அனல் பறக்கும் வாதங்களும் எதிர் வாதங்களும் வந்து கொண்டிருக்கின்றன. நான் பேசுவது நல்ல விஷயம் என்று நம்புபவன். மாற்று கருத்துகள் வரவேற்கப்பட வேண்டும் என்று நினைப்பவன். ரதி, ப்ரியா, வானதி மற்ற அனைவருக்கும் கருத்துகளை எழுதியதற்காக நன்றி!
நான் எங்கே நிற்கிறேன் என்று இந்த பதிவில் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இரண்டாவது பகுதி இங்கே.
புலிகள்:
புலிகள் ஈழம் வேண்டும் என்று போராடுவது தவறான செயலா?
இல்லவே இல்லை.
ஒரு அரசாங்கம் பிறப்பு, பேசும் மொழி, மத நம்பிக்கைகள் ஆகியவற்றை வைத்து உங்களை இரண்டாம் தர குடிமகனாக சட்ட பூர்வமாக நடத்த முயற்சிக்கும்போது; அரசு எந்திரம் இந்த அடிப்படையில் மக்களை ஒடுக்கும்போது; போராடுவது தவறே இல்லை. போராடுவதைத் தவிர வேறு வழியே இல்லை. அஹிம்சை ஓரளவுதான், சில சூழ்நிலைகளில் மட்டும்தான் பயன் தரும்.
பிறகு புலிகளையும பிரபாகரனையும் நான் ஏன் எதிர்க்கிறேன்?
புலிகள் இலங்கை அரசோடு, சிங்களவர்களோடு மட்டும் போராடவில்லை. சக போராளிகளையும், கருத்து வேற்றுமை உள்ள அனைவரையும் வஞ்சம் வைத்து கொல்கிறார்கள். ஈழ விடுதலை என்பது அவர்கள் சொல்லும் வழியிலே, அவர்கள் தலைமையிலே மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
புலிகள் தலைமையில் ஒரு தனி ஈழம் அமைவது நல்ல விஷயமா?
இல்லை.
புலிகள், பிரபாகரன் ஃபாசிஸ்ட்கள். அவர்கள் தலைமையில் அமையும் எந்த ஆட்சியும் நல்லது இல்லை.
ராஜீவ்:
புலிகள் ராஜீவை கொலை செய்ததை கண்டிக்கப்பட வேண்டியதா?
கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியது.
எல்லா இந்தியர்களும் எதிர்க்க வேண்டிய விஷயம் இது. இதற்கெல்லாம் ஏன் எதிர்க்க வேண்டும் என்று விளக்கம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.
இது புலிகளும் ஈழத் தமிழர்களும் கூட கண்டிக்க வேண்டியது என்பது என் உறுதியான கருத்து. வெறும் பழி வாங்கும் உணர்ச்சியால் நடந்த கொலை இது. மக்கள் நலத்தில் அக்கறை உள்ள எந்த தலைவனும் கடந்த கால கசப்புகளை மட்டுமே நினைவில் வைத்துக் கொண்டு செயல்படக் கூடாது. ப்ராக்டிகலாகவும் யோசிக்க வேண்டும். இந்த ஒரு கொலைதான் இந்தியர்களை புலிகளுக்கு எதிராக திருப்பியது. இன்று நிலை கொஞ்சம் மாறி இருந்தாலும் தமிழர்களும் புலிகளுக்கு எதிராக செயல்பட இது ஒன்றுதான் முக்கிய காரணம். அதற்கு முன்னால் புலிகளுக்கு எதிராக கருத்து சொன்ன தமிழர்கள் வெகு சிலரே. பிரபாகரனின் மிக பெரிய முட்டாள்தனமான செயல் இது.
ராஜீவ் – ஜெயவர்தன ஒப்பந்தம் நல்ல விஷயமா?
ஆம்.
பிறகு புலிகள் அதை ஏன் எதிர்த்தார்கள்?
பிரபாகரன் ஒரு பிடி மண்ணாக இருந்தாலும் போதும், அது என் கண்ட்ரோலில் மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைத்ததால்.
ஒப்பந்தம் ஏன் தோல்வி அடைந்தது?
