நினைவு தெரிந்த நாளாக சரியோ தப்போ எந்த குட்டையில் ஊறிய மட்டை பெட்டர் என்று ஒரு திடமான கருத்து இருந்தது. இந்த தேர்தல் மாதிரி மோசமான மன நிலையில் எப்போதும் இருந்ததில்லை. அதற்கு காரணம் இலங்கைத் தமிழர்கள்தான்.
இலங்கைத் தமிழர்கள் இன்று செத்துக் கொண்டிருக்காவிட்டால் காங்கிரசுக்கு ஓட்டு போடுங்கள் என்று தைரியமாக சொல்வேன் – காங்கிரஸ் நல்லவர்கள் என்பதற்காக இல்லை, பா.ஜ.க. முஸ்லிம்களையும் ஹிந்துக்களையும் பிரித்து வைப்பதை ஒரு strategy ஆக கொண்டிருப்பதால்.
கலைஞரும் ஜெவும் மற்ற குட்டித் தலைவர்களான சிதம்பரமும் ராமதாசும் விஜயகாந்தும் இலங்கைத் தமிழர்களுக்காக ஒன்றும் செய்ய முடியாது என்று வெளிப்படையாக கையை விரித்துவிட்டால் கூட பரவாயில்லை. இவர்களது போலித்தனம் மகா வெறுப்பை கிளப்புகிறது. என்ன மாதிரியான தலைவர்கள் நமக்கு வந்து வாய்த்திருக்கிறார்கள்? ஜெ துணிச்சலாக திமிராக மனதில் பட்டதை சொல்வார் என்று எனக்கு ஒரு அபிப்ராயம் இருந்தது. தேர்தல் வந்தவுடன் உண்ணாவிரதமாம். அயோக்கியத்தனம் மட்டுமே உள்ள தலைவர்கள்.
ஆனால் யாராவது ஆட்சிக்கு வரத்தான் போகிறார்கள். யார் வந்தால் இலங்கை தமிழர்களுக்கு நல்லது நடக்கும் என்ற நப்பாசையாவது மிஞ்சும்?
அத்வானி இல்லை. பா.ஜ.க. இந்திய இறையாண்மையை காங்கிரசை விட சென்சிடிவாக பார்க்கும் – அவர்களுக்கு இலங்கையின் இறையாண்மை பலவீனப்படுவது நல்ல விஷயம் இல்லை.
கம்யூனிஸ்டுகள்? இல்லை. அவர்களுக்கு வழிகாட்டியான சீனா எப்போதுமே உயிர்களைப் பற்றி அவ்வளவாக கவலைப்படுவதில்லை. அவர்கள் ஆதரவு ராஜபக்செவுக்குத்தான்.
மாயாவதி போன்ற யாராவதா? இலங்கையை பற்றி என்ன தெரியும் இவர்களுக்கு?
காங்கிரசா? இது நப்பாசைதான் – கலைஞர் வாயை திறக்க மாட்டார்தான், ஆனால் காங்கிரஸ்காரர்களுக்கு புரியாமல் போய்விடுமா? என்ன அவ்வளவு பெரிய முட்டாள்களா? தமிழ் நாட்டில் பேருக்காவது கட்சி இருக்கும் ஒரே “தேசியக் கட்சி” இதுதான். காங்கிரஸ்காரர்கள் தேர்தலுக்குப் பின் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவார்கள் என்று எழுத கை கூசுகிறது. நம்பிக்கை இல்லைதான். ஆனால் மற்ற பேர் மீது 0% நம்பிக்கைதான் இருக்கிறது. இவர்கள் மீது ஒன்றிரண்டு சதவிகிதம் நம்பிக்கை இருக்கிறது. தமிழ்நாட்டு உணர்வுகளை கொஞ்சம் கூட புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு சிதம்பரமும், மணிஷங்கர் ஐயரும், இளங்கோவனும், ஜி.கே. வாசனும் அடி முட்டாள்களா? ப்ராக்டிகலாக யோசித்துப் பாருங்கள். இவர்களுக்கு உள்ள மாற்று இலங்கை தமிழர்களின் நிலையை இன்னும் மோசமாக்குவார்கள் என்றுதான் எனக்கு தோன்றுகிறது.
என்ன கொடுமைடா சாமி! போயும் போயும் இவர்கள்தான் இருப்பதிலே நல்ல சாய்ஸ் என்றால் என்னத்தை செய்வது!
இந்திய பிரச்சினைகள் மட்டுமே என்றால் எனக்கு காங்கிரசுக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்வதில் தயக்கம் இல்லை. மசூதி இடிக்கப்பட்ட நாள் முதல் நான் பா.ஜ.க. எதிர்ப்பாளன். அன்று உருவான strategy-ஐ பா.ஜ.க. மாற்றிக் கொள்கிற மாதிரி தெரியவில்லை. மாயாவதி போன்றவர்களை விட காங்கிரஸ் பெட்டர் என்பது என் திடமான அபிப்ராயம். கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தால் ஊழல் கொஞ்சம் குறையலாம், ஆனால் அவர்கள் கூட்டாளிகள் அதை ஈடு செய்துவிடுவார்கள். மேலும் அவர்கள் கம்யூநிச்டுகளா, காபிடலிஸ்டுகளா என்பதே இப்போதெல்லாம் குழப்பமாக இருக்கிறது. (நந்திக்ராமத்தை பாருங்கள்!)
April 27, 2009 at 4:40 மு.பகல்
Srilankan tamils?
No wonder
April 27, 2009 at 4:47 மு.பகல்
கருணாநிதியின் அடுத்த நாடகம் அண்ணா சமாதியில் அரங்கேறுகின்றது தொண்டர் உண்ணாவிரதத்தை கைவிடும்படி கத்துகின்றார்கள் ஒருதரும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக கத்தவேயில்லை
April 27, 2009 at 11:02 மு.பகல்
உண்மையான திமுக தொண்டன்,
இலங்கை தமிழர்கள், காங்கிரஸ் பற்றிய பதிவுக்கு மறுமொழி இட்டதற்கு நன்றி!
// கருணாநிதியின் அடுத்த நாடகம் அண்ணா சமாதியில் அரங்கேறுகின்றது தொண்டர் உண்ணாவிரதத்தை கைவிடும்படி கத்துகின்றார்கள் ஒருதரும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக கத்தவேயில்லை//
சாகும் வரை உண்ணாவிரதம் என்று சொல்லி இருக்கிறார். இதுவும் ஸ்டண்ட். ஒரு இரண்டு மாதம் முன்னாலே செய்திருந்தால் முழு மனதாக வரவேற்றிருப்பேன். ஆனால் சில மணி நேரங்களில் அன்னை சோனியா அமுதூட்டினார், உடன்பிறப்புகள் உப்மா ஊட்டினர் என்று முடித்துக் கொள்ளாவிட்டால், இதை அரை மனதாக வரவேற்பேன். இவர் சாப்பிடாவிட்டால் ராஜபக்சேவின் முடிவுகள் மாறப்போவதில்லை. ஆனால் இந்தியாவின் உதவி நிற்க வாய்ப்பு அதிகரிக்கும் என்று தோன்றுகிறது.
April 27, 2009 at 6:52 மு.பகல்
///காங்கிரஸ்காரர்கள் தேர்தலுக்குப் பின் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவார்கள் என்று எழுத கை கூசுகிறது///
தூ! இன்றைய ஈழத்தமிழர் நிலைக்குக் காரணமே
அவர்கள் தாமே!
April 27, 2009 at 10:55 மு.பகல்
சவுக்கடி,
இலங்கை தமிழர்கள், காங்கிரஸ் பற்றிய பதிவுக்கு மறுமொழி இட்டதற்கு நன்றி!
