சிதம்பரம் கோவிலை பற்றி பெரும் விவாதம் நடக்கிறது. மகிழ்ச்சி. கொஞ்சம் பிசி, அதனால் கலந்து கொள்ள முடியவில்லை. மன்னிக்கவும். அதுதான் பதிவாகவே எழுதுகிறேன்.
மீண்டும் ரம்பம் போடுவதற்குள் எனக்கு தெரிந்த வரையில் நிலை என்ன என்பதை தெளிவாக சொல்லிவிடுகிறேன். என்னுடைய perception இதுதான் – சிதம்பரம் கோவில் நிர்வாகம் தீட்சிதர்கள் கையில் பரம்பரை பரம்பரையாக இருந்து வருகிறது. தமிழ் நாட்டில் இருக்கும் எல்லா க்ளாசிக் கோவில்களையும் போலத்தான் இங்கும் அர்ச்சனை சமஸ்கிருதத்தில் நடக்கிறது. ஆறுமுகசாமி என்ற ஒரு வயதானவர் பல வருஷங்களாக கோவில் வளாகத்தில் – ஆனால் கருவறைக்கு வெளியேதான் – தேவாரம் பாட முயற்சி செய்து வருகிறார். அவரை தீட்சிதர்கள் பாட விடாமல் தடுக்கிறார்கள், அதற்கு ஆகம விதிகளையும், சம்பிரதாயங்களையும் காரணமாக காட்டுகிறார்கள். கோர்ட்டில் கேஸ் ரொம்ப நாளாக நடக்கிறது. சமீபத்தில் ஒரு நீதிபதி கோவில் நிர்வாகத்தை அரசு ஏற்க வேண்டும் என்றும் தேவாரம் பாட தடை விதிக்கக் கூடாது என்றும் தீர்ப்பு வழங்கினார். தீட்சிதர்கள் இதை ஏற்க மறுத்து மேல் முறையீடு செய்திருக்கிறார்கள்.
இதற்கு மேல் என் யூகம் இது – தமிழில் பக்தர் விருப்பப்பட்டால் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று சட்டம் இருந்தாலும் கருவறைக்கு வெளியே பாடியதற்கே அடி உதை என்றால் இந்த தமிழ் அர்ச்சனை பிசினஸ் எல்லாம் இங்கே நடக்கப்போவதில்லை. இது யூகம்தான் என்பதை மீண்டும் வலியுறுத்தி சொல்கிறேன்.
என் perception தவறாக இருந்தால் என் முடிவுகளும் தவறாக இருக்கலாம். நிலை இது இல்லை என்றால் விஜயராவன், வித்தகன், அரை டிக்கெட், கரிகுலம் மற்றும் தெரிந்தவர்கள் யாராக இருந்தாலும் எடுத்து சொல்லுங்கள்.
தமிழ் நாட்டு கோவிலில் (மசூதியில், சர்ச்சில்) பக்தன் விருப்பப்பட்டால் தமிழில் வழிபாடு நடத்தும் உரிமை வேண்டும். அவ்வளவுதான். அதனால் சமஸ்கிருதத்தில்(அரபிக்கில், லத்தீனில்) வழிபாடு செய்யக்கூடாது என்பதில்லை. அது கும்பிடுபவர் இஷ்டம். By default, தமிழில் நடக்கவில்லை என்றால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. நான் கேட்டால் தமிழில் நடக்க வேண்டும், அவ்வளவுதான். என் பெண்ணுக்கு தமிழ் ததிங்கினத்தோம், அவளுக்கு ஆங்கிலத்தில் வழிபட முடிந்தால் நன்றாக இருக்கும். என் கண்ணில் விஷயம் இவ்வளவுதான்.
சிதம்பரம் பாடல் பெற்ற ஸ்தலம். தேவாரமே அங்கேதான் இருந்ததாம். அங்கே தேவாரம் பாடுவது தவறு என்பது மிக distasteful ஆக இருக்கிறது.
சிதம்பரம் பெரிய கோவில். அங்கே வரும் பக்தர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. கடமை இருந்தால் நிர்வாக உரிமையும் அரசுடையதுதான். தீட்சிதர்களுக்கு நிர்வாகத்தில் பங்கு இருக்கத்தான் வேண்டும். அது அவர்களுக்கு மறுக்கப்படக்கூடாது. முக்கால்வாசி தீட்சிதர்களுக்கு கோவில் இல்லை என்றால் வாழ வேறு வழி இல்லாமல்தான் இருக்கும். புறம்போக்கு நிலத்தில் பத்து வருஷம் குடி இருந்தால் அரசு பட்டா போட்டு கொடுக்க வேண்டும் என்று சொல்வது எவ்வளவு சரியோ, அதை விட பல மடங்கு பல நூறு வருஷம் இந்த கோவிலை நிர்வகித்த தீட்சிதர்களுக்கு கோவில் நிர்வாகத்தில் பங்கு இருக்க வேண்டும் என்று சொல்வது சரி. ஆனால் கோவில் தீட்சிதர்கள் சொந்த சொத்து இல்லை என்பது அவர்களுக்கு தெளிவாக உணர்த்தப்பட வேண்டும்.
அப்புறம் நாத்திகர்கள் இதில் தலையிடக்கூடாது என்று சொல்வது எனக்கு புரியவே இல்லை. கேசை விசாரிக்கும் நீதிபதி நாத்திகராக இருந்தால் தீர்ப்பு தவறாகிவிடுமா? ஆத்திகராக இருந்தால் தீர்ப்பு சரியாகத்தான் இருக்கும் என்று காரண்டி உண்டா? தீட்சிதர்கள் தேவாரம் பாடக்கூடாது என்று எத்தனை ஆத்திகரை கேட்டு முடிவெடுத்தார்கள்? நந்தனார் உள்ளே வரலாமா கூடாதா என்று என்ன வாக்கெடுப்பா நடந்தது? இந்த கோவில் பொது சொத்து, அதனால் நாத்திகர், ஆத்திகர், முஸ்லிம், கிருஸ்துவர் எல்லாருக்கும் கருத்து சொல்ல உரிமை இருக்கிறது. கோவிலை நடத்த தீட்சிதர்கள், அரசு அதிகாரிகள், பொது மக்களின் பிரதிநிதிகள் எல்லாரும் சேர்ந்த ஒரு குழு ஏற்படுத்தி, அவர்கள் அரசியல் சட்டத்துக்குட்பட்டு முடிவெடுக்கட்டும். இந்த மாதிரி நாங்களே முடிவு செய்துகொள்வோம், “அந்நியர்கள்” தலையிடக்கூடாது என்றால் மீண்டும் அமிர்தசரஸ் தங்கக் கோவில் ஆயுதக் கிடங்காகலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். (இன்று அமிர்தசரஸ் நிர்வாகத்தில் அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் இருக்கிறார்களா என்று தெரியாது என்பதையும் சொல்லி விடுகிறேன். அதை ஒரு உதாரணமாகத்தான் சொல்கிறேன்.) “அந்நியர்களான” ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இருந்தபோதுதான் உடன்கட்டை சட்ட விரோதமானது, சாரதா சட்டம் கொண்டு வரப்பட்டது. எங்கள் மத விஷயத்தில் தலையிடாதீர்கள் என்று அப்போதும் பலரும் கத்தத்தான் செய்தார்கள். தவறு நம் மேல் இருக்கும்போது “அந்நியர்” அதை எடுத்து சொன்னால் நாம் defensive mode-க்கு போக வேண்டியதில்லையே?
மறுமொழிகளில் எழுப்பப்பட்ட சில கருத்துகளுக்கு என் மறுமொழிகள் கீழே.
