சில மறுமொழிகளை பார்த்ததும் எழுந்த எண்ணங்கள் – பத்து பாயிண்ட்கள்:
1. இன்றைய நிலையில் இலங்கை அரசுக்கு உட்பட்ட ஈழம் என்பதுதான் ப்ராக்டிகல்.
2. நான் தனி ஈழம் மட்டுமே ஒரே தீர்வு என்று நம்புபவனில்லை. நரி வலம் போனால் என்ன, இடம் போனால் என்ன? மேலே விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி. விடிந்தால் சரி. கஷ்டங்கள் தீர்ந்தால் சரி. தேசங்களை பிரிக்கும் கோடுகள் எல்லாம் செயற்கையானவை.
3. நான் பேசுவது லாஜிக். புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் அநேகம் பேர் ஏதோ ஒரு விதத்தில் இழப்பை சந்தித்தவர்கள். இலங்கையில் இந்த போரில் ஐம்பதாயிரம் பேராவது இறந்திருப்பார்கள் என்று சொல்கிறார்கள். இரண்டு லட்சம் பேர் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். காயம் பட்டவர்களுக்கு சிங்களர்களோடு ஒன்றாக ஒரு நாளும் வாழ முடியாது, தனி ஈழம் மட்டுமே தீர்வு என்று தோன்றினால் ஆச்சரியம் இல்லை. ஆனால் அவர்களின் இழப்பு கடந்த காலம். அவர்கள் நிலை காம்புகளில் வாழும் தமிழர்களின் நிலையை விட பல மடங்கு பெட்டர்.
4. இன்றைய முக்கிய பிரச்சினை புலம் பெயர்ந்த தமிழர்கள், அவர்களின் இழப்புகள் இல்லை – இலங்கையில் வாழும் அகதிகளாகிவிட்ட தமிழர்கள்தான், அவர்கள் கஷ்டங்கள்தான் மிக முக்கியம். புலம் பெயர்ந்த தமிழர்களின் காயங்களுக்காக பழி வாங்குவதை விட, அவர்களுக்கு ஆறுதல் தேடுவதை விட, இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலை மாறுவது மிக முக்கியம். அது நடந்த பிறகுதான் அடுத்ததை யோசிக்க வேண்டும்.
5. புலம் பெயர்ந்த தமிழர்களின் நிலை கஷ்டம்தான். ஆனால் புலிகளால் இழப்பை சந்தித்தவர்களும் தமிழர்களில் நிறைய பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் புலிகள் கூடவே கூடாது என்று நினைக்கத்தான் செய்வார்கள். நாம் அனைவரும் கடந்த கால கசப்புகளை தாண்டி செல்ல வேண்டிய நேரம் இது.
6. இந்த நிலையில் இந்தியாவுக்கு கடமை இருக்கிறது. இந்தியத் தமிழர்களுக்கு கடமை இருக்கிறது. இலங்கை அரசுக்கு இத்தனை நாள் வால் பிடித்தாகிவிட்டது. இலங்கை அரசு ஜெயித்தாகிவிட்டது. இனப் படுகொலைக்கு சின்ன அளவிலாவது இந்தியாவும் உதவி செய்தாகிவிட்டது. இலங்கை அரசை ஐ.நா. கண்டிக்க விடாமல் உதவி செய்தாகிவிட்டது. இப்போது ராஜபக்சே மீது அழுத்தம் கொடுக்க வேண்டிய காலம்.
7. காம்ப் தமிழர்களுக்கு உதவுதல், செஞ்சிலுவை சங்கம், வாலண்டியர்கள் சுலபமாக காம்ப்களுக்கு செல்தல், காம்பில் உள்ள குடும்பங்களை இணைத்தல், காம்பில் உள்ளவர்களுக்கு உணவு+உடை+மருத்துவம்+கல்வி, தமிழர்கள் வீடு திரும்புதல், போரில் ஈடுபட்டவர்களுக்க் பொது மன்னிப்பு, தமிழர்களுக்கு சட்ட பூர்வமான உரிமைகள் கிடைக்க வைப்பது, முதலில் இவற்றுக்கெல்லாம் வெளிப்படையான டைம் டேபிளை அறிவித்தல் இதற்கெல்லாம் ராஜபக்சே மீது அழுத்தம் இருக்க வேண்டும்.
