முந்தைய பதிவு இங்கே. அங்கே விட்டுப் போன சில கேள்விகளை இங்கே பதித்திருக்கிறேன்.
புலிகள் ஆதரவு ஈழத் தமிழர்களிடம் நிறைந்து காணப்படுகிறதே?
அவர்களுக்காக இன்று போராடும் ஒரே அமைப்பு புலிகள்தான். இருந்த வேறு அமைப்புகள் எல்லாவற்றையும் புலிகள் அழித்துவிட்டார்கள். அவர்களுக்கு வேறு சாய்ஸ் இல்லை. வேறு என்ன செய்வார்கள்? (ப்ரியா போன்றவர்கள் புலிகள் ஆதரவு ஒரு myth என்று கூறுகிறார்கள்)
அனேகமாக ஒவ்வொரு ஈழத் தமிழரும் – புலம் பெயர்ந்தவர்களும் சேர்த்துத்தான் – இழப்புகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ அனுபவித்திருக்கிறார்கள். நேரடியாக இழப்பு இல்லாதவர்களின் பெரியப்பா, மாமா, மச்சினி, யாராவது எதையாவது இழந்திருக்கிறார்கள். அவர்கள் வலி எப்படிப்பட்டது என்று மூன்றாவது மனிதர்களான நானும் நீங்களும் சொல்ல முடியுமா? அடிபட்டவர்கள் தங்களுக்காக போராட மிஞ்சி இருக்கும் ஒரே அமைப்பான புலிகளை ஆதரிப்பதும் குறைந்த பட்சம் அடி வாங்காமல் பாதுகாப்பான சூழ்நிலையில் உட்கார்ந்து கொண்டு லாஜிக் பேசும் என்னை போன்றவர்களிடம் கடுப்பாக நாலு வார்த்தை பேசுவதும் அதிசயமா என்ன? அவர்கள் பேசட்டும், பேச வேண்டும். அவர்கள் நம் சகோதரர்கள். நம்மால் முடிந்தால் உதவி செய்வோம். இல்லை என்றால் ஆறுதலாக நாலு வார்த்தையாவது சொல்வோம். அவர்களோடு நமக்கு கருத்து வேற்றுமை இருக்கலாம். சகோதரர்களுக்குள் கருத்து வேற்றுமை இருக்காதா என்ன? அவர்கள் எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருக்கிறார்கள். அது கூட புரியாவிட்டால் எப்படி?
அதற்காக இந்திய இறையாண்மையை காம்ப்ரமைஸ் செய்து கொள்ள சொல்லவில்லை. நம் எல்லைகளுக்குள் நம்மால் முடிந்ததை செய்வோம். உதாரணமாக அடுத்த கேள்வியை பாருங்கள்.
இப்போது இந்தியாவில் இருக்கும் புலிகள் மீதான தடை நீக்கப்பட வேண்டுமா?
கூடாது. பிரபாகரன் in absentia கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டவர். தடை நீக்கப்பட்டால் அது நீதிமன்றத்தை கிள்ளுக்கீரையாக்கிவிடும். இந்தியாவில் இப்போது இருக்கும் அமைப்புகளில் நீதி மன்றம்தான் ஓரளவு நம்பிக்கை தரும் ஒரே அமைப்பு. அதையும் கிள்ளுக்கீரையாக்குவது முட்டாள்தனம். அதனால் இந்திய அரசு பிரபாகரனிடம் பேசவே கூடாது என்பதில்லை. ஒரு அரசுக்கு தொடர்பு கொள்ள பல வழிகள் இருக்கின்றன.
இலங்கையில் இன்று நடப்பது genocide-ஆ?
ஆம். ப்ரியா போன்றவர்கள் இதில் புலிகளுக்கும் பங்குண்டு என்று சொல்கிறார்கள். ஆனால் முக்கிய குற்றவாளி இலங்கை அரசே என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.
போர் நிறுத்தம் நல்ல விஷயமா?
ஆம். நடக்கும் genocide நிற்க வேண்டும் என்பதில் என்ன சந்தேகம்?
போர் நிறுத்தம் புலிகளுக்கு லாபம் தரும் விஷயமாயிற்றே?
நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம். genocide நின்றால் சரி.
இலங்கை அரசு போரை நிறுத்தாது என்று தெளிவாக தெரியும்போது தமிழ் நாட்டில் கூக்குரலிட்டு என்ன பயன்?
போர் நிறுத்தம் நடைபெறாது என்பது உண்மைதான். ஆனால் கத்தினால் தமிழர் காம்ப்கள் நிலை முன்னேறலாம். இலங்கை அரசு தன அரசியல் சட்டத்தை மாற்ற ஆரம்பிக்கலாம். அதனால் கத்தத்தான் வேண்டும். கொஞ்சம் புத்திசாலித்தனமாக கத்தினால் நல்லது. புலிகள் ஆதரவு குரல் குறைந்தால் இலங்கை அரசு நாம் சொல்வதை கொஞ்சமாவது கேட்க வாய்ப்பு இருக்கிறது.
ராஜீவ்-ஜெயவர்தன ஒப்பந்தம் போட இந்தியாவின் வல்லரசு கனவும் ஒரு காரணமா?
சந்தேகம் இல்லாமல். ராஜீவ் இலங்கையில் அமைதி வந்தால் தனக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்று கனவு கண்டிருப்பார். அந்த ஒப்பந்தம் நிறைவேறி இலங்கையில் அமைதி வந்திருந்தால் அவருக்கு நோபல் பரிசு கொடுப்பது சரியே. பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்த விஷயம் அது.
புலிகள் தலைமையில் தனி ஈழம் அமைவது நல்ல விஷயம் இல்லை என்றால் தமிழர்களுக்கு வேறு யார்தான் தலைமை தாங்குவது?
புலிகளை விட்டால் வேறு தலைமை இல்லை. ப்ராக்டிகலாக யோசிக்க வேண்டி இருக்கிறது.
கலைஞரை நம்பவே முடியாதா?
முடியாது. அவர் உலகம் குடும்பம், கட்சி, டிவி, பதவி என்று குறுகிவிட்டது. வெளி உலகம் என்றால் சினிமாகாரர்களின் விழாக்கள், வெட்டித்தனமான பேட்டிகள் அவ்வளவுதான்.
ஜெவின் மனமாற்றம் நம்பக் கூடியதா? அவர் ஈழம வேண்டும் என்று முழங்குவாரா?
எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை. ஆனால் ஒரு பிரபல கட்சி தலைவர் இப்படி வெளிப்படையாக சொல்வது இலங்கை, இந்திய அரசுகளின் மீது அழுத்தம் கொடுக்கும். அந்த வகையில் கொஞ்சம் நன்மைதான். (வானதி சொன்னதை யோசித்துப் பார்த்தபோது இப்படி தோன்றுகிறது)
ஈழ மக்களின் மீது உண்மையான அக்கறை யாருக்காவது இருக்கிறதா?
வைக்கோ, நெடுமாறன். ஆனால் அவர்களின் வெளிப்படையான, கண்மூடித்தனமான புலி ஆதரவு அவர்களது effectiveness-ஐ குறைக்கிறது.
