ரதி என்ற நண்பரோடு இணைய தளத்தில் சில சண்டைகள் போட்டிருக்கிறேன். ரதி புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர். புலிகளின் தீவிர ஆதரவாளர். அவரது வாழ்க்கை அனுபவங்களை பற்றி அவர் எதார்த்தமாக சொன்ன சில விஷயங்களை வைத்து பார்க்கும்போது அவரது அந்த தேர்வு புரிந்து கொள்ளக்கூடியதுதான். நானோ புலம் பெயர்ந்த தமிழன். ஒரு 25 வருஷங்களாக புலிகள், குறிப்பாக பிரபாகரன் ஃபாசிஸ்ட் என்று நினைப்பவன். எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருப்பதும், வேறு வேறு perspective-கள் இருப்பதும் புரிந்து கொள்ளக்கூடிய விஷயம்தானே! ஆனால் எங்கள் இருவருக்கும் ஒரு விஷயத்தில் முழு உடன்பாடு இருக்கிறது – இப்போது இலங்கையில் நடப்பது genocide, இந்தியா இலங்கை ராணுவத்துக்கு எந்த உதவியும் செய்யக்கூடாது.
ஆனால் ரதி நான் மதிக்கும் இணைய நண்பர்களில் ஒருவர். இணைய தளத்தில் பதிவு எழுதுவதின் பெரிய பலனே ரதி, சேதுராமன், டோண்டு, சாரதா, நல்லதந்தி, சுபாஷ், முரளி, சூர்யா, அரை டிக்கெட், போன்ற பலரோடு ஏற்பட்ட பழக்கம்தான்.
காங்கிரஸ்தான் இலங்கை தமிழர்களை பொறுத்த வரை நல்ல சாய்ஸ் என்ற பதிவு ரதிக்கு உடன்பாடு இல்லாதது. அவரை நான் கேட்டிருந்தேன் – ஒரு இலங்கைத் தமிழர் என்ற முறையில் யார் ஆட்சிக்கு வந்தால் நல்லது என்று நினைக்கிறீர்கள் என்று. அவர் அளித்த பதில் மிக அருமையாக இருந்தது. அதை இங்கே பதிவாக போட்டிருக்கிறேன். ஓவர் டு ரதி!
//தேர்தலுக்கு பிறகு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் இலங்கை தமிழர்களுக்கு நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?//
அரசியல், கட்சிகள், அரசியல் தலைவர்கள் என்ற கருத்தியல் எல்லா நாட்டிலும் ஒரே மாதிரிதான் உள்ளது என்பது என் கருத்து. அரசியல்வாதிகளுக்கும் கட்சிகளுக்கும், வாக்காளர்களும் தொண்டர்களும் பகதர்களாக மட்டும் இருப்பதால் அரசியல்வாதிகள் அவர்களை பகடைக்காய்களாக வைத்து பரமபதம் ஆடுகிறார்கள். ஆட்சியில் உட்கார்ந்தவுடன் தங்கள் சொந்த நலன்களைப்பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். பக்தர்களை மறந்துவிடுகிறார்கள், அடுத்த தேர்தல் வரும்வரை. இதற்கு இந்தியாவும்/தமிழ்நாடும் விதிவிலக்கல்ல. இந்தியாவின் அரசியல் நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஈழத்தமிழர்களின் வாழ்வோடும் கலந்துவிட்டது.
ஆனாலும், நான் எந்த இந்தியா/தமிழ்நாடு கட்சிக்கோ அல்லது அரசியல்வாதிக்கோ அபிமானி கிடையாது. அது கூட எங்கள் ஈழப்பிரச்சனையை வைத்து இவர்கள் அரசியல் நடத்துவதால் தான். அதுபோக, தமிழ்நாட்டு தமிழர்களுக்காவது உண்மையாக இருக்கிறார்களா? அதுவுமில்லை.
தேசிய அளவில் இந்தியாவில் எந்த கட்சியாவது ஒட்டு மொத்த இந்தியர்களின் அபிலாசைகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறதா?பெரும்பாலும் சாதி அல்லது வேறு ஏதோ ஒரு விடயத்தை ஒவ்வொரு மாநிலமும் அதன் கட்சியும் முன்னிலைப்படுத்துகின்றன. மாநில அளவில் கட்சிக்களுக்கிடையில் குத்துச்சண்டை போடாத குறையாக ஆட்சி நடத்துகிறார்கள். ஒட்டுமொத்த இந்தியர்களின் அபிலாசைகளை பிரதிநிதித்துவப்படுத்த எந்த கட்சியும் தேசிய அளவில் கிடையாது. இதில் நான்/நாங்கள் எந்த கட்சியை நம்புவது. அது தவிர, தமிழ்நாட்டை தவிர வேறு எந்த மாநிலத்துக்காவது ஈழத்தமிழனில் அக்கறையுள்ளதா? தேசிய அளவில் எந்த கட்சியாவது ஈழத்தமிழன் பிரச்சனையை பேசுகிறதா?
ஆனால், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஏதாவது மாற்றம் கொண்டுவந்தால் அல்லது அதற்கு எந்த கட்சியாவது ஆதரவளித்தால் அதன் பிறகு பார்க்கலாம். இன்னும் இந்திராவின் காலத்தில் உருவாக்கிய வெளிநாட்டுக்கொள்கையின் அடிப்படையிலேயே ஈழப்பிரச்சனையை அணுகினால் எந்த கட்சியையும் நாங்கள் எப்படி நம்புவது. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எங்கள் விடுதலையை நாங்கள் தான் போராடிப் பெறவேண்டும் என்ற நிலைதான் எங்களுக்கு. இந்தியா எங்களுக்கு விடுதலையை பெற்றுதரும் என்று நம்ப ஈழத்தமிழன் முட்டாளும் அல்ல. இருந்தாலும், ஈழத்தமிழனின் இனப்படுகொலைக்கு துணை போகாத, எங்கள் ஈழவிடுதலையை தங்கள் தேசிய நலனுக்காக நசுக்க நினைக்காத எந்த கட்சியும் எனக்கு சம்மதம். அப்படி ஒர் தேசிய அளவிலான கட்சி இந்தியாவில் உள்ளதா?
ரதி சொல்வது மாதிரி இந்திரா காலத்திலிருந்து நமது அணுகுமுறை மாறத்தான்வில்லை. இந்தியாவின் நலனுக்காக ஈழத் தமிழரை ஒரு pawn ஆக கருதும் மனநிலைதான் உள்ளது. இந்திரா போராளிகளை வைத்து இந்தியாவை தெற்கு ஆசிய வல்லரசாக ஆக்க நினைத்தார். ராஜீவ் அதை தொடர்ந்தார் – ஆனால் அகலக் கால் வைத்துவிட்டார். புலிகளின் சம்மதம் இல்லாமல் அவர் போட்ட ஒப்பந்தம் மிக மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தியது. (அதற்கு காரணம் புலிகளின் ஃபாசிஸ்ட் மனநிலை, புலிகளை அற்பமாக ராஜீவ் நினைத்தது) ராஜீவ் மரணத்துக்கு பிறகோ புலிகளை அடக்க எத்தனை தமிழர் செத்தாலும் பரவாயில்லை என்ற மனநிலை இருக்கிறது.
ரதியோடு எனக்கு எத்தனையோ கருத்து வேறுபாடு இருந்தபோதும் இந்த கருத்தை நான் மனப்பூர்வமாக ஏற்கிறேன்.
April 30, 2009 at 10:12 பிற்பகல்
ரதி பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்று சொல்கிறார். இந்திய அரசு புலிகளுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, இலங்கை அரசுக்கு உதவாமல் இருந்தாலே போதும் என்று சொல்ல்கிறார். ம்ம்ம் காலம் கடந்து வந்த ஞானம்.
April 30, 2009 at 11:07 பிற்பகல்
ப்ரியா,
இலங்கை தமிழர் பார்வையில் தேர்தல் பதிவுக்கு மறுமொழி எழுதியதற்கு நன்றி!
// யுத்தம் நடக்கும் இடத்தில் அகப்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதை யாரும் மறுக்கவில்லை. அதனை Genocide என்று சொல்லலாமா?//
வேறு எப்படி சொல்வது? கொசோவோவில் நடந்தது genocide, இது இல்லை என்றால் எப்படி?
// யாழ்ப்பாணத்தில் இருந்து ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் விரட்டியது Ethnic cleansing இல்லையா? அப்பாவி சிங்கள, முஸ்லிம் மக்களை நூற்றுக்கணக்கில் கொலை செய்ததற்காக புலிகள் இயக்க தலைவர்கள் மீதும் Genocide வழக்குப் போடுவார்கள். புலி ஆதரவாளர்கள் அதனை தாங்கிக் கொள்வார்களா? //
முஸ்லிம் மக்களை விரட்டியது பற்றி எனக்கு தெரியவில்லை. விரட்டி இருந்தால் ethnic clensing-தான். புலி ஆதரவாளர்கள் தாங்குவார்களா மாட்டார்களா என்பது வேறு விஷயம். உண்மையா பொய்யா என்பதுதானே முக்கியம்? புலிகள் ஃபாசிஸ்டுகள் என்பது என் சொந்த கருத்து. இதையும் பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.
// இந்திய அரசு புலிகளுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, இலங்கை அரசுக்கு உதவாமல் இருந்தாலே போதும் என்று சொல்ல்கிறார். //
அவர் சொல்வது சரிதானே! காலம் கடந்த ஞானம் ஆக இருந்தால் என்ன? genocide என்று நீங்கள் ஒத்துக் கொள்ளாவிட்டாலும் சரி, இலங்கை அரசுக்கு அப்பாவி தமிழர்களை கொலை செய்ய இந்திய அரசு எந்த விதத்திலும் உதவி செய்யக்கூடாது என்று நினைப்பது நியாயம்தானே!
இலங்கை தமிழர்கள் எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருக்கிறார்கள். அடியும், வலியும் அவர்களுக்குத்தான், மற்றவர்கள் – என்னதான் தமிழ் உணர்வாளர்களாக இருந்தாலும் சரி – மூன்றாவது மனிதர்கள்தான். நானும் நீங்களும் புலிகள் தோற்று இலங்கை அரசு வென்றால் நாளை தமிழர்களுக்கு இலங்கையில் அரசியல் சட்ட பூர்வமான விடிவு கிடைக்குமோ என்று நினைக்கலாம். ஒரு ஈழத் தமிழர் இதற்கு வாய்ப்பே இல்லை, தனி ஈழம்தான் ஒரு தீர்வு, தனி ஈழம் கிடைக்க புலிகள்தான் ஒரே கதி என்று நினைப்பது அதிசயமா என்ன?
மே 1, 2009 at 7:46 மு.பகல்
//புலிகள் தோற்று இலங்கை அரசு வென்றால் நாளை தமிழர்களுக்கு இலங்கையில் அரசியல் சட்ட பூர்வமான விடிவு கிடைக்குமோ என்று நினைக்கலாம். ஒரு ஈழத் தமிழர் இதற்கு வாய்ப்பே இல்லை, தனி ஈழம்தான் ஒரு தீர்வு, தனி ஈழம் கிடைக்க புலிகள்தான் ஒரே கதி என்று நினைப்பது அதிசயமா என்ன?//
ஈழத்தமிழருக்கு விடிவு கிடைக்குமா என்று அஞ்சுவது புலி சார்ந்த தமிழர்கள் மட்டுமே. அவர்கள் இவ்வளவு காலமும் ஈழத்தமிழர்களை அதிகாரம் செய்து வந்தார்கள். அந்த அதிகாரம் பறிபோய் விடுமே என்று அஞ்சுகிறார்கள். ஈழத்தமிழர்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அடிமைகள் போல நடத்தப்பட்டார்கள். ஒவ்வொரு ஈழத்தமிழனும் கனடாவில் அதற்காக மக்கள் இப்போது பழி வாங்குகிறார்கள். அங்கே மட்டுமா அப்படி? வெளிநாடுகளில் கூட எத்தனை ஈழத்தமிழர்களை மிரட்டி பணம் வாங்கினார்கள்? கனடாவில் 2000 டாலர். யு.கே.யில் 2000 பவுன். ஐரோப்பிய நாடுகளில் 2000 யூரோ. ஒவ்வொரு ஈழத்தமிழரும் கட்டாயம் கொடுக்க வேண்டும். காசு இல்லாவிட்டால் கடன் வாங்கி கட்ட சொன்னார்கள். இதை விட மாதம் மாதம் ஒரு தொகை கட்டி வர வேண்டும். வெளிநாடுகளில் பணம் கொடுக்காதவர்களின் குடும்பங்களை ஈழத்தில் பிடித்து வைத்து அடிமை வேலை வாங்கினார்கள். இது தான் ஈழத்தின் உண்மையான நிலைமை. அதனால் தான் ஈழத்தமிழர்கள் புலிகளின் தோல்வியை எதிர்பார்த்தார்கள்.
Human Rights Watch Repport:
LTTE Intimidation and Extortion in the Tamil Diaspora
http://www.hrw.org/en/reports/2006/03/14/funding-final-war-2
//முஸ்லிம் மக்களை விரட்டியது பற்றி எனக்கு தெரியவில்லை. விரட்டி இருந்தால் ethnic clensing-தான்.//
யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மக்களின் வெளியேற்றம் (ethnic cleansing) பற்றிய அறிக்கைகள் இதோ:
Ethnic cleansing in the Northern Province
http://tamilweek.com/EthnicCleansing_NorthernProvince_1030.html
Expulsion of Muslims from the Northern province by LTTE
http://en.wikipedia.org/wiki/Expulsion_of_Muslims_from_the_Northern_province_by_LTTE
இப்படித்தான் பல உண்மைகள் உங்கள் கண்களுக்கு மறைக்கப்படுகின்றன. அந்த அளவிற்கு தமிழ் நாட்டில் கூட புலி ஆதரவாளர்களின் ஆதிக்கம் இருப்பதும் ஒரு காரணம். அவர்கள் தம்மை பாதிக்கும் உண்மைகளை வெளி உலகம் தெரிய விடாமல் மறைக்கிறார்கள். பற்றி முறையிடுவதற்கு புலி ஆதரவாளர்களுக்கு எந்த தகுதியும் இல்லை. முதலில் அவர்கள் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும்.