முரளி சொன்னதுபோல் ஓரளவு பழக்கம் உள்ள பதிவர்கள், மறுமொழி எழுதுபவர்கள் எழுதுவதை நான் by default, உண்மையாகவே கருதுபவன். எல்லாருக்கும் benefit of doubt உண்டு, பொய் சொல்கிறார்கள் என்று எனக்கு நிச்சயமாக தெரியாத வரை எழுதுபவர்கள் எல்லாரும் நேர்மையனாவர்கள்தான்.
விஜய் என்பவர் எழுதிய மறுமொழியில் தன் நண்பன் திருவாசகம் பாடியதை தானே பக்கத்தில் நின்று பார்த்ததாகவும் யாரும் ஒன்றும் சொல்லவில்லை என்றும் சொல்லி இருந்தார். ஆறுமுகசாமி அர்ச்சகர் பூஜை செய்யும்போது அவர்களை தொந்தரவு செய்யும் விதமாகவே பாடுவதாகவும் அதனால்தான் பிரச்சினை என்றும் எழுதி இருந்தார். அப்படி ஆறுமுகசாமி செய்வதாக இருந்தால் என் கேஸ் பாதி க்ளோஸ். அப்படி தொந்தரவு செய்வதற்கு ஆறுமுகசாமிக்கு எந்த உரிமையும் இல்லை. அப்புறம் தமிழ் அர்ச்சனை, கோவில் நிர்வாகம் இரண்டு மட்டும்தான் மிச்சம்.
விஜயராகவன் சாமிக்கு எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்பது theological problem என்று சொல்கிறார். அவர் சொல்வதில் எனக்கு இசைவில்லை, ஆனால் அது பக்தர்களின் பிரச்சினை என்றால் ஆறுமுகசாமி பக்தர்தானே? அவருக்கு நாத்திகர்கள் சப்போர்ட் செய்யும் நிலை வந்ததற்கு காரணம் தீட்சிதர்கள்தானே என்று தோன்றுகிறது.
கார்த்திக், மற்றும் சிலர் இஸ்லாம், கிருஸ்தவ மதங்களை கண்டு அரசு பம்முவதை பற்றி சொல்லி இருந்தார்கள். அதில் உண்மை இருக்கிறது. ஷா பானோவுக்கு இழைக்கப்பட்டது இந்த சிதம்பரம் விஷயத்தை விட பல மடங்கு பெரும் அநீதி. ம.க.இ.க., அரை டிக்கெட், பெரியார் உட்பட யாரும் மசூதியில் அரபி மட்டும் கூடாது, தமிழிலும் தொழுகை நடத்த உரிமை வேண்டும் என்று சொல்லி என் வாழ்க்கையில் நான் கேட்டதில்லைதான். ஆனால் இஸ்லாம் விஷயத்தில் அரசு தவறு செய்கிறது, அதனால் ஹிந்துக்கள் விஷயத்திலும் தவறு செய்ய வேண்டும் என்ற வாதம் எனக்கு உண்மையிலேயே புரியவில்லை. இதை திருத்த வேண்டும், ஆனால் அதை மறந்துவிடாதீர்கள் என்றல்லவா பேச வேண்டும்?
அரை டிக்கெட் தீட்சிதர்கள் கோவிலில் தண்ணி அடிக்கிறார்கள் என்றெல்லாம் சொல்கிறார். இதெல்லாம் பெரிய குற்றச்சாட்டு. ஆதாரம் இல்லாமல் பேசமாட்டார் என்று நம்புகிறேன்.
அப்புறம் அரை டிக்கெட் கருவறைக்குள் நுழைய முயன்றோம், தாக்கினார்கள் என்று எழுதி இருக்கிறார். கருவறைக்குள் அங்கே பணி புரியும் அர்ச்சகர்களை தவிர வேறு யாரும் நுழையக்கூடாது என்று தமிழ் நாட்டு கோவில்களில் விதி இருக்கிறது. இது பணி சார்ந்த விதி – ஜாதி சார்ந்த விதி இல்லை. பூணூல் போட்டிருந்தால் உள்ளே அழைத்து சென்றுவிடுவதில்லை. விதியை மீறினோம், தாக்கினார்கள் என்றால் முதல் தவறு அரை டிக்கெட் மேல்தான் இருக்கிறது. வட இந்திய கோவில்களில் கருவறைக்குள் செல்லலாம் என்று சொல்கிறார்கள். காசியில் கூட அப்படித்தானாம். அங்கும் நான் பார்த்த நகர்புறக் கோவில்களில் பூணூல் போட்டிருக்கிறானா, அப்போதுதான் கருவறைக்குள் வரலாம் என்று பார்ப்பதில்லை. சில விஷயங்களை கோவிலின் சம்பிரதாயம் என்று விட்டுவிட வேண்டும். ஏன் சிதம்பரம் கோவிலில் கடா வெட்டுவதில்லை, ஏன் ஸ்ரீரங்கம் கோவிலில் விபூதி கொடுப்பதில்லை என்றெல்லாம் கேட்பதில் அர்த்தமில்லை. கோவில் என்ன McDonald’s-ஆ, எல்லா கோவிலிலும் ஒரே மாதிரி இருக்க? பிறப்பால் வித்தியாசம் பார்க்கவில்லை என்றால் போதும்.
அப்புறம் கரிகுலம் Reformation பற்றி கொடுத்த தகவல் தவறு. விஜயராகவனும் இதை சுட்டி காட்டி இருக்கிறார்.
வித்தகன் கேரளாவில் சட்டையை கழற்றிவிட்டு கோவிலுக்கு வர வேண்டும் என்று சொல்வது பூணூல் இருக்கிறதா இல்லையா என்று பார்க்கத்தான் என்கிறார். இது எனக்கு கொஞ்சம் ஓவராக தெரிகிறது.
ஹரிஜன் என்றால் “ஹரிஜன்களுக்கு” patronizing ஆக இருக்கிறது, தலித் என்றால் அப்படி இல்லை, அதனால் தலித் என்று மாற்றி சொல்ல சொல்கிறார்கள். ஒரு காலத்தில் மால்கம் எக்ஸ் கூட நீக்ரோ என்றுதான் பேசினார். இன்று ஆஃப்ரிகன் அமெரிக்கன் என்று சொல்கிறோம். இது கேட்பவர்கள் மன நிலையை பொறுத்தது. அவ்வளவுதான், விஜயராகவன்! எனக்கு (இன்னும் பலருக்கும்) பார்ப்பனீயம் என்ற வார்த்தை தவறனாதகவும் offensive ஆகவும் தெரிகிறது. அதற்கு பதிலாக ஜாதீயம் என்று சொல்லலாம் என்று பல முறை சொல்லி பார்த்தேன். ஆனால் அதை வினவு குழுவினரும் அரை டிக்கெட்டும் விடுவதாக இல்லை, அதுதான் கொஞ்சம் சோகமாக இருக்கிறது.
