரிக்காயைப் பற்றி பேசக் கூடாது.
ஹுசேனின் “சர்ச்சைக்குரிய” ஓவியங்கள் பற்றி என் முந்தைய பதிவு
ஹுசேனின் கட்டார் முடிவு பற்றி டாக்டர் ருத்ரன்
ஹுசேனின் “சர்ச்சைக்குரிய” ஓவியங்கள் பற்றி டாக்டர் ருத்ரன்
மார்ச் 8, 2010 at 4:55 மு.பகல்
இந்துக்கடவுளை அவர் நினைத்தமாதிரி வரைய
அவருக்கு எதுவித உரிமையும் கிடையாது. மற்ற
மதத்தைக்கேலிசெய்ய யாருக்கும் உரிமைகிடை
யாது.கலைஞனுக்கு தன் கற்பனைப்படிவரையச்
சுதந்திரம் வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ள
முடியாதவை.மற்றமதத்தவர் மனம் புண்படும்
படி வரைந்தால் அதனால் வரும் பின்விளைவு
களை அவர் அனுபவித்தே ஆகவேண்டும். அது
மரணதணடனையாகக்கூட இருக்கலாம்.
மார்ச் 8, 2010 at 5:34 மு.பகல்
தே.தமிழ்னேசன்,
ஹுசேனுக்கு என்ன உரிமை இருக்கிறது இல்லை என்று சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என்றும் யோசித்துப் பாருங்கள்.
நீங்கள் இப்படி எழுதுவது என் மனதை புண்படுத்துகிறது. என்ன தண்டனை என்று நான் கேட்டால் பதில் உண்டா?
நீங்கள் திருப்பி என்னைக் கேட்பதற்கு முன்:
நீங்கள் தாரளமாக உங்கள் கருத்தை சொல்லலாம். அது எனக்கு பிடிக்கிறதா இல்லையா என்பது உங்கள் கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்தாது. என் இந்த லாஜிக் ஹுசெனுக்கும் செல்லுபடி ஆகும். அவர் தாராளமாக அவர் விருப்பப்படி படம் வரையலாம். அது உங்களுக்கு பிடிக்கிறதா இல்லையா என்பது அவரது சுதந்திரத்தை கட்டுப்படுத்தாது என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். மேலும் மனது புண்பட்டால் நீங்களே மருந்து போட்டுக் கொள்ள வேண்டியதுதான். எனக்கும் அதே விதிதான். நீங்கள் சொல்வது என் மனதைப் புண்படுத்துகிறது இல்லை என்பது பொறுத்து உங்களுக்கு தண்டனை கொடுக்க மாட்டேன். ஹுசெனுக்கும் அதே லாஜிக்தான்.
மார்ச் 8, 2010 at 8:19 மு.பகல்
அறிவிஜீவி(?) ருத்ரன் அய்யா எதையும் படிக்க மாட்டாராம் .
//ஜெயமோகனைக்கூடப் படிக்க வைத்து விட்டானே என்று தான் ஆத்திரம் பொங்கி வருகிறது//. http://rudhrantamil.blogspot.com/2010/03/blog-post_03.html என்றார் ,
ஹூஸைன் பற்றி எழுதியுள்ளார் .http://rudhrantamil.blogspot.com/2010/02/blog-post_5796.html
ஹூஸைன் குறித்த ஜெயமோகனின் இந்த கட்டுரையையும் அவர் விமர்சிக்கலாமே ? http://www.jeyamohan.in/?p=4864
மார்ச் 8, 2010 at 8:52 மு.பகல்
கட்டாரின் ஜனநாயகம் பற்றி எனக்கு கவலை இல்லை; இந்த்யா பற்றி மட்டுமே.
இதே ஹூஸைன் இந்தியாவிலும் இருக்க நேர்ந்தால் இது மாதிரி வரையப் போவதில்லை. சர்ச்சைகலெல்லாம் பல வருடங்களுக்கு முன் வரைந்த்ததைப் பற்றியே!