//வேறு எப்படி சொல்வது? கொசோவோவில் நடந்தது genocide, இது இல்லை என்றால் எப்படி?//
கொசொசொவில் சில நாடுகள் தலையிடுவதற்காக அப்பாடிGenocide பிரச்சாரம் செய்யப்பட்டது. பிரச்சாரம் செய்த அளவிற்கு அங்கே Genocide நடக்கவில்லை. போராளிகளுக்கு ஆதரவளித்ததற்காக அல்பேனிய மக்கள் கொள்ளப்பட்டது உண்மை தான். ஆனால் செர்பியப் படைகள் ஒட்டுமொத்த அல்பேனியர்களையும் கொல்ல நினைக்கவில்லை. எல்லா நாடுகளிலும் யுத்தம் நடக்கும் போது பெருமளவு மக்கள் கொல்லப்படுவது வழமையாக நடப்பது. உலகத்தில் எங்காவது மக்கள் சாகாமல் யுத்தம் நடந்ததாக கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இன்றும் ஈழத்தில் கூட புலிகள் மக்களை வெளியேற விடாமல் வைத்திருக்கும் புதுக்குடியிருப்பில் இருக்கும் தமிழர்கள் மட்டும் தான் கொல்லப்படுகிறார்கள். யால்ப்பனாத்தில், வவுனியாவில், மட்டக்களப்பில், கொழும்பில் லட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களில் ஒருவர் கூட கொல்லப்படவில்லை. இந்த உண்மையை புலி ஆதரவாளர்கள் கூட மறுக்க முடியாது. உண்மையை சொன்னால் சிறி லங்கா அரசாங்கத்தின் கைக்கூலி என்று அவதூறு சொல்வார்கள். அவர்களுக்கு தேவை, தாங்கள் செய்யும் பிரச்சாரத்தை உலகம் முழுவதும் நம்ப வேண்டும்.
சிறி லங்கா தலைவர்கள் மீது அமெரிக்காவில் Genocide வழக்குப் போட்டதாக புலி ஆதரவாளர் ஒருவர் புலிகள் நடத்தும் தமிழ்நெட்டை வைத்து சொன்னார். இதெல்லாம் பிரச்சாரத்திற்காக செய்யப்படும் ஸ்டண்ட். நீங்கள் வேண்டுமானால் இருந்து பாருங்கள், புலி ஆதரவாளர்கள் கூட அந்த வழக்கை தொடர்ந்து நடத்த மாட்டார்கள். அதற்கு காரணம் அமெரிக்க நீதிமன்றம் வழக்கை விசாரிக்கப் போனால் புலிகள் செய்த சிங்கள, முஸ்லிம் Genocide பற்றிய விஷயம் எல்லாம் வெளியே வரும். புலித் தலைவர்கள் மீது Genocide வழக்குப் போட நிறையப்பேர் காத்திருக்கிறார்கள். புலிகள் அப்பாவி சிங்கள, முஸ்லிம் மக்களை இனப்படுகொலை செய்த விபரங்களை இங்கே வாசிக்கலாம்.
Anuradhapura: massacre of Sinhalese civilians
http://en.wikipedia.org/wiki/Anuradhapura_massacre
Kattankudy mosque: massacre of Muslim civilians
http://en.wikipedia.org/wiki/Kattankudy_mosque_massacre
மே 1, 2009 at 4:21 பிற்பகல்
ப்ரியா,
நீங்கள் மூன்று கருத்துகளை முன் வைக்கிறீர்கள்.
1. ஈழத் தமிழர்கள் புலிகள் தோற்பதையே விரும்புகிறார்கள்.
நான் புலிகளின் எதிர்ப்பாளன். புலிகள் ஃபாசிஸ்டுகள் என்று நினைப்பவன். நாளை புலிகள் ஆட்சிக்கு வந்தால் அது ஈழத் தமிழருக்கு நல்லது இல்லை என்று நினைப்பவன். (ரதிக்கும் எனக்கும் தகராறு வர இது போன்ற கருத்துகள்தான் காரணம்) ஆனால் என்னால் கூட இதை நம்ப முடியவில்லை. பெருவாரியான ஈழத் தமிழர்கள் புலிகள் பக்கம்தான் இருக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. அவர்களுக்கு வேறு கதி இல்லை! சிலர் புலிகளுக்கு எதிராக இருப்பார்கள் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அவர்கள் மைனாரிடியாகத்தான் இருப்பார்கள்.
2. புலிகள் பல அநியாயங்களை செய்கிறார்கள் என்பதற்கு பல சுட்டிகள் கொடுத்திருக்கிறீர்கள். நன்றி! நீங்கள் சொல்லும் பலவும் சரிதான் என்று நான் நினைக்கிறேன். இந்த உண்மைகள் என் கண்ணிலிருந்து மறைக்கப்படுவதால் ஒரு பயனும் இல்லை – ஏனென்றால் நான் சிரிசபாரத்னம் கொல்லப்பட்ட நாளிலிருந்தே புலிகள் எதிர்ப்பாளன்.
ஒரே ஒரு விஷயம் – எந்த போரிலும் அப்பாவிகள் இறப்பார்கள் என்று சொல்கிறீர்கள். உண்மைதான். எந்த விடுதலை/தீவிரவாத இயக்கமும் தனக்கு வேண்டிய பணத்தை சேகரிப்பதில், தனக்கு சாதகமான செய்திகளை மட்டுமே வெளிவிடுவதில் அத்து மீறும் என்பதும் உண்மைதானே? இலங்கை அரசை ப்ராக்டிகல் கண்களோடு பார்க்கும் நீங்கள் புலிகளை மட்டும் ஏன் அதே ப்ராக்டிகல் கண்ணோடு பார்க்க மாட்டேன் என்கிறீர்கள்?
3. // கொசொசொவில் சில நாடுகள் தலையிடுவதற்காக அப்பாடிGenocide பிரச்சாரம் செய்யப்பட்டது. பிரச்சாரம் செய்த அளவிற்கு அங்கே Genocide நடக்கவில்லை. //
என்ன சொல்ல வருகிறீர்கள்? பத்து லட்சம் பேர் சாகவில்லை, இரண்டு லட்சம் பேர்தான் என்ற ரேஞ்சில் ஏதோ சொல்கிறீர்கள் போல தெரிகிறது. இலங்கையில் நடப்பது போர் மட்டும் அல்ல – genocide-உம் கூடத்தான்.
மீண்டும் சொல்கிறேன். நான் புலிகளை எதிர்ப்பவன். ஆனால் இப்போது இலங்கையில் நடப்பது படுகொலை. அதை முதலில் தடுத்து நிறுத்த வேண்டும். நிறுத்த முடியாவிட்டாலும் இந்த படுகொலைக்கு உதவி செய்வது! – எவ்வளவு மோசம் என்று சொல்ல எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை – அதையாவது நிறுத்துங்கள்!
பிரியாவுக்கும் ரதிக்கும் ஏற்கனவே சில தகராறு நடந்திருக்கிறது போலிருக்கிறது. அது என்ன என்று நீங்கள் இருவரும்தான் தெளிவுபடுத்த வேண்டும். என்னை பொறுத்த வரையில் ப்ரியா வேறு பெயரில் ஏதோ முன்னாள் சொல்லி இருந்தால் – அது மட்டுமே இப்போது அவர் வைக்கும் வாதங்களை தவறாக்காது. அவற்றுக்கு என்னால் முடிந்த அளவு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.
மே 1, 2009 at 5:28 பிற்பகல்
RV
நான் உங்கள் பதிவுக்கு மட்டும் தான் பின்னூட்டமிட்டேன்.
நான் நினைக்கிறேன் இந்த ரதி என்பவருக்கு யாரைக் கண்டாலும் பயப்படும் நோய் இருக்கிறது போல.
மே 1, 2009 at 9:08 பிற்பகல்
RV நான் பார்த்த அளவில் நீங்கள் ஒரு வித்தியாசமான நபர். உங்களுக்கு நிறைய புரிந்து கொள்ளும் பக்குவம் உள்ளதால் கருத்துகளை பரிமாறிக் கொள்ள முடிகிறது. நீங்கள் சொல்லும் பல கருத்துக்களுடன் எனக்கும் உடன்பாடு உண்டு. காங்கிரஸ் வந்தால் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு ஒரு தீர்வு வரும் என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன். காங்கிரஸ் கட்சி ஈழத்தமிழரையும், புலிகளையும் வேறுபடுத்தி பார்க்கிறார்கள். அவர்கள் புலிகளை ஒதுக்கி விட்டு ஈழத்தமிழருக்கு ஒரு நல்ல தீர்வை எடுத்துக் கொடுக்க விரும்புகிறார்கள். இந்தக் காரணத்தால் தான் புலிகளின் ஆதரவாளர்கள் முரண்படுகிறார்கள். புலிகளின் ஆதரவாளருக்கு ஈழத் தமிழரைப் பற்றி எந்த அக்கறையும் இருப்பதாக தெரியவில்லை.
//பெருவாரியான ஈழத் தமிழர்கள் புலிகள் பக்கம்தான் இருக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. //
இணையத்தளங்களில் வரும் தமிழர்களை வைத்து நீங்கள் இதை எடை போட்டிருக்கலாம். இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் இன்டர்நெட் வசதியற்றவர்கள். வன்னியில் அல்லல் படும் தமிழருக்கு இணையத்தள வசதி இருக்கிறதா? இருந்தால் அவர்கள் தங்களது நிலைமையை சொல்ல வாய்ப்புக் கிடைத்திருக்கும். தமிழ் வானொலி, தொலைகாட்சி, இணையங்களில் வருபவர்கள் அநேகமானோர் வெளிநாடுகளில் வசதியாக வாழும் தமிழர்கள். இவர்களை தயவுசெய்து ஈழத்தமிழர்கள் என்று பிழையாக விளங்கிக் கொள்ள வேண்டாம். இவர்கள் ஒன்றில் கனடாத் தமிழர்கள், அல்லது யு.கே. தமிழர்கள். அவர்களது பிரச்சினை வேறு. ஈழத்தமிழர்களின் பிரச்சினை வேறு. வெளிநாட்டுத் தமிழர்கள் ஈழத் தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாவதை காட்டி தங்களது தமிழீழ கோரிக்கைக்கு ஆதரவு திரட்டுகிறார்கள். அவர்களுக்கு உண்மையிலேயே ஈழத்தமிழர் மீது கரிசனை இருக்கிறதா? சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் ஈழத்தமிழர்கள் சமாதானம் வரவேண்டும் என்று விரும்பினார்கள். ஏனெனில் யுத்தம் வந்தால் அவர்கள் தான் சாகப் போகிறார்கள். அப்போது வெளிநாட்டுத் தமிழர்கள் சமாதானம் வேண்டாம் யுத்தம் வேண்டும் என்று முழங்கினார்கள். ராஜபக்ஷே தேர்தலில் வெல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். ஏனென்றால் ராஜபக்ஷே வென்றால் யுத்தம் வரும் என்று எதிர்பார்த்தார்கள். அவர்கள் எதிர்பாத்த யுத்தம் வந்தது. ஆனால் இப்போது எதற்காக போர் நிறுத்தம் கேட்கிறார்கள்? காரணம் இது தான். புலிகள் இப்போது தோற்பதால் போர் நிறுத்தம் வர வேண்டும். வென்றிருந்தால் கேட்க மாட்டார்கள். அதே போலத்தான். தமிழ் இனப்படுகொலை தொடர்பான கூச்சல். கடந்த 25 வருடங்களாக 70000 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். அப்போது இனப்படுகொலை நடக்கிறது என்று இவர்கள் சொன்னார்களா? இல்லை. யுத்தம் நடக்கும் போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம். இழப்பு இல்லாமல் தமிழீழம் கிடைக்குமா என்று இதே புலி ஆதரவாளர்கள் அன்று சொன்னார்கள். இன்று தொப்பியை பிரட்டிப் போட்டு, ஐயோ இனப்படுகொலை நடக்கிறது காப்பாற்றுங்கள் என்று கத்துகிறார்கள். அமெரிக்கா, கனடா, எல்லாம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஒரு முடிவுக்கு வரும்படி வற்புறுத்தினார்கள். அப்போது இந்த வெளிநாட்டில் இருக்கும் புலி ஆதரவாளர்கள் எமக்கு யுத்தம் வேண்டும் என்று அடம்பிடித்தார்கள். அன்று அவர்களுக்கு யுத்தம் வந்தால் இனப்படுகொலை நடக்கும் என்று தெரியாதா? நன்றாகத் தெரியும். தெரிந்தாலும் புலிகள் எப்படியும் வெல்வார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தார்கள். ஆனால் அவர்களது எதிர்பார்ப்பு பிழைத்து விட்டது. இப்போது எப்பாடு பட்டாவது புலிகளை காப்பற்ற வேண்டும் என்று துடிக்கிறார்கள். இது தான் உண்மை. இவர்கள் எல்லாம் ஏதோ தமிழர்கள் மீது அக்கறைப் படுகிறார்கள் என்று நினைத்தால் நாம் தான் முட்டாள்கள். உண்மையில் ராஜபக்ஷே தமிழரை கொல்வதால் தான் இவர்களது அரசியல் பிழைப்பு நடக்கிறது. அதைக் காட்டி பிரச்சாரம் செய்து தமக்கு ஆதரவு திரட்டுகிறார்கள்.