கரிகுலம், தமிழில் எழுதுங்களேன்! தமிழ் பற்றி இவ்வளவு தூரம் பேசும் நீங்கள் ஆங்கிலத்தில் எழுதுவது ironical ஆக இருக்கிறது. அப்புறம் நீங்கள் சொல்வது போல எல்லா இடங்களிலும் தாய்மொழி வழிபாடு வென்றுவிடவில்லை. யா இலாஹா இல்லல்லாஹா மொஹம்மதுல்லா சூலுல்லாஹி என்றுதான் சொல்கிறார்கள், யாரும் குரானை தமிழில், ஆங்கிலத்தில், சமஸ்கிருதத்தில் ஓதி கேட்டிருக்கிறீர்களா என்ன? தமிழில் வழிபட உரிமை மறுக்கப்படுகிறது என்பதற்காக எதிர் தரப்பை தவறாக ஏணியில் ஏற்றாதீர்கள்! சமஸ்கிருதத்தில் வழிபடுவது உங்களுக்கு அவமானமாக இருக்கலாம். எனக்கு நிச்சயமாக இல்லை. நானும் தமிழன்தான். என் கண்ணில் சமஸ்கிருதம் தேவ பாஷை இல்லை. தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்பது என் preference. சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்தால் நான் காதை மூடிக்கொள்ள மாட்டேன். Generalize செய்யாதீர்கள். அப்புறம் வாக்கெடுப்பு நடத்தினால் தமிழர்கள் சமஸ்கிருத வழிபாட்டையே விரும்புவார்கள் என்று எழுதி இருந்தீர்கள். நான் தமிழுக்கு வோட்டு போடுவேன், ஆனால் அது அவரவர் இஷ்டம். நான் விரும்பினால் தமிழில் வழிபாடு நடக்கும் என்ற நிலையை – என்ற நிலையை மட்டுமே – நான் வேண்டுகிறேன். தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, உருது எல்லாம் வேண்டாம் – தமிழ் நாட்டில் விருப்பபட்டால் தமிழில் வழிபாடு என்பது கிடைத்தால் போதும். அப்புறம் சாதாரண மக்கள் ஒரு தவறான தலைவனால் வழி தவறுகிறார்கள் என்றால், அவர்களுக்கு சரியான கருத்தை எடுத்து சொல்லுங்கள்!
வித்தகன், சமஸ்கிருதம் கற்றுக்கொள்ள விரும்பி நான் ஒரு முறை ராமகிருஷ்ணா மடம் சென்றிருந்தேன். யார் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். வருபவர்கள் அனேகமாக வயதான ரிடையர் ஆன பார்ப்பனர்கள் மட்டுமே.
ஒரு காலத்தில் நீங்கள் சொல்வது உண்மையாக இருந்திருக்கலாம். அப்போது கூட வேதம் படிப்பதற்குத்தான் கட்டுப்பாடு இருந்தது என்று சொல்கிறார்கள், சமஸ்கிருதம் படிக்க இல்லை. வால்மீகி பார்ப்பனர் இல்லை என்பதை நினைவுபடுத்துகிறேன். அப்புறம் நீங்களே இப்படி உங்களுக்கு கலைஞர்தான் சரி, இதனால்தான் பிராமணர்கள் அமேரிக்கா சென்றுவிடுகிறார்கள் என்றெல்லாம் எழுதினால் நான் யாரை நொந்து கொள்வது?
தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டு நடப்பு
தொடர்புடைய பதிவுகள்:
சிதம்பரம் கோவில் I
சுப்ரமணிய சாமியுடன் சிதம்பரம் கோவில் பற்றி விவாதம்
ஆகஸ்ட் 3, 2009 at 9:10 மு.பகல்
“விஜயராகவன் சாமிக்கு எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்பது theological problem என்று சொல்கிறார். அவர் சொல்வதில் எனக்கு இசைவில்லை”
ஆர்வி, அது தியோலாஜிகல் பிரச்சினை – அதாவது மத சம்பந்தப் பட்ட விஷயம் – இல்லை என்றால், வேறு எந்த பிரச்சினை என விளக்குங்கள். பொருளாதார பிரச்சினையா, தனி மனித உரிமை பிரச்சினையா, சமூக பிரச்சினையா, லா அண்ட் ஆர்டர் பிரச்சினையா, சுகாதார பிரச்சினையா, விஞ்ஞான பிரச்சினையா, தருக்கப் பிரச்சினையா, ?
நீங்கள் “அப்புறம் நாத்திகர்கள் இதில் தலையிடக்கூடாது என்று சொல்வது எனக்கு புரியவே இல்லை. கேசை விசாரிக்கும் நீதிபதி நாத்திகராக இருந்தால் தீர்ப்பு தவறாகிவிடுமா? ” என சொல்லும்போது இரு விஷயங்களை குழப்பியுள்ளீர்கள். நீதிமன்றம் போற விஷயங்கள் legal problem. நீதிமன்றத்திற்கு போகின்றதிலேயே, இரு வாதிகளும் அது நீதிப் பிரச்சினை, சட்டப் பிரச்சினை என ஒத்துக் கொள்கிறார்கள். எந்த நீதிபதியும் சடங்குகள் எந்த மொழியில் இருக்க வேண்டும், சடங்குகள் எப்படி இருக்க வேண்டும் எந்த வாதத்திற்க்குள் போக மாட்டார். – அதாவது `சமயசார்பற்ற` சட்டமுறையில் இயங்கும் இந்திய நீதிபதிகள்.
ஆகஸ்ட் 3, 2009 at 9:48 மு.பகல்
”விஜயராகவன்! எனக்கு (இன்னும் பலருக்கும்) பார்ப்பனீயம் என்ற வார்த்தை தவறனாதகவும் offensive ஆகவும் தெரிகிறது.” நான் பார்ப்பனீயம் என்பது கெட்ட வார்த்தை என்று சொல்லவில்லை. ஆனால் – அதை தவறான இடங்களில் தெரிந்தே – செய்வதை கண்டிக்கிறேன்.
உதாரணமாக – பார்ப்பனர்களை வைத்து ஒருவர் தன் கல்யாணத்தை நடத்துகிறார், அதை பார்ப்பன முறை சடங்குகள் வைத்து நடத்துகிறார் (கோவலனின் திருமணம் போல !) – அது பார்ப்பனீயம் என்பேன்.
ஆனால் ஒரு கிராமத்தில் படுகொலை நடக்கிரது- கீழ்வேண்மணி படுகொலையையே வைத்துக் கொள்ளூங்களேன் – அதை பார்ப்பனீயம் என சொல்லுவது அரசியல் மிஸ்சிஃப். அது `பிராமணீயம்` என்ற வார்தையினால் மறைமுகமாக பிராமணர் மேல் பழி போடும் சதி.
பொதுவாக தமிழக அரசியல் பேச்சில், பார்ப்பனீயம் என்பது – scapegoating attempt. சமூக , அரசியல் பிரச்சினைகளை ஒழுங்காமல் ஆராயாமல், பார்ப்பனர் மீது கொந்தளிபுகளை திசை திருப்புவதற்கு பயன்படும் வார்த்தை `பார்ப்பனீயம்`. What is taking place is Tamilnadu is polictics of scapegoating. Brahmins are the scapegoats and whipping boys for all the social and political problems. Blaming பார்ப்பனீயம் is a convenient way and the word பார்ப்பனீயம் is handy for scapegoating.
இந்த ஸ்கேப்கோடிங்கிற்கு நல்ல உதாரணம்
http://thoughtsintamil.blogspot.com/2007/10/blog-post_22.html#links ஞாநியும் சிநேகிதர்களும் Monday, October 22, 2007
http://thoughtsintamil.blogspot.com/2007/10/blog-post_21.html#links ஞாநிக்கு எதிரான கண்டனக் கூட்டம் – ஒலிப்பதிவு Sunday, October 21, 2007
பார்ப்பனீயம் என்ற வார்த்தையை ஏன், யார், எப்படி, எங்கு பயன்படுத்துகிறார்கள் என்பதை பார்த்து அப்ஜெக்ஷனபிளா இல்லையா என தீர்மானியுங்கள். எனக்கு Politics of Scapegoating எந்த விதத்திலையும் இசைவு இல்லை. `பார்ப்பனீயம்` Politics of Scapegoating என்பதின் முக்கிய உபகரணம்.