பதிவுக்கு வாழ்த்துகள்.
மார்ச் 8, 2010 at 9:15 மு.பகல்
ஹுசேன் நம்ம ஊரில் சரஸ்வதியை வரைந்தது போல கத்தாரில் அந்த ஊரு சாமியை வரைந்தால் அவர் கதை “அவ்ளோ தான்”
மார்ச் 8, 2010 at 10:06 மு.பகல்
இதுவும் ஒரு விதத்தில் ஹூஸைன் சம்பந்தப்பட்டது தான்!
http://rudhrantamil.blogspot.com/2010/03/blog-post_07.html
மார்ச் 8, 2010 at 4:32 பிற்பகல்
Dear RV,
இதோ மற்றுமோர் சுவையான சுட்டி:
எம்.எப்.ஹுசைன் எனும் பிரஜை – நிஜந்தன்
http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=2601
அன்புடன்,
ஸ்ரீநிவாஸ்
மார்ச் 9, 2010 at 12:12 மு.பகல்
ருத்ரனிடம் கேட்டேன் அவர் பதில் சொல்ல தயங்குகிறார். அதனால் உங்களிடம் அந்த கேள்வியை கேட்டு பயனில்லை. எது கூறினாலும் அதற்கு விதண்டாவாதமாக பதில் சொல்லி தாங்கள் புத்திசாலியென நிருபித்திவிட்டீர். ஆனால் ஹுச்சைனே தனக்கு பிடிக்காதவர்களைத்தான் அப்படி நிர்வாணமாக வரைவேன் என்று கூறிவிட்டாரே அதன்படி பார்த்தால் நீங்களெல்லாம் ஒரு முடிவோடு அடுத்தவரை துன்புறுத்த அலைகிறேர்களா?
மார்ச் 9, 2010 at 11:58 பிற்பகல்
மதி.இந்தியா, என்னங்க, டாக்டர் ருத்ரன் ஜெயமோகனைப் பற்றி எழுதலாம் என்று என்னிடம் யோசனை சொல்கிறீர்களே? அவரிடம் சொல்லுங்கள்!
டாக்டர் ருத்ரன், பதிவைப் படித்து கருத்து சொன்னதற்கு நன்றி! நீங்கள் கொடுத்த லிங்கை ஏற்கனவே இந்த சுட்டியிலும் ஆளுமைகள் பக்கத்திலும் இணைத்திருக்கிறேன். எனக்கும் கட்டாரின் ஜனநாயகம் பற்றி கவலை இல்லை. என் கவலை எல்லாம் ஹுசேன் எதற்கு இப்படி கட்டாரின் சுதந்திர நிலை என்று உதார் விடுகிறார் என்றுதான்.
வரதராஜன், கட்டாரில் முகமதை “தவறாக” வரைந்தால் கதை அவ்ளோதான் என்று நீங்கள் சொல்வது சரியே. அதையே நானும் சுட்டியில் சொல்லி இருக்கிறேன். டாக்டரும் மறுக்கவில்லை. ஆனால் இந்தியாவிலும் கதை அவ்ளோதான் என்ற நிலை – கட்டாரும் இந்தியாவும் இந்த விஷயத்தில் சமம் என்ற நிலை உங்களுக்கு ஏற்புடையதுதானா?
ஸ்ரீனிவாஸ், சுட்டிக்கு நன்றி!
ஸ்மார்ட், நீங்கள் படு ஸ்மார்ட்டாக இருக்கிறீர்கள். என்ன கேள்வி என்று சொல்லமாட்டேன், ஆனாலும் பதில் சொல்லாதது என் தவறு என்கிறீர்கள். அப்புறம் ஹுசேன் எப்போது தனக்கு பிடிக்காதவர்களைத்தான் நிர்வாணமாக வரைவேன் என்று சொன்னார்? புது விஷயமாக இருக்கிறதே?
