RV, 100 சதவிகிதம் நான் நினைப்பதையே எனக்காக எல்லா பதில்களையும் எழுதிவிட்டான். எனவே நான் தனியாக பதில் எழுதவேண்டாம் என நினைக்கிறேன். Priya, ரதி, Cherankrish, Vadivelu, Ann1975, Ragunath ஆகிய அனைவருக்கும் நன்றி. நான் காண்ட்ரோவர்சியல் டாபிக்கை இதுவரை தொடாமல் இருந்தேன். அதற்கு காரணம் அதனால் யாரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று நினைப்பதால். ஏதோ ஒரு வேகத்தில் எழுதிவிட்டேன். வாசகர் ரதி மிகவும் பாதிக்கப்பட்டது மாதிரி தெரிகிறது. ஆனாலும் கண்ணியமாக பதில் எழுதியிருக்கிறார். மற்றவர்களும் கண்ணியமாகவே பதில் எழுதியுள்ளனர்.
ஒருவர் தகாத வார்த்தைகளை கூறி பதில் எழுதியிருந்தார். எனக்கு இரண்டு நாள் முழுவதும் அதிர்ச்சியாக இருந்தது. மதிப்பிற்குரிய டோண்டு ராகவன், சாரதா, மற்றும் பல இளம் வாசக நண்பர்கள் இருக்கும் வலை உலகத்தில் இப்படியும் இருக்கிறார்களே என்று வருத்தமாக இருந்தது. இந்த பிளாக்கை ஒரு கண்ணியமான பிளாக்காக இது வரை காத்துவருகிறோம். அது சீர்குலையக்கூடாது என்பதால் நாங்கள் அதை வெளியிடவில்லை. எதிர்ப்பு கருத்து இருந்தால் அந்த கருத்தை சொல்வதற்கு பதிலாக தனிமனிதர்களை, குடும்பத்தினரையும் தகாத வார்த்தைகள் கூறி தாக்குவது எப்படி நாகரிகமாக முடியும்? கடைசியில் அவர் “நீயெல்லாம் இருப்பதால் தமிழ்நாடு உருப்படாது என்றும் எழுதியிருந்தார்”. இந்த ஒரு வாக்கியம் தான் ”நாகரிகமாகவும்”, படிக்கும் படியாக இருந்தது. இவர் மாதிரி பேசுபவர்கள் இருக்கும் நாடாகத்தான் தமிழ்நாடு இருக்கவேண்டும் என்று நினைக்கிறார் போலும். இங்கு பங்கேற்கும் பிற வாசக நண்பர்கள் ஒருவர் கூட அப்படிப்பட்ட தமிழ்நாட்டில் வாழ விரும்பமாட்டார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.
இனி வரும் நாட்களில் காண்ட்ரோவர்சியல் டாப்பிக்ஸை முழுவதுமாக தவிர்க்க முயற்ச்சி செய்கிறேன். இந்து பத்திரிக்கையில் வீக்லி மாகசீனில் கே.கங்காதர் என்பவர் எழுதுவது எனக்கு பிடித்தமான ஒன்று. அவர் எந்த காண்ட்ரோவர்சியல் சமாச்சாரத்தையும் தொட மாட்டார். அவர் போல எழுதுவது சாலச் சிறந்தது என்று இந்த இரண்டு நாட்களில் கற்றுக் கொண்டேன்.
ஆர்வியின் இரண்டு சென்ட்: இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை. இரண்டு “தகாத வார்த்தை” எழுதும் யாருக்கோ பக்ஸ் மேல் இவ்வளவு தாக்கம் இருக்கிறதே? பக்ஸ் எதிர்காலத்தில் என்ன எழுத வேண்டும் என்று இவர்களா தீர்மானிப்பது? நான் இதை எழுதலாமே, எழுத வேண்டாமே என்று ஏதாவது சொன்னால் கூட பக்ஸ் கேட்பதில்லை
06/06/09 – RVயின் பாயிண்ட்களைப் படித்தப்பிறகும் (Thanks RV – எப்போது நீ சொல்லி நான் கேட்காமல் இருந்தேன் என்று தான் தெரியவில்லை
), எனது பகுத்தறிவும், சிறிது காலம் கடந்ததாலும் நான் தெளிவு பெற்றுவிட்டேன். ஒரு தர்க்கத்தில் ஃபேலஸிக்கள் (fallacies) இருக்கலாம். We can even tolerate Argumentum ad Hominem. But what this guy wrote is beyond that. That’s why I got really confused. Well. The positive way of seeing this is that there is nothing more that could offend me than what he said. So now that I have seen the worst, I think, I am prepared for anything. So, I am jumping right in and “Hello World! Bring it on.”
மே 7, 2009 at 12:53 மு.பகல்
Bags,
// I think, I am prepared for anything. So, I am jumping right in and “Hello World! Bring it on.”//
That’s the spirit.
நீங்கள் எழுதவே வேண்டாம் என்று ஏதாவது கண்ணகி/பாஞ்சாலி மாதிரி சபதம் எடுத்து விட்டீர்களோ என்று பயந்து விட்டேன். காரணம் உங்களை வெறுப்புக்குள்ளாக்கியவர்களில் நானும் ஒருத்தி என்பதால். நீங்கள் நினைப்பது போல் நான் “மிகவும்” பாதிக்கப்படவில்லை. ஓரளவுக்குத்தான் பாதிக்கப்பட்டேன். உங்கள் பதிலை படித்த பின்னர் தான் எனக்கு ஒர் விடயம் உறைத்தது. யார் ஈழத்தைப்பற்றி எழுதினாலும் அதென்னவோ பெரிய “Diplomatic Analysis” ஆக இருக்க வேண்டுமென்று நான் நினைப்பது தவறு என்று புரிந்துகொண்டேன்.
ஆரம்ப காலங்களில் நானும் இப்படித்தான் இலக்கியத்தை பற்றி பேசினால் தர்ம அடிகளில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைத்தேன். அதற்காக நான் என்னவோ இலக்கியத்தை கரைத்து குடித்திருக்கிறேன் என்றெல்லாம் நினைக்க கூடாது. ஆனால், இப்போதெல்லாம் இலக்கியம் தவிர்ந்த எல்லாவற்றையும் பேசி இணையத்தளங்களில் தாராளமாக தர்ம அடி வாங்கிக்கொண்டிருக்கிறேன். ஆனால், அதையெல்லாம் வீரத்தின் விழுப்புண்களாக தாங்கிக்கொண்டிருக்கிறேன்.