புலிகளை அறிவுபூர்வமாக யாராவது எதிர்க்கிறார்களா?
சோ. அவர் சிரிசபாரத்னம் கொலைக்கு முன்பே அவர்களை எதிர்த்தவர் என்று நினைவு.
புலிகள் வேறு ஈழத் தமிழர்கள் வேறு என்று உண்மையாக நினைத்து ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு கொடுக்கும் யாராவது?
எனக்கு தெரிந்து யாருமில்லை. புலிகள் = ஈழத் தமிழர்கள் என்ற கருத்தைத்தான் தமிழக தலைவர்கள், ஊடகங்கள் பரப்புகின்றன. இது தமிழ் நாட்டுக்கு வெளியே ஈழத் தமிழர்களுக்கு பெரிய disadvantage.
மே 7, 2009 at 3:10 பிற்பகல்
டி.பி.ஸ்.ஜயராஜின் கட்டுரையை பார்க்க
http://dbsjeyaraj.com/dbsj/archives/461#comment-2810
மே 7, 2009 at 9:10 பிற்பகல்
ஜெயராஜ் இப்படி எழுதாமல், வேறெப்படி எழுதுவார். இவர் கனடா வாழ் தமிழ் சமூகத்தால் மட்டுமல்ல …………ஒதுக்கி வைக்கப்பட்டவர்.
தவிர, “இந்து” ராமின் நண்பர் வேறெப்படி எழுதுவார்.
மே 7, 2009 at 9:25 பிற்பகல்
புலி ஆதரவாளர்களால் உதைக்கப் பட்டார். அது தமிழர்களால் ஒதுக்கப்பட்டார் என ஆகாது. ‘இந்து’ ராமை இழுப்பது, வெறும் குழப்பவாதமே.
மே 7, 2009 at 7:55 பிற்பகல்
ரகுநாத், ஈழம் பற்றிய பதிவுக்கு மறுமொழி அளித்ததற்கு நன்றி!
விஜயராகவன், ஈழம் பற்றிய பதிவுக்கு மறுமொழி அளித்ததற்கும், ஜெயராஜின் சுட்டிக்கும் நன்றி! எனக்கு ஜெயராஜின் சில கருத்துகளோடு இசைவு இருக்கிறது. புலம் பெயர்ந்த தமிழர்கள் புலிகள் ஆதரவை வெளிப்படையாக காட்டாவிட்டால் – இது ஒரு genocide, மனித உரிமை பிரச்சினை என்று மற்றவர்களை உணர வைத்தால், இலங்கை அரசு ஓரளவு அடங்கலாம். ஆனால் புலிகள் புலம் பெயர்ந்தோரின் ஆதரவை நாடுவதில் என்ன தவறு, என்ன ஆச்சரியம்? யாராக இருந்தாலும் அப்படித்தான் செய்வார்கள். இன்று தமிழர்களுக்கு மிஞ்சி இருக்கும் ஒரு அமைப்பு புலிகள்தான் என்றுதான் எனக்கு தோன்றுகிறது.
மே 7, 2009 at 9:08 பிற்பகல்
ஆர்வி, புலிகள் பார்வைப் படி , அவர்களை ராணுவ் இயக்கமாக வைத்து, அதன் தலைவர்களை காப்பாற்றுவதில் – எந்த நடவடிக்கையும் தவறில்லை, அதில் ஒரு ஆச்சரியமும் இல்லை. லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்களை தஙக்ள் கேடயமாக பயன்படுத்தி வருகின்றனர்; மிரட்டல் மற்றும் கிரிமினல் செய்கைகளால் சேர்த்த பணத்தை ஆயுத தயாரிப்பில் தான் செலவிடுகிறார்கள்; 30 வருட அழிச்சாட்டம் பின்பு அவர்கள் அரசியல் இலக்கான தனி, சுதந்திர ஈழம் கைக்கெட்டாத தூரத்தில் போய்விட்டது. உலகத்தில் எல்லா நாடுகளிலும் பயங்கர வாதி என்கிற சர்டிஃபிகேட் வாங்கி, நீதிக்கு வெளீயே நிற்கிறார்கள். உலக அரசாங்கங்கள் தமிழர்கள் இந்த நிலைக்கு புலிகள் தான் காரணம் என நினைக்கிறார்கள். அதனால் புலிக் கொடி கீழ் எவ்வளவு கத்தினாலும், எவ்வளவு பெயர் தீக்குளித்தாலும் உலக அரசங்கங்கள் சுமுக புன்சிரிப்பு தருவார்களே தவிற, புலிகளுக்கு ஒரு விதமான ஆதரவு கை கொடுக்கப் போவதில்லை – ஸ்ரீலங்க அரசைதான் சப்போர்ட் பண்ணுவார்கள். அதனால்தான், ஐநா, மற்றும் உலக அரசுகள் புலிகளை அப்பவி மக்களை தங்கள் பிடியிலிருந்து விடுவிக்க கோரியுள்ளார்களே தவிறே, வேறு ஒரு வாக்கும் கொடுக்க வில்லை. ஆனால் இப்போது புலிகள் தங்கள் உயிருக்கு, மனித கேடயத்தைதான் நம்பியுள்ளரக்ள். ஒரு “ஈழ ஆதரவு” போராடங்களூம், மேற்கிலோ, இந்தியாவிலோ, புலிகள் மேல் மக்களை விடுவிக்க ஒரு நிபந்தனையும் வைக்க வில்லை; அதிலிருந்தே தெரியவில்லையா இப்போராட்டஙக்ள் தமிழ் மக்களை காப்பாற்றும் நோக்கமுடயது அல்ல, புலிகளின் உயிரைக் காக்கதான் என்று?
விஜயராகவன்
மே 7, 2009 at 9:21 பிற்பகல்
RV
This is a masterpiece by you RV. I hope Tamilians in India follow your advice rather than any politician in TN. It is one of best piece I read about the Eelam issue. You are a genius.
மே 7, 2009 at 10:42 பிற்பகல்
விஜயராகவன்,
//புலி ஆதரவாளர்களால் உதைக்கப் பட்டார். அது தமிழர்களால் ஒதுக்கப்பட்டார் என ஆகாது. ‘இந்து’ ராமை இழுப்பது, வெறும் குழப்பவாதமே.//
ஒதுக்கப்பட்டார் என்று தான் நினைத்தேன். ஆனால், “உதைக்கப்பட்டார்” என்ற விபரம் எனக்கு இப்பொழுது நீங்கள் சொல்லித்தான் தெரியும். அதற்காக வருந்துகிறேன். அப்போ, கனடா வாழ் தமிழர்கள் அனைவரும் புலி ஆதரவாளர்கள் என்கிறீர்களா? “உரிமைப்போர்”, கவனயீர்ப்பு நிகழ்வை (Toronto) வைத்துப்பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது. ஏறக்குறைய ஒன்றரை லடசம் பேர் கலந்து கொண்டார்கள்.
இந்து ராமை இழுத்து நான் ஏன் குழப்பம் செய்யவேண்டும். நீங்கள் தான் குழப்பத்தை உருவாக்க முனைவது போலுள்ளது.
