சாண்டில்யன் பற்றிய பதிவில் சாண்டில்யன் பல தளங்களில் – கரிகால் சோழன் காலம், பிற்கால சோழர்கள், பாண்டியர்கள், ராஜஸ்தானம், பல்லவர்கள், கதம்பர்கள், மராத்தியர்கள், குப்தர்கள் – கதை எழுதியவர் என்று ஒரு நண்பர் சொல்லி இருந்தார். உண்மைதான். அது சாண்டில்யனின் ப்ளஸ் பாயின்ட்தான். அதனால்தானோ என்னவோ தமிழின் சரித்திர நாவல் என்றாலே சான்டில்யன்தான் என்று ஆகிவிட்டது. ஆனால் அவரது கதைகள் இரண்டாம் தரமானவைதான்.
தமிழில் முதல் தரமான சரித்திர நாவல் என்றால் பொன்னியின் செல்வன்தான். கதை பின்னல் என்றால் இந்த கதைதான். எத்தனை முடிச்சுகள், எத்தனை பலமான பாத்திரங்கள்? சிறு ரோல்களில் வரும் பார்த்திபேந்திரன், கந்த மாறன், சின்ன பழுவேட்டரையர், அநிருத்த பிரம்மராயர், ரவிதாசன், ஏன் குடந்தை ஜோதிடர் கூட மிக நுண்மையாக செதுக்கபட்டிருப்பார்கள். ஆழ்வார்க்கடியான், பூங்குழலி, சேந்தன் அமுதன், வானதி, மந்தாகினி, ஆதித்த கரிகாலன் போன்றவர்களை பற்றி சொல்லவே வேண்டாம். இதை விட சிறந்த சரித்திர நாவலை நான் படித்ததில்லை. விக்டர் ஹ்யூகோவின் லே மிசரபில்ஸ் இதற்கு சமமானது என்று சொல்லலாம். ஆனால் ஹ்யூகோ எழுதும்போது இது ஒரு சம காலத்திய நாவல் என்றுதான் சொல்ல வேண்டும்.
கல்கியின் சிவகாமியின் சபதம் பொ. செல்வனுக்கு அடுத்தபடி சொல்ல வேண்டிய நாவல். முதன் முதலாக படித்தபோது ஒரு வாரம் நாக நந்தி கனவில் வந்தார். தூக்கத்தில் திடீர் திடீரென்று எழுந்து உட்கார்ந்து கொள்வேன். ஆயனர், மகேந்திர வர்மர், புலிகேசி, பரஞ்சோதி, கண்ணபிரான், நரசிம்ம வர்மர் எல்லாம் மிக அற்புதமான பாத்திரங்கள். சிவகாமி அருமையான படைப்பு.
கல்கியின் பார்த்திபன் கனவு படிக்கக் கூடியதுதான். சாண்டில்யனின் பெஸ்ட் நாவல்களுக்கு இணையான தரம். கொஞ்சம் அமெச்சூர்தனம் தெரியும். கல்கியின் முதல் சரித்திர நாவல் இதுதான். இதை ப்ராக்டிசுக்காக அவர் எழுதி இருக்க வேண்டும்.
இந்த மூன்று நாவல்களையும் வைத்து சொல்கிறேன், கல்கிதான் தமிழின் மிக சிறந்த சரித்திர நாவலாசிரியர்.
சாண்டில்யனை இதற்கு அடுத்தபடி சொல்லலாம். அவரைப் பற்றிய பதிவுகள் இங்கே மற்றும் இங்கே.
ஞாபகம் வரும் வேறு சிலர்:
அகிலன் – கயல்விழி. மூன்றாம் தர நாவல். பேப்பருக்கு பிடித்த கேடு. இந்த நாவல் பிடிக்காததால், நான் வேங்கையின் மைந்தன், வெற்றி திருநகர் போன்றவற்றையும் படிக்கவில்லை.