எனது உறவுகள் வன்னியில் என்ன கஷ்டப்பட்டார்கள் என்று என்னிடம் சொல்லி இருக்கிறார்கள். ஒரு பக்கம் சிறி லங்கா இராணுவம் அடிக்கும் ஷெல் பட்டு சாக வேணும். அங்கிருந்து வெளியேற முயற்சி செய்தால் புலிகள் சுடுகிறார்கள். இந்த உண்மையை சொன்னால் இங்கே சில புலி ஆதரவாளர்கள் ராஜபக்ஷ ஆள் என்று அவதூறு சொல்வார்கள். இந்த விஷயத்தில் மட்டும் ஈழத்தில் இருக்கும் தமிழர்கள் பொய் சொல்கிறார்களாம். அதெல்லாம் உண்மை தான் என்று ஐ.நா. செயலாளர் சொன்னார். உடனே அவரும் பொய் சொல்கிறாராம். ஐ.நா.சபையும் சிறி லங்கா அரசாங்கத்தின் ஆள் என்று சொல்கிறார்கள். இதையெல்லாம் நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? அதெப்படி உலகத்தில் அத்தனை பேரும் பொய் சொல்கிறார்கள். புலி ஆதரவாளர்கள் மட்டும் உண்மை சொல்கிறார்கள்? இவர்களின் சொந்தக்காரர்கள் யாரும் வன்னியில் இல்லை. போரினால் பாதிக்கப்படவில்லை. எல்லோரும் வசதியாக யாழ்ப்பாணத்தில், கொழும்பில், வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். அதனால் இவர்களுக்கு இனப்படுகொலையில் பாதிக்கப்படும் ஈழத் தமிழர்கள் பற்றி எதுவுமே தெரியாது. எங்களுக்கு யுத்தம் வேண்டாம் நிம்மதியாக வாழ விடுங்கள் என்று ஈழத்தமிழர்கள் எப்போதோ சொல்லி விட்டார்கள். அது இவர்களில் காதில் விழவில்லை. ஈழத்தமிழர் பெயரைச் சொல்லி அரசியல் நடத்தும் வெளிநாட்டுத் தமிழருக்கு வேறு பிரச்சினை. தமிழீழம் கிடைக்கவில்லை என்ற பிரச்சினை. தமிழீழம் கிடைத்தால் தாங்கள் போய் ஆளலாம் என்று கனவு காண்கிறார்கள். இவர்கள் எல்லாம் மனிதர்களா? கொஞ்சமும் மனிதத் தன்மை இல்லாமல் நடப்பவர்கள் தான் ஈழத் தமிழருக்காக பாடுபடுவதாக நடிக்கிறார்கள்.
மே 2, 2009 at 4:11 மு.பகல்
ப்ரியா,
பாராட்டுகளுக்கும், மறுமொழிகளுக்கும் நன்றி!
// காங்கிரஸ் வந்தால் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு ஒரு தீர்வு வரும் என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன். //
எனக்கு அவ்வளவு தூரம் இன்னும் போக முடியவில்லை. காங்கிரஸ் வந்தால் ஒரு தீர்வு வர கொஞ்சூண்டு வாய்ப்பு இருக்குமோ என்று ஒரு நப்பாசை மட்டுமே.
// தமிழ் வானொலி, தொலைகாட்சி, இணையங்களில் வருபவர்கள் அநேகமானோர் வெளிநாடுகளில் வசதியாக வாழும் தமிழர்கள். இவர்களை தயவுசெய்து ஈழத்தமிழர்கள் என்று பிழையாக விளங்கிக் கொள்ள வேண்டாம். இவர்கள் ஒன்றில் கனடாத் தமிழர்கள், அல்லது யு.கே. தமிழர்கள். //
மன்னிக்கவும், நீங்கள் புலம் பெயர்ந்த மனிதர்களின் மனநிலையை சரியாக புரிந்து கொள்ளவில்லை. நான் அமெரிக்காவில் 15 வருஷமாக வாழ்கிறேன். ஒபாமாவைப் பற்றியும் ஜெனரல் மோட்டார்சை பற்றியும் பதிவு எழுதுவது அபூர்வம். என் வேர்கள் இன்னும் தமிழ் நாட்டில்தான் இருக்கின்றன. கனடாவில் போய் வாழ்ந்தால் அவர்கள் கனடிய தமிழர்கள் ஆகிவிடமாட்டார்கள். அடுத்த ஜெனரேஷன் கனடியத் தமிழர்களாக வளரும், ஆனால் இந்த ஜெனரேஷன் ஈழத் தமிழர்கள்தான்.
நீங்கள் புலிகளின் தவறுகளை பட்டியல் இடுகிறீர்கள். என் கண்ணில் இன்றைய பிரச்சினை அப்பாவி தமிழர்கள் ஆயிரம் ஆயிரமாக இறப்பதுதான். தமிழர்களை காப்பாற்ற முடிந்த வரை முயற்சி செய்யலாம் – குறைந்த பட்சம் அவர்களை கொள்ள உதவி செய்யாமல் இருக்க வேண்டும். அதனால் புலிகளும் பிழைத்துப் போகிறார்கள் என்றால் போகட்டும்.
மே 1, 2009 at 8:35 மு.பகல்
இலங்கையின் இனப்பிரச்சினை நீங்கள் நினைப்பது போல அவ்வளவு இலகுவாக தீர்க்க முடியாது. சிறி லங்கா அரசாங்கம் அல்லது சிங்களவர்கள், தமிழ் மக்களை கொன்று வருவதாகவும், அதனால் தமிழருக்கு தமிழீழம் கொடுக்க வேண்டும் என்று புலிகள் இயக்கமும் அதன் ஆதரவாளர்களும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதே நேரம் புலிகள் ஒரு பாவமும் செய்யாத அப்பாவி பசுக்கள் அல்ல. சிங்கள, முஸ்லிம் மக்களும் போரினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை புலி ஆதரவாளர்கள் கவனத்தில் எடுப்பதில்லை. அல்லது ஏதாவது நியாயம் கண்டுபிடித்து சொல்வார்கள். புலிகள் சிங்கள, முஸ்லிம் பொது மக்களை மட்டும் இனப்படுகொலை செய்யவில்லை. தமிழ் மக்களைக் கூட இனப்படுகொலை செய்திருக்கின்றனர். ஆரம்பத்தில் மற்ற விடுதலை இயக்கங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான உறுப்பினர்களை கொன்றிருக்கிறார்கள். இப்போது தமது கட்டுப்பாட்டை விட்டு வெளியேற நினைக்கும் அப்பாவி தமிழ் மக்களை கொலை செய்கிறார்கள். இதற்கெல்லாம் தகுந்த ஆதாரங்கள் இருக்கின்றன. செஞ்சிலுவை சங்கம், ஐ.நா. சபை கூட அந்த ஆதாரங்களை பார்த்திருக்கின்றன. புலிகளுக்கு சார்பான ஈழத்தமிழரும், தமிழ் நாட்டு தமிழரும் இந்த உண்மைகளை புறக்கணிக்கலாம். ஆனால் பிரச்சினையை தீர்க்க வரும் சர்வதேச சமூகம் புறக்கணிக்க முடியாது. புலிகளினால் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் நீதி கோரி போராட மாட்டார்களா? அவர்களுக்கு சர்வதேச சமூகம் என்ன பதிலை சொல்லப் போகிறது?
Record of LTTE Tamil Tiger atrocities through the years
http://www.spur.asn.au/ltteatrp.htm
மே 1, 2009 at 2:06 பிற்பகல்
Priya, nice name.
நீங்கள் வெறோரு தளத்தில் என்னை பல்வேறு பெயர்களில் சந்தித்திருக்கிறீர்கள். என் கருத்துக்கு எதிர்கருத்து சொல்ல இங்கும் பெண் பெயரில் வந்திருக்கிறீர்கள். வரும்போது புடவை கட்டி, கொண்டையையும் மாற்றியிருக்கிறீகள். ஆனால், ராஜபக்ஷேக்கள் உங்கள் கொண்டையில் சுற்றிவிட்ட பூ உங்களை யாரென்று காட்டிக்கொடுக்கிறது.
மே 1, 2009 at 12:38 பிற்பகல்
LTTE did every thing there is no objections. It is started in 1980′s. Tamils are loosing everything lifes and property all for nearly 60 years. what about that ? do u know one thing ? we can not list our loses because every day some one will die due to plan attack or shells. I have concern with the tactics used by ltte but there is no one to speak for us.
http://english.aljazeera.net/focus/blanktemplate/2008/11/2008111061193133.html
மே 1, 2009 at 12:45 பிற்பகல்
http://www.sbs.com.au/dateline/story/watch/id/600020/n/Hunting-the-Tigers
http://www.tvo.org/TVO/WebObjects/TVO.woa?video?TAWSP_Int_20090303_779445_0
http://english.aljazeera.net/programmes/general/2009/02/20092565012929122.html
மே 1, 2009 at 4:23 பிற்பகல்
நாயகன்,
மறுமொழிக்கும், சுட்டிகளுக்கும் நன்றி!
தமிழர்கள்தான் அழிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத விஷயம். புலிகள் உத்தமர்கள் அல்ல என்பது என் சொந்த கருத்து.
மே 1, 2009 at 1:55 பிற்பகல்
RV,
I feel honored, my friend. Thank you.
//ஆனால் ரதி நான் மதிக்கும் இணைய நண்பர்களில் ஒருவர்.//
இதற்கும் நன்றி.
மே 1, 2009 at 6:23 பிற்பகல்
RV , Priya சொன்னது உண்மைகளே.
மே 1, 2009 at 6:56 பிற்பகல்
பூனை,
இப்போது கேள்வி புலிகள் யோக்கியர்களா இல்லையா என்பது பற்றி இல்லை. பல அப்பாவி உயிர்கள் அழிவது தடுக்கப்பட வேண்டுமா இல்லையா என்பது பற்றி; இந்தியா இந்த படுகொலைக்கு துணை போகலாமா கூடாதா என்பது பற்றி. புலிகளுக்கும் இதில் லாபம் இருந்தால் இருந்துவிட்டு போகட்டும். ப்ரியாவுக்கு ஒரு நீளமான மறுமொழி எழுதி இருக்கிறேன், அதையும் படித்து பாருங்கள்.
மே 1, 2009 at 6:45 பிற்பகல்
பகிர்விற்கு நன்றி RV..
மே 2, 2009 at 1:21 மு.பகல்
//இப்போது கேள்வி புலிகள் யோக்கியர்களா இல்லையா என்பது பற்றி இல்லை. பல அப்பாவி உயிர்கள் அழிவது தடுக்கப்பட வேண்டுமா இல்லையா என்பது பற்றி; இந்தியா இந்த படுகொலைக்கு துணை போகலாமா கூடாதா என்பது பற்றி. புலிகளுக்கும் இதில் லாபம் இருந்தால் இருந்துவிட்டு போகட்டும். ப்ரியாவுக்கு ஒரு நீளமான மறுமொழி எழுதி இருக்கிறேன், அதையும் படித்து பாருங்கள்//
Thanks you got it.
.
Is there anyone have any solution for SL Tamil ? there is no point of proofing every thing by LTTE. They have done worst historical mistakes. That can not repair
They are trying to repair that
http://www.slmc.org.uk/honagrmnt1.htm
http://www.slmc.org.uk/thrmus1.htm
மே 2, 2009 at 4:25 மு.பகல்
நாயகன்,
புலிகள் மீது எனக்கு பிரமாத நம்பிக்கை எல்லாம் இல்லை. பார்ப்போம்.
மே 2, 2009 at 8:27 மு.பகல்
நான் நிறைய எழுத விரும்பவில்லை.கொஞ்ச நாட்களாக எழுதவதற்கும் மனத்தில் தெம்பு இல்லை.ஈழத்தமிழர் விஷயத்தில் எனக்கும் உங்களுக்கும் கருத்து வேறுபாடு உள்ளது.
சிலர் இங்கு ஈழத்தில் நடப்பது இனப்படுகொலை இல்லை என்ற மாதிரி எழுதி இருந்தார்கள் ஈழத்தில் நடப்பது இனப்படுகொலையே.
அது தொடங்கியது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு.
கடந்த பல ஆண்டுகளாக மாறி மாறி சிங்கள அரசுகள் அதைச் செய்துகொண்டு உள்ளன .திட்டமிட்டு அது தொடர்ந்து கொண்டிருக்கிறது.ஈழத்தமிழரின் போரட்டுத்துக்கான காரணமே அதுதான்
சில நூறு பேர் கொல்லப்படுவது கண்டிக்கப்பட வேண்டிய கொலைகள்
ஆனால் லட்சக்கணக்கில் ஒரு இனத்தை அதன் சந்ததியை கொல்வது ,அதன் வாழ்வாதாரத்தை ,அதன் தாய்மண்ணை சூறையாடுவது இனப்படுகொலைதான்.
இனப்படுகொலை மட்டுமல்ல இப்போதைய இலங்கை அரசு போர்க்குற்றங்கள் ,மனித உரிமை மீறல்கள் எல்லாவற்றையும் செய்து கொண்டு இருக்கிறது.
இத்தனைக்கும் ஆதரவு கொடுக்கும் காங்கிரஸ் அரசுக்கு தோல்வி வரவேண்டும் என்பதுதான் எனது ஆசை.
RV
உங்களோடு அரசியல் ரீதியாக நான் முரண்பட்டாலும் ,சினிமா ,தமிழ் இலக்கியம் பற்றிய உங்களது இடுகைகளுக்கு நான் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் எனக்கும் இந்த விஷயங்களில் ஆர்வம் உண்டு ,ஆனாலும் ஈழத்தில் நடக்கும் அவலங்களால் அவற்றில் கவனம் செலுத்த முடியவில்லை.
பழைய தமிழ் கலைஞர்கள், தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய உங்கள் பதிவுகளை சளைக்காமல் பொறுமையோடு பதிவு செய்வதற்கு பாராட்டுக்கள்
-வானதி
மே 2, 2009 at 10:27 பிற்பகல்
வானதி,
// இத்தனைக்கும் ஆதரவு கொடுக்கும் காங்கிரஸ் அரசுக்கு தோல்வி வரவேண்டும் என்பதுதான் எனது ஆசை. //
காங்கிரஸ் தோல்வி அடைய வேண்டும் என்கிறீர்கள், சரி. அடுத்து என்ன ஆகும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? பா.ஜ.க.வோ, கம்யூனிஸ்டுகளோ, இல்லை மாயாவதி போன்ற யாரோ வந்தால் நிலைமை நல்ல விதமாக மாறும் என்று நினைக்கிறீர்களா? இல்லை ஜெவின் “மன மாற்றம்” உண்மை என்று நம்புகிறீர்களா?