மார்ச் 10, 2010 at 11:17 மு.பகல்
இந்தியாவில் religious extremism குறைவு என்பது என் கருத்து. சமயம் கலாச்சாரம் என்று சொல்லி வயிறு வளர்க்கும் கூட்டம் ஒன்று இருக்கிறது. ஆனால் அவர்களே கூட அந்த தொழிலை நம்பிக்கை இல்லாமல் தான் செய்கிறார்கள். தான் சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ள எந்த சாதாரண மனிதனும் (ஆண்/பெண்) தன் வேலையை பார்ப்பானே தவிர இவர்களுக்காக பரிந்து பேசுவதில்லை. இப்போதெல்லாம் மக்களை முன் போல பேசி ஏமாற்ற முடியவில்லை. இலவசமாக எதாவது குடுத்தால் தான் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்கிறார்கள்.
ஹூஸைன் சந்திப்பது occupational hazard. நான் கலைஞன் நெருப்பு கலைஞனை சுட கூடாது என்று எதிர்பார்பதெல்லாம் கொஞ்சம் over.
மார்ச் 16, 2010 at 3:47 மு.பகல்
Dear Mr. RV,
//ஹுசேனுக்கு அவர் நினைத்ததை வரைய முழு உரிமையும் உண்டு என்ற நிலை எடுப்பவன் நான். அவர் சரஸ்வதியை நிர்வாணமாக வரையலாம், முகமதை ஓரினச்சேர்க்கையாளராக வரையலாம், அவர் இஷ்டம் அவர் சவுகரியம். அது bad taste என்று நானும் நீங்களும் நினைக்கலாம். But bad taste is not a crime.//
ஆனால் ஹுசேன் முகமதை ஓரினச் சேர்க்கையாலராகவோ, வேறு எந்த சேர்க்கையாலராகவோ வரையவில்லை. ஹுசேன் இசுலாமிய மத முக்கியஸ்தர்கள் யாரையாவது நிர்வாணமாக வரைந்த ஓவியங்கள் எதையாவது திரு.RV யால் நமக்கு காட்ட முடியுமா?
இந்துக் கடவுள்களை மட்டும், குறிப்பாக இந்துக்கள் கடவுளாக வணங்கும் பெண் தெய்வங்களை குறி வைத்து நிர்வாணப் படுத்துகிறார். இந்துக்கள் துர்க்கா, சரஸ்வதி முதலான பெண் தெய்வங்களை தங்கள் அன்னையாகவே நினைப்பவர்கள்.
கலை சுதந்திரம் என்ற போர்வையில் மத வெறியை வண்ணத்தில் தீட்டுபவர் இந்த நபர். கலை என்ற போர்வையில் மிக நுணுக்கமாக சமூகங்களுக்கு இடையில் வெறுப்பை உருவாக்குபவர்.
மனித மனத்தின் வக்கிரங்கள் எவ்வளவு கேவலமானவை என்பதை அறிய முடிகிறது.
அலாவுதீன் கில்ஜி ராஜபுதன அரசரின் சமாதானத்தை ஏற்று அவரின் அரண்மனைக்கு விருந்தாளியாக சென்று, உன்னுடைய மனைவியாகிய பத்மினியைக் கண்ணாடியிலாவது காட்டு என்று சொல்லி, பத்மினியைப் பார்த்ததும் அவளது அழகில் மயங்கி, வெளியே சென்றதும் படை எடுத்து அரண்மனையைக் கைப் பற்றினான்.
அவனுடைய காம கொடுரத்தில் இருந்து தப்ப இராணி பத்மினி தீயில் விழுந்து மாண்டாள். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்று நொந்து விட்டான் கில்ஜி. அன்று அலாவுதீன் கில்ஜி செய்ய முடியாததை இன்று கலைப் போர்வையில் கற்பனையில் செய்கிறார்கள். மதங்களுக்கு இடையே சமரசத்தை உருவாக்க உலகமே முயலும் போது, புன்னகயுடன் மத வெறி விஷத்தை கக்கி, அதே நேரம் ரொம்ப நல்லவர் போல வேடமிடுகிறார் ஹுசேன்.