மே 10, 2009 at 12:39 மு.பகல்
Half of the people attend these rallies just as going to a Festival..to spend time in outdoor, and incase tamil elam acchieved they can tell ltte officer (
) that we attended rallies in Canada to reduce “taxes”,
மே 10, 2009 at 1:09 மு.பகல்
அங்க வந்த பாதிப்பேர் உன்னைப்போல ஒரு பன்னாடையிட்டை வந்து சொன்னவையளாக்கும், நாங்கள் Festival இற்குத்தான் வந்தனாங்கள் எண்டு. அவையள் Festival இற்கு வந்தால், நீயென்ன களவுக்கு போனனியோ?
மே 7, 2009 at 10:59 பிற்பகல்
ஜெயாராஜ் பற்றி எனக்கு விகி கட்டுரை, அதன் இணைப்புகள் மேல தெரியாது
http://en.wikipedia.org/wiki/DBS_Jeyaraj
நடந்த சம்பவங்களை தான் நான் பேச முடியுமே தவிற, ‘தமிழர்கள் அவரை ஒதுக்கி விட்டனர்’ என்பது அர்தமற்றது. யார் யாரை ஒதுக்குவது? அதுக்கு ஸ்பெஷல் ப்ரொசீஜர் இருக்கா? ஒரு தனிநபரை லட்சக்கணக்கான பேர் ‘ஒதுக்கினால்’, அவர் நிச்சயம் எதோ சரியான காரியம் தான் செய்திருக்க வேண்டும்
அவர் உதைக்க மட்டும் படவில்லை, புலி ஆதரவாளர்கள் கொலை மிரட்டல்களால், அவர் கொண்டுவந்த தமிழ் பத்திரிக்கை ‘மஞ்சரி’ மூடும்படி ஆகிவிட்டது. இலங்கையிலிருந்தே ஒரு பக்கம் அரசாஙக முடுக்கல்களாலும், மற்றொரு பக்கம் புலிகள் முடுக்கல்களாலும், வெளியேரும்படி ஆகிவிட்டது
நாம் ஜயர்ரஜ் கட்டுரைளைகள் பற்றி பேசும் போது, ராமைக் கொண்டு நிருத்தி guilt by presumed association ஆக்க முயன்றால், அது தேவையற்றது.
விஜயராகவன்
மே 7, 2009 at 11:19 பிற்பகல்
விஜயராகவன்,
இந்து பத்திரிகையில் ஜெயராஜ் கட்டுரைகள் எழுதுகிறவரா, இல்லையா? அது ஈழத்தமிழரகளுக்கும் அவர்களது போராட்டத்திற்கும் எதிரானதா இல்லையா?
மே 8, 2009 at 9:26 மு.பகல்
எந்த ஈழத்தமிழர்கள் ? எந்த போராட்டம்? புலிகளுடன் கருத்து வேற்றுமைக்காக ஆயிரக்கணக்கில் கொல்லப் பட்ட தமிழ் போராளிகளும், அரசியல்வதிகளுமா? பலாத்காரமாக புலிக்ளால் இழுக்கப் பட்டு, கையில் துப்பாக்கியை கொடுத்து, வாயில் சயனைட் குப்பியை கொடுத்து ப்ரொஃபெஷனல் ஸ்ரீலங்க ராணுவத்துடம் மோதவைத்து மடிந்துபோன 10-6 வயது தமிழ் பாலகர்களா? தமிழர்கள் ஈழத்திலிருந்து எந்த லட்சத்தில் போரினால் வெளீயேற்றப்பட்டு தங்கள் மரபு பூமியை இழந்தாலும் பரவாயில்லை, தாங்கள் போரிட்டு கொண்டு செல்லலாம் என்ற மனப்பான்மையில் எழுந்த போரா, தங்களுக்கு பிடிக்காத சிங்கள, இந்திய, ஈழ அரசியல்வாதிகளை குண்டு வைத்து கொல்லும் போரா, தாங்கள் வகையாக எதிரியிடம் மாட்டிக் கொண்டபோது, வீரமரணம் அடையாமல் லட்சக்கணக்கான தமிழர்களை தன்னை சுற்றி துப்பாக்கி முனையில் வைத்து மனித கேடயமாக்கும் போரா ? நல்ல அரசியல் சந்தர்பங்களை நழுவ விட்டு தோல்வி மேல் தோல்வி போடும் போரா ? இது ஈழ மக்களின் மேல் தொடுக்கப் பட்ட போர். இந்தப் போரை நான் எதிக்கிரேன்; ஜயராஜும் எதிர்க்கிரார்.
விஜயராகவன்
மே 8, 2009 at 4:14 பிற்பகல்
விஜயராகவன், புலிகள் உத்தமர்கள் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் புலிகள் செய்த/செய்யும் தவறுகள் பரங்கி மலை அளவு என்றால் இலங்கை அரசு செய்த/செய்யும் தவறுகள் இமய மலை அளவு என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
ரதி, ஹிந்து ராம் என்ன சொல்கிறார் என்று எனக்கு உங்கள் போன்றவர்கள் மூலமாக அரசல் புரசலாகத்தான் தெரியும். ஆனால் ஹிந்துவில் ஒருவர் எழுதுகிறார் என்பதற்காக மட்டும் அவரை ஒதுக்க மாட்டீர்கள், அவர் என்ன எழுதுகிறார் என்பதை வைத்துத்தான் அவரை ஏற்றுக் கொள்வீர்கள் அல்லது ஒதுக்குவீர்கள் என்று நினைக்கிறேன். மேலும் புலிகள் தங்கள் எதிர்ப்பாளர்களை மிரட்ட வாய்ப்பு இருக்கிறது என்றுதான் எனக்கும் தோன்றுகிறது.
ஜெயராஜ் பற்றி நான் முன்னால் கேள்விப்பட்டதில்லை. அவர் // The unwritten consensus was that the LTTE was primarily responsible for the Tamils’ plight. // என்று சொல்லி இருப்பது போல் பல உலக நாடுகள் அவ்வாறு நினைக்கலாம், என்னால் உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் இலங்கை அரசுதான் முக்கிய காரணி என்றுதான் நான் நினைக்கிறேன். அவர் புலம் பெயர்ந்த தமிழர்கள் // If it dispenses with its tiger-oriented agitation and alters the focus to that of a human rights perspective there are vast possibilities of attracting many human rights organizations also into joining the demonstrations // என்று சொல்லி இருப்பது எனக்கும் சரியாக படுகிறது.
கார்த்திக், ஈழம் பதிவை பாராட்டுவதற்கு நன்றி!
