ஜனவரி 2010
மாதாந்திர தொகுப்பு
ஜனவரி 27, 2010
Posted by RV under
Indian Awards,
MathippeedukaL | குறிச்சொற்கள்:
A.r. rahman,
Appolo hospitals,
Arogyasami paulraj,
D.r. karthikeyan,
Gemini ganesan,
Ilaiyaraja,
Indira partthasarathi,
Jalakantapuram r. krishnamoorthi,
Mrs. YGP,
Narain karthikeyan,
Narayanan vaghul,
Pratap c. reddy,
Pushpavalli,
Rajalakshmi partthasarathi,
Rekha,
T.n. manoharan,
TVS,
umaiyalpuram k. sivaraman,
Venkatraman ramakrishnan,
Venu srinivasan,
Y.g. partthasarathi |
[2] Comments
ஐந்து விருதுகளில் மூன்று “தமிழர்களுக்கு” (ரெட்டிகாரு ஆட்சேபிக்கலாம். ராமகிருஷ்ணன் அமெரிக்க குடிமகன்.) பத்மவிபூஷன் கிடைத்திருக்கிறது.
மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமனுக்கு பத்ம விபூஷன் விருது கிடைத்திருக்கிறது. அதிசயம்தான்! மிருதங்க வித்வான்களை எல்லாம் யாரும் பொதுவாக கண்டுகொள்வதில்லை. அப்படியே உ. சிவராமனை யாராவது சிபாரிசு செய்திருந்தாலும் பத்மஸ்ரீக்கு மேலே எதிர்பார்ப்பது ஆச்சரியம். இவரை விட பல மடங்கு தாக்கம் வாய்ந்த இளையராஜா, ரஹ்மானுக்கே இப்போதுதான் பத்மபூஷன். (கவனியுங்கள், இங்கே தாக்கத்தைப் பற்றி பேசுகிறேன், திறமையைப் பற்றி இல்லை) இது நல்ல விஷயம். இப்படிப்பட்ட கலைகளை recognize செய்த இந்திய அரசுக்கு, சிபாரிசு செய்த தமிழக அரசுக்கு ஒரு சபாஷ்!
சிவராமன் ஒரு ப்ளாக் எழுதுகிறார், போய்ப் பாருங்கள்!
அவருடைய வார்த்தைகளில் (ஹிந்துவுக்கு நன்றி!)
This is the first time the mridhangam has been selected for the most prestigious award and I am really fortunate to be the first recipient. For all my service to the art of mridhangam, spanning over 60 years, I consider this award a signal honour to me and my musical career. It will also be a trendsetter for the present and future generations of percussionists who can strive and achieve such honours by their total dedication and sincerity.
நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு பத்ம விபூஷன் கொடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்த வருஷம் மறந்துவிடும், இப்போதே கொடுத்ததற்கு ஒரு சபாஷ்!
அப்போலோ ஹாஸ்பிடல் நிறுவனர் டாக்டர் பிரதாப் சந்திர ரெட்டிக்கு பத்ம விபூஷன். ஒரு “புதிய” தொழிலை ஆரம்பித்தவர் என்றுதான் இவரை சொல்ல வேண்டும். இதுவும் தகுதி உள்ளவருக்கே கொடுக்கப்பட்டிருக்கிறது. அவருடைய வார்த்தைகளில் (ஹிந்துவுக்கு நன்றி!)
I am so pleased that this award is a recognition for all the clinicians who have managed to put Indian healthcare on the world map. It makes me all the more committed to bringing excellence in healthcare. We are also now focussing on making quality healthcare available to all with our slogan ‘Touch a billion lives.’
43 பத்மபூஷன் விருதுகளில் இரண்டு மூன்று (நான்கு?) தமிழர்கள்தான் – ராஜாவும் ரஹ்மானும். ஏற்கனவே எழுதிவிட்டேன்.
ராஜாவின் வார்த்தைகளில் (ஹிந்துவுக்கு நன்றி!)
When I came out of the recording studio, the entire street was clogged with people. I am pleased. What is there to say? Silence is my message.
ஆரோக்யசாமி பால்ராஜ் – ஸ்டான்ஃபோர்ட் பேராசிரியர். வயர்லெஸ் தொழில் நுட்ப நிபுணர்.
நாராயணன் வகுள் – பேரை வைத்துப் பார்த்தால் தமிழர் மாதிரி தெரியவில்லை. சென்னை ராமகிருஷ்ணா பள்ளியிலும் லயோலாவிலும் படித்தவராம். ஸ்டேட் பாங்க், சென்ட்ரல் பாங்கில் பெரிய பதவிகளில் இருந்திருக்கிறார்.
81 பத்மஸ்ரீ விருதுகளில் 8 தமிழர்கள்தான்:
பிரபல ஹிந்தி நடிகை ரேகாவுக்கு (ஜெமினி கணேசன், புஷ்பவல்லியின் மகள்) கிடைத்திருக்கிறது. தகுதி உள்ளவர்தான்.
ராஜீவ் காந்தி வழக்கில் துப்பு துலக்கிய முன்னாள் சி.பி.ஐ. டைரக்டர் டி.ஆர். கார்த்திகேயனுக்கு கிடைத்திருக்கிறது. இவரும் தகுதி உள்ளவர்தான்.
பத்மா சேஷாத்ரி பள்ளி நிறுவனர் ராஜலக்ஷ்மி பார்த்தசாரதிக்கு (ஒய்.ஜி.பி.யின் மனைவி, ஒய்.ஜி. மகேந்திராவின் அம்மா) கிடைத்திருக்கிறது. தகுதி உள்ளவர்தான். அவருடைய வார்த்தைகளில் (ஹிந்துவுக்கு நன்றி!)
I am very happy that education has been recognised with this award. It is the liberating kind of education that Padma Seshadri Bala Bhavan group of schools has been inculcating, with the right mix of art, education and culture, that has been recognised. I have to specially thank my parents and husband who had stood by me, and I share this with the staff of the schools and the students.
பிரபல எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு கிடைத்திருகிறது. இதைப் பற்றி தனிப் பதிவு இங்கே.
