ஹாங்காங் இலக்கிய வட்டம் அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள் என்ற தலைப்பில் ஆறு தமிழறிஞர்களை பற்றி அருமையான உரைகளை பதித்திருக்கிறது. இவர்கள்
1. திரு.வி.க.
2. வ.உ.சி.
3. தேவநேயப் பாவாணர்
4. சி.சு. செல்லப்பா
5. வை.மு. கோதைநாயகி
6. அ.இரா. வெங்கடாசலபதி
வை.மு.கோதைநாயகி பற்றிய உரைக்கான பதிவு மட்டும் இன்னும் கிடைக்கவில்லை. இந்த தளத்தில் அவரைப் பற்றி எழுதப்பட்ட பதிவு இங்கே.
தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் படித்துப் பாருங்கள்!
மே 11, 2009 at 5:39 பிற்பகல்
திரு.வி.க. அதிகம் பேசப்படாத தமிழரிஞரா?
வ.உ.சி – இவருடைய விடுதலை போராட்டத்தை பற்றிதான் அதிகம் பேசியிருக்கிறோம். இவர் தமிழறிஞர் என்பது தெரியாத (எனக்கு) விஷயம்.
மே 20, 2009 at 5:53 மு.பகல்
பக்ஸ்,
திரு.வி.க. ஒரு அபூர்வமான மனிதர். தமிழறிஞர்; முன்னோடி பத்திரிகையாளர்; தொழிற்சங்க முன்னோடி; சுதந்திரப் போராட்ட வீரர். எந்த பதவிக்கும் ஆசைப்படாதவர். அவரைப் பற்றி என்றாவது விரிவாக எழுதவேண்டும்.