மே 8, 2009 at 5:55 பிற்பகல்
ஆர்வி, இலங்கை பிரச்சினைகளுக்கு மூல காரணம் சிங்கள-பௌத்த பேரின வாதம் தான். அதில் சந்தேகமே இல்லை. 1980 வரை, சிங்களர் பேரினவாதத்தை குறைத்துக் கொண்டு தமிழ் மிதவாத அரசியளார்களிடன் சமாதானமாக போக எவ்வளவோ வாய்ப்புகள் இருந்தன. 1983 தமிழர் அழிப்பு ரகளைகள் இலங்கை அரசின் ஆசி பெற்றவை. அதனால்தான் 1980 கள் வரை உலகம் ஈழத் தமிழர்களையும், போராளிகளையும் அனுதாபமாக பாவித்தது. இந்தியா அரசும் ஈழப் போராளிகளை இந்தியாவில் தங்க இடம் கொடுத்து, பயிற்சி முகாம்களுக்கும் இடம் கொடுத்தது. அதனால் புலிகள் தனி, சுதந்திர, புலி கட்டுப்பாடுள் உள்ள ஈழ நாட்டை இந்தியாவும், மற்றவர்களும் கொடுப்பதற்க்கு கடமை பட்டவர்கள் என நினைக்க ஆரம்பித்தது, இன்னும் அப்படித்தான் நினைக்கிறது. ஆனால் இந்தியாவின் கொள்கை எப்பொழுதும் இலங்கையை பிளந்து ஒரு பாகத்தை தமிழர்களுக்கு கொடுப்பது இல்லை. இங்கே பங்களாதேசத்தை கொண்டு வருவது சரியாகாது. இலங்கை ‘நட்பு’ நாடானதால், அங்கு இருந்த பிரச்சினையை சிங்களவர்-தமிழர் இருவருக்கும் சுமுகமாக தீர்ப்பதே இந்தியாவின் கொள்கை. அதன் விளைவே இலங்கையில் இந்திய ராணுவ உள்ளீடு. அதன் படி கிழக்கு-மேற்கு மாகாணங்கள் சுயாட்சி பெரும், மக்கள் வாக்கெடுப்பு மேல் இரு மாகணங்களூம் இணைக்கப்படும் (அல்லது இணைக்கப் படாது). இம்மாகாணங்களில் தமிழ் ஆட்சி மொழியாகும். இது வரை செய்த ஈழ தீர்வு ஆக்கங்களில் இதுவே தமிழர்களுக்கு ஈழ அபிலாஷைகளுக்கு மிக அருகில் வந்தது. இதை ஒப்புக் கொள்ளாத புலிகள் – இலங்கை அரசின் தளவாட ஆதரவுடன்- இந்திய ராணுவத்துடன் சண்டையிட்டு வெளியே போக வைத்தனர். அத்துடன் இந்தியா ’நீங்கள் எப்படியாது சண்டையிட்டு ஒழிங்கடா’ என கைகழுவி விட்டது. அத்துடன் புலிகள் தமிழர்களின் ஒரே நண்பனான் இந்திய அரசை எதிரிகளாக்கினர். அதற்கு மேல் வெந்த புண்ணில் துரும்பு பிடிச்ச ஆணியை பாய்த்துவது போல், ராஜீவ் காந்தியை கொன்றனர்.
அதிலிருந்து புலிகள் இலங்கை அரசுடன் வேறு நாட்டு ஆதரவு இல்லாமல் போர் செய்யத்தொடங்கினர். ராஜீவ் கொலையிலிருந்து, புலிகள் 1989 வரை இலங்கை அரசு செய்த தவறுகளை தாங்கள் செய்ய தொடங்கினர். இலங்கை அரசு 1989 க்கு பிறகு உள்நாட்டு-சர்வதேச அரசியல்-டிப்ளோமாடிக் சமாசாரங்களில் உஷாராகி, சாமர்தியத்தை கற்றுக் கொண்டு விட்டது. அந்த சாமர்த்தியம் புலிகளுக்கு இம்மி கூட இல்லை.
1990 பிறகு இலங்கை-புலி போரில் உலக நாடுகள் நியாய அளவில் சமமாகதான் பாவித்தன. மேலும் எந்த அரசும் மற்றொரு அரசைத்தான் மதிக்குமே ஒழியே, கலகக் காரர்களை அல்ல. போர் நடந்து கொண்டே இருந்தால் கடைசியில் யார் ஜெயிப்பார்கள் என்பதை நிர்ணயிப்பது போர் புரியும் கட்சிகளின் சுய பலங்கள். இலங்கை அரசுக்கு புலிகளை விட பல மடங்கு பண பலமும், ஆள் பலமும், சர்வதேச ஆதரவு பலமும் உண்டு. 20 வருடம் ஒரு போர் நடந்தால் எவனிடம் ஆள் பலமும், தளவாட பலமும், மற்ற பலங்களும் இருக்கொ அவந்தான் வெற்றி பெறுவான். புலிகள் எவ்வளவு ஆக்ரோஷத்துடனும், கட்டுப் பாடுனுடனும், தியாக உணர்வுடன் போர் செய்தாலும் 1989 லெயே ஒரு objective analyst – இப்போர் புலிகள் தோல்வியில் முடியும் என்று சொல்லியிருக்கலாம்.
மற்ற நாடுகளுக்கு ஸ்ரீலங்காவோ, அதன் அழிவுகளோ ஓரளவு தான் பொருட்டு. உலகம் இன்னும் பெரிய அழிவுகளை பார்த்துள்ளது. Diplomatic war ஐ புலிகள் எப்பொழுதோ இழந்து விட்டனர். ஸ்ரீலங்கா ஊள் விவகாரங்களில் , தமிழ்ர் விவகாரங்களில் – நல்லெண்ணத்துடன் ஆர்வம் எடுக்கக் கூடிய ஒரே நாடு – இந்தியா. அதையும் எதிரியாக்கி ஆச்சு.
உஙகள் பிரச்சினைகள் இரண்டு – ஒன்று ஸ்ரீலங்க அரசின் குரூரம் புலிகளை விட பெரியது. விடை – அது 1989 வரை சரி. அதற்கு மேல் இல்லை. உலகம் கடந்த 10, 20 வருட சம்பவங்களின் மேல் தான் அபிப்பிராயங்களை வைக்குமே தவிற, அதற்கு முன்னால் இல்லை. கடந்த 10,20 வருட கண்காணிப்பின் படி புலிகள் டெர்ராரிஸ்ட், ஸ்ரீலங்க அரசு தன் நாட்டின் இறையாண்மையை சில பயங்கர வாத குழுக்களிடம் விடுவிக்கத்தான் போரிடுகிறது. நீங்கள் அது தப்பு என சொல்லலாம், ஆனால் உலகம் தான் பார்ப்பைதான் நம்பப் போகிறது. இப்பொழுது கூட டெலிவிஷனில் என்ன பார்க்கிறீர்கள் – சோர்வுற்ற தமிழர்கள் புலிகளின் பிடியிலிருந்து தப்பி லங்க அரசு பிரதேசங்களுக்கு ஓடுகிறார்கள்.
