
பிரபாகரன்
நான் புலிகளை எதிர்ப்பவன். புலிகள் பலம் பெறுவது, புலிகள் ஆட்சி செய்யும் தமிழ் ஈழம் போன்றவை தமிழர்களுக்கு long term-இல் பாதகமாகவே அமையும் என்று நினைப்பவன்.
Paradoxically, பிரபாகரன் இறந்திருந்தால் அதுவும் தமிழர்களுக்கு பாதகமாகவே அமையும் என்று நினைக்கிறேன்.
புலிகளை பற்றி எழுதப்பட்ட மறுமொழிகள் பல தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு அவர்களும் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லி இருந்தன. சிலர் ஒரு படி மேலேயே போய் இலங்கை அரசை விட இன்று புலிகள்தான் தமிழர்களுக்கு தீங்கு விளைப்பவர்கள் என்று எழுதி இருந்தார்கள். அவர்கள் சொல்வதில் ஓரளவாவது உண்மை இருக்கத்தான் செய்கிறது. புலிகளால் தமிழர்களுக்கு unadulterated நன்மை விளைந்தது/விளைகிறது என்று நான் சொல்லமாட்டேன்.
ஆனால் இன்று ராஜபக்சே, இலங்கை அரசு have the upper hand என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இன்று தமிழர்களுக்கு உரிமை கொடுப்பது, கொடுக்காமல் இருப்பது எல்லாம் அவர்கள் இஷ்டம், அவர்கள் சவுகரியம். இந்திய அரசு கொஞ்சம் பிரஷர் கொடுக்கலாம். ஆனால் புலிகள், பிரபாகரன் ஆகியோரால் விளையும் ப்ரெஷரை விட இது பல மடங்கு குறைவு. யாரை கண்டு அவர்கள் இனி மேல் பயப்பட வேண்டும்?
பல குறைகள் இருந்தாலும், பிரபாகரன் இறந்திருந்தால் அது ஈழத் தமிழர்களுக்கு இழப்புதான்.
மே 20, 2009 at 3:25 மு.பகல்
மெண்டல்
மே 20, 2009 at 5:12 மு.பகல்
மயோன்,
// மெண்டல் // யார்? நானா, பிரபாகரனா, நீங்களா?
மே 20, 2009 at 1:09 பிற்பகல்
நானாதான்
மே 20, 2009 at 8:54 மு.பகல்
புலிகள், பிரபாகரன் இலங்கை அரசுக்கு தமிழர்களுக்கு உரிமை கொடு என்று எந்த ப்ரெஷரையும் கொடுக்கவில்லை. தமிழ் ஈழம் கேட்டு யுத்தம் செய்து தமிழர்களுக்கு மோசமான பேரழிவை தான் கொடுத்தனர்.
மே 20, 2009 at 9:02 மு.பகல்
பிரபாகரன் இறந்த தாக அறிவித்த அன்றே கொலும்புவில் தமிழர்கள் பலர் கொத்து கொத்தாக இரானுவத்தாலும் காவல்துறையினராலும் விசாரனைக்காக பிடிக்கப்படிடார்கள் என செய்திகள் தெரிவிக்கின்றன. எத்துனை பேர் நியாயமான முறையில் விசாரிக்கப்பட்டனர் பின்னர் விடுவிக்கப்பட்டனர் விபரங்கள் ஏதுமில்லை. தாங்கள் சொல்வது போல பிரபாகரன் மறைவு ஈழத் தமிழர்களுக்கு இழப்புதான்.
மே 20, 2009 at 9:24 மு.பகல்
ஆர்வி
இறந்திருந்தாலா ?????? இன்னுமா சந்தேகம். பிராபாகரன் இப்பவாவது வீரமரணத்தோடு இறக்கலாம், இப்போது இறந்திருக்காவிட்டால், இன்னும் மோசமான பெயரோடு இறப்பார். If he had survived, Prabhakaran mystique would be lost.For the sake of his image as a heroic warrior, I hope he is dead. Live Prabhakaran would be no use to anyone, least of all himself.