நா. பார்த்தசாரதி: ராணி மங்கம்மாள், கபாடபுரம் இரண்டு படித்திருக்கிறேன். நா.பா.வின் நாவல்களில் எப்போதும் நிறைய உபதேசம் இருக்கும. ராணி மங்கம்மாளும் அப்படித்தான். நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய புத்தகம் இல்லை, ஆனால் ரொம்ப மோசமும் இல்லை. கபாடபுரம் பெரிய ப்ளேடு.
சுஜாதாவின் ரத்தம் ஒரே நிறம்: படிக்கலாம், ஆனால் சூப்பர் டூப்பர் என்றெல்லாம் சொல்லமாட்டேன்.
கலைஞர்: பொன்னர் சங்கர் என்ற ஒரு புத்தகம் படித்திருக்கிறேன். இவரெல்லாம் எழுதாமலே இருந்திருக்கலாம்.
கோவி. மணிசேகரன்: குற்றாலக் குறிஞ்சி என்று ஒரு புத்தகம் படித்திருக்கிறேன். ஒவ்வொரு சாப்டர் ஆரம்பத்திலும் ஏதாவது ஒரு ராகம் பற்றி இருக்கும். அது மட்டும்தான் சுவாரசியமாக இருக்கும்.
கௌஸிகன்: பாமினிப் பாவை என்று ஒரு நாவல் சிறு வயதில் படித்திருக்கிறேன். நாஸ்டால்ஜியா, அதனால் அதையும் இங்கே சேர்த்திருக்கிறேன்.
படிக்க விரும்புபவை: யாரோ அனுஷா என்பவர் காவிரி மைந்தன் என்று பொ. செல்வனுக்கு ஒரு sequel எழுதி இருக்கிறாராம். பாலகுமாரனின் உடையார் என்ற புத்தகத்தை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். இவை இரண்டையும் படிக்க விரும்புகிறேன்.
இவர்களைத் தவிர விக்ரமன், அரு. ராமநாதன், ஜெகசிற்பியன், கௌதம நீலாம்பரன், மு. மேத்தா, தாமரை மணாளன், ஸ்ரீவேணுகோபாலன் ஆகியோர் எழுதியதையும் அங்கும் இங்குமாக படித்திருக்கிறேன். எதுவும் என்னை இம்ப்ரஸ் செய்யவில்லை. கண்ணதாசனின் விருது பெற்ற சேரமான் காதலி என்ற புத்தகத்தில் என்னால் ஐம்பது பக்கத்தை தாண்டமுடியவில்லை.
தமிழில் சரித்திர நாவல் என்றால் ஆ! அவள் அங்கங்கள் தங்கமாக ஜொலிக்கிறதே! என்ற நடையில் எழுத வேண்டும் என்றும் நிறைய பேர் நினைக்கிறார்கள். ரொம்ப நாட்களுக்கு முன்னால் இவர்கள் நடையை கிண்டல் செய்து எழுதிய கோப்பெருந்தேவி எங்கே என்ற சிறுகதை ஞாபகம் வருகிறது. அந்த சிறுகதை ஒரு தொடர்கதையின் 35-ஆவது சாப்டர் போல எழுதப்பட்டிருக்கும். ஒரு நாலு பக்கத்துக்கு குதிரை மேல் போய்க்கொண்டே கோப்பெருந்தேவி எங்கே என்று யோசிப்பார் ஹீரோ. சிரித்து சிரித்து எனக்கு வயிறு புண்ணாகிவிட்டது. இந்த கதையை யாராவது படித்திருக்கிறீர்களா?
உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்! இந்த தளத்தில் நான் எழுதுவதே அடுத்தவர்கள் சொல்வதை கேட்கலாம் என்றுதான்…
ஜூன் 8, 2009 at 5:33 பிற்பகல்
என்னை பொறுத்த வரை, பாலகுமாரனின் உடையார் தான் சிறந்த நாவலாக தோன்றுகிறது. காலத்தால் அழியாமல் இருக்க அனைத்து தகுதிகளையும் கொண்டு உள்ளது.
ஜூன் 9, 2009 at 1:28 மு.பகல்
அரு.ராமநாதனின் வீரபாண்டியன் மனைவி நீங்கள் அவசியம் படிக்கவேண்டிய சுவாரஸ்யமான நாவல்.