// பழைய தமிழ் கலைஞர்கள், தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய உங்கள் பதிவுகளை சளைக்காமல் பொறுமையோடு பதிவு செய்வதற்கு பாராட்டுக்கள். //
இந்த பாராட்டுகளில் பெரும் பகுதி சேதுராமனுக்கு உரியது.
மே 2, 2009 at 8:41 மு.பகல்
//மன்னிக்கவும், நீங்கள் புலம் பெயர்ந்த மனிதர்களின் மனநிலையை சரியாக புரிந்து கொள்ளவில்லை.//
மன்னிக்கவும் நான் சொன்னதை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு ஈழத்தில் என்ன நடக்கிறது என்பது பற்றிய அதிக அக்கறை இருக்கிறது என்பதை நானும் மறுக்கவில்லை. நான் சொல்ல வந்தது அவர்களது எதிர்பார்ப்புகளும் நலன்களும், ஈழத்தில் வாழும் தமிழரின் எதிர்பார்ப்புகளும் நலன்களும் ஒன்றல்ல என்பதைத் தான். இரண்டு பிரிவுக்கும் இரண்டு விதமான பிரச்சினைகள் இருக்கின்றன. வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் யாரும் யுத்தம் நடக்கும் இடத்தில் வாழவில்லை. அதனால் அவர்களுக்கு யுத்தம் எவ்வளவு கொடியது என்ற அனுபவம் இல்லை. அவர்கள் ஈழத்தில் தொடர்ந்து யுத்தம் நடக்க வேண்டும் என்று விரும்பினார்கள். அதற்கு பணம் கொடுத்தார்கள்.
ஆனால் ஈழத்தில் வாழும் மக்களின் பிரச்சினை வேறு. அவர்கள் 25 வருட யுத்தத்திற்குள் வாழ்பவர்கள். செத்துப் பிழைக்கிறார்கள். வீடிழந்தவர்கள், கையிலந்தவர்கள், காலிலந்தவர்கள், சாவை கண் முன்னாள் கண்டவர்கள். தங்களது உயிரும் ஒரு நாள் போகும் என்ற நிச்சயமற்ற நிலையில் வாழ்பவர்கள். அப்படியான நிலையில் நீங்கள் இருந்தால் என்ன நினைப்பீர்கள்? இந்த யுத்தம் எப்போது நிற்கும் என்று தானே எதிர்பார்ப்பீர்கள்? வெளிநாட்டில் இருக்கும் தமிழர்கள் அதற்கு மதிப்புக் கொடுக்கவில்லை. திரும்ப திரும்ப பணம் கொடுத்து யுத்தம் தொடர்ந்து நடக்க உதவினார்கள். ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கு அது விருப்பமில்லை. எப்படியோ சாவது அவர்களல்லவா? வெளிநாட்டில் இருந்து கொண்டு யுத்தத்தை ஆதரிப்பவர்கள் எல்லோரும் பாதுகாப்பாக வாழ்கிறார்கள். இந்த முரண்பாட்டை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். அதனால் தான் அவர்களை கனடாத் தமிழர்கள், யு.கே. தமிழர்கள் என்று பிரித்துப் பார்க்க சொன்னேன். இப்போது நடக்கும் போரில் புலிகள் தோற்பதற்கு முக்கிய காரணம் இந்திய அரசாங்கம் செய்யும் உதவி அல்ல. யுத்தத்திற்கு மக்கள் ஆதரவு இல்லாதது தான் முதல் காரணம். பேச்சுவார்த்தை காலத்தில் நிரந்தர சமாதானம் வர வேண்டும் என்று வன்னித் தமிழ் மக்கள் விரும்பினார்கள். அதற்கு புலிகளும், வெளிநாட்டு தமிழர்களும் மதிப்புக் கொடுக்கவில்லை. எப்போது திரும்ப யுத்தம் வரும் என்று காத்திருந்தார்கள். இராணுவத்தை தூண்டி விடுவதற்காக கண்ணி வெடி வைத்து விட்டு மக்கள் படை வைத்தது என்றார்கள். பஸ்சிற்கு குண்டு வைத்தார்கள். மாவிலாறு அணைக்கட்டை மூடி அரசாங்கத்தை போருக்குள் இழுத்து விட்டார்கள். அப்போது வெளிநாட்டில் வாழும் ஒரு தமிழனாவது போர் நிறுத்தம் வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்தானா? போர் நடந்தால் இனப்படுகொலை நடக்கும் என்று கவலைப் பட்டார்களா? அப்போது யாரும் இதைப் பற்றி பேசவில்லை என்று சொல்ல வராதீர்கள். சமாதான அமைப்புகளும், மனித உரிமை நிறுவனங்களும் போரை உடனடியாக நிறுத்தி சமாதானப் பேச்சுவார்த்தைக்கு போகும் படி சொன்னார்கள். சர்வதேச சமூகமும் அப்படி சொன்னது. அப்போது யாரும் அதற்கு மதிப்புக் கொடுக்கவில்லை. உங்களுக்கு போர் செய்ய விருப்பமென்றால் தாராளமாக செய்து கொள்ளுங்கள் என்று எல்லோரும் ஒதுங்கி விட்டார்கள். சர்வதேச சமூகம் உதவி செய்ய முன்வந்த போது தட்டிக் கழித்து விட்டு, இப்போது வா என்றால் வருவார்களா? உங்களது நிலைமையில் இருந்து யோசித்துப் பாருங்கள். உங்களது சொல்லுக்கு ஒரு நாளும் மதிப்புக் கொடுக்காத ஒருவர், தனக்கு ஆபத்து என்றதும் ஓடி வந்து உங்களிடம் உதவி கேட்டால் எப்படி இருக்கும்? இந்திய அரசாங்கம் என்றாலும், சர்வதேச சமூகம் என்றாலும் எல்லோரும் வெறுத்துப் போய் தான் ஒதுங்கி இருக்கிறார்கள். முதலில் ஈழத்தமிழர்க்காக பாடுபடுவதாக சொல்பவர்கள் தங்களது பிழையை உணர்ந்து கொள்ள வேண்டும். அதை விட்டு கண்டவனை எல்லாம் திட்டிக் கொண்டிருப்பதால் ஒன்றும் நடக்கப் போவதில்லை. இவர்கள் யாரும் தாங்கள் விட்ட தவறுகளை உணர்ந்ததாக தெரியவில்லை. இப்போதும் தாங்கள் செய்வதெல்லாம் சரி என்று வாதாடிக் கொண்டிருக்கிறார்கள்.
மே 2, 2009 at 10:39 பிற்பகல்
ப்ரியா,
வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இலங்கையிலிருந்து வெளியே சென்றவர்கள்தானே? போர் சூழ்நிலையிலிருந்து எப்படியோ தப்பி சென்றவர்கள்தானே? அவர்களது அப்பா, அம்மா, அண்ணன், தங்கை, உறவினர்கள், நண்பர்கள் எல்லாரும் என்ன ஒரேயடியாக குடி பெயர்ந்துவிட்டார்களா? இல்லை இந்த தமிழர்கள் எல்லாரும் 25 வருட யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னால் ஒரேயடியாக கூட்டு சேர்ந்து ஒன்றாக வெளி நாடுகளுக்கு சென்று செட்டில் ஆகிவிட்டார்களா?
போர் நிறுத்தம் வேண்டுமென்று ஏன் முன்னால் கேட்கவில்லை என்று கேள்வி கேட்கிறீர்கள். இன்று அப்பாவி தமிழர்கள் சாவது அதிகமாக இருக்கிறது, முன்னால் அவ்வளவு இல்லை. அதனால் போர் நிறுத்தம் முன்னால் அவ்வளவு அவசியமாக இல்லை. என்னங்க இது, இதை எல்லாம் கூட சொல்ல வேண்டுமா?
ப்ரியா, நீங்கள் புலிகளின் தவறுகளுக்காக இன்றைக்கு இலங்கை அரசு செய்வது சரி என்ற அர்த்தம் வருமாறு பேசுகிறீர்கள். புலிகள் நல்லவர்களா இல்லையா என்பது இப்போது இரண்டாம் பட்சம். இன்றைக்கு உயிர் சேதம் நிற்க வேண்டும். அதற்கு இந்திய அரசு செய்யும் உதவிகள் கட்டாயமாக நிறுத்தப்பட வேண்டும். அவ்வளவுதான் சொல்ல வருகிறேன். ரதிக்கு வேறு பல கருத்துகள் இருந்தபோதும், அவரும் இந்த பதிவில் ஏறக்குறைய அவ்வளவுதான் சொல்கிறார்.
புலிகள் பல அட்டூழியங்களை புரிந்திருக்கிறார்கள். இலங்கை அரசு அதை விட பல மடங்கு அதிக அட்டூழியங்களை இன்னும் பல வருஷங்களாக புரிந்திருக்கிறார்கள். அதை மறந்துவிடாதீர்கள்.
P.S. சத்திய கடதாசியின் பதிவு இன்னும் ஒரு புதிய பார்வையை கொடுக்கிறது. எத்தனை பேர் இந்த சுசீந்திரன் மாதிரி நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை.
மே 3, 2009 at 8:19 மு.பகல்
//அவர்களது அப்பா, அம்மா, அண்ணன், தங்கை, உறவினர்கள், நண்பர்கள் எல்லாரும் என்ன ஒரேயடியாக குடி பெயர்ந்துவிட்டார்களா? //
ஒரே நேரத்தில் குடிபெயராமல் இருக்கலாம். ஆனால் பிறகு வந்து சேர்ந்திருப்பார்கள். தாத்தா பாட்டி முதல் பேரன் பேத்தி வரை முழுக் குடும்பமும் கனடாவில் இருப்பதை நீங்கள் சாதரணமாக பார்க்கலாம். இன்றைக்கு வெளிநாடுகளில் புலிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்பவர்களின் சொந்தக்காரர்கள் யாரும் இப்போது வன்னியில் இல்லை. அப்படியே வன்னியில் சிக்கியிருந்தாலும் புலிகளுக்கு நிறையப் பணம் லஞ்சம் கொடுத்து இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்கு எடுத்து விட்டிருக்கிறார்கள். இப்போது வன்னிக்குள் அகப்பட்டு சாவது வசதியற்ற ஏழை வன்னி மக்கள். குடிபெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்பவர்கள் பெரும்பாலும் யாழ்ப்பாணத் தமிழர்கள். இவர்களது உறவினர்கள் இனப்படுகொலை நடைபெறாத யாழ்ப்பாணத்தில் எந்தப் பிரச்சினையுமின்றி வாழ்கிறார்கள்.