புலிகளும், இ.அரசாங்கமும் 25 வருடங்கள் முன்னாடியே தங்கள் அரசியல்/ராணுவ காய்களை நகர்தி விட்டார்கள். தஙகள் பாதையை 20 வருடங்கள் முன்னாடியே தீர்மானித்து விட்டார்கள். இருவரும் All or Nothing என்ற மனப் பான்மையில் களத்தில் குதித்தனர். ஒருவருக்கு Nothing கிடைத்தது. It was only a question of time before things ended up like this. இப்போது இல்லாவிட்டால், இரண்டு வருடங்களில் இதைப் போல வந்திருக்கும். Fate has not been kind to Srilankan Tamils; Tigers made it far worse. Sinhala majority threw the noose to Tamils. Instead of leaving it on the ground, Tigers picked it up and put it on their neck. அதனால் புலிகள்/பிரபாகரன் மரணம் ஸ்ரீலங்க தமிழர்களுக்கு பெரிய இழப்பு என சொல்ல முடியாது.
விஜயரகவன்
மே 20, 2009 at 10:40 மு.பகல்
Hope better sense prevails in Serendip.
மே 20, 2009 at 11:18 மு.பகல்
nee prabhakaran makkaloda valntha ooruku poyirukiya.. pona therinchirukum. avar enna mathiri antha oora vachchirunthaaru theriyuma?
மே 20, 2009 at 12:04 பிற்பகல்
An inevitable end to the armed struggle for dignity and equal rights.
There is a very good article from Tehalka here:
http://www.tehelka.com/story_main41.asp?filename=Ne230509coverstory.asp
மே 20, 2009 at 12:07 பிற்பகல்
http://www.yarl.com/forum3/index.php?showtopic=58843
மே 20, 2009 at 12:56 பிற்பகல்
உயர்ந்த இலட்சியங்களுடன் துவங்கிய ஒரு விடுதலை இயக்கம், வழி தவறி கொலைகார இயக்கமாக மாறியது என்பதை யாரும் மறக்க முடியாது.. ஈழத்தைத் துண்டாடுவதென்பது கற்பனையிலும் நடக்கக் கூடியதல்ல என்பது, தமிழ் நாட்டிலுள்ள கழகக் ண்மணிகளின் “அடைந்தால் திராவிட நாடு
இல்லையேல் சுடுகாடு” என்ற கோஷம் பொய்த்துப் போனதிலிருந்தே புலிகளுக்கும் மற்றுமுள்ள தமிழர்களுக்கும் தெரிந்திருக்க வேண்டும். தங்கள் இலட்சியத்தை வன்முறை மூலம் கிட்ட வைக்கலாம் என்ற ஆர்வம் தான் அவர்களுடைய அழிவையும் தேடியது. உண்மையிலேயே ஈழத்தமிழர்கள் மீது
அக்கரை இருந்திருந்தால், கடைசி நிமிஷ
“சரணாகதி”யை பல மாதங்களுக்கு முன்பே
செய்திருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள்
உயிர்களைக் காப்பற்றியிருக்கலாம். தவறி
விட்டார்கள் புலிகளும் அவர்கள் ஆதரவாளர்களும்….
ஈழத்திலுள்ள அனைத்து இயக்கங்களும் இப்போதாவதுஒற்றுமையுடன் பாடுபட்டு, இலங்கையின் இறையாண்மைக்குள்
சமச்சீர் நிலையை அடையவேண்டும்…
மே 30, 2009 at 4:21 பிற்பகல்
Sethuraman கூறியது முழுவதும் உண்மை.