அனுபவம் இல்லாத ராஜீவை ஜெயவர்தன மாட்டி விட்டுவிட்டார். ராஜீவ் புலிகளை, பிரபாகரனை, பிரபாகரனின் பிடிவாதத்தை, அவரது “என் வழி தனி வழி” மனப்பான்மையை குறைத்து மதிப்பிட்டுவிட்டார். ஆப்பெடுத்த குரங்கு போல ஆகிவிட்டது ராஜீவின் நிலை.
IPKF அத்து மீறியதா?
என்னால் ஆதாரம் காட்ட முடியாது. ஆனால் எந்த ராணுவமும் அத்து மீறி இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. போலீஸ் திருடர்களை அடிக்கக் கூடாதுதான். ஆனால் அடிப்பதே இல்லை என்று யாராவது நம்புகிறீர்களா?
இலங்கை அரசு:
இலங்கை அரசை ஆதரிக்க வேண்டுமா?
இல்லவே இல்லை.
புலிகள் செய்த/செய்யும் தவறுகள் பரங்கிமலை அளவு என்றால் இலங்கை அரசு செய்த/செய்யும் தவறுகள் இமய மலை அளவு. Period.
தமிழ் நாடு:
தமிழர்களின் தவறு என்ன?
புலிகள் பற்றிய குற்ற/எதிர்ப்பு உணர்ச்சியில் நாம் ஈழத் தமிழர்களின் கஷ்டங்களை தமிழர்கள் அல்லாத இந்தியர்களிடம் விளக்க தவறி விட்டோம். உதாரணமாக இந்த தளம் தமிழில்தானே இருக்கிறது?
மற்ற இந்தியர்கள் தமிழர்கள் உணர்ச்சிவசப்படுகிறார்கள், ஆ ஊ என்றால் தீக்குளிக்கிறார்கள் தீயில் எரிகிறார்கள், (யாரையா தீயில் எரிவதை தீக்குளித்தல் என்ற அழைப்பது?), ஈழம் என்றால் அறிவு பூர்வமாக, ப்ராக்டிகலாக பேசுவதில்லை என்றுதான் நினைக்கிறார்கள். வைக்கோதான் காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும், மற்ற தேசிய தலைவர்களுக்கும் தெரிந்த ஈழத் தமிழர் ஆதரவுக் குரல். உணர்ச்சிவசப்படாமல் வைக்கோவுக்கு பேசவே தெரியாது. வேறு என்ன நினைப்பார்கள்? இல்லை என்றால் கலைஞர் மாதிரி பதவிக்காக ஜால்ரா அடிப்பார்கள்; இல்லை ஜெ மாதிரி குட்டையை குழப்புவார்கள். தமிழ் நாட்டின் முகங்கள் மிகவும் polarised ஆக இருக்கின்றன. வைக்கோவுக்கும் சோவுக்கும் இடைப்பட்ட ஒரு குரல் எங்கே?
தமிழர் தலைவர்களின் தவறு என்ன?
தலைமை வகிக்கும் தகுதி இல்லாதவர்கள். ஸ்டண்ட் அடிப்பதே குறி.
சிதம்பரம் போன்றவர்கள் என் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பவதில்லை?
இன்று என்ன செய்ய வேண்டும்?
முதலில் ப்ராக்டிகலாக யோசிக்க வேண்டும். பழைய கசப்புகளையே நினைத்து செயல்படக்கூடாது.
இலங்கை அரசு என்ன செய்ய வேண்டும்?
Ideally, போரை நிறுத்த வேண்டும். ஆனால் இது நடக்கப் போவதில்லை. நீங்கள் இலங்கை அரசின் நிலையிலிருந்து யோசித்துப் பாருங்கள். 25 வருஷ போருக்கு பின் இன்று வெற்றி கைக்கெட்டும் தூரத்தில் இருக்கிறது. புலிகளை அனேகமாக அழித்து விடலாம் என்ற நிலை. போரை நிறுத்தினால் அது புலிகள் இயக்கம் மீண்டும் வலிமையோடு உயிர்த்தெழ உதவும். அப்படி செய்ய இலங்கை அரசுக்கு என்ன பைத்தியமா இத்தனை நாள் தமிழர்கள் செத்துக் கொண்டு இருக்கிறார்கள், இன்னும் சில ஆயிரம் பேர் செத்தால் என்ன ஆகிவிடும் என்றுதானே யோசிப்பார்கள்? இலங்கை அரசு போரை தொடரத்தான் போகிறது.