//இன்று அப்பாவி தமிழர்கள் சாவது அதிகமாக இருக்கிறது, முன்னால் அவ்வளவு இல்லை. அதனால் போர் நிறுத்தம் முன்னால் அவ்வளவு அவசியமாக இல்லை.//
அரசாங்கம் செய்வதை சரி என்று நான் சொல்லவில்லை. அரச இராணுவம் மக்கள் செத்தாலும் பரவாயில்லை என்று கண்மூடித்தனமாக தாக்குவதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. இராணுவம் பலமாக இருப்பது இப்போது நன்றாக தெரிகிறது. இராணுவத்துடன் மோத முடியாவிட்டால் எதற்காக அப்பாவி மக்களை தடுத்து வைத்துக் கொண்டு சண்டை பிடிக்க வேண்டும் என்று தான் கேட்கிறேன். இப்போது மக்களை விட்டு விட்டு இன்னொரு நாள் சண்டை பிடிக்க முடியாதா? ஒரு விடுதலை இயக்கம் அப்படித் தான் செய்ய வேண்டும். வன்னியில் என்ன நடக்கிறது என்று உங்களுக்கு சரியான தகவல்கள் வருவதில்லை. ஏனென்றால் உங்களது உறவுக்காரர் யாரும் அங்கே மாட்டிக் கொள்ளவில்லை. எனது உறவினர்கள் கொடுத்த தகல்களை வைத்து சொல்கிறேன். நீங்கள் நான் சொல்வதை நம்பாவிட்டால் அவர்களது தொலைபேசி இலக்கங்களை தருகிறேன். பேசிப்பாருங்கள். தயவுசெய்து மனித உயிர்களுடன் விளையாடுபவர்களுடன் நீங்களும் சேர்ந்து கொள்ளாதீர்கள் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். இராணுவம் மன்னார் முதல் கிளிநொச்சி வரை பிடித்த போது, அங்கே வாழ்ந்த மக்களை புலிகள் தங்களோடு வருமாறு கூடிச் சென்றார்கள். கடைசியாக புதுக்குடியிருப்பு என்ற இடத்தில் 20 கிலோமீட்டர் பரப்பளவான இடத்திற்குள் 2 லட்சம் மக்கள் சேர்ந்து விட்டார்கள். நீங்கள் ஒரு நிமிஷம் சிந்தித்து பாருங்கள். 20 கிலோமீட்டருக்குள் 2 லட்சம் பேர் இருக்க முடியுமா? ஒரு குறுகிய நிலப்பர்ரப்பிற்குள் மக்கள் எந்த அளவு நெருக்கிக் கொண்டு இருந்திருப்பார்கள்? இவ்வளவவிற்கும் அது ஒரு யுத்தம் நடக்கும் இடம். புலிகளும் இராணுவமும் பயங்கர யுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த இடத்திற்குள் இவ்வளவு மக்களும் இருந்தால் ஷெல் பட்டு இறப்பதற்கான சாத்தியம் அதிகம். அப்படித்தானே RV? அதிகளவு மக்கள் இறப்பார்கள் என்பது சிறு குழந்தைக்கு கூட தெரியும். அப்படி இருக்கக் கூடியதாக அந்த ஐ.ந.சபை முதல் உலக நாடுகள் அனைத்தும் கெஞ்சிக் கேட்டும் அந்த மக்களை வெளியேற விடாமல் தடுத்து வைத்திருக்கிறார்கள். அதனால் அங்கிருக்கும் மக்களுக்கு ஷெல் வீச்சில் அகப்பட்டு சாவதை தவிர வேறு வழியில்லை. 20 கிலோமீட்டர் திறந்த வெளிச் சிறைக்குள் அகப்பட்ட மக்கள் இராணுவம் அடிக்கும் ஷெல் வீச்சில் அகப்பட்டு சாகவேண்டும். மக்கள் ஷெல் விழும் இடத்தை விட்டு பாதுகாப்பான இடத்திற்கு போக நினைத்தால் புலிகள் சுட்டுக் கொள்கிறார்கள். சுதந்திரபுரம் என்ற இடத்தில் 200 தமிழ் பொது மக்களை புலிகள் சுட்டுக் கொன்றதாக அந்த இயக்கத்தின் முன்னாள் அரசியல் தலைவர் தயா மாஸ்டர் சொல்லியிருக்கிறார். வயோதிபர், பெண்கள், குழந்தைகள் என்றும் பாராமால் புலிகள் சுட்டுக் கொன்றதாக அங்கிருந்து தப்பி வந்தவர்கள் சொல்கிறார்கள். அப்படி நடக்கவில்லை அது பொய் என்று யாராவது யாராவது சொன்னால் அவர்கள் இதயமற்ற அரக்கர்கள் என்று தான் அர்த்தம். இந்த விஷயங்களை மறைத்துக் கொண்டு இனப்படுகொலை பற்றி பேசுபவர்கள் நேர்மையானவர்கள் அல்ல. அப்படிப்பட்ட துரோகிகளை ஈழத்தமிழர்கள் மன்னிக்கப் போவதில்லை. இதிலிருந்து உங்களுக்கு என்ன தெரிகிறது? அங்கே இனப்படுகொலை நடந்தால் அதிலே புலிகளுக்கு அரைவாசிப் பங்கு இருக்கிறது. தமிழ் நாட்டிலும் வெளிநாடுகளிலும் புலிகளுக்கு ஆதரவாக பேசுபவர்கள் இந்த உண்மையை மறைக்கிறார்கள். தப்ப வழி தெரியாமல் பொறிக்குள் அகப்படும் மக்களின் மரணத்தைக் காட்டி அங்கே இனப்படுகொலை நடக்கிறதாக பிரச்சாரம் செய்கிறார்கள். இவர்கள் ஒன்றும் தமிழ் மக்கள் மீதுள்ள கரிசனையால் அப்படி செய்யவில்லை. இவர்கள் செத்த பிணத்தை காட்டி பணம் சேர்க்கும் வியாபாரிகள். வன்னியில் அப்பாவி தமிழ் மக்கள் இறப்பதைக் காட்டி தங்கள் அரசியல் கொள்கைக்கு ஆதரவு சேர்க்கிறார்கள். ஐ.நா.சபை, இந்திய அரசு, சர்வதேச சமூகம் எல்லாம் இந்த நாடகத்தை நன்றாகவே அறிந்து வைத்திருக்கின்றன. அதனால் அவர்கள் மக்கள் யுத்தம் நடக்கும் இடத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்ற நிபந்தனையுடன் போர் நிறுத்தம் கேட்கிறார்கள். நீங்கள் சொல்வது போல புலிகளின் ஆதரவாளர்களும் போர் நிறுத்தம் கேட்கிறார்கள் தான். ஆனால் அவர்களின் நோக்கம் வேறு. புலிகள் ஆயுதம் வாங்கி பயிற்சி பெற்று மீண்டும் யுத்தம் செய்ய கால அவகாசம் தேவை. அதற்குத் தான் போர்நிறுத்தம். போர் நிறுத்தத்தை பயன்படுத்தி மக்களை யுத்தம் நடக்காத பாதுகாப்பான இடத்திற்கு அனுப்புவதற்கு அவர்கள் தயாராக இல்லை. இதிலிருந்தே தெரியவில்லையா? இவர்கள் தமிழ் மக்கள் மேல் அனுதாபம் கொண்டவர்களாக காட்டிக் கொள்வது வெறும் நடிப்பு என்று?
அது தான் போகட்டும். இப்போதும் கூட ஒன்றும் கெட்டு விடவில்லை. சமாதான தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைத்து அதற்கு பிற தமிழ் கட்சிகளினது ஆதரவை பெற்றால் நிரந்தர சமாதானம் கொண்டு வரலாம். மக்களுக்கும் நிம்மதி. உங்களுக்கு எங்களுக்கு எல்லோருக்கும் சந்தோஷம். ஆனால் அவ்வளவு தூரம் போக புலி ஆதரவாளர்கள் தயாராக இல்லை. அவர்கள் இப்போதும் தமிழீழம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். வன்னியில் இதுவரை செத்த தமிழ்மக்களின் தொகை போதாதாம். இன்னும் ஆயிரம் சாக வேண்டுமாம். ஒரே நாளில் பத்தாயிரம் செத்தால் நல்லதாம். ஐயா RV அவர்களே, இதனை சிறி லங்கா அரசாங்கம் சொல்லவில்லை. இப்படி புலி ஆதரவாளர்கள் பேசிக் கொள்கிறார்கள். இன்னும் இன்னும் ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் செத்தால் எதாவது ஒரு உலக நாடு கேட்குமாம். அமெரிக்காவும் பிரித்தானியாவும் சேர்ந்து சிறி லங்கா மீது குண்டு போட்டு தமிழீழம் எடுத்து தருமாம். ஈழத் தமிழர்களின் பிணங்களின் மீது கிடைக்கும் தமிழீழத்தை ஆளுவதற்கு வெளிநாட்டு தமிழர்கள் காத்திருக்கிறார்கள். நீங்கள் நம்பாவிட்டால், கனடாவிலும் லண்டனிலும் இருந்து ஒலிபரப்பாகும் தமிழ் வானொலிகளை கேட்டுப்பாருங்கள். அரசியல் கலந்துரையாடல்களில் கலந்து கொள்ளும் புலி ஆதரவாளர்கள் சொன்ன கருத்துகளை தான் இங்கே கூறியிருக்கிறேன். சொந்த சகோதரர்களை பலி கொடுத்து நாட்டை ஆள நினைப்பவர்களை எப்படி மனிதர்கள் என்று மதிப்புக் கொடுக்கலாம்?
மே 4, 2009 at 3:04 மு.பகல்
ப்ரியா,
உங்களுக்கு வன்னியில் வாழ்பவர்களோடு நேரடியாக தொடர்பு இருக்கிறதா? புலிகளால் அவதிப்படுபவர்களை யாராவது தெரியுமா? நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அப்படித்தான் இருக்கிறது. confirm செய்ய முடியுமா?
யாழ் தமிழர்களுக்கு போரின் பாதிப்பு இல்லை என்று நீங்கள் சொல்வது லாஜிகலாக இல்லை. ஆனால் இது பற்றி நாம் ஒரே முடிவுக்கு வருவோம் என்று எனக்கு தோன்றவில்லை. விட்டுவிடுவோம்.
// வன்னியில் இதுவரை செத்த தமிழ்மக்களின் தொகை போதாதாம். இன்னும் ஆயிரம் சாக வேண்டுமாம். ஒரே நாளில் பத்தாயிரம் செத்தால் நல்லதாம். ஐயா RV அவர்களே, இதனை சிறி லங்கா அரசாங்கம் சொல்லவில்லை. இப்படி புலி ஆதரவாளர்கள் பேசிக் கொள்கிறார்கள். //
யார் இந்த புலி ஆதரவாளர்கள்? இது பெரிய குற்றச்சாட்டு. ஏதாவது ஆதாரம் உண்டா?
// சொந்த சகோதரர்களை பலி கொடுத்து நாட்டை ஆள நினைப்பவர்களை எப்படி மனிதர்கள் என்று மதிப்புக் கொடுக்கலாம்? //
உண்மைதான். ஆனால் இலங்கை அரசை தேவர்கள் என்று சொல்லிவிட முடியுமா? மனிதர்கள் என்று சொல்லிவிட முடியுமா? அதையும் கொஞ்சம் யோசியுங்கள்.
மே 2, 2009 at 11:53 மு.பகல்
ஆதவன்: இலங்கைத் தமிழருக்காக தீக்குளிப்பு போன்ற உணர்ச்சிமய மான சுயபலிகளையும், இலக்கியவாதிகளும் சினிமாக் கலைஞர்களும் காட்டும் கூடுதல் ஈடுபாட்டையும் எப்படி பார்க்கிறீர்கள்?
சுசீந்திரன்: இவர்களுக்கு கிடைக்கும் தகவல்கள் ஒருதலை பட்சமானவை. ஆகவே அங்கு இனஅழிப்பு நடக்கிறதாக கருதறாங்க. ஆனால் என் பார்வையில் அங்கு இன அழிப்பு நடைபெறவில்லை. ஏன்னா, அரச கட்டுப்பாட்டில் வாழ் கிற தமிழர்களின் தொகை வன்னிக்குள் அடைபட்டிருக்கிற தமிழர்களை விட கூடுதலானது. அங்கு தமிழர்கள் பாது காப்பாக வாழுகிறார்கள். புலிகளின் பிரதேசங்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிற மக்கள் மீது இலங்கை அரசு தாக்குதல் நடத்துவது உண்மை. ஆனால் அதை இன அழிப்பாக சொல்ல முடியாது. மிகைப்படுத்திச் சொல்லி- மிகைப் படுத்தலையே உண்மை என்று சர்வதேசத்தை நம்பவைக்க லாம் என்ற நப்பாசை எந்த லாபத்தையும் கவன ஈர்ப்பையும் ஏற்படுத்தப்போவதில்லை. மற்றது, மனிதாபிமான உணர் வோடு இருக்கிற கலைஞர்கள் அல்லது இலக்கியவாதிகள், நண்பர்கள் மிகவும் மேலோட்டமான தகவல்களை மட்டும் பெற்றுக்கொண்டு, ஒரு குற்றவுணர்வில் இலங்கை அரசாங் கத்துக்கு எதிராக செயல்படனும்கிற நிலைமைக்குத் தள்ளப் படறாங்க. இலங்கை அரசாங்கத்தின் தாக்குதலை கண்டிக் கிற அதேநேரம் புலிகள் மீதான விமர்சனத்தையும் தமிழர்கள் மீது யார் எந்தவகையில் தாக்குதல் நடத்தினாலும் அதற்கு எதிராக கிளர்ந்து எழணும்கிற உணர்வு இங்கு இருக்குமென்றால் அதை முற்போக்கானதாகத்தான் பார்க்க வேண்டும். புலிகள் அங்கே தமிழர்களை எவ்வாறு நடத்து கிறார்கள்- துப்பாக்கிகளுக்கு இரையாக்கிக் கொண்டிருக் கிறார்கள் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை என் போன்ற ஆட்களுக்கு இருப்பதாக நம்புகிறேன்.
http://www.satiyakadatasi.com/2009/05/01/%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9a%e0%af%81%e0%ae%9a%e0%af%80%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d/
மே 2, 2009 at 12:25 பிற்பகல்
ஆதவன்: புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் மக்களின் நிலை?
சுசீந்திரன்: நான் அங்கிருந்து இடம்பெயர்ந்து வந்த பலரிடம் நேரடியாவே பேசியிருக்கிறேன். இராணுவம் வந்து எங்களை எப்பொழுது காப்பாற்றும் என்ற மனோ நிலையில்தான் மக்கள் இருக்கின்றனர். உயிரோடு எப்படித் தப்பிச் செல்வது என்று எண்ணியபடிதான் அங்கு ஒவ் வொரு மனிதனும் தவிச்சிக்கிட்டு இருக்கிறான். இளம் பிராயத்தினர் அங்கிருந்து தப்ப முயற்சிக்கும்போது தயவு, தாட்சண்யம், மனிதாமாபிமானம், இரக்கம் எதுவுமின்றி அவர்களின் காலையோ கையையோ முறித்து ஊனப்படுத் தியேனும் தப்பமுடியாத படிக்குத் தடுத்துவைக்கிற நிலை யில்தான் இன்று புலிகள் மனிதம்கெட்டு இருக்கின்றனர். அங்கே திறந்தவெளியில் சிறைப்பட்டிருக்கக்கூடிய பொது மக்கள் மீது கருணை எதுவும் அவங்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை.
இன்னொன்று கேள்விப்பட்டேன். ஒரு பிரதேசத்திலிருந்து புலிகள் அடுத்த பிரதேசத்துக்கு பின்வாங்கும்போது ‘இது வரை இடம்பெயர்ந்தது போதும்; நாங்கள் உங்களுடன் தொடர்ந்து வரவில்லை; பதுங்கு குழிக்குள்ளேயே நாங்கள் இருந்துவிடுகிறோம்’ என்று புலிகளுடன் சேர்ந்துபோக மக்கள் மறுப்பார்களாம். பதுங்கு குழிகளுக்குள் மக்கள் இருப்பதற்குக் காரணமே தப்பிச்சு ஓடுவதற்குதான் என்று புலிகள் அறிவார்கள். ‘உங்கள் பதுங்குகுழிகளைச் சுற்றி நிலக்கண்ணிவெடி புதைத்து வைத்திருக்கின்றோம், இயலு மென்றால் தப்பித்துப் பாருங்கள்’ என்று புலிகள் சொல்லி விடுவதுடன் அப்படியே செய்தும் விடுகின்றனர். இப்படி அகப்பட்டுத் தவிக்கின்ற சுமார் ஒன்றரை லட்சம் மக்களை மீட்டு எடுப்பதற்கான வழிவகைதான் இன்று எங்களுக்கு விடப்பட்டிருக்கிற மிகப்பெரிய சவால். புலிகளால் அணி திரட்டப்பட்ட நிறையப் பிள்ளைகள் உடனடியாக, மிகக் குறுகியகாலப் பயிற்சியே வழங்கப்பட்டிருப்பதால் துப்பாக்கிக்கு இரையாகிற போக்குதான் அங்கு இருக்கிறது என்றறிகிறேன். ஒரு பெரிய சமூகமே மனதளவிலும் உடலளவிலும் ஊனமுற்ற சமூகமாக மாறிவிட்ட இந்த அவலத்தை எப்படி சகித்துக் கொள்வது?