ஞாநி
April 6, 2011 at 12:25 பிற்பகல்
entha pathipagam.
April 8, 2011 at 5:45 பிற்பகல்
வீரபாண்டியன் மனைவி(3 பாகங்கள்)
http://www.udumalai.com/?prd=veerapandiyan%20manaivi%20(3%20paagangal)&page=products&id=5133
நவம்பர் 25, 2011 at 1:55 பிற்பகல்
puthagam vaangivitten
ஜூன் 9, 2009 at 4:19 மு.பகல்
ஞானி,
நீங்கள் இந்த பதிவை பார்த்தது ஒரு மகிழ்ச்சி என்றால் தேட இன்னொரு புத்தகம் கிடைத்துவிட்டது என்பது இன்னும் பெரிய மகிழ்ச்சி! இந்த நாவலை என் போன்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி வையுங்களேன்!
நவம்பர் 13, 2011 at 12:46 பிற்பகல்
vetri thirunagar (akilan) is very good novel – hero name visuvanatha nayakar, he was “pan vala” (vetrilai madithu kudupan) for the great krishna deva raja. pls if u will get chance read it.
vengain mainthan(akilan) – in ponniyen selvan , after aathiya karikala death vandiya devan met kariya thirumal in prison, that time he told some details for pandian property (magudam & sward), that are found in this book. the great vandhiya deva came in this novel (old man)
ஜூன் 9, 2009 at 4:49 மு.பகல்
I think “கோப்பெருந்தேவி எங்கே” was written by ‘Nagupolian” (pseudonym). One the most hilarious spoofs on the Historical novel. It was published in Kanaiyazhi.
ஜூன் 9, 2009 at 6:11 மு.பகல்
பாபு, உடையார் படிக்க வேண்டும் என்று திட்டம் இருக்கிறது. எப்போது நடக்கும் என்று சொல்லமுடியாது. உங்கள் பரிந்துரைக்கு நன்றி!
booksforlife, எனக்கு கோப்பெருந்தேவி யார எழுதியது என்று நினைவில்லை. அவ்வளவாக பிரபலம் ஆகாத ஒருவர். நீங்கள் சொல்வது போல் கணையாழி தொகுப்பில் எங்கோ படித்தேன். அருமையான spoof. இதை பற்றி நீங்கள் எழுதியது சந்தோஷமாக இருக்கிறது.
ஜூலை 15, 2009 at 10:45 மு.பகல்
தஞ்சை பெரிய கோவிலை பற்றியும் ,ராஜராஜ சோழன் பற்றியும் அறிய ஆவல் உள்ளவர்கள் படிக்க வேண்டிய புத்தகம் உடையார்..மிக அருமையான படைப்பு..
ஜனவரி 22, 2010 at 9:45 மு.பகல்
sandilyan in manjal aaru
ஜனவரி 22, 2010 at 9:49 மு.பகல்
sandilyanin manjal aaru
நவம்பர் 13, 2011 at 1:23 பிற்பகல்
best sandilyan novels (vanathi pathipagam)
kadal pura (based on kalingathu barani)-1,2,3
yavana rani – thirumavalavam(karikalan),irmbidarthaaliyan(karkalan’s uncle)-1,2
raja muththirai-1,2 (pandias)
jala deepan – “sarcale” kanoj angarey (sarcale means neavy caption)
raja perigai – sri rangam ranganathar eye theft – that period story
raja thilagam -2nd narasima pallava and his father parameswara pallavas story (please vesit kanjipuram after reading this book)
vijaya maga devi -sri langa story (bharathi pathipagam)
mannan magal – vengi nattu story(did u seen raja raja cholan fiim, vengi mannan vimalathithan ) rajandra chola period story
malai vasl – scanda gupta story
mogini vanam
nila mangai
normal stories
mogana silai
mon malar
naga deepam
naga devi
rana amir
neel vizhi
jala mogini
ilaya rani
pallava peedam (bharathi pathipagam)
worst novel
alai arasi
neera radhi (bharathi pathipagam)
jagasirpiyan’s best novel (vanathi pathi pagam)
pathini kottam-1,2
magarayal mangai
aalavai azhagan
nayagi nartchonai
nandhivarman kathali -(nandhi kalambagam story)
thiruchirtralampalam – kamal’s dasavatharam – kulothunga cholan story
akilan
vetri thiru naga
vengaiyen mainthan
kayal vizhi
metha
maguda nila
chola nila – vijayalaya cholan & aditha cholan
sorry time over meet again bye
பெப்ரவரி 25, 2010 at 3:22 மு.பகல்
Nice details….