டாக்டர் ஜலகண்டபுரம் ஆர். கிருஷ்ணமூர்த்தி விருது பெறுகிறார். குன்றத்தூரில் இருக்கிறாராம். சித்த மருத்துவராம்.
ஃ பார்முலா ஒன் கார் ரேஸ் வீரர் கார்த்திகேயனுக்கு விருது கிடைத்திருக்கிறது. இவரும் தகுதி உள்ளவர்தான்.
டி.வி.எஸ். தலைவர் வேணு ஸ்ரீனிவாசனுக்கு விருது கிடைத்திருக்கிறது. தகுதி உள்ளவர்தான்.
டி.என். மனோகரன் என்ற தொழிலதிபருக்கும் கிடைத்திருக்கிறது. என்ன தொழில் செய்கிறார் என்றுதான் தெரியவில்லை.
இவர் அக்கௌண்டன்ட்டாம். இப்போது இந்திய அரசு இவரைத்தான் சத்யம் கம்ப்யூட்டர்சின் தலைவராக நியமித்திருக்கிறதாம்.
தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்
தொடர்புடைய பதிவுகள்:
உமையாள்புரம் சிவராமனின் ப்ளாக்
வெங்கடராமன் ராமகிருஷ்ணன் பற்றி விக்கி குறிப்பு
பிரதாப் ரெட்டி பற்றி அப்போலோ ஆஸ்பத்திரி தளத்தில்
இளையராஜாவுக்கும் ரஹ்மானுக்கும் பத்மபூஷன் விருது பற்றி நான்
ஆரோக்யசாமி பால்ராஜின் பக்கம்
நாராயணன் வகுளைப் பற்றி விக்கி குறிப்பு, ஃபோர்ப்ஸ் குறிப்பு
ரேகா பற்றிய விக்கி குறிப்பு
டி.ஆர். கார்த்திகேயன் ராஜீவ் கொலை வழக்கு பற்றி அளித்த ஒரு பேட்டி, ராஜீவ் கொலை பற்றி துப்பு துலக்கிய குழு – ஒரு அறிமுகம்
திருமதி ஒய்.ஜி.பி. பற்றி பத்மா சேஷாத்ரி பள்ளி தளத்தில்
இந்திரா பார்த்தசாரதிக்கு பத்மஸ்ரீ பற்றி நான்
ஜலகண்டபுரம் கிருஷ்ணமூர்த்தி பற்றி விக்கி குறிப்பு
கார் ரேஸ் வீரர் கார்த்திகேயன் பற்றிய விக்கி குறிப்பு, கார்த்திகேயனின் தளம்
வேணு ஸ்ரீனிவாசனைப் பற்றி பிசினஸ்வீக்
டி.என். மனோஹரனைப் பற்றி
விருது பெற்றவர்களின் லிஸ்ட்
37.523851
-122.047324
ஜனவரி 26, 2010
Posted by RV under
Reading | குறிச்சொற்கள்:
Aadhavan,
Asokamithran,
En peyar ramaseshan,
Gopala krishna nayudu,
Indira partthasarathi,
Jeyamohan,
Keezhvenmani,
Ki. rajanarayanan,
Krishna krishna,
Kurudhip punal,
Nandhan kathai,
Padmasree,
Poomani,
Ramanujar,
Sa. kandasami,
Sundara ramasami,
Suthanthira bhoomi,
Thandhira bhoomi |
[7] Comments

இந்திரா பார்த்தசாரதி
நான்
இ.பா.வை ரசிப்பவன் இல்லை. அவரது நாவல்களில் எல்லாரும் பேசுகிறார்கள், பேசுகிறார்கள், பேசிக் கொண்டே இருக்கிறார்கள். எல்லா நாவல்களிலும் ஒரு “அறிவுஜீவியின்” கோணம்தான், அதுவும் டெல்லியில் வாழும் ஒரு தமிழ் பிராமண “அறிவு ஜீவி” கோணம் மட்டுமே. இதில் நகைச்சுவை என்கிறார்கள், அங்கதம் என்கிறார்கள் எனக்கென்னவோ இதை விட வடிவேலு அடி வாங்குவதே கொஞ்சம் பெட்டர் நகைச்சுவையாக இருக்கிறது. அவரது சாகித்ய அகாடமி விருது பெற்ற
குருதிப்புனல் என் கண்களில் குறைகள் நிறைந்த படைப்புதான். அதில் அனாவசியமாக கோபால கிருஷ்ண நாயுடு காரக்டரை ஒரு
ஹோமொசெக் ஷுவலாக ஆண்மைக் குறைவு உள்ளவனாக சித்தரித்துவிட்டார் – படித்தவர்கள் பலருக்கு நாற்பத்து சொச்சம் பேர் எரிந்ததை விட வில்லன் ஹோமோ என்பது மட்டும்தான் நினைவில் தங்கி இருக்கிறது.
தந்திர பூமி,
சுதந்திர பூமி,
ஏசுவின் தோழர்கள் எதுவும் எனக்கு தேறவில்லை. என் கண்ணில் வெறும் fluff. அவருடைய புகழ் பெற்ற
நந்தன் கதை நாடகத்தைப் பாருங்கள் – கொக்கு தலையில் வெண்ணை வைத்து பிடிப்பது போல நந்தனை ஒழிக்கிறார்கள்.
ராமானுஜர் நாடகம் வைஷ்ணவ குரு பரம்பரை கதைகளில் தொகுப்பு மட்டுமே. அவருடைய படைப்புகளில்
கிருஷ்ணா கிருஷ்ணா ஒன்றுதான் எனக்கு பிடித்திருந்தது. அவருடைய படைப்புகளில் அது ஒன்றுதான் நூறு வருஷத்துக்குப் பின்னாலும் படிக்கக் கூடியது என்பது என் கருத்து. என் மகாபாரதப் பித்தும் இந்த நினைப்புக்கு ஒரு காரணமாக இருக்கலாம். அவர் எழுதிய
ஒரு கப் காப்பி சிறுகதை புகழ் பெற்றது, ஆனால் அது சீக்கிரம் மறக்கப்பட்டுவிடும் என்று நினைக்கிறேன்.
அழியாச்சுடர்கள் தளத்தில் படிக்கலாம்.
போட்டால் லிங்க் செய்யலாம். பதித்த
ராமுக்கு நன்றி!