இந்தியா உட்பட பல நாடுகளால் வேண்டப்பட்ட புலிகள் சரணடையவேண்டும் என்ற நடைமுறைசாத்தியமான கோரிக்கை தமிழ்நாட்டில் இருந்து வரவே இல்லை.இவர்களின் அக்கறை பிரபாகரனையும் புலிகளை பற்றியது மட்டுமே. புலிகளின் யுத்தத்தால் கொல்லப்பட்ட இலங்கை தமிழர்கள் பற்றி இவர்கள் அக்கறை படவில்லை. கொல்லப்பட்ட இலங்கை தமிழர்களளை காட்டி புலிகளையும் பிரபாகரனையும் காப்பாற்ற மட்டுமே முயற்சித்தார்கள்.
மே 20, 2009 at 4:40 பிற்பகல்
விஜயராகவன்,
உங்கள் மறுமொழியோடு எனக்கு கடைசி வரி வரை இசைவுதான். // Instead of leaving it on the ground, Tigers picked it up and put it on their neck. அதனால் புலிகள்/பிரபாகரன் மரணம் ஸ்ரீலங்க தமிழர்களுக்கு பெரிய இழப்பு என சொல்ல முடியாது.அதனால் புலிகள்/பிரபாகரன் மரணம் ஸ்ரீலங்க தமிழர்களுக்கு பெரிய இழப்பு என சொல்ல முடியாது. // என்ற கடைசி வரிகளில் மட்டும்தான் நான் வேறுபடுகிறேன். அதில் கூட புலிகளால் ஈழத் தமிழர்களுக்கு பாதிப்பு இருந்தது என்பதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.
ரோபோ, நான் ஈழத் தமிழன் இல்லை. இலங்கை சென்றதே இல்லை, அங்கே வசிப்பது அப்புறம்தானே? சென்னையில் அவர் இருந்தபோது நானும் அங்கே இருந்திருக்கிறேன் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.
முரளி, நீங்கள் சொன்ன சுட்டியை இன்னும் முழுதாக படிக்கவில்லை. ஆரம்பம் நன்றாக இருந்தது.
ரதி, நீங்கள் சொன்ன சுட்டிய படித்தேன். பிராந்திய அரசுகளின் மனப்பான்மை பற்றி எழுதப்பட்டிருப்பவையில் நிறைய உண்மை இருக்கிறது.
சேதுராமன், நீங்கள் சொல்வது எனக்கும் அனேகமாக சரி என்றுதான் படுகிறது. புலிகள் ஆயுதங்களை கையில் தூக்கியபோது அவர்களுக்கு வேறு வழி இல்லை என்று நான் நினைக்கிறேன். நீங்கள் சொல்வது போல் இந்த சரணாகதியை கொஞ்ச நாட்கள் முன்னாலேயே செய்திருந்தால் இன்னும் கொஞ்சம் தமிழர்கள் பிழைத்திருப்பார்கள்.
நித்தில், நீங்கள் சொல்லும் செய்தி – கொழும்பில் தமிழர்கள் விசாரணைக்காக கைது செய்யப்பட்டார்கள் – அதிர்ச்சி தருகிறது. கேட்பதற்கு ஆளே இல்லை.
பூனை, பிரபாகரன் உயிரோடு இருப்பதே இலங்கை அரசுக்கு ப்ரெஷர்தான் என்று நான் நினைக்கிறேன்.
மயோன், கிருஷ்ணன், மறுமொழிகளுக்கு நன்றி!
மே 20, 2009 at 5:49 பிற்பகல்
well said. I agree with you.
you have guts to bell the cat. Idians should not forget about the gandhiyan way of getting things done. An uprise of srilankan tamils in a democratic way with an international support can yield them respect and rights if not statehood. Now it is the responsibility of international cmmunity to rebuild the war torn tamil parts and restore tamils life there… It will pass by.
மே 21, 2009 at 4:25 மு.பகல்
நல்லவன்,
பிரபாகரன் பற்றிய பதிவுக்கு மறுமொழி அளித்ததற்கு, பாராட்டுகளுக்கு நன்றி!