sadharana arivukku mayangum kadhaikal… we need to go next stage… thats spiritual books like… Mahabharadham, Vidhura Needhi, Ramayanam, Silapadhikaram, Kundalakesi, Manimekalai, so much books takes to you the next stage…….The final stage Silent… Meditation… Spiritual…. Silent is the book written by god… Please read that tooo…. no one is equal from that….
மார்ச் 1, 2010 at 7:58 மு.பகல்
பிரகாஷ்,
சரித்திர நாவல்கள் பதிவுக்கு மறுமொழி இட்டதற்கு நன்றி!
ஜூன் 15, 2010 at 8:55 மு.பகல்
hi RV,
if u like kalkis ponnien selvan means then u must read akilans vengaieyn maindhan. very nice one. don’t come to conculsion by reading any one novel of a writer
ஜூன் 16, 2010 at 1:58 மு.பகல்
செந்தில்குமார், நீங்கள் சிபாரிசு செய்கிறீர்கள், அதனால் வேங்கையின் மைந்தன் கிடைத்தால் படித்து பார்க்கிறேன்.
ஜூன் 16, 2010 at 3:57 மு.பகல்
thank u RV.
also try Udaiyar. This is also some what different.
ஜூன் 16, 2010 at 7:48 பிற்பகல்
செந்தில்குமார், உடையார் படிக்க வேண்டிய லிஸ்டில் இருக்கிறது. வே. மைந்தன் மீதுதான் நம்பிக்கை இல்லை.
பார்ப்போம்.
ஜூன் 17, 2010 at 9:50 மு.பகல்
கல்கி ராஜேந்திரனின் ரவி குல திலகன் முயற்சி செய்து பாருங்க. எளிமையாக விறுவிறுப்பாக இருக்கு.
பாலகுமாரனின் கடிகை , செப்புப் பட்டயம் ( இது தேவ தாசிகள் பற்றிய கதை ) படித்து இருகிறீர்களா ?
உடையார் என்னுடைய படிக்கும் பட்டியலில் இருக்கு. எப்போ அமையும்னு தெரியலை.
ஜூன் 17, 2010 at 11:16 பிற்பகல்
விருட்சம், ரவிகுல திலகன் கேள்விப்பட்டது கூட இல்லை. சில பாலகுமாரன் புத்தகங்கள் கோவில் கல்வெட்டுகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டவை. ஆனால் அவர் நூற்றுக்கணக்கில் எழுதித் தள்ளுகிறார், புத்தகம் பேரே நினைவு இருப்பதில்லை.
ஜூன் 18, 2010 at 5:17 மு.பகல்
hello virutcham,
i had read “seppu pattayam and kadigai” of bala kumaran. i have no idea about ravi kula thilakan by kalki rajenthiran.
i am having most of the books of sandilyan and balakumaran.
ஜூன் 18, 2010 at 5:42 மு.பகல்
ரவி குலத் திலகன் வானதி பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறார்கள். இது கைக்கு கிடைக்கும் முன் எனக்கும் இந்த புத்தகம் பற்றி எதுவும் தெரியாது.
கடிகை – இது பரசுராமரால் 64 கலைகளையும் அருளப்பட்ட அவர் சீடர்கள் (அந்தணர்கள்) அந்த கலைகளைக் கொண்டு சேர, பாண்டிய சோழ தேசம் என்று பயணித்து கலைகளை கற்றுக் கொடுத்ததும், ராஜ்யங்களின் முக்கிய முடிவுகளுக்கு காரணமாகியும், என்று இந்த பயணம் சீனத்தை நோக்கி என்று முடிகிறது கதை.