இதில் திரு.RV யானவர் இப்படி விழுந்து விழுந்து இவரை ஆதரிக்க வேண்டிய அர்த்தம் என்ன? ஹுசேன் இசுலாமிய மத முக்கியஸ்தர்கள் யாரையாவது நிர்வாணமாக வரைந்த ஓவியங்கள் எதையாவது திரு.RV யால் நமக்கு காட்ட முடியுமா? ஹுசேன் தன்னுடைய உறவுகாரப் பெண்களை இப்படி நிர்வாணப் படுத்தி வரைந்து இருக்கிறாரா?
ஆனாலும் இந்த ஒரு நபரின் அசிங்கதுக்காக நாம் எல்லா இசுலாமியரையும் வெறுக்கக் கூடாது. உலகில் உள்ள எல்லோரையும் நாகரீகப் பாதைக்கு கொண்டு வரும் பொறுப்பு நமக்குதான் இருக்கிறது.
The below referred article of Mr. Ram, shows the paintings of Hussain.
http://hayyram.blogspot.com/2010/03/blog-post_12.html
மார்ச் 16, 2010 at 5:04 மு.பகல்
திருச்சிக்காரன், இது என்ன கோட்டா சிஸ்டமா? சரஸ்வதியை வரைந்தால் முகமதை வரைய வேண்டும் என்பதற்கு? அப்படி எல்லாம் கட்டாயம் இருந்தால் என்ன கருத்து சுதந்திரம் வெங்காயம் வாழ்கிறது? முன்னால் எழுதிய பதிவையும் படித்துப் பாருங்கள்.
மார்ச் 16, 2010 at 8:02 மு.பகல்
திரு. RV அவர்களே,
நீங்கள் கோட்டா சிஸ்டமா என்று சம்பந்தம் இல்லாத விடயத்தை எழுதி, ஹுசேனின் மத வெறிக் காழ்ப்புணர்ச்சியை வாசகர்கள் உணரா வண்ணம் திசை திருப்புவதாக அமைந்து விடக் கூடாது.
ஹுசேன் ஒரு இஸ்லாமியர். அவர் இஸ்லாமிய மத முக்கியஸ்தர்கள் யாரையும் நிர்வாணப் படுத்தவில்லை, இந்து மதத்தினர் தெய்வங்களாக வழி படுபவர்களை மட்டும் நிர்வாணப் படுத்தி படம் வரைகிறார்.
சில இந்துக்களுக்கு இது ஒப்பாக இருக்கலாம். அவர்கள் பூசை அறையில் ஒரு தெய்வத்தை கடவுளாக வணங்கி விட்டு, வெளியே வந்தால் அந்த தெய்வம் நிர்வாணப் படுத்தப் படுவதை கண்டும் காணாமல் போகும் போக்கோ அல்லது கலையை ரசிக்கும் போக்கோ கூட இருக்கலாம்.
ஆனால் பெரும்பாலான இந்துக்கள் அப்படி விட்டுப் போகும் மன நிலையில் இல்லை.
ஹுசேன் தன்னுடைய மத முக்கியஸ்தர்களை மட்டும் பத்திரமாக வைத்து, ஹிந்து மதத்தவரின் கடவுள்களை தேர்ந்து எடுத்து கலை என்ற போர்வையில் இழிவு படுத்துகிறார். இதனால் மனக் கசப்பும், பூசலும் உண்டாகிறது.
சிலுவைப் போர்கள் எனப் படும் குருசேடு போர்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை, இரண்டு உலகப் போர்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகமானது. மத வெறியினால் உலகத்தில் இரத்த ஆறு ஓடுவதை தடுக்க மத நல்லிணக்கமும் , மத சமரசமும் முக்கியம்.