மே 21, 2009 at 4:23 மு.பகல்
ரதி,
நீங்கள் எழுதுவதை/பேசுவதை படிக்க/கேட்க எப்போதும் ஆவல் உண்டு. உங்களுக்கு அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். நான் மூன்றாவது மனிதன்தான். ஆனால் உங்கள் உணர்வுகளின் வலியும் ஓரளவு எனக்கு புரிகிறது. நமக்குள் இருக்கும் பொதுவான மொழி, அரசியல், சரித்திரம், பண்பாட்டு பின்புலம் நம்மை ஒன்று சேர்க்கிறது.
நீங்கள் எழுதி இருப்பதை படித்தபோது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. உங்கள் இழப்பு(பிரபாகரன் மரணத்தை? மட்டும் இங்கே சொல்லவில்லை) பெரியது. அதை தாங்கும் சக்தியை, செயல்படும் உத்வேகத்தை ஆண்டவன் உங்களுக்கு கொடுக்கட்டும்.
நீங்கள் தனியர் இல்லை. உங்கள் கஷ்டங்களை ஆறேழு கோடி பேர் புரிந்து கொள்வார்கள்/கொள்கிறார்கள். புலிகளை குற்றம் சொல்பவர்கள் (என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்) இருக்கலாம். ஆனால் ஈழத் தமிழர்களின் நிலையை புரிந்துகொள்ளாதவர்கள் இருக்க முடியாது. உங்களுக்கு பின்னால் பெரிய கூட்டமே இருக்கிறது. இத்தனை இழப்புகளுக்கும் அர்த்தம் இல்லாமல் போகாது. விடியல் வந்தே தீரும். நம்பிக்கையோடு இருங்கள்.
மே 21, 2009 at 10:50 பிற்பகல்
RV,
எங்கள் கருத்து வேறுபாடுகளையும் மறந்து ஒரு சகமனிதராக என் வலியை புரிந்து கொண்டதற்கும் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி.
ஒரு சிறிய வேண்டுகோள். தயவு செய்து அந்த மேலேயுள்ள என் பதிவை/பதிலை எடுத்து விடுங்கள். என் வலியை சொல்ல வேண்டுமென்று நினைத்தேன். சொல்லிவ்ட்டேன். இனிமேல் அது அங்கே தேவையா?
மே 21, 2009 at 5:43 மு.பகல்
To all those fascists who grin from ear to ear on the supposed death of Prabakharan…… wait till he comes back and exposes the plastic-surgery gimmicks of the racist SL govt and its army. You will exhaust fumes from all the pores of your body….big and small.
Prabhakaran has already been killed several times. Government of Sri Lanka is involved in ugly propaganda through Indian Channels, which are backed by RAW, like Times Now, NDTV, CNN IBN only. Did anybody see a similar tone in BBC ??? Still the BBC website says, with carefully worded sentences, unlike these fascist, nauseatingly stupid Indian channels, “Sri Lankan television stations broadcast footage of a body purported to be that of Prabhakaran”
Even if Prabhakaran happens to die before attaining Eelam, the death would be like that of Nethaji…No one can prove if he is alive or dead. Nobody can capture any evidence…even ashes….Government of Sri Lanka claims it is end of war. Indeed it is end of Eelam War 1. Eelam War 2 will start and that will be in a new form…unbearable by Sinhala chauvinists. Already when they left Killlinochi, many batches of 400 each, highly trained tigers have either moved out of the country or intruded inside Lanka itself for a future attack.
Wait and see…Tigers are gonna come alive in a different form. Never in the history a Liberation Struggle has failed. Eelam Struggle too will not.
Tamizhan endru sollada.
மே 21, 2009 at 5:51 மு.பகல்
பிரபு,
பிரபாகரன் முடிவு நேதாஜி போல் இருந்தால் அதில் யாருக்கு என்ன லாபம்? அவர் ஒரு active role எடுக்காவிட்டால் அவர் உயிரோடு இருந்தாலும் ஈழத் தமிழர்களுக்கு பயனில்லை.