விஜயராகவன்
ஆகஸ்ட் 4, 2009 at 5:34 மு.பகல்
பார்ப்பனீயம் என்பது மனுதர்மத்தை அடிப்படையாகக் கொண்டு வர்னாசிரம தர்மமான “நான்கு வர்ணங்கள்” என்ற மனித இனத்திற்கே இழிவான நடைமுறையை கடைபிடிப்பதே. இதன் அடிப்படையில் எரிஞ்சியூர் கோபாலகிருட்டிணன், கீழ்வெண்மனியில் 43 தாழ்த்தி வைக்கப்பட்டோரை,தனக்கு கைகட்டி சேவகம் செய்தவர்கள் தன் சத்திரிய அதிகாரத்திற்கு எதிராக, நான்கு வர்ணங்களில் சூத்திரனாக(விபச்சாரியின் மக்களாக) உள்ளவர்கள் எதிர்த்து போராடியதால் எரித்துக் கொன்றான்.எனவே அவனின் செயல் பார்ப்பனீயமே. பார்ப்பனீயம் என்றால் பார்ப்பனனை மட்டுமே குறிப்பதில்லை. பார்ப்பனீயத்தை நடைமுறை படுத்துபவர் அனைவருமே பார்ப்பனீயர்கள்தான்.
ஆகஸ்ட் 4, 2009 at 9:33 மு.பகல்
கருணநிதிக்கு ரொம்ப வயசாச்சே, உடம்பு தள்ளலையே, ஏன் பதவியில் இருந்து விலகி, தன் வாரிசுக்கு பதவி கொடுக்க கூடாது என்று ஒருவர் எழுதினால், அதற்காக `பார்ப்பனீயத்தை` ஏசும் கூட்டம் நடந்தது. அதிலிருந்தே தெரியவில்லையா, அது `பார்ப்பனீயம்` ஆளும் வர்ககத்தின் ஒரு பேச்சு அடக்கு முறை உபாயம் என்று.
ஆபிரகாம் லிங்கன் சொன்னார் `நீங்கள் சில பேரை எக்காலமும் ஏமாற்றலாம், எல்லோரையும் சில காலம் ஏமாற்றலம், ஆனால் எல்லோரையும் எக்காலமும் ஏமாற்ற முடியாது` என்று.
இனிமேல் `பார்ப்பனீயம்` என்ற பெயரில் ஆளும் வர்கத்தின் மேலுள்ள விமரிசனத்தை அடக்க முடியாது.
மத்தியில் காங்கிரஸ், பாமக கூட்டணி, தமிழ்நாட்டில் திமுக அவை மத்திய அரசின் ஸ்ரீலங்கா கொள்கையை தீர்மானித்து, ஈழப் போருக்கு புலிகளை அழித்து முடிவு கொண்டு வந்தன. அதனால். அதை `திராவிடீயம்` என தானே சொல்ல வேண்டும், ஏன் பார்ப்பனீயம் என பார்ப்பனர்களை சாட வேண்டும். அதிலிருந்தே தெரியவில்லையா, `பார்ப்பனீயம்` என்ற சொல் ஏமாற்றுகாரர்களின் தூபம் என்று. அரசியல் ஏமாற்றுகாரர்களை மற்றவர்களை `பார்ப்பனீயன்` என திசைதிருப்பி , தங்கள் அட்டூழியங்களை தொடர்வர்.
ஆகஸ்ட் 3, 2009 at 10:22 மு.பகல்
//பல நூறு வருஷம் இந்த கோவிலை நிர்வகித்த தீட்சிதர்களுக்கு கோவில் நிர்வாகத்தில் பங்கு இருக்க வேண்டும் என்று சொல்வது சரி//
அதேபோல பல நூறு வருடங்கள் நிர்வகித்த ராஜா ராஜனின் வம்சதிடம் சோழ மண்டல நிர்வாகமும், அதே பல பாண்டியனோட வாரிசுகளிடம் பாடியநாட்டின் நிர்வாகமும் கொடுக்கணும்ன்னு சொல்லுவிங்க போல ?
//ம.க.இ.க., அரை டிக்கெட், பெரியார் உட்பட யாரும் மசூதியில் அரபி மட்டும் கூடாது, தமிழிலும் தொழுகை நடத்த உரிமை வேண்டும் என்று சொல்லி என் வாழ்க்கையில் நான் கேட்டதில்லைதான்//
முகமதியர்கள் விஷயம் வேறு அவர்கள் விருப்பப்பட்ட மொழியில்தான் பிராத்தனை செய்கின்றனர். எந்த முகமதியரும் தமிழ்லதான் பிராத்தனை செய்யனும்ன்னு போர் கொடி தூக்கல. அதனால அவர்களை இங்கு இழுப்பது தேவையில்லாதது.
*********
அர்ச்சனை எந்த மொழியில் செய்யவேண்டும் என்பது கோவிலுக்கு செல்பவர்களின் விருப்பம்,
என்னைபோன்ற தமிழர்கள் விரும்புவது தமிழில் தான், இல்ல இல்ல அது பீத்த மொழி பன்னபடாதுன்னு சொல்லுரப்பதான் விஷயம் பெருசாகுது. எந்த மொழியில் அர்ச்சனை செய்து இறைவனை வணங்கவேண்டும் என்று விருப்பப்படுவது எனது பிறப்புரிமை,
சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்வது தவறல்ல, அது அவர் அவர் விருப்பத்தை பொருத்து, “தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்” அப்படின்னு பலகை வக்கிரத்துக்கு பதிலா “இங்கு சமஸ்கிருதத்திலும் அர்ச்சனை செய்யப்படும்” அப்படின்னு வக்கினும் அவ்வளவுதான்.
“பக்கதனின் மொழி எவ்வழியோ, பகவானின் மொழியும் அவ்வழி”
ஆகஸ்ட் 3, 2009 at 11:17 மு.பகல்
[...] here http://koottanchoru.wordpress.com/2009/08/03/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%… read more [...]
ஆகஸ்ட் 3, 2009 at 1:50 பிற்பகல்
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான http://www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
ஆகஸ்ட் 3, 2009 at 4:22 பிற்பகல்
மதவாதிகள் சொல்வதையெல்லாம் சரித்திரம் என்றெல்லாம் நம்ப முடியுமா?
ஆத்திகர் ஒருவர் காஞ்சி மடத்திற்க்கு இரண்டாயிரம் வருட பாரம்பரியமெல்லாம் கிடையாது என்று ஆணித்தரமாக எழுதுகிறார். If you google “real history of Kanchi” you can see the link.இது குறித்து ஆத்திகர்கள் யாரும்
தமிழ் பதிவுலகில் யாரும் கருத்துச் சொல்லவவில்லை! புராணங்களை ஆதாரம்
என்று நம்பச் சொல்பவர்களை என்ன சொல்வது?
ஆகஸ்ட் 4, 2009 at 1:56 மு.பகல்
//வித்தகன் கேரளாவில் சட்டையை கழற்றிவிட்டு கோவிலுக்கு வர வேண்டும் என்று சொல்வது பூணூல் இருக்கிறதா இல்லையா என்று பார்க்கத்தான் என்கிறார். இது எனக்கு கொஞ்சம் ஓவராக தெரிகிறது.//
இதை நான் வீம்புக்காக சொல்லவில்லை. உண்மையாகவே அதுதான் காரணம் என்று நம்புகிறேன். இந்தப் பழக்கத்திற்கு வேறு என்ன ஆதாரம் என்று தெரிந்தவர்கள் சொன்னால் நான் கற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்.
//ஹரிஜன் என்றால் “ஹரிஜன்களுக்கு” patronizing ஆக இருக்கிறது//
அது மட்டுமல்ல RV. “கடவுளின் குழந்தைகள்” என்று சொல்வதன் மூலம் கடவுள் இருப்பதாக அடிக்கோடிடுவதோடு, மனிதர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு மாதிரி படைக்கப் பட்டிருப்பதாகவும் (“God’s special children”???) அந்தப் பதம் நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது. கடவுளை இந்தப் பேர் வைக்கும் விளையாட்டில் சேர்க்காமல் விட்டு விடுவது better.