// ூ! இன்றைய ஈழத்தமிழர் நிலைக்குக் காரணமே அவர்கள் தாமே!//
என்ன அவர்களா போர் நடத்துகிறார்கள்? அவர்களுக்கும் ஒரு பங்கு – சிறு பங்கு – இருக்கிறது, அவ்வளவுதான்.
அவர்களுக்கு மட்டுமே இந்த தவறை திருத்திக் கொள்ள வாய்ப்பு – low probability-தான் – இருக்கிறது என்று நினைக்கிறேன்.
April 27, 2009 at 10:19 மு.பகல்
உலகில் எந்த மூலையில் யார் மீது பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டாலும் அது கண்டிக்கத்தக்கது தான். புலிகளைக் கொல்கிறேன் பேர்வழி என்று அப்பாவி மக்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதலும் கண்டிக்கத்தக்கது தான். ஆனால் மக்களின் பின்னால் கோழைத்தனமாக ஒளிந்து கொள்ளும் விடுதலைப் புலிகளை வேறு எவ்வாறு எதிர்கொள்வது?
இலங்கைத் தமிழர்கள் மீது நடத்தப் படும் (மறைமுறமுகமாகவோ நேர்முகவோ) தாக்குதல்களை டிப்ளோமேடிக் சானல்கள் மூலம் தான் எதிர்ப்பு தெரிவிக்க / கண்டிக்க முடியும். ஆனால், இதையே ஒரு தேர்தல் பிரச்னையாக கருத முடியாது. தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் யார் என்ன செய்யப் போகிறார்கள் (யாரும் ஒன்றும் உருப்படியாக செய்து விடப் போவதில்லை என்றாலும்) என்று பார்த்துத் தான் ஓட்டுப் போட வேண்டுமேயொழிய இலங்கைத் தமிழர்களை யார் காப்பார்கள் என்று பார்த்து ஓட்டுப் போட முடியாது.
இலங்கையிலே கூட தமிழர்களை யார் பாதுகாப்பார்கள் என்று எண்ணி அங்குள்ள தமிழர்கள் ஓட்டு போடுவதில்லை. அப்படியிருக்க இந்தியாவிலுள்ள மக்கள் எதற்காக அண்டை நாட்டு மக்கள் மீது யார் கனிவு காட்டுகிறார்களோ, அவர்களுக்கு வாக்களியுங்கள் என்று சொல்கிறீர்கள்?
அப்படியானால், தீவிரதவாதிகளோடு, யார் நட்பு பாராட்டி, பாகிஸ்தானுக்கு ஆதரவாக யார் குரல் கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்றும் சொல்வீர்களா?
April 27, 2009 at 10:52 மு.பகல்
விஜய்,
இலங்கை தமிழர்கள், காங்கிரஸ் பற்றிய பதிவுக்கு மறுமொழி இட்டதற்கு நன்றி!
இலங்கை தமிழர்களை பற்றிய கவலையை ஒரு தேர்தல் பிரச்சினையாக கருதக் கூடாது என்பது சரி இல்லை. அடுத்த “நாட்டில்” என்ன நடந்தாலும் நாம் தலையிட வேண்டாம் என்று இருந்தால் கூட பரவாயில்லை, ஆனால் அங்கே நடக்கும் genocide-க்கு உதவி செய்வது கண்டிக்கப்பட வேண்டும் அல்லவா? எந்த genocide-க்கும் உதவி செய்வது கண்டிக்கப்பட வேண்டியது என்றால், இந்திய வம்சாவளியினரை அழிக்க உதவி செய்வது எப்படி சரி ஆகும்? இந்த உதவி இல்லாவிட்டாலும் பெரும் மாறுதல் ஒன்றும் ஏற்பட்டுவிடாது என்று சொல்லலாம், அதனாலும் கூட அது சரி ஆகிவிடாது.
// தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் யார் என்ன செய்யப் போகிறார்கள் (யாரும் ஒன்றும் உருப்படியாக செய்து விடப் போவதில்லை என்றாலும்) என்று பார்த்துத் தான் ஓட்டுப் போட வேண்டுமேயொழிய இலங்கைத் தமிழர்களை யார் காப்பார்கள் என்று பார்த்து ஓட்டுப் போட முடியாது. //
இவ்வளவு போலித்தனம், அயோக்கியத்தனம் இந்த விஷயத்தில் வெளிப்படையாக தெரியும்போது வேறு விஷயங்களை மட்டும் எப்படி சரியாக இந்த தலைவர்கள் கையாளுவார்கள்? அதனால்தான் கை கழுவி விட்டோம், ஒன்றும் செய்வதற்கில்லை என்று வெளிப்படையாக சொன்னால் கூட பரவாயில்லை என்று நினைக்கிறேன், எழுதியும் இருக்கிறேன்.
இலங்கை தமிழர்களை யார் காப்பார்கள் என்று பார்த்து ஓட்டு போட முடியாது என்று சொன்னீர்கள். அது இந்த விஷயம் ஒரு தேர்தல் பிரச்சினையா இல்லையா என்று நாம் நினைப்பதை பொறுத்தது அல்லவா? நான் அதை தேர்தல் பிரச்சினை என்று நினைக்கிறேன் என்பதைத்தான் இந்த மறுமொழியின் ஆரம்பத்தில் சொல்லி இருக்கிறேன்.
// அப்படியானால், தீவிரதவாதிகளோடு, யார் நட்பு பாராட்டி, பாகிஸ்தானுக்கு ஆதரவாக யார் குரல் கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்றும் சொல்வீர்களா? //
எதற்காக அப்படி சொல்ல வேண்டும்? ஆனால் அன்றைய பாகிஸ்தானில் வங்காளிகள் கொல்லப்பட்டபோது, இந்தியாவில் அகதிகள் கூட்டம் கூட்டமாக வந்து அடைந்தபோது, இந்தியா போர் தொடுத்ததை தவறு என்று சொல்ல மாட்டேன். நாளை பாகிஸ்தானில் சிந்திகள் அடையாளம் கண்டு கொல்லப்பட்டால், அப்போது இந்தியா பாகிஸ்தான் ராணுவத்துக்கு தளவாடங்கள் சப்ளை செய்தால் அதையும் ஒரு தேர்தல் பிரச்சினையாகவும், கண்டிக்க வேண்டியதாக்கவும்தான் கருதுவேன்.
April 27, 2009 at 1:46 பிற்பகல்
RV,
அமெரிக்க குடியுரிமை பெற்ற பசில் மற்றும் கோத்தபாய ராஜபக்ஷேக்கள் மீதான தமிழின அழிப்பு போர்க்குற்றஙகள் நிரூபிக்கப்பட்டால், தற்போதைய இந்திய ஆட்சியாளர்களும் (காங்கிரஸ்) சர்வதேச மன்னிபுச்சபையின் குற்றவாளிக்கூண்டில் நிற்க வேண்டி வரும். இப்படி நான் சொல்லவில்லை. தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஆனந்தவிகடன் பத்திரிகையில் சொல்லியிருந்தார்கள்.
ஈழத்தமிழன் சாவின் விளிம்பிலும், புலத்தில் தமிழன் வேதனையின் விளிம்பிலும் இருக்கிறான். எங்கள் துயரங்களின் காரணகர்த்தாக்கள் இலங்கை ஆட்சியாளர்கள் மட்டுமல்ல,காங்கிரஸ் இந்தியாவும் உண்டு என்பது தமிழருவி மணியன் போனறவர்களுக்கு மட்டும் தான் புரிகிறது போலும்.
தமிழ்நாட்டு உறவுகளும் அய்யா நெடுமாறன், மற்றும் தற்பொழுது தமிழருவி மணியன் போனற உண்மையான இனமான உறவுகளின் துணை மட்டும் ஈழத்தமிழனுக்கு போதும். எந்தவொரு அரசியல்வாதியையோ அல்லது அரசியல் கட்சியையோ நம்பி ஈழத்தமிழன் விடுதலைப்போரை நடத்தவில்லை.