போரை நிறுத்தப் போவதில்லை என்றால் அடுத்த நிலை என்ன?
தமிழர் காம்ப்களை செஞ்சிலுவை சங்கமோ, ஐ.நா.வோ பார்வை இட வேண்டும். அவர்களை நல்லபடி நடத்த வேண்டும்.
அரசியல் சட்ட மாற்றங்கள் இப்போதே ஆரம்பிக்க வேண்டும். இவற்றை செய்தால் இலங்கை அரசுக்கு propaganda வெற்றி கிடைக்கும்.
புலிகள் என்ன செய்ய வேண்டும்?
Ideally, தனி ஈழம் கோரிக்கையை விட்டுவிட்டு, இலங்கை அரசோடு ஒத்துழைக்க வேண்டும். இதுவும் நடக்கப் போவதில்லை. காயங்கள் மிக ஆழமானவை, புலிகளின் மனோநிலையும் அப்படிப்பட்டதில்லை.
அப்படி என்றால் புலிகளுக்கு அடுத்த நிலை என்ன?
போரில் ஈடுபடாத தமிழர்களை ஒரு பாதுகாப்பு வளையமாக பயன்படுத்தாதீர்கள். எனக்கு நிச்சயமாக அப்படி நடக்கிறதா என்றெல்லாம் தெரியாது. ஆனால் அப்படி செய்ய புலிகள் நிலையில் இருக்கும் எவருக்கும் தோன்றத்தான் தோன்றும்.
இழப்புகளை எவ்வளவு தூரம் குறைத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு தூரம் குறைத்துக் கொண்டு தப்பிப்பதுதான் இப்போதைக்கு சிறந்த வழி. எதிர்காலத்தில் மீண்டும் வலிமை பெற முயற்சிக்கலாம்.
இந்தியா என்ன செய்ய வேண்டும்?
இலங்கை ராணுவத்துக்கு எந்த உதவியும் செய்யக் கூடாது.
இங்கே வரும் இலங்கை தமிழர்களை ஆதரிப்போம். கல்வி, மருத்துவ வசதி, சுலபமாக தொழில் செய்ய கடன் வசதி, குடியுரிமை ஆகியவை கொடுக்கப்பட வேண்டும். இலங்கை தமிழர்கள் தம் காலில் நிற்க முடிந்த உதவிகள் செய்ய வேண்டும்.
இலங்கை அரசின் மீது diplomatic pressure இருந்து கொண்டே இருக்க வேண்டும். தமிழர் காம்ப்கள் ஊடகங்கள், செஞ்சிலுவை சங்கம், ஐ.நா. ஆகியவை சுலபமாக அணுகும் நிலையில் இருக்க, அரசியல் சட்டம் இப்போதே மாற்றப்பட, எதிர்கால அரசியல் அமைப்பு இப்படி இருக்கும் என்று வரையறுக்கப்பட இப்போதே pressure இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்?
ஈழத் தமிழர் படும் கஷ்டங்களை எடுத்து சொல்லுங்கள். ஆங்கில பத்திரிகைகள், பதிவு தளங்கள் ஆகியவற்றில் ஏன் இலங்கை பிரச்சினை பேசப்படுவதில்லை? இந்தியாவில் இருந்து வரும் டாப் டென் ஆங்கில பதிவுகள் எப்போது இலங்கை பிரச்சினையை பற்றி பேசின? அவர்கள் இலங்கை அரசுக்கு ஆதரவாக பேசினாலும் பரவாயில்லை, முதலில் தங்கள் கருத்துகளை பதிக்க வேண்டும். அந்த் ஆரம்பம் இல்லாவிட்டால் ஒன்றுமே நடக்கப் போவதில்லை. As a tactical step, நீங்கள் புலிகளை ஆதரித்தாலும் இப்போதைக்கு அவர்களை பற்றி பேசாதீர்கள். நீங்களும் ஆங்கிலத்தில் பதிவிடுங்கள்!
