ஜீவியின் எழுத்தாளர் அறிமுகங்களை பற்றி எழுதி இருந்தேன். அவர் இந்த முறை கரிச்சான் குஞ்சு பற்றி எழுதி இருக்கிறார். படித்து பாருங்கள்.
பாலகுமாரன் எழுதிய இரும்பு குதிரைகள் புத்தகத்தில் அவரை சித்தரித்திருக்கிறார் என்று கேள்வி. (மன்னார்குடி ஸ்கூல் வாத்தியார், ரிடையர் ஆன பிறகு லாரி கணக்கு எழுத சென்னைக்கு தன் மகளுடன் வருவார்)
நான் பசித்த மானுடம் புத்தகம் படித்ததில்லை. கரிச்சான் குஞ்சுவின் தெளிவு என்ற ஒரு சிறுகதை தொகுப்பு படித்திருக்கிறேன், அது என்னை அவ்வளவு impress செய்யவில்லை. ஜெயமோகன் பசித்த மானுடத்தை தனது இரண்டாம் பட்டியலில் – பல்வேறு வகையில் முக்கியத்துவம் உடைய ஆனால் முழுமையான கலைவெற்றி கைகூடாத படைப்புகள் – சேர்க்கிறார். எஸ். ராமகிருஷ்ணனும் இதை தன் நூறு சிறந்த நாவல் லிஸ்டில் சேர்க்கிறார்.
தொடர்புடைய பதிவுகள்
கரிச்சான் குஞ்சு பற்றி ஜீவி
ஜீவியின் எழுத்தாளர் அறிமுகங்கள்
ஜெயமோகனின் தமிழ் நாவல் லிஸ்ட்
எஸ். ராமகிருஷ்ணனின் நூறு சிறந்த தமிழ் நாவல் லிஸ்ட்
கரிச்சான் குஞ்சுவின் “பசித்த மானிடம்” பற்றி வெங்கட் சாமிநாதன்
கரிச்சான் குஞ்சுவை வெங்கட் சாமிநாதன் நினைவு கூர்கிறார்
கரிச்சான் குஞ்சுவைப் பற்றி எஸ். ராமகிருஷ்ணன்
கரிச்சான் குஞ்சுவைப் பற்றி ஆர்.பி. ராஜநாயஹம்
ஜூலை 19, 2009 at 8:49 மு.பகல்
குறிப்புகள் போல, சொல்ல வேண்டுவனவற்றைச் சொல்லிவிடும் உங்களது இந்த பாங்கு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. BK – யின் இரும்புக் குதிரைகள் தொடர்பாக நீங்கள் குறிப்பிட்டிருப்பது ஓரளவு சரியாகத் தான் தென்படுகிறது. JK-யின் ‘கங்கா எங்கே போகிறாள்’ (அக்னிப் பிரவேசம்’ சிறுகதையின் தொடர்ச்சி) நாவலில் வரும் எழுத்தாளர் சர்மா, கரிச்சான் குஞ்சு சாரை நினைவில் கொண்டு எழுதியதோ என்று நான் நினைத்ததுண்டு.
‘தெளிவை’ இப்பொழுது தேடுகிறேன்.
மிக்க நன்றி.
ஜூலை 20, 2009 at 5:31 மு.பகல்
ஜீவி,
எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் உங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
ஜூலை 19, 2009 at 5:27 பிற்பகல்
தயவுசெய்து கரிச்சான் குஞ்சு போன்றவர்களை (வாசிப்பின் ஊடாக) அணுக பாலகுமாரன், ஜெயமோகன் போன்றவர்களைச் சார்ந்திராதீர்கள். தங்களைப் பற்றி மட்டுமே முரசறையத் தெரிந்தவர்கள் இவர்கள்
ஜூலை 20, 2009 at 5:33 மு.பகல்
ஜ்யோவ்ராம்,
மறுமொழிக்கு நன்றி! ஜெயமோகன், பாலகுமாரன் போன்றவர்கள் குறைகள் உள்ளவர்களாக இருக்கலாம். ஆனால் கரிச்சான் குஞ்சு நல்ல புத்தகம் எழுதி இருக்கிறார் என்று சொல்வதிலும் எதற்காக குறை காண வேண்டும்?
ஜூலை 21, 2009 at 7:28 மு.பகல்
ஜ்யோவ்ராம்,
ஜெயமோகன் தன விஷ்ணுபுரம், பி.தொ.நி. குரல் ஆகியவற்றை இந்த லிஸ்டில் #1, #2 ஆகத்தான் போட்டிருக்கிறார். அதில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அது அவர் கருத்து, அவ்வளவுதான். (என் டாப் டென் லிஸ்டிலும் இந்த இரண்டு புத்தகங்களுக்கு இடம் உண்டு) ஷெர்லாக் ஹோம்ஸ் ஒரு கதையில் சொல்வார் – அடக்கம் என்பது ஒரு வித பொய் என்று.