// Tamizhan endru sollada. // தமிழில் எழுத முயற்சி செய்யுங்களேன்!
மே 21, 2009 at 10:27 மு.பகல்
ரதி
உங்கள் வலி ஈழத் தமிழர்களின் வலி மட்டுமில்லை. தமிழ்நாட்டு தமிழர்களின் வலியும் கூட. ஈழத் தமிழர்களின் தோல்வி தமிழ்நாடு தமிழர்களின் தோல்வியும் ஆகும்.
பிரபாகரனும் புலிகளும் இலங்கை தமிழர்களுக்கு பெரிய சாபக்கேடு. அதை உணராமல், தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பிரபாகரனுக்கு கடைசிவரை மானசீக ஆதாரம் கொடுத்து வந்தார்கள். புலிகளையும், பிரபாகரனையும் சிலர் சரியாக எடை போட்டு, தமிழர்களை எச்சரித்தனர். அவர்களை ஜாதி அடிப்படையில் வாயை மூடும் முயற்சிகள் நடந்தன. இரு மாதம் முன்புதான், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களால் அசிங்கங்கள் நடத்தப் பட்டன – பிரபாகரனுக்கு சார்பாக.
கடந்த 30 ஆண்டுகளாக இருந்த ஈழ மக்கள் மேலிருந்த அன்பெல்லாம் தோல்வியில் முடிந்தது. தமிழ்நாட்டு அரசியல் வாதிகளின் பங்கு இதில் முக்கியம்.
விஜயராகவன்
மே 21, 2009 at 10:40 பிற்பகல்
விஜயராகவன்,
உங்களுக்கும் எனக்குமிடையில் அடிப்படை முதல் எல்லா விடயங்களிலும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் என் வலியை புரிந்துகொண்டதற்கும் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி.
மே 22, 2009 at 10:56 பிற்பகல்
நான் மதிக்கும் பத்திரிக்கையாளர் ஜயராஜ், பிரபாகரனின் கடைசி யுக்திகள், கடைசி போர்கள், கடைசி தவறுகள் மற்றும் கடைசி நாள்களை பற்றி எழுதியுள்ளார்.
http://dbsjeyaraj.com/dbsj/archives/615
பிரபாகரன் உயிரோடு உள்ளான் என்ற எண்ணத்தை பரப்புவதில், பணம் வசூலிக்கும் கோஷ்டிக்கு நிச்சயம் சுயநலம் உண்டு. புலிகள் $350 மில்லியன் அளவு வருடாவருடம் வசூல் செய்கிறதாக நம்பப் படுகிறது.
விஜயராகவன்
மே 29, 2009 at 12:34 பிற்பகல்
varalaru theriyamal paesum ungalai parthal pavama irrukirathu…
மே 29, 2009 at 4:51 பிற்பகல்
நவநீதன்,
வரலாறு தெரியவில்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும். வரலாற்றில் என்ன தெரியவில்லை என்பதே தெரியவில்லை. நீங்கள்தான் விளக்குங்களேன்!
மே 30, 2009 at 1:39 மு.பகல்
RV,
இது உங்கள் பதிவோடு தொடர்புடையது மட்டுமல்ல. எங்கள் தேசியத்தலைவர் பற்றிய விடயங்களின் எனது உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்துவதால் கீழே ஓர் இணைப்பை கொடுத்துள்ளேன். இந்த “அவலங்கள்” என்ற கட்டுரையோடு என் கருத்துகளும் உடன்படுவதால் அதை இங்கே இணைத்துள்ளேன். அதை தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை.