//வித்தகன், சமஸ்கிருதம் கற்றுக்கொள்ள விரும்பி நான் ஒரு முறை ராமகிருஷ்ணா மடம் சென்றிருந்தேன். யார் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்.//
RV. ஒரு சக்கிலியருக்கோ பறையருக்கோ பள்ளருக்கோ எந்த மடத்திலாவது வட மொழி கற்றுத் தருவார்கள் என்று நினைக்கிறீர்களா? உங்கள் நல்ல மனதுக்கு என் வாழ்த்துக்கள். முதலில் வாங்கிக் கொள்ளும் காசுக்கு சரியான குவளையில் டீ கொடுக்கட்டும். ஊர் கிணற்றில் தண்ணீர் எடுக்க அனுமதிக்கட்டும். அதன் பின் வட மொழி கற்றுக் கொடுக்கும் கட்டிட வாசலுக்குள் நுழைய அனுமதிப்பார்கள் என்று நம்புகிறேன்.
//அப்புறம் நீங்களே இப்படி உங்களுக்கு கலைஞர்தான் சரி, இதனால்தான் பிராமணர்கள் அமேரிக்கா சென்றுவிடுகிறார்கள் என்றெல்லாம் எழுதினால் நான் யாரை நொந்து கொள்வது?//
எங்களுக்கு எல்லாம் தெரியும், நீ யார் சொல்ல என்கிற attitude தான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம். அந்த தொனியில் எழுதப் பட்ட இடுகைக்கு பதில் அளிக்கும் போதுதான் இப்படி சொல்லியிருக்கிறேன். Of course, I didn’t mean it.
ஆகஸ்ட் 4, 2009 at 9:36 மு.பகல்
”இந்தப் பழக்கத்திற்கு வேறு என்ன ஆதாரம் என்று தெரிந்தவர்கள் சொன்னால் நான் கற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்.”
வித்தகன் the onus is on you to substantiate your allegations instead of asking others to disprove it.
ஆகஸ்ட் 4, 2009 at 11:21 மு.பகல்
அதான் தெளிவா சொல்லியிருக்கேனே விஜயராகவன். வீம்புக்காக சொல்லலைன்னு. எனக்கு logicalஆ வேற காரணம் தோண மாட்டேங்குது. அதே சமயம் சட்டய ஏன் கழட்ட சொல்றாங்கன்னு உங்க சார்புல ஒரு காரணம் தெளிவா சொன்னீங்கன்னா நான் நம்பத் தயாரா இருக்கேன். இந்த தொனியில பேசும்போது onus எல்லாம் சொன்னீங்கன்னா பயமா இருக்கு. இந்த விஷயத்துல என் பேச்ச நான் எப்ப disprove பண்ண சொல்லி challenge பண்ணினேன்? நீங்க என்ன நம்பணும்னு, என் பேச்ச ஒத்துக்கணும்னு அவசியம் இல்ல. ஆனா நீங்க அது காரணம் இல்ல, எல்லா சாதிக்காரர்களும் கோவிலுக்குள்ள வரலாம்னு ஆதி காலத்திலருந்தே கேரளக் கோவில்கள்ள இருந்திருக்கும்னு நம்பறீங்களா?
ஆகஸ்ட் 4, 2009 at 11:34 மு.பகல்
வித்தகன்
எல்லா ஹிந்து மத சடங்குகளிலேயும், ஒரு பொதுவான ரூல் மேல் சட்டையை கழற்ற வேண்டும், செருப்பு இருக்கக் கூடாது என். அது தெய்வங்களுக்கு முன்னால் மனிதன் பவ்யத்துடன் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தின் பிரதிபலிப்பு என நினைக்கிறேன். சில இடஙளில் இந்த கொள்கை தீவிரமாக கடைபிடிக்க படுகிரது, அவ்வளவுதான். அதில் கேரளா கோவில்களும் சேர்க்கை. அதுதான் என் விளக்கம்.
இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் எந்த கொள்கையை கடைப்பிடிக்கிறார்கள் என்பது அந்த பகுதியின் விசேஷம்.
ஆகஸ்ட் 4, 2009 at 11:56 மு.பகல்
செருப்பு ஏன் வேண்டாமென்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. விலங்குகளின் தோலால் செய்யப் பட்ட செருப்புகள் உள்ளே வருவதைத் தடுக்கவும், செருப்பின் அடிபாக அழுக்குகள் கோவிலினுள் பரவாமலி்ருக்கவும் தடை செய்யப் பட்டிருக்கலாம்.
ஆனால் இந்து சடங்குகளில் மேல் சட்டை போடாமல் இருப்பது பவ்யத்தின் பிரதி பலிப்பாக இருப்பதோடு மட்டுமல்லாமல் சடங்கு நடை பெறும் போது பூணூலை இடம் வலமாக மாற்றி அணிவதற்காக இருக்குமோ? சில சமயம் எட்டு, சில சமயம் நாலு என பூணூலின் பிரிகளை சேர்த்து, பிரித்து, தோள் பட்டை மாற்றி அணியச் சொல்வார்களே, அதற்கு சட்டை இல்லாமல் இருந்தால்தான் வசதியாக இருக்கும் என்பதால் அந்த சம்பிரதாயம் வந்திருக்குமோ? தெரியவில்லை.
கேரளத்தில் சாதி இந்துக்கள் தாழ்த்தப் பட்டவர்களை சென்ற நூற்றாண்டின் பாதி வரை கோவில்களில் சேர்க்காதது பற்றியும் கடவுள் நம்பிக்கையுள்ள ஆனால் பிற மனிதர்களை மதிக்கும் மனிதர் என்ற முறையில் ஒரு வார்த்தை எழுதி விடுங்களேன்.
பிராமணர்கள் அல்லாதவர்கள் கோவிலுக்குள் வருவதைத் தடுக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்று என்று நான் கருதுவதற்கு அடிப்படைக் காரணமே அதுதான்.
ஆகஸ்ட் 4, 2009 at 12:05 பிற்பகல்
இன்னும் ஒரு கேள்வி. சட்டை இல்லாமல் இருப்பது தான் பவ்யம் என்று ஏன் வந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
சாதி பூர்வமான காரணம் பிராமணன், பிராமணன் இல்லாதவன் என்று வித்தியாசப் படுத்திப் பார்ப்பதற்குத்தான் என்று நினைக்கிறேன்.
மற்றபடி சட்டை போடுவதற்கும் போடாததற்கும் பவ்விய ரீதியாக வேறு என்ன வித்தியாசமென்று தெரியவில்லை.
பெண்கள் சட்டை போடக் கூடாது என்று வைத்திருந்தால் சொல்லாமலே காரணம் புரிந்து விடுகிறது. எட்டாம் நூற்றாண்டுவரை திராவிடத்தில் யாரும் மேல் பாகத்தை மறைத்ததாக ஆதாரமே இல்லை. கோவில் சாமி சிலைகளும் சித்தன்ன வாசல் ஓவியங்களும் சாட்சி. ஔவையாரை authentic ஆக நினைத்துப் பார்த்தால் பயமாக இருக்கிறது.
ஆகஸ்ட் 4, 2009 at 12:21 பிற்பகல்
விததகன் , நீங்கள் “செருப்பு ஏன் வேண்டாமென்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. விலங்குகளின் தோலால் செய்யப் பட்ட செருப்புகள் உள்ளே வருவதைத் தடுக்கவும், செருப்பின் அடிபாக அழுக்குகள் கோவிலினுள் பரவாமலி்ருக்கவும் தடை செய்யப் பட்டிருக்கலாம்” என எழுதுவதிலிருந்தே, நீங்கள் சொல்வது ஸ்பெகுலேஷன் என தோன்ரது. பிளாஸ்டிக், ரப்பர் செருப்புகள் போடுவதற்கும் தடைதான். சாக்ஸ் போடுவதற்கும் தடை. இந்த ‘மரியாதை முறைகள்’ தொல் காலங்களிலுருந்து வருவது என சொல்லலாம். எப்படியோ, அதற்கும் ஜாதிக்கும் தொடர்பு இல்லை.