8. இத்தனை நாள் சும்மா இருந்தோம, சரித்திரம் அதற்கே நம்மை – இந்திய அரசை – எல்லாம் மன்னிக்குமா தெரியாது. ஆனால் புலிகள், இந்தியாவில் நுழைந்து ஒரு முன்னாள் பிரதமரையே கொன்றவர்கள், எந்த விதத்திலும் பயனடையக் கூடாது என்று நினைத்தோம் என்று ஒரு சாக்காவது சொல்லலாம். அது சரியோ தவறோ, ஏதோ ஒரு லாஜிக் இருக்கிறது. இனி அதுவும் இல்லை. இப்போதும் நாம், இந்திய அரசு சும்மா இருந்தால் சரித்திரம் நம்மை எந்த நாளும் மன்னிக்காது. இதற்கான அழுத்தத்தை, ஆக்க பூர்வமான முயற்சிகள் இப்போதே ஆரம்பித்தாக வேண்டும். ஏற்கனவே கால தாமதம் ஆகிவிட்டது.
9. தேஷமிண்டே மட்டி காது, மனுஷ்யலு என்றார் பிரபல தெலுகு கவிஞர் ஸ்ரீ ஸ்ரீ. (தேசம் என்றால் மண் இல்லை, மனிதர்கள் என்று அர்த்தம்) இந்திய அரசு என்றால் நாம்தான். மன்மோகன் சிங் மட்டும் இல்லை. குறைந்த பட்சம் உங்கள் எம்.பி., எம்.எல்.ஏக்களை தொடர்பு கொண்டு நம் கவலைகளை சொல்ல முயற்சிக்கலாம். பிரபல தமிழ் நாட்டிற்கு வெளியே உள்ள பிரபல பத்திரிகைகளான டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் டைம்ஸ், டெக்கான் க்ரானிகில், இந்தியா டுடே, வீக், போன்றவை என்னதான் சொல்கின்றன என்பதை தமிழர்களுக்கு சொல்ல முயற்சிக்கலாம். தமிழகத்துக்கு வெளியே என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்தால்தான் அவர்களை influence செய்ய முடியும். நிறைய பேருக்கு இலங்கை என்றால் புலிகள்தான், ராஜீவ் கொலைதான். அதற்கு மேலும் பிரச்சினை இருக்கிறது என்று தெரிய வைக்கும் பொறுப்பு தமிழர்களுடையது. அவர்களுக்கு தெரியவில்லை என்றால் தவறு அவர்களுடையது இல்லை, நம்முடையது. நம் கண்ணோட்டத்தையே ஒருவருக்கொருவர் சொல்லி கொண்டிருந்தோம் என்றால் மேலே எப்படி செல்வது? முடிந்தால் ஆங்கிலத்தில் பிளாக் எழுதலாம். (யார் படிப்பார்கள் என்பது அடுத்த விஷயம்) ஸ்டாலின், இன்றைய வெளிநாட்டு உறவு உதவி மந்திரி சஷி தரூர் போன்றவர்களின் தளங்களில் மாய்ந்து மாய்ந்து எழுதலாம். ஆக்க பூர்வமாக வேறு என்ன செய்யலாம் என்று உங்களுக்கு தோன்றுவதை எழுதுங்களேன்! நானும் அதை வைத்தே இன்னும் இரண்டு மூன்று பதிவு ஓட்டி விடுகிறேன்!
10. நீங்கள் புலிகளை முழு மூச்சாக ஆதரிப்பவராக இருந்தாலும் இப்போதைக்கு அடக்கி வாசிப்பது நல்லது. சாம பேத தான தண்டம் என்று சொல்வார்கள். தண்டம் இப்போது தோற்றுவிட்டது. பேத தானத்துக்கு இப்போது வழி இல்லை. சாமம் (நல்ல விதமாக பேசி பார்ப்பது) மட்டும்தான் இப்போதைக்கு மிச்சம் இருக்கும் வழி.
பின் குறிப்பு: விகடன் பொதுவாக புலிகள் ஆதரவு நிலை எடுத்திருக்கலாம். எனக்கு தெரியாது. ஆனால் நான் மீள்பதிவு செய்த விகடன் கட்டுரை இலங்கை அரசுக்கு உட்பட்ட வடக்கு, கிழக்கு பகுதிகள் என்ற நிலையில்தான் பேசுகிறது. இனி செய்ய வேண்டியவை என்று குறிப்பிடப்பட்டிருப்பவை இலங்கை அரசு செய்ய வேண்டியவையே. இலங்கை அரசுக்கு இவற்றை செய்ய இந்திய அரசு பிரஷர் கொடுக்கவேண்டும் என்றுதான் சொல்கிறது. புலம் பெயர்ந்த தமிழர்கள் ஒரு government-in-exile அமைக்க முயற்சிப்பதை தவறு என்று கூட சொல்கிறது. தனி ஈழம் வேண்டும் என்று எங்கும் சொல்லவில்லை.