எங்கள் தேசியத்தலைவர் பற்றிய தற்கால சர்ச்சைகளை வைகோ மற்றும் திருமாவளவன் போன்றோரகள் ஒரு மாறான வழியில் இட்டுச்சென்று தமிழ்நாட்டு தமிழர்களை மட்டுமன்றி ஈழத்த்மிழர்களையும் குழப்புகிறார்களோ என்று எனக்கு படுகிறது. நீங்கள் ஓர் இந்தியர் என்பதால் தான் அவர்களைப்பற்றிய கருத்துகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
பிரபாகரன் என்ற தனிமனிதர் சிங்கள பேரினவாதத்தை எதிர்த்து ஈழமக்களின் விடுதலைக்காக போரிட துணிந்தபோது அவர் பின்னால் சென்றவர்கள் பலபேர். ஈழவிடுதலையை விரும்பியவர்கள் அவரின் வழியில் தான் அது சாத்தியம் என்று நம்பியவர்கள் அவரை பின்தொடர்ந்தார்கள். தனிமனிதராய் தொடங்கிய விடுதலைப்போர் பிறகு சிறிதுசிறிதாக ஒரு விடுதலை இயக்கமாக பரிணாமித்தது. அந்த இயக்கமே ஈழத்தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் அமைந்தது. அந்த விடுதலை இயக்கத்தோடுதான் நோர்வே முதல் சர்வதேசமும் ஈழத்தமிழர்களின் “உரிமைகள்” பற்றி பேசினார்கள். அமெரிக்கா பயங்கரவாதிகள் என்று அறிவித்துவிட்டு அவர்களோடு நோர்வே “உரிமைகள்” பற்றி பேசியது எனக்கு எப்பொழுதுமே வேடிக்கையாகவே பட்டது. பயங்கரவாதிகளோடு ஏன் ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தின் விடுதலை/அடிப்படை உரிமைகள் பற்றி பேசுகிறார்கள் என்று நான் நினைப்பதுண்டு.
எது எப்படியென்றாலும், இன்று அந்த விடுதலை இயக்கத்தின் தலைமை பற்றியும் அதன் இருப்பு அல்லது மறைவு பற்றியும் ஈழத்தமிழர்களிடையே பல முரண்பாடான கருத்துகள் நிலவுகின்றன. ஈழத்தமிழர்கள் எப்படி வேண்டுமானாலும் நம்பிவிட்டு போகட்டும். பொதுவாக ஒருவருடைய இழப்பு பற்றிய initial reaction என்பது “Denial” ஆக கூட இருக்கலாம். பிறகு சிறிது சிறிதாக acceptance என்ற நிலைக்கு அவர்களாகவே வருவார்கள். அதுதான் இயற்கை. ஆனால், இடைப்பட்ட நிலையில் பிராகரன் பற்றிய விடயத்தில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் வைகோ, திருமாவளவன் போன்றோர்கள் ஈழத்தமிழர்களை குழப்புகிறார்கள். ஈழத்தமிழர்களில் ஒரு சாரார் பத்மநாதன் சொல்வதைவிட இவர்கள் சொல்வதை ஆணித்தரமாக நம்புகிறார்கள். யார் சொல்வதை நம்புவது அல்லது நம்பாமல் விடுவது என்பது அவரவர் தன்ப்பட்ட விடயம். அதைப்பற்றி நான் சொல்லவரவில்லை. ஈழவிடுதலைப்போரில் பிரபாகரன் ஒரு நீண்ட வரலாறாக இருக்கிறார். ஆனா, அவரோடு எங்கள் விடுதலைக்கான பயணம் முடியப்போவதில்லை. எங்கள் தேசியத்தலைவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. இனிமேல், ஈழவிடுதலையை எப்படி வழிநடத்துவது என்று ஈழத்தமிழன் தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால், இவர்கள் அறிக்கை மேல் அறிகை விட்டு எரிச்சலை கிளப்புகிறார்கள்.
