க.நா. சுப்ரமண்யம் நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய பங்களிப்பாளர்களில் ஒருவர். படிப்பது, எழுதுவது தவிர வேறு எதுவும் செய்யாதவர். அவரது பொய்த்தேவு மிக அருமையான நாவல். அவரது படித்திருக்கிறீர்களா எனக்கு மிக முக்கியமான படைப்பு – நல்ல தமிழ் படைப்புகளைப் பற்றி எனக்கு சொன்ன முதல் புத்தகம் அதுதான்.
பாரதிமணி க.நா.சு.வின் மாப்பிள்ளை. பாரதி திரைப்படத்தில் பாரதியின் அப்பா சின்ன்னச்சாமியாக நடித்தவர். அவர் க.நா.சுவை நினைவு கூரும் பதிவு ஒன்று இட்லிவடை தளத்தில் வந்திருக்கிறது. கட்டாயமாக படியுங்கள்!
தொடர்புடைய பதிவுகள்
பொய்த்தேவு
படித்திருக்கிறீர்களா?
நவம்பர் 3, 2009 at 11:10 மு.பகல்
அன்புள்ள ஆர்வி:
நன்றி. கநாசுவின் பெயரை சரியாக எழுதியிருக்கிறீர்கள். தமிழ்நாட்டில் அவர் பெயர் கா.நா.சு. என்றோ சுப்பிரமணியம் சுப்பிரமணியன் என்றோ தான் படிக்க வாய்க்கிறது!
உங்களைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ளவேண்டுமென்ற ஆவல். முடிந்தால் 9444003332 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்களேன். பேசிக்கொண்டிருக்கலாம்.
அன்புடன்,
பாரதி மணி
நவம்பர் 3, 2009 at 5:51 பிற்பகல்
க.நா.சு. பற்றி எவராவது எழுதிப் படிக்க நேரிட்டால் எனக்கு உடனே ‘மணிமேகலை’ சீத்தலை சாத்தனாரின் நினைவு வந்து விடும். அந்த அளவுக்கு தவறு கண்டால் சுட்டிக் காட்ட வேண்டும், தன் மனதுக்குப் பட்டதை உடனே சொல்லிவிட வேண்டுமெங்கிற தவிப்பில் வாழ்ந்தவர் அவர். அவரது விமரிசனங்கள் அற்புதமானவை. ஏன்?.. ‘பொய்த்தேவு’ நாவலும் கூடத்தான். கோர்வையாக மிகுந்த சுவாரஸ்யத்துடன் எழுதியிருப்பார். அந்த கிராமத் தெருக்களின் அமைப்பும், அங்கு வாழ்ந்தோருக்கிடையான உறவு நேர்த்தியும், அந்த கட்டமைப்பும் அந்தக் கால வாழ்க்கையை அப்படியே படம் பிடித்துக் காட்டுபவை. ‘கலைமகள்’ பத்திரிகை பதிப்பாக ‘பொய்த்தேவு’ புத்தகமாகவும் வெளிவந்திருக்கிறது.
நவம்பர் 7, 2009 at 6:44 மு.பகல்
உலகின் அனைவரும் கொண்டாடவேண்டிய ஒரே விழா நவம்பர்..7
ரசிய புரட்சி நாள் வாழ்த்துக்கள்.
நாகராசன்.