இதில் அந்தணர்கள் போரும் செய்கிறார்கள் ( உங்களது ஒரு பதிவில் நீங்கள் எழுப்பிய கேள்வியை அந்தணர்கள் போர் செய்யலாமா? என்றே கேள்வியை இங்கும் சில அந்தண மாணவர்கள் எழுப்புகிறார்கள் ) படித்துப் பாருங்கள்.
செப்புபட்டயம் என்னை மிகவும் கவர்ந்தது. தேவதாசிகள் குறித்த பொது ஜன பார்வையை மாற்றக் கூடிய கதை. உண்மை சம்பவத்தின் அடிப்படை என்கிறார் ஆசிரியர்
ஜூன் 18, 2010 at 5:44 மு.பகல்
செந்தில்
பாலகுமாரனின் புத்தகங்களில் உங்கள் பரிந்துரை எது ?
ஜூன் 18, 2010 at 5:52 மு.பகல்
மேலும் விவரம் வேண்டும் என்றால்
ரவி குலத் திலகன் ஒரு பார்வை என்று தேனம்மை எழுதிய பதிவு
http://honeylaksh.blogspot.com/2010/06/blog-post_14.html
ஜூன் 19, 2010 at 2:35 மு.பகல்
விருட்சம், ரவிகுலதிலகன் பற்றிய சுட்டிக்கு நன்றி! இந்த பதிவை அப்டேட் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.
செந்தில் குமார், நினைவு வரும் பாலகுமாரன் கதைகள்: சுசீந்திரம் கோவிலில் ஒரு சிற்ப வேலை செய்பவன் பற்றிய ஒரு கதை, ஜெம்பை கோவில் கல்வெட்டை வைத்து ஒரு கதை, மயிலாப்பூரில் ஒரு “சின்னத்” தலைவன் பற்றி ஒரு கதை, ஒரு மறு ஜென்ம கதை – ராஜராஜ சோழனிடம் வேலை பார்த்த ஒரு இடங்கை கைக்கோள வீரன் மறு பிறவி எடுக்க, ராஜராஜனும் மற்றவர்களும் ஆவிகளாக வருவார்கள். அந்த மறு ஜென்ம கதை மிக நன்றாக இருந்தது. எந்தக் கதைக்கும் பேர் நினைவில்லை.
ஜூலை 27, 2010 at 6:24 மு.பகல்
i’have read lot of tamil novels even if my best novel is
ponien selvan…
kalki is a famous writer in tamil.
i liked his sivagamien sapatham, parthipan kanavu…
second one is sandilyan
his novels are very intersting one i liked his novel of
yavana rani as well as kadal pura.
third one is kanadhasan
i liked his novel one that is
seraman kadhali
My best author kalki..best novel ponien selvan…
ஜூலை 27, 2010 at 7:19 பிற்பகல்
செல்வராஜ், என்னால் சேரமான் காதலியை ஐம்பது பக்கத்துக்கு மேல் படிக்க முடியவில்லை. தாங்க முடியவில்லை.
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மற்ற நாவல்கள் சுவாரசியமானவையே.
சிவசுப்ரமணியம், வம்சதாரா, அனுஷா வெங்கடேஷ் மற்றும் திருமலைத் திருடன் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். படித்ததில்லை.
ஜூலை 27, 2010 at 7:35 மு.பகல்
One must have time and patience to read Udayar becoz of its volumes.
A writer from Vizag, Mr Dhivakar, has written two historical novels. Vamsadhara and Thirumalaithirudan. Both are good.
Anusha venkatesh’s sequel to Ponniyin selvan was also a good attempt.
ஆகஸ்ட் 18, 2010 at 3:31 பிற்பகல்
veerapandian manaivi super novel. where shall i get the book.
ஆகஸ்ட் 18, 2010 at 10:53 பிற்பகல்
குணசேகரன், எனக்கும் தெரியவில்லை. anyindian.com முயற்சி செய்து பாருங்கள்.