ஆனால் இ.பா.வின் தாக்கம் பெரியது. அவருடைய தாக்கம் ஆதவனில் நன்றாகவே தெரிகிறது. ராமசேஷன் அதே மாதிரி அறிவுஜீவிதான். இன்று வரை கீழ்வெண்மணி நாவல் என்றால் குருதிப்புனல்தான். அவருடைய நாடகங்கள் முக்கியமான முயற்சிகள். நந்தன் கதை கூட நாடகமாகப் பார்த்தால் கொக்கும் வெண்ணையும் தெரிவதில்லை. வைஷ்ணவ குரு பரம்பரை கதைகள் எல்லாம் ஐயங்கார்களே மறந்துகொண்டிருக்கும் காலம் இது. ராமானுஜர் நாடகம் பார்க்க நன்றாக இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. அவருடைய எந்த நாவலும் மோசம் இல்லை. கால வெள்ளத்தில் நிற்காது, அவ்வளவுதான். அவர் பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் கொண்டு வந்த மாற்றங்களும் அநேகம்.
தமிழில் சீரியஸ் எழுத்தாளர்களுக்கு பத்மஸ்ரீ கொடுக்கப்படுவது நல்ல விஷயம். ஜெயகாந்தனுக்கு போன வருஷம் கொடுத்தார்கள். இந்த வருஷம் இ.பா.வுக்கு. சீக்கிரம் அசோகமித்திரன், கி. ராஜநாராயணன், சா. கந்தசாமி, பூமணி, ஜெயமோகன் மாதிரி எழுத்தாளர்களுக்கும் கொடுங்கப்பா! அதுவும் அசோகமித்திரன் இருக்கும் நிலையைப் பார்த்தால் ரொம்ப நாள் தாங்கமாட்டார் என்று தோன்றுகிறது, இருக்கும்போது மரியாதை செய்யுங்கள்! (சுந்தர ராமசாமிக்கான சான்சைத்தான் விட்டுவிட்டோம்.)
லிஸ்டில் டாக்டர் ரங்கநாதன் பார்த்தசாரதி என்று போட்டிருந்தார்கள். இந்திரா பார்த்தசாரதியைத்தான் தெரிகிறது, யாருக்கு ரங்கநாதனைத் தெரியும்?
தொகுக்கப்பட்ட பக்கங்கள்: படிப்பு, ஆளுமைகள்
தொடர்புடைய பதிவுகள்:
2010 – விருது பெற்றவர்களின் முழு லிஸ்ட்
2009 பத்ம விபூஷன்/பூஷன்/ஸ்ரீ விருதுகள்
ஜெயகாந்தனுக்கு பத்மபூஷன்
ராஜாவுக்கும் ரஹ்மானுக்கும் பத்ம பூஷன்
விவேக்குக்கெல்லாம் பத்மஸ்ரீயா?
கீழ்வெண்மணி நாவல்கள்
இந்திரா பார்த்தசாரதியின் ஏசுவின் தோழர்கள்
37.523851
-122.047324
ஜனவரி 26, 2010
Posted by srinivas uppili under
Books [2] Comments

கொலை அரங்கம் 1984ல் வெளியான போது ஈழ விடுதலைப் போராட்டம் தமிழகத்திலும் எதிரொலிகள் எழுப்பிய காலம்.
அந்தப் போராட்டத்தை அரசியல்வாதிகள் பலர் பல விதத்தில், தத்தம் சுய நலன்களுக்காக பொய்யான அனுதாபங்களைக் காட்டி, தம் மேல் வெளிச்சம் பெறுவதற்காகப் பயன் படுத்தினார்கள்.
இது சுஜாதாவின் மனதில் ஒரு கற்பனைக் கதையாக உருவாகி த்ரில்லர் வடிவத்துக்கு மாறியது.
‘கொலை அரங்கம்’ – கணேஷ் – வசந்த் நாவலின் முதல் அத்தியாயத்தில் இருந்தே, தோன்றி கதையை நடத்தும் நாவல்களில் ஒன்று. இந்த நாவலில் இருவரையும், மிகவும் கஷ்டப்படுத்தி இருக்கிறார் சுஜாதா.
இது குண்டுகள் வெடிக்கும் காலம். சென்னை விமான நிலையத்தில் வெடித்த குண்டு பல உயிரை மாய்த்தது.
இலங்கையில் இருந்து, வாழ்விழந்த பல தமிழர்கள் புகலிடம் தேடி தமிழகம் வருகின்றனர். இதற்கெல்லாம், கணேஷ் வசந்த் மூலம் இந்தக் கொலை அரங்கத்தில் நம்மை சிந்திக்க வைக்கிறார் சுஜாதா.
‘குங்குமம்’ வார இதழில் இந்த கதை வெளிவந்தது.
ஜனவரி 25, 2010
Posted by RV under
Reading,
Tamil Culture,
Tamil Nadu Politics | குறிச்சொற்கள்:
Cho ramaswami,
Maniyammai,
Periyar,
Pogap pogath theriyum,
Subbu,
Tamil hindu,
Thangamanimaran,
Va.ve.su. iyer,
Veeramani |
[14] Comments
தமிழ் ஹிந்து தளத்துடன் எனக்கு சில கருத்து வேறுபாடுகள் உண்டு. அவர்கள் கொஞ்சம் paranoid ஆக இருக்கிறார்கள், இஸ்லாமிய கிருஸ்துவர்களை சந்தேகக் கண்ணோடு பார்க்கிறார்கள் என்பது என் கருத்து. ஆனால் ஒரு நல்ல நண்பர் சொல்லும் சில விஷயங்கள் அதிர்ச்சியாகத்தான் இருக்கின்றன. அவர் பெயரை சொல்வதை அவர் விரும்புவதில்லை. (திராவிட கழக ஆட்கள் ரௌடிகள் அவரை அடிக்க ஒரு முறை தேடி இருக்கிறார்களாம், அதனால் அவர் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க விரும்புகிறார்.) அதனால் அவரை நல்ல நண்பர் என்றுதான் குறிப்பிட முடிகிறது.