யாரிடமாவது, ஈழத்தமிழரல்லாத ஒருவரிடம் இதையெல்லாம் கொட்டி தீர்க்க வேண்டுமென்று நினைத்தேன். அதனால், இந்த பதிவு. பிரபாகரன் இழப்பை மறுப்பவர்கள் என்னை திட்டினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
இணைப்பு கீழே.
http://sathirir.blogspot.com/
மே 30, 2009 at 2:50 பிற்பகல்
ரதி,
எனக்கு வைக்கோ, நெடுமாறன் போன்றவர்கள் பிரபாகரன் மறையவில்லை என்று சொல்வது அவர்கள் ஆசையைத்தான் என்று தோன்றுகிறது. நீங்களே சொல்வது போல் denial என்றுதான் நினைக்கிறேன். ஓரளவு wishful thinking என்று வைத்துக் கொள்ளலாம். வேறு ஏதும் சதி இல்லை என்றுதான் நினைக்கிறேன்.
பிரபாகரன் இறந்திருந்தால் அது ஈழத் தமிழர்களுக்கு இழப்புதான். ராஜபக்சே இனி மேலாவது தமிழர்களுக்கு உரிமை கொடுப்பாரோ என்று ஒரு நப்பாசை இருக்கிறது. நப்பாசைதான். அநியாயங்கள் தொடர்ந்தால் இயக்கம் இன்னும் வலிமை பெற்று மீண்டு வரும்.
சாத்திரியின் கட்டுரையை இன்னும் படிக்கவில்லை, படித்துவிட்டு சொல்கிறேன்.
மே 30, 2009 at 6:26 பிற்பகல்
RV,
தமிழீழ ஆதரவாளர்கள் யாரும் எங்களுக்கு “சதி” செய்கிறார்கள் என்று நான் சொன்னால் அது அபாண்டம், நன்றி மறத்தல். சதி என்ற சொற்பிரயோகம் ஏற்றுக்கொள்ள கடினமான ஒரு விடயம். ஐயா பழ நெடுமாறன், வைகோ போன்றோர் இல்லையென்றால் தமிழநாட்டு தமிழர்களுக்கு ஈழத்தமிழர்களின் அவலநிலை தெரியாமலே போயிருக்கும். அவர்கள் எங்களுக்கு சதி செய்கிறாரகள் என்று நான் சொல்வேனா?
சாத்திரியும் தன் கட்டுரையில் இதைப்பற்றியெல்லாம் பேசவில்லை.
மே 31, 2009 at 4:57 மு.பகல்
ரதி,
என்னுடைய புரிதல்தான் தவறாகிவிட்டது. ஆனாலும் அவர்களில் அறிக்கைகள் எல்லாம் denial, wishful thinking ஆகியவற்றிலிருந்து விளைவது என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அவர்களது வருத்தமும் உண்மையானது என்பதிலும் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இந்த வருத்தத்தில் ப்ராக்டிகலாக சிந்திக்கும் திறன் அவர்களுக்கு குறைந்திருக்கிறது, அதனால்தான் இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
பிரபாகரன் தப்பித்திருக்க எந்த வாய்ப்புமே இல்லையா?
// ஈழவிடுதலைப்போரில் பிரபாகரன் ஒரு நீண்ட வரலாறாக இருக்கிறார். ஆனா, அவரோடு எங்கள் விடுதலைக்கான பயணம் முடியப்போவதில்லை. எங்கள் தேசியத்தலைவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. இனிமேல், ஈழவிடுதலையை எப்படி வழிநடத்துவது என்று ஈழத்தமிழன் தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால், இவர்கள் அறிக்கை மேல் அறிகை விட்டு எரிச்சலை கிளப்புகிறார்கள். //
எப்படியாவது விடிந்தால் சரி என்ற ஆதங்கம்தான்.
மிக சரியாக சொல்கிறீர்கள். ஆனால் எனக்கு இப்போது ராஜபக்சே போன்றவர்கள் தமிழர்களுக்கு நியாயமாக நடந்து கொள்வார்களோ என்று ஒரு நப்பாசை இருக்கிறது. என் நப்பாசையை கண்டு நீங்கள் சிரிக்கலாம்.