தெந்தமிழ்நாட்டு மாவட்டங்களில் ஜாதி சண்டைகள் `கீழ் ஜாதிக்காரர்கள்` மேல்துண்டு, செருப்பு அணிய கூடாது என்ற அடிப்படையில் ஏற்பட்டுள்ளன.
பிராமண சடங்குகளிலும், வேறு ஒரு பிராமணர் இல்லாத போலும் , பிராமணர்கள் மேல் சட்டை அணிவதில்லை, செருப்பு அணிவதில்லை. உதாரணமாக கல்யாண, மரண சடங்குகளிலும் சடங்க்ய் செய்பவர் சட்டை அணிவதில்லை. அதை செய்யும் வாத்தியார்கள் எப்பொழுதும் அணிவதில்லை.
தென் இந்திய ஹிந்து பழக்கங்கள் தென் இந்தியாவின் வானிலை, கிளைமேட் அதை ஒட்டி வந்துள்ளன. இதுவே, காஷ்மீரின் சடங்குகள் செய்யும் வாத்தியார்கள் மேல் சட்டை அணிவதும் உண்டு -ன் ஏனென்றால் குளிரில் மேல் சட்டை அணியாமல் இருக்க முடியாது.
ஆகஸ்ட் 4, 2009 at 12:36 பிற்பகல்
//நீங்கள் சொல்வது ஸ்பெகுலேஷன் என தோன்ரது. பிளாஸ்டிக், ரப்பர் செருப்புகள் போடுவதற்கும் தடைதான். சாக்ஸ் போடுவதற்கும் தடை.//
“..லாம்” என்றாலே ஸ்பெகுலேஷன் தானே! பிளாஸ்டிக் ரப்பர் செருப்புகள் தோல் செருப்புக்கு சில நூறு ஆண்டுகள் கழித்து வந்தவை தான். அணியாத பழக்கம் அவற்றிற்கும் extend செய்யப் பட்டுள்ளன. பல சம்பிரதாயப் பழக்கங்கள் வேறு காரணங்களுக்காக ஆரம்பிக்கப் பட்ட விஷயங்களின் காலத்தை மீறிய எச்சங்களே. உதா: தலையை உடைத்து செய்யும் காபாலிகர் கோவில் பலி ஆதி சங்கரர் தலையிட்டு மாற்றியதில் (பலிப் பழக்கம் இல்லாத புத்த, ஜைன மதங்கள் இன்னும் பிரபலமாக இருந்ததால்) இன்றைய கபாலி கோவிலில் தேங்காய் உடைப்பதாகவும், குங்குமம் தடவிய பூசணி உடைப்பதாகவும் (ரத்த நிறத்தில்!) உரு மாறியது.
என் மாமனார் இறந்தபோது சடங்குகள் செய்விக்க வந்த அய்யர் காரியம் செய்த என் சகலையின் கையில் கம்பளி நூல் கட்டி விட்டார். அதற்கு நான் காரணம் கேட்டதற்கு ஒரு காலத்தில் தகனம் முடிந்த பின் சூட்டோடு எலும்புகளைப் பொறுக்கும் போது கம்பளத்தால் கையுறை போல சுற்றிக் கொள்வார்கள் என்றார். இப்போது அந்தத் தேவை இல்லையென்றாலும் அந்த சம்பிரதாயத்தின் எச்சம் இருக்கிறது.
மதங்களும் சடங்குகளும் தன்னை அவ்வப்போது புதுப்பித்துக் கொள்ளாததுதான் சமூகரீதியான பிழைகளுக்கு (ஹிஜாப், பல தார மணம், 200 வருடம் முன்பு வரை இருந்த சதி, 50 வருடம் முன்பு வரை இருந்த விதவைகளுக்கு அடிக்கும் மொட்டை, இன்னும் தொடரும் சாதி வேறுபாடுகள்) அடிப்படைக் காரணம். காலத்திற்கு ஏற்றாற்போல மதங்களும் மாறினால்தான் (சதியை ராஜாராம் மோகன் ராய் அழித்தது போல) நல்லிணக்கமும் அமைதியும் நிலவும்.
ஆகஸ்ட் 7, 2009 at 7:52 மு.பகல்
காசி விஸ்வநாதர் ஆலயத்தில் யார் செல்கிறார்களோ அவர்கள் காசி விஸ்வநாதரை தொட்டு அபிஷேகம் எல்லாம் செய்யலாம். இதில் எந்த ஜாதி வித்தியாசமும் பார்க்கப்படுவதில்லை. கோவிலுக்கேற்றார் போல் மரபுகள் மாறுபடுகின்றன. அதை முழு மதத்திற்கும் பொருத்தி ஒரு குறிப்பிட்ட ஜாதியை திட்டுவதில் என்ன தான் ஆனந்தம் கிடைக்கிறதோ தெரியவில்லை.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் நடக்கிறது. அந்த குறிப்பிட்ட ஜாதியின் மேல் பழியைப் போட்டுவிடுவதால் status quo maintain செய்வது இன்ன பிற “மேல்” ஜாதிகளுக்கு ரொம்பவும் வசதியாக இருக்கிறது என்பது நடை முறை உண்மை. அதே போல் இப்படி பழிப்பதனால், “கீழ்” ஜாதி மக்களை சுலபமாக வேறு மதப் போதகர்கள் இதையெல்லாம் சுட்டிக்காட்டி மதம் மாற்றுவதும் நடக்கிறது.
ஆகஸ்ட் 12, 2009 at 8:06 மு.பகல்
//காசி விஸ்வநாதர் ஆலயத்தில் யார் செல்கிறார்களோ அவர்கள் காசி விஸ்வநாதரை தொட்டு அபிஷேகம் எல்லாம் செய்யலாம். இதில் எந்த ஜாதி வித்தியாசமும் பார்க்கப்படுவதில்லை. கோவிலுக்கேற்றார் போல் மரபுகள் மாறுபடுகின்றன. அதை முழு மதத்திற்கும் பொருத்தி ஒரு குறிப்பிட்ட ஜாதியை திட்டுவதில் என்ன தான் ஆனந்தம் கிடைக்கிறதோ தெரியவில்லை.//
மரபு என்ன பெரிய புடலங்காய் வேண்டிக்கிடக்கிறது? குறிப்பிட்ட சாதிக்காரன் உள்ளே வரக் கூடாது என்று ஒரு கோவிலில் சொன்னால் அதை மரபு என்று ஏற்றுக் கொள்ள முடியுமா? பிராமணர்கள் வகுத்த சட்டம்தானே யார் உள்ளே வரலாம் அல்லது கூடாது என்பது? அப்போது அவர்களைத் திட்டாமல் யாரைத்திட்ட முடியும்? நீங்கள் பிராமணார்களுக்கு வக்காலத்து வாங்காமல் ஒட்டு மொத்த மனித சமுதாயத்தை மனதில் வைத்துக் கொண்டு சொல்லுங்கள். குறிப்பிட்ட சாதிக்காரர்கள் உள்ளே வரக் கூடாது என்ற சட்டத்தை மரபு என்ற பெயரில் ஏற்ருக் கொள்ள வேண்டுமா? மறுத்துப் போராட வேண்டுமா?
ஆகஸ்ட் 4, 2009 at 1:48 பிற்பகல்
பல இந்துக்கள் இறந்த உடலை சிதை மூட்டி தகனம் செய்கிறார்கள். ஆனால் மேற்கத்திய நாடுகளில் திரந்த வெளி தகனங்களை சுகாதார காரணங்களால் அனுமதிப்பதில்லை, தகனம் என்றால் electric crematoria விற்கு சென்று, உடலை எரித்து, சாம்பலை திருப்பி எடுத்து தெளிக்கலாம். அங்கு `ஜாதி, இனம்` இவற்றின் மாறுபாடுகள் இல்லை. தற்காலத்தில், மேற்கில் வெள்ளையர்கள் கணிசமான அளவில் உடலை கிரமடோரியாவில் மின்சார தகனம் செய்து, சாம்பலை இறந்தவர் விருப்பமாக தூவுகிறனர். எனக்கு தெரிந்து, ஒருவர் தன் தாயின் சாம்பலை தன் வீட்டில் lounge fireplace அருகே, ஒரு குடத்தில் வைத்திருந்தர். அது அவருடைய தாய் பாசம்.