ஆனால் ஏமாற்றி மத மாற்றம் செய்வதைப் பற்றி எனக்கும் அவர்களுக்கும் ஒரே கருத்துதான். திராவிட இயக்கத்தைப் பற்றி அங்கே சொல்லப்படும் தகவல்கள் (கவனிக்கவும், தகவல்கள்; அவர்களது கருத்துகள் இல்லை) திராவிட இயக்கம் மற்றும் பெரியாரின் தலையை சுற்றி ஒரு ஒளி வட்டம் (halo) உருவாக்க தமிழகத்தில் எடுக்கப்படும் முயற்சிகளை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. என்னுடைய கருத்தில் பெரியாரே – a straightforward and transparent man – அப்படிப்பட்ட முயற்சிகளை விரும்பமாட்டார்.
போகப் போகத் தெரியும் நல்ல முயற்சி. அது பல தெரியாத தகவல்களைத் தருகிறது. சுப்பு என்பவர் எழுதி இருக்கிறார். இணையக் கட்டுரைகளை இப்போது தொகுத்து புத்தகமாகப் போடுகிறார்களாம். என்னை மாதிரி கஞ்சப் பிசினாரிகள் இணையத்தில் இங்கே படிக்கலாம்.
எனக்கு நினைவிருக்கும் சில:
- வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்கு தமிழ் நாட்டில் பொதுவாக நினைப்பது போல பெரியது இல்லை என்பதை பல பகுதிகளில் எழுதி இருக்கிறார். இதைப் பற்றி சமீபத்தில் ஜெயமோகனும் எழுதி (பகுதி 1, பகுதி 2) இருந்தார். குறிப்பாக கேரளத்தில் அப்படி நினைக்கப்படுவதில்லை என்று சொல்லி இருந்தார். வைக்கத்தைப் பற்றி திராவிட இயக்கத்தினரை விட மலையாளிகளுக்குத்தான் அதிகம் தெரியும் என்பதை ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்.
- சுயமரியாதைத் திருமணம் என்று பலமாக பிரச்சாரம் செய்த பெரியார் மணியம்மையை சுயமரியாதைத் திருமணம் செய்துகொள்ளவில்லை. பதிவுத் திருமணம்தான் செய்துகொண்டார்.
- சேரன்மாதேவியில் வ.வே.சு.ஐயர் ஒரு குருகுலம் அமைத்தார். அதற்கு காங்கிரஸ் ஐயாயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்தது. ஆனால் அங்கே இரண்டு பிராமணச் சிறுவர்கள் மற்ற ஜாதி சிறுவர்களோடு ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட வேண்டாம் என்றாம் ஐயர் அனுமதி கொடுத்திருந்தார். அது பெரிய விஷயமாக வெடித்து பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறினார். இதைப் பற்றி இரு தரப்பு வாதங்களும் பல பதிவுகளில் பேசப்பட்டன.
எனக்கு பிடித்த சில பதிவுகள் பற்றி மேலும்:
பகுதி இரண்டில் சுவருக்குள் சித்திரங்கள் என்ற ஜூவி தொடரைப் பற்றி எழுதுகிறார். அதில் மாணிக்கம் கவுண்டரின் கடைசி வார்த்தைகள் ஒரு அருமையான சிறுகதை படித்த உணர்வைத் தருகின்றன. அமெரிக்காவில் நாலு மாடி வீடும், எட்டு மெர்சிடஸ் காரும், பாங்கில் பத்து மில்லியன் டாலரும் இருந்தாலும் கொசு கடிக்கும் மாம்பலம்தான் என் ஊர் என்ற ரேஞ்சில் யாரோ ஒருவர் “கவிதை” எழுதி இருந்தார். அந்த மாதிரி இருக்கிறது.
பதிவு 28: வீரமணியை சோ கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களும் தவறானவையே என்று சொல்ல வைக்க ததிங்கினத்தோம் போட்டுப் பார்க்கிறார், முடியவில்லை. ஆனால் என் நெருங்கிய நண்பன் தங்கமணிமாறன் திராவிட கழகக் குடும்பத்தவன். அவன் எனக்கு கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை எதிர்க்கும் திராவிட கழக பிரசுரங்களை காட்டி இருக்கிறான். அவன் சொன்ன விளக்கம் “எல்லாவற்றையும் மாற்றிவிட முடியாது. பெரியார்/தி.க. சில விஷயங்களில் focus செய்ய முடிவு செய்தது. அதனால் அவர்கள் கிருஸ்துவ மதம் சரி, ஹிந்து மதம் மட்டுமே தவறு என்று நினைப்பதாக முடிவு செய்யக் கூடாது”. இந்த அணுகுமுறையில் எனக்கு தவறு எதுவும் தெரியவில்லை. ஆனால் அதை வீரமணி வெளிப்படையாக சொல்லாதது, அதுவும் இப்படி கிடுக்கிப்பிடி போட்டு கேட்கும்போது சொல்லாதது சரி என்று அவனால் கூட சொல்ல முடியாது.
தொகுக்கப்பட்ட பக்கங்கள்: படிப்பு, ஆளுமைகள்
தொடர்புடைய பதிவுகள்:
பெரியார் – என் மதிப்பீடு
பெரியார் திரைப்பட விமர்சனம்
வைக்கம் போராட்டம் பற்றி ஜெயமோகன் – பகுதி 1, பகுதி 2
போகப் போகத் தெரியும் கட்டுரைகளின் தொகுப்பு
போகப் போகத் தெரியும் கட்டுரைகள் புத்தகமாக வெளி வருகிறது
போகப் போகத் தெரியும் பகுதி 2 – ஜெயிலில் மத மாற்றம்
போகப் போகத் தெரியும் பகுதி 28 – சோ வீரமணியை எடுத்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி
37.523851
-122.047324
ஜனவரி 25, 2010
இந்த மூன்று பேரைப் பற்றியும் சமீபத்தில் படித்தேன். படிக்கும்போதே சந்தோஷமாக இருக்கிறது. டிராஃபிக் ராமசாமியின் தைரியம், சாரதியின் சேவை மனப்பான்மை, அர்விந்த் கெஜ்ரிவாலின் புதிய தீர்வுகள் எல்லாமே inspiring விஷயங்கள்.