இன அழிப்புக்கு உஙகள் அரசை துணைபோக வேண்டாமென்று சொல்லுங்கள் என்று தான் ஈழத்த்மிழன் கேட்டான். கேட்கிறான். இதை உங்ளால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. ஈழத்தமிழனுக்கு காங்கிரஸ் ஆட்சியாளர்கள் உதவுவார்கள் என்று பதிவு எழுதி எங்க்ள் வெந்தபுண்ணி வேல் பாய்ச்சாதீர்கள்.
April 27, 2009 at 2:20 பிற்பகல்
மன்னிக்கவும். அமெரிக்காவில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது கோத்தபாய மற்றும் சரத் பொன்சேகா மீது தான். நான் மாறி பசில் ராஜபக்ஷே என்று கூறிவிட்டேன். தவறுக்கு மன்னிக்கவும்.
April 27, 2009 at 2:59 பிற்பகல்
ரதி,
// இன அழிப்புக்கு உஙகள் அரசை துணைபோக வேண்டாமென்று சொல்லுங்கள் என்று தான் ஈழத்த்மிழன் கேட்டான். கேட்கிறான். இதை உங்ளால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. ஈழத்தமிழனுக்கு காங்கிரஸ் ஆட்சியாளர்கள் உதவுவார்கள் என்று பதிவு எழுதி எங்க்ள் வெந்தபுண்ணி வேல் பாய்ச்சாதீர்கள். //
புரியாமல் என்ன, நன்றாகவே புரிகிறது. இப்போது இந்தியர்களுக்கு, தமிழர்களுக்கு இருக்கும் சாய்ஸ் மோசமானவர்களுக்கும், இன்னும் கொஞ்சம் மோசமானவர்களுக்கும் நடுவில். தாமரை என்ற கவிஞர் ஜெ அமாவாசை, கலைஞர் அமாவாசைக்கு அடுத்த நாள் என்று சொன்னாராம். அந்த மாதிரிதான் பா.ஜ.க. அமாவாசை, காங்கிரஸ் அமாவாசைக்கு அடுத்த நாள் என்று நினைக்கிறேன். அமாவாசைக்கு அடுத்த நாள் ஆட்சிக்கு வந்தால், தமிழ் நாட்டு காங்கிரஸ்காரர்கள் வாயை திறக்க மாட்டார்களா, ஏதாவது நடக்காதா என்ற நப்பாசைதான். பா.ஜ.க. வந்தால் ஒன்றும் நடக்க கொஞ்சம் கூட வாய்ப்பே இல்லை என்று தோன்றுகிறது. இதைத்தான் பதிவிலும் எழுதி இருக்கிறேன்.
அப்புறம் உங்களிடமிருந்து நான் ஒரு விஷயத்தில் வேறுபடுகிறேன். இந்திய உதவி ஒரு பொருட்டே அல்ல என்று நினைக்கிறேன். அதற்காக உதவி செய்யலாம் என்பதில்லை, உதவி நிறுத்தப்பட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறேன்.
சரத் ஃபொன்செகா பற்றி தேடிப் பார்த்தேன், எனக்கு இந்த வழக்கு பற்றி விவரம் கிடைக்கவில்லை. ஏதாவது சுட்டி காட்ட முடியுமா?
April 27, 2009 at 3:22 பிற்பகல்
RV,
//சரத் ஃபொன்செகா பற்றி தேடிப் பார்த்தேன், எனக்கு இந்த வழக்கு பற்றி விவரம் கிடைக்கவில்லை. ஏதாவது சுட்டி காட்ட முடியுமா?//
சரத் பொன்சேகா தமிழின அழிப்பை தவிர எந்தவொரு சாதனையையும் செய்யவில்லை. அத்னால் tamilnet.com இல் search பகுதியில் bruce fein என்ற பெயரில் தேடினால் உங்களுக்கு எல்லா விவரமும் கிடைக்கும். அல்லது, சுவவீ இணையத்தில் Bruce Fein இன் தமிழ்நாட்டில் நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தின் உரையை இணைத்திருக்கிறார்கள். அதுவுமில்லையென்றால் tamilcanadian.com இணையத்தில் தேடிப்பாருங்கள். நிச்சயமாக கிடைக்கும். அல்லது you tube.
April 27, 2009 at 4:18 பிற்பகல்
ரதி,
தேர்தலுக்கு பிறகு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் இலங்கை தமிழர்களுக்கு நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்தை தெரிந்து கொள்ள ஆவல்.
ஃபொன்செகா பற்றிய சுட்டி கிடைத்தது, நன்றி!
April 28, 2009 at 1:25 மு.பகல்
RV,
//தேர்தலுக்கு பிறகு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் இலங்கை தமிழர்களுக்கு நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?//
அரசியல், கட்சிகள், அரசியல் தலைவர்கள் என்ற கருத்தியல் எல்லா நாட்டிலும் ஒரே மாதிரிதான் உள்ளது என்பது என் கருத்து. அரசியல்வாதிகளுக்கும் கட்சிகளுக்கும், வாக்காளர்களும் தொண்டர்களும் பகதர்களாக மட்டும் இருப்பதால் அரசியல்வாதிகள் அவர்களை பகடைக்காய்களாக வைத்து பரமபதம் ஆடுகிறார்கள். ஆட்சியில் உட்கார்ந்தவுடன் தங்கள் சொந்த நலன்களைப்பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். பக்தர்களை மறந்துவிடுகிறார்கள், அடுத்த தேர்தல் வரும்வரை. இதற்கு இந்தியாவும்/தமிழ்நாடும் விதிவிலக்கல்ல. இந்தியாவின் அரசியல் நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஈழத்தமிழர்களின் வாழ்வோடும் கலந்துவிட்டது.
ஆனாலும், நான் எந்த இந்தியா/தமிழ்நாடு கட்சிக்கோ அல்லது அரசியல்வாதிக்கோ அபிமானி கிடையாது. அது கூட எங்கள் ஈழப்பிரச்சனையை வைத்து இவர்கள் அரசியல் நடத்துவதால் தான். அதுபோக, தமிழ்நாட்டு தமிழர்களுக்காவது உண்மையாக இருக்கிறார்களா? அதுவுமில்லை.
தேசிய அளவில் இந்தியாவில் எந்த கட்சியாவது ஒட்டு மொத்த இந்தியர்களின் அபிலாசைகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறதா?பெரும்பாலும் சாதி அல்லது வேறு ஏதோ ஒரு விடயத்தை ஒவ்வொரு மாநிலமும் அதன் கட்சியும் முன்னிலைப்படுத்துகின்றன. மாநில அளவில் கட்சிக்களுக்கிடையில் குத்துச்சண்டை போடாத குறையாக ஆட்சி நடத்துகிறார்கள். ஒட்டுமொத்த இந்தியர்களின் அபிலாசைகளை பிரதிநிதித்துவப்படுத்த எந்த கட்சியும் தேசிய அளவில் கிடையாது. இதில் நான்/நாங்கள் எந்த கட்சியை நம்புவது. அது தவிர, தமிழ்நாட்டை தவிர வேறு எந்த மாநிலத்துக்காவது ஈழத்தமிழனில் அக்கறையுள்ளதா? தேசிய அளவில் எந்த கட்சியாவது ஈழத்தமிழன் பிரச்சனையை பேசுகிறதா?