காங்கிரஸ்காரர்களை பிடியுங்கள். கலைஞர் மண் குதிரை. சண்டைக்காரன் காலில் விழுவதே இப்போதைக்கு நல்லது. அவர்கள் வாயை திறக்க வேண்டும். அதற்கு முயற்சி செய்யுங்கள்!
மே 6, 2009 at 3:14 மு.பகல்
அருமையான கேள்விகளும் விளக்கங்களும்.
கிட்ட தட்ட இதே நிலைதான் என்னுடையதும்
மே 6, 2009 at 1:05 பிற்பகல்
மிகத் தெளிவான அர்த்தமுள்ள பதிப்பு
மே 6, 2009 at 2:12 பிற்பகல்
லேட்டா வ்ந்தாலும் லேட்டஸ்டா வந்தீங்க. அருமையான கருத்துகள். தர்க்கம் எப்படி செய்ய வேண்டும் என்பதற்கு சரியான மேற்கோள் இதுதான்.
You could not have presented your POV in a more lucid way.
மே 6, 2009 at 3:51 பிற்பகல்
உங்களது அரசியல் நிலைப்பாட்டை நான் வரவேற்கிறேன். நீங்கள் ப்ராக்டிகலாக யோசிக்கிறீர்கள். நல்ல விஷயம்.
மற்றவர்களைப் போல இன மான உணர்ச்சிக்கு இடம்கொடுக்காமல் எழுதுகிறீர்கள்.
தமிழ் Nationalism ஒன்றும் புனிதமானதல்ல. அதற்கும் ஒரு இருண்ட மறுபக்கம் இருக்கிறது என்பதை தான் நான் எனது பின்னூட்டங்களில் எடுத்துக் காட்டினேன். புரிந்து கொண்டதற்கு நன்றி.
மே 6, 2009 at 5:15 பிற்பகல்
ப்ரியா, பாலா மணியன், அருண்மொழிவர்மன்(என்ன அருமையான பெயர்!), ஆனந்த்,
மறுமொழிக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி!
ப்ரியா, நீங்கள் தமிழ் தேசியம் என்று எதை குறிப்பிடுகிறீர்கள்? ரதி ததமிழ் தேசியம் (ஏறக்குறைய தனி ஈழ நாடு போராட்டம்) என்று எதை சொல்கிறார் என்று புரிந்துகொள்ள எனக்கு நாலைந்து மறுமொழி ஆயிற்று. நீங்களும் அதையேதான் சொல்கிறீர்களா?
மே 6, 2009 at 7:23 பிற்பகல்
RV,
உங்கள் தளத்தில் இனிமேல் பதில் எழுதுவதில்லை என்று முடிவோடு இருந்தேன். ஆனால், பாழாய்ப்போன என் இனமான உணர்வு என்னை மீண்டும் எழுத வைக்கிறது. காரணம், ICRC, SBS-Dateline-Australia, Ravishankar-Tamil Nadu, etc. போன்ற தொண்டர் நிறுவனங்கள், ஊடகங்கள், தனிமனிதர்கள் ஈழத்தில் தமிழனுக்கு அநியாயம் நடக்கிறது; அங்கு மனிதப்பேரவலம் நடக்கிறது என்று சொல்லும்போது, இங்கே சிலர் ஈழத்தில் இனப்படுகொலை நடக்கவில்லை, இடைத்தங்கல் முகாம்களில் தமிழனின் நிலை ஒன்றும் மோசகமாக இல்லை என்று எழுதுகிறார்கள். இப்படிப்பட்ட பொய்ப்பிரச்சாரங்களால் உங்கள் தளம் நிரம்பி வழிவது மட்டுமல்ல; உண்மையிலேயே என்னால் ஜீரணிக்கவும் முடியவில்லை. என் கோபத்தை வெளிக்காட்ட நாலு கெட்டவார்த்தை சொல்லி திட்ட என்னாலும் முடியும். ஆனால், என் அறிவுசார் மனம் என்னை தடுப்பது மட்டுமல்ல; RV என்ற நண்பரின் மீது கொண்டிருக்கும் மரியாதையும் தான் காரணம்.