கெஜ்ரிவால் Right to Information Act வருவதில் பெரும் பங்கு ஆற்றி இருக்கிறார். மக்சேசே விருது பெற்றவர். கரக்பூரில் படித்தவர் என்பது இன்னும் கொஞ்சம் சந்தோசம். நானும் அங்கே எம்.டெக் “படித்தேன்”.
சாரதி ஆலத்தூரில் உதவும் நண்பர்கள் என்று ஒரு அமைப்பை ஏற்படுத்தி ரத்த தானம், கம்ப்யூட்டர், தையல் பயிற்சிகள், மருத்துவமனை கட்டுதல் என்று கலக்கிக் கொண்டிருக்கிறார். கிராமம் மணல் அள்ளுதல், சூளைப் புகை ஆகியவற்றால் பிரச்சினைக்குள்ளானபோது போராடி தன் பொது வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறார்.
டிராஃபிக் ராமசாமியைப் பற்றி விகடனில் வந்திருந்தது. அதை இங்கே மீள்பதிவு செய்திருக்கிறேன். நன்றி, விகடன்!
ஆள், அம்பு, சேனை தேவையே இல்லை. மனதில் தைரியம் இருந்தால் எவரையும் தனி ஆளாகவே எதிர்க்கலாம் என்கிற தனி மனித ராணுவம் டிராஃபிக் ராமசாமி. பொதுநல வழக்குகளால் பொதுமக்கள் நலன் காக்கும் நீதிமான்!
”ராஜாஜி அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரா இருந்த வெங்கடசாமி நாயுடுவின் தனிச் செயலாளரா இருந்தேன். ஒருநாள் என்னையும் எனது தம்பியையும் அழைத்து ஆசி வழங்கினார் ராஜாஜி. அவரது கையில் வைத்திருந்த ராமாயணத்தை என் தம்பியிடம் கொடுத்தார். மகாபாரதத்தை என்னிடம் கொடுத்தார். என் கண்ணைப் பார்த்தார். ‘உன்னைப் பார்த்தா பிற்காலத்துல போல்டா வருவேன்னு தெரியுது. உன் மனதில் எது சரின்னு படுதோ, அதைத் தைரியமாப் பண்ணு. மற்றவங்க என்ன சொல்வாங்கன்னு பயப்படாதே. உன் மனசாட்சிக்கு சரின்னுபட்டா, யாரையும் துணிச்சலா எதிர்த்துப் பேசு. இதுதான் என்னோட அறிவுரை!’ன்னார்.
சிறு வயதில் அப்படி ஒரு பெரியவர் சொன்னது என் மனசில் தங்கிருச்சு. அர்ஜுனனுக்கு கண்ணன் சொன்னதா பகவத் கீதையில் வரும், ‘எதிரிக்கு அஞ்சாது வீரத்தோடு பாய்ந்து தாக்க வல்லவனே சூரத்தன்மை உடைய வனாகிறான். அச்சத்தை அறியாத மனநிலை தேஜஸ் அல்லது துணிவெனப்படுகிறது. வீரத்துடன் எதிர்த்து நின்று அடி பட்டுச் சாவதே மேல்’னு வரும். இதுதான் 76 வயசிலேயும் என்னை எனர்ஜியோடு வெச்சிருக்கு.
சாதாரணமா ஆரம்பிச்ச கலாட்டா இவ்வளவு பெரிசாகும்னு நினைக்கலை. அப்போ எனக்கு 15 வயசு இருக்கும். 14 கிலோ அரிசி மூட்டையைத் தூக்கிக்கிட்டுப் போனேன். கோட்டா சிஸ்டம் இருந்த காலம் இது. ‘ஒரே நேரத்துல 14 கிலோ கொண்டுபோகக் கூடாது’ன்னு தாசில்தார் தடுத்தார். ‘அப்படியா, வெச்சுக்கோங்க. ஆனா, உங்களையே கொண்டு வந்து என் வீட்டுல கொடுக்க வெப்பேன்’னு சொன்னேன். புகார்களைத் தட்டினேன். ஒருநாள் காலையில் எங்க வீட்டைத் தேடி வந்து அவரே அரிசியைக் குடுத்துட்டுப் போனார்.
பச்சையப்பன் கல்லூரியில் படிச்சேன். பின்னி மில்லில் அலுவலக உதவியாளராச் சேர்ந்து உயர் அதிகாரி ஆனேன். மில் பிரச்னை வந்த பிறகு, ஊழியர்களுக்கு வேலை இல்லாமல் சம்பளம் குடுத்தாங்க. பிறகு அதையும் நிறுத்திட்டாங்க. அலுவலக வேலையில் இருந்த எனக்கு எந்தச் சிக்கலும் இல்லை. சம்பளம் வந்தது. ஆனா, தொழிலாளர்கள் நிலைமையைப் பார்த்து ‘இங்க வேலை பார்க்கணுமா’ன்னு கவலைப்பட்டு வெளியேறிட்டேன்.
ஊர்க் காவல் படையில் சேர்ந்தேன். அதுக்குத் தலைவரா இருந்தவர் பிரபல வக்கீல் கோவிந்த சாமிநாதன். ‘கௌரவம்’ படத்தில் சிவாஜிக்கு முடி வந்து விழுமே, அது இவரைப் பார்த்துவெச்சதுதான். அந்தக் காலத்தில் நாங்கதான் போலீஸ்காரங்க ஒழுங்கா வேலை பார்க்கிறாங்களான்னு கண்காணிப்போம். போலீஸ் பீட் புக்கைச் சரி பார்த்து கையெழுத்துப் போடுவோம். ரெண்டு ஸ்டார்கள் வாங்கி கூடுதல் சிறப்பு கமாண்டரா ஆனேன். வாகனங்கள் அதிகமாக ஆரம்பிச்ச காலம் அது. யாரெல்லாம் விதிமுறைகளை மீறுறாங்களோ, அவங்களைப் பற்றி புகார் சொல்வது, மேலிடத்துக்கு எழுதிப் போடுவது, தட்டிக் கேட்பதுன்னு கிளம்பினேன். பொய்ப் புகார் அடிப்படையில் கைது செய்து என்னை அடிச்சாங்க. இதை எல்லாம் எதிர்பார்த்துத்தானே இறங்கினேன்! போடப்பட்டது பொய் வழக்குன்னு நீதிமன்றத்தில் நிரூபிச்சு வெளியே வந்தேன். தவறுகளைத் தட்டிக் கேட்பவனுக்கு நீதிமன்றம் பக்கபலமா இருக்கும்னு தெரிஞ்சது.