ஆனால், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஏதாவது மாற்றம் கொண்டுவந்தால் அல்லது அதற்கு எந்த கட்சியாவது ஆதரவளித்தால் அதன் பிறகு பார்க்கலாம். இன்னும் இந்திராவின் காலத்தில் உருவாக்கிய வெளிநாட்டுக்கொள்கையின் அடிப்படையிலேயே ஈழப்பிரச்சனையை அணுகினால் எந்த கட்சியையும் நாங்கள் எப்படி நம்புவது. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எங்கள் விடுதலையை நாங்கள் தான் போராடிப் பெறவேண்டும் என்ற நிலைதான் எங்களுக்கு. இந்தியா எங்களுக்கு விடுதலையை பெற்றுதரும் என்று நம்ப ஈழத்தமிழன் முட்டாளும் அல்ல. இருந்தாலும், ஈழத்தமிழனின் இனப்படுகொலைக்கு துணை போகாத, எங்கள் ஈழவிடுதலையை தங்கள் தேசிய நலனுக்காக நசுக்க நினைக்காத எந்த கட்சியும் எனக்கு சம்மதம். அப்படி ஒர் தேசிய அளவிலான கட்சி இந்தியாவில் உள்ளதா?
April 28, 2009 at 4:33 மு.பகல்
ரதி,
நீங்கள் சொல்வது மிக சரி. மிக வெறுப்பாக இருக்கிறது.
April 29, 2009 at 1:07 பிற்பகல்
RV,
//மிக வெறுப்பாக இருக்கிறது.//
உங்களை வெறுப்படைய வைக்கும் நோக்கம் எனக்கு இல்லீங்க. நான் பொதுவா தான் சொன்னேன்.
கீழே நீங்கள் கூறிய வேறு ஒர் பதிலுக்கு இங்கே என் கருத்தை பதிகிறேன்.
//அதனால் கிராண்ட் ஜூரி விசாரணை நல்லதுதானே! இதனால் ஃபொன்செகாவும் கோத்தபாயவும் ஜெயிலுக்கு போகப்போவதில்லைதான். ஆனால் இது பெரிய அவமானம் இல்லையா?//
கிராண்ட் ஜூரி பற்றிய உங்கள் விளக்கம் சுருக்கமாகவும் நன்றாகவுமுள்ளது. நன்றி. நீங்கள் மேற்சொன்ன கருத்து தான் என்னுடைய கருத்தும். ஃபொன்செகாவும் கோத்தபாயவும் ஜெயிலுக்கு போகப்போவதில்லைதான். ஆனால், ஒரு பாவமும் அறியாத என் மக்களை, என் இனத்தை அழிப்பதற்காக இவர்கள் ஏதோ ஒரு சட்டத்தின் மூலமாவது தண்டிக்கப்பட வேண்டும். மகிந்தா ராஜபக்க்ஷே மீதும் யாராவது ஏதாவது வழக்கு போடமாட்டார்களா என்றிருக்கிறது எனக்கு.
அண்மையில் இலங்கைக்கு IMF கடன் கொடுக்க கூடாது என்று கூட அமெரிக்காவில் வழக்கு பதிவு செய்ததாக படித்தேன். வழக்கம் போல் இலங்கை தன் நாட்டிலிருந்து இவர்களையெல்லாம் விரட்டியடித்துவிட்டு, தேவையென்று வந்தவுடன் மறுபடியும் IMF இடம் 1.9 பில்லியன் தொகையை கடனாக கேட்கிறார்கள் (வேறெதற்கு, ஈழத்தமிழனை அழிப்பதற்க்குத்தான்). இந்த கடன் தமிழின அழிப்பிற்காகத்தான் என்றும் அதற்கு அமெரிக்காவும் மற்ற நாடுகளும் அனுமதி வழங்கக்கூடாதென்றும் அமெரிக்காவில் TAG-Bruce Fein வழக்கு தொடுத்திருக்கிறார்கள். நீங்கள் அமெரிக்காவில் இருப்பதால் அந்த சட்டங்கள் உங்களுக்கு அதிகமாக தெரிந்திருக்கும். அது பற்றி தெரிந்தால் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
April 30, 2009 at 11:44 பிற்பகல்
ரதி,
// /மிக வெறுப்பாக இருக்கிறது.//
உங்களை வெறுப்படைய வைக்கும் நோக்கம் எனக்கு இல்லீங்க. நான் பொதுவா தான் சொன்னேன். //
வெறுப்புக்கு நீங்களா காரணம்? இந்த “தலைவர்கள்” அல்லவா காரணம்? என்னவோ தலைஎழுத்து இவர்கள் எல்லாம் தலைவர்கள்.
எனக்கு IMF வழக்கு பற்றி தெரியவில்லை. தெரிய வந்தால் பகிர்ந்து கொள்கிறேன்.
April 28, 2009 at 8:32 மு.பகல்
AS THERE is a reference to Anandavikatan, here is a letter I wrote to AV (which of course was not published) – this was a counter propaganda in favour of the LTTE in US and Canada :
அன்புள்ள ஆ.வி.ஆசிரியர் அவர்களுக்கு:
இந்த வாரம் விகடனில் வந்துள்ள ‘நிகேத்தனா’ என்பவரின் கட்டுரை ஒரு அபத்தக் களஞ்சியம்!
ப்ரூஸ் ஃபெயின் என்ற அமெரிக்கர் சொல்லுவதாக, அவர் எழுதிய சில கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவை.
முதலில், க்ரீன் கார்ட் வைத்திருக்கும் பிரஜைகள் அமெரிக்கர்கள் அல்ல! க்ரீன் கார்ட் என்பது ஒரு அன்னிய பிரஜை அமெரிக்காவில், வசிக்கவும், அங்கு வேலை செய்யவும் உதவுவது. ஐந்து வருஷங்கள் அங்கே தொட்ர்ந்து வசித்து வந்த பிறகு, அன்னியர்கள் அங்கு அமெரிக்க பிரஜைகளாக மாறலாம்!
இரண்டாவது, க்ரீன் கார்ட் மேற்கூறியபடி, அமெரிக்காவில் நிரந்தரமாக வசிக்கும் உரிமை அளிக்கும்போதிலும், அன்னிய பிரஜைகள், அவர்களுடைய நாட்டின் பாஸ்போர்ட்டை தங்கள் கையிலேயே வைத்திருக்க வேண்டும் – அவர்கள் அமெரிக்காவில் இருந்து தங்கள் நாட்டிற்குத் திரும்பினாலும், வேறு எந்த நாட்டுக்குச்சென்றாலும் அந்த பாஸ்போர்ட்டைத்தான் உபயோகிக்க
வேண்டும். இதனால் சரத் ஃபொன்சிகாவும், ராஜபக்சேயின் சகோதரரும் அமெரிக்க க்ரீன் கார்ட் வைத்திருந்த போதிலும், அவர்கள் இலங்கைப் பிரஜைகள் தான், இதில் எந்த சந்தேகமும் கிடையாது.
மூன்றாவது, க்ரீன் கார்ட் வைத்துள்ள அன்னிய நாட்டவர், தாங்கள் சென்ற வெளினாட்டிலிருந்து இரண்டு வருஷங்களுக்குள் அமெரிக்கா திரும்ப வில்லை என்றால், அந்த கிரீன் கார்ட் செல்லாது! இவர்கள் இருவரும் நிச்சயம் இலங்கையில் இரண்டு வருஷங்களுக்கு மேலாக இருக்க வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன்!
நான்காவது – ப்ரூஸ் ஃபெயின் என்பவர் அட்டார்னி ஜெனரலாக இருந்தவர் என்று கட்டுரை குறிப்பிடுகிறது.. அமெரிக்க அரசை விட்டு இந்த இருவர்கள் மேலும் நடவடிக்கை எடுப்பேன் என்று அவரது கூற்று உண்மையானால், அவர் எப்படி அமெரிக்க அரசில் அட்டார்னி ஜெனரலாக இருந்தார் என்ற ஐயம் எழுகிறது!