நான் ஹுசேன் முஹமதுவை அசிங்கமாக வரைய வேண்டும் என்று சொல்லவில்லை. மனித நாகரீகத்தை முன்னெடுத்து செல்ல நான் இஸ்லாமியருடன் சேர்ந்து மசூதியில் தொழவும், உண்மையாக நோன்பு இருக்கவும் தயார். அதைப் போலவே சர்ச்சில் பிராத்தனை செய்வதும் நமக்கு ஒப்பே.
கலை என்ற போர்வையில் மத வெறி விசத்தைக் கக்கும் செயலை ஆதரிப்பது, குடம் பாலில் ஒரு துளி விசத்தை கலப்பது போன்றதே.
மார்ச் 16, 2010 at 1:28 பிற்பகல்
திரு. RV அவர்களே,
நீங்கள் கோட்டா சிஸ்டமா என்று சம்பந்தம் இல்லாத விடயத்தை எழுதி, ஹுசேனின் மத வெறிக் காழ்ப்புணர்ச்சியை வாசகர்கள் உணரா வண்ணம் திசை திருப்புவதாக அமைந்து விடக் கூடாது.
ஹுசேன் ஒரு இஸ்லாமியர். அவர் இஸ்லாமிய மத முக்கியஸ்தர்கள் யாரையும் நிர்வாணப் படுத்தவில்லை, இந்து மதத்தினர் தெய்வங்களாக வழி படுபவர்களை மட்டும் நிர்வாணப் படுத்தி படம் வரைகிறார்.
சில இந்துக்களுக்கு இது ஒப்பாக இருக்கலாம். அவர்கள் பூசை அறையில் ஒரு தெய்வத்தை கடவுளாக வணங்கி விட்டு, வெளியே வந்தால் அந்த தெய்வம் நிர்வாணப் படுத்தப் படுவதை கண்டும் காணாமல் போகும் போக்கோ அல்லது கலையை ரசிக்கும் போக்கோ கூட இருக்கலாம்.
ஆனால் பெரும்பாலான இந்துக்கள் அப்படி விட்டுப் போகும் மன நிலையில் இல்லை.
ஹுசேன் தன்னுடைய மத முக்கியஸ்தர்களை மட்டும் பத்திரமாக வைத்து, ஹிந்து மதத்தவரின் கடவுள்களை தேர்ந்து எடுத்து கலை என்ற போர்வையில் இழிவு படுத்துகிறார். இதனால் மனக் கசப்பும், பூசலும் உண்டாகிறது.
சிலுவைப் போர்கள் எனப் படும் குருசேடு போர்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை, இரண்டு உலகப் போர்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகமானது.
மத வெறியினால் உலகத்தில் இரத்த ஆறு ஓடுவதை தடுக்க மத நல்லிணக்கமும் , மத சமரசமும் முக்கியம். நான் ஹுசேன் முஹமதுவை அசிங்கமாக வரைய வேண்டும் என்று சொல்லவில்லை.
மனித நாகரீகத்தை முன்னெடுத்து செல்ல நான் இஸ்லாமியருடன் சேர்ந்து மசூதியில் தொழவும், உண்மையாக நோன்பு இருக்கவும் தயார். அதைப் போலவே சர்ச்சில் பிராத்தனை செய்வதும் நமக்கு ஒப்பே.
கலை என்ற போர்வையில் மத வெறி விசத்தைக் கக்கும் செயலை ஆதரிப்பது, குடம் பாலில் ஒரு துளி விசத்தை கலப்பது போன்றதே.
மார்ச் 18, 2010 at 5:00 பிற்பகல்
Dear RV,
ஹுசைன் பற்றிய கிரியின் ஒரு அருமையான பதிவு இங்கே…..
http://www.giriblog.com/2010/03/hussain-controversial-photos.html
ஹீசைன் படங்களை விமர்சித்தால் அவர் இந்து வெறியரா!
ஹீசைன் இந்து கடவுள்களை நிர்வாணமாக வரைந்து சர்ச்சைக்குள்ளான விஷயம் குறித்து தற்போது மறுபடியும் இது பற்றிய விவாதங்கள் எழுந்துள்ளன. ஹீசைனுக்கு இந்து அமைப்புகள் மிரட்டல் விடுத்ததால் அவர் தனக்கு அனுமதி தந்த கத்தார் நாட்டில் குடியிமை பெற்று அங்கேயே இருக்கிறேன் என்று கூறி விட்டார்.