பசித்த மானுடத்தை அவர் தனது முதல் ஐம்பது நாவல்களில் சேர்க்கவில்லை. ஆனால் முக்கியமான, முழுதாக வெற்றி பெறாத நாவல் என்று சொல்லி இருக்கிறார். இது பாராட்டுவதாகத்தான் எனக்கு தோன்றுகிறது.
ஜூலை 20, 2009 at 5:40 மு.பகல்
ஜெமோ தன்னுடைய இரண்டு நாவல்களைத் தர வரிசை அடிப்படையில் முதலில் சேர்த்திருப்பார்
பசித்த மானுடத்தை நல்ல புத்தகம் என்று மட்டும் சொல்லியிருக்க மாட்டார் – நீங்கள் பதிவில் சொல்லியுள்ளது கலைவெற்றி கைகூடாத படைப்பு – இதைக் கருத்தில் கொண்டே என்னுடைய முதல் மறுமொழி.
ஜூலை 20, 2009 at 6:38 மு.பகல்
பொதுவாகவே ஒன்றை நாம் கணக்கில் எடுத்துக் கொள்வதை மறந்து விடுகிறோம் என்றே நினைக்கிறேன்; இந்த விஷயத்தில் ‘எல்லாம் தெரிந்தவர்கள்’ கூட உள்ளடங்கி இருப்பதும் தான் ஆச்சரியம்.
ஒவ்வொருவரும் எழுதிய அந்தக் “காலம்”,அவர்கள் வாழ்ந்த சூழ்நிலை, பெற்ற அனுபவம் என்கிற ஏகப்பட்ட சாமாச்சாரங்களை உள்ளடங்கிய ஒன்று
எழுத்து என்பது. எழுதியவனுக்குத் தெரியும், அதைப் படைக்கையில் அவன் பட்ட அவஸ்தையும் ஆனந்தமும்.
மாற்றமும், வளர்ச்சியும் எல்லாவற்றிலும் உண்டு என்பது சயின்ஸ் விதி. இதில் ‘எழுத்து’ம் விதிவிலக்கல்ல.
‘ஷேக்ஸ்பியரை’விட சிறந்த படைப்புகள் உருவாகியிருக்கலாம்; ஆனால், இதில் ஷேக்ஸ்பியரின் காலம் முக்கியம். அதனால் தான் ‘பிரதாப முதலியாரின் சரித்திரத்தை’ப் பற்றி இன்னும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
எல்லாருடைய எழுத்தையும் ஏதோ இதற்கென தனியே இருக்கும், இவர்களே முத்திரை குத்தியிருக்கும் ஒரு தராசில் போட்டு, இத்தனை கிலோ, இன்ன விலை என்று சொல்கிற மாதிரி, யாருடைய எழுத்தையும் எடை போடக்கூடாது என்பது என் கருத்து. எழுத்து என்பது படைப்பு சம்பந்தப்பட்ட ஒன்றானதால், உணர்வுபூர்வமாக நுணுகிப் பார்க்க வேண்டிய அவசியமும் இருக்கிறது.
ஒரு எழுத்தைப் பற்றிய சரியான விமர்சனம் என்பது
அதை விட சிறப்பானது என்று காலம் கணிக்கக் கூடிய ஒன்றைப் படைத்துக் காட்டுவதே என்பார் ஜெயகாந்தன். இதற்கு சரியான விளக்கம், படைப்பிலக்கியப் பொறுப்பிலிருந்து விமர்சகன், தப்பித்துக் கொள்ள முடியாது என்பதே.
பகாசுரப் பத்திரிகைகளால் ஆசிர்வதிக்கப்படாத, வெகுஜன பார்வைக்கே வராத எழுத்துக்களைப் பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
ஜூலை 21, 2009 at 7:24 மு.பகல்
ஜீவி,
எனக்கு நீங்கள் சொல்வதில் முழு உடன்பாடு இல்லை. என் படிப்பு, என் ஜட்ஜ்மென்ட், என் ரசனையை, என் தர நிர்ணயத்தை பொறுத்தது மட்டுமே. பிரதாப முதலியார் அந்த காலத்துக்கு பெரும் சாதனையாக இருக்கலாம். என் நூலகத்தில் நானும் ஒரு காப்பி வைத்திருக்கலாம். ஆனால் அதை தரம் வாய்ந்த படைப்பு என்று சொல்ல மாட்டேன். நான் எதை தரம் என்று சொல்கிறேன் என்பது என் “காலத்தை” பொறுத்தது.
ஜூலை 20, 2009 at 6:52 மு.பகல்
எனது முந்தைய பின்னூட்டத்தில், JK-யின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்று
(கங்கை எங்கே போகிறாள்’ என்பதற்கு பதிலாக)
திருத்திப் படிக்க வேண்டுகிறேன்.
முதலில் ‘அக்னி பிரவேசம்’, அதன் தொடர்ச்சி,
‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ அதற்குப் பின்னும் அதன் தொடர்ச்சி, ‘கங்கை எங்கே போகிறாள்’.