தொடர்புடைய மற்ற பதிவுகள்
ஈழ தமிழர்கள், புலிகள் பற்றிய பதிவுகளின் தொகுப்பு
ஜூன் 27, 2009 at 8:57 பிற்பகல்
இவ்வளவும் எங்களுக்குத் தெரியாது. நீரு வந்து சொல்லித்தான் தெரியனும். இல்லியா?
you are a typical stupid indian brahmin
ஜூன் 28, 2009 at 4:17 மு.பகல்
எல்லாம் தெரிந்து என்ன புடுங்கினே உன் ஆசைக்கு போரை நடத்த சொல்லி அப்பாவி மக்களை கொன்றதை தவிர.வந்துட்டானுங்க
ஜூன் 28, 2009 at 12:30 பிற்பகல்
புடுங்கி. ஒன்னோட இந்தியா ஆயுதம் கொடுக்கறப்ப நீயி என்ன தெவசத்துக்கு தெப்ப போட்டுக்கிட்டிருந்தியா? போர நடத்துனவன் உங்க அத்திம்பேர் ராசபக்ச. நீயி அட்வைசு மட்டும் பண்ணறயா?
என்ன நடக்குதுன்னு ஒரு மசிரும் ஒனக்கு வெளங்கறதில்ல. சும்மாங்காச்சியும் அட்வைசு பண்ணமட்டும் நீயி
ஜூன் 27, 2009 at 11:20 பிற்பகல்
People in Eelam only can decide whether they need Eelam or not. No one specially Indians should not say that Eelam is not needed.India helped 100% for this genocidal war in
SriLanka. Every Indian’s hand is covered with Eelam Tamils
blood.Whole world now know the part played by India under
Italian Mafia Sonia in the genocidal war of Tamil minorities.
Every Eelam Tamil will pray for the destruction of India.
ஜூன் 28, 2009 at 4:20 மு.பகல்
first you people should concentrate on the re rehabilitation of your own peoples. you guys only wanted to full fledged war against government of srilanaka , when you lost the war you are talking bullshit. have you ever had any idea of war destruction before it started?
before blamming india think twice and decide who wanted the war
ஜூன் 28, 2009 at 1:21 மு.பகல்
It’s true,that India did a big blunder and helped Srilanka to carry out genocide of Tamils in their own land.But, as you mentioned the immediate step we have to take is to safe the population in Tamil Eelam.With outb Tamils there is no Tamil Eelam.So, save the Tamils in their land rather than allowing them to suffer in the hands of Sinhale chauvinists and help them to get rid of the current situation.If India will do this, it’s Mafiarism against the Eelam Tamils will fade away as time goes on.
ஜூன் 28, 2009 at 4:29 மு.பகல்
1. போர் வேண்டும் என்று விரும்பியது புலம் பெயர்ந்த தமிழர்கள் போரை தொடங்கியது புலிகள்.
2 போர் என்றால் இழப்புகள் இருக்க தான் செய்யும் என வேதாந்தம் பேசியது இதே ஆட்கள்.
3 போரில் தோற்றவுடன் இந்தியா மற்றும் உலக நாடுகள் மேல் சேறு பூசுதல்
4 தவறுகள் எல்லாம் மூட்டை மூட்டையாக வைத்து கொண்டு அடுத்தபக்கம் புறம் பேசுதல்
ஜூன் 28, 2009 at 2:21 பிற்பகல்
//புடுங்கி. ஒன்னோட இந்தியா ஆயுதம் கொடுக்கறப்ப நீயி என்ன தெவசத்துக்கு தெப்ப போட்டுக்கிட்டிருந்தியா? //
ஆமாம் உன்னை போல தினமும் எத்தனை பிணம் விழுகிறது என்று கணக்கு பார்க்காமல் இருந்தது என் தவறு தான். இந்தியா ஆயுதம் கொடுக்காமல் இருக்க நீ தான் ராஜ தந்திர வேலைகள் செய்யனும். அதை செய்ய துப்பில்லை. வருடம் முழுக்கவும் இந்தியாவை நல்லா திட்டி விட்டு மாவீரர் நாள் அன்றைக்கும் மட்டும் இந்தியாவிற்க்கு நட்பு கரம் நீட்டுகிறோம்ன்னு காமேடி, இதுல மத்த அல்லைகைகள் இந்தியா பாரிய தவறு செய்கிறது பிரபாகரன் கொடுத்த நட்பு கரத்தை இறுக பற்றி கொள்ள வேண்டும் என்று அட்வைஸ் வேற போங்கடா நீங்களும் உங்க போராட்டமும்
//போர நடத்துனவன் உங்க அத்திம்பேர் ராசபக்ச. நீயி அட்வைசு மட்டும் பண்ணறயா?//
உலகம் முழுக்க உங்க இயக்கத்தை தடை செய்தார்கள் ஏன் சும்மா பொழுது போகவில்லை என்று செய்தார்களா? செய்வதை எல்லாம் செய்து விட்டு ..
