புதுப்பிக்கப்பட்டது. புதிய வரிகள் நீல நிறத்தில்.
- வாதாபி ஜீர்னோ பவ என்று வாதாபியை ஜீரணித்தவர் பிராமண அகத்தியர். அப்புறம் எப்போது, ஏன், பிராமணர்கள் வெஜிடேரியன்களாக மாறினார்கள்?
ஒரு காலத்தில் பிராமணர்கள் மாமிசம் சாப்பிட்டதாகவும், புத்த, ஜைன தாக்கத்தால் வெஜிடேரியனிசம் பரவியதாகவும் வித்தகனும் மணியும் சொல்கிறார்கள். யாக்ஞவல்க்யர் மாமிசம் சாப்பிட்டதைப் பற்றி எங்கேயோ படித்த ஞாபகம் வருகிறது. - தசாவதாரம், தசாவதாரம் என்கிறார்கள். அப்புறம் இந்த ஹயக்ரீவர், மோகினி, பிருது, ரிஷப தேவர், புத்தர் எல்லாம் என்ன கணக்கு? அதுவும் மோகினி கூர்ம அவதாரக் கதையிலேயே குறிப்பிடப் படுகிறாள்! ஆனாலும் தசாவதாரம்தான், ஏன்?
மணியும் வித்தகனும் புத்த அவதாரம் புத்த மதத்தை ஹிந்து மதத்துக்குள் இழுத்துக் கொள்ள நடந்த முயற்சி என்கிறார்கள். ரிஷப தேவரும் (முதல் தீர்த்தங்கரர்) ஜைன மதத்தை இழுக்க நடந்த முயற்சி என்கிறார்கள். பொருந்துகிறது. ஆனால் மோகினி, ஹயக்ரீவர் எல்லாம் எந்த மதத்தையும் இழுக்க நடந்த முயற்சியாக இருக்க முடியாது இல்லையா? அதுவும் கூர்மாவதாரத்தில் விவரிக்கப்படும் மோகினி அவதாரத்தை எப்படி கணக்கில் எடுக்கவில்லை?
ராகவன் 18 அவதாரங்கள் என்கிறார், நர நாராயணர் இரண்டு என்று வைத்துக் கொள்ளலாம். அப்படியும் ஒன்று வரவில்லை. - சுக்ராச்சாரியார் அசுரர்களில் பர்மனென்ட் குல குரு. நவகிரகங்களில் ஒருவர். அவருக்கு மட்டும் அமிர்தம் எங்கிருந்து கிடைத்தது? அசுரர்கள் எல்லாம் சாகிறார்கள் என்றால் அவருக்கு மட்டும் ஏன் சாவே இல்லை?
சுக்ராச்சாரியார் சஞ்சீவினி மந்திரம் தெரிந்தவர் ஆயிற்றே என்கிறார் ராகவன். அது தெரிந்தால் இறந்தவரை உயிர்ப்பிக்கலாம்தான். ஆனால் தான் இறந்துவிட்டால் தன்னைத் தானே பிழைக்க வைக்க முடியாது. அதனால்தான் கசனுக்கு அவர் மந்திரத்தை சொல்லித் தரும்படி ஆயிற்று. அசுரர்களை விட்டு அவர் மட்டும் அமிர்தம் குடித்திருக்கிறார்.
மணி நோவா, வெள்ளம் பற்றி என்னவோ சொல்கிறார், என்ன என்று புரியவில்லை. - கைகேயி இரண்டு வரம் கேட்கிறாள். ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள என்று ஒன்று. தாழிரும் சடைகள் தாங்கி ராமன் காட்டுக்கு 14 வருஷம் போக வேண்டும் என்று ஒன்று. அது என்ன 14 வருஷம்? ஒரேயடியாக போக சொல்ல வேண்டியதுதானே? அதுதானே பரதனுக்கு safety?