சமீப காலமாக ஆனந்தவிகடன் குழு பத்திரிகைகள் யாவுமே ‘புலிகளின் குரலாக’ ஒலிக்கின்றன! ஒலிப்பது ஆனந்த விகடனின் உரிமை என்றாலும், தவறான செய்தி கொண்ட கட்டுரைகளைப் பிரசுரிப்பது தவறு.
சேதுராமன்
April 28, 2009 at 2:24 பிற்பகல்
சேதுராமன்,
நிகேதனா எழுதியதை நான் படிக்கவில்லை. ஆனால் ப்ரூஸ் ஃபெய்ன் அமெரிக்க அரசில் உதவி அட்டர்னி ஜெனரலாக இருந்திருக்கிறார். ரீகன் அமெரிக்க அதிபராக இருந்தபோது அவர் இந்த பதவியை வகித்திருக்கிறார்.
கிரீன் கார்டு பற்றி நீங்கள் எழுதி இருப்பது எல்லாமே நூற்றுக்கு நூறு சரி. ஆனால் கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் மீது அமேரிக்காவில் கேஸ் பதிவு செய்வது இல்லாதவர்கள் மீது பதிவு செய்வதை விட சுலபமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தியாவில் கூட பிரபாகரனை in absentia விசாரித்து தண்டனையும் கொடுத்தார்கள் என்று நினைக்கிறேன்.
கிராண்ட் ஜூரி விசாரணை என்பது தண்டனை கொடுபதற்காக அல்ல. குற்றம் செய்திருக்க கூடுமா, இதற்கு கோர்ட்டில் கேஸ் போட்டு விசாரணை செய்யப்பட வேண்டுமா என்று முடிவு செய்ய மட்டுமே. அதாவது கிராண்ட் ஜூரி குற்றம் எதுவும் இல்லை என்று சொல்லலாம். இல்லை குற்றம் விசாரிக்கப்பட வேண்டியது என்று சொல்லலாம். அப்படி சொல்லிவிட்டால் போலீஸ் ஆதாரங்களை தோண்டுவது சுலபம் ஆகிறது – டெலி ஃபோ னை ஒட்டு கேட்கலாம், கம்ப்யூட்டர்களை கைப்பற்றலாம், ஸ்விஸ் பாங்குகளில் விசாரிக்கலாம் இது போல. கிராண்ட் ஜூரி அப்படி சொல்வது அமேரிக்காவில் பெரிய விஷயம்.
அப்புறம் இலங்கை ராணுவம் நடத்துவது ஒரு genocide என்றுதான் எனக்கும் தோன்றுகிறது. அதனால் கிராண்ட் ஜூரி விசாரணை நல்லதுதானே! இதனால் ஃபொன்செகாவும் கோத்தபாயவும் ஜெயிலுக்கு போகப்போவதில்லைதான். ஆனால் இது பெரிய அவமானம் இல்லையா?
April 29, 2009 at 11:13 பிற்பகல்
RV Sir
I completely disagree with you on this one. When Indian Tamils vote on a parliamentary election they have to consider many different issues along with the Srilankan Tamil issue. I think the major issue of this election should be the national security. As you are aware of this India is being attacked brutally by Islamic terrorists and naxalites in the last 5 years of the UPA rule. More than 6000 Indians got killed by these terrorists and naxalites. Infact after Iraq more people in India got killed by terrorists than any other country. So we can’t affod to have Congress govt. for another 5 years. If god forbid that happens I expect the next attack on India would be a dirty bomb that could kill tens of thousands of people. So when we compare the record BJP and CONgress party BJP is way better in dealing with national security. The UPA/CONgress govt is responsible for more Indian peoples death than any other govt. Manmohan and Sonia has blood on their hand and responsible for their deaths. In any other democractic country if these kind of things happens then the ruling party would be routed in the election. But unfortunately in India people are still voting according to their caste and religion most of them don’t understand the larger issue at stake.
As for as your charge against BJP being communal I think it is no better or no worse than CONgress or Commies. CONgress and Commies use the minority communalism so BJP is forced to use majority communalism. (E-g) Shaoh Bano case, Uniform Civil Code,Commies open support of Madhani who killed 60 Indian Tamils in Coimbatore bomb blast in 1998,CONgress not prosecuting any single islamic terrorists for vote bank,Not hanging convicted terrorist Afzal Guru. I can give you other examples if you want.So I say vote for BJP
Now on the Srilankan Tamil issue BJP is still better than CONgress party. You remember Geogre Fernandes he was the defence minister in the NDA Govt., he is vocal supporter of LTTE. Also even now BJP’s Yashwant Sinha is the only man called for a cease fire and sanctions against Lankan Govt. Also BJP knows right now China and Pakis are the main suppliers of millitary hardware to Srilankans and as a natinoalist party it would support the Tamils in Lanka to limit the Paki and Chinese influence in China. Also they were the party who were voicing concern about Malaysian Tamil Hindus. CONgress wouldnt lift a finger for them. So even on the basis of Srilankan Tamil issue all the Tamils should vote for BJP.
Here are some links regarding the terrorism facts.
http://offstumped.nationalinterest.in/2008/11/30/war-on-mumbai-open-letter-to-all-party-meeting/
http://ramanstrategicanalysis.blogspot.com/
P.S
Please stop viewing the BJP through the eyes of the pseudosecular media such as NDTV,TOI,IBNLIVE or any Tamil news sites. Their sole aim is to discredit and destroy BJP.
April 30, 2009 at 12:16 மு.பகல்
கார்த்திக்,
காங்கிரஸ் மற்றும் இலங்கை பற்றிய மறுமொழிக்கு நன்றி!
நாட்டின் பாதுகாப்பு இலங்கை தமிழர்கள் நிலையை விட முக்கியமான விஷயம்தான்.
பா.ஜ.க. வந்தாலும் சரி, காங்கிரஸ் வந்தாலும் சரி, நாட்டின் பாதுகாப்பில் ஒரு வித்தியாசமும் இருக்கப் போவதில்லை என்றுதான் எனக்கு தோன்றுகிறது. பா.ஜ.க. ஆட்சி இருந்திருந்தால் மும்பையில் தாக்குதல் நடைபெற்றிருக்காதா என்ன? பா.ஜ.க. ஆட்சி காலத்தில்தான் விமான கடத்தல்காரர்களின் பயமுறுத்தல்களுக்கு இணங்கி தீவிரவாதிகள் விடுதலை செய்யப்பட்டனர். என்ன, பா.ஜ.க. காங்கிரசை விட அதிகமாக சவுண்ட் விடுவார்கள். காரியத்தில் ஒன்றும் கிடையாது. நான் இலங்கை தமிழர்கள் விஷயத்தில் பா.ஜ.க.வை விட காங்கிரஸ் ஒரு சதவிகிதம் பெட்டராக இருக்குமோ என்று நப்பாசைப் படுவது போல நீங்களும் பாதுகாப்பு விஷயத்தில் காங்கிரசை விட பா.ஜ.க. ஒரு சதவிகிதம் பெட்டராக இருக்கும் என்று நினைக்கிறீர்களோ என்னவோ?
பா.ஜ.க. தலைவர்கள் மதவாதத்தை ஒரு உத்தியாக பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு யார் சொல்ல வேண்டும்? நான் என்டிடிவி பார்ப்பதில்லை. டைம்ஸ் படித்து பல வருஷம் ஆயிற்று. IBNLive என்றால் என்னவென்றே தெரியாது. பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு காரணம் அங்கே கோவில் கட்டப்பட வேண்டும் என்பது அல்ல, முஸ்லிம்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைப்புதான், இந்துக்களை ஒரு ஓட்டு வங்கியாக திரட்டும் முயற்சிதான். அந்த முயற்சியை அவர்கள் இன்னும் கைவிடவில்லை. மிக சிம்பிளான ஸ்டாடிஸ்டிக்ஸ் – இருபது வருஷங்களுக்கு முன்னால் இருந்ததை விட இன்று அதிகமாக ஹிந்து முஸ்லிம் கலவரங்கள் நடக்கின்றன. பம்பாய், குஜராத் போன்ற கலவரங்கள், உயிர் சேதம், இதற்கு முன் 1947-வாக்கில்தான் நடந்திருக்கு என்று நினைக்கிறேன். இதற்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள்? பா.ஜ.க.வின் ஹிந்து ஓட்டு வங்கி முயற்சிதான்!