உங்கள் இரண்டாவது பிரச்சினை – புலிகளை விட்டா வேறு யாரும் தமிழ் பிரதிநிதிகளாய் இல்லையே. புலிகள் மொத்தமாக தோற்கடிக்கப் பட்ட பின், புலிகளால் கொல்லப் படாத தமிழர்கள் தமிழ் பிரதிநிதி ஆகி விடுவார்கள் – கருணா, தேவாநந்தா, ஆனந்தசங்கரி, போன்றார். நீங்கள் இது சரியா என கேட்களாம். அவர்கள் தான் ஈழ தமிழர் அரசியலில் ஊக்கம் காடுபவர்கள். எவ்வளவு மோசமாக இருந்தாலும், உள்ளூர்காரர்கள் தான் தஙகள் மக்களை பிரதிநிதுத்துவ படுத்துவ முடியும்.
சைபீரியாவில், கரடிகளை கொலவதற்கு ஒரு கத்தியை வெளியே வைத்து, அதன் மேல் கொஞ்சம் ஐஸ் வைப்பார்களாம். கரடி ஐசை நக்குவதாக நினைத்து, கத்தியில் நாக்கை இட்டு விடும். அதன் ரத்தம் அதற்கு பிடிக்கும். அதனால் மேலும் மேலும் நக்கி ரத்தத்தை மேலும் மேலும் வரவழித்து, இரத்தமின்மையால் இறந்து விடுமாம். அதைப் போல் இருக்கிறது ‘புலிகளை தவிற வேறொரு பிரதிநிதி இல்லை’ என்பது. தமிழர்கள் புலிகளை ஆதரிப்பது கத்தியை நக்குவதற்கு சமம்.
You must analyze these things without sentiment or emotions. It will be a victor’s peace, no doubt about it.
விஜயராகவன்
மே 8, 2009 at 6:30 பிற்பகல்
“புலிகள் தங்கள் எதிர்ப்பாளர்களை மிரட்ட வாய்ப்பு இருக்கிறது ”
This is the understatement of the year.
விஜயராகவன்
மே 8, 2009 at 11:27 பிற்பகல்
ஜெயராஜ்/விஜயராகவன்,
உங்களுக்கு புலிகளோடு தனிப்பட்ட முறையில் ஏதாவது கருத்துவேறுபாடு இருந்ததா என்றெல்லாம் எனக்கு தெரியாது. அதல்லாம் எனக்கு தேவையில்லாத விடயம். நீங்கள் புலிகளோடு உள்ள மனக்கசப்பால் ஒட்டுமொத்த ஈழப்போரையும் புலம் பெயர்ந்தவர்களையும் ஒரு நாட்டின் “தேசிய ஊடகங்களில்” தாக்கி எழுதும் போது உங்களையும் அறியாமல் இலங்கை சிங்கள ஆட்சியாளர்களால் 1948ல் இருந்து தமிழர்கள் பட்ட அவமானம் கஸ்டங்கள் எல்லாவறையும் மறுக்கிறீரகள் அல்லது மறக்கிறீரகள்.
இலங்கை ஆங்கிலேய ஆட்சியிலிருந்து சிங்களவர்களின் கைகளில் விழுந்துதது முதல் அகிம்சை போராட்டம், Tamil Student Federation இன் ஆயுதக்கிளர்ச்சி, அதை தொடர்ந்து TULF இன் SJV செல்வநாயகம் தலைமையில் வட்டுக்கோட்டை பிரகடனம் இதற்கெல்லாம் பிறகு வந்தவர்கள் தான் புலிகள். ஆக, சிங்களஅடக்குமுறை என்பது எப்பொழுதோ தொடங்கிவிட்டது.சிங்கள ஆட்சியாளர்களின் அடக்குமுறை அதிகரிக்க, அதிகரிக்கத்தான் புலிகள் வன்முறையில் ஈடுபட்டனர். இதை அவர்களே பலமுறை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். இலங்கை அரசின் அட்டூழியம் உச்சநிலையை அடையாவிட்டால் நிலைமை இவ்வளவு தூரம் போயிருக்காது. இலங்கை அதிபர், ராணுவ அதிகாரிகள், புத்தபிக்குகள் சொல்வதையெல்லாம் நீங்கள் கேட்டதில்லையா? இவர்களா எங்களுக்கு சமவுரிமை தரப்போகிறார்கள்? இவர்களா நீதிபரிபாலகர்கள்? அவர்களிடம் எந்த ஒரு தீர்வுத்திட்டமும் இல்லை என்பதுதான் உண்மை. அதுவுமா உங்களுக்கு தெரியாது.
சிவகுமாரன் உயிருடன் இருந்திருந்தால் சிங்கள் ஆட்சியாளர்களால் இன்னொரு பிரபாகரன் உருவாக்கப்படிருப்பார் என்பது என் கருத்து.
புலிகள் இயக்கம் விடுதலை இயக்கம். உலகில் எந்த விடுதலை இயக்கத்தை அந்தந்த அரசுகள் பயங்கரவாதம் என்றும் பயங்கரவாதிகள் என்றும் சொல்லவில்லை. ஆனால், பத்து வயது சிறுவர்களையெல்லாம் இயக்கத்தில் சேர்த்தார்கள் என்பது இலங்கை அர்சின் பொய்ப்பிரச்சாரம். அதையேதான் நீங்களும் சொல்கிறீரகள். UNICEF அதைத்தானே சொல்கிறது என்பீரகள். சிங்கள ஆட்சியாளர்களால் சிறுவர்கள் கொல்லப்பட்டதை அல்லது இன்னும் கொல்லப்படுவதை UNICEF இன்றுவரை கண்டித்ததா? இடைத்தங்கல் முகாம்களில் குழந்தைகள் பெற்றார்களிடமிருந்து பிரிக்கப்பட்டு தனியாக ராணுவத்தால் அழைத்து செல்லப்படுகிறார்களே. அதெல்லாம் உங்கள் அறிவுக்கு எட்டுவதில்லையா? உண்மையில் சமூக அக்கறை உள்ளவ்ர்கள் இதைப்பற்றியெல்லாம் எழுதலாமே.
ஒரு தனிப்பட்ட நபருக்கு புலிகளுடன் உள்ள வேறுபட்ட கருத்துக்களால் புலிகளை தாக்கி எழுதலாம். ஆனால், புலிகளின் ஆதரவாளர்களை ஏன் தாக்கி எழுதவேண்டும். எங்கள் போராட்டத்திலுள்ள நியாயங்களை ஏன் திரித்துக் கூறவேண்டும்?
மே 9, 2009 at 8:38 மு.பகல்
>ஜெயராஜ்/விஜயராகவன்,
எனக்கு ஒரு பெயர் தான் உள்ளது – இரண்டாவது. நான் தான் ஜயராஜ் என்றால் அது உங்கள் பிரம்மையையும், பரனோயாவையும் தான் காட்டுகிறது. அதாவது வேறு எந்த தமிழருக்கும் புலி எதிர்ப்பு எண்ணம் வந்தால் அது ஜயராஜ் தவிற வேறுயாராகவும் இருக்க முடியாது. This unrealistic, paranoidal attitude encapsulates in a few words all the weakness of LTTE and it’s supporters.