அந்தக் காலத்தில் 14 வருஷம் என்றால் ஒரு phase முடிந்துவிட்டது என்று ராகவனும் மணியும் சொல்கிறார்கள். அந்த மாதிரி ஏதாவது இருக்க வேண்டும். - வால்மீகி வேடர். முதலில் வழிப்பறி செய்துகொண்டிருந்தார். அவர் தவம் செய்ய முடிகிறது, ரிஷி ஆக முடிகிறது, ஒரு குழந்தையையே (குசன்) தன தவ பலத்தால் உருவாக்க முடிகிறது. உத்தர காண்டத்தில் அவர் காரக்டருக்கு பெரும் பங்கு இருக்கிறது. ஆனால் ராமன் சம்பூகன் என்ற சூத்திரனை தவம் செய்ததற்காக கொன்றானாம். வால்மீகியை மட்டும் ஏன் விட்டுவிட்டான்? சம்பூகன் பிற்காலத்திய இடைச்செருகலா? (குரங்கு ஹனுமான் கூட வேதம், சாஸ்திரம் தெரிந்தவர். ஒரு வேளை பிராமணக் குரங்கோ?) குகனோடும் ஐவரான ராமன், குரங்கு சுக்ரீவனோடு அறுவரான ராமன், அரக்கன் விபீஷனனோடு எழுவரான ராமன், ஒரு வண்ணான் சொன்னதற்காக மனைவியை கைவிட்ட ராமன், திடிரென்று தன பிரஜை ஒருவனை கொன்றே விடுகிறான்!
மணி சம்பூகனால் ராமனுக்கு லாபமில்லை, அதனால்தான் சம்பூகனை மட்டும் கொன்றான் என்று சொல்கிறார். இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வண்ணானால் என்ன லாபம்? சூத்திரர்கள் ஆரிய சமூகத்தில் ஒரு அங்கம். வேடர்கள் (குகன், வால்மீகி மாதிரி) சமூகத்தில் fringe -இல்தான் இருக்கிறார்கள். ஏகலைவன், மச்சகந்தி போன்றவர்களை இங்கே நினைத்துப் பார்க்கலாம். குரங்குகள் சமூகத்தில் பங்கே இல்லாதவர்கள். அவர்களை எல்லாம் பொறுத்துக் கொள்ளும் – இல்லை வரவேற்கும் ராமன், தன பிரஜையை மட்டும் கொன்றான் என்பது ராமனின் காரக்டருக்கு முரணாகத்தான் இருக்கிறது. இது பிற்சேர்க்கையாகத்தான் இருக்க வேண்டும். ராகவன், உத்தர காண்டம் கம்பன் விட்டுவிட்டது. சம்பூகன் கதை வால்மீகி ராமாயணத்தில் உத்தர காண்டத்தில் வருகிறது என்று சொல்கிறார்கள்.
மணி, வியாசர் பிறந்த உடனே தவம் செய்ய போய்விடுகிறார். வழிப்பறி எல்லாம் வால்மீகிதான். - பரசுராமர் க்ஷத்ரிய குல விரோதி. கர்ணனை க்ஷதிர்யன் என்று இனம் கண்டு சபிக்கிறார். பிறகு பீஷ்மருக்கு மட்டும் எப்படி ஆசிரியராக ஒத்துக் கொண்டார்?
ராகவன் கர்ணன் பொய் சொன்னதால் சபிக்கப்பட்டான் என்கிறார். கர்ணன் பொய் சொன்னதற்கு காரணம் என்ன? பரசுராமன் பிராமணர்களுக்கு (பிராமணர்களுக்கு வில் வித்தை எதற்கு என்று அப்புறமாக ரூம் போட்டு யோசிப்போம்) மட்டும்தான் சொல்லித் தருவேன் என்று ஒரு நியதி வைத்துக் கொண்டிருந்தார். (துரோணருக்கும் அவர்தான் குரு என்று நினைவு) பீஷ்மருக்கு மட்டும் எப்படி விதிவிலக்கு கொடுத்தார்?
மணி என்ன சொல்ல வருகிறார் என்று புரியவில்லை. - அஸ்வத்தாமா, மகாபலி, வேத வியாசர், ஹனுமான், விபீஷணன், கிருபர், பரசுராமர் ஏழு பேரும் சிரஞ்சீவிகள். (இந்த ஜாம்பவான், மார்க்கண்டேயன் எல்லாம் ஏன் லிஸ்டில் இல்லை என்று தெரியவில்லை). அஸ்வத்தாமாவுக்கு சாவு இல்லை என்பது சாபம். மார்க்கண்டேயனுக்கு வரம். மிச்ச பேருக்கு எப்படி?