April 30, 2009 at 5:49 மு.பகல்
RV Thanks for your reply. Sorry I couldnt get the Tamil font working. Regardless to answer your question yes I do beleive if BJP was in power 26/11 would not have happened. It is the politicisation of the intellgence infrastructre and competitive communalism of the CONgress Govt. gradually eroded the Indias intelligence capabilities to fight the terrorism.They dismantled the POTA and the pathetic PM set up a joint mechanism with Musharaff to investigate the terrorist attacks. This is like America setting up joint commission with osama bin laden to investigate 9/11. The CONgress partys spineless leadership costs a lot of Indians life. You can look at the abovementioned blogs that gives you all the facts and figures about the faliure of the Sonia/Manmohan govt. in dealing with terrorism. Yes there were attacks during BJP rule. But the numbers increased atleast a 10 times more in UPA rule. Also most of the attackers during the BJP era has been caught and convicted or killed. But none I repeat none of the attackers during the UPA rule has been caught.Also on the Kandhar hijacking BJP made a mistake but at that time the decision to release the terrorists were made by an all party meet. And all the parties approved it because of the enormous pressure from the families of the hostages on the plane.After that incident Advani released white paper on ISI they enacted POTA. They also were trying to setup an FBI type agency in India to investigate terrorism. So BJP is 1000 times better.
On your point regarding Babri Masjid the way I see it as a backlash to the minority communalism practiced by the CONgress and other parties. I definitely dont support it but I am also a pragmatist so I am not going to hold this against BJP for eternity.If you are looking at the communal riots there was always riots in India BJPs growth did not increase the frequency of the communal riots.There were Bhagalpur riots in Bihar in 1980s and Nelli massacre in Assam, 1984 Sikh riots , riots in Gujarat 1960s, this was all in CONgress era.
To me rise of the BJP represents the assertion of Hindu majority to counter the rising minority fanaticism not the other way around.
Let me know what do you think
April 30, 2009 at 11:41 பிற்பகல்
கார்த்திக்,
உங்கள் மறுமொழிக்கு மீண்டும் நன்றி!
தமிழ் font ஆரம்பிக்க கஷ்டம்தான். பிறகு கஷ்டம் பழகிவிடுகிறது.
கூகிளின் translitarate தளத்தை முயற்சி செய்து பாருங்கள்.
பா.ஜ.க. ஆட்சியில் இருந்தால் கசப் மற்றும் கூட்டாளிகளை எப்படி தடுத்திருக்க முடியும் என்று எனக்கு தெரியவில்லை. நான் கட்டுப்பாடற்ற கருத்து சுதந்திரம் என்பதில் பெரும் நம்பிக்கை உடையவன். ப்ராக்டிகலாக சில கட்டுப்பாடுகள் இருக்கலாம், அந்த கட்டுப்பாடுகள் எவ்வளவு குறைவாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது என்று நினைக்கிறவன். பொடா, தடா போன்ற சட்டங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பவை. அவற்றை எந்த விதத்திலும் ஆதரிக்க முடியாது. இது போன்ற சட்டங்கள் கசப் மற்றும் கூட்டாளிகளை தடுக்கவும் தடுக்காது.
காங்கிரஸ் நல்ல ஆட்சியை தரவில்லை, தரப்போவதும் இல்லை என்று நீங்கள் சொன்னால் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் பா.ஜ.க. (வாஜ்பேயி ஆட்சி) கொள்கைகளிலும் சரி, செயல்பாட்டிலும் சரி ஒரு காங்கிரஸ் ஆட்சியை விட வித்தியாசமாக நடந்துகொள்ளவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். பொதுவாக காங்கிரஸ் (1984 டெல்லி தவிர) எந்த மதத்திற்கும் எதிராக வெறுப்பை விளைப்பதில்லை என்ற ஒரு காரணம் மட்டுமே என்னை காங்கிரசை தேர்ந்தெடுக்க தூண்டுகிறது. மைனாரிடிகளை அது அளவுக்கு அதிகமாக தாங்குகிறது என்பதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. இருக்கும் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு மட்டும் தேவைக்கு அதிகமாக சோறு போடுவது என்பது அநியாயம்தான்; மற்ற குழந்தையின் மனதில் அது கசப்பை வளர்க்கும்தான்; ஆனால் அது ஒரு குழந்தையை மட்டும் அடிப்பதை விட பரவாயில்லை.
பா.ஜ.க. காங்கிரசை விட பாதுகாப்பு, இறையாண்மை ஆகிய விஷயங்களில் நிறைய சவுண்ட் விடுகிறது. ஆனால் ஒன்றும் செய்வதில்லை. உதாரணமாக காங்கிரஸ் மீது எல்லாரும் (நானும்) குற்றம் சாட்டுவது ஷா பானோ தீர்ப்பு. வாஜ்பாயி அரசு இருந்தபோது இதை மாற்ற என்ன கிழித்தார்கள்? காஷ்மீரில் இப்போதும் மற்றவர்கள் நிலம் வாங்க முடியாதுதான். மைனாரிடிகளை தாங்கும் எந்த சட்டத்தையும் இவர்கள் மாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. முயற்சி செய்து தோற்றிருந்தால் கூட பரவாயில்லை. அதனால்தான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன், these guys are full of hot air!
அனைத்து கட்சி மீட்டிங் நடந்தது என்பதெல்லாம் சப்பைக்கட்டு. இப்படி எல்லாம் சொல்லி பொறுப்பை தட்டிக் கழிக்கக் கூடாது. அரசுதான் முடிவெடுக்கிறது. அது பா.ஜ.க. அரசின் தவறுதான்!
காங்கிரஸ் காலத்தில் கலவரங்களும் உயிர் சேதமும் ஏற்படத்தான் செய்தன. ஆனால் பாபரி மசூதி விவகாரத்துக்கு பிறகுதான் இந்த கலவரங்கள் அதிகரித்தன. என்னால் புள்ளி விவரங்கள் தரமுடியாது – ஆனால் மோடி-குஜராத கலவரங்கள் மாதிரி உயிர்சேதம் இந்தியா-பாகிஸ்தான் பிரிக்கப்பட்ட காலத்தில்தான் ஏற்பட்டிருக்க வேண்டும். நீங்களே சொல்லுங்கள், கடந்த இருபது வருஷங்களில் கலவரங்கள், உயிர் சேதம் அதிகரித்திருக்கின்றனவா இல்லையா? அமைதியாக இருந்த இடங்களில் கூட கலவரங்கள் நடக்கின்றன. கோயம்புத்தூரில் கலவரம்!
பா.ஜ.க. ஹிந்து ஒட்டு வங்கி திரட்டும் முயற்சியல் சட்டத்தை மீறுகிறது. ஒரு மசூதியை உடைக்கிறது. அரசு இயந்திரமே முஸ்லிம்களுக்கு எதிராக பம்பாயிலும் குஜராத்திலும் செயல்படுகிறது. முஸ்லிம்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதற்கு முடிவு ஏது?