>நீங்கள் புலிகளோடு உள்ள மனக்கசப்பால் >ஒட்டுமொத்த ஈழப்போரையும் புலம் >பெயர்ந்தவர்களையும் ஒரு >நாட்டின் “தேசிய ஊடகங்களில்” தாக்கி >எழுதும் போது
நீங்கள் ஜயராஜுடன் சண்டை போட விரும்பினால், போக வேண்டிய முகவரி
http://www.dbsjeyaraj.com/
மற்ற பாயிண்டுகளை ஏர்கனவே அலசியாச்சு.
>ஒரு தனிப்பட்ட நபருக்கு புலிகளுடன் >உள்ள வேறுபட்ட கருத்துக்களால் >புலிகளை தாக்கி எழுதலாம். ஆனால், >புலிகளின் ஆதரவாளர்களை ஏன் தாக்கி >எழுதவேண்டும்.
உங்கள் கருத்து மிகவும் முரண்பாடானது.
விஜயராகவன்
மே 9, 2009 at 12:30 பிற்பகல்
//இந்தப் போரை நான் எதிக்கிரேன்; ஜயராஜும் எதிர்க்கிரார்//
நீஙகள் இப்படி சொன்னதால் தான் நான் ஜெயராஜ்/விஜயராகவன் என்று குறிப்பிடும்படியாகிவிட்டடது.
//மற்ற பாயிண்டுகளை ஏர்கனவே அலசியாச்சு//
ஆம், இதற்கு மேல எனக்கும் உங்களிடம் அலச ஒன்றுமில்லை.
மே 9, 2009 at 2:03 மு.பகல்
http://video.yahoo.com/watch/5020271/13354421
RV, Please, watch this video.
மே 9, 2009 at 6:37 பிற்பகல்
விஜயராகவன்,
புலிகள் தவறு செய்தார்கள் என்பதெல்லாம் சரிதான். (ரதி, என் கருத்து அது). ஆனால் இலங்கை அரசு கடந்த இருபது வருஷங்களாக “திருந்திவிட்டது” என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்று நடப்பது genocide என்றும், அதற்கு முக்கிய காரணம் இலங்கை அரசுதான் (புலிகளும் ஒரு காரணம்தான்) என்றும், இந்திய அரசு ராணுவ உதவி செய்வது நிறுத்தப்பட்டே ஆக வேண்டும் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்.
ஆனால் உலக நாடுகள் புலிகளை ஒரு தீவிரவாத இயக்கமாக மட்டுமே பார்க்கின்றன என்பதிலும், இலங்கை அரசுக்கு விரோதமாக செயல்பட தயங்குகின்றன என்பதிலும், புலிகளும் diplomacy, propaganda என்ற இரு விஷயங்களிலும் மிக பலவீனமானவர்கள் என்பதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஒத்துக் கொள்ள வேண்டிய விஷயம்தான். ராஜீவ் கொலையை அதனால்தான் புலிகளின் மிக பெரிய முட்டாள்தனம் என்று கருதுகிறேன்.
புலிகள் போனால் வேறு தலைமை சுலபமாக வந்துவிடும் என்று நான் நினைக்கவில்லை. இங்கே நீங்கள் ப்ராக்டிகலாக யோசிக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது.
// It will be a victor’s peace, no doubt about it. //
எப்போதுமே, எங்குமே அப்படித்தான்.
ரதி, விஜயராகவனும் இலங்கை அரசு 90-களுக்கு முன்னால் அளவில்லாத குரூர செயல்களை செய்தது என்றுதானே சொல்கிறார்? நீங்களும் 90-களுக்கு முன் நடந்தவற்றையெ பட்டியல் இடுகிறீர்கள். பிறகு என்ன கருத்து வேறுபாடு?
ரதி, நீங்கள் சொன்ன வீடியோவை இன்னும் பார்க்கவில்லை. கூடிய சீக்கிரம்…
மே 9, 2009 at 7:03 பிற்பகல்
RV,
ஆனால், சிலர் இலங்கை இனப்பிரச்சனை என்னவோ புலிகளால் தான் உருவானது மாதிர் ஒரு தோறறத்தை உருவாக்குகிறார்கள். அதனால் தான் அப்படி சொல்ல வேண்ட்டிய தேவை ஏற்பட்டடது.
ஒரு தடவை தமிழருவி மணியன் சொன்னதுதான் எனக்கு ஞாபகம் வருகிறது. ஈழப்பிரச்சனை என்றால் புலிகள். புலிகள் என்றால் ராஜீவின் கொலை. இப்படி அணுகினால் எப்படி பிரச்சனை தீரும்.
ஜெயராஜ் என்ன பெரிய Geninus ஆக இருந்தாலும் அவரின் கருத்துகளுடன் எனக்கு எப்போதுமே உடன்பாடில்லை. உடன்பட வேண்டிய கட்டாயமும் இல்லை.
//ஆனால் ஹிந்துவில் ஒருவர் எழுதுகிறார் என்பதற்காக மட்டும் அவரை ஒதுக்க மாட்டீர்கள்//
நிச்சயமாக இல்லை.
மே 9, 2009 at 9:23 பிற்பகல்
“ஆனால் இலங்கை அரசு கடந்த இருபது வருஷங்களாக “திருந்திவிட்டது” என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்று நடப்பது genocide என்றும், அதற்கு முக்கிய காரணம் இலங்கை அரசுதான் ”
ஆர்வி,
நான் ‘திருந்திவிட்டது’ என்ற சொல்லை உபயோகிக்கவில்லை, அது உங்கள் வார்த்தை. நான் சாமர்த்தியத்தை கற்றுக் கொண்டு விட்டது என்றேன். இரு தரப்புகள் ராணுவ தளவாதத்துடன் போர் செய்ய புரிந்தால், உலகம் இருவரையும் ஒரே moral balance இல் போட்டி விடும். அதனால் அரசு தரப்பு வான தாக்குதலகளை கண்டிக்காது. மேலும் இலங்கை அரசு நார்வே போன்ற வெளி அரசுகளின் மத்தியந்தனத்தில் புலிகளுடன் பேச்சு வார்த்தைகளை தொடங்கியது, அப்போதெல்லம் சண்டை நிறுத்த ஒப்பந்தங்கள் அனுசரிக்க பட்டன. இது 4-5 தடவை நடந்துள்ளது. ஒவ்வொரு தடவையும் ஊடக ரிபோர்ட் படி புலிகள்தான் பேச்ச் வார்த்தையை முறித்ததாகவும், வேண்டுமென்றே மறுபடியும் வன்முறையை ஆரம்பித்ததாகவும் ஒரு நப்மிக்கை உலக அரசுகளீடையே நிலவியது. ஒவ்வொரு தடவையும் இலங்கை அரசு தான் அமைதிப் பாதையை இலக்காக்க முயற்சி செய்ததாகவும், புலிகளின் போர் வெறியினால்தான் பேச்சு வார்த்தைகள் முறிந்து, அமைதிக்கு இனிமேல் இடம் இல்லை போலவும் மற்ற அரசாங்களை நம்ப வைத்தது. அதனால்தால் ‘சாமர்த்தியம்’ என்ற வார்த்தையை உபயோகித்தனே தவிற, ‘திருந்தி விட்டது’ என சொல்லவில்லை.
>”இந்திய அரசு ராணுவ உதவி செய்வது நிறுத்தப்பட்டே ஆக வேண்டும் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்.”
