
சந்திரசேகரேந்திரர்
அதர்வ(ண) வேதம் ஓதும் பாரம்பரியம்(சாகை) உள்ள குடும்பங்கள் இப்போது எதுவுமே இல்லையா என்று ஒரு பதிவில் கேட்டிருந்தேன். மறுமொழி இட்ட பலர் மஹா பெரியவர் என்று அழைக்கப்படும் மறைந்த காஞ்சி மடாதிபதி சந்திரசேகரேந்திரர் இதை ஓதுவதை மீண்டும் வழக்கத்துக்கு கொண்டு வர பெரும் முயற்சி எடுத்துக்கொண்டார் என்றும் இதை பற்றிய விவரங்களை தெய்வத்தின் குரல் புத்தகத்தில் காணலாம் என்றும் சொன்னார்கள்.
நான் தடி தடி புத்தகங்களை கண்டால் காத தூரம் ஓடுபவன். அதுவும் இது நாலைந்து வால்யூம் என்று ஞாபகம். வழக்கம் போல சேதுராமன் உதவிக்கு வந்திருக்கிறார். அந்த புத்தகத்திலிருந்து அதர்வ(ண) வேதம் பற்றி சில பகுதிகளை கீழே தந்திருக்கிறார்.
அதர்வன் என்றால் புரோஹிதர் என்று அர்த்தம். அந்தப் பெயரிலேயே ஒரு ரிஷி இருந்தார். அதர்வா என்ற அந்த ரிஷியின் மூலம் பிரகாசமானது அதர்வ வேதம். அதிலே பல விதமான ஆபத்துக்களைப் போக்கிக் கொள்வதற்கும் சத்துருக்களை அழிப்பதற்கும் மந்திரங்கள் இருக்கின்றன. ப்ரோஸ் பொயட்ரி இரண்டும் கலந்து இருக்கின்றன. மற்ற வேத மந்திரங்களுக்கும் இந்தப் பிரயோஜனம் உண்டு. ஆனால் மற்ற வேதங்களில் இல்லாத அனேக தேவதைகள், இன்னம் கோரமான பல வித ஆவிகள் இவற்றைக் குறித்தும் மந்திரங்கள் அதர்வத்தில்தான் இருக்கின்றன. மாந்திரீகம் என்று இப்போது சொல்கிற அனேக விஷயங்கள் அதர்வ வேதத்திலிருந்து வந்தவைதான்.
ரொம்ப உயர்ந்த தத்துவங்களைக் கொண்ட மந்திரங்களும் அதர்வத்தில் இருக்கின்றன. லோகத்தில் இருக்கப்பட்ட ஸ்ருஷ்டி விசித்திரத்தையெல்லாம் கொண்டாடுகிற ப்ருத்வீ ஸூக்தம் இந்த வேதத்தில்தான் வருகிறது.
யக்ஞத்தை மேற்பார்வை இடுகிற பிரம்மாவை அதர்வ வேதத்திற்குப் பிரதிநிதியாகச் சொல்லியிருப்பது இதற்கு ஒரு பெருமை. இதன் சம்ஹிதா பாகத்தின் அத்யயனம் வடக்கே ரொம்ப ரொம்பத் தேய்ந்து போய் தெற்கே அடியோடு இல்லாமல் போய்விட்டாலும், பிரசித்தமான பத்து உபநிஷத்துக்களுக்குள் பிரச்னம், முண்டகம், மாண்டூக்யம் என்ற மூன்று உபநிஷத்துக்கள் அதர்வ வேதத்தைச் சேர்ந்தனவாகவே உள்ளன.
முமுக்ஷுவானவன் (ஞான ஸாதகன்) மோக்ஷம் பெறுவதற்கு மாண்டூக்ய உபநிஷத் ஒன்றே போதும் என்ற வசனம் இருக்கின்றது. அப்படிப்பட்ட உபநிஷத் அதர்வத்தைச் சேர்ந்ததாகவே இருக்கிறது.
பிற்காலத்தில் அதர்வ அத்யயனம் விட்டுப் போனாலும், நீண்ட காலம் அது வழக்கில் இருந்திருக்கிறது என்பது கல்வெட்டுக்களிலிருந்து தெரிகிறது. திண்டிவனத்திற்குப் பக்கத்தில் பேரணிக்குக் கிட்டே எண்ணாயிரம் என்ற ஊரிலும், காஞ்சீபுரத்திற்குப் பக்கத்திலுள்ள வாலாஜாபாத் சமீபத்திலேயும் கிடைத்திருக்கிற கல்வெட்டுக்களில், ஆங்காங்கே இருந்த பெரிய வித்தியாசாலைகளைப் பற்றித் தகவல்கள் இருக்கின்றன. இவற்றைப் பார்த்தால் பிற்காலச் சோழர் ஆட்சிக் காலத்திலும் கூடத் தமிழ் தேசத்தில் அதர்வ வேத அத்யயனம் இருந்திருக்கின்றது என்று தெரிகிறது.