இன்றுள்ள முஸ்லிம் தீவிரவாதம் என்பது பெருமளவு பா.ஜ.க.வின் பாபரி மசூதி உத்தி போன்றவற்றால் விளைந்தது என்று நான் நினைக்கிறேன், நீங்கள் சொல்வது போல பா.ஜ.க.வின் எழுச்சி முஸ்லிம் தீவிரவாதத்தின் விளைவு என்றல்ல. அதனால் முஸ்லிம் தீவிரவாதம் தண்டிக்கப்படக்கூடாது என்பதல்ல. தீவிரவாதம் தண்டிக்கப்பட வேண்டும், அதில் மதம், ஜாதி, மொழி என்றெல்லாம் யோசிக்கக் கூடாது. ஆனால் ஹிந்து தீவிரவாதிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று எனக்கு நம்பிக்கை குறைவுதான். அத்வானி தீவிரவாதி என்று நான் சொல்லமாட்டேன், ஆனால் அத்வானி மசூதி உடைக்கப்பட்டதற்காக ஒரு நாள் சிறைத் தண்டனையாவது அனுபவிப்பாரா?
மே 1, 2009 at 3:54 பிற்பகல்
கார்த்திக்,
ஒன்று சொல்ல மறந்துவிட்டேன். நீங்கள் கொடுத்த சுட்டிகளை படித்தேன். அனைத்து கட்சி மீட்டிங்குக்கு எழுதப்பட்டிருக்கும் கடிதம் நன்றாக இருக்கிறது. ஆனால் பா.ஜ.க. எப்படி வேறு விதமாக இதை கையாண்டிருக்கும்?
ராமனின் தளத்தை நீங்கள் சரியாக படித்தீர்களா என்று தெரியவில்லை. ராமனின் முதல் பதிவு இன்றைய பாகிஸ்தான் எப்படி மாறிக்கொண்டிருக்கிறது என்பது பற்றி. அவருடைய Terrorism and Elections என்ற பதிவில் அவர் சொல்கிறார்…
// Both the Congress (I) and the BJP have to be held equally responsible for the spread of jihadi terrorism to other parts of India outside J&K starting from the Mumbai blasts of March 1993. The demolition of the Babri Masjid at Ayodhya by a Hindutva mob in December,1992, acted as the trigger for the spread of jihadi terrorism to other parts of India..//
இந்த பதிவு காங்கிரஸ்தான் தீவிரவாதத்தை ஓரளவாவது நன்றாக கையாண்டிருக்கிறது என்று சொல்கிறது!
மே 1, 2009 at 11:11 பிற்பகல்
RV
Thanks for your reply again. The links I gave you were just a starting point. When you get some time please browse through the Offstumped blog he made a lot of convincing argument for BJP. When I get some time I will try to dig in to some of the old posts. As for as Ramans blog if you read his posts in the last 4 years he has severly criticised the UPA govt for its handling of the terrorism. But now in the election season for obvious reason he does not want to take anyside. Because he is writing as a retired senior iintelleginece officer so he needs to maintain the facade of neutrality.
Regardless the problem with your argument is that when you say BJP would not have been able to stop/reduce terrorism, it is wrong. This shows that you accepted terrorism is a fact of life and you are willing to live with that. But I believe a well thought out anti terror policy which includes police modernisation,effective intelligence gathering, coercive diplomacy, a well thought out foreign policy(Pakistan policy mainly), and political will to take tough decisons regardless of the vote bank consideration can dramatically reduce the number of terrorist attacks . I beleive BJP of 2009 is much better than CONG 2009 in these factors. I accept the fact CONG under Narashima Rao was much better handling the terrorism in Punjab. But the CONG under Sonia/Manmohan is an utter disaster. Also the BJP evolved from its days Right wing extremism in to genuine Right wing party with strong nationalist credentials.
Also regarding the Shah Bano case,Article 370 Uniform Civil Code issue you need a 2/3 majority to make these constitutional changes. BJP never got more than 182 seats on its own when they governed. So they were forced to moderate their chances by their allies.
But I do accept that it is a failure on BJPs part in handling Kandhar they were ultimately responsible because they were in power.But the same responsiblity also holds for Sonia/Manmohan Govt. whose vote bank policies led to the death of thousands of Indians. Even US state dept. acknowledges that.
http://timesofindia.indiatimes.com/World/US/Indian-counter-terrorism-efforts-outdated-says-US/articleshow/4472515.cms.
Also the CONgress history of communalism is not documented as well as BJP that is why it looks like BJP is more communal than BJP. CONgress has history of flaming the religious fundamentalism when it suits them.Unfortunately our English Language Media and the intelligensia is hopelessly anti BJP to expose the CONgress sins.
If you think the communal riots started only after BJP came to power please check the link
http://www.isn.ethz.ch/isn/Digital-Library/Publications/Detail/?ots591=CAB359A3-9328-19CC-A1D2-8023E646B22C&lng=en&id=29056.
When you look at the link please take the criticism of BJP/RSS in that paper with a bucket of salt.It has been compiled by a left liberal author who hates the right wing politics. The paper is just for listing of riots only.
When you talk about the punishment for Hindu terrorists you know that the only people who are being prosecuted are the Hindus who planted the bombs in Malegon. This is the only case that is being actively pusued by this govt. All the other terrorist cases where 1000s of people died because of the islamic terroists none of them are caught or prosecuted. So your apprehension about Hindu terrorists are wrong.
Ultimately my point is all the parties in India are communal to an extent. I believe BJP of 2009 is lot less communal than in 1990s and it is a much better party to lead India forward.
If you have some time please check out L K Advani site.
http://www.lkadvani.in/eng/content/view/874/281/
Look forward to your reply
மே 2, 2009 at 4:24 மு.பகல்
கார்த்திக்,
முடிந்தபோது இன்னும் படிக்கிறேன். ஆனால் ராமன் நடுநிலையாக நடிப்பதாக ஷோ காண்பிக்க காங்கிரசுக்கு ஆதரவாக பேசுகிறார் என்றால் எப்படி சார்? நான் எனக்கு தெரிந்த வரை நடுநிலையாக பேசுகிறேன் – அதனால் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக ஒரு பதிவு எழுத வேண்டும் என்று ஏதாவது கட்டாயமா?
// a well thought out anti terror policy which includes police modernisation…//
தீவிரவாதத்தை அடக்க என்ன செய்ய வேண்டும் என்று அழகாக எழுதி இருக்கிறீர்கள். இதை 2009 பா.ஜ.க. செய்யும் என்று ஏன் நினைக்கிறீர்கள்? அப்படி என்ன அணுகுமுறையில் வாஜ்பேயி காலத்திலிருந்து இன்றைக்கு வித்தியாசம் இருக்கிறது?
ஷா பானோ கேசில் முயற்சி செய்து தோற்றிருந்தால் வேறு விஷயம். என்ன முயற்சி எடுக்கப்பட்டது? இது அவர்கள் ராடாரிலேயே காணப்படவில்லையே? இன்று அவர்கள் தேர்தல் அறிக்கையில் ஏதாவது சொல்லி இருக்கிறார்களா?
// When you talk about the punishment for Hindu terrorists you know that the only people who are being prosecuted are the Hindus who planted the bombs in Malegon. //
என்னங்க நீங்க, குண்டு வைப்பவர்கள் மட்டும்தான் தீவிரவாதிகளா? மும்பை 1993 கலவரங்களுக்காக எந்த போலீஸ் அதிகாரியாவது ஒரு பிரமோஷனையாவது இழந்திருக்கிறாரா? குஜராத்தில் யாராவது தண்டிக்கப்படப் போகிறார்களா? இல்லை போன மறுமொழியில் சொன்ன மாதிரி பாபர் மசூதி உடைக்கப்பட்டதற்காக அத்வானி ஒரு நாளாவது ஜெயிலுக்கு போகப் போகிறாரா? தீவிரவாதிகளை அரசு எந்திரம் பிடிக்கும் என்று நம்பலாம். அரசு ஆதரவில் நடக்கும் தீவிரவாத செயல்களுக்கு யார் தண்டிக்கப்படப் போகிறார்கள்?