புலிகள் போர்களத்தில் இருக்கும் வரை, அது நடக்காது. இந்திய அரசின் முதல் வேலை பிரபாகரனையும், அவன் தோழர்களையும் கைது செய்து ராஜீவ் காந்தி கொலைக்கு தண்டனை கொடுக்க வேண்டும். எந்த சுய மரியாதை உள்ள நீதியாய் நடக்கும் ஜனநாயக அரசின் முதல் வேலை அதன் நீதித்துறை தீர்மானங்களை நிறைவேற்றுவதுதான். திராவிட கட்சிகள் இதை எதோ சோனியா காந்தியின் தனி விருப்பம் போல சொல்கிறார்கள். அவர்கள் அரசாளுவதில் பச்சிளம் பாலகர்கள். அதுவும் இலங்கை தமிழர் ஒரு superpower ஒன்றும் இல்ல்லை. அண்டை நாட்டிலுள்ள கெட்ட பேர் வாங்கிய ஆயுதம் தாங்கிய இயக்கம்தான். அவர்களுக்காக தன் நீதித் துறை தீர்மானங்களையே ஓரம் கட்டும் படி நிர்பந்தமே இல்லை. அது புலிகளுக்கும் தெரியும். அதனால்தான் இப்பொதும் ஐநா, யூரோப்பியன் யூனியன், யு.எஸ். போன்றாவர்களுக்கு வேண்டுகோள்களை வைக்கிறாற்களே தவிறம் இந்திய அரசாங்கத்திற்கு இல்லை.
புலிகள் ஒழிந்தால்தான் ஈழ தமிழர்களுக்கு ஒரு அரசியல் எதிர்காலம் வரும், மற்ற நாடுகளின் உதவி கிடைக்கும்.
>”புலிகள் போனால் வேறு தலைமை சுலபமாக வந்துவிடும் என்று நான் நினைக்கவில்லை. இங்கே நீங்கள் ப்ராக்டிகலாக யோசிக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது”
நீங்கள்தான் ப்ராக்டிகலாக யோசிக்கவில்லை. யாரும் indispensible இல்லை. புலிகள் தாங்கள் சாவோமே ஒழியே, தற்போதைய இலங்கைக்குள் இருக்க மட்ட்டோம் என தீர்மனம் கொண்டுள்ளர்கள். தற்போது 1000 புலி வீரரக்ள் , பிரபாகரனையும் சேர்த்து, 5 கி.மீ. பகுதியில் ஒடிங்கி, எல்லா திசைகளிலும் இலங்கை ராணுவத்தினால் சூழப் பட்டுள்ளனர். மற்ற தமிழ் போராளிகள் அல்லது எக்ஸ்-போராளிகள் இலங்கை அரசை ஆதரிக்கிரனர். இன்னும் சில நாட்களில் அவர்கள் அழிவு உறுதி. அதற்கப்புரம் கருணா, டியுஎல்ஃப் போன்றவர்கள் ஈழத் தமிழருக்கு பிரதிநிதி ஆவார்கள் அது உங்கள், அல்லது என் இச்சைக்கு உட்பட்டது. You must go by ground realities. Ground realities have shifted radically by the war of 20 years. LTTE have lost miserably.
விஜயராகவன்
மே 9, 2009 at 9:33 பிற்பகல்
“அது உங்கள், அல்லது என் இச்சைக்கு உட்பட்டது.”
இது “அது உங்கள், அல்லது என் இச்சைக்கு உட்பட்டது அல்ல” என்றிருக்க வேண்டும்
விஜயராகவன்
மே 10, 2009 at 12:52 மு.பகல்
there is no difference between Rajni fans and ltte supporters
both are worshipping புனித பிம்பம்
but the reality is because of Rajni noone dies..
but because of Ltte now tamils are dieing in 100s everyday (as per ltte’s account) and the sad part is those who die have nothing to do with ltte
Vaijayaragavan you putforth all the things very nice what i was trying to to say at other blogs
மே 10, 2009 at 3:08 பிற்பகல்
இப்போது, பிரபகாரனுடன் கடைசி 1000 புலிகள் 2 மைல் பிரதேசத்தில் , 50000 பிணை கைதி தமிழர்களுடன் மாட்டிக் கொண்டுள்ளனர். போன மாதம் ராணுவம் புலிகளின் மணல்மேடுகளை உடைத்ததில், 100000 மக்கள் அவர்கள் பிடியிலிருந்து தப்பினார்கள். மறுபடியும் யாரும் தப்பாமல் இருக்க புலிகள் மக்களை இந்த 2 மைல் பிரதேசத்தின் மத்தியில் ஓட்டி விட்டுள்ளனர். அதனால் கடந்த 24 மணி நேர ராணுவ தாக்குதலில் குறைந்த பட்சம் 378 தமிழ் மக்கள் மாண்டுள்ளனர்; 1122 அப்பாவி மக்களுக்கு காயம். புலிகள் அப்பாவி மக்களின் உயிரை தங்களை காக்கதற்கு பணயம் வைத்துள்ளனர். இனிமேல் ஒவ்வொரு நாளும் இப்படித்தான் தமிழர்கள் சாவார்கள். ஒரு புலி ஆதரவாளர்களோ இந்த பாசிச செயல்களை கண்டிக்கிறார்களா?? இல்லை.
http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8042341.stm
http://dbsjeyaraj.com/dbsj/
இப்பேர்பட்ட சிறிதும் அறீவோ, தாட்சண்யமோ இல்லாத புலிகளுடன் எவர் பேச சம்மதிப்பர்? நீங்கள் எதோ புலிகளுக்கு பதில் யாரும் தமிழ் பிரதிநிதி இல்லை என்கிறீர்கள்.
சம்பவஙள் எப்போதோ புலிகளின் கைகளிலிருந்து நழுவி விட்டன.புலிகள் சரித்திரத்தின் குப்பைத் தொட்டியில் தள்ளப் படுகிறனர். இந்த புலிகளின் பாசிச கோர தாண்டவம் அவர்கள் அழிவின் வருகயைத்தான் காட்டுகிரது
விஜயராகவன்
மே 13, 2009 at 2:06 மு.பகல்
RV,
மன்னிக்கவும். மறுபடியும், மறுபடியும் உங்களை ஈழப்பிரச்சனைக்குள் இழுத்துவிட்டு வெறுப்பேற்ற இதை நான் இணைக்கவில்லை.நீங்கள் அடிக்கடி சிறீ சபாரதனத்திற்காக கவலைப்படுவதால் இந்த தளத்தை என் பதிலோடு இணைத்துள்ளேன்.
நேரம் இருந்தால் படித்துப்பாருங்கள்.
http://sathirir.blogspot.com/2009/02/blog-post_8037.html
மே 16, 2009 at 1:57 பிற்பகல்
ரதி நீங்கள் புலிப் பினாமிகளால் நடத்தப்படும் தளங்களில் இருந்து சுட்டிகளை எடுத்துத் தருவதால் எந்தப் பிரயோசனமும் இல்லை. புலிகள் சார்பான பொய் பரப்புரைகளை இப்போது யாரும் நம்புவதில்லை. இதயெல்லாம் நீங்களே பார்த்து வாசித்து சுய இன்பம் அடைய வேண்டியது தான்.