மே 31, 2009 at 11:25 பிற்பகல்
RV,
//ஆனால் எனக்கு இப்போது ராஜபக்சே போன்றவர்கள் தமிழர்களுக்கு நியாயமாக நடந்து கொள்வார்களோ என்று ஒரு நப்பாசை இருக்கிறது. என் நப்பாசையை கண்டு நீங்கள் சிரிக்கலாம். //
இதில் என்னால் மட்டுமல்ல எந்தவொரு உண்மைத்தமிழனாலும் சிரிக்க முடியாது. எங்கள் உயிர்வலி உங்களுக்கு உண்மையிலேயே புரியவில்லையா RV? உங்களை நான் மனம் நோகவில்லை. உங்கள் கூற்று எப்படி என்னை மனமுடைய வைக்கிறது என்பதைத்தான் சொல்கிறேன்.
எப்படி உங்களால் ராஜபக்க்ஷேக்களால் நியாயமாக (நப்பாசையாக இருந்தாலும்) நடப்பார்கள் என்று நினைக்க முடிகிறது? இறுதியாக வந்த குமுதம் பத்திரிகையில் அரசு பதிலில் வந்த ஒரு வாக்கியம் இது.
”இவர்கள் எல்லாம் ராஜபக்சே நாட்டில் போய் தமிழர்களாகப் பிறந்தால்தான் அந்தத் தமிழர்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்ள முடியும் ”.
//பிரபாகரன் தப்பித்திருக்க எந்த வாய்ப்புமே இல்லையா?//
நானும் எல்லோரையும் போல் தான். பத்திரிகைகளில் வரும் செய்திகள் தான் எனக்கும் தெரியும். ஆனால், இனிமேல் பிரபாகரன் இருக்கிறார் என்றால் இன்னொரு போர், இன்னொரு பாரிய உயிர் அழிவு பிரபாகரனை பிடிக்க என்று நடத்துவார்கள். தாங்க முடியுமா? பிரபாகரனின் பெற்றோர்கள் இலங்கை அரசின் தடுப்பு காவல் முகாமில் இருப்பதாக இலங்கை அரசு சொல்கிறது. அவர்கள் இருவருக்கும் எப்படியும் எண்பது வயது இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால், இலங்கை அரசு அவர்கள் மீது ஏதோ வழக்கு பதிவு செய்யப்போவதாக படித்தேன். ஒரு வேளை பிரபாகரன் உயிருடன் இருந்தால் இப்படி அவர்களுக்கு நேருமா?
எல்லாம் ஈழத்தமிழனின் தலைவிதி.
ஜூன் 1, 2009 at 4:59 பிற்பகல்
ரதி,
ஒரு வேளை உங்களை விட எனக்கு ஆப்டிமிசம் அதிகமாகவும், உங்களுக்கு என்னை விட ரியலிசம் அதிகமாகவும் இருக்கிறதோ என்னவோ? நப்பாசைதான்…
ஜூன் 1, 2009 at 11:34 பிற்பகல்
RV,
யார் விடயத்தில் நீங்கள் Optimistic ஆக இருக்கிறீர்கள்? பிரபாகரனா? ராஜபக்க்ஷேக்களா? அல்லது இருவர் விடயத்திலுமா? பிரபாகரன் விடயத்தில் என்றால் எங்களுக்கும் சந்தோசம் தான்.
ஆகஸ்ட் 2, 2009 at 6:49 மு.பகல்
அடிமைகளாய் இருந்து பாருங்கள் சுதந்திரத்தின் அவசியம் புரியும்..
ஆகஸ்ட் 3, 2009 at 8:15 மு.பகல்
ஷிசுசிதம்பரம்,
சுதந்திரத்தின் அருமை புரிய அடிமையாக இருந்தால்தான் முடியும் என்பதில்லை. மேலும் இதை எதற்கு சொல்கிறீர்கள் என்பது கொஞ்சமும் புரியவில்லை.