//ராஜீவ் – ஜெயவர்தன ஒப்பந்தம் நல்ல விஷயமா?
ஆம்.//
நீங்கள் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. இது நல்ல விடயமா இல்லையா என்று தீர்மானித்திருக்க வேண்டியவர்கள் ஈழத்தமிழர்கள். இந்த உடன்படிக்கையானது இந்திய அல்லது இலங்கைப்பாராளுமனறத்தில் விவாதிக்கப்பட்டதா? தமிழர்கள் அல்லது சிங்கள மக்களிடம் கருத்து கேட்கப்பட்டதா? இதில் பெரும்பாலான தமிழர்களுக்கும் சரி சிங்களமக்களுக்கும் சரி உடன்பாடில்லை. என்னைப்பொறுத்தவரை தமிழ்மக்களின் எந்தவொரு நியாயமான உரிமைகளையும் இந்த ஒப்பந்தம் பெற்றுத்தரவில்லை. இந்தி அமைதிப்படையிடம் அப்பாவித்தமிழன் அடிப்பட்டதுதான் மிச்சம். ஆனால், ஒரெயொரு உண்மையை இருதரப்பும்(இலங்கையும் இந்தியாவும்) ஒப்புக்கொண்டார்கள். அது, வடக்கு மட்டுல்ல கிழக்குமாகாணமும் தமிழர்களுக்கு சொந்தமானது என்று. அது தமிழர்களுக்கு சொந்தமானது என்று சொல்லிவிட்டு பிறகு இந்த தற்காலிக இணைப்பையும் அதன் நிர்வாகத்தையும் தொடர்ந்து தமிழர்கள் நடைமுறைப்படுத்துவதா இல்லையா என்று Referendum வைத்து தீர்மானிப்பார்களாம். என்ன நியாயம் இது? நிலம் எங்களது என்றால் தமிழன் தானே ஆளவேண்டும். இதற்கு ஏன் வாக்கெடுப்பு?
என்னைப்பொறுத்தவரையில், ஒரு ஈழத்தமிழாக, இந்த ஒப்பந்தம் இந்திய பிராந்திய அரசியல் நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டது. மற்றது ஜெயவர்த்தனாவின் திட்டம் இந்தியாவை புலிகளை எதிர்க்க செய்வது. இதை இந்தியா மனதில் வைத்துக்கொண்டுதான் எங்களுக்கு ஒரு தடவை இந்தியா விமானம் மூலம் உணவுப்பொதி போட்டது. காரணம், ஜெயவர்த்தனாவுக்கு உங்கள் வான்பரப்பில் உங்கள் அனுமதியில்லாமல் நாங்கள் பறப்போம் என்று சவால் விடவும் இந்த ஒப்பந்தத்திற்கு பணியவைக்கும் ஒர் முத்தாய்ப்பு நிகழ்வு.
இதெல்லாம் பழைய கதைதான். ஆனால், நீங்கள் நினைவுபடுத்திவிட்டீர்கள்.
//புலிகள் தலைமையில் ஒரு தனி ஈழம் அமைவது நல்ல விஷயமா?
இல்லை.//
RV,
யார் எங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவது நல்லது என்று நினைக்கிறீர்கள்? நான் ஒரு ஈழத்தமிழ். என்னை டக்ளஸ் தேவானந்தா, ஆனந்தச்ங்கரி, கருணா, பிள்ளையான் போன்றோர் பிரதிநிதித்துவப்படுத்துவது நம்பிக்கையை தராது. தமிழ் தேசிய கூட்டணி பற்றி இப்போது ஏதும் சொல்வதிற்கில்லை. நீங்கள் சொல்லுங்கள் யார் எங்களை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும்?