இந்திய சமுதாயம், மிக கன்செர்வெடிவ் ஆனதால், மாற்றங்களில் வேகம் மிகக் குறைவு. மேற்கத்திய சமுதாயம், தனிமனித உரிமைகள், தனி மனித விருப்பங்கள், சுகாதார, விஞ்ஞான காரணங்கள் இவற்றிற்க்கு முக்கியத்துவம் கொடுக்கிரது. அப்படி இந்தியாவில் வருவதற்கு பல காலம் ஆகும்
ஆகஸ்ட் 4, 2009 at 2:08 பிற்பகல்
//எனக்கு தெரிந்து, ஒருவர் தன் தாயின் சாம்பலை தன் வீட்டில் lounge fireplace அருகே, ஒரு குடத்தில் வைத்திருந்தர். அது அவருடைய தாய் பாசம்.//
அவர் பெயர் ராபர்ட் டி நீரோவா?
Meet the parents படத்தில் இது போன்ற காட்சியில் நகைச்சுவை செய்திருக்கிறார்கள். முடிந்தால் பாருங்கள்.
ஆகஸ்ட் 4, 2009 at 2:30 பிற்பகல்
இதெல்லாம் நகைச்சுவை இல்லை. நிஜமாகவே பலர் பெற்றோர் சாம்பல்களை `புதிய` இடங்களில் வைக்கிறனர்.
ஒரு pub owner , தந்தையின் சாம்பலை, தன் பப்பின் முன்னால் கட்டப் பட்டிருக்கும் பூச்செடி மட்பாண்டத்தில் வைத்தார்.
ஆகஸ்ட் 4, 2009 at 2:34 பிற்பகல்
//இதெல்லாம் நகைச்சுவை இல்லை.//
தெரியும் விஜயராகவன் சார். அந்தப் படத்தில் நகைச்சுவை செய்திருக்கிறார்கள். ராபர்ட் டி நீரோ பிரமாதப் படுத்தியிருப்பார் என்கிறேன். படத்தைப் பார்த்தால் நீங்களும் சிரிப்பீர்கள். மரணத்தில் உள்ள absurdity வெளிக்காட்டப் படுவதற்கு morbid humor என்ற தனிப் பிரிவு இருப்பது உங்களுக்குத் தெரியாமலிருக்குமா?
நான் திரும்பக் கேட்பதற்கு மன்னிக்கவும். கேரளத்தில் சாதி இந்துக்கள் தாழ்த்தப் பட்டவர்களை சென்ற நூற்றாண்டின் பாதி வரை கோவில்களில் சேர்க்காதது பற்றி உங்கள் கருத்துக்களை கடவுள் நம்பிக்கையுள்ள ஆனால் பிற மனிதர்களை மதிக்கும் மனிதர் என்ற முறையில் ஒரு வார்த்தை எழுதி விடுங்களேன்.
ஆகஸ்ட் 4, 2009 at 3:02 பிற்பகல்
அது தப்பு. தாழ்ந்தவர்கள் என யாரும் இல்லை. குண மாற்றங்கள், விருப்பு மாற்றங்கள், தன் சக்தி (individual abilities) மாற்றங்கள் இவை ஜாதி, இன அடிப்படையில் ஏற்படுபவை அல்ல. அதனால் ஜாதி, இனம் பாராமல் ஆன்மீக, சடங்கு வாய்ப்புகளும், உரிமைகளும் கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்காத எந்த கருத்தாக்கமும், செயல்முறைகளும் தவறு, தூக்கி எரியத் தகுந்தவை, அட்டூழியம் மீறிப்போனால் சட்ட முறையிலும் எதிர்க்கத் தகுந்தவை.
ஆகஸ்ட் 4, 2009 at 3:12 பிற்பகல்
Well said, Sir. Thank you very much.
ஆகஸ்ட் 4, 2009 at 2:41 பிற்பகல்
இந்த விவகாரத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை உணர வேண்டும்.
ஏன் எந்த பிரபலமான தினசரியோ வார இதழோ மாத இதழோ இந்த விவகாரத்தை , பதிவுலகம் போல , பெரிது படுத்தவில்லை ? நீதிமன்ற தீர்ப்பை மட்டும் வெளியிட்டு விட்டு அமைதியாக உள்ளனரே.
இது உண்மையாகவே சாதி அரசியல் என்றால் எதாவது ஒரு பத்திரிக்கையாவது இந்த விஷயத்தில் தலையிட்டிருக்குமே ?
எனக்கு இதனால் தான் இந்த விஷயத்தில் பதிவுலகம் அரசியல் செய்கிறது என ஆணித்தரமாக எண்ணத் தோன்றுகிறது. அது மட்டுமல்ல தீட்சிதர்களுக்கு தேவாரம் தெரியாதா அல்ல அதன் மீது பக்தியோ மதிப்போ இருக்காதா ?
ஆகஸ்ட் 4, 2009 at 8:05 பிற்பகல்
எழுத்தாளர் ஜெயமோகன் இந்த விஷயத்தைப் பற்றி பேசுவதை கவணியுங்கள்:
” நானும் என்னுடைய நண்பரும் சிதம்பரம் கோயிலுக்குச் சென்று, ஆறுமுகசாமி நின்று பாடிய அதே இடத்தில் தேவாரம், திருவாசகம் பாடியிருக்கிறோம். எங்களை யாரும் அடிக்கவில்லை. எல்லா நாளும் அங்கு தேவாரம், திருவாசகம் பாடப்பட்டு வருகிறது. இதையே ஒரு சடங்காக நீங்கள் பாடப்போனால் அவர்கள் சம்மதிப்பதில்லை. காரணம் நீங்கள் அப்படிப் பாட ஆரம்பித்தால், நாளைக்கு அதிகாரம் தங்கள் கையை விட்டுப் போய்விடும் என்ற தீட்சிதர்களின் பயம்தான். ஆக, அவர்களுடைய பலம் என்பதே, சிதம்பரம் ஆலயம் கட்டப்பட்ட காலம் முதலே 2000 வருடங்களாக நாங்கள் இருக்கிறோம், எல்லாவற்றையும் நாங்கள்தான் பார்த்துக் கொள்வோம், வேறு யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்பதுதான். ஏனென்றால் அது ஒன்றுதான் அவர்களுக்குப் பிழைப்பு. அவர்களுடைய வாழ்க்கை. அதனால்தான் மாற்றங்களுக்கு அவர்கள் ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள்.
நானும், என் இலங்கை நண்பரும் சிதம்பரம் சென்றிருந்த போது, ஆறுமுகசாமி பாடிய அதே மேடையில், நண்பர் போற்றித் திருஅகவலைப் பாடினார். தீட்சிதர்கள் விபூதிப் பிரசாதம் கொடுத்தார்கள். இந்தப் பிரச்சனையைப் பேசிப் பேசி, சிதம்பரம் கோயிலுக்குள்ளேயே தமிழில் பாடக்கூடாது என்று சட்டம் இருப்பதாக ஜனங்கள் நம்புகிறார்கள். இணையத்தில் எழுதும் ஆசாமிகளில் 90% பேர் இப்படித்தான் நம்புகிறார்கள்.