நான் போட்ட வழக்குகள், தட்டிக்கேட்ட அநியாயங்கள், வாதாடிப் பெற்ற உரிமைகள்னு கணக்குப் பார்த்தா, எண்ண முடியாது. சென்னை உயர்நீதி மன்றத்தைச் சுற்றியுள்ள சாலையை ஒரு வழிப்பாதையா ஆக்கினாங்க. இதனால் குழப்பம்தான் வரும்னு கண்டிச்சேன். யாரும் கேட்கலை. எத்தனையோ பேர் விபத்தில் இறந்ததுதான் மிச்சம். இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்த போலீஸ் அதிகாரியின் உறவினரே பலியானார். இந்த வழக்குக்காக இரண்டு வருஷம் வாதாடினேன். அதே மாதிரி நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி மூணு மேம்பாலங்கள் கட்டத் திட்டமிட்டாங்க. அதையும் நிறுத்தினேன். ‘கொலை பண்ணிடுவோம்’னு மிரட்டினாங்க. சென்னையில் பல விபத்துகளுக்கு மீன்பாடி வண்டிகள்தான் காரணம். லைசென்ஸ் இல்லாத புல்லட் இன்ஜினைப் பொறுத்தி, கண்மண் தெரியாம ஓட்டியதால் எத்தனையோ உயிர்களை இழந்தோம். அதனால் பாதிக்கப்பட்ட ஒருவன் என்னைக் கத்தியால் குத்தினான். அப்போதான் நீதிமன்றம் என் உயிரைப் பாதுகாக்கும் பொறுப்பை எடுத்துக்கிட்டது. ஒரு ஹெட்கான்ஸ்டபிள், மூணு கான்ஸ்டபிள் பாதுகாப்பு என் வீட்டுக்கும் எனக்கு ரெண்டு கன்மேன் பாதுகாப்பும் கொடுத்தாங்க. காலப்போக்கில் வீட்டுக்குத் தரப்பட்ட பாதுகாப்பு வேண்டாம்னு நானே மறுத்துட்டேன்.
என் வீட்ல பயப்பட்டாங்க. ‘உங்களுக்கு எதுக்கு இந்த ஊர் வேலையெல்லாம்?’னு என் மனைவியும் மகளும் பயந்தாங்க. நான் எனக்குன்னு ஒரு ரூமை வாடகைக்குப் பிடிச்சு, தனியே வந்து ஆறு வருஷம் ஆச்சு.
கண்ணு முன்னால் நடக்கிற தப்பைப் பார்த்துட்டு, என்னால் கடந்து போக முடியாது. தப்புன்னு அதிகாலையில் நினைச்சா, மத்தியானத்துக்குள் எதிர்ப்பைக் காட்டியாகணும். பணத்துக்கு மயங்கியிருந்தா, கோடீஸ்வர ராமசாமியா உட்கார்ந்திருக்கலாம்.
தி.நகர்ல எந்த விதிமுறைகளையும் பின்பற்றாம எத்தனையோ மெகா மாளிகைகள் எழும்பி வருது. இதை முறைப்படுத்தணும்னு போராட ஆரம்பிச்சப்போ, என்னை விலை பேசினாங்க. முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் 10 லட்சம் ரூபா வரை தருவதா ஒரு வழக்கில் சொன்னாங்க. பணம், பதவிக்கு மயங்கி இருந்தா, இப்போ உங்கள் முன்னால் பேசியிருக்க முடியுமா?
காலையில் ரெண்டு இட்லி, மத்தியானமும் ராத்திரியும் மோர், பசிச்சா ரெண்டு பிஸ்கட் அல்லது வாழைப்பழம். இதுதான் 40 வருஷமா என் சாப்பாடு. இப்படிப்பட்டவனை யார் என்ன செய்துட முடியும்? தேவைகளைக் குறைச்சுக்கிட்டே போனா, பயமும் குறையும்.
ஏன் பயப்படணும்? தவறு செய்தவன் தைரியமா இருக்கான். கைதாகிப் போறப்போ, கையைக் காட்டி நிமிர்ந்து போறான். ஆனா, எந்தப் பாவமும் செய்யாத அப்பாவி மனுஷன் ஏன் பயந்து சாகணும்? கோழை செத்துச் செத்துப் பிழைப்பான். வீரனுக்குத்தான் மரணமே கிடையாது.
ஏப்ரல் ஒண்ணாம் தேதி பிறந்தேன். அது முட்டாள் தினம்னு எவன் சொன்னான்? என்னை ஒழிக்க நினைச்சவங்கதான் முட்டாள் ஆகியிருக்காங்க. என்னை அடிச்சிருக்கலாம், உதைச்சிருக்கலாம். ஆனா, இன்னும் நான் அப்படியேதான் இருக்கேன்.
தனி மனிதனா இந்தியாவில் இருந்து வெளியேறிய நேதாஜி, மிகப் பெரிய பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தைத் தனது படையால் சாய்க்க முடியும்னு நினைச்சதுக்குக் காரணம், அவரது படை பலமல்ல, மன பலம்.
என்னோடு வர உங்களில் எத்தனை பேர் தயார்?”
தொக்குக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்
தொடர்புடைய பதிவுகள்:
அர்விந்த் கெஜ்ரிவாலைப் பற்றிய விக்கி குறிப்பு
அர்விந்த் கெஜ்ரிவாலைப் பற்றி இட்லிவடையில்
ஆலத்தூர் சாரதியைப் பற்றி லக்கி லுக்
டிராஃபிக் ராமசாமியை பற்றிய விக்கி குறிப்பு
37.523851
-122.047324
ஜனவரி 23, 2010
எனக்கு சாதாரணமாக ஜெயமோகன், வெங்கட் சாமிநாதன் ஆகியோரின் எண்ணங்களோடு ஒத்துப் போகிறது.