//ஈழத் தமிழர் படும் கஷ்டங்களை எடுத்து சொல்லுங்கள். //
இதற்க்காக உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
மே 6, 2009 at 10:41 பிற்பகல்
ரதி,
// சிலர் ஈழத்தில் இனப்படுகொலை நடக்கவில்லை, இடைத்தங்கல் முகாம்களில் தமிழனின் நிலை ஒன்றும் மோசகமாக இல்லை என்று எழுதுகிறார்கள்.//
ப்ரியா சொல்வது தவறாக இருக்கலாம். ஆனால் அதை சொல்வதற்கு அவருக்கு எல்லா உரிமையும் உண்டல்லவா? அங்கே நடப்பது இனப் படுகொலைதான். என் கருத்தில் புலிகள் செய்த/செய்யும் தவறுகள் பரங்கி மலை அளவு என்றால் இலங்கை அரசு செய்யும்/செய்த தவறுகள் இமயமலை அளவு.
// என் அறிவுசார் மனம் என்னை தடுப்பது மட்டுமல்ல; RV என்ற நண்பரின் மீது கொண்டிருக்கும் மரியாதையும் தான் காரணம். //
என் பல எண்ணங்கள் உங்கள் கண்ணில் தவறானவை, முட்டாள்தனமானவை. (அதுவே உண்மையாகவும் இருக்கலாம்.) கருத்து வேறுபாடுகளை – அதுவும் மிக அடிப்படையான் வேறுபாடுகளை – பொருட்படுத்தாமல் நீங்கள் என்னிடம் நட்பு பாராட்டுவது நெகிழ்ச்சியாக இருக்கிறது
// //ராஜீவ் – ஜெயவர்தன ஒப்பந்தம் நல்ல விஷயமா?
ஆம்.//
நீங்கள் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. //
இந்த விஷயத்தில் நீங்கள் உடன்படுவீர்கள் என்று நானும் நினைக்கவில்லை. ஒப்பந்தம் நிறைவேறி இருந்தால் 20 வருஷம் முன்னாலேயே சண்டை முடிவுக்கு வந்திருக்கும், தமிழர்களுக்கு சட்டப்படி பாதுகாப்பு கிடைத்திருக்கும், (ப்ராக்டிகலாக என்ன நடந்திருக்கு என்று சொல்ல முடியாது) என்ற எண்ணம்தான்.
// இந்த ஒப்பந்தம் இந்திய பிராந்திய அரசியல் நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டது. //
உண்மைதான். அதை நான்தான் தெளிவாக குறிப்பிடவில்லை. ராஜீவுக்கு ஒரு நோபல் பரிசு கனவு இருந்திருக்கும் என்று எனக்கு ஒரு நினைப்பு இருக்கிறது.
// நீங்கள் சொல்லுங்கள் யார் எங்களை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும்? //
நான் தெளிவாக குறிப்பிடாத இன்னொரு விஷயம் இது. புலிகள் இல்லை என்றால் தலைமை இடத்தில் வெற்றிடம்தான். விட்டுப் போனவற்றையும் தெளிவாக எழுதிவிடுகிறேன்.
மே 6, 2009 at 11:55 பிற்பகல்
RV,
நான் யாருடைய கருத்துரிமையையும் பறிக்கவேண்டும் என்று சொல்லவில்லை. ஈழத்த்மிழர்களின் அவலச்சாவில் சிலரின் கருத்துகள் என்னை காயப்படுத்துகிறது என்று தான் சொன்னேன்.
//என் பல எண்ணங்கள் உங்கள் கண்ணில் தவறானவை, முட்டாள்தனமானவை. (அதுவே உண்மையாகவும் இருக்கலாம்.) கருத்து வேறுபாடுகளை – அதுவும் மிக அடிப்படையான் வேறுபாடுகளை – பொருட்படுத்தாமல் நீங்கள் என்னிடம் நட்பு பாராட்டுவது நெகிழ்ச்சியாக இருக்கிறது//
அச்சச்சோ, நான் உங்களை திட்ட வேண்டுமென்று சொல்லவில்லை.
உங்களின் கருத்துக்களை நான் எப்படி முட்டாள் தனமானது என்று சொல்லமுடியும்? நான் அப்படி சொன்னால் நான் தனிமனித கருத்து சுதந்திரத்தை எதிர்ப்பவர் என்று ஆகாதா? உங்கள் எந்த க்ருத்தை தவறானவை, முட்டாள்தனமானவை என்று நினைக்கிறீர்க்ள்?