மே 16, 2009 at 5:06 பிற்பகல்
Ragu,
அப்படியென்றால் இதை நம்புவீரகளா?
மே 13, 2009 at 9:41 மு.பகல்
\\புலிகள் = ஈழத் தமிழர்கள் என்ற கருத்தைத்தான் தமிழக தலைவர்கள், ஊடகங்கள் பரப்புகின்றன. இது தமிழ் நாட்டுக்கு வெளியே ஈழத் தமிழர்களுக்கு பெரிய disadvantage.\\
கசப்பான உண்மை
மே 16, 2009 at 5:18 பிற்பகல்
ரகு,
ஐயா சாமிகளா, அதுதான் புலிகளை பயங்கரவாதிகள் என்று அழித்தொழிக்க கங்கணம் கட்டிக்கொண்டு, பயங்கரவாதத்திற்கான போர் என்று ஒட்டு மொத்த ஈழத்தமிழினத்தையும் கொன்று குவிக்கிறீரகளே? இன்னும் என்ன தான் உங்கள் மனக்குறை? ஈழத்தமிழனை காப்பாற்ற கூட வேண்டாம். குறைந்த பட்சம் சிங்கள பேரினவாதிகளுக்கு முண்டு கொடுக்காமலாவது இருக்க முடியாதா உங்களால்?
நான் புலிகளை ஆதரிக்கிறேன் என்று துரத்தி துரத்தி என் கருத்துக்கு எதிர் கருத்து எழுதி நீங்கள் தான் சுய இன்பம் காண்கிறீர்கள்.
மே 20, 2009 at 5:35 மு.பகல்
சில நாட்களாக காணமல் போய்விட்டோம். அதனால் இந்த சமயத்தில் ஈழம் பற்றி வந்த மறுமொழிகளுக்கும் இங்கே ஒன்றாக பதில் அளித்திருக்கிறேன்.
விஜயராகவன்,
இலங்கை அரசு சாமர்த்தியத்தை கற்றுக்கொண்டுவிட்டது என்று எழுதி இருந்தீர்கள். உண்மைதான். புலிகள் propaganda விஷயத்தில் பலவீனமானவர்கள்தான்.
// இந்திய அரசின் முதல் வேலை பிரபாகரனையும், அவன் தோழர்களையும் கைது செய்து ராஜீவ் காந்தி கொலைக்கு தண்டனை கொடுக்க வேண்டும். எந்த சுய மரியாதை உள்ள நீதியாய் நடக்கும் ஜனநாயக அரசின் முதல் வேலை அதன் நீதித்துறை தீர்மானங்களை நிறைவேற்றுவதுதான். // நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் ப்ராக்டிகலாகவும் யோசிக்க வேண்டும் இல்லையா? குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கொடுக்கப்பட வேண்டும். ஆனால் அப்ரூவர்கள் தப்பிப்பதில்லையா? இப்போது காலம் கடந்துவிட்டது என்று தோன்றுகிறது. ஆனாலும் புலிகளோடு இந்திய உளவுத் துறைக்கு தொடர்பு இருப்பது tactical necessity.
// அதற்கப்புரம் கருணா, டியுஎல்ஃப் போன்றவர்கள் ஈழத் தமிழருக்கு பிரதிநிதி ஆவார்கள். // நீங்கள் சொல்வது அமைப்புகள் வலிவாக இருக்கும்போது நடப்பது. இந்தியாவில் யாராவது பிரதமர் ஆவார். தேவே கவுடாவுக்கு கூட பிரதமர் ஆகும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அமைப்புகள் நசிந்துவிட்டபோது பிரதிநிதிகள் உருவாவது சுலபம் இல்லை.
மற்றபடி புலிகள் தோல்வி அடைந்துவிட்டனர் என்பதுதான் தெளிவாக தெரிகிறதே? அதில் என்ன சந்தேகம்?
// ஒரு புலி ஆதரவாளர்களோ இந்த பாசிச செயல்களை கண்டிக்கிறார்களா?? // புலி ஆதரவாளர்களுக்கு ஒரு அஜெண்டா இருக்கிறது. சிங்களர்கள் இலங்கை அரசின் நடவடிக்கைகளை கண்டிக்கிறார்களா என்ன?
கனடியன், வருகைக்கும் மறுமொழிகளுக்கும் நன்றி! பாதி பேர் ஏதோ தமாஷா பார்க்க வருவதாக எழுதி இருந்தீர்கள். மிச்ச பாதி பேர் உண்மையாக தங்கள் உணர்வுகளை காட்ட வந்திருந்தால் அதுவே பெரிய எண்ணிக்கைதான்.
பாரதி, வருகைக்கும் மறுமொழிகளுக்கும் நன்றி!
// //ராஜீவ் – ஜெயவர்தன ஒப்பந்தம் நல்ல விஷயமா?
ஆம்.//
எல்லாரும் சேர்ந்து எதிர்த்த விடயத்தினை நீங்கள் (ராஜிவ்) பலவந்தப்படுத்தி கொடுத்துவிட்டு….
நீங்களும் ராஜிவைப்போல நம்மகிட்ட கேட்காமலே சரி என்கிறீங்க???
அதையே சிலோன் பிய்த்துப்போட்டதே அப்போது எங்கே சென்றிருந்தீர்கள்?? //
புலிகள் = எல்லாரும் என்று நினைக்கிறீர்கள் போல. ஒப்பந்தம் கையெழுத்தானபோது இலங்கை அரசு எதிர்க்கவில்லை, மற்ற தமிழ் இயக்கங்கள் எதிர்க்கவில்லை, இந்திய அரசு எதிர்க்கவில்லை இல்லையா? என் டாக்டர் என்னை தினமும் உடற்பயிற்சி செய்ய சொல்கிறார். நான் அதை எதிர்க்கிறேன் – செய்வதில்லை. அதனால் டாக்டர் சொல்வது தவறாகிவிடுமா என்ன? நெஞ்சை தொட்டு சொல்லுங்கள், அந்த ஒப்பந்தம் நிறைவேறி இருந்தால் இன்றைய நிலையை விட பல மடங்கு பெட்டராக இருந்திருக்குமா இல்லையா?
ரகு, வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி! புலிகள் உத்தமர்கள் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் அவர்கள் விரும்பும் தனி ஈழம் நியாயமற்ற கோரிக்கை இல்லை, அவர்கள் செய்ததை விட பல மடங்கு பெரிய தவறுகளை சிங்கள பேரினவாதிகள் செய்திருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ரதி, நீங்கள் சொன்ன வீடியோவின் நடனத்தை விட, சில ஈழத் தமிழர்களின் சொற்கள் நெஞ்சை தொட்டது.
மே 22, 2009 at 3:15 மு.பகல்
[...] நான் எங்கே நிற்கிறேன் என்று இந்த பதிவில் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இரண்டாவது பகுதி இங்கே. [...]