கடவுள் நம்பிக்கை உண்டு இல்லை என்பது அவரவர் நம்பிக்கை எண்ணங்கள் சார்ந்த விஷயம். நீ ஏன் கடவுளை நம்புகிறாய்? அல்லது ஏன் கடவுளை வெறுக்கிறாய்? என்று யாரும் யாரையும் கேள்வி கேட்க முடியாது. தங்கள் எதிர்ப்புகளை கருத்துகளை பதிவு செய்யலாமே தவிர நீ இதை பண்ணக்கூடாது சொல்லக்கூடாது என்று கூற எந்த உரிமையும் இல்லை.
எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு ஆனால் மூட நம்பிக்கை இல்லை. இது இரண்டிற்கும் உள்ள இடைவெளி சிறியது தான் ஆனால் அதை புரிந்து கொள்வதிலே உள்ளது நம் கடவுள் பற்றிய எண்ணங்கள். கடவுள் நம்பிக்கை பற்றி பலரும் பல கருத்துக்கள் கூறி இருக்கிறார்கள். ஏற்கனவே சன் டிவி ல சொல்வது மாதிரி போதுமான அளவிற்கு விவாதிச்சாச்சு மற்றும் படிச்சாச்சு, இருப்பினும் அவரவர் அவரவர் நிலையிலே தான் இருக்கிறார்கள் எந்த பெரிய மாற்றமும் இல்லாமல்.
மதங்கள் என்பது ஒருவரை நல்வழிப்படுத்தவே ஏற்படுத்தப்பட்டது ஆனால் இன்று மதங்களின் பெயராலே உலகம் முழுவதும் பல வன்முறைகள் நடைபெறுகின்றன. எனக்கு மதத்தின் மீது மரியாதையுண்டு அதற்காக வெறி இல்லை. கண்மூடித்தனமான நம்பிக்கை இருந்ததில்லை.
ஹீசைன் தனது மாடர்ன் ஆர்ட் மூலம் இந்துக் கடவுள்களை நிர்வாணமாக வரைந்த போது ஆத்திரம் வந்தது. நீங்கள் அதை ஏன் நிர்வாணமாக பார்க்கிறீர்கள்? கலைக் கண்ணோடு பாருங்கள் என்று கூறுகிறார்கள். கலைக்கண்ணோடு பார்க்கிற அளவிற்க்கெல்லாம் எனக்கு தெரியாது, சாதா கண்ணில் தான் பார்க்க தெரியும். பல மில்லியன் மக்கள் தங்கள் மனதில் உயர்ந்த இடத்தில் வைத்து இருக்கும் தெய்வங்களை எந்த வித குற்ற உணர்ச்சியும் சங்கடமும் இல்லாமல் ஹீசைன் வரைவாராம் ஆனால் அதை யாரும் தட்டி கேட்கக்கூடாதாம்! என்னங்கய்யா உங்க நியாயம்? கேட்டால் இந்து வெறியன், ஹீசைன் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் என்பதால் இந்த கூப்பாடு போடுகிறார்கள் என்று கூறுகிறார்கள். இந்தப்படத்தை ஹீசைன் அல்லாமல் வேறு யார் வரைந்து இருந்தாலும் இதே போல தான் இருந்து இருக்கும் அளவில் வேண்டும் என்றால் வேறுபாடுகள் இருக்கலாம் அது இயல்பு.
