இந்த ஜாதிகள் எப்படி ஏற்பட்டன என்ற ஐதீகங்களை பற்றி கௌதம சித்தார்த்தன் எழுதி இருக்கிறார் (லதா ராமகிருஷ்ணன் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்) நான் இவற்றில் எந்த ஐதீகத்தையும் கேள்விப்பட்டதில்லை. இப்போது நம்பிக்கை குறைந்திருக்கலாம், ஆனால் அந்த காலத்தில் இந்த ஐதீகங்கள் பரவலாக நம்பப்பட்டிருக்கும் என்றுதான் தோன்றுகிறது. வேட்டுவரை தவிர மற்ற ஜாதியினர் முக்கியமான தொழில்களை செய்பவர்கள். கொல்லர்களும் தச்சர்களும் கருமார்களும் போயர்களும் வண்ணார்களும் நாவிதர்களும் இல்லாவிட்டால் ஊரே அழிந்துவிடும் – ஆனால் இவர்கள் எப்படி தங்கள் முக்கியத்துவத்தை அறியாமல் இருந்தார்கள்?
குறிப்பாக பொன்னர்-சங்கர் கதையை பற்றி சொல்வது மிக நன்றாக இருக்கிறது. தலையூர் காளிக்கும் பொன்னர்-சங்கருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் உண்மையில் வேட்டை சார்ந்த ஒரு clan-க்கும் விவசாயம் சார்ந்த clan-க்கும் இடையில் ஏற்பட்டதாகவே இருக்க வேண்டும். பிற்காலத்தில் அது ஒரு தொன்மமாக உருவெடுத்திருக்க வேண்டும். (clan-க்கு தமிழில் என்ன எழுதுவது? எனக்கு இந்த சமூகம் என்ற வார்த்தையை கண்டால் அலர்ஜி – நாடார் சமூகம், பிராமண சமூகம், தேவர் இனம் என்றெல்லாம் வேறு sub-species மாதிரி எழுதுகிறார்கள். ஆனால் குழு என்ற வார்த்தையும் சரிப்படவில்லை.)
ஆசாரி ஜாதியினர் பூணூல் போடுவதைப் பற்றியும் ஒரு ஐதீகம் இங்கே விவரிக்கப்படுகிறது. பூணூல் பற்றி இங்கே நிறைய விவாதிப்பவர்களுக்கு சுவாரசியமாக இருக்கலாம்.
இதை படிப்பவர்களும் தங்களுக்கு தெரிந்த ஜாதி ஐதீகங்களை பற்றி சொல்லுங்களேன்!
தொடர்புடைய பதிவுகள்:
வேட்டுவர், ஆசாரி, போயர், வண்ணார், நாவிதர் ஜாதி உருவான ஐதீகங்கள்
அக்டோபர் 5, 2011 at 4:10 பிற்பகல்
why no one bother about “”kammalar”caste.
because of minority?
December 12, 2011 at 2:34 பிற்பகல்
idhu thodarpaga melum ariya virumbukiren
ஜனவரி 10, 2012 at 12:02 பிற்பகல்
ஆச்சாரிமார் பூணூல் அணிவது, தங்களுடைய வேதமுத்திரைக்காக. அவர்களுக்கு விஸ்வப்ராம்மணர் என்பதே சரியான பெயர். பௌருஷேய ப்ராம்மணர்கள் என்றும் குறிப்பிடுவார்கள். அவர்களே உண்மையான ப்ராம்மணர்கள் என்பதற்கு வேதங்களில் தேவைக்கும் அதிகமான விளக்கங்கள் உள்ளன. கலியுகத்தில், அவர்களுக்கு கையினால் வேலை செய்யும் கைவினைகளை சிருஷ்டிகர்த்தாவான விஸ்வகர்மா விதித்ததால், கொல்லர், தச்சர், கன்னார், ஸ்தபதி, தட்டார் என்று உலக இயக்கத்திற்கு ஆதாரமான ஐந்து தொழில்களும் செய்து வருகின்றனர். இதை சாதகமாக எடுத்துக்கொண்டு, இன்றைய சூழலில் ப்ராம்மணர்களாக பாலிக்கப்படும் “ஐயர்களும்” “ஐயங்கார்களும்” ஆச்சாரியார்களை மட்டம் தட்டி வருகின்றனர். பல வரலாறுகளையும் கோப்புகளையும் கூட அவர்கள் அழித்து விட்டனர். வியாசர், வேதத்தைத் தொகுத்தவரே. ஆனால் அதை இயற்றிய ரிஷிகள்: சானக ரிஷி – ரிக் வேதம், சனாதன ரிஷி – யஜுர் வேதம், அஹபூனச ரிஷி – சாம வேதம், ப்ரத்னச ரிஷி – அதர்வண வேதம், இவை அல்லாது ப்ரணவ வேதம் என்று ஒரு வேதம் இருப்பதையே இவர்கள் அழித்து விட்டார்கள். அதை இயற்றியது, சுபர்னச ரிஷி. இவர்களே உண்மையான ப்ரம்மரிஷிகள். அதாவது ப்ரம்மனுடைய மனசபுத்திரர்களாகிய பஞ்சரிஷிகள். பிற வசிஷ்டாதி முனிவர்களாகிய சப்தரிஷிகளும், தங்கள் கர்மத்தால் சிறந்து, பிராம்மண பதவியினை அடைந்தவர்கள் என்பது எங்கள் சமூகத்தினைத் தவிர ஆங்கிலேய ஆன்மிகவாதிகளுக்கு மட்டுமே தெரியும். பிற கோப்புகளை இவர்கள் அழித்து விட்டார்கள். இந்த பஞ்சரிஷி கோத்திரத்தில் பிறந்தவர்களே விஷ்வப்ராம்மணர் அல்லது ஆச்சாரிமார் எனக் குறிப்பிடுகின்றனர். தவறாக, ஆசாரி எனக் குறிப்பிடுகிறோம். ஐந்து ரிஷிகளும் முறையாக, ஐந்து தொழில்களைச் செய்யும் விஷ்வப்ராம்மணர்களின் கோத்திரப் பிரவார ரிஷிகளாவர். இன்றைக்கும் அவரவருடைய பிரவரத்தில், “கோ: ப்ராம்மணேப்ய” என்றும் “தேவ: ப்ராம்மணேப்ய” என்று குறிப்பிடப்பட்டிருக்கும். முதல் உள்ளது, பிற பிராமணர்க்கு, இரண்டாவது உள்ளது விஷ்வப்ராம்மணர்க்கு, அதாவது தேவப்ராம்மணர்கள். தயவு செய்து இதைப்படிப்பவர்கள் இந்த உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்.
அன்புடன்,
க.ச.பாலசாரங்கன் ஆச்சாரி.