- மனு நீதி சோழன் கன்றுக்குட்டியின் உயிருக்கு பதில் தன மகனின் உயிரைக் கொடுத்தானாம். ஒரு மிருகத்தை மனிதனுக்கு சமமாக நடத்துவதுதான் மனுநீதி என்றால் மனு ஸ்மிருதியில் உள்ள ஜாதி கோட்பாடு எங்கிருந்து வந்தது?
மணி ஆர்வி என்கிறார், தி.மு.க. என்கிறார். என்ன சொல்ல வருகிறார் என்று புரியவில்லை.
மனு அந்தக் காலத்தில் ஒரு legendary lawgiver ஆகவே இருந்திருக்க வேண்டும். யாராவது நல்ல நீதிமான் என்றால் பாருடா மனு மாதிரி நீதி வழங்குகிறான் என்று பேசி இருக்கலாம். மனு சட்டத்தை தொகுத்தார் என்பது அவர் தொகுத்த சட்டம் என்ன என்பதை விட அழுத்தமாக மக்கள் மனதில் பதிந்திருக்கலாம். காந்தியம் என்ன என்று தெரியாமலே காந்தியை மதிப்பவர்கள் மாதிரி… - ஜாதி இரண்டொழிய வேறில்லை என்று பாடிய அவ்வையார் எப்படி குலத்தளவே ஆகுமாம் குணம் என்றும் பாடுகிறார்? வேறு வேறு அவ்வையாரா?
மணி இரட்டை நிலை என்று சுலபமாக முடித்துவிட்டார். எல்லாவற்றுக்கும் இதையே சொல்லிவிடலாமே? ராமன் ஏன் வால்மீகியை விட்டுவிட்டான்? இரட்டை நிலை. பரசுராமர் ஏன் பீஷ்மருக்கு குருவானார்? இரட்டை நிலை. கைகேயி ராமனை ஏன் 14 வருஷம் மட்டும் காட்டுக்கு அனுப்பினாள்? இரட்டை நிலை. விஷயம் முடிந்துவிட்டது.
குலத்தளவே ஆகுமாம் குணம் என்று பாடியவர் வேறு அவ்வையார் என்று தோன்றுகிறது.
விக்கி அவ்வையார் என்று மூன்று பேர் இருந்ததாக சொல்கிறது. அபிதான சிந்தாமணியும் அப்படித்தான் சொல்கிறதாம். - தேசிங்கு என்று ஒரு பேரா? சரி ஏதோ ஒரு வடநாட்டு சிங் இங்கே வந்து நம் மக்கள் வாயில் பேர் நுழையாததால் தேசிங்காக மாறிவிட்டார் போல. அவருடைய நிஜமான பேர் என்ன? எனக்கு தோன்றுவது தேஜ் சிங். யாருக்காவது தெரியுமா?
விக்கிபீடியாவில் தேஜ் சிங் என்று போட்டிருக்கிறது. செஞ்சி பற்றிய குறிப்பைப் பாருங்கள். - குரோம்பேட்டை புரிகிறது. வண்ணாரப்பேட்டை புரிகிறது. ராயப்பேட்டை புரிகிறது. அது என்ன சைதாப்பேட்டை?
மணி சைதாப்பேட்டை என்பது சையதுகான்பேட்டை என்பதின் திரிபு என்று கூறுகிறார். விக்கி குறிப்பு இது சையது ஷா என்பவரின் பேரால் அழைக்கப்பட்டது என்று சொல்கிறது. மேற்கு ஜோன்ஸ் ரோட்டில் அந்த காலத்தில் ஜெயராஜ் தியேட்டர் இருந்த இடத்தை தாண்டினால் வரும் அடுத்த ஊர் ஜாஃபார்கான்பேட்டை.