நாம் மதிக்கும் கடவுளை நிர்வாணமாக வரைவதை தட்டிக் கேட்டால் இந்து வெறியரா! இதில் எங்கே இந்து வெறியர் வருகிறார் என்று எனக்கு சத்தியமாக புரியவில்லை. ஒரு சிலர் (இந்து அமைப்புகள்) இதை சாக்காக வைத்து உண்மையாகவே பிரச்சனை பண்ணலாம் அனைவரும் ஒழுங்கு இல்லை என்பது அனைவருக்கும் தெரியும் இதில் பலர் நித்தியானந்தருக்கே ஆதரவு தெரிவித்தவர்கள்!! அதற்காக இது பற்றி கருத்து கூறினாலே இந்துத்வா என்று கூறுவது கேவலமாக உள்ளது.
ஹீசைன் வரைந்த படங்களை இந்துக்கள் என்ன ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது! ஹீசைன் மதமான இஸ்லாமை சேர்ந்தவர்களே இதை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மற்ற மதங்களை மதிக்கவே இஸ்லாம் அறிவுறுத்தி உள்ளது புண்படுத்த அல்ல. படம் வரைய எவ்வளவோ விஷயங்கள் இருக்கும் போது இது அவசியமா! கேட்டால் கலைக்கண்! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயம் செயல்கள் புனிதமானது அதை வேண்டும் என்றே கலை என்ற பெயரில் இழிவு படுத்துவது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. இதற்கு அறிவுப்பூர்வமான கேள்விகள் வேறு!
பதிவுலகில் ஹீசைன் செய்ததை பற்றி ஒரு சிலரே விமர்சித்து இருக்கிறார்கள் விமர்சிக்க பலருக்கு சங்கடம் எங்கே நாம் கூறினால் நம்மையும் இந்துத்வா என்று கூறி விடுவார்களோ! என்று யோசனை. ஹீசைனை ஆதரிப்பவர்களும் நிறைய இருக்கிறார்கள் அது அவர்கள் கருத்து. எதிர்ப்பவர்கள் இருக்கும் போது ஆதரிப்பவர்களும் இருப்பது வழக்கம் தானே! ஆதரிப்பது அவர்கள் விருப்பம் ஆனால் எதிர்ப்பவர்களை மத வெறியரை போல சித்தரிப்பது தான் தவறு.
எல்லோருக்கும் நல்லவனாக என்னால் இருக்க முடியாதுங்க! என்னோட எதிர்ப்பை இதன் மூலம் நான் பதிவு செய்கிறேன். ஹீசைன் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் அதை கலைக் கண்ணோடும் பார்க்க முடியாது காமாலைக் கண்ணோடும் பார்க்க முடியாது. சாதாரண பொதுமக்களின் பார்வையில் தான் பார்க்க முடியும். நான் சாதாரணமானவன் என்னுடைய எதிர்ப்புகள் இந்த அளவிலே தான் இருக்கும். இதை எல்லாம் எளிதாக ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு இவர்களைப் போல எனக்கு பரந்த மனசு எனக்கில்லை.
கீழே இருப்பது ஹீசைன் வரைந்த ஓவியங்கள் இதை பார்த்து நீங்களே ஒரு முடிவிற்கு வந்து கொள்ளுங்கள். எதிர்ப்புகள் நியாயமா இல்லையா என்று! இந்தப்படங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஒருவர் இந்து வெறியராகத்தான் இருக்க வேண்டுமா! இந்தப்படங்களை இங்கே மறுபடியும் போட்டு அசிங்கப்படுத்த சங்கடமாகத்தான் உள்ளது ஆனால் ஆதாரம் இல்லாமல் எப்படி குற்றச்சாட்டை வைப்பது.
ஹுசைன் வரைந்த சர்ச்சைக்குள்ளான படங்களை இங்கே மாற்றி வைத்துள்ளேன். நன்றி
மார்ச் 18, 2010 at 7:12 பிற்பகல்
இதோ மற்றொரு நல்ல பதிவு…..
http://hayyram.blogspot.com/2010/03/blog-post_12.html
மார்ச் 18, 2010 at 7:15 பிற்பகல்
திருச்சிக்காரன், மற்றும் ஸ்ரீனிவாஸ், கிரி சொல்வதில் அநேகம் எனக்கு சம்மதமே. திருச்சிக்காரனும் சில பாயிண்ட்களை எடுத்துக் காட்டுகிறார். மீண்டும் ஒரு பதிவு எழுதலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
மார்ச் 19, 2010 at 5:27 மு.பகல்
RV அவர்களே,
மத வெறி மிக ஆபத்தானது. அது கலை என்கிற போர்வையில் சிருங்காரமாக வந்தாலும் அதன் உண்மையான முகம் கோரமானது, மிக ஆபத்தானது. நீங்கள் நன்கு சிந்தித்து எழுதுங்கள்.