ஆதவன்: ஆமி காப்பாத்தும்னு சனங்க எதிர்பார்ப்பதாக சொல்றீங் களே, ஆமி மேல இந்த நம்பிக்கை எந்த அடிப்படையில் வருது?
சுசீந்திரன்: உயிர் வாழத்தானே மக்கள் விரும்புவார்கள்? புலிகளின் கட்டுப்பாட்டை மீறி, வன்னிப்பிரதேசத்தை விட்டு வெளியேறும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்க வில்லை. வாய்ப்பு இருந்திருந்தால் நிச்சயமாக வெளியேறி யிருப்பார்கள். புலிகள் பொதுமக்களை, பிள்ளைகளை சாகக் கொடுக்கப் போகிறார்கள், பலியாக்கப் போகிறார்கள், இதிலிருந்து நாம் தப்பிவிடவேண்டும் என்று மக்களுக்குத் தெரிகிறது. அடிப்படைத் தேவைகளான உணவு, மருந்து களை வன்னிப்பிரதேசத்திற்கு வழங்காமல் தொடர்ந்து இலங்கை அரசாங்கம் தடை செய்துள்ளது. ஆக இப்படி அவர்கள் எல்லாவகை நெருக்குவாரங்களையும் நிர்ப்பந்தங் களையும் கடந்த ஐந்து, பத்து வருடங்களாகச் சுமக்கிறவர் கள்தான். மேலும் மொத்த வன்னி நிலப்பரப்பிலிருந்து பலமுறை உட்பிரதேசங்களுக்குள் ளேயே இடம்பெயர்ந்த வர்கள். அதைவிட 2007 பிப்ரவரியில் தொடங்கிய சண்டை யில் அவர்கள் ஒரு பிரதேசத்திலிருந்து இன்னொரு பிரதேசத் திற்கு கொண்டு வரப்பட்டிருப்பார்கள். பலருக்கு கடந்த பத்து வருசமா இடப்பெயர்விலேயே வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. மரங்களுக்கு கீழ் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளார்கள். இதுவரைக்கும் புலிகள் தங்களை காப்பாத்தினார்கள் என்பதைவிட ஆட்டு மந்தைகள் மாதிரி மேய்த்து கொண்டு வந்திருக்கிறார்கள் என்பது அவர்களுக் குத்தான் தெரியும். அதனால்தான் பதுங்குகுழிக்குள் இருந்து விட்டால் இராணுவம் இந்தப் பிரதேசத்தை கைப்பற்றும், பின் எங்களைக் காப்பாற்றும் என்று நம்புகிறார்கள்.
http://www.satiyakadatasi.com/2009/05/01/%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9a%e0%af%81%e0%ae%9a%e0%af%80%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d/
மே 3, 2009 at 9:22 மு.பகல்
Rv
பதிலுக்கு நன்றி.
இன்று பெரும்பாலான ஆசிய நாடுகளில் ஜனநாயகம் என்பது மேற்கு நாடுகளில் உள்ள மாதிரி முதிர்ச்சி அடையாதது என்பதும் தமது அதிருப்தியைக் காட்டிக் கொள்வதான ஒரு தளம் மட்டுமே என்பதும் பலருக்கும் புரிந்த உண்மை.அப்படியான சூழ்நிலையில் காங்கிரஸ் ஈழத்தமிழர் விவகாரத்தில் செய்த தவறுக்கு மக்கள் தமது அதிருப்தியை தமது வாக்குச் சீட்டுக்களால்மட்டுமே காட்ட முடியும்.BJP கட்சியின் மதவாதக் கொள்கையை நான் ஆதரிக்கவில்லை.காங்கிரசிடம் மதசார்பின்மை என்பதைத் தவிர்ந்த வேறு ஒரு உருப்படியான கொள்கையும் இப்போதைக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
அணுகுண்டு ஒப்பந்த விஷயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களை பணம் கொடுத்து வாங்கியதின்மூலம் ஜனநாயகம் இந்தியாவில் எப்படி கேலிக்கூத்தாகிக் கொண்டிருக்கிறது என்பதை காங்கிரஸ் எல்லோருக்கும் தெரியப் படுத்தியது.
இருக்கிற வரையறைக்குள் யதார்த்த பூர்வமாகச் செய்யக் கூடியது காங்கிரசுக்கு எதிராக வாக்களிப்பதுதான்.
ஜெயலலிதாவின் ஈழ ஆதருவு தேர்தல் வாக்குகளுக்காகத்தான் ,சந்தேகம் இல்லை.
அவரின் ஆணவக் குணமும் ,அதிரடி நடவடிக்கைகளுக்கும் விரும்பத்தகுந்தவை இல்லைத்தான் ,அதிலும் ஆண் மக்களை தனது காலில் மேல் விழ வைக்கும் செயல்பாடு முழுத் தமிழகத்துக்குமே அவமானம் ( இதற்கு உளவியல் ரீதியான ஒரு விளக்கம் இருப்பதாகவும் ,ஆணாதிக்கத்தில் அவருக்கு இருக்கும் வெறுப்புத்தான் இப்படி வெளிப்படுகின்றது என்றும் ,பெண்களை அவர் இப்படி அவமதிப்பது இல்லை என்றும் சிலர் சொல்கிறார்கள்–உண்மை ஆண்டவனுக்கே வெளிச்சம் )
அப்படி பல குறைபாடுகள் அவருக்கு இருந்தாலும் அவர் மிகுந்த துணிச்சல் கொண்டவர் என்பதும் ,தான் நினைத்ததைச் சாதிப்பதில் விடாப் பிடியாக நின்று செயல் படுபவர் என்பதும் உண்மை,இந்த விஷயத்தில் எதிரும் புதிருமாக இருந்தாலும் ஜெயலலிதாவும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும் ஒரே மாதிரியான குணாதிசயம் கொண்டவர்கள்.
அத்துடன் தமிழகத்தின் இரு பெரிய கட்சிகளில் ஒன்றின் தலைவராகிய அவர் ஈழ விஷயத்தை மேடையில் எடுத்து சொன்னதின் மூலம் அதை பல கோடி மக்களுக்கு கொண்டு சென்று அதற்கு ஒரு அங்கீகாரம் கொடுத்திருக்கிறார்.
-வானதி
மே 3, 2009 at 11:03 மு.பகல்
வானதி நீங்கள் புலிகள் சார்பான ஊடகங்கள் கொடுத்த மயக்கத்தில் இருக்கிறீர்கள். ஜெயலலிதா இப்போது சொல்வது போல செய்யப்போவதில்லை. அவரால் மத்திய அரசாங்கத்தின் கொள்கையை மாற்ற முடியாது. பா.ஜ.க. அரசு காலத்தில் தான் இந்தியா இலங்கை அரசுக்கு ஆயுதம் கொடுக்க தொடங்கியது. புலிகள் யாழ்ப்பாணத்தை கைப்பற்ற முயன்ற போது அதை தடுப்பதற்கு இந்தியா இலங்கை அரசுக்கு முழு ஆதரவை வழங்கியது. அதை எல்லாம் நீங்கள் இப்போது மறந்து விட்டீர்கள். இந்திய மத்திய அரசின் கொள்கை எப்போதும் கிட்டத்தட்ட காங்கிரஸ் கொள்கையுடன் ஒத்துப் போகும். அதனால் தான் பா.ஜ.க. வருவதை விட காங்கிரஸ் வருதலால் ஈழத்தமிழருக்கு நன்மை அதிகம். பா.ஜ.க. வை விட காங்கிரஸ் கட்சிக்கு ஈழத் தமிழர் நலனில் அக்கறை அதிகம். காங்கிரஸ் புலிகளுக்கு ஆதரவாக இருக்கப் போவதில்லை. அது தெரிந்த விடயம். வானதி, முதலில் நீங்கள் புலித் தமிழர் ஆதரவா, அல்லது ஈழத் தமிழர் ஆதரவா என்று நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். இரண்டுமே ஒன்றல்ல. காங்கிரஸ் கட்சியும், இந்திய மத்திய அரசும் ஈழத்தமிழருக்கு ஆதரவாக தீர்வை கொண்டு வர முயற்சி செய்வார்கள். ஆனால் அது புலிகளுக்கு சாதகமாக இருக்கப் போவதில்லை. அதனால் உங்களுக்கு என்ன பிரச்சினை?
மே 4, 2009 at 3:32 மு.பகல்
வானதி,
இது ஜெவின் மன மாற்றத்தை நீங்கள் எவ்வளவு தூரம் நம்புகிறீர்கள் என்பதை பொறுத்தது. எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை. ஜெ நான் நினைப்பதை தவறாக்கினால் சந்தோஷம்தான்.
மே 3, 2009 at 3:25 பிற்பகல்
RV,
நான் இன்னொரு விடயத்தை என்வரையில் தெளிவு படுத்தலாம் என்று நினைக்கிறேன். நான் எந்தவொரு இந்திய் குடிமகனுக்கோ அல்லது இந்திய அரசுக்கோ எதிரான கருத்தை பதிவு செய்யவில்லை. அப்படி ஒரு கருத்து எனக்கு இருந்தால் நான் தயங்காமல் பதிவு செய்வேன்.
என்னுடைய கருத்து ஈழப்பிரச்சனையில் இந்தியாவின் தலையீடு பற்றியது மட்டுமே. ஈழப்பிரச்சனை ஆரம்பித்த காலங்களிலிருந்தே இந்தியாவிற்கும் ஈழப்பிரச்சனைக்கும் தவிர்க்கமுடியாத அளவுக்கு ஒரு தொடர்பு இருந்து கொண்டேதான் இருக்கிறது,
காரணம் மலையகத்தமிழர்கள், இந்திய மீனவர்கள், கச்சதீவு மற்றும் இந்திய பிராந்திய மற்றும் தேசிய பாதுகாப்பு வரை. இவையெல்லாமே ஈழ்ப்பிரச்சனையின் வாலாக இந்தியாவை நோக்கி இன்றுவரை நீண்டு கொண்டிதானிருக்கிறது.
எனவே, இந்தியா விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஈழப்பிரச்சனையில் அதன் தலையீடு தவிர்க்கமுடியாததாகிறது. ஆனால், அந்த தலையீடு என்பது தற்போதைய சூழலில் ஈழத்தமிழர்களுக்கு ஏதாவது நனமை பயக்குமா இல்லையா என்பது மட்டுமே என் கவலை. எனக்கும் உங்களுக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால், ஈழத்தில் இனப்படுகொலை நடக்கிறது. அதற்கு இந்தியா துணைபோகக்கூடாது என்பதில் நாங்கள் இருவரும் ஒத்த கருத்தை கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன். அதை நீங்களும் உங்கள் பதில்களில் விளக்கியிருக்கிறீர்கள். நன்றி.
இந்தியா என்ற மிகப்பெரிய குடியரசு நாடு ஈழத்தமிழர்களின் நலன்களை மட்டும் கருத்தில் கொண்டு அதன் கொள்கைகளையோ அல்லது பிராந்திய நலன்களையோ குறுக்கிக்கொள்ள முடியாது என்பது என் அறிவுக்கு தெரியும். அந்த வகையில் நீங்கள், இந்தியர்கள், கொடுத்து வைத்தவர்கள். எந்த ஆட்சியென்றாலும் அல்லது கட்சியென்றாலும் இந்தியாவையும் அதை குடிமக்களையும் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் அனுமதிப்பதில்லை. ஆனால், என் மக்களை, என் இனத்தை காப்பாற்றுங்கள் என்று மடிப்பிச்சை கேட்கிறோம். அது இந்திய ஆட்சியாளர்களின் காதுகளில் விழுந்தும் செவிடாய் இருப்பது தான் இந்தியா பற்றிய என்/எங்கள் வேதனையின் உச்சம்.
இந்தியாவிற்கு சீனா, பாகிஸ்தான் என்று இரு வகையான தலையிடிகள் இருந்தாலும், இந்தியா இன்னும் ஆக்கபூர்வமான வழிகளில் என் மக்களின் சாவைத்தடுக்கலாம் என்று நம்புகிறேன். என் பார்வையில், ஈழப்பிரச்சனை தீர்ந்து ஈழத்தமிழன் முற்றுமுழுதாக இலங்கையில் அடிமைப்பட்டாலும், இந்தியாவிற்கு சீனா, பாகிஸ்தான் என்ற தலைவலிகள் தீரப்ப்போவதில்லை.
சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் தங்கள் சொந்த மக்களின் அடிப்படை உரிமைகள் பற்றியே அதிகம் கவலைப்படாதவர்கள். எம்மினம் பற்றியா அக்கறைப்படுவார்கள்? Ban Ki Moon என்ற UN செயலாளர் இருக்கும் வரை சீனா எந்த நாட்டின் கருத்துக்கும் அழுத்தத்திற்கும் அடிபணியப்போவதில்லை. பாகிஸ்தான் பற்றி சொல்லவே வேண்டாம். அமெரிக்கா மற்றும் இந்தியாவோடு முறுகிக்கொண்டிருக்கிறார்கள். அந்த மறுகல் நிலை முற்றினால் அவர்களுக்கு ஒர் களம்/தளம் வேண்டும், அது இலங்கை.
இந்த முக்கோண அரசியலில் இடையில் அல்லல் படுவது நாங்கள், ஈழத்தமிழர்கள். தற்போது, இந்த பூகோள, பிராந்திய மற்றும் அரசியல் மையம் தான் ஒரு பிரச்சனையென்றால், ஈழத்தமிழனுக்கு விடிவே இல்லை. ஆனால், தமிழ்நாட்டிலிருக்கும் தமிழர்களுக்காகவாவது இந்தியா ஏதாவது ஆக்கபூர்வ முயற்சி எடுக்கலாம் என் இனத்தின் சாவைத்தடுக்கலாம் என்று நினைக்கிறேன்.
மே 4, 2009 at 3:36 மு.பகல்
// இந்தியா இன்னும் ஆக்கபூர்வமான வழிகளில் என் மக்களின் சாவைத்தடுக்கலாம் என்று நம்புகிறேன். //
ரதி,
இப்படி நீங்கள் சொல்வது சரிதான். ராஜீவ் கொலை நடந்திராவிட்டால் இது இன்னும் சுலபமாக இருந்திருக்கும். சரி அதைப் பற்றி இன்னும் பேசிக் கொண்டிருப்பதில் என்ன பயன்? என் எண்ணங்களை இன்னும் விபரமாக ஒரு பதிவில் எழுதுகிறேன்.