மே 13, 2009 at 10:22 பிற்பகல்
RV
Been lil busy in the last couple of weeks. I will try to post later this week.
April 30, 2009 at 10:38 பிற்பகல்
புலிகளின் ஆதரவாளர்களின் பிரச்சாரத்திற்கு அப்பால் இலங்கை நிலைமையை பார்க்க வேண்டும். யுத்தம் நடக்கும் இடத்தில் அகப்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதை யாரும் மறுக்கவில்லை. அதனை Genocide என்று சொல்லலாமா? இதுவரை எந்தவொரு அரசாங்கமும், மனித உரிமைகள் ஸ்தாபனமும் இதனை Genocide என்று சொல்லவில்லை. புலிகளின் ஆதரவாளர்கள் மட்டுமே அப்படி சொல்வதால் அது வெறும் பிரச்சாரமாக மற்றவர்களுக்குப் படுகிறது. யாழ்ப்பாணத்தில் இருந்து ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் விரட்டியது Ethnic cleansing இல்லையா? அப்பாவி சிங்கள, முஸ்லிம் மக்களை நூற்றுக்கணக்கில் கொலை செய்ததற்காக புலிகள் இயக்க தலைவர்கள் மீதும் Genocide வழக்குப் போடுவார்கள். புலி ஆதரவாளர்கள் அதனை தாங்கிக் கொள்வார்களா?
மே 1, 2009 at 2:27 பிற்பகல்
//அப்பாவி சிங்கள, முஸ்லிம் மக்களை நூற்றுக்கணக்கில் கொலை செய்ததற்காக புலிகள் இயக்க தலைவர்கள் மீதும் Genocide வழக்குப் போடுவார்கள். புலி ஆதரவாளர்கள் அதனை தாங்கிக் கொள்வார்களா?//
ஆதாரத்தோடு சொல்லுங்கள்.
புலிகள் ஆதரவாளர்கள் பற்றிய உங்கள் அக்கறைக்கு நன்றி. ஆனால், நாங்கள் நனைகிறோம் என்று நீங்கள் ரொம்ப அழாதீரகள்.
I would suggest you to look up the meaning of genocide and ethnic cleansing.
மே 2, 2009 at 7:59 மு.பகல்
//ஆதாரத்தோடு சொல்லுங்கள்.//
இலங்கையில் நடப்பது பற்றி எதுவுமே உங்களுக்கு தெரியாது என்று நிரூபிக்கிறீர்கள். நீங்கள் இதுவரை Human Rights Watch, Amnesty International அறிக்கைகள் எதையும் படித்ததில்லையா? இது தெரியாமல் அரசியல் பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?மறு பக்க உண்மைகளை மறைத்து விட்டு நீங்கள் சொல்வதை மட்டும் உலகம் கேட்க வேண்டும் என்று நினைப்பது உங்களது முட்டாள்தனம்.
மே 4, 2009 at 5:05 பிற்பகல்
கம்யூனிஸ்டுக்கள் மீது தங்களுக்கு ஏன் இவ்வள்வு வெறுப்போ தெரியவில்லை. நமது திருச்சி BHEL முதற்க்கொண்டு தொழில் வளர்சிக்காக நிலம் கையகப்படுத்துதல் புதிய நடைமுறையன்று.அதிலும் இடதுசாரி அரசுகள்தான் மக்களிடம் இருந்து நிலத்தை பெரும்போது கொடுக்க கூடிய நிவாரணங்களில் நாட்டிற்கே முன்னுதாரமாய் திகழ்பவை. அங்கே- நந்திகிராம்- நடந்தது சுத்தமான சந்தர்பவாதிகளான காங்கிரஸ் மற்றும் திரிணாமூல் கட்சிகளின் சதியேயாகும். மக்களின் மனதில் மலிவான பேறாசையினை துண்டிவிட்டு அராஜகம் நடத்தினர். 35 ஆண்டுகளாக தங்களால் அம்மாநிலத்தில் மக்களின் நம்பிக்கையை பெற முடியாத நிலையில் அவர்கள் நடத்திய வெறிச் செயல் என்றால் அது மிகையாகாது.
மேலும் நம் நாட்டை இன்றைய பொருளாதார சூனக்கம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதிற்கு இடதுசாரிகளே காரணம். வங்கி மற்றும் காப்பீட்டு துறை மிடுக்கோடு இருப்பதற்கு நாம் இடதுசாரிகளுக்கு நன்றி கடன்பட்டுள்ளோம்.
மே 7, 2009 at 9:35 பிற்பகல்
RV
The reason you don’t need to be appear neutral is, you are not a retired senior RAW ofifcer who works for a Terrorism think tank. Mr.Raman will try to influence the terrorism policy of the Indian Govt. regardless of which party comes to power. So he can’t take a political side. Namma ellam innum avalavu periya Alagala sir. (Its meant to be funny.Don’t take it seriously).
Like I said BJP can’t raise the contentious issues because of their allies. Our country is still a center left country so they can’t get allies if they talk about Shah Bano issue. There are 2 things a political party can do stick to the issues and idealogy outside of mainstream then face political irrelevance or moderate your position gain political power and change the system from within also try to shift the parameters of politcal debate to your direction. I am a pragmatist so I am OK with BJP choosing the second option.
Your third point about Police officers, none of the officials involved in any riots didn’t get punished. It is not restricted to the Anti muslim officials. So we should correct the system that punishes the gulity regardless of their power.
மே 8, 2009 at 4:28 பிற்பகல்
கார்த்திக்,
ராமன் தனக்கு இருக்கும் constraints-ஆல் காங்கிரஸ் சார்பாக எழுதுகிறார் என்றால் அவர் எழுத்தில் எதை நாம் அவரது உண்மையான கருத்து என்று கொள்வது?
எப்படி அவரது கருத்துகளை பற்றி விவாதிப்பது? சரி ராமனின் constraints பற்றிய பேச்சை விட்டுவிடுவோம்.
ஷா பானோ பற்றி நீங்கள் சொல்வதில் எனக்கு இசைவு இல்லை. அவர்கள் தேர்தல் அறிக்கையில் கூட இதெல்லாம் இருப்பதில்லை, இந்த மாதிரி விஷயங்கள் அவர்கள் ராடாரிலேயே இல்லை என்பதுதான் இவர்கள் போலியாக சவுண்ட் மட்டும் விடுபவர்கள் என்று நினைக்க வைக்கிறது. ப்ராக்டிகல் அரசியல் காரணங்களுக்காக அவர்கள் சட்டத்தை மாற்ற முயற்சி செய்யாமல் இருக்கலாம், அது தவறு என்று சொல்ல மாட்டேன். ஆனால் அதை பற்றி மூச்சு விடாமல் இருப்பது எப்படி சரி ஆகும்?
நீங்கள் மும்பை கலவரத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பட்ட ஹிந்து “தீவிரவாதி” அதிகாரிகளை பற்றி என்ன சொல்ல வருகிறீர்கள் என்று சரியாக புரியவில்லை. பொதுவாக ஹிந்து தீவிரவாதிகள் தப்பித்துவிடுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன், அதைத்தான் எழுதினேன். இந்த அதிகாரிகளும் அதற்கு ஒரு உதாரணம்.
இதெல்லாம் இருக்கட்டும், 2009 பா.ஜ.க. வாஜ்பேயி காலத்து 1998 பா.ஜ.க.வை விட எந்த விடத்தில் வித்தியாசமனாது என்று நினைக்கிறீர்கள்? என் இப்போது அவர்கள் அன்றைய பா.ஜ.க.வை விட சிறப்பாக செயல்படுவார்கள் என்று நினைக்கிறீர்கள்?