//என்ன நடக்குதுன்னு ஒரு மசிரும் ஒனக்கு வெளங்கறதில்ல. சும்மாங்காச்சியும் அட்வைசு பண்ணமட்டும் நீயி//
ஆமாம் உனக்கு மட்டும் தான் எல்ல்லாம் தெரியும்.. இப்படி எல்லாம் தெரிஞ்சு இப்ப என்ன செய்து கிளித்தாய்? கணீணீ வீரரே போய் முடிந்தால் உங்கள் மக்களை காப்பாற்றும். இல்லையேல் ****** க்கிட்டு போ..
ஜூலை 1, 2009 at 12:41 மு.பகல்
மாயோன், ராஜா, சர்வசித்தன், மெஹேஷ்,
ஈழத் தமிழர்களை பற்றிய பதிவுக்கு மறுமொழி இட்டதற்கு நன்றி!
மாயோன், இந்த தளத்தில் என்னை தாராளமாக திட்டலாம். ஆனால் நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் சிறுவர்கள் படிக்கும்படி இருக்கவேண்டும். என் பெண் சில சமயங்களில் இந்த் தளத்தை பார்ப்பதுண்டு. அதனால் உங்கள் மறுமொழியை திருத்த வேண்டி இருக்கிறது.
இப்போது நம் கவனம் எல்லாம் ஆக்க பூர்வமாக ஏதாவது செய்வதில் இருக்க வேண்டும். புலிகள் உத்தமர்களா, அத்திம்பேர் ராஜபக்சே நல்லவரா கெட்டவரா, முதல் தவறு யாருடையது, யார் கையில் ரத்தக் கறை என்பதெல்லாம் இப்போது முக்கியம் இல்லை. இதை எல்லாம் ஆராய வேண்டிய சமயம் இது இல்லை.
மெஹேஷ், உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறீர்கள். இந்தியா உதவ வேண்டும் என்று புலிகளே கூட இரண்டு மாதத்துக்கு முன் கூப்பாடு போட்டார்கள், அப்போது நீங்கள் நம் விஷயத்தை ஏன் இந்தியாவுக்கு கொண்டு போகிறீர்கள் என்று கேட்டீர்களா? இல்லை நீங்கள்தான் எல்லா ஈழத் தமிழர்களின் ஒரே பிரதிநிதியா? உங்கள் இழப்பும் கோபமும் புரிந்தாலும் எலாரும் உங்களைப் போல புலி ஆதரவு நிலை எடுக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?
ஜூலை 28, 2009 at 1:20 பிற்பகல்
கூட்டாஞ்சோறு தளத்தின் ஈழம் பற்றிய
பல்வேறு பதிவுகளில் பங்கு கொண்ட
அன்பர்கள் அனைவரும் இந்த வாரம்
கல்கி (2.8.2009) இதழில் வெளியாகியுள்ள
“அமரர் கல்கி நினைவுச் சிறுகதை”ப் போட்டியில்
முதல் பரிசு பெற்ற ஏ.ஏ.ஹெச்.கே.கோரியின்
“சின்னஞ் சிறு தீவு ஒண்டு!” தவறாமல் படிக்க
வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்!
படித்த பின்னர் பல்லாயிரம் ‘நாணயக்கார’க்கள்
மலரட்டும் என்றே விரும்புவீர்கள்!!
ஜூலை 28, 2009 at 9:29 பிற்பகல்
சேதுராமன்,
ஒரே உணர்ச்சிமயமாகத்தான் இருக்கிறது. ஸ்டாயிக்காக இருக்கவேண்டிய ஒரு டாபிக்கில் எல்லோரும் குதித்து சேறு பூசிக்கொள்கிறார்கள். புத்தகம் படித்தால் இன்னும் உணர்ச்சிவசப்பட்டு விடக்கூடாது
PS:
தங்கள் புத்தகங்கள் இரண்டும் கிடைக்கப் பெற்றோம். மிகவும் நன்றி. RV படித்துக்கொண்டிருக்கிறான். அவன் முடித்ததும் நான். அடுத்த முறை சென்னை வரும் பொழுது உங்களை சந்த்திக்கிறோம். வேலை தான் அதிகமாகிவிட்டது.
ஆகஸ்ட் 3, 2009 at 8:39 மு.பகல்
சேதுராமன்,
கல்கி எல்லாம் கிடைப்பதில்லை, அதனால் படிக்க முடியவில்லை. என்றாவது ஒரு நாள்…