வடக்கே ஒரிசாவில் இருக்கும் பிராமணர்களில் பதினெட்டுப் பிரிவுகள் உள்ளன. அவர்களில் ஆதர்வணிகர் என்றே ஒரு பிரிவுக்குப் பெயர். அதர்வ வேதிகள் என்பதே இதற்கு அர்த்தம். இப்போதும் குஜராத், சௌராஷ்டிரம், கோசலம் முதலான தேசங்களில் ரொம்பவும் அபூர்வமாக அதர்வ வேதிகள் இருக்கிறார்கள்.
(ஸ்ரீ பெரியவர்கள் மேற்கொண்ட முயற்சிகளால் அதர்வ வேத அத்யயனம் மீண்டும் பொலிவு பெற வாய்ப்புள்ளது. தமிழக வித்தியார்த்திகளும் குஜராத்தில் உள்ள ஸினோருக்குச் சென்று அதர்வ வேதப் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.)
தெய்வத்தின் குரல் இரண்டாம் பகுதி 1978 – தொகுப்பாசிரியர் ரா.கணபதி வானதி பதிப்பகம் சென்னை)
அவரும் அதர்வ வேதம் என்றே குறிப்பிடுகிறார். சிறு வயதில் நான் படித்த பாடப் புத்தகத்தின் தவறோ, இல்லை என் ஞாபகத்தின் தவறோ, எனக்கு அதர்வண வேதம் என்றுதான் படித்தாற்போல இருக்கிறது. வேதங்களை பற்றி அவரை விட எனக்கு எந்நாளும் தெரியப்போவதில்லை, அதனால் நானும் உஜாலாவுக்கு மாறிவிடுகிறேன். இனி மேல் அதர்வ வேதம் என்றே எழுதுகிறேன்.
ஜூன் 3, 2009 at 8:28 பிற்பகல்
அதர்வண் வேதம் என்பது உலகில் அழிந்து வரும் வேதமாகி வருகிறது. கேரளத்தில் சில காலம் முன் வரை அதை பயன் படுத்தி கொண்டிருந்தார்கள். தற்போது அதை அவர்களும் கைவிட்டு விட்டனர். தற்போது அவ்வேதத்தை உலகெங்கும் பரப்புவதையே ஒரு தவமாக எடுத்து காஞ்சி தற்போதய பெரியவர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செய்ல் பட்டு வருகிறார். இந்த நூற்றாண்டின் சிறந்த அதர்வண வேத விற்பன்னராக அவர் அறிய படுகிறார்.
கடந்த ஆட்சியின் போது ஆட்சியாளர்களிடம் நல்ல தொடர்பு இருந்த போது அம்மாவாசை இரவுகளில் கருப்பு சட்டை அணிந்து வேத விற்பன்னர்களை வைத்து நடந்த அதர்வண வேத யாகங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. முரசொலி மாறன் போன்றோரின் மரணத்துக்காக கூட அங்கு யாகம் நடந்ததாக பேச்சு உண்டு.
ஜூன் 9, 2009 at 5:35 பிற்பகல்
சாதுக்காபுத்தம்,
அதர்வ வேதம் பற்றிய உங்கள் மறுமொழிக்கு நன்றி! இன்னும் இந்த மாந்திரீகம் போன்றவற்றை நம்புவது ஆச்சரியம் ஆகத்தான் இருக்கிறது.
அக்டோபர் 9, 2009 at 3:07 பிற்பகல்
சாதுக்காபுத்தம் அல்ல, சதுக்கபூதம்!
செப்டம்பர் 1, 2010 at 8:02 மு.பகல்
i like to study adharvana vedham
செப்டம்பர் 1, 2010 at 10:11 பிற்பகல்
ராஜன், அதர்வ வேதம் படிக்க வேண்டுமென்றால் காஞ்சி சங்கர மடத்தில் கேட்டுப் பாருங்கள். வேதத்தை ஆராய வேண்டும் என்றால் நெட்டில் தேடிப் பாருங்கள், கிடைக்காமலா போய்விடும்?
December 7, 2010 at 2:46 பிற்பகல்
Good answer Mr. Rv i like ur way of answer.
could u tell me what is vedam?
who is develop this? And why they seperate tat? like rig veda, same veda like this. hmmm. could u tell me!
செப்டம்பர் 28, 2011 at 4:46 மு.பகல்
i need to developed my knowege
நவம்பர் 26, 2011 at 5:28 மு.பகல்
i like thz… i want know about thz..