கலை சுதந்திரத்தை ஆதரிக்க வேண்டும் என்கிற அக்கறையில் மத வெறிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாம்.
மார்ச் 20, 2010 at 1:56 மு.பகல்
டோண்டு ராகவன் கூறுகிறார்…..
http://dondu.blogspot.com/2010/03/good-riddance-hussain-adieu.html
Good riddance Hussain, adieu
அப்பாடா ஒரு வழியக இந்த சில்லுண்டி பயல் ஹுசைன் கத்தார் நாட்டுக்கு சென்றான். கத்தாருக்கு அவனும் அவனுக்கு கத்தாரும் ஒருவருக்கொருவர் தண்டனையே என்பது வேறு விஷயம். அது அவர்கள் பாடு.
ஹுசைனுக்காக கச்சை கட்டி வந்தவர்களிடம் பல முறை பல கேள்விகள் வைத்திருந்தேன். யாரும் நேரடியான பதில் தரவில்லை. இங்கு அவற்றில் சிலவற்றை மறுபடி வைக்கிறேன்.
1. ஹிட்லரை நிர்வாணமாக வரைந்தது அவனை அவமானப்படுத்தவே என திருவாய் மலர்ந்தருளியுள்ள ஹுசைன் சரஸ்வதி, சீதை, பார்வதி ஆகிய பெண் கடவுளரை வரைந்தது எதில் சேர்த்தி?
2. நிர்வாணமாகக் கூட வேண்டாம், முகம்மதுவின் படத்தை துணியுடன் வரையத் துணிவானா அவன்?
3. முகம்மது பற்றிய ரெஃபரன்ஸ் வந்ததற்கே இஸ்லாமிய ஜிகாதி அமைப்புகள் கலவரம் செய்ய, துண்டைக் காணோம், துணியைக் காணோம் என ஓடி ஒளிந்து அதை நீக்கியவன் இங்கு மட்டும் ஏன் மொண்டித்தனம் செய்ய வேண்டும்?
4. சல்மான் ருஷ்டி விவகாரத்தில் அவருக்கு வந்த மரண மிரட்டலை எங்காவது இவன் எதிர்த்திருக்கிறானா? (முக்கால்வாசி அதற்கு ஆதரவு கூட தெரிவித்திருப்பான்)
5. தஸ்லீமா விவகாரத்தில் இவனது நிலைப்பாடு என்ன?
6. மேலே உள்ள இரண்டு கேள்விகளுக்கான விடைகள் அவனுக்கு சப்பைக்கட்டு கட்டும் போலி மதச்சார்பற்றவர்களிடமாவது அவர்களை பொருத்து உள்ளனவா?
கோவில்களில் இருக்கும் நிர்வாணத்தை பற்றி கூறினார்கள். அவை ஆகம விதிகளுக்குட்பட்ட விஷயம். பக்தி நோக்கில் செய்வது. சில்லுண்டி பயல்கள் எல்லாம் செய்யலாகாது. அப்படி செய்தால் இப்படித்தான் நாடுவிட்டு ஓட வேண்டியிருக்கும்.
நல்ல வேளையாக ஏதோ ஒரு வகையில் இந்த பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்தது. இல்லாவிட்டால் அவன் இந்தியா திரும்பி, அவனது பாதுகாப்புக்கு என இந்திய மக்களின் வரிப்பணம்தான் விரையம் செய்யப்பட்டிருக்கும். அது மிச்சமாகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்