மே 4, 2009 at 6:53 மு.பகல்
//புலிகளால் அவதிப்படுபவர்களை யாராவது தெரியுமா? நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அப்படித்தான் இருக்கிறது. confirm செய்ய முடியுமா?//
A young mother is injured and her three month old baby killed by shell fragments as she breastfeeds the child in the government declared no fire zone.
Parents hide their children in roughly dug bunkers to escape LTTE press gangs who comb the no-fire zone for conscripts.
A woman loses her husband to sniper fire and the toddler he was carrying too drowns when they attempt to wade across a lagoon to escape the no-fire zone.
A father is shot in the head by LTTE members as he attempted to flee with his family.
We seldom receive independent accounts of current developments in the Vanni. The information provided in this bulletin is an exception. Given below are some cross-checked facts drawn from persons who recently escaped from the Vanni, which give the lie to the Government’s claims that it does not fire on the civilians and show clearly the LTTE’s cynical use of civilians as bargaining chips. They also speak to the impotence of the international community and India to stop the carnage. What we have learned:
· Shells fall in the no-fire zone almost every day and take a heavy toll on civilians. Persons in regular touch with those who have escaped confirm that an average of 15 to 20 people die each day; either killed by shells or shot by the LTTE attempting to drive fear into would-be escapees.
· The military is presently stationed some distance away from the lagoon. Thus they are able to spot movement – including movements of LTTE vehicles within the no-fire zone. Typically they rain a few shells soon after spotting a militant vehicle moving within the zone.
· Persons who escaped on 8th April said that about the same day, the Army announced over speakers tied high up on palmyrah trees instructing the public to come across the lagoon into their area immediately, as they were going to advance into the no-fire zone. Soon afterwards, they fired a large shell right into the midst of the public, apparently to goad them into complying. This reportedly caused heavy casualties among the public.
· Many escapees from the no-fire zone testified to a heavy recruitment drive by the LTTE. The minimum age for conscription is now 14. There is no ceiling set on the maximum number that could be taken from one family.
· The LTTE has recently started the practice of sending out teams of 6 cadres with instructions for each team to return with 30 conscripts. If they fail they are reportedly subject to heavy and often lethal punishment.
6.3.2 Patchai-Mattai Punishment for wanting to leave: In the early days after the declaration of the no fire zone along the Mulaitivu coast line, the civilian population was centred on Puthumathalan at the northern end of the NFZ. On one of those afternoons a crowd of around five thousand people had banded together and told the militants who had prevented them that they were going, come what may. After long attempts at “persuasion” they were told to go by a particular route as a group of trigger happy troops were hanging around very close-by along the other possible route. On this route, however, a huge team of militants with fresh palmyrah branches- the dreaded “patchai mattai” in Tamil, sticks and guns were positioned and waiting. The civilians were given very cruel treatment and chased back.
6.3.4 Killed for Desertion!: On 5th March 2009, a group of people had arranged for a boatman to take them to Jaffna from the present NFZ. The boat started off without the LTTE apprehending them. Soon after it started moving, a very bright light was flashed into the boat. An LTTE gun man picked out Mahalingam Prakash Mohan and shot him dead. The boat then proceeded to Jaffna. Prakash Mohan has been in the jewellery trade and was close to the LTTE. Originally from Kacchai Road Chavakachcheri, he had moved to Killinochchi in the wake of the Jaffna Exodus in early 1996.
All the thousands who are daring the crossing from the NFZ are doing so facing the terrible risks described above. Many have had to walk over dead bodies both in the waters and in the open fields. Danger could come from both sniper fire from the military, mistaking the civilians for the militants, as well as from the militants angry at the “betrayal.” The over-whelming reports from IDPs indicate that more people attempting to flee have been killed by the LTTE than by army snipers.
http://www.uthr.org/bulletins/Bul47.htm#_Toc227718226
//யாழ் தமிழர்களுக்கு போரின் பாதிப்பு இல்லை என்று நீங்கள் சொல்வது லாஜிகலாக இல்லை.//
நீங்கள் யாழ்ப்பாணம் போய் அங்குள்ள நிலைமைகளை பார்த்திருக்கிறீர்களா? எனது உறவினர்கள் சொல்வதை வைத்து நான் பேசுகிறேன். தமிழ் ஊடகங்கள் செய்யும் பிரச்சாரங்களை நீங்கள் அப்பாவித்தனமாக நம்புகின்றீர்கள். ஒரு சில இராணுவ கெடுபிடி, சோதனையை தவிர யாழ்ப்பாணம் அமைதியாக இருக்கிறது. சில அரசியல் கொலைகள் நடைபெறுகின்றது என்பதை மறுக்கவில்லை. கொல்லப்படுபவர் ஒன்றில் புலிகளுக்கு ஆதரவாக வேலை செய்திருப்பார். அல்லது எதிராக வேலை செய்திருப்பார். நீங்கள் நினைப்பது போல, வெளிநாடுகள் பிரச்சாரம் செய்யப்படுவதைப் போல அங்கே நிலமை பயங்கரமாக இல்லை. அங்கே யுத்தம் எதுவும் நடக்கவில்லை. வன்னியில் மட்டும் தான் அதுவும் 10 கிலோமீட்டருக்குள் தான் தற்போது யுத்தம் நடக்கிறது. இந்த 10 கிலோமீட்டருக்குள் நடக்கும் சம்பவங்கள் உலகம் முழுவதும் பூதாகரமாக காட்டப்படுகின்றன.
//யார் இந்த புலி ஆதரவாளர்கள்? இது பெரிய குற்றச்சாட்டு. ஏதாவது ஆதாரம் உண்டா?//
லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் ஐ.பி.சி. தமிழ் என்ற புலிகளால் நடத்தப்படும் வானொலியை கேட்டுப்பாருங்கள். அதிலே அரசியல் கலந்துரையாடலில் வருபவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேளுங்கள். சில பேர் நாகரிக உலகம் வெட்கித் தலைகுனியும் அளவிற்கு பேசுகிறார்கள். சில பேர் பச்சை இனவாதம் பேசுகின்றனர்.
http://www.ibctamil.net/
//உண்மைதான். ஆனால் இலங்கை அரசை தேவர்கள் என்று சொல்லிவிட முடியுமா? மனிதர்கள் என்று சொல்லிவிட முடியுமா? அதையும் கொஞ்சம் யோசியுங்கள்.//
உண்மை தான். அதை யாரும் மறுக்கவில்லை. வன்னியில் தமிழ் மக்கள் இப்போது ஒரு முடிவுக்கு வந்து விட்டார்கள். இது அவர்களுக்கு வாழ்வா சாவா போராட்டம். புலிகளின் கொடுமையை விட இராணுவத்தின் கொடுமை பரவாயில்லை என்று நினைக்கிறார்கள். அதனால் தான் 2 லட்சம் மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தை விட்டு இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் வந்தார்கள். புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் பங்கர்க்குள் வாழ வேண்டும். மேலே வந்தால் ஷெல் பட்டு சாக வேண்டும். பிள்ளைகளை கட்டாயமாக பிடித்து சென்று இரண்டு நாள் பயிற்சியுடன் இராணுவத்துடன் சண்டை பிடிக்க விடுகிறார்கள். எதிர்த்தால் அடிக்கிறார்கள். அங்கே உணவுக்கு தட்டுப்பாடு. செஞ்சிலுவை சங்கம் கொண்டு வரும் நிவாரணப் பொருட்களை புலிகளே அதிக விலைக்கு விற்கிறார்கள். கட்டுப்பாட்டு பிரதேசத்தை விட்டு தப்பி ஓட முயற்சி செய்தால் சுட்டுக் கொல்கிறார்கள். அவர்கள் நிலையில் நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?
மே 4, 2009 at 4:17 பிற்பகல்
ஜே.ஆரின் அரசாங்கத்தை மிரட்டி பேச்சு மேசைக்குக் கொண்டுவந்ததைப் போலவே புலிகளையும் கொண்டுவந்த இந்தியா, புலிகளைத் தொடர்ந்து பேச்சில் வைத்திருக்க முடியாத தோல்வியைக் கண்டது. இந்தியா தலையிட்டுச் செய்த சமாதான முயற்சி; சில மாதங்களுக்குள்ளாகவே முறிந்து, முரண்நகைப் போரை புலிகளுடன் செய்ய வேண்டியிருந்ததைத்தான் இந்தியா தனது அனுபவமாகக் கொண்டிருக்கிறது. நோர்வே, ஜப்பானாலும் புலிகளை போர்ச் சன்னத நிலையிலிருந்து மீள வைக்க முடியவில்லை. புலிகளைப் பேச்சுக்குப் பணிய வைப்பதே சிரமசாத்தியமானது என்பதுதான் இந்தியாவினதும் ஏனைய உலகநாடுகளினதும் பட்டனுபவமாக இருக்கும்போது, தமிழபிமான ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது, முதலில் யாரிடம் தங்கள் கேள்விகளை வைக்க வேண்டுமென்பதையல்லவா?
அதைவிடுத்து, ‘நம் பெடியளை யாராலும் வழிக்குக் கொண்டுவர முடியாது’ என்பதைத் தமிழ்வீரப் பெருமிதமாகத் தமக்குள் கொண்டிருப்பவர்கள், இந்தியாவை வழிக்குக் கொண்டுவரப் போடும் ஆர்ப்பாட்டத்திலுள்ள ‘லொஜிக்’கைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை. புலிகளை வைத்துக்கொண்டு இலங்கைப் பிரச்சினையில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது என்பதை உலகநாடுகள் விளங்கிக் கொண்டதன் வெளிப்பாடுதான் இலங்கை அரசின் இன்றைய யுத்த வெற்றி! இதைப் புரிந்துகொள்ள எவருக்கும் பெரிய சிந்தனையாற்றல் தேவையென்பதில்லை.
புலிகளை, யாரும் அணுகமுடியாத சண்டைச் சர்வாதிகாரிகளாக வைத்துக்கொண்டு, உலக நாடுகளையெல்லாம் வழிக்குக் கொண்டுவந்துவிடலாம் என்று கூப்பாடு போட்டுக் கொண்டிருப்பது எவ்வளவு பெரிய தமிழ்ப் பேதைமை!
மே 4, 2009 at 4:19 பிற்பகல்
வெளிநாடுகளிலிருந்து தொலைபேசி எடுத்துப் பேசுகிறவர்கள், “நீங்கள் அங்கை ஒண்டுமே தெரியாமல் இருக்கிறீர்கள்” என்கிறார்கள். நம் மக்கள் கொத்துக் கொத்தாக எரிக்கப்படுகிறார்கள், அரச பாதுகாப்புப் பகுதிக்கு வரும் பெண்பிள்ளைகள் கற்பழிக்கப்படுகிறார்கள், இளைஞர்களைப் படையினர் அப்பிச் சென்றுவிடுகிறார்கள்… என்றெல்லாம் கடந்த நான்கு மாதங்களாக நமக்கு போன் எடுத்து உணர்ச்சிகரமாக ஆவேசப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
“நம் அண்ணா அக்கா பிள்ளைகள் மாமா மாமி மச்சினர் மருமக்களெல்லாம் வவுனியா முகாம்களுக்கு வந்துசேர்ந்துவிட்டார்கள். சந்தித்துப் பேசினேன். தப்பி வருகிறவர்கள் நிலைமை அப்படியொன்றும் பெரிய மோசமாக இல்லை” என்று நாம் அறிந்துகொண்ட சில சம்பவங்களை அவர்களுக்குச் சொல்ல முற்பட்டால், “சீ நீயும் ஒரு தமிழனா?” என்று வெளிநாடுகளில் செட்டிலாகிவிட்ட நெருங்கிய சொந்தங்கள் போனுக்கூடாகவே காறியுமிழ்கின்றன.
அவர்களது ஆவேசத்தில் தெரிவது, வன்னியிலுள்ள மக்களின் தியாகத்தைக் காண்பதற்கு முந்தும் அவசரமே தவிர, அவர்களை அழிவிலிருந்து காக்கின்ற அக்கறையல்ல. அந்த மக்கள் தங்கள் தியாகத்தால் இப்போது புலிகளைக் காப்பாற்றா விட்டால், தமிழ்வீரக் கனவுகளுக்குப் பங்கம் வந்துவிடுமேயென்ற பதற்றமே போர்ச்சூழலுக்கு வெளியே பொங்கிப் பிரவகிக்கிறது. புலிகள் அழிந்துவிட்டால் இலங்கையில் தமிழ்மக்கள் இருக்கவே முடியாது என்ற பாசிசப் பரப்புரைக் குரலே இன்று அனைவரும் பங்கேற்க வேண்டிய தமிழபிமான எழுச்சியாக முடுக்கிவிடப்படுவது தெரிகிறது.
தமிழ்மக்களைப் புலிகளின் பிடிக்குள் வைத்துத் தொடர்ந்தும் அழித்துமுடிப்பதே மிகச்சிறந்த தமிழுணர்வாகத் தாங்களாகவே நினைத்துக் கொள்கிறார்கள். இலங்கைக்கு வந்து குறைந்தபட்சம் வவுனியா வரைக்குமாவது சென்று பார்க்காமல், மக்களுடன் பேசாமல், நிலைமைகளை நேரில் அறியாமல், வதந்திகளால் கிளர்ச்சியுற்றுப் பொங்குகிற கும்பல் மனோநிலைக்குள் இருந்துகொண்டு, உண்மைநிலையைத் தெரிவிக்க முற்படுகிறவர்கள் மீது கோபம் கொள்கிறார்கள். நேரில் வந்து பார்த்து நிலைமை விளங்கிச் செல்வோர் மிகச் சிறுபான்மையினராக இருப்பதால், அவர்கள் சொல்வதையெல்லாம் பெரும்கூச்சலுக்குள் அமுக்கிவிட்டுத் தமிழாவேசம் பொங்கிப் பிரவகிக்கிறது – தமிழர்களை அழித்து முடிப்பதற்காக!