ஜெயமோகனின் எழுத்துக்கள் பிரமிக்க வைக்கின்றன. நான் முதன்முதலாக படித்த அவருடைய புத்தகம் ஏழாம் உலகம். மனிதனின் குரூரத்தையும் அந்த குரூரம் அடிப்பவனுக்கும் அடிபடுவனுக்கும் காலம் செல்ல செல்ல உறைக்காமலே போய்விடும் மனநிலையையும், ஒரு புதிய களத்தையும் கண் முன்னால் கொண்டு வந்திருந்தார்.
வெங்கட் சாமிநாதனின் intellectual integrity அவரது எழுத்துக்களில் எப்போதுமே பிரகாசிக்கும். தரம் பார்த்து வாசகனுக்கு சொல்லும்போது எழுத்தாளரைப் பற்றி அவரது தனிப்பட்ட அபிப்ராயங்கள், சண்டை சச்சரவுகள், எந்த அரசியலும் இல்லாத கறாரான விமர்சனம். அவரது ரசனையும் என் ரசனையும் நிறைய ஒத்துப் போகும். (க.நா.சு.வுக்கும் இந்த நேர்மை உண்டு, ஆனால் க.நா.சு.வின் தேர்வுகளில் ஓரளவு எனக்கு தேறாமல் போய்விடுகிறது.)
வெ.சா. ஏழாம் உலகம் பற்றி விமர்சனம் எழுதி இருக்கிறார் என்று பார்த்ததும் ஆவலோடு படிக்கப் போனேன். ஆனால் எனக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. அவரது விமர்சனம் ஒரு சம்பிரதாய விமர்சனமாக இருக்கிறது. நான் எழுதுவது போல இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
அவர் கொஞ்சம் தயக்கத்துடன்தான் – இந்த அரக்கத்தனத்தைப் பற்றி படிக்கத்தான் வேண்டுமா என்று ஒரு தயக்கம் – இதைப் படித்திருக்கிறார் என்று தோன்றுகிறது. மேலெழுந்தவாரியான விமர்சனம். அவரிடமிருந்து புதிய தரிசனம் எதுவும் கிடைக்கவில்லை.
தொகுக்கப்பட்ட பக்கம்: படிப்பு
தொடர்புள்ள பதிவுகள்:
தமிழ் ஹிந்து தளத்தில் வெ.சா.வின் ஏழாம் உலகம் விமர்சனம்
பக்சின் ஏழாம் உலகம் விமர்சனம்
ஏழாம் உலகம், ஸ்லம்டாக் மில்லியனர், நான் கடவுள்
ஜெயமோகனின் தளம்
37.523851
-122.047324
ஜனவரி 18, 2010
நேற்று அழியாச்சுடர்கள் தளத்தில் “வீரம்மாளின் காளை” சிறுகதை கிடைக்குமா என்று தேடித் பார்க்கப் போனேன். அவரும் வாடிவாசல் பற்றி (என்னை விட விரிவாக) எழுதி இருக்கிறார். படித்துப் பாருங்கள்!
தொகுக்கப்பட்ட பக்கம்: எதுவுமில்லை, ஆனால் அழியாச்சுடர்கள் பதிவை படிப்பு பக்கத்தில் இணைத்திருக்கிறேன்.
தொடர்புடைய பதிவுகள்:
வாடிவாசல் பற்றி நான் எழுதியது
37.523851
-122.047324
ஜனவரி 17, 2010
மாட்டுப்பொங்கல் போனது கூட தெரியவில்லை. மாட்டுப் பொங்கல் எல்லாம் கொண்டாடி ஒரு முப்பது முப்பத்தைந்து வருஷம் ஆகிவிட்டது.
ஆனால் இப்போதெல்லாம் மாட்டுப் பொங்கல் என்றால் வாடிவாசல் என்ற குறுநாவல்தான் நினைவு வருகிறது. ஜல்லிக்கட்டை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட கதை. சி.சு. செல்லப்பா எழுதியது. விறுவிறுப்பான கதை. கதையில் முடிச்சு கிடிச்சு என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. செல்லாயி அம்மன் ஜல்லிக்கட்டுக்கு – செல்லாயி சல்லிக்கு – இரண்டு கிழக்கத்தியான்கள் – பிச்சி, மருதன் – வருகிறார்கள். பிச்சியின் அப்பா அம்புலித்தேவன் ஜல்லிக்கட்டை நடத்தும் ஜமீன்தாரின் காரிக் காளையால் குத்துப்பட்டு இறந்து போனார். அதற்கு பழி வாங்கும் விதமாக காளையை அடக்க வருகிறார்கள். ஜெயிக்கிறார்களா, காளையால் குத்துப்படுகிறார்களா, ஜமீன்தாரின் மன நிலை என்ன இதுதான் கதை. ஒரு எழுபது எண்பது பக்கம்தான் இருக்கும்.
எடுத்தால் கீழே வைக்க முடியாது. ஜல்லிக்கட்டு உலகத்தை, மறவர்களின் வீரத்தை, அவர்களது நெறிகளை, மிக அருமையாக விவரிக்கும் குறுநாவல். நான் ஜல்லிக்கட்டெல்லாம் பார்த்ததில்லை. ஆனால் செல்லப்பா அந்த உலகத்தை நம் கண்ணெதிரில் நிறுத்துகிறார். இந்த ஒரு கதையே அவரை தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலைநிறுத்த போதுமானது.
வாடிவாசலை ஜெயமோகன் சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார். அவரது வார்த்தைகளில்:
வாடிவாசல் – சி.சு. செல்லப்பா: உண்மையில் ஒரு நீண்ட சிறுகதை ஆனால் நாவலாகக் கூறப்படுகிறது. மதுரைப்பக்க கிராமம் ஒன்றில் உயிரைப் பணயம் வைத்து காளைகளுடன் மோதும் இளைஞர்களின் கதையை திகிலான சொல்லாட்சியுடன் கூறும் வேகமான கதை. தன் தந்தையைக் கொன்ற அடங்காத காரிக்காளையை ரத்தம் சிந்தி வெல்கிறான் பிச்சி. ‘ரோஷம் ஆகாது தம்பி, மனுசனுக்கானாலும் மாட்டுக்கானாலும் ‘ என்ற அசரீரிக் குரல் தமிழ மரபுமனத்தின், கிராமிய அகத்தின் வெளிப்பாடு.