தொடர்புடைய பதிவுகள்:
அவ்வையார் பற்றி விக்கி
செஞ்சிக் கோட்டை பற்றி விக்கி
சைதாப்பேட்டை பற்றி விக்கி
நவம்பர் 30, 2009 at 8:26 மு.பகல்
நல்ல சந்தேகங்கள் தான்.. எனக்குத் தெரிந்த சில பதில்கள்.
// ஆனாலும் தசாவதாரம்தான், ஏன்//
விஷ்ணுவின் அவதாரங்கள் 18.. அதில் 10 அவதாரங்கள் மட்டும் பூர்ணமான அவதாரங்கள் என்பதால் இந்தக் கணக்கு.
//அவருக்கு மட்டும் அமிர்தம் எங்கிருந்து கிடைத்தது? //
அவரிடம் அமிர்தம் எல்லாம் கிடைக்கவில்லை.. மீண்டும் உயிர் பிழைக்க வைக்கும் மந்திரம் அவருக்குத் தெரியும்.
//அது என்ன 14 வருஷம்? ஒரேயடியாக போக சொல்ல வேண்டியதுதானே? அதுதானே பரதனுக்கு safety//
அதற்கு பல காரணங்கள் சொல்வர். சரியாக ஞாபகமில்லை. நினைவில் இருந்து சொல்கிறேன். கைகேயிக்கு ராமன் மேல் பிரியம் மிகவும் அதிகம்.. அதனால் தான் ஒரேயடியாக காடு போகச் சொல்லவில்லை. அந்த 14 வருடத்தில், பரதன் நல்லபடியாக நாட்டை ஆண்டான் என்றால் மக்கள் மதிப்பு பெற்று அவனே ஆள முடியும் என்ற மந்தரையின் திட்டமே அது. இன்னொன்றும் சொல்வர், ஒருவன் 14 வருடங்கள் தனது சொத்துக்களை பிரிந்திருந்தால் அவனுக்கு தார்மீக உரிமையை இழப்பான் என்றும் ஒரு கருத்து உண்டு (சரியான்னு தெரியலை)
நவம்பர் 30, 2009 at 8:37 மு.பகல்
// ஆனால் ராமன் சம்பூகன் என்ற சூத்திரனை தவம் செய்ததற்காக கொன்றானாம். //
வால்மீகி இராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை.. எந்த ஒரு ராமாயண உபன்யாசத்திலும் சரி கம்ப ராமாயணத்திலும் இது பற்றி அறிந்ததில்லை.
//ஹனுமான் கூட வேதம், சாஸ்திரம் தெரிந்தவர். ஒரு வேளை பிராமணக் குரங்கோ?) //
ஹனுமான், வாயு மைந்தர், சூரியனிடம் வேதங்கள் கற்றவர்.
நவம்பர் 30, 2009 at 8:53 மு.பகல்
//பரசுராமர் க்ஷத்ரிய குல விரோதி. கர்ணனை க்ஷதிர்யன் என்று இனம் கண்டு சபிக்கிறார். பிறகு பீஷ்மருக்கு மட்டும் எப்படி ஆசிரியராக ஒத்துக் கொண்டார்//
ராமாவதாரத்தில் பரசுராமரின் கோபம் அடக்கப்பட்டு விடுகிறது. அதன் பின் அவர் ஒரு நல்லாசிரியராகவே இருக்கிறார். கர்ணனுக்கு இட்ட சாபம் அவன் பொய் உரைத்ததால்.
நவம்பர் 30, 2009 at 9:46 மு.பகல்
P.T. Srinivasa Iyengar also attests that Brahmins were once meat eaters. The “bali” during yaagams included ceremonial slaying of every conceivable animal including elephants. After the prayers the Brahmins would eat the “bali” animals without any reservation.