மே 4, 2009 at 7:38 பிற்பகல்
RV
எனக்கு பெரிதாக ஜெயலலிதாவின் மனமாற்றத்தில் நம்பிக்கை இல்லை.தேர்தல் முடிந்தவுடன் ஈழத்தமிழர் பற்றி அவர் பேசாமலே விடக் கூடும் .நான் அவரது மனத்திண்மையைப் பற்றி கருத்துக் கூறியிருந்தேனே அன்றி ,அவர் ஈழ விவகாரத்தில் ஈழத்தமிழருக்கு சாதகமாக ஏதாவது செய்வார்.என்று நினைக்கவில்லை.என்றாலும் அவரது கருத்துக்கள் இன்று பலரை அடைந்திருப்பது ஒரு விதத்தில் ஈழத் தமிழருக்கு நன்மைதான்.
இந்த பதில் பிரியாவுக்கு,
என்னால் சொந்தமாகவே ஒரு கருத்து நிலைப்பாட்டை எடுக்க முடியும் புலி ஆதரவு ஊடகங்கள் மூலமாக எனது கருத்துக்கள் உருவாவது இல்லை.யாழ்ப்பாணத்து தமிழர்களுக்கோ, கொழும்புத் தமிழர்களுக்கோ ஒன்றுமே நடக்கவில்லை என்ற மாதிரி கூறியிருக்கிறீர்கள் .அங்கும் தமிழர்கள் கடத்தப் பட்டும் கொலை செய்யப் பட்டும்கொண்டும் உள்ளார்கள், கைது செய்யப்படுகிறார்கள்
உண்மை ,வன்னியில் மாதிரி அங்கு ஒவ்வொரு நாளும் நூறு இருநூறு என்று மக்கள் இறக்கவில்லை. பதிலுக்கு வாரத்தில் ஐந்து பத்து என்று இறக்கிறார்கள்
அத்துடன் மூன்று வேளை சாப்பிட்டு நித்திரை கொள்வது மட்டும் வாழ்க்கை இல்லை அங்குள்ள மக்களுக்கு உண்மையான சுதந்திரம் உள்ளதா கொழும்பில் தமிழர்கள் எல்லோரும் போலீஸ் நிலையத்தில் போய் தங்கள் பெயரைப் பதிவு செய்யவேண்டி உள்ளதே.இது உண்மையான குடிமக்கள் என்பதையா தெரிவிக்கிறது.
நானும் யாழ்ப்பாணத்து தமிழர் என்ற அடைமொழிக்குள் தான் வருகிறேன்.
நான் இனவாதத்தின் கொடுமையை மூன்று வயதிலேயே அனுபவித்தவள் ,
கொழும்பில் எனது தந்தை வேலை செய்யும் போது 1977 இல் நடந்த இன்க்கொலைகளின் போது அங்கிருந்து யாழ்ப்பாணத்துக்கு எமது குடும்பம் விரட்டப் பட்டது .அது நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் மட்டும் அதன் தாக்கம் என்னில் இருந்ததாக எனது அம்மா சொல்வார்கள். வீட்டில் சின்ன சத்தம் வந்தாலும் ‘சிங்களவர் கொல்ல வருகிறார்கள் ‘என்று மேஜைக்குள் நான் ஓடி ஒளிந்ததாக அவர் சொல்வார்.
அதன் பின்பு 1995 இல் யாழ்ப்பாணம் மீது ராணுவம் தாக்கிய போது எனது தந்தை ராணுவத்தால் பிடிக்கப் பட்டு ஆறு மாதம் முகாமுக்குள் அடைக்கப் பட்டிருந்தார்
ஈழத்தில் எல்லாப் பகுதித் தமிழர்களும் தான் பாதிக்கப் பட்டுள்ளார்கள். அதில் யாழ்ப்பாணம் ,மட்டக்களப்பு வன்னி ,மன்னர் திருகோணமலை ,கொழும்பு என்ற வேறுபாடே இல்லை.
புலிகள் படை போராளிகள் எங்கோ தூர தேசத்தில் இருந்து வந்தவர்கள் இல்லை. அவர்கள் தமிழ் மக்களின் ஒரு பகுதியினர்தான் .அவர்களுக்கும் குடும்பம், தாய் தந்தை ,அண்ணன் ,தம்பி ,தங்கை என்ற உறவுகள் உள்ளன
அவர்கள் தவறுகள் செய்திருக்கலாம், ஆனால் உலக அங்கீகாரம் உள்ள, அந்த அங்கீகாரம் மூலம் பல சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் இலங்கை அரசு அதைவிட மோசமான செயல்களை செய்திருக்கிறது
இலங்கையின் இனப் பிரச்சினைக்கு மூல காரணமே சிங்கள ஏகாதிபத்திய சிந்தனைதான் .
கூட்டாட்சி முறையில் கூட அரசியல் தீர்வு கொடுக்கும் எண்ணம் அவர்களுக்கு இல்லை சமாதான காலத்தில் கூட்டாட்சி முறையிலான தீர்வை (இடைக்கால நிர்வாக சபை )முற்று முழுதாக அவர்கள் தானே நிராகரித்தார்கள்.தலைவர் செல்வநாயகம் காலத்தில் கூட்டாட்சி முறையை ஏற்று உண்மையான அதிகாரப் பகிர்வு முறையிலான அரசியல் தீர்வை கொண்டு வந்திருந்தால் இவ்வளவு அழிவும் வந்திருக்காது தமிழர்களும் தனி நாடு கேட்கும் நிலைக்குத் தள்ளப் பட்டிருக்க மாட்டர்கள்.
உங்களுக்கு எல்லா வாதத்துக்கும் பதில் சொல்ல நான் வரவில்லை. உங்களது வாதங்கள் இலங்கை அரசின் செய்கைகளை நியாயப் படுத்துவதற்கு மட்டுமே இடப் பட்டவை போலுள்ளன .அதனால் எந்த வாதமும் பயன் இல்லை.
-வானதி
மே 5, 2009 at 4:25 மு.பகல்
//வன்னியில் மாதிரி அங்கு ஒவ்வொரு நாளும் நூறு இருநூறு என்று மக்கள் இறக்கவில்லை. பதிலுக்கு வாரத்தில் ஐந்து பத்து என்று இறக்கிறார்கள்//
இதற்கு ஆதாரம் கேட்டால், புதினம் தமிழ்நெட் போன்ற புலிகள் நடத்தும் ஊடகங்களை தான் நீங்கள் ஆதாரமாக காட்டுவீர்கள். ஏதாவது சுதந்திரமான ஊடகத்தை உங்களால் ஆதாரம் காட்ட முடியுமா? சொந்த மூளையில் இயங்கும் வானதி அம்மா, ஒரு நிமிஷம் சிந்தியுங்கள். சிறி லங்கா அரசாங்கம் தனது பிரச்சாரத்திற்காக பொய் செய்திகளையும், ஒன்றுக்கு பத்தாக மிகைப் படுத்தியும் சொல்கிறது. அதையே புலிகளும் செய்ய மாட்டார்களா? ஒருவரிடம் எச்சரிக்கை காட்டும் நீங்கள் இன்னொருவரிடம் ஏமாந்து போகிறீர்கள். உங்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.
//உங்களது வாதங்கள் இலங்கை அரசின் செய்கைகளை நியாயப் படுத்துவதற்கு மட்டுமே இடப் பட்டவை போலுள்ளன.//
இலங்கையில் என்ன நடக்கிறது என்று உள்ளதை உள்ள படி சொல்லக் கூடாதா? உண்மை பேசுபவர்களை இலங்கை அரசாங்கத்திற்கு சார்பாக பேசுவதாக சொல்வது உங்கள் அறியாமையை, முட்டாள்தனத்தை எடுத்துக்காட்டுகின்றது. மிகைப்படுத்தி பொய் சொன்னால் மட்டும் தான் உங்களுக்கு பிடிக்குமா? மிகைப்படுத்திய, திரிபுபடுத்திதிய செய்தியால் யாருக்கு என்ன பிரயோசனம்? உங்களுக்கு நீங்களே சுய இன்பம் அனுபவக்கின்றீர்கள். அவ்வளவுதான்.
//இலங்கையின் இனப் பிரச்சினைக்கு மூல காரணமே சிங்கள ஏகாதிபத்திய சிந்தனைதான் .//
ஏகாதிபத்தியம் என்றால் உங்களுக்கு என்னவென்று தெரியாது. உங்கள் அறியாமையை, முட்டாள்தனத்தை இங்கே மீண்டும் வெளிப்படுத்துகின்றீர்கள்.
//அங்குள்ள மக்களுக்கு உண்மையான சுதந்திரம் உள்ளதா கொழும்பில் தமிழர்கள் எல்லோரும் போலீஸ் நிலையத்தில் போய் தங்கள் பெயரைப் பதிவு செய்யவேண்டி உள்ளதே.இது உண்மையான குடிமக்கள் என்பதையா தெரிவிக்கிறது.//
நாட்டில் யுத்தம் நடப்பதால் தான் இந்த நிலைமை என்று சிறு பிள்ளையை கேட்டாலும் சொல்லும். இவ்வளவு வளர்ந்த உங்களுக்கு தெரியவில்லை. இலங்கை மக்கள் போர் இல்லாமல் சமாதானமாக வாழ வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஒவ்வொரு தமிழனும் சிங்களவனும் இதைத் தான் விரும்புகிறான். இனவாதிகள் மட்டும் தான் இரண்டு இனங்களையும் பிரித்து வைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். சிறி லங்கா அரசாங்கம் சிங்கள மக்களை பிரித்து வைக்க பார்க்கிறது. நீங்கள் தமிழ் மக்களை பிரித்து வைக்க பார்க்கிறீர்கள். நீங்களும் சிறிலங்கா அரசாங்கமும் கூடிப்பேசி தமிழர்களையும் சிங்களவர்களையும் எதிரிகளாக பிரித்து வைக்கிறீர்கள். இலங்கையில் இனவாதத்தை வளர்த்து விடுவதில் உங்கள் இரண்டு பேருக்குமிடையில் நல்ல ஒற்றுமை இருக்கிறது. உங்கள் ஒற்றுமை வாழ்க. சிறி லங்கா அரசுக்கு எதிரானவராக நன்றாகவே நடிக்கிறீர்கள். அடுத்த முறை ஆஸ்கார் விருதுக்கு சிபாரிசு செய்யலாம்.
மே 5, 2009 at 7:54 மு.பகல்
நாம் எல்லோரும் லண்டனில் கேட்கும் ரேடியோக்கள் தொலைக் காட்சிகளில் வெளிவரும் மிகப் பெரும்பாலான செய்திகளுமே பொய்யானவை என்பதை அங்கு நேரில் சென்று பார்த்தால் புரியும். இதில் முதலாவதானது இலங்கை இராணுவத்தின் நடத்தைகள். இலங்கை இராணுவம் 1983டன் ஒப்பிடுகையில் மிகவும் வித்தியாசமாகவே நடந்து கொள்கின்றனர். இதை நான் கடந்த யுத்த நிறுத்தக் காலத்தில் போனபோதும் அதவானித்தேன். பொய்யான செய்திகள் பரவலாகப் பரப்பப்படும் போது உண்மையான குற்றங்கள் நிகழுவதும் அந்தப் பொய்யினுள் புதைக்கப்படுகிறது.
யாழ் மக்கள் என்ன கூறுகிறார்கள்…..
யாழ்ப்பாணத்தில் மக்களின் பேச்சுக்களை அவதானிக்கும் போது, மகிந்தாவை ஆட்சிக்கு கொண்டுவந்தது புலிகள் என்றும், வன்னியில் உள்ள பாஸ் முறையே மக்களைப் புலிகளின் எதிரியாக்கியது என்றும் 60 வயது என்றிருந்த கட்டுப்பாட்டை 65 ஆக்கியது மக்களிடம் ஏன் இப்படி சுதந்திரமாக இருக்க வேண்டிய வயோதிபர்களை கட்டுப்படுத்துகிறார்கள் என்றும் ரிஎன்ஏ யினர் மகிந்தாவிடம் பேசி தமது பிரச்சினைகளையும் தமிழர் உரிமைப் பிரச்சினைகளையும் தீர்க்க வழிமுறைகளைச் செய்ய புலிகள் தடுப்பது பற்றியும், தற்போது யாழ்பாணத்தில் தமிழில் பேசி தமிழர்களிடமிருந்து புலிகளின் ஊடுருவலை தெரிந்து கொள்வதும் அரச படைகளுடன் இணைந்து செயற்படுவதும் முன்னாள் புலிகளே என்றும், கூறுகின்றனர்.
இந்தியா உதவிக்கு வந்தபோது அவர்களை சரியாகப் பாவிக்க புலிகளிடம் இராஜதந்திரம் இல்லை என்றும் மக்கள் கருதுகின்றனர்.
கிழக்கு தேர்தல் புறக்கணிப்பு – மகிந்தாவை சந்திக்காது ரிஎன்ஏ புறக்கணிப்பது – புலிகள் ரிஎன்ஏ கட்டுப்படுத்துவது போன்றன தவறு என்றே மக்கள் கருதுகின்றனர்.
ரிஎன்ஏ அரசை அல்லது அரசின் அலுவலர்களை சந்திப்பதை புலிகள் விரும்புவதில்லை. இது தமது பா உ க்கள் தமக்கு செய்ய வேண்டிய அலுவல்களை செய்யவிடாமல் புலிகளால் தடைகள் ஏற்படுவதாக மக்கள் கருதுகின்றனர்.
இன்னும் சிலரிடம் முக்கியமாக வர்த்தகர்களிடம் இந்தப் புலிகள் தம்மை வறுகு வறுகு என்று வறுகி நாம் பிச்சைக்காரர் ஆகிவிட்டோம் எமக்கு செய்த அநியாயத்திற்கே புலிகள் அரசாங்கத்திடம் வாங்கிக் கட்டுகிறார்கள் என்பதும் சந்தையில் தாராளமாய் கேட்க முடிகிறது.
http://thesamnet.co.uk/?p=11029