அடுத்து, நல்ல நட்பு என்பது என் கருத்தில் நல்ல மனிதப்பண்புகளை வைத்து வருவது,
வளர்வது. ஒரே கருத்தை உடையவர்கள் எல்லாம் தான் நண்பர்களா?
மே 7, 2009 at 7:06 மு.பகல்
// அச்சச்சோ, நான் உங்களை திட்ட வேண்டுமென்று சொல்லவில்லை. //
நீங்கள் திட்டியதாக நானும் நினைக்கவில்லை.
// நான் புலிகள் பற்றிய கருத்தை யார் மீதும் impose செய்யவில்லை என்று உறுதியாக நம்புகிறேன். //
நிச்சயமாக் இல்லை.
// உங்களின் கருத்துக்களை நான் எப்படி முட்டாள் தனமானது என்று சொல்லமுடியும்? நான் அப்படி சொன்னால் நான் தனிமனித கருத்து சுதந்திரத்தை எதிர்ப்பவர் என்று ஆகாதா? //
ஆகாதுங்க. நான் கருத்து சொல்லக்கூடாது என்று சொல்வது வேறு, நான் சொல்வது முட்டாள்தனம் என்று சொல்வது வேறு. நான் எப்போதாவது நீங்கள் சொல்வது முட்டாள்தனம் என்று சொன்னால் தப்பாக எடுத்துக்காதீங்க!
மே 7, 2009 at 8:14 மு.பகல்
To all LTTE sympathizers:
This article presents facts and not propaganda. It is critical of both the government of Sri Lanka and tigers to the level they should be criticised. This is a very good scale to judge yourselves. If you feel it favours one party, it indicates that you have been taken over by propaganda and it is high time that you start reading about the other side of the story to get a true picture.
you are protesting in the streets of Toronto to educate us about your “apparent” suffering. So why not someone else tells the the other side of your coin ? looks like a pot calling a kettle black !
மே 7, 2009 at 8:57 பிற்பகல்
Torontonian,
அதுதான் National Post இந்து பத்திரிகை எண்டு உங்களின் “மறுபக்க” கருத்தை சொலுறியள் எல்லோ, பிறகென்ன கவலைப்படுறியள்.
மே 10, 2009 at 7:58 பிற்பகல்
வணக்கம் RV,
நல்லதொரு முயற்சி..வாழ்த்துகள்.
அருமையான கேள்விகள்…பதில்கள் தான் கலைஞரின் அறிக்கை போல் தெளிவில்லாமல் இருக்கிறது.
சிம்பிள் உதாரணம்:=
//ராஜீவ் – ஜெயவர்தன ஒப்பந்தம் நல்ல விஷயமா?
ஆம்.//
எல்லாரும் சேர்ந்து எதிர்த்த விடயத்தினை நீங்கள் (ராஜிவ்) பலவந்தப்படுத்தி கொடுத்துவிட்டு….
நீங்களும் ராஜிவைப்போல நம்மகிட்ட கேட்காமலே சரி என்கிறீங்க???
அதையே சிலோன் பிய்த்துப்போட்டதே அப்போது எங்கே சென்றிருந்தீர்கள்??
சரி…புலிகள் தான் இப்போது பிரச்சனை என்றால்..அவர்களினை கைவிட வேண்டுமென்றால் யார் எங்களுக்கான உரிமைக்கு உத்தரவாதம் கொடுப்பது???
அதை எவ்வாறு நம்புவது…??
(காந்தி தேசம் செய்ததை மறக்கத்தான் முடியுமா??)
பத்திரிகையாளர் சிவராம் சொன்னது போல 2001 சமாதான் ஒப்பந்தம் ஒரு சர்வதேச வலைப்பின்னல் சதி.
புலிகளின் அரசியல் பலமின்மை தான் அவர்கள் வீழ்ச்சிக்கு காரணம்..ஏதொ இன்றளவும் தாக்குப்பிடிப்பதே அவர்களின் இலட்சிய வேட்கை மற்றும் புலம்பெயர் ஆதரவினால் மட்டுமே..
( i don’t have right now any links or articles written br T.Sivaram. but if u search in the web u will get those)
நன்றி.