When Buddhism and Jainism became more popular than Saivam and Vaishnavam (1000+ years before the term “Hindu” was coined in 1830) some “reformists” – the Mullah Omars of those days – like Sankaracharya went about “reconverting” Buddhists and Jains by force. This included the infamous “kazhu mara” killings of scholars and destruction of Jain literature in Tamil Nadu. Only Thirukkural and Naaladiyar out of those have survived to this day. Jain and Buddhist temples were usurped and converted to Vaishnava and Shaiva temples. All of Meenakshi, Rameshwaram and Srirangam temples and many others were supposed to be originally belonging to these religions. Even now it is common to find Buddha and Jain statues under lakes and buried towns in various parts of Tamil Nadu. They are the uprooted idols from the destructed temples.
The Buddhist scholars and Jain scholars who survived the massacre and agreed to convert were allowed to keep their vegetarian habits. They became the priests of the rejuvenated Sanatha Dharma based religions. The Kapalikas who practiced skull breaking ceremonies as part of their prayers (Kapalam = Skull) in the Kapalika temple (the erstwhile Kapaleeswarar temple where the Santhome Church stands now) were encouraged by Adi Sankara to use coconuts instead of head. Similarly pumpkin with kumkum also became a substitute for broken head and blood. Flowers replaced the teeth and bones used in garlands. Slowly the scholars started to spread vegetarianism as a symbol of their purity and became the Brahmins. You will find Brahmins of various hues in the South. Some have indistinguishable physical traits from the Dalits or Thevars while others, especially, the Iyengars, have more prominent Aryan characteristics. This “reconversion” from the other two religions is the main reason for this eclectic mix of physical traits.
Any Tamilian you will find with the term “Guna” (Gunaseelan, Gunasekaran, SarGuram etc) in their names must have a Jain connection in their lineage somewhere. Down south you will find the names of exclusive Buddhist towns like anna vaasal to this day.
Making Buddha one of the ten avatars is also an attempt to keep Buddhism under the fold of Hinduism. His name is never mentioned in the old texts. Considering Buddha was born 2500 years ago it is surprising that the sanaadha dharma texts have never gone through a revision in between, like Christianity did with the testament in the 3rd century. This attempt to make him an avatar of Vishnu has been a failure so far. Some even try to make Sikhism a faction of Hinduism. It is an equally ridiculous claim.
நவம்பர் 30, 2009 at 11:10 மு.பகல்
10. நீங்களாக எதாவது புரிந்து கொள்வதை விட சென்னை பற்றி ஒரு வரலாற்றுப் புத்தகம் மலிவு விலையில் உள்ளது. எல்லா பேட்டைகளும் யாருடைய பெயரில் உள்ளது என்ற விபரம் உள்ளது. முடிந்தால் வாங்கிப் படிக்கவும். சையதுகான் பேட்டை என்பதுதான சைதா பேட்டை என மருவியதாக ஞாபகம்.
9. தெரியவில்லை. மதன் பாணியில் சொன்னால் தேச(அயல்) பிளஸ் இங்கு.
8. ஒருவரை இரட்டை நிலை எடுத்து பேச முடியாதா என்ன
7. நீங்கதான் ஆர்.வி அதாவது ஆர். வெங்கட்ராமனா. ஏங்க திமுக ஆட்சிய கவிழ்தீங்க
6. இவை குறியீட்டு பொருட்கள். நேரடியாகப் பொருள் கொளவது தவறானது.
5. இதுவும் அப்படித்தான். பரசுராமன், ராமன் முதலானோர் சூரிய வம்சவளியினர். பீஷ்மன் சந்திர வம்சவளி. அதாவது அதனைத் தொழுபவர்கள். கர்ணனது தாய் சத்திரிய குலத்திலும் தந்தை சூரியனுமாகவே (அதாவது சூரிய வம்சம்) இருப்பதால் அவன் கலப்பினம். எல்லாவற்றுக்கும் மேல் மேலசாதியை தந்தையாகப் பெற்றவன். இவனது தொழில் மனு வகுத்தபடி போர் கிடையாது. எனவே பரசுராமன் மறுக்கிறார்.