எஸ். ராமகிருஷ்ணனின் தளத்தில் ஏதோ பிரச்சினை போலிருக்கிறது. தளத்திற்கு போக முடியவில்லை. ஆனால் அவரும் இதை சிறந்த தமிழ் நாவல் என்று குறிப்பிட்டிருப்பார் என்பதில் எனக்கு சந்தேகம் எதுவும் இல்லை.
கு.ப.ரா. எழுதிய வீரம்மாளின் காளை என்பதும் ஒரு நல்ல ஜல்லிக்கட்டு சிறுகதை.
உங்களுக்கு நினைவிருக்கும் நல்ல மாட்டுப்பொங்கல், பொங்கல், ஜல்லிக்கட்டு கதைகள் பற்றி எழுதுங்களேன்!
தொகுக்கப்பட்டிருக்கும் பக்கம்: படிப்பு
தொடர்புடைய குறிப்புகள்:
ஜெயமோகனின் சிறந்த தமிழ் நாவல்கள் பதிவு
37.523851
-122.047324
ஜனவரி 15, 2010
பொங்கல் வாழ்த்துக்கள்!
நான் கிராமங்களில் வளர்ந்தவன். நான் வளர்ந்த கிராமங்களில் பொங்கல்தான் பெரிய பண்டிகை, தீபாவளி இல்லை. அது சரி, எல்லாம் விவசாயக் கிராமங்கள். அறுவடை முடியும்போது கொண்டாடப்படும் பண்டிகைதான் சிறப்பாக இருக்கும். தீபாவளி அன்று ஸ்கூல், மாட்டாஸ்பத்திரி, லைப்ரரி ஆகியவற்றில் மாதச் சம்பளம் வாங்குபவர்களிடம் வேண்டுமானால் பணம் இருக்கலாம் (இல்லை என்றாலும் ஃபெஸ்டிவல் வாங்கிக் கொள்ளலாம். விவசாயக் கூலிகளிடம் எப்படி பணம் வரும்? பணமே கொஞ்சம் பெரிய விஷயம்தான். வேர்க்கடலை பிடுங்கும்போது ஊர்க்கோடியில் இருந்த எங்கள் வீட்டு வழியாக சாரிசாரியா மக்கள் போவார்கள் – அவர்களுக்கு கூலியே avarkaL பிடுங்கிய வேர்க்கடலைதான். சின்னப் பையன், பெண் என்று வாசலில் விளையாடிக் கொண்டிகொண்டிருக்கும் எனக்கும் என் தங்கைகளுக்கும் கொஞ்சம் கொடுப்பார்கள். அதன் ருசியே தனிதான்.
தீபாவளியை பெரிதாக கொண்டாடுவது எங்கள் குடும்பம்தான், மேலும் ஊரில் இருக்கும் வட்டித் தொழில் செய்யும் மார்வாடி குடும்பம். (அது என்னவோ ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு மார்வாடி குடும்பம் உண்டு) நிச்சயமாக புதுத் துணி உண்டு. அம்மா நாலைந்து நாட்களுக்கு முன்னாலேயே பட்சணம் செய்ய ஆரம்பித்துவிடுவாள். மைசூர்பாகு, ரவாலாடு, பர்ஃபி. அப்புறம் முறுக்கு, தேன்குழல், மிக்சர் என்று ஏதாவது இருக்கும். நாலைந்து ரூபாய்க்கு பட்டாசு வாங்கினால் நாள் பூராவும் வெடிக்கலாம். (அப்போது எங்கப்பாவுக்கு என்ன சம்பளம் என்று தெரியவில்லை. இருநூறு முன்னூறு ரூபாய் இருந்திருக்குமோ என்னவோ) ஊரிலிருக்கும் நாலைந்து ஐயர் குடும்பங்களுக்கு தீபாவளி என்று நிச்சயமாகத் தெரியும்.
பொங்கலுக்கு? சில சமயம் புதுத் துணி உண்டு. சர்க்கரைப் பொங்கல் அன்றைக்கு மட்டும். மாட்டுப் பொங்கலுக்கு விவசாயம் செய்யும் நண்பர்கள் வீட்டுக்குப் போவோம். அதுவும் கிட்டு மாமா வீட்டில் மாடுகளுக்கு அலங்காரம் செய்து ஊர்வலமாக ஊரில் போவார்கள். கரும்பு உண்டு. தீபாவளிக்கு அடுத்த ஸ்தானம்தான்.
இன்றைக்கு நிலை மாறி இருக்கும் – கிராமங்களில் கூட. பொங்கல் என்ற தமிழர் பண்டிகை இரண்டாவது இடத்துக்கு போய், “வடநாட்டார்/ஆரியர்/பார்ப்பனர்” பண்டிகை முதல் இடத்துக்கு வந்திருக்கும் என்று யூகிக்கிறேன். டிவி, விளம்பரங்கள் எல்லாம்தான் இந்த மாற்றத்தை கொண்டு வந்திருக்கும்.
என் பிள்ளைகளுக்கு கிருஸ்துமஸ்தான் பெரிய பண்டிகை.
என்ன செய்வது?
உங்கள் அனுபவம் என்ன? தீபாவளியா பொங்கலா இல்லை வேறு ஏதாவதா?
தொகுக்கப்பட்ட பக்கம்: மிச்சம் மீதி
37.523851
-122.047324
ஜனவரி 13, 2010
Posted by srinivas uppili under
Books Leave a Comment

உள்ளம் துறந்தவன்’ கல்கி இதழில் தொடர்கதையாக வந்த போது, வாசகர்களின் பேராதரவைப் பெற்றது.
‘உள்ளம் துறந்தவ’னில் இதயமாற்று தொடர்பான செய்திகளில் கற்பனை எதுவும் இல்லை. மாற்றுவதற்கான சூழ்நிலையும், காதலும் அதைச் சார்ந்த இழப்பும்தான் கதைக்கு வலுவூட்டுவது.
அழகேசனின் தாயைப் போல், மன வலிமை படைத்த ஏழைகள் பலர் நம்மிடையே உள்ளனர்.
– சுஜாதா
அடுத்த பக்கம் »