தமிழ்நாட்டில், இந்த மோசமான அரசியல் சூழலில், எந்த விஷயமும் இரண்டு கை தாண்டும் போது அப்பட்டமான கீழ்த்தரமான பொய்யாக மாறி விடுகிறது. இது பொய்யாக மாறிவிடுவதனால் பொய்யைப்பற்றி மட்டுமே பேசிப்பேசி அதன் உண்மையை மறந்து விடுகிறோம். நானே கோயிலில் போய் தமிழில் பாடியிருக்கிறேன், யாரும் ஒண்ணும் சொன்னதில்லை. அப்புறம் எப்படி இப்படிச் சொல்வார்கள் என்று ஒருவன் யோசித்துப் பார்த்தால் இந்த தீட்சிதர் பிரச்சனைகளோ, கோயில் யாருக்குச் சொந்தம் என்ற விவாதங்களோ வந்திருக்கவே வந்திருக்காது.”
http://www.tamilonline.com/thendral/MoreContent.aspx?id=105&cid=4&aid=5785
ஆகஸ்ட் 7, 2009 at 7:48 மு.பகல்
சிதம்ரத்தில் ஜெயமோகன் நண்பர்கள் பக்தி பாடல்கள் பாடினார்களாம். பிரச்சினை எல்லாம். எல்லாம் தெரிந்த ஏகாம்பர் முரளி இதை பதிவுலகிற்கு அறிவிக்கிறாராம். அட முழுப்பொய்யை மறைக்கும் அறியாமை மனிதர்களே, நடராஜா காலைத் தூக்கி ஆடும் கருவறை இருக்கும் சிற்றம்பல மேடையில் தீட்சிதர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு பணக்கார பக்தர்களை அனுமதிப்பார்கள். இந்த சிற்றம்பல மேடையில் தங்களைத் தவிர வேறை எவரும் முரளி, ஜெயமோகனை உட்பட பாடக்கூடாது என்பதுதான் அவர்களது வழக்கு. அப்படி சிற்றம்பல மேடையில் தமிழில் பாட வேண்டுமென்பதுதான் எமது தோழர்கள் ஆறுமகசாமி சார்பில் வழக்கு தொடுத்து வெற்றிபெற்றிருக்கிறோம். மற்றபடி சிற்றம்பல மைடைக்கு வெளியே கோவிலில் எங்கு வேண்டுமானாலும் காள் காள் என்று கத்தி பாடாலாம். இது தெரியாமல் பொய்யை உண்மை போல பிதற்றியதற்கு முரளி ஒரு இலட்சம்ரூபாயை ஆர்.வி தளத்திற்கு அபராதமாக கட்டவேண்டும்.
ஆகஸ்ட் 7, 2009 at 12:55 பிற்பகல்
கருவறையில் நுழையும் போரட்டம் என்பதை இவ்வளவு நாளாக தமிழில் பாட விடமாட்டார்கள் என்று மாற்றி பிரச்சாரம் செய்தது யார் ?
//தமிழ் நாட்டில் தமிழர்கள் கட்டிய கோயில் தமிழ் மக்களுக்கு சொந்தமாக இருக்க வேண்டும் என்பதும், அங்கே தமிழர்களுக்கு தமிழில் வழிபாடு செய்யும் உரிமை வேண்டும என்பதும்தான் பிரச்சினை. இந்த “அடாத” கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு இப்படியொரு விடாத போராட்டம்!
//
இந்த ‘உண்மையை’ யார் எழுதியது ?
http://www.vinavu.com/2009/06/24/thillai3/
எழுத்தாளரின் மேற்கோளைக் காட்டியதற்குக் காரணம் விஜய் என்பவர் போன இடுக்கையில் இதே போன்ற கருத்தை தெரிவித்தார். அதனை ஆர்.வி ‘அப்படி நடந்தால்’ என்று சந்தேகித்தார் ஐயம் களையவே அந்த மேற்கோள்.
அவர் சொல்வதை கவனியுங்கள் ‘ஆறுமுகசாமி நின்று பாடிய அதே இடத்தில் தேவாரம், திருவாசகம் பாடியிருக்கிறோம்’
‘உண்மை’யைக் குத்தகைக்கு எடுத்தவர்கள் நீதிமன்ற தீர்ப்பை வெளியிடவும் , அத்துடன் அவர்கள் வினவி வருவதை ஒப்பிட்டு பார்ப்போமாக !
ஆகஸ்ட் 5, 2009 at 6:57 பிற்பகல்
RV
I have posted a lengthy reply to you in response to your feedback in dondu’s blog on punuul ceremony.
The url is below
http://myownquiver.blogspot.com/
ஆகஸ்ட் 5, 2009 at 7:24 பிற்பகல்
//யா இலாஹா இல்லல்லாஹா மொஹம்மதுல்லா சூலுல்லாஹி என்றுதான் சொல்கிறார்கள், யாரும் குரானை தமிழில், ஆங்கிலத்தில், சமஸ்கிருதத்தில் ஓதி கேட்டிருக்கிறீர்களா என்ன? தமிழில் வழிபட உரிமை மறுக்கப்படுகிறது என்பதற்காக எதிர் தரப்பை தவறாக ஏணியில் ஏற்றாதீர்கள்//
பொதுவாக எல்லாரும் இசுலாம், கிருத்துவம் இவற்றுடன் ஒப்பிட்டுப் இப்ப்ரச்னையைப் பார்க்கிறார்கள். காரணம். இதில் மட்டும் நாத்திகர் தலையிடுகிறாரே, அங்கு ஒன்னும் செய்யவில்லையே? என்ற அங்கலாய்ப்பு.
இந்த நாத்திகர் மட்டுமே தமிழில் வழி்பாடு வேண்டும் என்று கேட்டால் சரி. அவர் மட்டுமா? மற்றவர் வாய் திறக்கவில்லை. எனவே நாத்திகர் மட்டும் தலையிட்டதாக ஒரு illusion.
மற்றமதங்களில், அம்மக்களே கேட்கவில்லை. அனைவரும் அவர்தம் மதக்கோட்பாட்டை ஏற்றுகொள்கிறார்க்ள். அப்படி ஏற்றுகொள்ளாத படசத்தில், அங்கு மாபெரும் போராட்டம் ஏற்பட்டு அடிபபடை பிரிவுகள் ஏற்படும். அன்னிய நாடுகளில் அப்படி நிகழ்ந்தன. அதுவரைக்கும் எல்லாம் சுகமே.
தமிழ்நாட்டில் அவர்கள் பெரிய advantage is. No caste divisions. The divisions, if at all, are ephemeral: can be resolved soon by interference of people who mattered in the church or jamaath.
Not so in TN Hindu religion.
அடிப்படையே, தமிழ்பார்ப்பனர் தங்களை மத ரீதியாக பிரித்துகொண்டதனாலே .
அது பொறாமையை உண்டு பண்ணியது.
தமிழ்ப்பார்ப்பனரும், பிற தமிழரும் சுமூகமாக சேரும் நிலைவரும்போது, எந்தவொரு பிரச்சனையும் வராது. திராவிட கட்சிகளின் மீது பழி போட்டுவிட முடியாது. தமிழர்களின் எண்ணிக்கை பல கோடி. அவர்க்ள் எல்லாரும் திராவிடக்கட்சிய்னரா?
My personal view is that any issue concerning Hindu religion is TN is seen Brahmins vs Others. Who is to blame? I wont put the blame on Diravidan parties.
You open another post and discuss the issue: Who is to blame? All brahmins will feeback putting the blame on Periyaar. I wonder who will be their whipping boy, after another 50 years, when the third generation next wont even have heard the name of the CM-in-waiting Stalin!
ஆகஸ்ட் 8, 2009 at 6:40 பிற்பகல்
RV
I’ve posted replies to your response in my blog.
ஆகஸ்ட் 9, 2009 at 6:50 பிற்பகல்
A reply to you hve been posted in my blog today