4. வழிப்பறி செய்வதாக குறிப்பிடப்படுபவர் வியாசர் என நினைக்கிறேன். என்ன தொழில் செய்தாலும் தன்னைப் பிற்காலத்தில் புகழ்ந்து பாடும் ராமாயணத்தை இயற்றப் போகும் வால்மீகியையும், தனக்காக தூது போகும் திராவிடனை (குறியீடாக அனுமன் குரங்கு)யும், சுக்ரிவ திராவிட குரங்கையும், தின்ற சோற்றுக்கு துரோகம் இழைக்கும் விபீடணனாலும் தனக்கு உதவியனையும் கொல்வதற்கு ராமன் கேணயனா… சம்பூகன் மரபை மீறுகிறான். அதாங்க சத்திரிய தொழிலுக்கு ஆசப்படுறான். அப்புறம் எப்படி சமூகம் தழைக்கும். அதற்காகத்தான் தண்டனை.
3. வாழ்க்கையை பல பருவங்களாகப் பிரிப்பதில் மதநிறுவனங்களுடைய தோற்றத்துக்கு முந்தியது 14 ஆண்டுகளாகப் பிரிப்பது. முதல் 14 ஆண்டுகள் சிறுவர் பருவம், அடுத்த 14 ல் வாலிப பருவம், அடுத்த 14 ல் குடும்ப பருவம், அடுத்த 14 ல் பேறு பெறுதல், அடுத்த 14 இல் பிடித் ஒன்றிற்கு போதல் என இருந்தது. இதற்கான ஆதாரங்களை பல ஒப்பீடுகளுடன் நாமும் காண முடியும். அவற்றை தமது தேவைக்கேற்ப மத நிறுவனங்களுடன் சாதிய அமைப்புகள் மாற்றி அமைத்துள்ளன• 1 + 4 = 5 என்ற எண்ணிய்ல் கணக்கீடும் இதற்கு ஒரு காரணம். 28 வயதில் பின் ராமனை காட்டுக்கு அனுப்பி குடம்ப பருவத்தை காட்டில் கழித்தல், அதாவது பின்னோக்கி போகத் தள்ளுவது என்ற தன்மையால் அவனது பிற்காலத்தையும் தீர்மானிப்பது என கைகேயி முடிவு செய்கிறாள். தற்போது ஆயுள்தண்டனை என்பது கூட இந்தியாவில் 14 ஆண்டு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சுக்ராச்சாரியார் ஒரு தொன்ம்ம். புராணத்தில் ய்யாதியின் முதுமைக்கு அவரைக் காரணம் காட்டுவதும், கசனுக்கு சாகாவரம் அளிப்பதற்கான மந்திரத்தை அளித்த்தாக சொலவதும் ஆழிப்போரழிவின்போது காப்பாற்றிய ஒரு சாமானிய துடுப்புக்காரனை உங்களுக்கு ஞாபகப்படுத்தியிருக்கும். நோவாவின் பேழையை இயக்கிய சுக்ராச்சாரி என்று கூட சொல்ல்லாம்.
முதலி இரண்டுக்கும் பௌத்த்த்தை சீரணித்த பார்ப்பனியத்தை புரிந்து கொண்டாக வேண்டும்.
December 2, 2009 at 7:59 மு.பகல்
10.thej singh is a correct word.Raja Tej Singh, popularly known in Tamil as Thesingu Raasan.
December 3, 2009 at 7:41 பிற்பகல்
ஜாதி இரண்டொழிய வேறில்லை என்று பாடிய அவ்வையார் எப்படி குலத்தளவே ஆகுமாம் குணம் என்றும் பாடுகிறார்?
அவ்வையாருக்காக ஒரு சப்பை கட்டு: இட்டார் ஒரு குலம் – இடாதார் ஒரு குலம். இந்த குலத்திற்கு ஏற்றார் போல் தான் பிச்சை கிடைக்கும் என்று சொல்கிறாரோ என்னவோ? (அந்த காலத்தில் ரெஃபெர் டூ மை ”நல்வழி” என்று ”மூதுரை”யில் லிங்க் கொடுக்கும் பழக்கம் எல்லாம் இருந்திருக்காதே!)
December 4, 2009 at 2:02 மு.பகல்
Manu Smriti – There have been many and most have disappeared.There was no single text that governed conduct those days.Often it was the context and the power equation that decided the outcome.To attribute all evils to one text is to make a devil out of that and by that potray brahmins in a bad light.