ஆகஸ்ட் 23, 2010 at 3:24 மு.பகல்
RV வணக்கம்,நீங்கள் குறிப்பிட்ட கோப்பெருந்தேவி எங்கே என்ற அங்கதம் 1966 கணையாழி-இல் நகுபோலியன் எழுதிய “மழநாட்டு மகுடம்” என்ற சரித்திர தொடரின் 300 வது அத்தியாயமாக வரும்.அதில்வரும் ஒரு பாரா, திருமழப்பாடியிலேதிரண்டேதிர்த்து வந்துநின்ற தண்டை நாட்டு தனிமன்னன் திருத்தக்கத் (தகிகிட)தாண்டவனை தேர்காலிலே கட்டி,அவன் தளபதி தடுமாறனை தெருதெருவாய் துரத்தி திண்ணனூர் வரை சென்று அங்கு அவன் தங்கை தீஞ்சுவைகோதையை திருமணம் கொண்டு திரும்பி “திண்ணை கடந்த தீன்சுவைகிழான்” என்னும் தீரவிருது பெற்றவனன்றோ இவன்! சும்மா கல்கியையும் ,சாண்டில்யனையும் போட்டு கிழி கிழின்னு கிழித்திருப்பார்.இன்று நினைத்தாலும் சிரிப்புத்தான்.
ஆகஸ்ட் 23, 2010 at 5:50 பிற்பகல்
விஜயன், எனக்கு அது ஜெகசிர்பியனைத்தான் அதிகம் நினைவுபடுத்தியது. நகுபோலியன் வேறு ஏதாவது எழுதி இருக்கிறாரா?
நவம்பர் 7, 2010 at 11:31 மு.பகல்
வீரபாண்டியன் மனைவி பிரேமா பிரசுரம் என்று நினைவில் இருக்கிறது
நவம்பர் 7, 2010 at 6:48 பிற்பகல்
சரித்திர நாவல்கள் பதிவுக்கு மறுமொழிக்கு நன்றி, போகன்!
மார்ச் 17, 2011 at 3:20 பிற்பகல்
u done a good job
April 15, 2011 at 7:06 பிற்பகல்
கோப்பெருந்தேவி எங்கே ? — கணையாழி கதைகள் தொகுப்பிலிருந்து ஒரு வித்தியாசமான நகைச்சுவைக் கதை
மழநாட்டு மகுடம் – நகுபோலியன்
http://www.appusami.com/HTML/htmlv92/main/kanayali.asp
மே 25, 2011 at 10:35 மு.பகல்
மிக அருமை உங்க விமர்சனம் ஆர்வி.. விருட்சிகம் என் சுட்டியைப் பகிர்ந்தமைக்கு நன்றி..:)
அக்டோபர் 23, 2011 at 5:14 பிற்பகல்
I am also happy to read those books, but their availability is not known to me, kindly inform the places where i will get them
நவம்பர் 14, 2011 at 6:27 மு.பகல்
Please do not read kaviri mainthan by anusha venkatesh….One of the worst novel I have ever read.He has written 1300 pages of story only with what Kalki has given as mudivurai. Kalki in ponniyin selvan would have listed what happened to all characters at last. this book has only those things. Nothing new. Vijaya mahadevi by sandilyan was more better
நவம்பர் 16, 2011 at 1:10 பிற்பகல்
Hi,
One of the best historical fictions is ‘Kalaimani’s “Ponnivanathu Poonguyil”, about the Maratha period of Tanjore. “Kalaimani” is “Kothamangalam Subbu”, author of the famous “Thillana Mohambal”. Also, Na Pa’s “Nithilavalli” is a good attempt, about the “Kalabras” period in Tamil history.
ஜனவரி 6, 2012 at 2:15 பிற்பகல்
Hello,
Good list of History novels in tamil to read about. But Your listing is missing with one of the important / different style of writting – Naan Krishna Devarayan by Ra Ki Rangarajan. Excellant novel – definitly a must read. Try it…